புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_c10சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_m10சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_c10 
20 Posts - 65%
heezulia
சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_c10சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_m10சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_c10சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_m10சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_c10 
62 Posts - 63%
heezulia
சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_c10சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_m10சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_c10சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_m10சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_c10சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_m10சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்:


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Jan 16, 2009 2:27 am

உலக தமிழ்ச் செய்திகள் ஆசிரியர் தலையங்கம்:

வன்னியிலிருந்து கிடைக்கும் காட்சியூடகங்கள் நம்மை அதிர்வுக்குள்ளாக்குகின்றன. குருதி தோய்ந்த மனித உடல்கள்.


ஆணாகவும் பெண்ணாகவும் சிறுவர்களாகவும் முதியவர்களாகவும் வயது வேறுபாடற்ற மனித உடலங்கள். சாவுக்காய் காத்திருக்கும் மனிதர்கள் பிணங்கள் போல நடமாடுவதாகப் படுகிறது. நிம்மதியாய்த் துயின்று எத்தனை நாட்களாகியிருக்கும்?

சாவகாசமாய் ஒரு கவளம் சோறுண்டு சற்றுத் திண்ணையில் சாய்ந்திருந்து மாதங்கள் இப்போது எத்தனையாகியிக்கும்? அன்று நாம் இருந்தோம். எமது வீட்டினிலே. எமது நிலத்தில். வாழ்வில் நம்பி;க்கைகளுடன். என்று வாழ்ந்தவர்கள். னால் இன்று? யாருடைய காதுக்கும் இவர்களுடைய குரல் எட்டவில்லை. யாருடைய இதயத்தையும் இந்த மக்களுடைய அவலம் பிழியவில்லை. யாருடைய மனச்சாட்சியையும் இவர்களுடை ஓலம் உலுப்பவில்லை.


ஆனாலும் காத்திருப்பு! எதற்காக? எவருக்காக? யாருக்காக? புரியாத காத்திருப்பு!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Jan 16, 2009 2:29 am

சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Tharmapuram__Thilakeswaran_Thiresa

தீராத துயராகிப் போன இந்த நெஞ்சங்களின் ஆறாத காயங்களை ஆற வைக்க யாருமில்லாத நிலையில் ஏக்கங்களுடன் தூசிபடிந்த முகங்களுடனும் ஏதோவொரு நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார்கள் இந்த மக்கள்.


15 தடவைக்கும் மேலாக இடம்பெயர்ந்தவர்களும் இவர்களுள் அடக்கம். அவர்களுடைய வாழ்வு வெறும் எண்ணிக்கைகள் சார்ந்ததாக மாறிவிட்டுள்ளது. இன்று இத்தனை பேர் உயிரிழந்தார்கள், எத்தனை பேர் காயப்பட்டார்கள்? எத்தனை பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறினார்கள் என்கிற எண்களாக நகருகிறது அவர்கள் வாழ்வு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Jan 16, 2009 2:33 am

சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: 1_Paranthan-Mullaithivu_Road_Through_Tharmapuram

கிளிநொச்சி மாவட்ட செயலகம் தர்மபுரத்தில் ஒரு தற்காலிகக் கொட்டிலில் இயங்குகிறது. கிளிநொச்சி வைத்தியசாலையோ படையினரின் செல் வீச்சுக்கு மூச்சுத்திணறி தனது புதிய கட்டிடங்களையும் கைவிட்டு தர்மபுரத்திற்கு இடம் பெயர்ந்துள்ளது.


மன்னார் மாவட்டம் வவுனியா வடக்கு, கிளிநொச்சி மாவட்டத்தின் பிறபகுதிகள் என்று எல்லாப் பகுதிகளிவிருந்தும் இடம் பெயர்ந்தவர்களால் பிதுங்கி வழிகிறது தர்மபுரம்.
பரந்தன் முல்லைத் தீவு வீதி மிக மிக நெருக்கடியான ஒரு வீதியாக மாறிவிட்டுள்ளது. பஸ்கள், லொறிகள், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், உணவு லொறிகள், ட்ரக்டர்கள் பாடசாலை மாணவர்கள் என்று நிரம்பி வழிகிறது. மழைக்காலம் ஆனபடியால் வீதியின் உலர்ந்த பகுதிகளை மாடுகளும் நாய்களும் ஆக்கிரமித்து விட்டிருக்கின்றன.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Jan 16, 2009 2:34 am

சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Tharmapuram%20_%20Exodus

இவற்றுக்கிடையில் சைக்கிள்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும், லான்ட் மாஸ்ரர்களிலும் வண்டில்களிலுமாய் அவரவர் தட்டுமுட்டுச் சாமான்களுடன் மக்கள் கூட்டம் நகர்ந்தபடி இருக்கிறது.




எங்கு போவது என்றும் அறியார், அவர் ஏது செய்வது என்றும் அறியார்? னாலும் போர் அரக்கன் அவர்களைத் துரத்துவதை விட்டானா?


ஜனவரி எட்டாம் திகதியிலிருந்து தர்மபுரம் நோக்கி தொடர்ச்சியாகச் செல் வந்து விழத் தொடங்கியது. மூன்று சந்தர்ப்பங்களில் இடம் பெயர்ந்த மக்கள் மத்தியிலேயே வந்து விழுந்து வெடித்தது.


இந்த ஐந்து நாட்களுள் ஆறு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 32 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களுள் இரண்டு பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? 60 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர் ஒருவரையும் செல் கொன்று போட்டிருக்கிறது. 15 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்ட 11 வயோதிபர்களும் கூட படுகாயமடைந்திருக்கிறார்கள். படுகாயமடைந்த 38 பேரில் 19 பேர் பெண்கள் என்கிறது ஒரு கணிப்பீடு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Jan 16, 2009 2:35 am

சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Tharmapuram%20Three_days_old_IDP_shelters_in_Theravil


ஓடிக்களைத்து சற்று ஓய்வாக முன்னரே தர்மபுரத்திலிருந்தும் சிறிலங்கா இராணுவத்தின் செல் இவர்களைத் துரத்த ஆரம்பித்தது.


ஜனவரி 11ஆம் திகதியிலிருந்து தர்மபுரத்திலிருந்தும் ஓட ஆரம்பித்தார்கள். இடம் பெயர்ந்து தர்மபுரத்தில் இருந்த வைத்தயசாலைக்கருகிலும் செல் வந்து விழ ஆரம்பித்தது. சுமக்க முடியாமல் வீட்டுத் தளபாடங்களைச் சுமந்து போன ட்ராக்டர்கள் வீதியின் சீரற்ற நிலை காரணமாக பழுதடைந்து நகரமுடியாமல் ஆங்காங்கே நின்று விட்டன. இதுவும் அந்த வீதியின் சனநெரிசலை இரட்டிப்பாக்கி விட்டுள்ளது.

வன்னி முழுவதும் வந்து விழும் செல்களால் தாக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கத் தொடங்கி விட்டுள்ளது. அவர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ்கள் தெருவின் நெரிசல் காரணமாக நகர முடியாமல் ஊரந்து ஊர்ந்து தான் செல்ல வேண்டிய நிலை.


தர்மபுரத்தையும் தாண்டிச் சென்ற மக்கள் மரங்களின் கீழும் வெறும் தற்காலிக கூரையின் கீழும் மீளவும் குடியமர்ந்துள்ளனர். 2008 ஆரம்பத்தில் மன்னர் தட்சணாமடுவிலிருந்து இடம் பெயர ஆரம்பித்த செல்வராசா செல்வி அங்கிருந்து பெரியமடு, கணேசபுரம், வன்னேரிக்குளம் முறிப்பு, கல்மடு, தர்மபுரம் என்று தொடர்ந்து இடப் பெயர்வுக்குள்ளாகி வருகிறார். தற்போது தர்மபுரத்திலிருந்தும் புறப்பட வேண்டியதாயிற்று.



2008 ஜனவரியில் தட்சிணாமடுவில் பஸ் ஒன்றுக்கு ஆள ஊடுருவும் அணி வைத்த கிளைமோரில் 15 வயதேயான மில்ரன்கொல்லப்பட்டது பற்றி அவர் நினைவுகூர்கிறார். அவருடைய மருமகள் அனிற்றா 16 வயது அந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்தாள். அவருடைய உறவினரான தம்பையா தர்மலிங்கம்(45) விமானப்படையினரின் குண்டுவீச்சில் சில நாட்களுக்கு முன்னர் பலியானாh. அந்த மரண வீட்டிற்குப் போகமுடியவில்லை என்கிற துயர் செல்வியை வாட்டி வதைக்கிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Jan 16, 2009 2:36 am

சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Tharmapuram_Selvarasa_Selvy

பாலசுப்ரமணியம் கமலேஸ்வி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் 1996இல் குடும்பத்துடன் கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்து வந்தார். மல்லாவியில் வசிக்க ஆரம்பித்த இவர்களிடம் ஏராளமான பசுமாடுகள் எருதுகள், கோழி தாரா போன்ற வளர்ப்புப் பறவைகள் இருந்தன. அண்மைய இராணுவத் தாக்குதல்களுடன் இவர்கள் ஸ்கந்தபுரத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். பின்னர் கிளிநொச்சி அங்கிருந்து தர்மபுரம் இப்போது அங்கிருந்தும் புறப்பட்டாயிற்று. மரணத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள அவர்கள் மேற்கொண்ட இடப் பெயர்வினால் அவர்களுடைய மாடுகளும் எருதுகளும் கொல்லட்டுப் போயின. பல செல்லடியிலும் எஞ்சியவை வெள்ளத்திலுமாக அள்ளுண்டு போய் விட்டன.

திருக்கெதீஸ்வரன் திரேசா பாரதிபுரத்தைச் சேர்ந்தவர். 1996இல் அக்கராயனுக்கு இடம் பெயர்ந்தவர். அண்மைய இராணுவத் தாக்குதலில் கல்மடு பின்னர் நெத்தலியாறு என்று இடம் பெயர்ந்தவர். நெத்திலியாறு அரசினர் தமிழ் பாடசாலையில் தங்கியிருந்த போது ஜனவரி 11ஆம் திகதி பாடசாலை வளவில் வந்து விழுந்த செல்லினால் அவருடைய அன்ரி ஏழுமலை மனோன்மணி படுகாயங்களுக்குள்ளானார். இப்போது மரநிழலில் எதிர்காலம் பற்றிய ஏக்கத்துடனும் அச்சத்துடனும் நகர்கிறது அவரது வாழ்வு.

நம்பிக்கைகள் எதுவுமற்ற கையறு நிலை அவர்களுடையது. அடுத்த நேர உணவுக்கு ஏது செய்வது? காயமடைந்தவருக்கு மருந்துபோட போதிய மருந்து இல்லை. சன நெருக்கடியும், குண்டுகளின் கந்தக நெடியும் தலையை கிறுகிறுக்க வைக்கின்றன. காற்றிலும் நீரிலும் பருவும் வியாதிகளைத் தடுப்பதற்கு வகையேதுமில்லை. தொழில் ஏதுமற்ற நிலை. நிவாரணத்திற்காகக் காத்திருக் வேண்டிய அவலம்.

அதுவும் எப்போதாவது ஒரு முறை கிடைக்கும் போது

நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த

கொஞ்ச அரிசியை பானையிலிட்டுச்

சோறு பொங்கும் என்று

ஓளித்தபடி காத்திருந்த போது

பிடுங்கி எறிபட்ட என் பெண்ணே,

உடைந்த பானையையும்

நிலத்தில் சிதறி

உலர்ந்த சோற்றையும்

நான் எப்படி மறக்க?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Jan 16, 2009 2:36 am

சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்: Idp%20children%20vanni%2011-jana

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக