ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
உண்மையான கொண்டாட்டம் ! Poll_c10உண்மையான கொண்டாட்டம் ! Poll_m10உண்மையான கொண்டாட்டம் ! Poll_c10 
heezulia
உண்மையான கொண்டாட்டம் ! Poll_c10உண்மையான கொண்டாட்டம் ! Poll_m10உண்மையான கொண்டாட்டம் ! Poll_c10 
mohamed nizamudeen
உண்மையான கொண்டாட்டம் ! Poll_c10உண்மையான கொண்டாட்டம் ! Poll_m10உண்மையான கொண்டாட்டம் ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான கொண்டாட்டம் !

Go down

உண்மையான கொண்டாட்டம் ! Empty உண்மையான கொண்டாட்டம் !

Post by முஹைதீன் Sat Dec 31, 2011 1:39 pm


உண்மையான கொண்டாட்டம் !









உண்மையான கொண்டாட்டம் ! Child+-+happiness
குழந்தைகளின்
உலகம் மிகவும் அழகானது ,மிகவும் அற்புதமானது ,மிகவும் ஆனந்தமானது ,மிகவும்
கொண்டாட்டமானது . இதை உணராத மனநிலையில் நாம் இருக்கிறோம் . குழந்தைகளின்
தினசரி வாழ்வில் நிறைய அன்பும் ,நிறைய பிணைப்பும் , கொஞ்சம் சண்டையும்
கலந்திருக்கின்றன . குழந்தைகளை குழந்தைகளாக வளர நாம் அனுமதிப்பதே இல்லை .
நான்கு வயதிற்குள் , தனக்கு வேண்டியதை தானே செய்து கொள்ள வேண்டும் என்று
எதிர்பார்க்கிறோம் .

அறிவியல் என்ன சொல்கிறது என்றால் , குழந்தையின் 14 வயது வரை நம் கைகள்
அவர்களைத் தொட்டுக்கொண்டே இருக்க வேண்டும் . அப்போது தான் அந்தக் குழந்தை
தனக்காக இவர் இருக்கிறார் என்று உணரும் .இல்லாவிட்டால் தனக்காக யாரும்
இல்லை என்று உணர்த்து அதற்கேற்றவாறு நடந்து கொள்ளும் . அப்புறம் "
எம்புள்ளை என் மேல பாசமாவே இல்லை " னு புலம்புவதால் ஒன்றும் நடக்காது .

" தொடுதல் " - ஒரு அற்புதமான நிகழ்வு . நெருக்கமானவர்கள் சந்திக்கும் போது
தொட்டுக்கொண்டே பேசுங்கள் . தொடுதல் ,உங்களில் நிறைய மாற்றத்தை
ஏற்படுத்தும் . குழந்தைகள் நம்மிடமிருந்து அதிக தொடுதலையும் ,அதிக
நெருக்கத்தையும் எதிர்பார்க்கிறார்கள் . இதை செய்யாதே ,அதை செய்யாதே என்று
நாளும் நம்மிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள் ."பேசாமல்
உட்கார்ந்து டிவி பார் " - என்று பணிக்கப்படுகிறார்கள் . அப்படி டிவி
பார்க்கும் குழந்தை , ' நல்லபிள்ளை ' என்று பெயர் வாங்குகிறது .என்ன கொடுமை
இது ? " எண்ணிலடங்காத விளையாட்டுகளால் நிரம்பியது தான் அவர்களின் உலகம் "
என்று எப்போது உணரப்போகிறோம் .

"மண்ணுல விளையாடாதே! " என்று தடுத்து மண்ணோடு உருவாகும் நெருக்கத்தைப்
பறிக்கிறோம் . இன்று , நகரங்களில் மண்ணைப் பார்ப்பதே அரிதிலும்
அரிதாகிவிட்டது .எங்கெங்கு காணினும் கான்கிரிட் .வண்ணதாசன் சொன்னது போல "
கையிலும் ,காலிலும் மண் படாத வாழ்க்கை ,ஒரு வாழ்க்கையா ? ". செருப்பைத்
துறந்து ஒரு முறை மண்ணில் நடந்து பாருங்கள் ,ஒரு முறை மண்ணை கைகளால்
அள்ளுங்கள் ,ஒரு முறை மண்ணில் உங்கள் கால்களைப் புதைத்து அமருங்கள் .மண்
உங்களோடு பேசுவதை உணர முடியும் . நான் குறிப்பிட்டது ,கடல் மணலையோ அல்லது
நம் புண்ணியவான்கள் எச்சி துப்பி வைத்திருக்கும் மண்ணையோ அல்ல .

" குழந்தைகள் மண்ணோடு விளையாடும் போது அவர்களின் நோய் எதிர்ப்புச்சக்தி
அதிகரிக்கிறது "- என்று புதிய ஆய்வு ஒன்று அறிவிக்கிறது . இனி மேலாவது
குழந்தைகளை மண்ணோடு விளையாட அனுமதிப்பார்களா ? மண்ணில் விளையாட
சொல்வதற்குக்கூட யாரோ ஒருவர் ஆய்வு நடத்த வேண்டியுள்ளது .எனது குழந்தைப்
பருவத்தில் மழை பெய்து முடிந்த ஒவ்வொரு அடுத்தநாளும் அவ்வளவு அற்புதமானது .
மழைநீர் ஓடிய தடம் அவ்வளவு அழகாக இருக்கும் .விதவிதமான நிறங்களாலான மண்
துகள்கள் கலந்த ஈரமண்ணிலேயே கழியும் எங்களது காலையும் ,மாலையும் .
கொட்டாங்குச்சியில் ஈரமண்ணை நிரப்பி இட்லி சுட்டு விளையாடிய நாட்கள்
இன்றும் பசுமையாக இருக்கின்றன . இன்றும் மழை பெய்கிறது , மழை நீர் ஓடுகிறது
,கொட்டாங்குச்சியும் இருக்கிறது .ஆனால் , நிறங்களாலான மண் துகள்களையும்
,இட்லி சுடும் குழந்தைகளையும் காணவில்லை .காரணம் , சிமென்ட் சாலை .

" கேள்வி கேட்பது " - மிகவும் அவசியாமான செயல் . குழந்தைகள் மட்டும்
கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுவதில்லை . குழந்தைகள் ,அபத்தமான ,
வேடிக்கையான , கற்பனையான ,எதார்த்தமான மற்றும் அறிவான கேள்விகளுக்குச்
சொந்தக்காரர்கள் .அவர்களின் சில கேள்விகளுக்கு மட்டுமே பதில்கள்
கிடைக்கின்றன , பல கேள்விகளுக்கான பதில்கள் , அதன் எளிமையாலும்
,கடினத்தாலும் , நேரமின்மை என்று காட்டிக்கொள்வதாலும் வீட்டிலும்
,பள்ளியிலும் மறுக்கப்படுகின்றன . தொடர்ந்து கேள்விகள் கேட்கும் குழந்தையே
ஆரோக்கியமானது , உலகைப் புரிந்து கொள்வதின் ஆரம்பமே கேள்விகள் என்று நாம்
உணர வேண்டும் .

பழைய கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் குழந்தைகள் குழந்தைகளாக
காட்டப்பட்டார்கள் .அவர்களுக்கென்று அவர்களுடைய பாணியில் தனிப்பாடல்கள்
இருந்தன . நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களாக குழந்தைகள்
இருந்தனர் . அவர்களைச் சுற்றியே கதை நகர்ந்தது .இன்றைய திரைப்படங்கள் ,
குழந்தைகளைக் குழந்தைகளாக காட்டுவதில்லை , குழந்தைகளுக்கென்று
தனிப்பாடல்கள் இல்லை,
குழந்தைகளை அபத்தமான நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படுத்துகின்றன .

டிவி பார்க்கவும் , கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் கேம்ஸ் விளையாடவும்
மட்டுமே அனுமதிக்காமல் மண்ணிலும் மற்ற குழந்தைகளுடனும் விளையாட அனுமதிக்க
வேண்டும் . இயற்கையை ரசிக்கவும் , இயற்கையின் மாறுதல்களைப் புரிந்து
கொள்ளவும் கற்றுத்தர வேண்டும் . மூன்று வயதிலேயே படி! படி! என்று
அதட்டாமல் வேண்டிய மட்டும் விளையாட அனுமதிக்க வேண்டும் . விளையாட துணை
கிடைக்காத போது நாமே துணையாக மாறி அவர்களுடன் விளையாட வேண்டும் .


14 வயது வரை அவர்கள் குழந்தைகள் தான் என்பதை நாம் உணர வேண்டும் .
குழந்தைகளைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருங்கள் ,நாம் கற்றுக்கொள்வதற்கு
நிறைய விசயங்கள் கிடைக்கும் .நமது கொண்டாட்டமெல்லாம் கொண்டாட்டமே இல்லை .
http://jselvaraj.blogspot.com/2011/12/blog-post_01.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum