ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘வாக்கு மூலம்’: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் – காணொளி இணைப்பு!!

Go down

‘வாக்கு மூலம்’: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் – காணொளி இணைப்பு!! Empty ‘வாக்கு மூலம்’: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் – காணொளி இணைப்பு!!

Post by Guest Sun 25 Dec 2011 - 20:41

ஈழத் திரைத்துறை கலைஞர்களால் “வாக்குமூலம்” எனும் குறும்படம் கார்த்திகை 27 இல் வெளியிடப்படுகின்றது. இக் குறும்படமானது தமிழ் நாட்டில் இருந்து வெளிவருகின்ற ஆனந்தவிகடன் வார இதழில் வெளிவந்த ஒரு போராளியின் கடிதத்தை அடிப்படையாககொண்டது.

போர் இடம் பெறும் பகுதிகளில் அராஜகம், அக்கிரமம் நிறைந்த மனிதாபிமான உணர்வுகள் அற்ற இராணுவத்தினர் தம் எதிர்த் தரப்பினரைக் கைது செய்தால் சொற்களால் வடிக்க முடியாத மிக – மிக கொடுமையான துன்புறுத்தல்களை நிக்ழ்த்திப் பல ரசசியங்களைக் கேட்டு அறிந்து கொள்ள முனைவார்கள். உலக வரலாற்றில் ஹிட்லரின் சித்திரவதை கூடாரங்களையும், அமெரிக்கப் படைகளால் ஈராக்கியப் போராளிகளை,மக்களைச் சித்திரவதைக்கு உட்படுத்திய குவாண்டனமோ சிறை ஆகியவற்றினை விடவும் மிகவும் குரூரமான சிறைக் கூடங்கள் இன்றும் இலங்கையில் இருந்து வருகின்றன.

ஈழத்தில் இறுதிப் போர் இடம் பெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஊடாகவும், குள்ள நரித்தனதில் சிறந்த முன்னாள் ஐநா செயலாளர் நம்பியார் ஊடாகவும், மற்றும் சில உலகத் தலைவர்கள் ஊடாகவும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பி இராணுவத்தினரிடம் சரணடைந்த புலிகளையும், இறுதி யுத்தத்தில் எஞ்சிய விடுதலைப் புலிகளையும் இனங் கண்டு வவுனியாவில் உள்ள புன(ண)ர் வாழ்வு முகாமிலிருந்து வேறு பிரித்தனர் இராணுவத்தினர். புலிகளின் மூத்த தளபதிகள், மற்றும் புலிகள் அமைப்பினை பற்றிய பல விடயங்களையும் அறிந்த முதல் நிலைப் போராளிகளைத் தனித் தனிச் சிறைக் கூடங்களிற்கு இராணுவத்தினர் மாற்றினார்கள். இந்தச் சிறைக் கூடங்களின் ஒரே நோக்கம் சித்திரவதை செய்து உண்மைகளைப் பெற்றுக் கொள்வதாகும்.

கதிர்காமர் முகாம், இராமநாதன் முகாம், ஆனந்தக் குமாரசுவாமி முகாம், அருணாச்சலம் முகாம் என பிரிக்கப்பட்ட முகாம்களில் இராணுவத்தினர் வவுனியா மெனிக்பாம் நலன் புரி நிலையம் என வெளித் தோற்றத்திற்கு ஓர் பெயரினை வைத்து தமது சித்திரவதை கூடங்களுக்கான ஆட்களைத் தெரிவு செய்து கொண்டிருந்தார்கள். இம் முகாம்களில் மக்கள் புனர்வாழ்வு நோக்கத்திற்காகத் தான் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் பொய்யினை அரசு உலகிற்கு கூறி, புலிகளைப் பிரித்தெடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியிருந்தது. இம் முகாம்களில் வசித்த அனுபவங்கள் என்பது நரக வேதனைக்கு ஒப்பானது. வார்த்தைகள் கொண்டு ஆற்ற முடியாதது. “ஏன் இங்கே வந்தோம் என எண்ணிய உறவுகளை விட, அட முள்ளி வாய்க்காலில் மாண்டு போயிருக்கலாமே” என எண்ணியோர் தான் அதிகம்.

இம் முகாம்களிலிருந்து வேறு பிரித்தெடுக்கப்படும் புலிகள், மற்றும் சந்தேக நபர்களில் பலர் தென் இலங்கையில் உள்ள காட்டுப் பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட சித்திரவதைக் கூடாரங்களுக்கும், மற்றும் இனந் தெரியாத காட்டுப் பகுதி முகாம்களுக்கும் மாற்றப்படுவார்கள். இவற்றினை யாருமே முகாம்கள் என்று சொல்லமாட்டார்கள். மனிதர்களை மிருகங்களை விடக் கேவலமாக வெட்டிக் கொலை செய்து, சித்திரவதைக்கு உட்படுத்தி துன்புறுத்துவதால் இறைச்சிக் கடை அல்லது கசாப்புக் கடை என்றே அழைப்பார்கள். இலங்கையின் போரியல் வரலாற்றில் சூரிய கந்த, வெலிக் கடை, ஊரெழு, செம்மணி, அச்செழு, ஊர்காவற்துறை, யாழ்பாண நகரில் உள்ள சிங்கள மகாவித்தியாலத்தை அண்மித்த முகாம், மற்றும் வடமராட்சியில் வல்லைப் பாலத்திற்கு சமீபமாக உள்ள இராணுவ முகாம், வவுனியாவில் ஜோசேப் முகாம், நாலாம் மாடி, வெலிக் கடை, கூசா தடுப்பு முகாம் ஆகியவை சித்திரவதைகளுக்குப் பேர் போன முகாம்களாகும். இவையும் இறைச்சிக் கடை என்றே சிறப்பிக்கப்படும்.

இலங்கைத் தமிழ் நாளிதழ்களில் முதன் முறையாக இறைச்சிக் கடைகளில் நிகழும் மனிதத் துன்புறுத்தல்களை வெலிக் கடைச் சிறைச் சாலையினையும், நாலாம் மாடியினையும் ஆதாரமாக வைத்து செய்தி வெளியிட்ட பெருமை சரிநிகர் எனும் பத்திரிகைக்கே உரியது. பின்னர் அப் பத்திரிகையின் வாயினையும் அடைத்து விட்டார்கள். இந்த வதை முகாம்களில் பல ரகசியங்களை அறியும் நோக்கில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சித்திரவதையினை மேற்கொள்ளும் நபர்கள் சிங்களக் காடையர்களாக ஒரு காலத்தில் இருந்தார்கள். ஆனால் இறுதி யுத்தத்தின் பின்னர் பல தமிழர்களும் இவர்களோடு சேர்ந்து சித்திரவதைகளில் ஈடுபடுகின்றார்கள். இங்கே மேற் கொள்ளப்படும் சித்திரவதைகள் தொடர்பில் நான் ஏலவே “பெண் உறுப்பினுள் மிளகாய்த் தூள் தூவுதல்!” எனும் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். இங்கே சொடுக்கினால்
படிக்கலாம்.

இம் முகாம்களில் ஆண்களாயின் பின்வரும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
*ஆசன வாசலினுள் (குண்டியினுள்) உண்மைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் கூரிய ஆயுதத்தால் விட்டுக் குத்துதல்
*தலை கீழாக கட்டித் தொங்க விட்ட பின்னர் PVC குழாய் போன்ற தடித்த குழாயினுள் மண்ணை நிரப்பி விட்டு அடித்தல்
*ஆண் குறியினைக் குறட்டால் இழுத்து கேள்வி கேட்டல்.
*இடுப்புப் பட்டியால் (Belt) அடித்தல், இரும்பு ஆயுதத்தால் அடித்தல்.
*கை – கால் நகங்களினை ஒவ்வோர் கேள்விகளாக கேட்டு உண்மையான பதிலினை அறியும் வரை குறட்டினால் பிடுங்குதல்.
*குடிபானப் போத்தலினை உடைத்து அதன் பிசுங்கானால் உடலில் குத்தி வலியில் துடிப்பதைப் பார்த்து ரசித்தவாறு விசாரணை செய்தல்.
*கூரிய ஆயுதங்களால் உடலில் குத்துதல்.
*இறுதியில் பதில் சொல்லாது விடின் கொலை செய்தல்.

இம் முகாம்களில் பெண்களாயின் பின்வரும் சித்திரவதைகள் நிகழ்த்தப்படுகின்றன.
*அழகிய பெண்களாயினும் சரி, சுமாரனா தோற்றமுள்ள பெண்களாயினும் சரி இம் முகாமிற்கு வந்தால் இராணுவத்தின் காமப் பசியினைப் போக்கும் நோக்கில் முதல் வேலை வன் புணர்வு.
*பின்னர் உண்மைகளை அறியும் நோக்கில் ஆசன வாசலினுள் கூரிய ஆயுதங்களால் குத்துதல்.
*பெண் உறுப்பினுள் காரமான பொருளைத் தூவுதல். துப்பாக்கிப் பிடியினைச் சொருகுதல்.
*மார்பின் முலைக் காம்புகளை குறட்டினால் இழுத்து உண்மைகளை அறிதல்.
*கூரான ஆயுதங்களால் பெண் போராளிகள், குற்றவாளிகள் என இராணுவம் கருதும் நபர்கள் தகவல்களை வழங்கும் வரை தாக்குதல்.
*இறுதியில் கொலை செய்தல்.

இம் முகாம்களில் இருந்து மன நோயாளியானோர் மாத்திரம் தான் தப்பியுள்ளார்கள். அவர்களில் பலர் இன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மனநோயாளர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.போராளிகளை வைத்து புலிகளுக்கெதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கும்,போராளிகளிடமிருந்து பல தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் இந்த முகாம்கள் இயங்குகின்றன. ஒவ்வோர் நாளும் தமது விசாரணையின் போது போதிய தகவல்களை வழங்காதோரைக் கொலை செய்வது தான் இம் முகாம் அதிகாரிகளின் பொறுப்பாக உள்ளது. இந்த முகாமிலிருந்து சித்திர வதைக்கு ஆளான போராளி ஒருவரினால் தமிழகத்தின் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் உள்ள விடயங்களை மூலக் கதையாகக் கொண்டு சதாபிரணவன் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் வாக்கு மூலம்.

தமிழகத்தில் ஆனந்த விகடன் சஞ்சிகையில் சி.மகேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட வீழ்வேன் என்று நினைத்தாயோ தொடரில் வெளியான சித்திரவதை முகாமிலிருந்து எழுதப்பட்ட போராளியின் உணர்வலைகள் தான் இந்தப் படத்திற்கு வலுச் சேர்த்திருக்கிறது. சித்திரவதை முகாமில் நிகழும் விடயங்களாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் முற்று முழுதாக உண்மையானவை. ஆனால் பலத்த பாதுகாப்பின் மத்தியில் இருக்கும் இறைச்சிக் கடையிலிருந்து எப்படி ஓர் கடிதம் வெளியே போகும்? அவ்வாறு நிகழச் சாத்தியமா என்பது சந்தேகமே! 18.04.2010 அன்று எழுதப்பட்ட கடித்ததில் குறிப்பிடப்பட்டவாறு இராணுவத்தினர் சித்திர வதைக் கூடாரங்களில் போராளிகளை எவ்வாறு கொடூரமாக தண்டிக்கின்றார்கள்? போராளிகளை ஏன் தண்டிக்கின்றார்கள் எனும் விபரங்களை உள்ளடக்கி இக் குறும்படத்தினைத் தயாரித்திருகிறார்கள்.
.‘வாக்கு மூலம்’: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் – காணொளி இணைப்பு!! Army+Troture+In+Lanka‘வாக்கு மூலம்’: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் – காணொளி இணைப்பு!! Army+Torture+In+Srilanka‘வாக்கு மூலம்’: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் – காணொளி இணைப்பு!! Koduram
ஒரு உண்மைச் சம்பவத்தினை உயிர்ப்பூட்டும் காவியமாக இந்த வாக்குமூலம் குறும்படம் தாங்கி வந்திருப்பதால்; படத்தின் கதை மற்றும் ஏனைய அம்சங்கள் பற்றி நான் இங்கே அலசப் போவதில்லை.இது நாம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய குறும் படம். நீங்கள் அனைவரும் இப் படத்தினைப் பார்க்கையில் அக் குறும்படத்தினூடாக காட்டப்படும் ஈழத்தின் வெளித் தெரியாத இன்னோர் பக்கத்தினை அறிந்து கொள்வீர்கள். சித்திரவதை கூடாரத்தினுள் உள்ள ஓர் போராளியிடம் “நாங்க கமெரா ஆன் பண்றது, நீ கதைக்கிறது(பேசுறது). இல்லே உன்னோட குஞ்சை நசுக்கிடுவோம்” எனச் சொல்லி இராணுவம் பேட்டி கொடுக்க வற்புறுத்துவதும், பின்னர் போராளி மறுத்திடவே கொலை செய்யும் காட்சியும் மகா கொடூரம். இராணுவத்தினரின் கடுமையான தண்டனைகள் காரணமாக ஓர் போராளி மன நோயாளியாக மாறி விட்டார் என்பதனைக் கூட அறியாது இராணுவம் தண்டனை வழங்கும் செயல் இருக்கிறதே. அது இன்னும் குரூரம்.
“எங்கட கொமாண்டர்களில் யார் யார் உங்கட எல்டீடீ ஆளுங்க கூட தொடர்பு வைச்சிருக்காங்க” என்று இராணுவம் விசாரணை செய்கையில் மன நிலை பாதிக்கப்பட்ட போராளி “மகிந்த ராஜபக்ஸ, கோத்தபாயா ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, கருணா ராஜபக்ஸ, சிராந்தி ராஜபக்ஸ” எனச் சொல்லும் காட்சிகள் கண்களில் நீர் வரவைக்கின்றது. இறுதிப் போரின் பின்னர் காணாமற் போன போராளிகளின் நிலையினையும், இலங்கையில் உள்ள சித்திரவதை முகாம்களில் நிகழும் சொற்களால் வடிக்க முடியாத கொடூரங்களையும் காட்சிப்படுத்தி நிற்கிறது வாக்கு மூலம் குறும்படம். நாம் அனைவரும் கண்டிப்பாகப் பார்த்து இப்படியும் ஓர் சந்ததி அழிவுற்றிருக்கிறதே என்பதனை உணர்ந்து தெளிவதற்கான படம் இது.குழந்தைகள் மற்றும் இளகிய மனமுடையோர் பார்ப்பதற்கு உகந்த படம் அல்ல.



நாம் தமிழர்
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum