ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்!

2 posters

Go down

 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Empty முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்!

Post by கேசவன் Fri Dec 30, 2011 9:07 pm

முருகன் தமிழ்க் கடவுள். தமிழர் வாழும் இடமெல்லாம் முருக வழிபாடு உண்டு. இலங்கையில் திரிகோண மலைப்பகுதியும் தமிழர் வாழும் பகுதிதான். அங்கு கடைச் சங்க காலத்தில் ஒரு குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவன் பெயர் நல்லியக் கோடன்.

தமிழகத்தின் வடபகுதி தொண்டை நாடு எனப் பட்டது. தொண்டை நாட்டிலுள்ள எயிற்பட்டினம், ஆமூர், வேலூர், மூதூர் ஆகிய நகரங்களை நல்லியக்கோடன் கைப்பற்றினான். அங்கு கோட்டைகள் அமைத்து அரசு புரிந்தான். இவனது குலதெய்வம் குமரக் கடவுள்.

தமிழகத்தில் இவன் ஆண்ட பகுதி ஓய்மா நாடு என வழங்கியது. இவனும் ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் எனப்பட்டான். இன்றைய திண்டிவனம் (திண்டிருணிவனம்- புளியங்காடு)கூட ஓய்மாநாட்டின் ஒரு பகுதிதான்! திண்டிவனத்தில் இப்பொழுது கிடங்கில் எனப்படும் பகுதியில் நல்லியக்கோடனின் கோட்டை இருந்துள்ளது. கிடங்கில் என்பது கோட்டையைக் குறிக்கும்.

திண்டிவனத்திற்கு அருகேயுள்ள மரக்காணம் பகுதியைச் சேர்ந்தது இடைக்கழிநாட்டு நல்லூர். இடைக்கழிநாடு என்பது மரக்காணம் அருகே இன்றும் உள்ளது. இந்த நல்லூரைச் சேர்ந்த புலவர் நந்தத்தனார். இவர் நல்லியக்கோடன்மீது பாடியது தான் சிறுபாணாற்றுப்படை என்னும் நூல். இது சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் ஒன்றாகும். நல்லியக்கோடன் புலவர்க்குப் பரிசிலாக யானைக் குட்டியும் வளநாடும் பொற்குவியலும் வழங்கிப் போற்றியுள்ளான்.

நல்லியக்கோடன் புகழ் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றதை அறிந்தனர் மூவேந்தர். அவர்கள் உள்ளத்தில் பொறாமைத் தீ மூண்டது. மூவேந்தரும் நல்லியக்கோடன்மீது திடீர் படையெடுப்பு நடத்தினர்.

"முருகனை நம்பினோர் முழு வெற்றி பெறுவர்' எனும் கொள்கையுடையவன் நல்லியக்கோடன். அந்த நம்பிக்கையோடு தன் படைகளுடன் மூவேந்தரை எதிர் கொண்டான்.

நல்லியக்கோடனின் அமைச்சன் ஒருவன் கெடுமதியாளன். அவன் பகைவருக்கு உளவு சொல்லித் தந்தான். அதனால் நல்லியக் கோடனின் படைகள் மூவேந்தர் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சிதறின. தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்தான் நல்லியக்கோடன். இரவோடு இரவாக மனைவியுடன் வேலூர் சென்றுவிட்டான்.



இந்த வேலூர் இன்று மாவட்டத் தலைநகராயுள்ள வேலூர் அல்ல. இது மரக்காணத்திற்கு அருகேயுள்ளது. இப்பொழுது "உப்பு வேலூர்' என வழங்கி வருகிறது.

நல்லியக்கோடன் வேலூரிலுள்ள முருகப் பெருமானின் திருவடிகளைச் சரணடைந்தான். ""ஐயனே, தோல்வியால் மானமழிந்தபின் இனி உயிர் வாழேன்'' என்று கூறிவிட்டு அயர்ந்து உறங்கி விட்டான். கனவில் கந்தவேள் கைவேலுடனும் மயிலுடனும் காட்சி தந்தான். ""நல்லியக்கோடனே, யாமிருக்க பயமேன்? வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை. நீ நீராடும் கேணி (கிணறு) நீரில் பூக்கும் ஒற்றைத் தாமரை மலரைப் பறித்து எமது ஆறெழுத்து மந்திரத்தை (ஓம் சரவணபவ) சொல்லி பகைவர்மீது வீசி எறிவாயாக'' என்று திருவருளாணையிட்டு மறைந்தார்.

விழித்தெழுந்த நல்லியக்கோடன் புத்துணர்ச்சி பெற்றான். போர்க்களம் சென்றான்.

வள்ளிமணாளன் முருகன் சொன்னபடி கேணியில் பறித்த தாமரை மலரை பகைவர்மீது வீசினான். மலரே வேலாக மாறியது. பகைவர் தலைகளைச் சாய்த்தது. அவனது போர்ப்படைகள் செய்ய முடியாததை முருகனின் வேற்படை செய்து முடித்தது.

"அம்மலர் அயிலென அணுகி ஆங்குள
வெம்மைசேர் படைகளை வீட்டி தெவ்வர்கள்
தம்முழி அமைச்சன் தன் தலையைக் கொய்து உயர்
செம்மனக் கோடன்தன் திருக்கை சேர்ந்ததே'

என்கிறது பாடல்.

(அயில்- வேல்; வீட்டி- அழித்து; தெவ்வர்கள்- பகைவர்கள்; கொய்து- பறித்து.)



வேலாக மாறிய தாமரை மலர் பகைவர்களை அழித்து, கொடிய அமைச்சன் தலையை வெட்டி நல்லியக்கோடன் கையில் சேர்த்தது! நல்லியக்கோடனைக் காக்கும் வேல் கொடிய அமைச்சனைத் தாக்கும் வேலாகியது. கடவுள் கை ஆயுதங்கள் என்றுமே நல்லோருக்குத் தீங்கு செய்யாது. எனவே அவற்றிற்கு கொடியோர்தான் அஞ்ச வேண்டும். அதிலும் மனந்திருந்திவிட்டால் அவர்களையும் வாழ வைக்கும் வேலாயுதம் என்பதற்கு மயிலாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூரபத்மனே சான்று!

பொறாமைத் தீ மூவேந்தர்க்கு தோல்வியைத் தந்தது. குறுநில மன்னன் நல்லியக்கோடனிடம் பணிந்தனர் மூவேந்தர்.

தனக்கு வெற்றி தந்த வேலவனுக்கு நல்லியக்கோடன் ஓர் ஆலயம் எடுத்தான். அந்த ஊர் பெயரும் அன்று முதல் வேலூரானது.

(வாரியார் சுவாமிகள் கூறியதை ஆதாரமாய்க் கொண்டு எழுதப்பட்டது).

நன்றி http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8615


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! 1357389 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! 59010615 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Images3ijf முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Empty Re: முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்!

Post by உமா Mon Jan 02, 2012 2:27 pm

நன்றி.தற்போது தான் தெரிந்து கொண்டேன். நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum