புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_m10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10 
81 Posts - 68%
heezulia
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_m10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_m10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_m10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_m10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10 
1 Post - 1%
viyasan
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_m10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_m10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_m10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_m10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_m10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_m10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10 
18 Posts - 3%
prajai
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_m10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_m10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_m10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_m10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_m10க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

க.நா.சு: ஓர் எழுத்தியக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 6:24 pm

க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் E_1323162058

க.நா. சுப்ரமணியம் (1912-1988) எழுதிய நூல்களை நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என ஆறு வகையாகப் பிரிக்கலாம். இலக்கிய வரலாறு அவரை விமர்சகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பதிவு செய்து கொண்டு அவரது மற்றவகைப் படைப்புகளைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. என்றாலும் நாவல்களும் மொழிபெயர்ப்புகளும் எண்ணிக்கையில் முதலிரு இடங்களைப் பெற்று விடுகின்றன. சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் என்ற வரிசையில் எண்ணிக்கை வகையில் மற்ற படைப்புகள் அமையும். மொழி பெயர்ப்புகளில் பிறமொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குமானவை அடங்கும். உலக இலக்கியம், இலக்கியாசிரியர்கள் பற்றி எழுதியவை விமர்சனக் கட்டுரைகளில் அடங்கும்.

கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம் எழுதிய நூல்கள் எல்லாவற்றையும் இன்றைய வாசகன் ஒருவனால் படித்தவிட முடியுமா என்று சொல்ல முடியவில்லை. இவற்றை ஒருசேரப் பார்ப்பதுக்கூடச் சாத்தியமல்ல எனத் தோன்றுகிறது. சாகித்திய அகாதெமிக்காக 2000இல் இம்முயற்சியில் இறங்கிய தஞ்சை பிரகாஷ் வெற்றி பெற இயலவில்லை. இலக்கியச் சிந்தனையின் தூண்டுதலில் இம்முயற்சியில் சென்ற ஆண்டு ஈடுபட்ட கி.அ. சச்சிதானந்தம் அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல என்று சொல்லிவிட்டார். 76 ஆண்டுக் காலம் வாழ்ந்து, 60 ஆண்டு காலம் சளைக்காமல் எழுதிய க.நா.சுவின் நூல்களை எல்லாம் தொகுத்தால் 20,000 பக்கங்கள் வரலாம் என்பது அவரது யூகம். இது குறைவான மதிப்பீடு என்பது என் எண்ணம். க.நா.சுவின் நூல்கள் நாட்டுடைமையாகிவிட்டதால் உரிமை பற்றிக் கவலையின்றி எல்லாவற்றையும் தொகுத்து எவராவது வெளியிடலாம் - காவ்யப் பதிப்பாக அல்லாமல்! நூற்றாண்டை ஒட்டி வெளியிட்டால் பொருத்தமாகவும் இருக்கும்.

2012இல் நூற்றாண்டு காணும் தமிழ் இலக்கியவாதிகளுள் முக்கியமான நால்வர் க.நா.சுப்ரமண்யம், மு.வரதராசன், கோ.வன்மீகநாதன், ஜி.வரதராஜன் ஆகியோர். மொழிபெயர்ப்பிலும் பழந்தமிழ் சமய நூல்களுக்கு உரை எழுதுவதிலும் ஈடுபட்ட பின்னிருவரின் படைப்புகள் எண்ணிக்கையில் குறைவு. இலக்கியம் பற்றிய பார்வையில் ஏறக்குறைய எதிர் - துருவங்களாய்க் கருதத்தக்க முன்னிருவரும் படைப்பு எண்ணிக்கையில் இணைந்த இமயங்களாய் இருக்கின்றனர். க.நா.சு., மு.வ., இருவரின் படைப்புகள், அவர்கள் வயதினும் மிகுதி. 62 வயது வாழ்ந்த மு.வ.வின் நூல்கள் 85 என்கிறார்கள். அவை பட்டியலுக்குள் வந்துவிட்டன. க.நா.சு. 76 ஆண்டுகள் வாழ்ந்தார். ஏறக்குறைய 107 நூல்கள் அவரது முழுமைபெறாத பட்டியலில் சேர்ந்துள்ளன. ஆறு மாத காலத்தில் கிடைத்த நேரத்தில் தேடியதில் கிடைத்ததன் இருப்புக் கணக்கு இவை.

ஒரு படைப்பாளியைப் பற்றி மதிப்பிட (சாதகமாகவோ பாதகமாகவோ) முதல் ஆதாரமாக இருப்பவை அவரது படைப்புகள். அவையே முழுமையாகவும் ஒழுங்காகவும் கிடைக்காதபோது அவரைப் பற்றிய சரியான ஆய்வுகள் உருவாகவும் விவாதம் மேலெழும்பவும் வாய்ப்புகள் இல்லை. சமகாலப் பார்வை சார்ந்த அரசியல், தனிப்பட்ட அன்பு அல்லது விரோதம், மதிப்பு அல்லது பொறாமை கலந்த மதிப்பீடுகளும் வதந்திகளும் தொடர்ந்து பரவும் அது. ஒருவரிடமிருந்து ஒருவருக்குப் பரவும் தொற்றுநோய். வாசகன் சுயமாகப் படித்த அவனாக உருவாக்ககி கொள்ளும் கருத்தும் மதிப்பீடும்தான் அவனுக்குள் இறங்கிச் செரிக்கும். மற்றவை என்ன இருந்தாலும் அன்னியப் பொருள்கள்தாம். அவற்றை உடம்பு ஒரு கட்டத்தில் வெளியேற்றி விடும்.

படைப்புகள் பொதுவெளியில் இல்லாததினால், அவற்றைப் பற்றிய சில தகவல்களை வைத்திருப்பவர்கள் கூட ஆய்வாளர்களாக மகுடம் சூட்டிக்கொண்டு திரிகிறார்கள். தகவலகள் ஆய்வுகள் அல்ல என்ற ஆய்வுலகின் பாலபாடத்தைத்தான் தமிழ்ச் சமூகத்தில் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது. இது கேவலம். ஒரு மொழியின், இலக்கியத்தின் ஒரு கூறுமீது வெளிச்சம் பாய்ச்சிய படைப்பாளிக்கு அவனது சமூகத்தின் பின்தேவைக்கான முன்தயாரிப்பு அவனது நூற்பட்டியல். இங்கே க.நா.சு. அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுதிக் குவித்திருக்கிறார். அவரது கருத்துகளைக் காலம் இன்னும் பழசாக்கிக் குப்பைக்குத் தள்ளிவிடவில்லை. அப்படியே தள்ளினாலும் அவரது மொழிபெயர்ப்புகளும் விமர்சனங்களும் உரமாகும் குப்பைகளாகவே இருக்கும்.

இந்தச் சூழலில் க.நா.சு. பற்றிய ஆய்வுக்கான முன்தயாரிப்பாக அவரது நூற்பட்டியலை, முழுக்குறிப்புகளுடன் யத்தப்படுத்த விரும்பினேன். அப்பணி முடியவில்லை. இந்நூற்றாண்டில் முடியலாம். அதற்க முன்னால் அப்பட்டியலை வாசகர்களின் கவனத்துக்கு முழுமைப்படுத்தும் நோக்கத்தில் சில சாதாரண விவரங்களுடன் தர விரும்பியதன் விளைவு இக்கட்டுரை.



க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 6:25 pm

பத்திரிகை எழுத்து

மணிக்கொடி, சூறாவளி, சந்திரோதயம், சரஸ்வதி, தேனி, இலக்கியவட்டம், எழுத்து இறுதியாக முன்றில் போன்ற இதழ்களுடன் தொடர்பு கொண்டும் நடத்தியும் இருந்த க.நா.சுப்ரமண்யத்தின் படைப்புகள் பெரும்பாலும் பத்திரிகைகளில் வெளிவந்தபின்னரே நூல்களாகியுள்ளன. பெரிய மனிதன் சுதேசமித்திரனில் வந்தது. படித்திருக்கிறீர்களா சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் வந்த தொடர். நளினி (1959) சந்திரோதயத்தில் (1945) தொடர்கதையாக சமூகச் சித்திரம் என்ற தலைப்பில் பிரசுரமானது. முதலில் எழுதிய நாவலான சர்மாவின் உயில் சுதேசமித்திரன் (1946) வாரப்பதிப்பில் தொடராக வந்தது. சமூகச் சித்திரம், நல்லவர், ஆட்கொல்லி கியவை வானொலியில் ஒலிபரப்பானவை. இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் இலக்கிய வட்டத்தில் பிரசுரமான கட்டுரைகள்.

க.நா.சுவின் சில நாவல்கள் முதலில் வானொலியில் ஒலிபரப்பான தகவல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. க.நா.சு. போன்றவர்களின் ஆழமான எழுத்துகள் வானொலி போன்ற திபருப்பிக் கேட்க, திருப்பிப் பார்க்க வாய்ப்பற்ற ஊடகத்தில் வெளிவரும்போது படைப்பாளனின் உணர்வு எந்த அளவுக்கு வாசக மனத்துக்குள் போய் இறங்கும் என்ற சந்தேகம் யாருக்கும் வரக்கூடியதே. வானொலி வெளிப்பாடு கணத்தில் தோன்றிக் கணத்தில் மறையும் ஒலிக்கீற்று. நேயனின் மனத்தில் ஊடுருவிப் பாய அது மின்னலைப் போல இருக்க வேண்டும். க.நா.சுவின் எழுத்துகள் மின்னல் அல்ல. மீண்டும் படித்தப் புரிந்துகொள்ள வேண்டிய, நிதானமாகப் படித்தறிய வேண்டிய, சராசரி வாசகனின் புரிதலுக்க மீறிய மூடுண்ட எழுத்துகள். இவ்வகை எழுத்துகள் இத்தன்மை உடைய ஊடகம் மூலம் எங்ஙனம் பரவ முடியும் என்று குழம்பி நின்றேன். வானொலியில் ஒலிபரப்பான நாவல்களுள் ஒன்றான ஆட்கொல்லி முன்னுரையில் என் குழப்பத்தை முன்னுணர்ந்தவர் போலக் க.நா.சு. விவரிக்கிறார்.

"ரேடியோவில் வாராவாரம் வாசிக்க ஒரு நாவல் வேண்டுமென்று அவர் (டி.என்.விஸ்வநாதன்) கேட்ட போது இதை எழுதித் தந்துவிடுவதாக ஒப்புக்கொண்டேன். நாவலைச் சுலபமானதாக, சம்பவங்கள் நிறைந்ததாக, சுலபமாக வாராவாரம் பின்பற்றக்கூடிய சுவாரசியமான தொடர்கதையாக அமைக்க விரும்பவில்லை நான். ரேடியோ மூலம் கனமான கருத்துள்ள ஆழ்ந்துள்ள, கவனிக்க வேண்டிய, ஊம் கொட்டாமல் நின்று நிதானித்துச் சிந்திக்க வேண்டிய நாவல் ஒன்று வெளியிட்டுவிட வேண்டும், சமூகச் சித்திரம் என்று முன்பு எழுதிய ஒரு லேசான கதைக்குப் பரிகாரமாக என்று எனக்குத் தோன்றியது. அப்படியே செய்தேன்.'

தொடர்ந்து வானொலியில் க.நா.சு.வின் நாவல்கள் ஒலிபரப்பானதாகத் தெரியவில்லை. எப்படி ஆகும்?



க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 6:26 pm

நாவல் எண்ணிக்கை

சமூகச் சித்திரம் தொடங்கித் தந்தையும் மகளும் உள்ளிட்டு 17 நாவல்களின் பெயர்களைக் குறிப்பிட்டு போன்ற 20 நாவல்கள் என்று சு.நா.வின் நாவல்களின் பட்டியலைத் தருகிறார் தஞ்சை பிரகாஷ், சாகித்திய அகாதமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் எழுதிய நூலில், இவை தவிர அச்சில் வராமல், உள்ள நாவல்கள் எனத் திருவாலங்காடு (4 பாகம், 1000 பக்கத்துக்கு மேல்), மால்தேடி, வக்கீல் ஐயா, ஜாதிமுத்து, சாலிவாஹணன், சாத்தனூர் போன்ற 15க்கும் மேற்பட்டவை கையெழுத்துப் பிரதிகளாக உள்ளனவாம். ஆக மொத்தம் 35 நாவல்கள் தேறுகின்றன. இவை நாவல்கள் மட்டும். பிரசுரமானவை, பிரசுரமாகாதவை என்ற வகையில் அடங்கும் இவை மட்டுமல்ல க.நா.சு. எழுதியவை. அழிந்து போனவை - மன்னிக்கவும் - கிழிந்து போனவை என்ற ஒருவகையையும் இதில் சேர்க்க வேண்டியுள்ளது.

1949ஆம் ஆண்டு பேரன்பு என்னும் ஒரு நாடகக் காப்பியத்தைத் திருப்தி தராதபோது க.நா.சுவே கிழித்து எறிந்திபருக்கிறார் என்று பிரகாஷ் குறிப்பிடுகிறார் (க.நா.சுப்ரமணியம், ப.53).

க.நா.சு. இலக்கியத்தடம் (1991) நூலில் இடம்பெற்றுள்ள ஒரு நேர்காணலில் க.நா.சு. (1984) சொல்வதை இவ்விடத்தில் பார்க்கலாம்.

ஏழுபேர் (நாவல்) உங்கள் (வாசகர்) கண்ணில் பட்டிருக்க வாய்ப்பில்லை. புத்தகத்தை அச்சடித்து வீட்டில் வைத்தவிட்டு ஊருக்குப் போயிருந்தேன். வீட்டுக்காரன் வாடகை பாக்கி என்று எல்லா புத்தகங்களையும் பழைய புத்தகக் கடையில் விற்றுவிட்டான்.

க.நா.சு. குறிப்பிடும் ஏழுபேர் நாவல் வெளிவந்ததோடு அவரது மூன்று நாவல்கள் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. எது எப்படியோ வீட்டுக்காரனுக்கு வாடகை பாக்கி வைத்து அவஸ்தைப் பட்டிருப்பார் என்பதும் அது புத்தகத்தோடு சம்பந்தப்பட்டது என்பதும் விளங்குகிறது.

க.நா.சுவின் மொத்த நாவல் எண்ணிக்கை 35 தானா என்பது தெரியவில்லை. தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977) நூல், பசி, பொய்த்தேவு, ஒரு நாள், அசுரகணம் ஆகிய நான்கு நாவல்களை மட்டுமே குறிபிடுகின்றது. அவரது (க.நா.சு.வின்) நாவல்கள் புத்தகமாக வந்திருப்பவை பன்னிரெண்டு. மூன்று நான்கு நாவல்கள் கைப்பிரதிகளாக இருக்கின்றன என்று நினைக்கிறேன் - இது சி.சு. செல்லப்பா (எழுத்து, ஜனவரி 1966) குறிப்பிடுவது.

ஆய்வாளர்களுக்கும் வாசகர்களுக்கும்தான் க.நா.சு. எழுதிய நாவல் எண்ணிக்கை தெரியவில்லை என்று நினைக்க வேண்டாம். ஆசிரியரான க.நா.சுவுக்கும் அது குழப்பம்தான். ஒரு நாள் முன்னுரையில் தயக்கத்துடன் தெரிவிக்கும் வாசகம் இது:

"ஒரு நாள் என்கிற இந்த நாவல் நான் எழுதிய நாவல்களில் ஒன்பதாவது என்று எண்ணுகிறேன்.' எதையும் சந்தேகப்படு என்று மார்க்ஸ் சொன்னதைத் தன் நாவல் விஷயத்திலும் கடைபிடிக்கும் க.நா.சுவைப் போய் வலதுசாரி என்று சொல்கிறார்கள்!

எழுதுவதில் சளைக்காதவரான க.நா.சு.தனக்குத் திருப்தி வர அசுரகணம் (1959) நாவலை நான்கு தடவைகள் எழுதியிருக்கிறார். ஒரு பதிமூன்று வருஷங்களுக்கும் அதிகமாக மனசில் ஊறிக்கிடந்த விஷயம் இது. பூரணமான உருத் தர நான் இதை நான்கு தடவைகள் எழுத வேண்டியதாக இருந்தது (அசுரகணம், முன்னுரை). அசுர முயற்சி இன்றி சில நாவல்கள் உடனேயும் உருவாகியிருக்கின்றன. இது (சர்மாவின் உயில்) என்னுடைய முதல் நாவல். 1938இல் சேலத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி மூலபாடத்தை 15 நாட்களிலும், இந்த உருவகத்தில் 21 நாட்களிலும் எழுதி முடித்தேன். (சர்மாவின் உயில் முன்னுரை). இதன் முதல் பதிப்பு ஜனவரி 1948இல் கலைமகள் காரியாலயம் மூலம் வெளிவந்தது. முதல் நாவல், எழுதிப் பத்தாண்டுகள் கழித்துத்தான் வந்திருக்கிறது. உயிலை எழுதுவது சிரமமல்ல, நடைமுறைப்படுத்தவது கடினம் என்பது உண்மைதானே.

இன்னொரு நாவலையும் இப்படிப் பலமுறை பல்லாண்டுகள் க.நா.சு. முயன்று முடித்திருக்கிறார். அது பித்தப் பூ. அதுதான் அவரது கடைசி நாவல்.

"பைத்தியத்தின் காரணங்கள் - அது தேகம் காரணமாக ஏற்படுகிறதா, மனம் காரணமாக ஏற்படுகிறதா, இரண்டிற்கும் ஏற்படுகின்ற அதிர்ச்சியினால் உண்டாகிறதா என்றெல்லாம் கண்டுகொண்டு கூறும் அளவில் இந்தக் காலத்தைய மனோதத்துவ அறிவு வளர்ந்துவிட்டாதாய் நினைக்கிற மேல்நாட்டு மனோதத்துவ சாஸ்திரமும் ஓரளவிற்கு அசட்டுத்தனம்தான் என்று எனக்கு தோன்றியதைச் சொல்லும் பித்தப் பூ என்ற தலைப்பைக் கொண்ட நாவல் ஒன்று எழுத வேண்டுமென்று 1959இல் எண்ணினேன். மூன்றுதரம் வெவ்வேறு காரணங்களிலிருந்து வெவ்வேறு வழிகளில் எழுதிப் பார்த்தேன். திருப்தி அளிப்பதாக இல்லை. இப்போது செய்திருப்பது நாலாவது முயற்சி' (பித்தப்பூ (1989) முன்னுரை). முடிவாக வெளிவந்த நான்காவது முயற்சியைப் பற்றிய அபிப்பிராயத்தைக் க.நா.சு. தெரிவிக்காததைக் கவனியுங்கள். எதையும் ஒன்றுக்கு நாலுதரம் செய்வதுதான் க.நா.சுவின் நாவல் பழக்கம் போலும்.



க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 6:27 pm

முதலும் முடிவும்

க.நா.சு.வின் முதல் நாவல் பசி என்கிறது காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவந்த பொய்த்தேவு நாவலின் பின்னட்டைக் குறிப்பு. சென்ற பத்தியில் முதல் நாவல் சர்மாவின் உயில் என்று க.நா.சு. கூறுவதாக எழுதியிருந்தீர்களே என்று பார்க்கிறீர்களா! பொறுங்கள்.

சர்மாவின் உயில் (1948) நாவலின் முன்னுரையில் க.நா.சு. சொல்வது பின்வருவது. "ஜனவரி 1938இல் சேலத்தில் ஒரு மாசம் தங்கியிருக்க நேர்ந்தபோது இதை எழுதினேன். சர்மாவின் உயில் என்னுடைய முதல் நாவல்... இத்தனை வருஷங்களுக்குப் பிறகு அதை ஆதரவுடன் புஸ்தக உருவில் வெளிக்கொணருகிற கலைமகள் காரியாலயத்திற்கு நான் பெரிதும் கடமைப்பட்டவனாகிறேன். இது 1946இல் சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் தொடர்ச்சியாக வெளியாயிற்று.'

ஆக சர்மாவின் உயில் 1938இல் எழுதப்பட்டு, 1946இல் பத்திரிகையில் வெளியாகி, 1948இல் நூலாகியிருக்கிறது. ஆனால் 1938க்குப் பிறகு எழுதப்பட்ட பசி, 1943இல் வெளிவந்துவிட்டது. எனவே முதலில் எழுதப்பட்ட நாவல் சர்மாவின் உயில் என்றும் முதலில் வெளியான நாவல் பசி என்று சொல்லலாம்.

ஒரு நாவல் எழுதப்பட்டுப் பத்தாண்டுகள் கழித்து வெளிவருகின்றதா? ஒரு நூல் வெளியீட்டுக்கு இவ்வளவுகாலம் எடுத்துக்கொள்வது இன்றைய பதிப்புச் சூழலில் ஆச்சரியமாகத் தோன்றும். 1940, 50களில் நிலைமை அப்படித்தான் இருந்தது. 1987 அக்டோபரில் வெளியான க.நா.சு.வின் இன்னொரு நூலான ஐரோப்பியச் சிறுகதைகளின் வெளியீட்டுத் தாமதத்தை ஒப்பிட இந்தப் பத்து வருடம் ஒன்றுமேயில்லை.

"'1942 வாக்கில் அல்லயன்ஸ் குப்புசாமி அய்யரிடம் கொடுத்த தொகுப்பு. 46 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது 1987இல் நூலாக வடிவம் பெறுகிறது. கதைகள் இந்த அரை நூற்றாண்டில் பழசாகிப் போய்விடவில்லை (ஐரோப்பியச் சிறுகதைகள் (1987), முன்னுரை).

குப்புசாமி ஐயரிடம் கொடுத்த பிரதியை அவர் பேரன் சீனிவாசன் வந்து நூலாக்குகிறார். தாமதம் எனக்கு அதிர்ச்சி தரவில்லை. பிரதியைப் பத்திரமாக வைத்திருந்ததுதான் எனக்கு ஆச்சர்யத்தை தந்தது.

க.நா.சுவின் முதலில் வெளிவந்த நாவல் பசியாக இருக்கலாம். ஆனால் முதலில் வெளிவந்த நூல் இவ்வாண்டு 150ஆவது பிறந்த ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தாகூரன் வரலாறு. தாகூர் காலமானதை ஒட்டி அல்லயன்ஸ் வெளியிட்ட டி.கே. சிதம்பரநாத முதலியாரின் முகவுரையுடன் கூடிய நூல் கவி ரவீர்நதிரநாத தாகுர் (1941). க.நா.சுவின் கடைசி நூல் கலைஞன் வெளியிட்ட மனித சிந்தனை வளமாக (1988) இருக்கலாம். கடைசியாக அவர் முன்னுரை எழுதியது வேள் பதிப்பகம் வெளியிட்ட கலை நுட்பங்கள். 16 டிசம்பர் 1988இல் மறைந்த அவர் அந்த முன்னுரையை 4 டிசம்பர் 1988இல் எழுதியுள்ளார்.



க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 6:29 pm

அஞ்சல் வழி நாவல்

நடுத்தெரு என்ற நாவலை க.நா.சு. எழுதியது புதுமுறையில் தான் நடத்திய இலக்கிய வட்டம் இதழில் ஒரு தொடராக அதை எழுதாமல், ஒவ்வொரு இதழுடனும் தனித்தனியாக எட்டு, எட்டு பக்கங்களாகத் தொடர்ச்சியாக சந்தாதாரர்களுக்கு நாவலை எழுதி அனுப்பியுள்ளார். இலவச இணைப்பாக அஞ்சல் வழியில் நாவல்!

"இலக்கிய வட்டத்தின் ஒவ்வொரு இதழுடனும் எட்டுப் பக்கங்கள் நடுத்தெரு என்கிற நாவலின் பகுதியும் தரப்பட்டுவருகிறது என்று வாசகர்கள் கவனித்திருப்பார்கள். இந்தப் பகுதிகளைச் சேகரித்து வைத்துக் கொள்வதற்கு ஒரு ஃபோலடர் தயாராகிக் கொண்டிருக்கிறது. அது 17 ஜனவரி 1964 இதழுடன் எல்லா சந்தாதாரர்களுக்கும் அனுப்பித் தரப்படும். நாவல் முடிந்த பின், கதையை பைண்டு செய்துகொள்ள புஸ்தக ஜாக்கெட் ஒன்றும் அச்சிட்டுத் தரப்படும்' (இலக்கிய வட்டம், 20 டிசம்பர் 1963).

பைண்டு செய்யப்பட்ட புத்தகத்தை வைத்துப் படிக்கச் சிக்குப்பலகையும் படித்த பின் பாதுகாத்துவைக்க அலமாரியும் அனுப்புவது பற்றிய அறிவிப்பு ஏதும் தொடர்ந்து வந்த இலக்கிய வட்டம் இதழ்களில் கிடைக்கவில்லை.

நாவல் தொகுப்பு

சிறுகதைகளைத் தொகுப்பாக வெளியிடும் மரபு இருக்கிறது. தமிழில் நாவல்களைத் தொகுத்து முதலில் வெளியிட்டவர் அநேகமாக க.நா.சு.வாகவே இருக்கலாம். அவரது மூன்று நாவல்கள் (1985) (ஏழு பேர், பசி, அசுரகணம்), நான்கு நாவல்கள் (1985) (நளினி, வாழ்ந்தவர் கெட்டால், ஆட்கொல்லி, பெரிய மனிதன்) என்ற நூல்கள் இவ்வகையின.

சிறுகதைத் தொகுப்புகள்

தெய்வ ஜனனம், அழகி, மணிக்கூண்டு, ஆடரங்கு, க.நா.சு. சிறு கதைத் தொகுப்பு I,II,III. ஆகியவை சிறுகதைத் தொகுதிகள். தினமணி, சுதேசமித்திரன், தினமணி கதிர் ஆகியவற்றில் வந்த முறையே பஸ், பயணம், பொய்க்கதைகள் இன்னும் நூலாக வெளிவரவில்லை என்று பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். ஒரு கதாசிரியனுக்குச் சிறந்த கதைகள் பத்து தேறினாலே போதும் என்று சொன்ன க.நா.சுவின் கதைகள் எண்ணிக்கை நூறு இருக்கலாம்.

நவீனத்தின் அடையாளமாகவே ஆகிவிட்ட புதுமைப்பித்தனும் வடிவ நேர்த்தியில் தேர்ந்துவிட்ட கு.ப.ராவும் மனவுலகத்தை வெளிப்படுத்துவதில் முன்னேறிக் கொண்டிருந்த மௌனியும் புழங்கிக்கொண்டிருந்த வெளியில் அதைக் கண்டுணரும் விமர்சன ஆற்றல் பெற்றிருந்த க.நா.சுவால் அவர்களோடு ஒப்பிடப் படைப்பாற்றலில் குறைந்திருந்தது வருந்த வேண்டிய விஷயம் அல்ல. பெரும்பான்மையோர் அதைக் காணவே முடியாது இருந்தபோது க.நா.சு. அதைக் கண்டதும் உணர்ந்ததும் வெளிப்படுத்தியதும் இலக்கியப் பேராற்றல்தான்.



க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 6:30 pm

மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள்

தமிழ், ஆங்கிலம் தவிர பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்விடீஷ் மொழிகளும் க.நா.சுவுக்குத் தெரியும் என்று சொல்வது ஐதீகம். மொழிபெயர்க்கும் அளவுக்கு அம்மொழிகளில் அவருக்குப் பரிச்சயம் கிடையாது என்று பிரமிள் எழுதியுள்ளார். ஆங்கிலம் வழியாகவே அவரது மொழிபெயர்ப்புகள் அமைந்தன என்றாலும் அதில் ஒன்றும் பாதகமில்லை.

நோபல் பரிசு பெற்ற நூல்களின் மொழிபெயர்ப்புகள்; ஐரோப்பிய, ஜெர்மானிய, அமெரிக்க, உலகச் சிறுகதைகள்; ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் கிரேன், ஜாக் லண்டன், இப்சன் போன்ற தனிப்பட்ட எழுத்தாளர் படைப்புகள்; உலகத் தத்துவச் சிந்தனையாளர்கள்; உலகின் சிறந்த நாவலாசிரியர்கள்; உலகின் சிறந்த நாவல்கள்; உலகத்துச் சிறந்த நாடகங்கள்; உலக இலக்கியம் என்ற முறையில் க.நா.சு. மொழிபெயர்ப்புகளை வகைப்படுத்தலாம்.

க.நா.சு.வின் மொழிபெயர்ப்புகள் விதவிதமான முறையில் நூல்களாகியுள்ளன. இவற்றில் சீர்மை இல்லை. உலகத்துச் சிறந்த நாவல்கள் என்ற பெயரில் இரண்டு நூல்கள் இருக்கும். ஒன்றில் 48 நூல்களின் சுருக்கங்கள்; மற்றொன்றில் 15 நூல்களின் சுருக்கங்கள். இதில்கூடப் பெரியது; சிறியது என்ற சீர்மை இருக்கிறது. ஒரு நூலின் கட்டுரைகள் இன்னொன்றிலும் இருக்கும். ஒரு நூல் மறுபதிப்பாகும் போது வேறு பெயரில் ஆகும். முழுதாகவும் மறுபதிப்பு ஆகாது. சில கட்டுரைகள் காரணமில்லாமல் காணாமல் போயிருக்கும். க.நா.சு.வின் நூற்றாண்டிலாவது யாராவது இதை ஒழுங்குபடுத்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும். மொழிபெயர்ப்புகள்தாம் க.நா.சு.வை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போகும்.

மூலமொழியில் அல்லது ஆங்கிலத்தில் இக்கதைகளையும் படைப்பாளர்களையும் ஒருமுறையாவது படித்தவர்களால்தாம் க.நா.சுவைப் புரிந்துகொள்ள முடியும் எனத் தோன்றுகிறது. க.நா.சு.வின் விமர்சனங்களும் அப்படித்தான். அறிமுகம் செய்வதாக நினைத்து இவற்றை எழுதினாலும் அவை எளிமையாக இருக்கவில்லை. அவரது பரந்த படிப்பின் காரணமாக ஆழமான விமர்சனமாக அவை தாமாகவே மாறிவிடுகின்றன என்று தோன்றுகிறது.

க. அழகிரிசாமியைக் குறைவாகப் படித்திருந்தபோது க.நா.சு. எனக்குச் சாதாரணமாகத்தான் பட்டார். அழகிரிசாமியை முழுதாகப் படித்த பிறகு க.நா.சுவின் அழகிரிசாமி பற்றிய மதிப்பீடு எவ்வளவு ஆழமானது என்று புரிந்தது. அழகிரிசாமி தன் கதைகளை அடக்கமான தொனியில் எழுதுகிறார் என்பது க.நா.சுவின் சாதகமான, நுட்பமான விமர்சனங்களுள் ஒன்று. அதுவே அவரது கதைகளில் ஆதாரம் என்பதை மிகச் சில கதைகளிலிருந்தே க.நா.சு. கண்டு கொண்டுவிட்டார். அதுதான் க.நா.சு.வின் இலக்கிய நுட்பம். க.நா.சுவின் இலக்கிய நம்பிக்கைகளுள் ஒன்று தாழ்ந்த சுருதியில் பேசுவது என்பது.

அதேபோல் உ.வே.சாமிநாதையரின் எழுத்து பற்றிய பார்வையும். தமிழ்நாட்டில் 1789 முதல் 1930 வரை வாழ்ந்த ஒரு ந்தாறு தலைமுறைகளின் வாழ்க்கை வளத்தை... நமக்கு ஓரளவுக்குக் காட்டியிருக்கிறார் சாமிநாதையர் என்று ஓரிடத்தில் க.நா.சு. எழுதுகிறார் (விமர்சனக்கலை, ப.106). இதைத்தான் சாமிநாதையரின் எழுத்தில் பழங்காலம் சமகாலம் குறித்த முறையே பெருமிதமும் x வருத்தமும் இழையோடிக் கொண்டிருக்கும் என்று ஒரு கூடுதல் அடி எடுத்து ஆ.இரா. வேங்கடாசலபதி பேசுகிறார். பொ. வேல்சாமி உள்ளிட்டோர் வெவ்வேறு குரல்களில், முறைகளில் பெருமாள்முருகன் தொகுத்த உ.வே.சா.: பன்முக ஆளுமையின் பேருருவம் (2005) நூலில் இக்கருத்தையே பேசி உறுதி செய்கிறார்கள். க.நா.சுவின் கருத்தை நீங்கள் மறுக்கலாம். ஆனால் அது ஏதோ ஒரு அடிப்படையிலானது என்பதும் பரந்த படிப்பின் சாரம் அவ்வடிப்படையில் இறங்கியிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது என்றே நினைக்கிறேன்.



க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 6:33 pm



க.நா.சுவின் ஆங்கில நூல்கள்

க.நா.சு.வின் சொந்த நூல்கள் 10 (ஆங்கிலத்தில்). க.நா.சுவின் நூல்களைப் பட்டியலிட்ட பிரகாஷ் இப்படி குறிப்பிடுகிறார். இந்த வரியின் நேர்ப்பொருள் புரியவில்லை எனினும் 10 ஆங்கில நூல்களை எழுதியுள்ளார் என்பதைத்தான் இப்படிச் சொல்கிறார் என ஏகதேசமாகக் கொள்ளலாம். அவை பற்றிய வவரங்களை, அவர் தரவில்லை. ஆங்கில மொழி நூல் ஒன்று! காஸ்மா பாலிட்டன் கிளப் என்று ஒரு வரியும் இதே பட்டியலில் வேறொரு இடத்தில் வருகிறது. அதுவும் புரியவில்லை. சா. கந்தசாமியின் சூர்யவம்சம், நீல. பத்மநாபனின் தலைமுறைகள் ஆகிய நாவல்களைக் க.நா.சு. மொழி பெயர்த்திருக்கிறார். ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரத்தையும் அவர் மொழிபெயர்த்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் வாழ்வின் இறுதியில் வருகைதரு பேராசிரியராக இருந்த காலத்தில் செய்த பாரதியின் காட்சி மொழி பெயர்ப்பையும் ஆங்கில நூலாகக் கொண்டால் மொத்தம் நான்கு ஆங்கில நூல்களே பார்வைக்குக் கிடைத்தன. சமணப் பின்புலத்தில் திருவள்ளுவரையும் திருக்குறளையும் விளக்கும் Thiruvallvar and His Thirukkural (1987) என்ற நூல் பாரதிய ஞான பீட வெளியீடாகத் தில்லியில் வெளிவந்தது. வ.ஐ.சுப்பிரமணியத்தின் அறிமுகத்துடன் க.நா.சுவின் நீண்ட முன்னுரையும் உண்டு. இந்நூலில் ஏறக்குறைய 48 அதிகாரங்கள் மொழிபெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருக்குறள் நீதி நூல், அது இலக்கியமல்ல என்று ஐம்பதுகளில் எழுதியவர் க.நா.சு. இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தை The Anklet Story (1977) என்ற தலைப்பில் பத்தாண்டுகளுக்கு முன்னரே மொழிபெயர்த்திருந்தார். தில்லி, Agam Prakashan வெளியீடான இது கதைசார்ந்த உரைநடை மொழிபெயர்ப்புதான். தமிழ்ப் பின்புலமுள்ள இவ்விரண்டு இலக்கிய நூல்கள் க.நா.சுவிடமிருந்து உருவானது ஆச்சர்யமல்ல. நீரத் சி.சௌத்ரியின் முன்னுரையுடன் மேக்மில்லன் வழியாக வெளிவந்த நூல் க.நா.சு. எழுதிய The Catholic Community in India (1970). இந்தியாவில் கத்தோலிக்கச் சமூகம் பற்றிக் க.நா.சு. எழுதியிருப்பது நிச்சயம் புதிதாகத் தெரியவரும் போது ஆச்சர்யம் தரும்.

பாரதியின் காட்சிகள் (ஒரு வசன காவியம்.பாரதியின் கையெழுத்திலேயே முழுக்க முழுக்க ஆப்செட் முறையில் அச்சடித்து அது புதுக்கவிதையோ வசன கவிதையோ அல்ல என்று நிரூபித்து க.நா.சு. பதிப்பித்த ஆய்வுக்கட்டுரையுடன் கூடிய நூல்) என்று பிரகாஷ் க.நா.சுவின் கட்டுரை நூல் பட்டியலில் தெரிவித்திருந்தார். பாரதியின் கையெழுத்திலான நூல் என்ற அம்சம் ஆர்வத்தைத் தூண்டச் சிரமப்பட்டு அதைத் தேடிப்பிடித்தால் அந்நூல் அவர் சொன்ன முறையில் உருவாகவில்லை என்று தெரிந்தது. பட வேண்டிய சிரமம் எல்லாம் பட்ட பிறகு சலபதியிடம் பேச்சுவாக்கில் அலைந்ததைப் பற்றிச் சொல்ல நேர்ந்தது. அவரும் அதே நோக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பே அலைந்து திரிந்து ஏமாந்ததைச் சொன்னார். பிரகாஷ் புத்தகத்தைப் படித்துவிட்டு இப்படித் தேடி வேறு யாரும் ஏமாறாமல் இருக்கவே இதை இங்கே சொல்லிவைக்கிறேன்.

பாரதியின் காட்சி, என்பது அந்நூல் பெயர். 11 இயல்களைக் கொண்ட அத்தமிழ் நூலின் கடைசி மூன்று இயல்கள் மட்டும் ஆங்கிலம். பாரதியின் காட்சி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிரகாஷ் குறிப்பிடும் வகையிலான கட்டுரை ஒன்பதாவது இயல். நூல் முன்னுரையில் அந்நூலின் பதிப்பாசிரியர் தெரிவிப்பது பின்வருவது.

பாரதி தான் கைப்பட எழுதிய வசன கவிதைக் கையேட்டைச் சென்னைக்கு நேரில் சென்று சென்னை அருங்காட்சியக இயக்குநர் திரு. ஹரிநாராயணன் அவர்களை நேரில் சந்தித்து நிழற்படப்படி எடுத்து வந்தார்கள் (க.நா. சுப்ரமணயம்). அவர்கள் கொண்டவந்த பாரதியின் சொந்தக் கையெழுத்து ஏடே அவர்தம் ஆராய்ச்சிக்குப் பொருளாயிற்று... பாரதியின் காட்சி அதிலிருந்து உருவானதுதான்.




க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 6:35 pm

புனைபெயர்

நான் பார்த்தவரை க.நா.சு. அநேகமாக எல்லா உரைநடை நூல்களையும் சொந்தப் பெயரில் வெளியிட்டுள்ளார் என்று சொல்லலாம். மயன் என்ற பெயரில் கவிதைகளை அவர் எழுதிவந்தது பிரசித்தம். பத்திரிகைகளில் எழுதும்போது புனைபெயரைப் பயன்படுத்தியிருக்கலாம். நசிகேதன் என்ற பெயர் அவற்றுள் ஒன்று. சரஸ்வதியில் க.நா.சுவை விமர்சித்து வந்த ஒரு கட்டுரையில் மணிவாசகன் என்பவர் வேறொரு நோக்கில் குறிப்பிட்ட ஒரு தொடரில் சில புனைபெயர்கள் விவரம் பதிவாகியிருக்கிறது.

சொல்நயமோ பொருள்நயமோ இல்லாத அம்மாமித் தமிழில் ஆண்டாள் முதல் ராஜா வரையில் ஓராயிரம் பெயர்களில் கதைகள் வெளியிட்டு வந்ததைத் தவிர- இவர் செய்த இலக்கியத் தொண்டுதான் என்ன? (சரஸ்வதி, இதழ் 7, மலர் 3). அந்த மணிவாசகன் யார் என்று தெரியவில்லை.

பயணப்பிரியர்

ஹோட்டல் உணவின் ருசியில் மயங்கிக் கிடந்த க.நா.சுவின் வாழ்க்கை பயணங்களால் நிறைந்தது. நெற்பயிரைப் போல இரண்டிடங்களும் மரத்தைப் போல ஓரிடமுமாக வாழ்க்கையை முடித்துக் கொண்டவர் அல்ல அவர். காற்றைப் போலச் சுழன்றுகொண்டே இருந்திருக்கிறார். சாத்தனூரை விட்டுச் சென்னைக்கு ரயிலேறிய க.நா.சு. பயணத்திற்கு அஞ்சவில்லை. சிதம்பரம், சென்னை உள்ளிட்ட தமிழக நகர வாழ்க்கை 1965 வரை, 20 வருடம் தில்லி வாழ்க்கை (1965-85), மூன்றாண்டு புதுவை உள்ளிட்ட சென்னை வாழ்க்கை (1985-88). இறுதியில் தில்லிக்குச் சென்று நிகம்பூ மயானம் வழியாகப் போய்ச் சேர்ந்தார்.

சென்னை, தில்லி என்று நிரந்தர வசிப்பிடங்களை வைத்துக் கொண்டிருந்தாலும் இந்தியா முழுக்க, உலகின் பல பகுதிகளிலும் சுற்றிப் பலப் பல மாதங்கள் தங்கி வாழ்நதிருக்கிறார். சில மாதங்கள் திபருவனந்தபுரத்தில் ராஜாராவுடன் ஒரு சாமியாரைச் சந்தித்துக் கொண்டு வாழ்ந்திருக்கிறார். நாகர்கோயிலுக்குப் போய் ஓரிரு மாதம் இருந்திருக்கிறார் - அப்போதுதான் சுந்தர ராமசாமியை வழிமாற்றிவிட்டது.

க.நா.சு. நாகர்கோவிலில் வாழ்ந்ததை சு.ரா. தன் நினைவோடையில் சொல்லியிருக்கிறார். வேறு பல ஊர்களில் தங்கியதைக் க.நா.சுவின் முன்னுரைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆடரங்கு முன்னுரை தாம்பரத்திலிருந்து (12 ஏப்ரல் 1955) எழுதப்பட்டிருக்கிறது. ஆட்கொல்லி, படித்திருக்கிறீர்களா ஆகியவற்றின் முன்னுரைகள் திருவனந்தபுரத்தில் (1959) உருவாகியுள்ளன. தில்லியில் கலை நுட்பங்கள் முன்னுரையும், மைசூரில் பித்தப்பூவுக்கான முன்னுரையும் தயாராகியுள்ளன. நல்லவர் முன்னுரை மதுரையிலிருந்து எழுதப்பட்டது. சர்மாவின் உயில் தயாரானது சிதம்பரத்தில்.

க.நா.சு. சொல்கிறார் ஒரு கதையில்... என் பிரயாணங்களில் என் அறிவு விசாலித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு நாற்றம் வீசுகிறது. தஞ்சாவூருக்கென்று பிரத்யேகமான ஒரு நாற்றம். கும்பகோணத்திற்கென்று ஒரு பிரத்யேகமான நாற்றம். மன்னார்குடிக்கென்று பிரத்தியேகமான நாற்றம். திருவட்டீஸ்வரன் பேட்டைக்கென்று பிரத்யேகமான நாற்றம். திருவனந்தபுரத்திற்கு தனியாக ஒரு நாற்றம். மதுரைக்கு தனியாக நாற்றம் உண்டென்பதை நான் திருப்பரங்குன்றம் பஸ்ஸில் போய் கொண்டிருக்கும் போது உணர்ந்து கொண்டேன் (ரெட்டைப் பிள்ளையார், சரஸ்வதி, ஜூன் 1958).



க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 6:36 pm

க.நா.சுவின் காணிக்கைகள்

க.நா.சு. தனது நூல்களைக் காணிக்கையாக்கியிருக்கிற விதம் அவரது நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

பொய்த்தேவு (1946) நாவலுக்குச் சிதம்பத்திலிருந்து, விய ஆண்டு விஜயதசமி அன்று எழுதிய சமர்ப்பணம் கடவுளுடன் தொடர்புடையது.

இந்தப் புஸ்தகத்தை நான் எழுதத் தொடங்கிய காலத்தில் முணுக்கு முணுக்கென்று ஒரே விளக்கு. அதிக வெளிச்சம் தராமல் எரியும் கர்ப்ப கிருஹத்திலிருந்துகொண்டு என் காரியங்களில் குறுக்கிடாமல், என் வீட்டு வாசலில் இருந்தபடியே கவனித்து வந்த சிதம்பரம் செங்கழுநீர்ப் பிள்øளாருக்கு இப்புத்தகத்தைச் சமர்ப்பணம் செய்கிறேன்.

தொந்தரவு தராத பிள்ளையாருக்கு நாவலை அர்ப்பணித்த மறுமலர்ச்சி எழுத்தாளர் க.நா.சு.வாகவே இருக்கலாம்.

எங்கள் குடும்பத்தை இரண்டு தலைமுறைகளுக்கும் அதிகமாக ஒருமையை உணரச்செய்த என் தகப்பனாரின் அம்மா (பாட்டி) அக்காவின் நினைவிற்க இதைச் சமர்ப்பிப்பது நியாயம் என்று தோன்றுகிறது என்று தன் முதல் நாவலைப் பாட்டிக்குக் க.நா.சு. காணிக்கையாக்கினார். எல்லாவற்றுக்கும் காரணமும் நியாயமும் தேடும் க.நா.சு.வின் குணம் மேற்கண்ட வரிகளிலும் வெளிப்படுகின்றன. இது ஒரு நாள் நாவலின் இரண்டாம் பதிப்பு சமர்ப்பணத்திலும் உறுதியாகிறது.

(ஒரு நாள் நாவலின்) முதற்பதிப்பு வெளியிட்ட அ.கி. கோபாலனுக்கு இதைச் சமர்ப்பணம் செய்வது பொருந்தும் என்று எண்ணி சமர்ப்பிக்கிறேன் மனித குல சிந்தனைகள் (1966) நூலை அப்போது காலமாகி விட்டிருந்த முன்னாள் தினமணி ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கத்துக்குக் க.நா.சு. அர்ப்பணித்திருந்தார்.

புது விஷயங்களையும் புதுப் போக்குகளையும் ஆதரிப்பதில் டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களுக்கு இருந்த ஆர்வம் தமிழர்கள் கவனத்துக்கும் பெருமைக்கும் உரியதாகும். அவர் நினைவுக்கு இந்த நூலை நான் சமர்ப்பிக்கிறேன்.

காணிக்கைகளுக்கான ஆளுமைகளைத் தேர்வதில் க.நா.ச. செலுத்திய கவனத்தை, காணிக்கை வாசகங்களிலும் செலுத்தியிருப்பதை உணரலாம். புதுமைப்பித்தன் போன்ற இலக்கியவாதிகளையும் மணிக்கொடி போன்ற இலக்கிய இதழ்களையும் இலக்கிய இதழ்களையும் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியதில் வ.ரா., டி.எஸ்.சொக்கலிங்கம் போன்றோரின் பெரும்பங்கைக் க.நா.சு. கூர்மையாக உணர்ந்திருந்தார் என்பதற்கு மேலே கண்ட சமர்ப்பணம் ஒரு சான்று. பொருத்தம் பார்க்காமல் க.நா.சு. எதையும் செய்யமாட்டாரோ! இந்நூல் டி.எஸ். சொக்கலிங்கம் நடத்திய நவசக்தியில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு என்பது இன்னொரு பொருத்தம்.

க.நா.சுவுக்குச் சாகித்திய அக்காதெமி பரிசு பெற்றுத் தந்த நூலான இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1985) சமர்ப்பிக்கப்பட்டிருப்பது முந்நூறு வாசகர்களுக்கும் இருபது எழுத்தாளர்களுக்கும்.

இந்த நூலைத் தமிழில் இன்று இருக்கிற இருநூறு முந்நூறு நல்ல வாசகர்களுக்கும் இலக்கிய தீபத்தை மங்கவிடாமல் எண்ணெய் வார்த்து, திரிபோட்டுக் காப்பாற்றிக்கொண்டிருக்கிற பத்து இருபது பெயர் சொல்லக்கூடிய இலக்கிய ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.

இருபது தலைவர்களும் முந்நூறு தொண்டர்களும் கொண்ட சிறு கூட்டத்தைப் பெருக்கத்தான் க.நா.சு. 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்தார். எழுதிக் கொண்டே இருந்த க.நா.சு. பற்றிய தன் நூலுக்கு பெயர் வைத்திருக்கிறார் கி.அ.சச்சிதானந்தம். பொருத்தம் தானே.

இந்தத் தொகுதியில் உள்ள கதைகளுக்குள் வருகிற என் நண்பர்களுக்கு இதை நான் சமர்ப்பிக்கிறேன் என்று ஆடரங்கு சிறுகதை தொகுதியைக் (1955) நண்பர்களுக்கு அர்ப்பணித்தார். க.நா.சு.வின் இளம் நண்பரான சா. கந்தசாமி தன் சாயாவனம் நாவலை ஸ்ரீமதி ராஜி சுப்பிரமணியத்துக்குச் சமர்ப்பித்திருக்கிறார் (1969). திருப்பிச் செலுத்தலோ!

க.நா.சு. (இறுதியாக?) அர்ப்பணித்த நூல் கலை நுட்பங்கள். இந்த நூல் ஆர்.மகாதேவனுக்கு என் அன்புடன் என்பது முன்னுரையின் உள்ளே கிடைக்கும் ஒரு சமர்ப்பணவரி.

அழகி (1944) க.நா.சுவின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி. அல்லயன்ஸ் வெளியிட்ட தமிழ்நாட்டுச் சிறுகதைகள் வரிசையில் 10ஆவதாக இடம்பெற்றது. அந்நூலைப் புதுமைப் பித்தனுக்கு அன்பளிப்பாக அளித்ததைக் க.நா.சு. பின்னாளில் நினைவு கூர்ந்துள்ளார்.

என் முதல் கதைத் தொகுப்பான அழகி வெளிவந்ததும் குருவினிடமிருந்து சிஷ்யனுக்கா, சிஷ்யனிடமிருந்து குருவுக்கா? என்று கேட்டுக் கையெழுத்திட்டு அவரிடம் (புதுமைப் பித்தனிடம்) ஒரு பிரதிபைக் கொடுத்தேன். அந்தப் பக்கத்தைக் கிழித்தெறிந்துவிட்டுப் புத்தகத்தை வைத்துக் கொண்டார். (புதுமையும் பித்தமும், ப.25).

அந்தக் குறிப்பிட்ட பக்கத்தைப் புதுமைப்பித்தன் கிழித்தெறியவில்லை. அதை அப்படியேதான் வைத்திருந்தார். அந்நூல் புதுமைப்பித்தன் சேகரத்திலிருந்து சலபதிக்குக் கிடைத்து, அதைக் காலச்சுவடு புதுமையும், பித்தமும் நூலில் (2006) நகலெடுத்து வெளியிட்டும் உள்ளது. க.நா.சு.வின் கையெழுத்து படிக்கும் படி நன்றாக உள்ளது. அவர் சொல்வதுபோல் அழகி முதல் சிறுகதைத் தொகுப்பாகவும் தெரியவில்லை. தெய்வ ஜனனம் ஜூன் 1943இல் ஜோதி நிலைய வெளியீடாக அதற்கு முன்பே வெளிவந்துவிட்டிருந்தது.

க.நா.சு.வின் புத்தகங்கள் பற்றிய இக்குறிப்பைப் படிப்போர் பெட்டிச் செய்தியில் இருக்கும் நூற்பட்டியலில் இல்லாத நூல் பற்றித் தெரிந்திருந்தால் விவரத்தைக் காலச்சுவடுக்கு அனுப்பிவைக்கலாம். அது ஆய்வாளருக்குப் பயன்படும்.

பழ. அதியமான்



க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Dec 30, 2011 7:25 pm

நல்ல தகவல்.

பகிர்ந்தமைக்கு நன்றி



சதாசிவம்
க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக