ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
ayyasamy ram
9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_m109-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம்

3 posters

Go down

9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Empty 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம்

Post by nandhtiha Tue 29 Sep 2009 - 16:45

http://www.meenagam.org/?p=11734
எத்தனை ஆண்டுகள் ஆயினும் 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம்



எழுதியவர்மீனகம் on September 27, 2009
பிரிவு: கட்டுரைகள், பிரதான செய்திகள்



1966-
ஆம் ஆண்டு தொடங்கி 1995-ஆம் ஆண்டு முடிய இதுவரை எட்டு
உலகத்தமிழாராய்ச்சி மாநாடுகள் நடந்துள்ளன. இவற்றுள் முதலாம்
மாநாடு ஈழத்துத் தமிழரான வணக்கத்துக்குரிய தனிநாயகம் அடிகளாரால்
துவக்கிவைக்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.

தற்போது 9-வது
உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டினை 9-வது உலகத்தமிழ் மாநாடு எனப்
பெயர்மாற்றம் செய்து தமிழ் நாட்டில் நடத்திட முனைப்புடன் செயல்படத்
துவங்கியுள்ளார்,தமிழக முதல்வர் அவர்கள்.

உலகத் தமிழர்களின் இரண்டு பூர்வீகத் தாய்நாடுகளில் ஒன்றான தமிழ் ஈழத்தில், இந்தியா உட்பட இருபது நாடுகளின்
துணையோடு தமிழினப் படுகொலைப் போரை நடத்தி லட்சத்திற்கும்
மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்துள்ளனர் சிங்கள்ப்பேரினவாதப் பேய்கள்.

யுத்தம் முடிந்தபிறகும், 3
லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை வதை முகாம்களில்
அடைத்துவைத்துச் சித்திரவதை செய்து, பெண்களைக் கற்பழித்து வாரம்
1400 தமிழர்களை முறைவைத்துக் கொன்றொழிக்கிறது சிங்கள ராணுவம்.

எவ்வாறெல்லாம் அவர்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள் என்ற கோரக்காட்சிகளை மிகச் சமீபத்தில் காண நேர்ந்த உணர்வுள்ள உலகத்
தமிழர் ஒவ்வொருவரும் செய்வதறியாது மனதளவில் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

யாராலும் சகித்துக் கொள்ள முடியாத
பேரவலத்தில் உழகத்தமிழினம் உழன்று கொண்டிருக்கும் இந்தச் சூழலில்தான்
9-வது உலகத்தமிழ் மாநாட்டை நடத்த முஸ்தீபுகள் செய்து வருகிறார் முதல்வர்
கலைஞர். உலகத் தமிழினத்தின் இரண்டு கண்களில் ஒன்றில் குருதி வடிகிறது.
மற்றொன்றுக்கு மைதீட்டி அழகுபார்க்க முனைகிறார் மரியாதைக்குரிய முதல்வர்.

ஈழத்தில், சிங்கள ராணுவம் முன்னின்று
நிகழ்த்திய தமிழினப் படுகொலைப் போரைப் பின்னிருந்து இயக்கிய காங்கிரசு
ஆட்சியை நிர்ப்பந்தித்து,போரை நிறுத்தச் செய்யும் வலிமையும் திராணியும்
தனக்கிருந்தும், தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளத் தமிழ் இனத்தையே
அழியவிட்டு வேடிக்கை பார்த்த கலைஞருக்கு உலகத்தமிழ் மாநாடு நடத்த ஒரு
சிறிதும் யோக்கியதை இல்லை.

தன்னுடைய இரண்டரை ஆண்டுகால ஆட்சியைத்
தக்கவைத்துக்கொள்ள, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தை ஆண்ட
நம்மினத்தார். மாண்டு மடிந்து மண்ணொடு மண்ணாக மக்கிப்போவதற்கு மௌனமாய்ச்
சம்மதம் தந்த மனிதருக்கு உலகத் தமிழ் மாநாட்டை நடத்தத் தார்மீக
உரிமையில்லை. அணுவளவும் அருகதையில்லை.

நீரோ மன்னனுக்குச் சிலை வைத்து
வணங்கலாம். ரோம் நகரம் ப்ற்றி எரிந்த போது அவன் மட்டும் தான் பிடில்
வாசித்தான்.ஆனால் தமிழினமே பற்றி எரிகிறபோது தான் மட்டும் பிடில்
வாசித்தால் போதாது; உலகத் தமிழறிஞர்கள் எல்லாரும் வாருங்கள்! ஒன்று கூடிப்
பிடில் வாசிப்போம்! என அழைக்கும் இந்த விந்தை மனிதரை எந்த வகையில்
விமர்சிப்பது? இந்த உத்தமருக்கு எந்த ஊரில் கோயில் கட்டுவது?

தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும்
தகுதியும்,தெம்பும், திராணியும், திறமையும் தமிழுக்குண்டு.ஆனால் தமிழனை
இன்னொரு தமிழன்தான் காப்பாற்றியாக வேண்டும்.ஈழத்தமிழனைக் காப்பாற்றுகின்ற
முயற்சியில் உலகத் தமிழனை ஈடுபடவிடாமல், தமிழைக்காட்டித் தடுத்து அவனைத்
திசை திருப்புகின்ற உத்தி தான் இந்த ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டு
முனைப்பு!


பத்துக்கோடித் தமிழர்கள் உலகம் முழுவதும்
உயிரோடு இருந்தும் ஈழத்தமிழரைக் காப்பாற்ற முடியாமல் போனது கேவலமென்றால்
இந்தச் சந்தர்ப்பத்தில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவதென்பது அதைவிடக்
கேவலமான செயல். ஒரு காகம் செத்தாலும் ஒருநூறு காகங்கள் கூடிக் கதறுமே!..
ஒரு இனமே செத்துக்கிடக்கிறது! இன உணர்வு வேண்டாம். இரக்க உணர்ச்சி கூடவா
இல்லாமல் போனது?

ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி
மாநாட்டிற்கு நாம் எதிரானவர்கள் அல்லர். ஆனால் ஒன்பதாவது உலகத்
தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்பட வேண்டிய இடம் தமிழ் நாடல்ல. தமிழ் ஈழம்!
எனவே ”ஒன்பதவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை தமிழ் ஈழத்தில் தான்
நடத்துவோம். எத்தனை ஆண்டுகள் ஆயினும் தமிழ் ஈழத்தில் நடத்தியே தீருவோம்”.

என இன உணர்வுள்ள உலகத் தமிழர்
ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். சபதமேற்க வேண்டும். இந்தக் கருத்தை
வலியுறுத்தி, தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களும்,உலகம் முழுவதும் உள்ள
தமிழர்களும், ”இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டில் ஒன்பதாவது உலகத்
தமிழ் மாநாட்டை நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கக் கூடாது” என உலகத் தமிழ்
ஆராய்ச்சிக்கழகத் தலைவர் நெபுருகரோசிமாவுக்கு கடிதங்கள் மூலமாகவும்,
தந்திகள் மூலமாகவும், வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

இழவு வீட்டில் கெட்டிமேளம் கொட்டுவது
தமிழர் பண்பாடல்ல. தனி ஒரு மனிதரின் சாதனைப்பதிவுக்காக தமிழினமே வெட்கித்
தலைகுனியும் இத்தகைய வரலாற்றுப்பிழை நடந்து விடாமல் தடுத்திட முனைவது
உனர்வுள்ள உலகத்தமிழர் ஒவ்வொருவரின்
வரலாற்றுக் கடமை.

இந்நேரம் உலகத்தமிழ் மாநாடு நடத்துகிற
நேரமில்லை. உலகத் தமிழர் மாநாட்டை கூட்டி ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்க
பாடுபடவேண்டிய நேரமிது. ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளும்,
இயக்கங்களும், அமைப்புகளும், ஆர்வலர்களும் இது குறித்துச் சிந்தித்துச்
செயல்பட வேண்டும். திசை திருப்பும் மோடி மஸ்தான் மோசடிகளில் உலகத்தமிழினம்
சிக்குண்டு போகாமல் தடுத்திட, தமக்குள் ஒற்றுமையுடன் செயல்பட்டு
உலகத்தமிழர் மாநாட்டினைத் தமிழ் நாட்டில் நடத்திட வேண்டும்.இந்த உலகத்
தமிழர் மாநாட்டில்,9-வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டினைத் தமிழ் ஈழத்தில்
நடத்திட நாம் அனைவரும் சேர்ந்து வித்திடல் வேண்டும்.

தலைவர்,
கருத்துரிமை பாதுகாப்பு கழகம்
சீதையின் மைந்தன்
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Empty Re: 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம்

Post by மீனு Tue 29 Sep 2009 - 16:50

இந்நேரம் உலகத்தமிழ் மாநாடு நடத்துகிற
நேரமில்லை. உலகத் தமிழர் மாநாட்டை கூட்டி ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்க
பாடுபடவேண்டிய நேரமிது
. 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் 677196


நல்ல தகவல் அக்கா...
உண்மைதான் இப்போ மகா நாடு எதுக்கு ..நம் இன்னல்கள் களையும் அவசர நேரமிது ..அதை விட்டு விட்டு அரைத்த மாவை அரைப்பாங்க இவங்க..இதுக்கு பெயர் மகா நாடு..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Empty Re: 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம்

Post by பிரகாஸ் Tue 29 Sep 2009 - 17:06

ஈழமண்ணின் அவலங்களை மூடி மறக்க, தங்களது துரோகத்தை மறக்க எடுக்கும் முயற்ச்சி


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் Empty Re: 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணியுங்கள்! : தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள்
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
» எம்.பில். படிப்புக்கு கட்டணமில்லை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு
» உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை
» சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள புகைப்படங்கள் -

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum