ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!

4 posters

Go down

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  Empty அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!

Post by பிரசன்னா Wed Jan 04, 2012 5:11 pm

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!

இடிதாங்கி எவ்விதத்தில் வேலை செய்கிறது? ஆகாயத்தில் உள்ள மேகங்களின் அடிப்பரப்பில் நேர்மின் (+) தோன்றுவதாக உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம். அப்போது தரையில் எதர்மின் (-) தோன்றும். இந்த மின்னானது கூர்மையாக உள்ள பகுதிகளில் திரண்டு நிற்கும் தன்மையுடையது. கூர்மையான பகுதிகளில் காற்று துகள்கள் படும்போது அவற்றிலிருக்கிற மின்கள் கூர் முனை விளைவு என்ற முறையில் அடித்து செல்லப்பட்டு விடும். இதனால் தரையிலுள்ள் மின்னின் வீ¡¢யம் குறைந்து விடும். அப்படி மேலே போகிற மின், மேகத்திலுள்ள நேர்மின்னின் வீ¡¢யத்தையும் குறைத்துவிடும். இதனால் தான் இடிதாங்கிகளின் மேல்முனைகள் கூர்மையாக அமைக்கப்படுகின்றன. அதையும் மீறிய அளவில் மின்கள் தோன்றி இடி விழுகிற நிலை ஏற்பட்டால், இடியிலுள்ள மின்சாரம் சுலபமாகக் கடந்து செல்லக் கூடிய உலோகப் பொருள்களைத் தேடிப்பிடித்து இறங்கும். அதற்காக இடிதாங்கியில் ஒரு செப்புக் கம்பியை இணைத்துத் தரையில் புதைத்து விட்டால் இடி மின்சாரம் கட்டடத்துக்கு வெளிப்புறமாக உள்ள அந்தக் கம்பியின் வழியாகப் பாய்ந்து தரையிலிறங்கிவிடும். கட்டடத்துக்குச் சேதம் ஏற்படாது.

*************

மின்சாரக் கசிவு எதன் காரணமாக ஏற்படுகிறது? இதைத் தடுத்து விபத்திலிருந்து மீளுவது எப்படி? மின் கம்பிகளின் மேலுள்ள் இன்சுலேட்டர் சேதமடைந்து கம்பி ஏதாவது மின் கடத்துகிற பொருளின் மேல் படுவதால் மின் கசிவு ஏற்படும். இதைத் தடுக்க வேண்டுமானால் கையில் ஒரு டெஸ்டரை வைத்துக் கொண்டு சந்தேகப் படுகிற இடத்தையெல்லாம் தொட்டுப் பார்த்து அங்கங்கே இன்சுலேஷன் சா¢யாக உள்ளதா என்று சோதித்து விட வேண்டும்.

*************

குடிநீரை ஒரு சி்ரிஞ்சின் மூலம் உடலில் ஏற்றினால் என்ன நிகழும்? குடிநீரை ஒரு சிரிஞ்சின் மூலம் உடலில் ஏற்றினால் நிகழ்வது நீ¡¢ன் தன்மையைப் பொருத்து உள்ளது. கொதிக்க வைக்கப்பட்ட, வடிகட்டப்பட்ட, சுத்தமான நீராக இருந்தால், இரத்தத்தில் கிரகிக்க்பட்டு சிறு நீ¡¢ல் வெளியேறி விடுகிறது. அசுத்தமான நீர் உட்செலுத்தப்பட்டால் சீழ்கட்டி உண்டாகும். பெரும்பாலான ஊசி மருந்துகள் நீ¡¢ல் கலக்கப்படடே கொடுக்கப்படுகின்றன.

*************

ஹெலிகாப்டர் அந்தரத்தில் ஒரே இடத்தில் குறிப்பிட்ட நேரம் நிலையபக நிற்கிறது இது எப்படி? அவ்வாறு நிற்பதற்கு ஹெலிகாப்டர் பெற்றுள்ள் தகவமைப்புகள் என்ன? ஹெலிகாப்டா¢ன் மேலே உள்ள விசிறி காற்கைக் குடையும் போது மேலே இழுக்கப்படுகிறது. திருகாணியைச் சுழற்றினால் அது மரத்துக்குள் போகிறதல்லவா? அதேபோல திருகு வடிவத்தில் காற்றைக் குடையும் படி அந்த விசிறிகள் அமைந்திருக்கும். விசிறிகள் மேலே தூக்கப்படும்போது ஹெலிகாப்டரும் மேலே உயர்த்தப்படும். ஆனால் இவ்வாறு மேலே உயர்த்துக்கிற விசை ஹெலிகாப்டா¢ன் எடைக்குச் சமமாக இருக்கும்போது ஹெலிகாப்டர் அந்தரத்தில் அசையாமல் நிற்கும். விசிறியோடு சேர்ந்து ஹெலிகாப்டரும் சுழலாமலிக்க அதன் வால்பகுதியில் ஒரு விசிறி எதிர்த்திசையில் சுழன்று கொண்டிருக்கும்.

*************

தாமரை இலையில் தண்ணீரை விட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ஒட்டவே ஒட்டாது. முத்து முத்தாகத் தண்ணீர் உருண்டு ஒடும். அது போலவே வாத்தின் முதுகிலும் நீர் ஒட்டாது.

*************

ஒட்டகம் போல் தண்ணீர் உணவு ஏதுமின்றி நீண்ட நாட்கள் வாழக் கூடிய இன்னொரு பிராணி எது தொ¢யுமா? காட்டு ஆடு.

*************

பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகளே கிடையாது.

*************

யானையின் துதிக்கையிலே 40000 தசைகள் உண்டு. ஆனால் ஒர் எலும்புக் கூட கிடையாது.

*************

இரண்டு மனிதர்களை சுமந்து கொண்டு குதிரையைப் போல வேகமாக ஒடவல்ல சக்தி வாய்ந்தது, தீக்கோழி.

*************

உடம்பில் சிலருக்குத் திட்டுத் திட்டாக தேமல் முகம், உடம்பில் படரும். இதை நீக்க ஒரு புதிய மருந்து: ஹைபோ உப்பைச் சுடுநீ¡¢ல் கரைத்து ஒரு பஞ்சினால் தடவி வ்நதால் தேமல் மறைந்து விடும். ஹைபோ உப்பு என்பது பிலிம் நெகடிவ்களைக் கழுவ உதவும் ஒர் இரசாயனப் பொருள்.

*************

அதிக அளவில் ரப்பரை உற்பத்தி செய்து வரும் நாடு மலேசியா.

*************
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  Empty Re: அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!

Post by பிரசன்னா Wed Jan 04, 2012 5:17 pm


நீரிலும் விண்ணிலும் நன்கு செயல்படக் கூடிய திறனுடைய விமானப்படகு இப்போது இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. யுத்த நேரங்களில் இது பெரிதும் உதவும் என்பதால் இங்கிலாந்திடம் இது பொ¢தும் உதவும் என்பதால் இஙகிலாந்திடம் ஒரு மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்க பல நாடுகளும் வரிசையில் நிற்கின்றனவாம். உலகில் இத்தகைய இரகப்படகு இது ஒன்றுதான். இந்த படகின் பெயர் என்ன தெரியுமா? சுந்தர் லேண்ட்

*************

பூமியிலிருந்து பார்க்கும் பொழுது வாகனம் நீல நிறமாகத் தோன்றுகிறது. ஆனால் விண்வெளியில் வானம் கறுப்பாகத் தோன்ற காரணம் என்ன? பூமியின் மேல் உள்ள காற்றுமண்டல அடுக்குகளில் ஏற்படும் ஒளிச் சிதறலால் நீல நிறம் தெரிகிறது. விண்வெளியில் இவ்விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை.

*************

நம் உடம்புக்கு சிறிதளவு அயோடின் என்ற இராசாயனப் பொருள் தேவைப்படுகிறது. இது உணவின் மூலம் கிடைக்காவிட்டால் காய்டர் கட்டிகள் உண்டாகின்றன. அயோடின் கடல்மீன், கடல் பாசிகளில் அதிகம் இருக்கிறது. மீன் மற்றும் கடல் உணவுகளில் அயோடின் இருப்பதால் இவற்றைச் சாப்பிடுகிறவர்களுக்கு காய்டர் கட்டிகள் உண்டாவதில்லை. கடற்கரைக் காற்றில் அயோடின் கலந்து வருவதால் காற்று வாங்கக் கடற்கரைக்குப் போகலாம்.

*************

உலகிலேயே பாராசூட் விளையாட்டுப் போட்டிகளில் அதிகம் ஈடுபடும் வீரர்கள் ரஷ்யாவில் தான் இருக்கிறார்கள். இந்த விளையாட்டில் செய்யப்பட்ட 63 உலக சாதனைகளுள் 50 சாதனைகளை ரஷ்ய வீரர்கள் தாம் செய்துள்ளனர். எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள இது சம்பந்தமான பயிற்சியில் பங்கு கொள்கின்றனர்.

*************

உலகிலேயே கென்யா நாட்டில் தான்அதிக அளவில் பிறப்பு விகிதம் அதிகமாகிறது. 1000 பேர்களுக்கு 55 குழந்தைகள் என்ற கணக்கில் குழந்தைகள் பிறப்பு விகிதம் உள்ளது. மிகப் பொ¢ய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நாடு இது. பால் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆப்பி¡¢க்க நாடுகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலும் எல்லோரும் விவசாயிகள். நன்கு உழைக்கக் கூடியவர்கள். அதனால் குழந்தைகளும் ஆரோக்கியமாகவே பிறக்கின்றன.

*************

ஆசியாவிலேயே மிகப் பெரிய காற்றாலை மின்சார நிலையம் இந்தியாவில் தான் உள்ளது. 10 மெகாவாட் மின்சாரம் தயா¡¢க்கும் திறனுடைய இந்த மின்சார நிலையம் குஜரத் மாநிலத்தில் ஜாம்நகர் மாவட்டத்திலுள்ள லம்பா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

*************

periscope எவ்விதம் செயல்படுகிறது?
அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  220px-Periskop_linsen.svg

periscopeil இரண்டு சமதள கண்ணாடிகள் ஒன்றுக்கொன்று இணையாக 4 சாய்வில் பொருத்தப்பட்டிருக்கும். மேலேயுள்ள பொருளிலிருந்து ஒளிக்கதிர்கள் முதல் ஆடியில் பட்டு ஆடி 45 சாய்வில் உள்ளது. 90 யில் பிரதிபலித்து கீழே உள்ள அடியில் படும் அந்த அடி 45 சாய்வில் உள்ளதால் 90 யில் பிரதிபலித்து ஒளிக்கதிர் பார்ப்பவருடைய கண்ணை வந்தடையும். இந்த periscope பயன்படுத்தி கடலுக்கடியில் மூழ்கியிருந்தபடியே கடலின் மேலே கப்பல் வருவதையும், குகைகளில் பதுங்கிக் கொண்டே வெளியில் வருகின்ற அபாயக்களையும் அறிந்து கொள்ள முடியும்.

*************

பாம்பு எவ்விதம் ஒடுகிறது? அதற்குக் கால் உண்டா? பாம்புக்குக் கால்கள் கிடையாது. அடிப்புறச் செதில்களாலேயே பாம்பு தரையைப் பற்றி ஒடுகிறது. செதில்கள் பின்புறமாகத் தரையில் பிடிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. எனவே பாம்பு முன்னோக்கி நகர்ந்து பின்னர் பின்னோக்கி நகரும் போது செதில்கள் தரையில் மோதிக் கொள்வதால் உந்திக் கொண்டு மறுபடியும் முன்னோக்கி நகர்ந்து, இப்படித்தொடர்ந்து செல்கிறது.

*************

பல்லி தலை கீழாகக் கூட எப்படி நடக்க முடிகிறது? பல்லியின் கால் பாதங்களில் உட்குழவு இருக்கும். தன் பாதங்களினால் முதலில் சுவர் அல்லது தரையில் பதிய வைக்கும். பிறகு பாதத்தைச் சுருக்கும்போது உட்குழிவுகளில் வெற்றிடம் உண்டாகிறது. வெற்றிடம் உண்டாவதால் அதனை நிரப்ப வெளிக்காற்று அங்கு வரும். அதனால் பாதம் பிடிப்பை விடாது. இவ்விதம் பல்லி தலை கீழாக நடக்க முடிகிறது.

*************

இரததம் உறைதல் என்றால் என்ன? உடலில் ஏதேனும் வெட்டுக்காயம் ஏற்பட்டால் அப்போது இரத்த நாளங்கள் வெட்டுபடும் போது அதனின்று இரத்தம் பீறிக் கொண்டு வெளியேறும். ஆனால் சிறிது நேரத்தில் அது தானாகவே நின்று விடும். ஏனென்றால் இரத்தத்திலுள்ள் ·பைப்ரினோஜன்' எனப்படும் நார்புரதம் வெளிக்காற்றில் பட்டவுடன் ஒர் வலை போலப் பின்னிக் கொண்டு மேற் கொண்டு இரத்தம் வெளியேறாமல் காக்கும். இதற்கு இரத்தம் உறைதல் என்று பெயர்.

*************

பயத்தினால் சிலருக்கு வாயிலும் மூக்கிலும் இரத்தம் வடிந்து இறந்து விட நோ¢டுவது எதனால்? பயத்தின் போது இதயம் மிக வேகமாகச் சுருங்கி வி¡¢கிறது. அப்போது திடீரென இரத்தம் அதிக அழுத்தத்தில் இரத்தக் குழாய்களின் மூலம் செலுத்தப்படுகிறது. அதிக அழுத்தத்துடன் இரத்தம் இவ்வாறு இரத்தக் குழாய்களின் வழியே செல்லும்போது திடீரென சில வேளைகளில் இரத்தக் குழாய் வெடித்து விடும். அதனால் இரத்தம் வெளியேறி வாய், மூக்கு வழியாக வடியும், அதனால் மனிதன் இறந்து விடக்கூடும்.

*************

வெற்றிலை போடும் பழக்கம் நல்லதா கெட்டதா? வெற்றிலை போடும் பழக்கம் ஒரு வகையில் நல்லதே. ஆனால் அதிகமாகப் போடக் கூடாது, கட்டாயமாகப் புகையிலை சேர்கக்க் கூடாது.
வெற்றிலை ஜீரணத்திற்கு தேவையான பொருள்கள் அடங்கியுள்ளன. அத்துடன் சேர்த்து நாம் உட்கொள்கிற சுண்ணாம்பில் கால்ஷியம் இருப்பதால்நம் உடலுக்குக் கால்ஷியம் சத்து கிடைக்கிறது.

*************

இறைக்க இறைக்கக் கிணற்றில் அதிகம் நீர் ஊறுவதேன்? கிணற்று நீரை இறைக்காமல் இருக்கும்போது அதிலுள்ள் நீரின் அழுத்தம் மாறாமல் நிலையாக இருக்கிறது.
ஆனால் நீரைவெளியேற்றும்போது அங்குள்ள நீரின் அழுத்தம் குறைகிறது. அப்போது கிணற்றின் சுற்றுப்புறத்தில் அதிக அழுத்தத்தில் உள்ள நீர் நுண் துளைகளின் வழியாக கிணற்றை வந்தடைந்து அழுத்தத்தை ஈடு செய்கிறது.

*************

மண் பானையில் வைக்கப்படும் நீர் குளிர்ச்சியாக இருப்பதேன்? மண்பானையில் நுண் துவாரங்கள் உள்ளன. இதன் வழியாக நீர் கசியும். கசிந்த நீர் வெளிக்காற்றின் உஷ்ணத்தால் ஆவியாகும். ஆவியாவதற்குத் தேவையான அதிகப்படி உஷ்ணத்தைப் பானையில் உள்ள நீ¡¢லிருந்தே எடுத்துக் கொள்ளும். அப்பொழுது நீ¡¢ன் வெப்ப நிலை வெளிக் காற்றின் வெப்பத்தை விடக் குறைந்து காணப்படும். அதனால் பானைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கிறது.

*************

ஒர் இரும்புக் குண்டை கடலில் போட்டால் மூழ்கிவிடும். அதே இரும்பு தட்டையாக, தகடாக கடலில் போடப்பட்டால் மூழ்குவதில்லை. காரணம் என்ன தெரியுமா? தண்ணீரில் போடப்படும் பொருளின் எடையை விட அது வெளியேற்றும் நீரின் எடை அதிகமாக இருந்தால் அது மிதக்கிறது. எனவே தட்டையான இரும்பு மிதக்கிறது.

எனது நண்பரின் அனுப்பிய இமெயிலில் இருந்து ...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  Empty Re: அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!

Post by முஹைதீன் Wed Jan 04, 2012 5:18 pm

அறியாத பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.
நன்றி அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  224747944
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  Empty Re: அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!

Post by உதயசுதா Wed Jan 04, 2012 5:24 pm

நானும் எனக்கு தெரியாத இந்த விஷயங்களை தெரிந்து கொண்டேன் பிரசன்னா.
மிக்க நன்றி.நீங்கள் தெரிந்து கொண்டதை எங்களுக்கு தெரிய கொடுத்தமைக்கு


அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  Uஅறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  Dஅறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  Aஅறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  Yஅறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  Aஅறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  Sஅறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  Uஅறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  Dஅறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  Hஅறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  Empty Re: அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!

Post by kitcha Wed Jan 04, 2012 5:45 pm

நல்ல தகவல், பகிர்ந்தமைக்கு நன்றி தகவல் கலைஞரே அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!  Empty Re: அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum