ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்

+8
ஜாஹீதாபானு
உமா
உதயசுதா
சார்லஸ் mc
ரேவதி
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Empty கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்

Post by மகா பிரபு Sun Jan 01, 2012 9:53 pm

First topic message reminder :

கேரள அரசை கண்டித்து, தேனி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நேரு சிலையைக் கட்டிப்பிடித்தபடி, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வேன் டிரைவர், ஜெயபிரகாஷ் நாராயணன்,32, இன்று மரணமடைந்தார். தேனி பங்களாமேட்டைச் சேர்ந்தவர், ஜெயபிரகாஷ் நாராயணன்; திருமணமாகவில்லை. தாயுடன் வசித்து வந்தார். முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக, தேனியில் நடந்த பல்வேறு போராட்டங்களில் இவர் பங்கேற்று வந்தார்.இந்நிலையில், கடந்த டிசம்பர் 19ம் தேதி மாலை, பெட்ரோல் கேனுடன் தேனி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நேரு சிலையை கட்டிப்பிடித்தபடி, ""சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத, கேரள அரசை கண்டிக்கிறேன்'' என கூறி, தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.இவர் சிகிச்சைக்காக, மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், இன்று இரவு 7.30 மணியளவில் மரணமடைந்தார்.

dinamalar :வணக்கம்:

Last edited by மகா பிரபு on Wed Jan 04, 2012 8:30 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Empty Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்

Post by Guest Mon Jan 02, 2012 5:32 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
சார்லஸ் mc wrote:
சாியான கருத்து சகோ.உதயசுதா அவா்களே. சூப்பருங்க
பொட்டிலடித்தாற்போல என்று சொல்வது இதுதானோ?!
வீரா், அசகாய சூரா் தியாகி என பாராட்டுபவா்கள் எல்லாம் விவரமானவா்கள். 100 ஆண்டுகள் இவா்கள் மட்டும் வாழ ஆசைபடுவாா்கள். இளிச்சவாய மடையா்கள் இப்படிப்பட்ட பேச்சை கேட்டு மடிந்து போவாா்கள்.
இறந்து போனவா்களை பற்றி பேசக்கூடாது என்றால்.... எப்படி? தவறான முடிவை தேடிகொண்டவா்கள் போல மற்றவா்களும் பின்பற்றி விடக் கூடாது என்று பின்வரும் தலைமுறைக்கு எப்படிஆேலாசனை சொல்வதாம்.
தவறான முன்னுதாரணமாக திகழ்ந்தோரை வைத்துதான, திசைமாறுவோரை திருத்த முடியும் என்பதை இப்படிபட்டவா்கள் உயராதிருப்பது வேதனை.
இன்னும் சொல்லப்போனால் இப்படிப்பட்டவா்களின் குடும்பத்தில் இது போல யாராவது செய்த இழப்பை சந்தித்தால் அப்போது உணருவாா்களோ என்ன‌வோ?!

மன்னிக்கவும் சார்லஸ். தற்கொலை செய்துகொண்ட நபர் உங்களுக்கு யாரோ ஒருவர். ஆனால் எனக்கு அப்படி அல்ல. நீங்கள் முன்வைத்த அறிவுஜீவி தனமான வார்த்தைகளுக்கும் ..... அன்னைதெரசா போன்ற சமூக அககரை உடைய ஆதங்கத்திற்கும் வாழ்த்துகள்.

நான் எப்படிப்பட்ட குணாதிசியம் உடையவன் என்று உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னை தாக்கி நீங்கள் கூறிய வார்த்தைகளுக்கு பதில்கூறி என்னுடைய தரத்தை தாழ்த்தவும் விரும்பவில்லை.

உங்களுடைய பின்னூட்டத்தில் உண்மை இல்லை. உங்களுடைய சமூக அகக்றையினை வெளிபடுத்த ஒரு அப்பாவியின் மரணத்தை விளம்பரமாக பயன்படுத்தாதீர்கள்.

இவர்களை போன்றவர்களுக்கெல்லாம் மறுமொழி இடாதீர்கள் .. அய்யம் பெருமாள் ... இவர்கள் வார்த்தைகள் எப்போதும் தரம் தாழ்ந்து தான் வரும் ...
avatar
Guest
Guest

Back to top Go down

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Empty Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்

Post by ayyamperumal Mon Jan 02, 2012 5:47 pm

முஹைதீன் wrote:அய்யம்பெருமாள்
தற்கொலை செய்துகொண்டவரை வீரர் என்று கூறிய முதல் ஆள் நீங்களாகந்த்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
போராடி கொலைசெய்யப்பட்டால் வீரன் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் இதற்கு போயி ?

நான் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். தற்கொலை செய்ததை நியாயபடுத்தி பேசவில்லை. கருத்துக்கூறி அந்த மரணத்தை கொச்சை படுத்தாதீர்கள் என்றுதான் ஈகரையில் வேண்டுகோல்வைத்தேன்.

இன்னொரு விஷயம் முகையதீன் அவர்களே ..... தற்கொலை செய்துகொள்ளத்தான் அதிக அளவிலான தைரியம் வேண்டும் நெஞ்சுரம் வேண்டும். சுயநலத்திற்காக தற்கொலை செய்துகொள்வதுதான் கோழைத்தனம்.

மணியாச்சியில் கலெக்டர் ஆஸ் துறையினை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட வாஞ்சிநாதன் வீரன் என்றால் ,,,, 5 மாவட்ட மக்களுக்காக தன்னால் ஏதும் செய்யமுடியவில்லை என்னுடைய இறப்பிற்கு பின்னவது மக்கள் ஆக்கரோசத்தோடு போராடட்டும் என்று யுய்ர் நீத்த அந்த இளைஞனும் வீரன் தான்.

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Empty Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்

Post by உதயசுதா Mon Jan 02, 2012 5:54 pm

புரட்சி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
சார்லஸ் mc wrote:
சாியான கருத்து சகோ.உதயசுதா அவா்களே. சூப்பருங்க
பொட்டிலடித்தாற்போல என்று சொல்வது இதுதானோ?!
வீரா், அசகாய சூரா் தியாகி என பாராட்டுபவா்கள் எல்லாம் விவரமானவா்கள். 100 ஆண்டுகள் இவா்கள் மட்டும் வாழ ஆசைபடுவாா்கள். இளிச்சவாய மடையா்கள் இப்படிப்பட்ட பேச்சை கேட்டு மடிந்து போவாா்கள்.
இறந்து போனவா்களை பற்றி பேசக்கூடாது என்றால்.... எப்படி? தவறான முடிவை தேடிகொண்டவா்கள் போல மற்றவா்களும் பின்பற்றி விடக் கூடாது என்று பின்வரும் தலைமுறைக்கு எப்படிஆேலாசனை சொல்வதாம்.
தவறான முன்னுதாரணமாக திகழ்ந்தோரை வைத்துதான, திசைமாறுவோரை திருத்த முடியும் என்பதை இப்படிபட்டவா்கள் உயராதிருப்பது வேதனை.
இன்னும் சொல்லப்போனால் இப்படிப்பட்டவா்களின் குடும்பத்தில் இது போல யாராவது செய்த இழப்பை சந்தித்தால் அப்போது உணருவாா்களோ என்ன‌வோ?!

மன்னிக்கவும் சார்லஸ். தற்கொலை செய்துகொண்ட நபர் உங்களுக்கு யாரோ ஒருவர். ஆனால் எனக்கு அப்படி அல்ல. நீங்கள் முன்வைத்த அறிவுஜீவி தனமான வார்த்தைகளுக்கும் ..... அன்னைதெரசா போன்ற சமூக அககரை உடைய ஆதங்கத்திற்கும் வாழ்த்துகள்.

நான் எப்படிப்பட்ட குணாதிசியம் உடையவன் என்று உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னை தாக்கி நீங்கள் கூறிய வார்த்தைகளுக்கு பதில்கூறி என்னுடைய தரத்தை தாழ்த்தவும் விரும்பவில்லை.

உங்களுடைய பின்னூட்டத்தில் உண்மை இல்லை. உங்களுடைய சமூக அகக்றையினை வெளிபடுத்த ஒரு அப்பாவியின் மரணத்தை விளம்பரமாக பயன்படுத்தாதீர்கள்.

இவர்களை போன்றவர்களுக்கெல்லாம் மறுமொழி இடாதீர்கள் .. அய்யம் பெருமாள் ... இவர்கள் வார்த்தைகள் எப்போதும் தரம் தாழ்ந்து தான் வரும் ...
தரம் தாழ்ந்த வார்த்தைகள் என்று எதை சொல்றீங்க புரட்சி?
சார்லஸ் சொல்லிய கருத்திலோ நான் சொல்லிய கருத்திலோ தரம் தாழ்ந்த வார்த்தைகள் என்று எதுவுமே இல்லையே. தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறவர்கள் உங்கள் பார்வயில் வீரர்கள் என்று இருந்துவிட்டு போகட்டும்.யார் வேண்டாம் என்று சொன்னது

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Uகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Dகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Aகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Yகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Aகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Sகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Uகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Dகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Hகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Empty Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்

Post by உதயசுதா Mon Jan 02, 2012 5:56 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
முஹைதீன் wrote:அய்யம்பெருமாள்
தற்கொலை செய்துகொண்டவரை வீரர் என்று கூறிய முதல் ஆள் நீங்களாகந்த்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
போராடி கொலைசெய்யப்பட்டால் வீரன் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் இதற்கு போயி ?

நான் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். தற்கொலை செய்ததை நியாயபடுத்தி பேசவில்லை. கருத்துக்கூறி அந்த மரணத்தை கொச்சை படுத்தாதீர்கள் என்றுதான் ஈகரையில் வேண்டுகோல்வைத்தேன்.

இன்னொரு விஷயம் முகையதீன் அவர்களே ..... தற்கொலை செய்துகொள்ளத்தான் அதிக அளவிலான தைரியம் வேண்டும் நெஞ்சுரம் வேண்டும். சுயநலத்திற்காக தற்கொலை செய்துகொள்வதுதான் கோழைத்தனம்.

மணியாச்சியில் கலெக்டர் ஆஸ் துறையினை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட வாஞ்சிநாதன் வீரன் என்றால் ,,,, 5 மாவட்ட மக்களுக்காக தன்னால் ஏதும் செய்யமுடியவில்லை என்னுடைய இறப்பிற்கு பின்னவது மக்கள் ஆக்கரோசத்தோடு போராடட்டும் என்று யுய்ர் நீத்த அந்த இளைஞனும் வீரன் தான்.
சுதந்திர போராட்டத்தில் காந்திஜிய பாராட்டும் அளவுக்கு வாஞ்சிநாதன் பெருமை இல்லையே ஏன்?கொஞ்சம் யோசிங்க. காந்திஜி கடைசிவரை உயிரோடு இருந்து போராடினார்.இப்ப தெரியுமே உங்களுக்கு உயிரோடு இருந்து போராடுவதன் பெருமை

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Uகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Dகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Aகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Yகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Aகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Sகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Uகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Dகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Hகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Empty Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்

Post by மகா பிரபு Mon Jan 02, 2012 9:31 pm

இறந்து போன ஒருவரை கோழை என்றும், முட்டாள் தனம் என்றும் பேச நினைக்கும் முன் சற்று சிந்திப்போம் . அவர்களின் மரணம் என்றும் சரித்திர சிறப்பாகவே இருக்கும். ஒவ்வொருவரின் மரணமும் சரித்திரத்தில் எப்படி எல்லாம் இடம் பிடித்துள்ளது?

செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால் விட்டுவிடுகிறேன் என்று நீதிபதி சொல்லியபோது, நான் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க மறுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட அந்த சாக்ரடிஷை தான் நாம் ஒரு தத்துவ ஞானி என்று புகழ்கிறோம். தன குடும்பத்திற்காக உயிர் வாழ நினைத்து இருந்தால் சாக்ரடிஸ் என்ற தத்துவ ஞானி இந்த அளவுக்கு பெயர் பெற்று இருக்கமாட்டார்.

கியுபா என்ற நாட்டிற்கு சுதந்திரம் பெற உயிரை பணயம் வைத்து போராடி விடுதலை வாங்கி தந்தார்களே, காஸ்ட்ரோ மற்றும் சேகுவேரா. அவர்களில் மந்திரி ஆகிய பின்பும் அந்த பதவியை அனுபவிக்காமல் மற்ற நாடுகளுக்கும் சுதந்திரம் வாங்கி தர போராடி வீர மரணம் அடைந்த சேகுவேரா தான் காஸ்ட்ரோவை விட அதிக புகழ் வாய்ந்தவராக திகழ்கிறார்.

கட்டபொம்மன், திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், இப்படி ஆயிரம் உதாரணங்கள் சொல்லி கொண்டே போகலாம். இவர்களெல்லாம் உயிர் மட்டுமே முக்கியம் என்று நினைத்திருந்தால் என்ன ஆகி இருக்கும். ஆங்கிலேயனை எதிர்த்து போராடி வீரமரணம் அடைந்ததால் தான் கட்டபொம்மனை நாம் போற்றுகிறோம். இல்லையென்றால் அவரும் எட்டப்பன் ஆகி இருப்பார்.

வஞ்சத்தால் பிடிபட்டு கொண்ட கணைக்கால் இரும்பொறை, தாகம் எடுத்தபோதும் எதிரி தரும் தண்ணீரை குடிப்பதை விட சாவதே மேல் என்று உயிர்விட்டதால் தான் அவர் இன்றும் நிலைத்து வாழ்கிறார்.

ஒரு அரசனை வீழ்த்தி அரண்மனையை முற்றுகையிடும் பொது தன மானத்தை காக்க உயிர் நீத்த அந்தபுர பெண்மணிகளெல்லாம் கோழை என்று யாரும் சொல்வதில்லை. அவர்களெல்லாம் வீர பெண்மணிகள். உயிர் தான் முக்கியம் என்றால் மானத்தை தான் இழக்க வேண்டும்.

எந்த ஒரு கருத்திற்கும் மாறு பட்ட கருத்தை கூறி நம்மை முன்னிலைபடுத்த விரும்பி இது போன்ற உயிநீத்தவர்களின் செயலை நாம் கொச்சை படுத்த வேண்டாம். சோகம் சோகம் சோகம்

Last edited by மகா பிரபு on Mon Jan 02, 2012 10:40 pm; edited 3 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Empty Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்

Post by கே. பாலா Mon Jan 02, 2012 10:11 pm

முத்துக்குமார் , செங்கொடி ,ஜெயபிரகாஷ் நாராயணன்..ஆகியோரின் மரணம் நமக்கு விடுக்கும் செய்தி ....
அவர்கள் தன் குடும்ப நலனுக்காக உயிர்துறந்தவர்கள் அல்லர் ..
தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்கு அளவிர்க்கு அந்த பிரச்சனை தீர வேண்டும் ...அதற்காக தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்ற நினைத்திருக்கிறார்கள் அந்த ..தியாகத்தை ...எண்ணிப்பார்கவேண்டும்!

இன்னொரு பக்கத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது ......
இவர்களை இழந்து தவிக்கு குடும்பத்தினருக்கு மட்டுமே புரியும் இழப்பின் வலி ....இதுபோன்ற மரணங்களை பார்த்து ...இன்னும் பலரும் தங்கள் உயிரை இழந்து விடக்கூடாது என்ற ஆதங்கம் ...சார்லசின் ,உதயசுதாவின் வாதத்தில் உள்ள அடிநாதம் ...இதை முழுமையாக ஆதரிக்க வேண்டும் !
ஒன்றைமட்டும் சொல்லலாம். இப்படிப்பட்ட செயலை கொண்டாடதீர்கள் ......அதே சமயம் கொச்சை படுத்தாதீர்கள்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Empty Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்

Post by மகா பிரபு Mon Jan 02, 2012 10:15 pm

கே. பாலா wrote:ஒன்றைமட்டும் சொல்லலாம். இப்படிப்பட்ட செயலை கொண்டாடதீர்கள் ......அதே சமயம் கொச்சை படுத்தாதீர்கள்
இதை நான் ஏற்றுகொள்கிறேன் சார். ஆமோதித்தல்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Empty Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்

Post by சார்லஸ் mc Mon Jan 02, 2012 11:35 pm

“எந்த ஒரு கருத்திற்கும் மாறு பட்ட கருத்தை கூறி நம்மை முன்னிலைபடுத்த
விரும்பி இது போன்ற உயிநீத்தவர்களின் செயலை நாம் கொச்சை படுத்த வேண்டாம்.”

இந்த வாா்த்தையை வன்மையாக மறுக்கின்றேன். எந்த ஒரு கருத்திற்கும் மாற்று கருத்து சொல்வது எங்களை முன்னிலைப்படுத்துவதற்கா?!?! உங்களுடைய குற்றச்சாட்டு மிவும் தவறானது. ஈகரையில் அனைவரது கருத்துக்களையும் பகிா்ந்து கொள்ள சம உாிமை உண்டு. அதே சமயம் கட்டுரையாளாின் கட்டுரையை அப்படியே ஏற்றுக்கொள்ள அனைவராலும் இயலாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து, மாற்று கருத்து இருக்கத்தான் செய்யும். கட்டுரையாளா் , செய்தியாளா் விமா்சனங்களை ஏற்பதும், ஏற்காதததும் அவரது விருப்பம். எல்லா நேரங்களிலும் எல்லா கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிா்பாா்க்கவும் கூடாது. போ் புகழ் பெறுவதற்காக , முன்னிலை படுத்துவதற்காக யாரும் கருத்து சொல்வதில்லை. அப்படி தாங்கள் கருதினால் ஒருவரும் கருத்து சொல்ல முடியாமற் போய்விடும். அனைத்து பதிவுகளும் அதற்காகத்தான் என்பதுபோலவும் ஆகிவிடும். அப்படியல்ல. உறவுகளின் நட்பு பாலமே ஈகரை. நீங்கள் கூறிய வாா்த்தை எங்களை, எங்கள் கருத்தை, எங்கள் நோக்கத்தை கொச்சைபடுத்துவதாக உள்ளது.

அதே போல நீங்கள் உதாரணம் காட்டிய கட்டபொம்மன், திருப்பூா் குமரன் போன்றோா் யாரும் தற்கொலை செய்யவில்லை. ஆங்கிலயோ்களால் கொல்லப்பட்டவா்கள்.

எங்களுடைய ஆதங்கம் பற்றி நன்கு விளங்கிக் கொண்டு பதிலளித்துள்ள பாலா அவா்களை கவனியுங்கள்.

“இன்னொரு பக்கத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது ......
இவர்களை இழந்து
தவிக்கு குடும்பத்தினருக்கு மட்டுமே புரியும் இழப்பின் வலி ....இதுபோன்ற
மரணங்களை பார்த்து ...இன்னும் பலரும் தங்கள் உயிரை இழந்து விடக்கூடாது
என்ற ஆதங்கம் ...சார்லசின் ,உதயசுதாவின் வாதத்தில் உள்ள அடிநாதம் ...இதை
முழுமையாக ஆதரிக்க வேண்டும் !”

எனவே, தாங்கள் எங்களை பூிந்த கொள்வீா்கள் என நம்புகிறேன்.
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 678642

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Empty Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்

Post by மகா பிரபு Tue Jan 03, 2012 7:36 am

தங்களுடைய கருத்திற்கு நன்றி சார்லஸ்.
எல்லா நேரங்களிலும் எல்லா கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிா்பாா்க்கவும் கூடாது. போ் புகழ் பெறுவதற்காக , முன்னிலை படுத்துவதற்காக யாரும் கருத்து சொல்வதில்லை. அப்படி தாங்கள் கருதினால் ஒருவரும் கருத்து சொல்ல முடியாமற் போய்விடும். அனைத்து பதிவுகளும் அதற்காகத்தான் என்பதுபோலவும் ஆகிவிடும். அப்படியல்ல. உறவுகளின் நட்பு பாலமே ஈகரை.
நாம் கருத்து சொல்ல உரிமையுள்ளவர்கள் தான் என்பதை நானும் அறிவேன். நமக்கு உரிமை உள்ளது என்பதற்காக எந்த கருத்தையும் சொல்லலாம் என்பது ஏற்படையது அல்ல என்பதை அறியாதவரல்ல நீங்கள். இனம், மதம், நாடு என்று எத்தனையோ உணர்வுபூர்வமான் விஷயங்களுக்கு நம்முடைய கருத்து என்று சொல்ல ஆரம்பித்தால் அதன் முடிவு என்னவாக இருக்கும்? நாம் சொல்லும் கருத்து மற்றவர்களை புண்படுத்தலாமா? .நாம் என்றும் நட்புறவாக ஈகரையில் பயணிக்க என்ன காரணம் என்றால் அது சகிப்புத்தன்மை தான்.

அதே போல நீங்கள் உதாரணம் காட்டிய கட்டபொம்மன், திருப்பூா் குமரன் போன்றோா் யாரும் தற்கொலை செய்யவில்லை. ஆங்கிலயோ்களால் கொல்லப்பட்டவா்கள்.
அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று நானும் சொல்லவில்லை. உயிர் மட்டுமே முக்கியம் என்று நினைத்து தன குடும்பம் முக்கியம் என்று நினைக்காது, நாட்டுக்காக உயிர் நீத்ததை தான் நான் அங்கே குறிப்பிட்டுள்ளேன். இறந்தவர்கள் யாரும் போற்றபடுவதில்லை என்று சுதா அக்கா கூறிய கருத்திற்கு தான் நான் இதை பதிவிட்டேன். நீங்களே சொல்லுங்கள் இறந்தவர்கள் யாரும் பெயர் எடுக்கவில்லையா?

“இன்னொரு பக்கத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது ......
இவர்களை இழந்து தவிக்கு குடும்பத்தினருக்கு மட்டுமே புரியும் இழப்பின் வலி ....இதுபோன்ற மரணங்களை பார்த்து ...இன்னும் பலரும் தங்கள் உயிரை இழந்து விடக்கூடாது என்ற ஆதங்கம் ...சார்லசின் ,உதயசுதாவின் வாதத்தில் உள்ள அடிநாதம் ...இதை முழுமையாக ஆதரிக்க வேண்டும் !”
இதை நான் நிச்சயமாக ஏற்று கொள்கிறேன். அதேசமயம் இறந்துபோன ஒருவரை கோழை என்றும், முட்டாள் என்றும் கூறுவது எவ்வகையில் நியாயம்?
தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்கு அளவிர்க்கு அந்த பிரச்சனை தீர வேண்டும் ...அதற்காக தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்ற நினைத்திருக்கிறார்கள் அந்த ..தியாகத்தை ...எண்ணிப்பார்கவேண்டும்!
பாலா சார் கூறிய இந்த கருத்தையும் தாங்கள் கவனிக்க வேண்டுகிறேன்.

எனவே, தாங்கள் எங்களை பூிந்த கொள்வீா்கள் என நம்புகிறேன்.

உங்களுடைய மன குமுறல்களை நானும் உணர்கிறேன். அதற்காக மற்றவர்களின் மனம் புண் படாதபடி கருத்து தெரிவிப்பதை நாம் கடைபிடிப்போம்.

Last edited by மகா பிரபு on Tue Jan 03, 2012 8:06 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Empty Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்

Post by கேசவன் Tue Jan 03, 2012 7:42 am

சோகம் சோகம் சோகம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 1357389கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 59010615கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Images3ijfகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் - Page 3 Empty Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum