ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 30/08/2024
by mohamed nizamudeen Today at 6:49 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Today at 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Today at 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Today at 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Today at 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Today at 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Today at 4:38 pm

» நிராசை - கவிதை
by ayyasamy ram Today at 4:37 pm

» தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 4:36 pm

» முயன்று பார்! - கவிதை
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:43 am

» செய்திகள்-ஆகஸ்ட் 30
by ayyasamy ram Today at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» இவை நிம்மதியைக் கெடுக்கும்!
by ayyasamy ram Today at 7:08 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» புறநானூறு படத்தில் ஸ்ரீலீலா
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
by ayyasamy ram Yesterday at 7:35 pm

» புதிய இந்தியா
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» வாழ்க்கை பயிற்சி
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» பேப்பர்காரன்…
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» கண்ணாடி வளையல்
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ஊர் இரண்டு பட்டால்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» புத்தன் யார்?
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» ஓம் முருகா சரணம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» திங்கட்கிழமை சொல்ல வேண்டிய முருக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Yesterday at 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 28, 2024 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Aug 28, 2024 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 28, 2024 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 28, 2024 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 28, 2024 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 28, 2024 7:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாவல் மரம் போதித்த பாடம்

Go down

நாவல் மரம் போதித்த பாடம் Empty நாவல் மரம் போதித்த பாடம்

Post by சிவா Wed Dec 28, 2011 1:44 pm

பாலன் பள்ளிக்குச் செல்லாமல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவள் தாய் மீனாட்சி பாலனிடம் வந்து, "என்னடா, மணி ஒன்பதாச்சு, இன்னும் ஸ்கூலுக்குப் போகலியா?'' என்று கேட்டார்.

"இல்லேம்மா... எனக்கு தலைவலிக்குது'' என்றான், பாலன்.

"தலைவலிக்குதா, சரி, வா ஆஸ்பத்திரிக்குப் போகலாம்'' என்று அவன் தலையைக் கோதியபடி பரிவுடன் கூறினாள், மீனாட்சி.

"வேணாம்மா...சரியாயிடும்'' என்றான், பாலன்.

அவன் மனதில் பெரும் கவலை குடியிருந்தது. காரணம் இதுதான். அவன் பள்ளி செல்லும் வழியில் ஒரு நாவல் மரம் உள்ளது. ரொம்ப நாளாக இந்த மரத்தில் உள்ள பழத்தை ருசி பார்த்து விட வேண்டும் என்று அவனுக்கு ஆசை. அதனால் பள்ளி செல்லும்போதெல்லாம் மரத்தைப் பார்த்துக் கொண்டே செல்வான். அவனது ஆசை நிறைவேறும் நாள் வந்தது. அதனால் அன்று பள்ளிக்குச் செல்லாமல் யாருக்கும் தெரியாமல் நாவல் பழங்களை ருசி பார்த்து விட வேண்டும் என்று நினைத்தான். அதனால் பள்ளிக்குச் செல்வதற்காகக் கொண்டு வந்த பையை மரத்தின் ஒரு ஓரமாக வைத்து விட்டு, பழங்களை பறிக்க மரத்தில் விறுவிறுவென ஏறினான். அப்போது அந்த வழியாக வந்த தமிழ் ஆசிரியர் மாதவன் அவனைப் பார்த்து விட்டார். `ஐயையோ, வசமாக மாட்டிக் கொண்டோமே' என்று பயந்தபடி மரத்தில் பதுங்கியிருந்தான், பாலன். உடனே, அவனைக் கீழே இறங்கச் சொன்ன ஆசிரியர், "நாளைக்கு வரும்போது உன் அப்பாவை அழைத்துக் கொண்டு வா'' என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

பாலனுக்கு இதைக் கேட்டதும், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வியர்த்தது. `அப்பாவை எப்படி அழைத்துச் செல்வது? அவருக்குத் தெரிந்தால் சாட்டை அடி அல்லவா, விழும்?' என்று பயந்து கொண்டே இருந்தான். இன்று வெள்ளிக்கிழமை வகுப்பிற்கு விடுப்பு எடுத்ததால், அடுத்த இருநாட்களும் விடுமுறைதான். அதனால், அப்பாவிடம் எப்படியாவது சொல்லி, திங்கட்கிழமை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டியதுதான் என்று முடிவு செய்தான்.

அடுத்த இருநாட்கள் அப்பாவின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் பயந்தான். அப்பாவிடம் விஷயத்தை எப்படி சொல்வது என்று பயந்துகொண்டு, சாப்பிடாமல் தூக்கம் வராமல் அவதிப்பட்டான்.

திங்கட்கிழமை பொழுது விடிந்தது. அப்பாவிடம் அதுவரையிலும் சொல்லவில்லை. வேறுவழியின்றி பள்ளிக்கு கிளம்பினான். பயத்துடன் தமிழ் ஆசிரியரை சென்று சந்தித்தான். அவர், இந்த இருநாட்களிலும் பாலனிடம் ஏற்பட்ட வித்தியாசத்தைக் கண்டு கொண்டார். பாலன் அவரிடம் சென்று தன் தவறை உணர்ந்து, அழுது மன்னிப்பு கேட்டான். ஆசிரியர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

"தம்பி, நான் நினைத்திருந்தால், உன்னைப்பற்றி உன் பெற்றோரிடம் சொல்லியிருக்க முடியும். பெற்றோர் உன்னை அடித்திருப்பார்கள். அதனால், உனக்கு என் மீதும், உன் பெற்றோர் மீதும் கோபம் ஏற்படும். அதனால் எந்த பலனும் இல்லை.

நீ உன் தவறை உணர வேண்டும் என்பதால் தான் இவ்வாறு செய்தேன். இந்த இரண்டு நாட்களிலும் ஏற்பட்ட அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் நீ மறக்கக்கூடாது. இந்த அனுபவம் உனக்கு நல்ல பாடத்தைத் தந்திருக்கும். இனியாவது ஒழுங்காகப் பள்ளிக்கு வந்து படி'' என்று அறிவுரை கூறினார்.

இப்போது பாலன் தெளிந்த முகத்துடனும், மனதுடனும் வகுப்பறைக்குச் சென்றான்.

கதை உணர்த்தும் நீதி: ஒருவரை அதிகாரத்தால் அடக்குவதை விட, அன்பால் அடக்குவதே சிறந்தது.

- ந.சுகன்யா நடராஜன்


நாவல் மரம் போதித்த பாடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum