Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாங்க சேமிக்கலாம்
2 posters
Page 1 of 1
வாங்க சேமிக்கலாம்
‘‘ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் தொகையில் ஒரு சதவிகிதத்தையாவது சேமிக்க வேண்டும்’’ என்கிறார் நிதி ஆலோசகர் பவித்ரா.
‘‘இன்றைய சூழலில் பால், பஸ் கட்டணம், கேஸ், மின்சாரம் எல்லாம் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. இதில் எங்கு சேமிப்பது என்று கேட்கலாம். ஆனால், ஒருவரின் சேமிப்பு அவர்கள் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிப்பவரால் மட்டுமே சேமிக்க முடியும் என்பதில்லை. ரூபாய் 10 ஆயிரம் சம்பாதிப்பவரும் சிறு தொகையை சேமிக்கலாம். அதற்கு பல வழிகள் உள்ளன. வங்கி சேமிப்பு, இன்சூரன்ஸ், தங்கம், நிலம், மியூச்சுவல் பண்ட், தபால் நிலையம் என வசதிக்கு ஏற்ப சேமிக்கலாம்.
முதலில் நாம் சம்பாதிக்கும் தொகையில் எவ்வளவு சதவிகிதம் சேமிக்க போகிறோம் என்று தீர்மானிக்க வேண்டும். பிறகு அதற்குரிய திட்டங்கள் என்ன என்று அறிந்து செயல்படுவது நல்லது.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வருடா வருடம் பல திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. குழந்தைகளின் படிப்பு, கல்யாணம், பென்ஷன் பிளான்... என நம் வசதிக்கு ஏற்ப காப்பீட்டு திட்டங்களில் சேரலாம்.
இதில் முழு ஆயுள் காப்பீட்டு திட்டம் உள்ளது. மற்ற திட்டங்கள் எல்லாம் குறிப்பிட்ட வருடங்கள் மட்டும். முழு ஆயுள் காப்பீட்டு திட்டம் ஒருவரின் ஆயுள் முழுதும் இன்சூரன்ஸ் உண்டு. அதற்காக கடைசி வரை பிரிமியம் தொகை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பட்ட காலம் வரை கட்டினால் போதும். பாலிசி காலம் முடியும் போது அதன் மொத்த தொகையும் பெற்றுக் கொள்ளலாம். அல்லது பாலிசிதாரர் இறந்த பிறகு அந்த தொகை நாமினிக்கு கிடைக்கும் படியும் செய்யலாம்.
மியூச்சுவல் பண்ட், பல பேரிடம் பணத்தை பெற்று அதை லாபம் வரும் துறையில் முதலீடு செய்து அதன் மூலம் வரும் சம்பாத்தியத்தை கொடுக்கும். இதில் பல வகை உள்ளன. நம் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்துக் கொள்ளலாம்.
அடுத்து பங்குச் சந்தை. ஒவ்வொரு நாளும் இதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எனவே பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது ப்ளூப் சிப் நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும். காரணம், பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் இந்த நிறுவனங்களில் அதிக பாதிப்பு ஏற்படாது. மேலும் இது குறித்த செய்திகளை தினசரியில், இன்டர்நெட் அல்லது பங்குச்சந்தை புரோக்கர் மூலம் தெரிந்து கொள்வது அவசியம். இதை ஒரு சேமிப்பாக மட்டுமே கருத வேண்டும். காரணம், இன்றைய சூழலில் மொத்த பணத்தையும் இதில் முதலீடு செய்தால், வீழ்ச்சி ஏற்படும் போது அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இது ரிஸ்கான துறை என்பதால் அதைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு பிறகு சேரலாம்.
எந்த பிரச்னையும் இல்லாத சேமிப்பு என்று வங்கி மற்றும் தபால் நிலைய சேமிப்பை சொல்லலாம். வங்கியில் ரெக்கரிங் மற்றும் பிக்சட் டெபாசிட் உண்டு. இதில் முதலாவது, மாதாமாதம் ஒரு தொகை கட்ட வேண்டும். குறிப்பட்ட காலத்திற்கு பிறகு அதை வட்டியுடன் எடுத்துக் கொள்ளலாம். இரண்டாவதில் ஒரே கட்டணத்தில் தொகை செலுத்தி குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வட்டியுடன் சேர்த்து எடுக்கலாம். இதே போன்ற திட்டங்கள் தபால் நிலையத்திலும் உள்ளன. இங்கு வட்டி மிகவும் குறைவு.
இப்போது மக்கள் தங்கம் பக்கம் தங்களின் கவனத்தை திருப்பி உள்ளனர். என்னதான் ஏற்ற இறக்கம் இருந்தாலும் தங்கத்தின் தரம் மற்றும் விலை என்றுமே கையை கடிக்காது. சேமிப்பு எதுவாக இருந்தாலும் பணத்தை முதலீடு செய்யும் முன் அதைப்பற்றி நன்கு யோசித்து செயல்பட வேண்டும். எவ்வளவு தான் சம்பாதித்தாலும் சேமிப்பு இல்லாமல் வாழமுடியாது. எனவே வெற்றிகரமான முதலீட்டை தேர்வு செய்வது நல்லது...’’ என்றார் நிதி ஆலோசகர் பவித்ரா.
& ப்ரியா
தினகரன்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: வாங்க சேமிக்கலாம்
நல்ல பயனுள்ள தகவல்.
“சிக்கனம் தேவை இக்கணம்”
“சிக்கனம் தேவை இக்கணம்”
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Similar topics
» 4 shared இல் இப்போது 15 ஜிபி சேமிக்கலாம்..
» வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்?
» ஒரு சிறிய கண்ணாடித்துண்டில் மின்னலின் சக்தியை சேமிக்கலாம்
» வாங்க வாங்க மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வாங்க
» பாடல்களின் அளவை குறைத்து வன்தட்டில் இடத்தை சேமிக்கலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|