ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் இதயத்துக்கு ஸ்டெம் செல்களை தானம் செய்யும் சிசுக்கள்!

3 posters

Go down

தாயின் இதயத்துக்கு ஸ்டெம் செல்களை தானம் செய்யும் சிசுக்கள்! Empty தாயின் இதயத்துக்கு ஸ்டெம் செல்களை தானம் செய்யும் சிசுக்கள்!

Post by சிவா Wed Dec 21, 2011 5:49 pm



ஒவ்வொரு தாயும் தன் ரத்தத்தின் ஒரு பகுதியை பாலாக பிரித்து தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து வளர்க்கிறார்கள். இதுவே அவர்களின் ஒப்பற்ற தியாகங்களுக்கு `ஒரு சோறு பதம்' எனலாம். அத்தகைய தாய்க்கு ஒரு பிள்ளை செய்யக்கூடிய நன்றிக்கடன், அவர்களின் தள்ளாத வயதில் அவர்களை ஒரு குழந்தையாக பாவித்து அன்புடனும், ஆதரவுடனும் பேணி பாதுகாப்பது. இது உங்களுக்கு எல்லாம் தெரிந்த செய்தி!

`ஆனால், ஒரு குழந்தைதான் சிசுவாக இருக்கும்போதே தன் தாய்க்கு நன்றிக்கடன் செய்ய முடியும்' என்று அடித்துச் சொல்கிறார் அமெரிக்காவின், நிïயார்க் நகரிலுள்ள மவுண்ட் சினாய் மருத்துவப் பள்ளியின் ஆய்வாளர் ஹினா சவுத்ரி.

இதுதொடர்பாக அவர் எலிகளின் மீது ஆய்வு நடத்தி இருக்கிறார். தொடக்கநிலை ஆய்வில், மாரடைப்பால் சேதம் அடைந்த தாய் எலியின் இதயத்தை குணப்படுத்த தங்களின் ஸ்டெம் செல்களை தானம் செய்கின்றன எலியின் சிசுக்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், கர்ப்பம் தரித்திருக்கும்போது அல்லது கர்ப்பகாலம் முடிந்து தாய்மை அடைந்த உடனே இதய நோயால் பாதிப்படையும் தாய்மார்களில் பாதிப்பேர் தானாகவே குணமடைவதற்கான காரணம் விளங்குகிறது என்கிறார் ஹினா சவுத்ரி.

இந்த ஆய்வுக்காக, சாதாரண பெண் எலிகளை உடலில் உள்ள உயிரணுக்களில் எல்லாம் பச்சை நிற ஒளிரும் புரதமொன்றை உற்பத்தி செய்யும் வண்ணம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் எலிகளுடன் உறவுகொள்ளச் செய்தார் ஹினா. அந்த பெண் எலியின் கர்ப்பத்தில் உருவான சிசுக்களில் பாதி பச்சை நிற ஒளிரும் புரதத்தை உற்பத்தி செய்தன. இதன்மூலம் தாய் எலியின் உடலில் உள்ள சிசுவின் திசுக்களை சுலபமாக அடையாளம் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரடைப்பால் சேதமடைந்த கர்ப்பமான தாய் எலியின் இதய தசைகள் குணமடைவதற்கு அவற்றின் சிசுக்கள் எந்த வகையில் பங்களிக்கின்றன என்பதை கண்டறிய, எலிகளுக்கு முதலில் மாரடைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன்பிறகு இரண்டு வாரங் களுக்கு பின் கர்ப்பிணி எலிகளின் இதய தசைகள் பரிசோதிக்கப்பட்டன. அப்போது, சிசுக்களின் உடலிலிருந்த பச்சை நிறத்தில் ஒளிரும் உயிரணுக்கள், சேதமடைந்த இதய தசைகள் குணமடைவதைக் காட்டும் இதய துடிப்புக்கு காரணமான கார்டியோமயோசைட்கள், ரத்த நாள உயிரணுக்கள் உள்ளிட்ட புதிய இதய உயிரணுக்கள் என பல உயிரணுக்கள் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய உடலியல் மாற்றங்களுக்கு ஒரு பரிணாம வளர்ச்சிமுறைதான் காரணம் என்கிறார் ஆய்வாளர் ஹினா சவுத்ரி. அதாவது, ஒரு சிசுவானது தன் வளர்ச்சியை பாதுகாத்துக் கொள்வதற்காகவே தன் தாயின் இதயத்தை மாரடைப்பின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், சிசுவின் உடலுக்கும் தாயின் உடலுக்கும் இடையிலான தொடர்பினை ஏற்படுத்தும் குழாய் வழியாக சிசுவின் ஸ்டெம் செல்கள் எந்தவித நோய் எதிர்ப்பு எதிர்வினையுமின்றி தாயின் உடலுக்குள் செல்ல முடியும் என்பதால், மாரடைப்பால் சேதமடைந்த தாயின் இதய தசைகளை குணப்படுத்த தேவையான ஸ்டெம் செல்களை தங்குதடையின்றி கொடுக்க சிசுக்களே சிறந்தவை என்கிறார் ஹினா சவுத்ரி.

மேலும், முந்தைய ஆய்வுகளில் கர்ப்பிணி உடலிலுள்ள சேதமடைந்த மூளை, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகிய பாகங்களிலும் சிசுவின் ஸ்டெம் செல்கள் கண்டறியப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, தாயை மார்பக புற்றுநோயிலிருந்து காக்கும் உயிரணுக்களையும் சிசுக்கள் உற்பத்தி செய்கின்றன என்கிறது மற்றொரு ஆய்வு.

ஆக, குழந்தைப்பருவம் முதல் இரவு பகலாக கண் விழித்து, நம்மை பாதுகாக்கும் நம் தாய்க்கு கர்ப்பகாலத்தின் போதோ அல்லது அதற்கு பின்னரோ மாரடைப்பு ஏற்பட்டால், நாம் சிசுவாக இருக்கும்போதே நம் ஸ்டெம் செல்களை கொடுத்து உதவுகிறோம் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது இந்த ஆய்வு.

தினதந்தி


தாயின் இதயத்துக்கு ஸ்டெம் செல்களை தானம் செய்யும் சிசுக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாயின் இதயத்துக்கு ஸ்டெம் செல்களை தானம் செய்யும் சிசுக்கள்! Empty Re: தாயின் இதயத்துக்கு ஸ்டெம் செல்களை தானம் செய்யும் சிசுக்கள்!

Post by ஹர்ஷித் Wed Dec 21, 2011 8:11 pm

ஒரு குழந்தைதான் சிசுவாக இருக்கும்போதே தன் தாய்க்கு நன்றிக்கடன் செய்ய முடியும்'

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

உண்மை உணர்தேன் அண்ணா நன்றி!!!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தாயின் இதயத்துக்கு ஸ்டெம் செல்களை தானம் செய்யும் சிசுக்கள்! Empty Re: தாயின் இதயத்துக்கு ஸ்டெம் செல்களை தானம் செய்யும் சிசுக்கள்!

Post by கேசவன் Wed Dec 21, 2011 8:18 pm

நல்லபதிவு பகிர்விக்கு நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தாயின் இதயத்துக்கு ஸ்டெம் செல்களை தானம் செய்யும் சிசுக்கள்! 1357389தாயின் இதயத்துக்கு ஸ்டெம் செல்களை தானம் செய்யும் சிசுக்கள்! 59010615தாயின் இதயத்துக்கு ஸ்டெம் செல்களை தானம் செய்யும் சிசுக்கள்! Images3ijfதாயின் இதயத்துக்கு ஸ்டெம் செல்களை தானம் செய்யும் சிசுக்கள்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தாயின் இதயத்துக்கு ஸ்டெம் செல்களை தானம் செய்யும் சிசுக்கள்! Empty Re: தாயின் இதயத்துக்கு ஸ்டெம் செல்களை தானம் செய்யும் சிசுக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum