புதிய பதிவுகள்
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
52 Posts - 45%
heezulia
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
3 Posts - 3%
Manimegala
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
2 Posts - 2%
prajai
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
416 Posts - 49%
heezulia
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
28 Posts - 3%
prajai
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கம்பன் Poll_c10கம்பன் Poll_m10கம்பன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பன்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue 29 Sep 2009 - 17:29

இராமாயணத்தில் சில கதாபாத்திரங்கள் பெயரளவில் மட்டுமே அறியப்படுபவர்கள். உதாரணத்திற்கு சுமத்திரையும், சத்ருக்கனனும். இவர்களால் இராமாயணத்தில் எந்தத் திருப்புமுனையும் கிடையாது. இவர்கள் அதிகம் பேசியதும் இல்லை. அதிகம் பேசப்பட்டதும் இல்லை. ஆனால் கம்பன் இது போன்ற கதாபாத்திரங்களையும் ஓரிரு இடங்களில் குறிப்பிட்டால் கூட அவர்களைத் தன் கவிநயத்தால் சிகரங்களாக உயர்த்தி விடுகிறான்.

சுமத்திரை தசரதனின் மூன்றாம் மனைவி, இலக்குவன் சத்ருக்கனனின் தாய் என்று மட்டுமே பலரும் அறிவார்கள். அவள் பட்டத்தரசியுமல்ல, கடைசி மனைவியானாலும் கணவனின் தனியன்பிற்குப் பாத்திரமானவளும் அல்ல. பட்டத்தரசி கோசலை. தசரதனின் தனியன்பிற்குப் பாத்திரமாக இருந்தவள் கைகேயி. இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலான பெண்மணிகள் பொறாமையாலும், மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால் சுமத்திரை வித்தியாசமானவள்.

கைகேயி வரத்தால் இராமன் காட்டுக்குச் செல்லத் தயாரானான். சீதை 'நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு' என்று உடன் செல்லத் துணிகிறாள். சுமத்திரை பெற்ற மகன் இலக்குவனும் அண்ணனைப் பின் தொடரத் தீர்மானிக்கிறான். இலக்குவன் தாயிடம் விடை பெற வரும் போது சுமத்திரை சொல்லும் வார்த்தைகள் நெஞ்சை உருக்குபவை.

"ஆகாதது அன்றால் உனக்கு அவ்வனம் இவ்வயோத்தி
மாகாதல் இராமன் அம்மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த்தாயர் நம் பூங்குழல் சீதை: என்றே
ஏகாய்! இனி இவ்வயின் நின்றலும் ஏதம்" என்றாள்.

(அந்த வனம் உனக்கு இந்த அயோத்தியாக இருக்கட்டும். இராமனை மன்னன் தசரதனாக எண்ணிக் கொள். உன் தாய்களின் நிலையில் சீதைக் காண். இந்த மனநிலையில் இங்கிருந்து புறப்படு. இனி இங்கு நீ நிற்பது கூடத் தவறு).

'அவனாவது தந்தையின் வாக்கைக் காப்பாற்ற காட்டிற்குப் போகிறான்? நீ ஏன் அங்கு போக வேண்டும்?' என்ற விதத்தில் பேசினாலும் அந்தத் தாய் சொல்வதைக் குறை சொல்ல முடியாது. ஆனாலும் அப்படிச் சொல்லாமல் நீ போகாமல் இருந்தால் தான் தவறு என்று சொன்ன மனதைப் பாருங்கள். மேலும் தாய் என்று தன் ஒருத்தியை மட்டும் சொல்லாமல் பன்மையில் சொல்லி கோசலையையும், கைகேயியையும் கூடசேர்த்துக் கொண்ட பண்பைப் பாருங்கள். அடுத்த பாடலில் சுமத்திரை இன்னும் ஒரு படி மேலே போகிறாள்.

பின்னும் பகர்வாள் "மகனே இவன் பின் செல், தம்பி
என்னும் படியன்று. அடியாரினும் ஏவல் செய்தி!
மன்னும் நகர்க்கே அவன் வந்திடில் வா! அன்றேல்
முன்னம் முடி" என்றவள் வார்விழி சோர நின்றாள்.

("மகனே இராமன் பின் தம்பியாகப் போகாதே. சேவகனை விட அதிகமாய் அவனுக்கு சேவை செய். மீண்டும் இந்த நகருக்கு அவன் வந்தால் வா! அவன் வர முடியாதபடி அவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் அவனுக்கும் முன்னால் உன் உயிரை விட்டு விடு" என்றவள் மகனிடம் இப்படிச் சொல்ல வேண்டிய நிலை வந்து விட்டதே என்ற துக்கத்தில் விழிகளில் அருவியாக கண்ணீர் வழிய நின்றாள்).

இராமனுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ற வார்த்தையைக் கூட அவள் சொல்லத் துணியவில்லை. அன்றேல் என்ற சொல்லில் சூட்சுமமாகவே தெரிவிக்கிறாள். 'முன்னம் முடி' என்று சொல்லியவுடன் இப்படி சொல்லி விட்டோமே என்ற துக்கத்தில் துயருடன் நிற்பதை கம்பன் நம் கண் முன்னல்லவா கொணர்கிறான்.

இரண்டே பாடல்களில் நம் மனதில் சிகரமாக உயரும் சுமத்திரையின் பேச்சை பின்பு இராமாயணத்தில் வேறெங்கும் நாம் கேட்பதில்லை.

அடுத்ததாக சத்ருக்கனன். சொன்ன நாளில் இராமன் அயோத்திக்குத் திரும்பாததைக் கண்ட பரதன் தீயில் தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் தயாராகிறான். தனக்குப் பின் அயோத்தியின் அரசனாக முடி சூட்டிக் கொள்ளும்படி சத்ருக்கனனை வேண்டுகிறான்.

அதைக் கேட்ட சத்ருக்கனனின் நிலையை கம்பர் அழகாகச் சொல்கிறான். சத்ருக்கனன் காதுகளைப் பொத்திக் கொள்கிறான். நஞ்சை உண்டது போல் மயங்கி நிற்கிறான். மாபெரும் துயரத்துடன் பரதனைக் கேட்கிறான். "நான் உனக்கு என்ன பிழைத்துளேன்?" நான் உனக்கு என்ன தவறு செய்தேன் என்று இப்படி எல்லாம் சொல்கிறாய் என்று மருகி நின்றவன் அடுத்து சொல்வது மிக அழகான பாடல்.

கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போவானைக் காத்துப் பின்பு
போவானும் ஒரு தம்பி; போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது
யானாம் இவ்வரசு ஆள்வேன்? என்னே இவ்வரசாட்சி? இனிதே அம்மா!

(காட்டை ஆள நாட்டை விட்டுப் போகிறவனைக் காவல் காக்க பின் தொடர்ந்து போனவன் ஒரு தம்பி. சென்ற அண்ணன் வரவேண்டிய நாளில் வரவில்லை என்று உயிர் விட ஏற்பாடு செய்தவன் ஒரு தம்பி. இப்படிப்பட்டத் தம்பிகள் இருக்கும் போது நான் மட்டும் வெட்கமில்லாமல் இந்த அரசை ஆள்வதா? நன்றாகத் தான் இருக்கிறது என்று இகழ்வாகச் சொல்கிறான் சத்ருக்கனன்.)

இன்றைய அரசியலில் பதவிக்காகத் தம்பிகள் செய்கின்ற பகீரதப் பிரயத்தனங்களைப் பார்க்கையில் அந்தத் தம்பிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறார்கள் அல்லவா? பரதனுக்காவது தாயின் வரம் நெஞ்சில் முள்ளாய் உறுத்துகிறது என்று கூடச் சொல்லலாம். ஆனால் சத்ருக்கனனுக்கு அந்தக் காரணமும் சொல்ல முடியாது. அவன் இராமனின் தம்பிகளில் தானும் குறைந்தவன் அல்ல என்று காட்டுகிறான் அல்லவா?

சிறிய கதாபாத்திரங்களையும் மிக அழகாகக் காட்டி மனதில் என்றென்றும் நிறுத்தும் கம்பனின் கவித் திறமைக்கு இந்த இரண்டு கதாபாத்திரங்களே சான்று.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun 11 Oct 2009 - 13:01

திரு யாழவன் அவர்களே
வணக்கம்.

தாங்கள் காலம் தாழ்த்திப் பிறந்து விட்டீர்கள். ரசிக மணி திரு டி கே சி அவர்கள் தாம் நடாத்தி வந்த வட்டத்தொட்டியில் ஓர் நாள் இராமன் ஏன் அவதாரம் செய்தார் என்று கேட்டாராம். கூடி இருந்த அறிஞர்கள்
இராவண வதத்திற்கு என்றார்களாம். உடனே திரு ரசிக மணி அவர்கள் அதை இராமன் இருந்த இடத்திலிருந்தே செய்திருக்கலாம் என்றாராம், ஆண்டிருந்த அறிஞர்கள் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தனராம்.
மீண்டும் திரு ரசிகமணி அவர்களே சிறு புன்னகையுடன் இராமனுக்குத் தன் சரிதையை கம்பன் தமிழில் கேட்க வேண்டும் என்ற ஆசை பற்றித்தான் அவதாரம் செய்தார் என்றாராம். பின்பு ஒருநாள் இனி யார் கம்பனைப் பற்றிப் பேசப் போகிறார்கள் என்று வருத்தப் பட்டாராம்.அன்று நீங்கள் இருந்திருந்தால் நிச்சயம் உங்களைப் பாராட்டி இருப்பார், அவருக்குக் கொடுத்து வைக்க வில்லை, ஈகரை அந்தப் பாக்கியம் பெற்றது.


தங்களைப் பாராட்ட தக்க சொற்கள் கிடைக்காமல் அவதியுறுகின்றேன். மிக உயர்ந்த சொற்கள் உங்களுக்குக் கிடைத்தால் போட்டு நிரப்பிக் கொள்ளுங்கள். ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்வேன். ஈழத்துக் கம்பன் திரு ஜெயராஜுக்கு அடுத்த நிலையில் தங்களை வைத்துப் போற்றுகின்றேன்

அன்புடன்


நந்திதா

avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Fri 16 Oct 2009 - 10:20

அன்புள்ள யாழவனுக்கு,

பொதுவாக பேசப்படாத இரண்டு ராமாயண பாத்திரங்களைப் பற்றிய குறிப்புகள் அருமை. நன்றிகள் பல. சுமத்திரை இரண்டாம் மனைவி, மூன்றாம் மனைவி கைகேயி என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

ராஜா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக