புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
44 Posts - 43%
heezulia
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
5 Posts - 5%
Raji@123
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
3 Posts - 3%
prajai
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
2 Posts - 2%
Barushree
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
2 Posts - 2%
Saravananj
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
8 Posts - 2%
prajai
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_m10`தானே' புயலுக்கு 33 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`தானே' புயலுக்கு 33 பேர் பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 31, 2011 5:12 am

`தானே' புயலுக்கு 33 பேர் பலி First3112

கடலூர் மாவட்டத்தை சின்னா பின்னமாக்கி, புதுச்சேரியை புரட்டிப்போட்ட `தானே' புயல் சென்னையிலும் கோரத்தாண்டவம் ஆடியது. இந்த புயல் மழைக்கு 33 பேர் பலியானார்கள்.

சென்னை, டிச.31- தமிழ்நாட்டை அச்சுறுத்திய தானே புயல், புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடையே நேற்று காலை கரையை கடந்தது.

சூறைக்காற்றுடன் பேய்மழை

இந்த புயலின் தாக்கத்தினால், சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வரை உள்ள கடலோர மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வந்தது. புயல் நெருங்கி வரத்தொடங்கியதும், நேற்று முன்தினம் மாலையில் இருந்து காற்றுடன் மழை தீவிரம் அடைந்தது. கடல் கொந்தளிப்பாக இருந்தது.

குறிப்பாக கடலூர், புதுச்சேரி மற்றும் நாகப்பட்டினம் கடலோர மாவட்டங்களில், சூறைக்காற்றுடன் பேய் மழை கொட்டியது. நேற்று காலை 6.30 மணிக்கும் 7.30 மணிக்கும் இடையே கடலூர்-புதுச்சேரி இடையே புயல் கரையை கடந்தபோது, அதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது.

புதுச்சேரியை புரட்டியது

புதுச்சேரியில் 120 கிலோமீட்டர் வேகத்திலும், கடலூரில் 90 கிலோமீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று சுழன்று அடித்தது. இதனால் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. குடிசைகள் காற்றில் பறந்தன. கடல் சீற்றம் காரணமாக மீனவர் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. அதிகபட்சமாக புதுச்சேரியில் 15 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. புயல் கரையை கடந்தபின்னும் மழை நீடித்தது.

புயல்-மழையில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. டெலிபோன் உள்ளிட்ட தகவல் தொடர்புகளும் பாதிக்கப்பட்டன. வரலாற்று சிறப்புமிக்க அமைதியான நகரமான புதுச்சேரி, நேற்றைய புயலால் தலைகீழாக புரட்டிப் போடப்பட்டது. ரெயில் மற்றும் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், புதுச்சேரி தமிழகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டது.

சின்னாபின்னமான கடலூர்

புதுச்சேரியின் பக்கத்து நகரமான கடலூரும் தானே புயலால் சின்னாபின்னமாகியது. கடலூரிலும் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மீனவர் கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஏராளமான படகுகள் சேதம் அடைந்தன.

ரெயில்-பஸ் போக்குவரத்தும் அடியோடு பாதிக்கப்பட்டன. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கடலூரில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நேற்று பகல் 1 மணிக்குப்பிறகுதான் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. விவசாய பயிர்களும் தண்ணீரில் மூழ்கின.

மீட்பு பணிகள்

அதிகம் பாதிப்புக்கு உள்ளான கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் நிவாரண பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

சென்னை மெரினாவில்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் தானே புயல் கோரத்தாண்டவம் ஆடியது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியைப் போல், சென்னை மெரினா கடற்கரையில், நடைபாதை சாலை வரை ஏறத்தாழ 500 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் புகுந்தது.

சென்னையில் திருவான்மிïர் முதல் எண்ணூர் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் கொந்தளிப்பாக இருந்தது. இதனால் பல கிராமங்களில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. பெரும்பாலான புறநகர் பகுதிகளில் இரவு முதல் நேற்று காலை 10 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.

ரெயில்கள் தாமதம்

புயல்-மழையால், நேற்று தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள், அரியலூருக்கும், மேல்மருவத்தூருக்கும் இடையே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர் ஏறத்தாழ 7 மணி நேரம் தாமதமாக அந்த ரெயில்கள் சென்னை வந்து சேர்ந்தன. சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

33 பேர் பலி

நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை நீடித்த தானே புயல்-மழைக்கு தமிழ்நாட்டில் 26 பேரும், புதுச்சேரியில் 7 பேரும் பலியானார்கள்.

கடலூர் மாவட்டத்தில் மட்டும் 21 பேர் பலியானார்கள். அவர்களில் வீட்டுச்சுவர் இடிந்து 2 குழந்தைகள் உள்பட 8 பேரும், மரம் முறிந்து விழுந்ததில் இருவரும், 11 பேர் கடுங்குளிரினாலும் உயிர் இழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குரூப் நாயுடு (வயது 70) என்பவர் மாட்டுக்கொட்டகையில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். அந்த மாவட்டத்தில் கோட்டக்குப்பத்தை சேர்ந்த சுகந்தி (23) என்ற பெண் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது மரம் முறிந்து விழுந்து உயிர் இழந்தார்.

சென்னை சுற்றுலா பயணி

புதுச்சேரியில் 7 பேர் பலியானார்கள். வீடு இடிந்து விழுந்ததில் அருள்ராஜ் (47), சுகந்தி (25) ஆகிய இருவர் உயிர் இழந்தனர். 80 வயது மதிக்கத்தக்க ஒருவரும் புயல்-மழைக்கு பலியானார்.

புதுச்சேரியை அடுத்த தவளக்குப்பத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பாஸ்கல் (47) என்பவர், கார் ஓட்டிச்சென்றபோது மரம் முறிந்து விழுந்ததில் உடல் நசுங்கி இறந்தார். சென்னை எண்ணூரில் இருந்து சுற்றுலா சென்ற மதி (53) என்பவரும் காரில் மரம் முறிந்து விழுந்ததில் பலியானார். பலியான மற்ற இருவருடைய விவரம் தெரியவில்லை.

சென்னையில் பெண் பலி

சென்னை புளியந்தோப்பில் பழமையான கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் அந்த வழியாக சென்ற 45 வயது பெண் இடிபாடுகளில் சிக்கி பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த பட்டாபிராமில், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஏசுதாஸ் (வயது 70) என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர், மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். பூந்தமல்லி அருகே விஸ்வநாதன் (32) என்ற எலக்ட்ரீசியன் மோட்டார் சுவிட்சை போட்டபோது மின்சாரம் பாய்ந்து பலியானார்.

தினதந்தி



`தானே' புயலுக்கு 33 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 31, 2011 5:15 am

சூறையாடப்பட்டது போல காட்சி அளிக்கும் கடலூர்: ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன
`தானே' புயலுக்கு 33 பேர் பலி CNI311207

தானே புயலின் தாண்டவத்தால் சூறையாடப்பட்ட நகரம் போல் கடலூர் காட்சி அளிக்கிறது.

கடலூரில் நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணிவரை வீசிய சூறாவளிக்காற்றால் கடலூர் நகரமே சின்னாபின்னமாகியது.

மரங்கள் முறிந்தன

தானே புயலின் காரணமாக கடலூரில் நேற்றுமுன்தினம் மாலை முதல் மழை பெய்து வந்தது. கடலும் கொந்தளிப்புடன் காணப்பட்டது, இதனால் கடலூர் சில்வர் பீச்சில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் புயல் காற்று பயங்கர வேகத்துடனும், இரைச்சலுடனும் வீசத்தொடங்கியது. சுழன்று, சுழன்று அடித்த சூறாவளிக்காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மரங்கள் பேயாட்டம் ஆடின. கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.

புயலை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், அரசு பஸ்கள் கடலூர் இம்பீரியல் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக டெப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. டெப்போவுக்கு வெளியே நின்ற 2 மரங்கள் முறிந்து விழுந்ததில் சில பஸ்கள் சேதம் அடைந்தன.

மின்கம்பங்கள் சரிந்தன

கடலூர் பஸ் நிலைய இணைப்பு சாலையிலும் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, சீமாட்டி சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் முறிந்து விழுந்தன, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களும், ஒலி பெருக்கிகளும் சேதம் அடைந்தன.

அண்ணா பாலத்தில் இருந்த மின்கம்பங்கள் புயலால் முறிந்து விழுந்தன. நேற்று அதிகாலையில் புயல் வீசிக்கொண்டு இருந்த போது, அண்ணாபாலத்தின் மீது இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை சூறாவளிக்காற்று உருட்டி தள்ளியது.

இதில் புதுப்பாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவர் உள்பட இருவர் காயம் அடைந்தனர்.

உயர்மின்கோபுர விளக்கு முறிந்து விழுந்தது

புதுநகர் போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த பெரிய மரங்கள் சரிந்து வளாகத்திலும், பாரதி சாலையின் குறுக்கேயும் விழுந்தன. பின்னர் அவற்றை போலீசார் வெட்டி அப்புறப்படுத்தினார்கள். நகரசபை வளாகத்தில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன.

பீச் ரோட்டோரத்தில் உள்ள மரங்கள் மொட்டையடிக்கப்பட்டது போல் இலைகளின்றி காட்சி அளிக்கின்றன. பீச் ரோட்டில் உள்ள தீயணைப்பு நிலையத்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில், தீயணைப்பு நிலைய அலுவலக கூரை இடிந்து சேதம் அடைந்தது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள செல்போன் டவர் சரிந்து விழுந்தது.

மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள உயர் மின்கோபுர விளக்கும் அடியோடு முறிந்து விழுந்தது. அதே மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த பொருட்காட்சியில் உள்ள ராட்சத ராட்டினங்கள் சரிந்து கிடந்தன. பொருட்காட்சி அரங்குகளும் சின்னாபின்னமாக சிதைந்து கிடந்தன.

ரோட்டுக்கு வந்த படகுகள்

பாரதி சாலையில் ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழுந்து கிடந்தன. தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. சில்வர் பீச்சில் படகு குழாமையொட்டி மீனவர்கள் படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர்.

கடல் கொந்தளிப்பால் உப்பனாற்றுக்குள் புகுந்த கடல்நீரால் படகுகளும், கட்டுமரங்களும் ரோட்டுக்கு இழுத்துக்கொண்டு வரப்பட்டிருந்தன. ரோட்டோரம் கிடந்த படகுகளும் ஒன்றன் மீது ஒன்று ஏறிக்கிடந்தன. இதில் காசிநாதன் என்ற மீனவரின் விசைப்படகின் என்ஜின் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது.

வீடுகள் சேதம்


அதேபோல் பெரிய வணிக நிறுவனங்கள், கடைகளின் முன்பு இருந்த விளம்பர பலகைகள் புயல் காற்றால் சேதம் அடைந்தன. பல வீடுகளிலும், அலுவலகங்களிலும் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளின் கூரைகளையெல்லாம் காற்று தூக்கி வீசியது.

கடலூர் நகரில் வில்வநகர், தேவனாம்பட்டினம், புதுப்பாளையம் உள்பட பல இடங்களில் ஓட்டு வீடுகளும், கூரை வீடுகளும் சேதம் அடைந்தன. வில்வநகரில் அறிவுக்கரசு என்பவரின் வீடு இடிந்து விழுந்தது.

தேவனாம்பட்டினத்தில் 100-க்கும் அதிகமான வீடுகளில் கூரை ஓடுகளை புயல் காற்று தூக்கி வீசியது. இதனால் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. அந்த வீடுகளை சேர்ந்தவர்கள் புகலிடம் தேடி அருகில் உள்ள அங்கன்வாடியிலும், பெரியார் அரசு கல்லூரியிலும், திருமண மண்டபத்திலும், சமுதாய நலக்கூடத்திலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

போக்குவரத்து பாதிப்பு


புயலால், சாலையோரத்தில் நின்ற மின்கம்பங்களும், விளக்கு கம்பங்களும் சாலையின் குறுக்கே விழுந்தன. மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் கடலூர்-சிதம்பரம், கடலூர்-நெல்லிக்குப்பம், கடலூர்-புதுச்சேரி, கடலூர்-திருவந்திபுரம் உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ரெயில்கள் ரத்து


தானே புயல் எதிரொலியால் விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. விழுப்புரம்-மயிலாடுதுறை-விழுப்புரம் பயணிகள் ரெயில், திருச்சி பயணிகள் ரெயில், விருத்தாசலம்-கடலூர் பயணிகள் ரெயில், கடலூர் வழியாக இயக்கப்படும் சென்னை-திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தண்டவாளத்தின் குறுக்கே மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியில் ரெயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தண்டவாளங்கள் உறுதியான நிலையில் இருக்கிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

படகு தீப்பிடித்தது

கடலூர் முகத்துவாரத்தில் உள்ள உப்பனாற்றில் சுமார் 7 அடி உயரத்துக்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, சோனங்குப்பம், சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை போன்ற மீனவ கிராமங்களுக்குள் கடல்நீர் புகுந்தது.

சிங்கார தோப்பு பாலம் அருகே மின்கம்பியின் மீது படகு உரசியதால் மின்கசிவு ஏற்பட்டு படகு தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் கடலூர் சிப்காட் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் படகின் பாதி எரிந்து சேதம் அடைந்தது.

கடல் சீற்றத்தால் கடலூர் கெடிலம் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடலூர் புதுப்பாளையத்தை ஒட்டிய கெடிலம் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

5 ஆயிரம் வீடுகள் சேதம்

நெல்லிக்குப்பம் நகரில் மேல்பாதி, கீழ்பாதி, அம்பேத்கார் நகர், இந்திராநகர், வாலப்பட்டு, அண்ணாமலைநகர், திருவள்ளுவர் நகர் மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சூறாவளி காற்றால் சின்னாபின்னமாகியது.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் காற்றினால் பறந்தன. மரம், மின்கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்து விழுந்து கிடந்தன. இதனால் அந்த பகுதி ஒரே போர்க்களமாக காட்சி அளித்தது. சாலையில் மின்கம்பம் சாய்ந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்தை சீர்படுத்த பொதுமக்களின் உதவியுடன் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள், சாய்ந்து விழுந்து நாசமாகின. 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெத்தலையும் சேதமாகியது.

சீரமைக்கும் பணி தீவிரம்

தானே புயலின் கோர தாண்டவத்தை கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி, அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டார். சீரமைப்பு பணிகளை அவர் தீவிரப்படுத்தினார்.

கடலூரில் சுவர் இடிந்தும், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தும் காயம் அடைந்த 9 பேர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சாலை சீரமைப்பு பணியில் உயர் போலீஸ் அதிகாரிகள்

கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்துக்கு இடைïறாக கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் வடக்குமண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், கடலூர் நகர போலீஸ் சூப்பிரண்டு வனிதா மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டனர்.

அவர்கள் தங்களிடம் உள்ள நவீன இயந்திரங்கள் மூலம் சாலையோரத்தில் கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.



`தானே' புயலுக்கு 33 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 31, 2011 5:17 am

`தானே' புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு: சேதங்களை மதிப்பிட்டு, அறிக்கை தர கலெக்டர்களுக்கு ஜெயலலிதா உத்தரவு

`தானே' புயலுக்கு 33 பேர் பலி CNI311221

`தானே' புயல் நிவாரண பணிகளுக்கு உடனடியாக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், `தானே' புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை உடனடியாக மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்குமாறு கடலோர மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் ஆணையிட்டு இருக்கிறார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

`தானே' புயல்

தமிழகத்தின் வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடந்த 25-ந் தேதி அன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 27-ந் தேதி அன்று அது வலுவடைந்து புயலாக உருவெடுத்தது. "தானே'' என்று பெயரிடப்பட்ட அந்த புயலானது, புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே நேற்று காலை 6.30 மணியளவில் கரையைக் கடந்தது.

"தானே'' புயல் தமிழகத்தை தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்த உடனேயே, புயல் ஆபத்திலிருந்து காப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு நான் உத்தரவிட்டேன். எனது ஆணையின் பேரில், கடலோர மாவட்ட கலெக்டர்களும், சம்பந்தப்பட்ட அரசு துறையினரும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மேலும், கடந்த 29-ந் தேதி அன்று தலைமைச் செயலாளர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். காஞ்சீபுரம், கடலூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் சென்னை மாவட்டங்களில், தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 6 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர். 125 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் புயல் காற்று வீசும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு முதல் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.

ஜெயலலிதா ஆய்வு

வருவாய்த் துறை, காவல் துறை, நெடுஞ்சாலை துறை, பொதுப் பணித் துறை உள்பட சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விழிப்புடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரக்கோணத்திலுள்ள தேசிய பேரிடர் தணிப்புப் படையை சார்ந்த 4 குழுக்கள் கடலூர், நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்டன.

இதைத் தொடர்ந்து, புயல் மற்றும் அதன் காரணமாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண ஏற்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு செய்தேன். இந்த ஆய்வுக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், தீயணைப்புத் துறை இயக்குநர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

ரூ.150 கோடி ஒதுக்கீடு

புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளதால் சாலை போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இவற்றை சீராக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், போக்குவரத்திற்கு தடையாக விழுந்துள்ள மரங்களை அகற்றி, போக்குவரத்தை சரிசெய்யவும், மின்கம்பங்களை சரிசெய்து மின் இணைப்பை இன்று (நேற்று) மாலைக்குள் அளித்திடவும் ஆணையிட்டுள்ளேன்.

உடனடி நிவாரணப் பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைத்தல் ஆகியவற்றிற்காக ரூ.150 கோடியை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், `தானே' புயலால் ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் சேதங்களை மதிப்பீடு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்ப சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் அரசு செயலாளர்கள் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அமைச்சர்கள் பார்வையிடுகிறார்கள்

இந்த புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பி.வி.ரமணாவையும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு டி.கே.எம்.சின்னையாவையும், விழுப்புரம் மாவட்டத்திற்கு சி.வி.சண்முகத்தையும், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கே.ஏ.ஜெயபாலையும், கடலூர் மாவட்டத்திற்கு எம்.சி.சம்பத்தையும் இன்றே (நேற்று) செல்லும்படி உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தினதந்தி



`தானே' புயலுக்கு 33 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 31, 2011 5:18 am

கடலூர் மாவட்டத்தில் 2,000 மின்கம்பங்கள் சாய்ந்தன

தானே புயல் கடலூரில் சாலையோரத்தில் நின்ற மரங்களை மட்டுமின்றி மின்கம்பங்களையும் பதம் பார்த்தது. பலத்த காற்றில் மரங்கள் முறிந்து மின்கம்பங்களின் மீதும் மின்கம்பிகளின் மீதும் விழுந்ததால் அவைகள் சேதம் அடைந்தன.

மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், 100-க்கும் மேற்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர்களும் சேதம் அடைந்து இருக்கலாம் என தெரிகிறது.

சேதம் அடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்சார டிரான்ஸ்பார்மர்களை கணக்கெடுக்கும் பணி முடிந்த பின்னர்தான் எத்தனை மின்கம்பங்கள், மின்சார டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்தன என்ற முழு விவரம் தெரியவரும் என மின்சார வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



`தானே' புயலுக்கு 33 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக