ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை!

+2
சிவா
மகா பிரபு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Empty தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை!

Post by மகா பிரபு Thu Jan 05, 2012 9:10 am

தூத்துக்குடி டாக்டர் சேதுலட்சுமி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் அனைவரும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தனர். சக மருத்துவர் படுகொலையில், அனைவரும் வேதனைப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஒரு கிளீனிக்கில் நடந்த சம்பவத்தை ஏன் அரசு மருத்துவமனையோடு முடிச்சுப் போட வேண்டும்?

டாக்டர் சேதுலட்சுமி இஎஸ்ஐ மருத்துவமனையின் தலைமை மருத்துவர். ஆனால், அரசு மருத்துவரின் சிகிச்சையில் குறை கூறியோ அல்லது அரசு மருத்துவமனை வளாகத்திலோ இந்தக் கொலை நடந்திருக்கவில்லை. அவர் தனியாக நடத்தி வரும் சுபம் கிளீனிக்கில் நடந்த சம்பவம் இது.

ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடத்திய அறுவைச் சிகிச்சை; அதன்பின் நேர்ந்த சிக்கல்; அந்தப் பெண்ணின் மரணம்; "பணம் கொண்டு வந்து தரும்வரை மனைவியை பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை' என்று கொலைக்குற்றவாளி சொல்லும் குற்றச்சாட்டு என அனைத்து விவகாரங்களும் சுபம் கிளீனிக்குடன் தொடர்புடையவை.

மேலும், மனைவியின் மரணத்துக்குக் காரணமான டாக்டரைக் கொலை செய்வதாக கொலையாளி மிரட்டிச் சென்றுள்ளார். அது குறித்து காவல்நிலையத்தில் டாக்டரே புகார் கொடுத்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறை கைது செய்திருக்கலாம் அல்லது சமரசம் பேசியிருக்கலாம். மருத்துவ உலகம் முதலில் கண்டிக்க வேண்டியது காவல்துறையைத்தான்.

இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இறந்துபோன சேதுலட்சுமி இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை டாக்டர் என்பதை மட்டுமே முன்னிலைப்படுத்தி, அனைத்து அரசு மருத்துவமனைகளையும் ஸ்தம்பிக்கச் செய்வது முறையானதுதானா? நோயாளிகள் வெளியூர்களிலிருந்து வந்து சிகிச்சை பெற வழியில்லாமல் முதியோரும் சிறுவர்களும் பெண்களும் ஆங்காங்கே, காய்ச்சலாலும் வேறு நோயாலும் முடங்கிக் கிடந்த காட்சி பரிதாபகரமானது. தனியாக சுபம் கிளீனிக் நடத்திய அரசு மருத்துவரின் படுகொலையின் துயரத்தை அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளின் முதுகிலும் ஏற்றிவிடுவது நியாயமல்ல.

சக மருத்துவரின் படுகொலைக்கு வருந்தும் மருத்துவ உலகம், கொல்கத்தாவில் 90 பேர் இறந்த நாளில் கருப்பு பேட்ஜ் அணிந்து, நோயாளிகளின் மரணத்துக்காகத் தங்கள் வேதனையைத் தெரிவிக்கவில்லை. இந்த 90 பேர் மரணமும் வெறும் ரூ.3 லட்சத்தை மிச்சப்படுத்தப்போய் நேர்ந்த சம்பவம். கீழ் தளத்தில், ஸ்டோர் ரூமுக்கு எதிராக இரவில் இறக்கி வைத்த பஞ்சு மற்றும் மருந்து பெட்டிகளில் ஏற்பட்ட தீயை, ரூ.3 லட்சம் மருந்துகள் என்று கணக்குப் பார்க்காமல் தண்ணீரை ஊற்றியிருந்தால், 90 உயிர்கள் இறந்திருக்க நேர்ந்திருக்காது என்று ஆய்வறிக்கை தெளிவுபடுத்திய பின்னராகிலும், அந்த மருத்துவமனையை மருத்துவ உலகம் கண்டிக்கவில்லை. இந்த நேரத்தில் இவற்றையும் நினைக்கத்தான் வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் அவசர ஊர்திகள் மட்டுமல்ல, அமரர் ஊர்திகளும் இருக்கின்றன. அன்றாடம் யாரோ ஒருவர் இறக்கின்றார். "டாக்டரும் எவ்வளவோ முயற்சி செய்தார்; முடியவில்லை' என்றுதான் உறவினர்கள் இந்தச் சடலங்களை வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். யாரும் கொலைவெறி கொள்வதில்லை. சில நேர்வுகளில் உறவினர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இறந்தவர்களின் மரணத்தைவிட, மருத்துவமனையில் உறவினர்கள் சந்திக்க நேர்ந்த சம்பவங்கள்தான் என்பதை மருத்துவ உலகம் ஏன் சிந்திக்கவில்லை?

புத்தாண்டு நள்ளிரவில் கோவை அரசு மருத்துவமனைக்கு, பைக்கில் விழுந்து காயமடைந்து வந்த இளைஞர் தனக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்பதற்காகப் பயிற்சி மருத்துவரை அறைந்த சம்பவமும், அதைத் தொடர்ந்து போராட்டமும் நடைபெற்றது. அந்த இளைஞர் குடித்திருந்தார் என்பதும், அவருக்கு சிகிச்சை அளிக்க இயலாது என்பதும் உண்மைதான். ஆனால், அறைகின்ற அளவுக்கு சுயநினைவுடன் இருக்கும் அவருக்கு முதலுதவி செய்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்குமா?

"அரை மணி நேரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்' என்று டாக்டர் சொல்வதை உறவினர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நோயாளியைக் கொண்டு வந்து இரண்டு மணி நேரம் ஆனபிறகும் டாக்டரைக் காணாமல், தேடிப்பிடித்து அழைத்துவந்து சிகிச்சை அளித்த பிறகு நோயாளி இறந்தால், தாமதமான சிகிச்சைதான் மரணத்துக்குக் காரணம் என்று உறவினர்கள் ஆத்திரமடைந்தால், அதை மட்டும் ஏன் மருத்துவ உலகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? இத்தகைய தகராறுகள், வன்முறைகள் யாவற்றுக்கும் உயிரிழப்பு காரணம் அல்ல. உயிரிழந்த நோயாளிக்குக் காட்டப்பட்ட அலட்சியம்தான் உறவினர்களின் உணர்வுகளை தீக்கொழுந்தாக்குகிறது.

வேலூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில், காலையில் கையெழுத்துப்போட்டுவிட்டு, பகல் 10 மணிக்கே தினமும் சென்னைக்கு சென்றுகொண்டிருந்த 4 டாக்டர்களை காட்பாடி ரயில்நிலையத்தில் பொதுமக்கள் அடித்து உதைத்து, ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தார்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவர்களுக்கு எதிராக மருத்துவ உலகம் ஏன் போராட்டம் நடத்தவில்லை? இதே மருத்துவ உலகின் ஒற்றுமைதானே அவர்களைக் காப்பாற்றி வைத்திருக்கிறது.

மணப்பாறையில் தன் மகனைக் கொண்டு அறுவைச் சிகிச்சை செய்ததாக ஒரு டாக்டர் மீது புகார் எழுந்ததே, அது என்னவாயிற்று? சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி மரணம் தொடர்பாக பெரும் ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு டாக்டர்கள் குழு விசாரித்ததே, அதன் முடிவு என்ன? எல்லாவற்றுக்கும் ஒரே விடைதான்: "பொய்யான புகார்'. "சாவுக்கு டாக்டரின் சிகிச்சை காரணமல்ல'.

தூத்துக்குடியில் டாக்டர் சேதுலட்சுமியால் சிகிச்சை அளிக்கப்பட்டு இறந்த பெண்மணி பிரசவத்தில் இறக்கவில்லை. ஆறுமாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென்று வலி ஏற்பட்டபோது, தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்த மருத்துவரான டாக்டர் சேதுலட்சுமியின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அளித்த சிகிச்சை பலனளிக்காமல் இறந்திருக்கிறார். உடனடியாக வேறு மருத்துவமனைக்கு அந்தப் பெண்மணி அனுப்பப்பட்டிருந்தால் ஒருவேளை பிழைத்திருக்கலாம். ஆனால், பணம் கட்டிவிட்டுத்தான் அபாயகரமான நிலையில் உள்ள நோயாளியை எடுத்துச் செல்ல அனுமதித்திருக்கிறது அந்த மருத்துவமனை என்றால், அதைக் கண்டிக்காமல் இருக்க முடியவில்லையே...

தனது மனைவியின் மரணத்துக்குக் காரணமான டாக்டரைக் கொலை செய்த கணவரை மன்னிக்க முடியாதுதான். அதைத் தீர்மானிக்க காவல்துறையும் நீதிமன்றமும் இருக்கின்றன. அதற்காக வேலை நிறுத்தம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான அரசு மருத்துவமனை நோயாளிகளை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் தண்டிப்பது என்ன நியாயம்? தங்களது சமுதாயப் பொறுப்பை மறந்துவிட்டு, பணத்துக்காக மட்டுமே இயங்கும் இதயமில்லாத இயந்திரங்களாக மருத்துவர்கள் மாறும்போது அதனால் ஏற்படும் எதிர்வினைகள் தான் இதுபோன்ற சம்பவங்கள். வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் ஸ்டெதாஸ்கோப்பைத் தங்கள் இதயத்தில் வைத்துக் கேட்டால், ஒருவேளை அது உண்மை சொல்லும்.

தினமணி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Empty Re: தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை!

Post by சிவா Thu Jan 05, 2012 9:26 am

இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் முழுக்க முழுக்க உண்மையானது. இங்கு கேட்டுள்ள கேள்விகளுக்கு அரசு மருத்துவர்கள் பதிலளிக்க முன்வருவார்களா?

அரசு மருத்துவமனை என்றாலே அலட்சியமும், அருவருப்பும் நிறைந்ததாகத்தான் உள்ளது. அதில் வேலை செய்யும் மருத்துவர்கள் தான் ஏதோ கடவுளின் அவதாரம் போல் எண்ணிக் கொண்டு செயல்படுகிறார்கள்.

அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றால் வெளியிலிருந்து syringe and needle வாங்கிச் செல்ல வேண்டியுள்ளது. இந்த அவலம் வேறு எந்த நாட்டிலும் இல்லை.

போராட்டம் நடத்திய அனைத்து மருத்துவர்களும் குற்றவாளிகளாகக் கருதப்பட வேண்டும். இவர்களின் அலட்சியத்தால் நாட்டில் மடியும் மக்களைக் காக்க வேண்டுமானால் இவர்கள் மீது கடுமையான சட்டம் பாய வேண்டும்.

அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் தனியாகக் கிளினிக் நடத்தக் கூடாது என்பதற்கு சட்டங்கள் இல்லையா? அல்லது அவற்றை இவர்கள் கண்டு கொள்வதில்லையா?

தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Empty Re: தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை!

Post by Guest Thu Jan 05, 2012 9:44 am

அரசு மருத்துவர்கள் இனியாவது திருந்துவார்கள் என நம்பலாமா?

இல்லை அலசியதின் உருவமாகவே அலைவார்களா ?

போராட்டம் நடத்திய அனைத்து மருத்துவர்களும் குற்றவாளிகளாகக் கருதப்பட வேண்டும். இவர்களின் அலட்சியத்தால் நாட்டில் மடியும் மக்களைக் காக்க வேண்டுமானால் இவர்கள் மீது கடுமையான சட்டம் பாய வேண்டும். சூப்பருங்க
avatar
Guest
Guest

Back to top Go down

தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Empty Re: தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை!

Post by உதயசுதா Thu Jan 05, 2012 10:43 am

இவர்களை எல்லாம் முன்னாடி ஜெயலலிதா, அரசு அலுவலர்களை உள்ளே தூக்கி வச்ச மாதிரி கொஞ்ச நாளைக்கு உள்ளே வைக்கணும்.இவனுகா அலட்சியத்துக்கு இன்னும் எத்தனை உயிர் போக போகுதோ.
தனியார் கிளினிக்கில் நடைபெற்ற சம்பவத்துக்கு எதுக்கு அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தணும்

தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Uதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Dதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Aதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Yதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Aதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Sதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Uதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Dதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Hதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Empty Re: தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை!

Post by பிரசன்னா Thu Jan 05, 2012 10:52 am

இங்கு அனைவரின் கருத்தும் ஒத்த கருத்தாகவே இருக்கிறது... சரியான தலயங்கம் தினமணிக்கு நன்றி....

தல சிவா, புரட்சி, உதயசுதா.... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Empty Re: தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை!

Post by ராஜா Thu Jan 05, 2012 10:58 am

மகா பிரபு wrote:
டாக்டர் சேதுலட்சுமி இஎஸ்ஐ மருத்துவமனையின் தலைமை மருத்துவர். ஆனால், அரசு மருத்துவரின் சிகிச்சையில் குறை கூறியோ அல்லது அரசு மருத்துவமனை வளாகத்திலோ இந்தக் கொலை நடந்திருக்கவில்லை. அவர் தனியாக நடத்தி வரும் சுபம் கிளீனிக்கில் நடந்த சம்பவம் இது.

ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடத்திய அறுவைச் சிகிச்சை; அதன்பின் நேர்ந்த சிக்கல்; அந்தப் பெண்ணின் மரணம்; "பணம் கொண்டு வந்து தரும்வரை மனைவியை பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை' என்று கொலைக்குற்றவாளி சொல்லும் குற்றச்சாட்டு என அனைத்து விவகாரங்களும் சுபம் கிளீனிக்குடன் தொடர்புடையவை.

மேலும், மனைவியின் மரணத்துக்குக் காரணமான டாக்டரைக் கொலை செய்வதாக கொலையாளி மிரட்டிச் சென்றுள்ளார். அது குறித்து காவல்நிலையத்தில் டாக்டரே புகார் கொடுத்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறை கைது செய்திருக்கலாம் அல்லது சமரசம் பேசியிருக்கலாம். மருத்துவ உலகம் முதலில் கண்டிக்க வேண்டியது காவல்துறையைத்தான்.
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Empty தவறான சிகிச்சை - தினமணி தலையங்கம்

Post by கே. பாலா Mon Jan 09, 2012 6:17 pm

தூத்துக்குடி டாக்டர் சேதுலட்சுமி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் அனைவரும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தனர். சக மருத்துவர் படுகொலையில், அனைவரும் வேதனைப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஒரு கிளீனிக்கில் நடந்த சம்பவத்தை ஏன் அரசு மருத்துவமனையோடு முடிச்சுப் போட வேண்டும்?

டாக்டர் சேதுலட்சுமி இஎஸ்ஐ மருத்துவமனையின் தலைமை மருத்துவர். ஆனால், அரசு மருத்துவரின் சிகிச்சையில் குறை கூறியோ அல்லது அரசு மருத்துவமனை வளாகத்திலோ இந்தக் கொலை நடந்திருக்கவில்லை. அவர் தனியாக நடத்தி வரும் சுபம் கிளீனிக்கில் நடந்த சம்பவம் இது.

ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடத்திய அறுவைச் சிகிச்சை; அதன்பின் நேர்ந்த சிக்கல்; அந்தப் பெண்ணின் மரணம்; "பணம் கொண்டு வந்து தரும்வரை மனைவியை பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை' என்று கொலைக்குற்றவாளி சொல்லும் குற்றச்சாட்டு என அனைத்து விவகாரங்களும் சுபம் கிளீனிக்குடன் தொடர்புடையவை.

மேலும், மனைவியின் மரணத்துக்குக் காரணமான டாக்டரைக் கொலை செய்வதாக கொலையாளி மிரட்டிச் சென்றுள்ளார். அது குறித்து காவல்நிலையத்தில் டாக்டரே புகார் கொடுத்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறை கைது செய்திருக்கலாம் அல்லது சமரசம் பேசியிருக்கலாம். மருத்துவ உலகம் முதலில் கண்டிக்க வேண்டியது காவல்துறையைத்தான்.

இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இறந்துபோன சேதுலட்சுமி இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை டாக்டர் என்பதை மட்டுமே முன்னிலைப்படுத்தி, அனைத்து அரசு மருத்துவமனைகளையும் ஸ்தம்பிக்கச் செய்வது முறையானதுதானா? நோயாளிகள் வெளியூர்களிலிருந்து வந்து சிகிச்சை பெற வழியில்லாமல் முதியோரும் சிறுவர்களும் பெண்களும் ஆங்காங்கே, காய்ச்சலாலும் வேறு நோயாலும் முடங்கிக் கிடந்த காட்சி பரிதாபகரமானது. தனியாக சுபம் கிளீனிக் நடத்திய அரசு மருத்துவரின் படுகொலையின் துயரத்தை அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளின் முதுகிலும் ஏற்றிவிடுவது நியாயமல்ல.

சக மருத்துவரின் படுகொலைக்கு வருந்தும் மருத்துவ உலகம், கொல்கத்தாவில் 90 பேர் இறந்த நாளில் கருப்பு பேட்ஜ் அணிந்து, நோயாளிகளின் மரணத்துக்காகத் தங்கள் வேதனையைத் தெரிவிக்கவில்லை. இந்த 90 பேர் மரணமும் வெறும் ரூ.3 லட்சத்தை மிச்சப்படுத்தப்போய் நேர்ந்த சம்பவம். கீழ் தளத்தில், ஸ்டோர் ரூமுக்கு எதிராக இரவில் இறக்கி வைத்த பஞ்சு மற்றும் மருந்து பெட்டிகளில் ஏற்பட்ட தீயை, ரூ.3 லட்சம் மருந்துகள் என்று கணக்குப் பார்க்காமல் தண்ணீரை ஊற்றியிருந்தால், 90 உயிர்கள் இறந்திருக்க நேர்ந்திருக்காது என்று ஆய்வறிக்கை தெளிவுபடுத்திய பின்னராகிலும், அந்த மருத்துவமனையை மருத்துவ உலகம் கண்டிக்கவில்லை. இந்த நேரத்தில் இவற்றையும் நினைக்கத்தான் வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் அவசர ஊர்திகள் மட்டுமல்ல, அமரர் ஊர்திகளும் இருக்கின்றன. அன்றாடம் யாரோ ஒருவர் இறக்கின்றார். "டாக்டரும் எவ்வளவோ முயற்சி செய்தார்; முடியவில்லை' என்றுதான் உறவினர்கள் இந்தச் சடலங்களை வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். யாரும் கொலைவெறி கொள்வதில்லை. சில நேர்வுகளில் உறவினர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இறந்தவர்களின் மரணத்தைவிட, மருத்துவமனையில் உறவினர்கள் சந்திக்க நேர்ந்த சம்பவங்கள்தான் என்பதை மருத்துவ உலகம் ஏன் சிந்திக்கவில்லை?

புத்தாண்டு நள்ளிரவில் கோவை அரசு மருத்துவமனைக்கு, பைக்கில் விழுந்து காயமடைந்து வந்த இளைஞர் தனக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்பதற்காகப் பயிற்சி மருத்துவரை அறைந்த சம்பவமும், அதைத் தொடர்ந்து போராட்டமும் நடைபெற்றது. அந்த இளைஞர் குடித்திருந்தார் என்பதும், அவருக்கு சிகிச்சை அளிக்க இயலாது என்பதும் உண்மைதான். ஆனால், அறைகின்ற அளவுக்கு சுயநினைவுடன் இருக்கும் அவருக்கு முதலுதவி செய்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்குமா?

"அரை மணி நேரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்' என்று டாக்டர் சொல்வதை உறவினர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நோயாளியைக் கொண்டு வந்து இரண்டு மணி நேரம் ஆனபிறகும் டாக்டரைக் காணாமல், தேடிப்பிடித்து அழைத்துவந்து சிகிச்சை அளித்த பிறகு நோயாளி இறந்தால், தாமதமான சிகிச்சைதான் மரணத்துக்குக் காரணம் என்று உறவினர்கள் ஆத்திரமடைந்தால், அதை மட்டும் ஏன் மருத்துவ உலகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? இத்தகைய தகராறுகள், வன்முறைகள் யாவற்றுக்கும் உயிரிழப்பு காரணம் அல்ல. உயிரிழந்த நோயாளிக்குக் காட்டப்பட்ட அலட்சியம்தான் உறவினர்களின் உணர்வுகளை தீக்கொழுந்தாக்குகிறது.

வேலூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில், காலையில் கையெழுத்துப்போட்டுவிட்டு, பகல் 10 மணிக்கே தினமும் சென்னைக்கு சென்றுகொண்டிருந்த 4 டாக்டர்களை காட்பாடி ரயில்நிலையத்தில் பொதுமக்கள் அடித்து உதைத்து, ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தார்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவர்களுக்கு எதிராக மருத்துவ உலகம் ஏன் போராட்டம் நடத்தவில்லை? இதே மருத்துவ உலகின் ஒற்றுமைதானே அவர்களைக் காப்பாற்றி வைத்திருக்கிறது.

மணப்பாறையில் தன் மகனைக் கொண்டு அறுவைச் சிகிச்சை செய்ததாக ஒரு டாக்டர் மீது புகார் எழுந்ததே, அது என்னவாயிற்று? சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி மரணம் தொடர்பாக பெரும் ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு டாக்டர்கள் குழு விசாரித்ததே, அதன் முடிவு என்ன? எல்லாவற்றுக்கும் ஒரே விடைதான்: "பொய்யான புகார்'. "சாவுக்கு டாக்டரின் சிகிச்சை காரணமல்ல'.

தூத்துக்குடியில் டாக்டர் சேதுலட்சுமியால் சிகிச்சை அளிக்கப்பட்டு இறந்த பெண்மணி பிரசவத்தில் இறக்கவில்லை. ஆறுமாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென்று வலி ஏற்பட்டபோது, தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்த மருத்துவரான டாக்டர் சேதுலட்சுமியின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அளித்த சிகிச்சை பலனளிக்காமல் இறந்திருக்கிறார். உடனடியாக வேறு மருத்துவமனைக்கு அந்தப் பெண்மணி அனுப்பப்பட்டிருந்தால் ஒருவேளை பிழைத்திருக்கலாம். ஆனால், பணம் கட்டிவிட்டுத்தான் அபாயகரமான நிலையில் உள்ள நோயாளியை எடுத்துச் செல்ல அனுமதித்திருக்கிறது அந்த மருத்துவமனை என்றால், அதைக் கண்டிக்காமல் இருக்க முடியவில்லையே...

தனது மனைவியின் மரணத்துக்குக் காரணமான டாக்டரைக் கொலை செய்த கணவரை மன்னிக்க முடியாதுதான். அதைத் தீர்மானிக்க காவல்துறையும் நீதிமன்றமும் இருக்கின்றன. அதற்காக வேலை நிறுத்தம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான அரசு மருத்துவமனை நோயாளிகளை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் தண்டிப்பது என்ன நியாயம்? தங்களது சமுதாயப் பொறுப்பை மறந்துவிட்டு, பணத்துக்காக மட்டுமே இயங்கும் இதயமில்லாத இயந்திரங்களாக மருத்துவர்கள் மாறும்போது அதனால் ஏற்படும் எதிர்வினைகள் தான் இதுபோன்ற சம்பவங்கள். வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் ஸ்டெதாஸ்கோப்பைத் தங்கள் இதயத்தில் வைத்துக் கேட்டால், ஒருவேளை அது உண்மை சொல்லும்.
தினமணி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Empty Re: தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை!

Post by உதயசுதா Mon Jan 09, 2012 6:18 pm

இந்த தலையங்கம் ஏற்கனவே இருக்கு பாலா.அதோட இதை இணைச்சூடறேன்

தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Uதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Dதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Aதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Yதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Aதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Sதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Uதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Dதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Hதினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Empty Re: தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை!

Post by கே. பாலா Mon Jan 09, 2012 6:20 pm

அப்படியா ? இதேபோல் எங்கள் ஊர் கடைதெருவில் நிறைய ஜெராக்ஸ் ஒட்டபட்டிருந்தது அதான் தேடி எடுத்து போட்டேன் . நீக்கிவிடலாம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Empty Re: தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை!

Post by ராஜா Mon Jan 09, 2012 6:26 pm

உதயசுதா wrote:இந்த தலையங்கம் ஏற்கனவே இருக்கு பாலா.அதோட இதை இணைச்சூடறேன்
கே. பாலா wrote:அப்படியா ? இதேபோல் எங்கள் ஊர் கடைதெருவில் நிறைய ஜெராக்ஸ் ஒட்டபட்டிருந்தது அதான் தேடி எடுத்து போட்டேன் . நீக்கிவிடலாம்
அதுக்காக நீங்க அங்க ஒட்டியிருக்குற எல்லா ஜெரோக்ஸ்சையும் இங்கு கொண்டு வரக்கூடாது ...... சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை! Empty Re: தினமணி- தலையங்கம்: தவறான சிகிச்சை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum