புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் கவிதைகள் Poll_c10பொங்கல் கவிதைகள் Poll_m10பொங்கல் கவிதைகள் Poll_c10 
29 Posts - 62%
heezulia
பொங்கல் கவிதைகள் Poll_c10பொங்கல் கவிதைகள் Poll_m10பொங்கல் கவிதைகள் Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
பொங்கல் கவிதைகள் Poll_c10பொங்கல் கவிதைகள் Poll_m10பொங்கல் கவிதைகள் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பொங்கல் கவிதைகள் Poll_c10பொங்கல் கவிதைகள் Poll_m10பொங்கல் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் கவிதைகள் Poll_c10பொங்கல் கவிதைகள் Poll_m10பொங்கல் கவிதைகள் Poll_c10 
194 Posts - 73%
heezulia
பொங்கல் கவிதைகள் Poll_c10பொங்கல் கவிதைகள் Poll_m10பொங்கல் கவிதைகள் Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
பொங்கல் கவிதைகள் Poll_c10பொங்கல் கவிதைகள் Poll_m10பொங்கல் கவிதைகள் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொங்கல் கவிதைகள் Poll_c10பொங்கல் கவிதைகள் Poll_m10பொங்கல் கவிதைகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
பொங்கல் கவிதைகள் Poll_c10பொங்கல் கவிதைகள் Poll_m10பொங்கல் கவிதைகள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பொங்கல் கவிதைகள் Poll_c10பொங்கல் கவிதைகள் Poll_m10பொங்கல் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பொங்கல் கவிதைகள் Poll_c10பொங்கல் கவிதைகள் Poll_m10பொங்கல் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொங்கல் கவிதைகள் Poll_c10பொங்கல் கவிதைகள் Poll_m10பொங்கல் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பொங்கல் கவிதைகள் Poll_c10பொங்கல் கவிதைகள் Poll_m10பொங்கல் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
nahoor
பொங்கல் கவிதைகள் Poll_c10பொங்கல் கவிதைகள் Poll_m10பொங்கல் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் கவிதைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 2:43 am

தைமகள்

வருகின்றாள் தைமகளும் கன்னலோடு

வந்தவளும் பார்க்கின்றாள் கதலியோடு

தருகின்றாள் இன்பத்தைச் செந்நெல் லோடு

தந்தவளும் மகிழ்கின்றாள் மஞ்ச ளோடு

பெறுகின்றாள் ஏற்றத்தை உழவ ரோடு

பேரின்பம் அடைகின்றாள் மக்க ளோடு

மருள்கின்றாள் வேற்றுமையைக் கண்ட தோடு

மனமுருகி அழுகின்றாள் கவலை யோடு

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 2:47 am

பொற்காலம் பிறக்கட்டும்..

சருகான இலையெலாம்

காற்றோடு போகட்டும்

தளிரெல்லாம் தழைக்கட்டும்

சதிராடி வெல்லும்

அநியாயம் அழியட்டும்

தருமம் வெல்லட்டும்

திருந்தா மனங்கள்

இனியேனும் திருந்தட்டும்

தெளிவோடு இருக்கட்டும்

சிங்காரத் தமிழன்னை

கம்பீரம் கொள்ளட்டும்

செங்கோல் ஏந்தட்டும்

கருவான மேகங்கள்

தவறாமல் பெய்யட்டும்

கண்ணீர் நிற்கட்டும்

கையேந்தும் பழக்கங்கள்

தொலையட்டும் மறையட்டும்

கவலைகள் ஒழியட்டும்

புருவங்கள் உயரட்டும்

புன்னகை மலரட்டும்

பொழுதெலாம் சிறக்கட்டும்

பூரிப்பு வளரட்டும்

பொலிவோடு விளங்கட்டும்

பொற்காலம் பிறக்கட்டும்

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 2:50 am


கவிதை புதிது


பிறந்த மேனியில்

ஒரு பூவின் அழகும்...

யார் கண்ணும் படாத

சூரியனின் முதல் கதிரும்....

எங்கேயாயினும்-அந்த

தென்றலின் துவங்கிய இடமும்...

இன்று நம் பொங்கல் வசந்தத்தின்

பேரின்பமாகட்டும்.

ஆதாயம் எதுவும் எதிர்பார்க்காத

ஆதவனின் உதவிக்கு

ஆண்டில் ஒரு நாளாவது

நன்றி நவிலல்

கற்காலத்திலிருந்து

இக்காலம் வரையிலும்

மனித கதை யாவும்

கதிரவனுக்குத் தெரியும்

பொங்கலை-

என்றைக்கும் பொங்கலாம்.

ஆனால் பண்டிகை என்பது

ஒரு பகுத்தறிவுக்கு

வருடா வருடம் வரும்-இந்த

விவசாய விழாவில்

வாழ்த்துக்கள் நிரம்பிய பானைகளில்

வாழ்க்கையை மட்டும் பொங்க

மறந்தா விட்டோம்?

போன பொங்கலில்

அடுப்பில் வைத்த பானைக்குள்

ஆயுதங்களா பொங்கின?

கரும்புகளெல்லாம்

கலவரமாகவா இனித்தன?

மஞ்சள் நாத்தில்

இரத்தமா மணத்தது?

பேசித் தீராத பிரச்சனை மாதிரி

மதவாதியும் அரசியல் வாதியும்

வாய்தாக்களிலேயே வாழ்க்கை

தயவு செய்து

அடிக்கடி இடைவேளை தரும்

…டி.வி. விளம்பரங்கள் மாதிரி

பண்டிகைகளை

வந்துபோக வைக்காதீர்கள்

அறிவின் உச்சம் அழிவு என்று

மண்டலங்கள் தோறும்

அணுக்குண்டுகளென்னும்

மாண்புமிகு மலர் வளையங்கள்

நாம்-

விஞ்ஞானத்தின்-

விளையாட்டுப் பொம்மை களாகவும்....

அரசியலின்-

பல்லுக்கேத்த பயத்தங்காய் களாகவும்....

சாதி மதக் கத்திகளின்

சாணைகளாகவும்....

தினம் தினம் தேசத்திற்கு நாம்

தெவசங்களல்ல.

…ஸ்கேன் …எக்ஸ்ரேக்களால்

என்றைக்காவது

உன்னை கண்டுபிடித்தாயா?

புதுமையை சமைக்க இங்கே

எந்த பழமையும் பற்றாக் குறையல்ல

என்னை நானும், உன்னை நீயுமாய்

உழுது பண்படுத்தியிருந்தால்

உலகில் யாவருக்குமே

உரிய விளைச்சல் உண்டு

பொங்கலிடுவோம்

இந்த பொங்கலாவது

சூரியனின் முகவரிக்கு

சரியாய் போய் சேரட்டும்

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 2:51 am




விண்ணுக்கும் மண்ணுக்கும்


இயக்குநர் ராஜகுமாரன்


ஞாபகம் இருக்கிறதா...

நீயும், நானும்

சந்தித்துக் கொண்ட

முதல் பொங்கல்...?

இசெங்கரும்பை

நான் உரித்துக் கொடுக்க,

நீ கடித்தபடி

வரப்பில் நடந்த

இனிப்புப் பொங்கல்

இமறக்க முடியாதது...

அதற்கும் அடுத்த பொங்கல்,

தென்னங்கீற்றுக்குள்

உன்னை உட்கார வைத்துவிட்டு,

எல்லோரும் ஆடிப்பாடி

கொண்டாடின

அநியாயப் பொங்கல்

இஅதற்குப் பின்...

ஒவ்வொரு நாளும்

நமக்குப் பொங்கல்தான்-

தூரத்திலிருந்து மட்டுமே

பார்க்கும் பொங்கல்

இஅருகில் வரும்போது,

தலையைக் குனிந்து சென்ற

வெட்கப் பொங்கல்

இஎப்போதாவது...

கண்களால் மட்டுமே

ஜாடை பேசும்

ஊமைப் பொங்கல்

இகடைசியாக...

நான் சினிமாவுக்கு

சென்னை கிளம்பியபோது...

நீ தூரத்திலிருந்து

கையசைத்த

பிரிவுப் பொங்கல்...

இஅதற்குப் பின்-

உனக்கும், எனக்கும்

நினைவுப் பொங்கல்

மட்டும்தான்.

எட்டு வருடம் இல்லை

எந்தப் பொங்கலும்...

இ…நீ வருவாய் என-

சந்தித்தேன்

சென்ற பொங்கலில்.

…நீ வரவே மாட்டாய் என சிரித்தது-

உன் கையிலிருந்த

குழந்தைப் பொங்கல்...

இபரவாயில்லை...

நான்

விண்ணுக்கும், மண்ணுக்கும்

நின்று தேடுகிறேன்...

நீ

காதலியாக வேண்டாம்-

மனைவியாக வேண்டாம்-

என்ன நடந்தது

என்பதைச் சொல்ல

ஒரு கடிதமாவது வேண்டும்

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 2:52 am

பொங்குவோம் பொங்கல்

இளைத்த உழவர் கூட்டம்

இன்பம் எனும் ஏற்றம் காண

இருபத்தியோராம்

நூற்றாண்டின்

இனிய முதல் பொங்கலன்று

இரு கரம் கூப்புவோம்,

இயற்கையை வேண்டுவோம்.

இந்நாளில்...

சமுதாயச் சண்டை ஒழித்து

சமத்துவ பொங்கல் பொங்க-

மூடத்தனம் அழித்து

முற்போக்கு பொங்கல் பொங்க-

உலகுக்கு உணவை அளிக்கும்

உழவர்களின் உள்ளம் பொங்க-

ஈழத் தமிழர் வாழ்வில்

இன்னல் தீர்ந்த பொங்கல் பொங்க-

இரும்பென தாக்கியவரையும்

துரும்பென தடுக்கும் தூய தமிழ் வீரம் பொங்க-

குறும்பாய் குட்டுபவரையும்

கரும்பாய் காத்து மகிழும் நம்மவர் நலம் பொங்க-

உலகத் தமிழரிடையே

ஒற்றுமை பொங்கல் பொங்க-

தமிழ் மணம் எங்கும் பொங்க-

தமிழ் மண்ணின் தரம் பொங்க

தமிழர்களே பொங்குவோம் பொங்கல்.

வெற்றிவேல்
வெற்றிவேல்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 28/06/2013

Postவெற்றிவேல் Mon Jul 07, 2014 11:07 am

பொங்குக பொங்குக பொங்கலே எம்மொடும்
மங்கினம் பட்டனம் என்று.



வெற்றிவேல்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக