ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:02 pm

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு

2 posters

Go down

தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Empty தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு

Post by ரேவதி Tue Dec 20, 2011 11:54 am


தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Tamil-Daily-News_Paper_42095148564

தேனி : கேரளாவில், தமிழர்கள்
தாக்கப்படுவதை கண்டித்து தேனியை சேர்ந்த வாலிபர், உடலில் பெட்ரோல் ஊற்றி தீ
வைத்துக் கொண்டார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின்
செயல்பாடுகளை கண்டித்து தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில்
போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் கடந்த 15 நாட்களாக தேனி
மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து தோட்ட தொழிலாளர்கள் அகதிகள் போல் தப்பி வந்து
கொண்டிருக்கின்றனர்.

இதனை கண்டித்து தேனி மாவட்டம் முழுவதும்
அனைத்து பகுதியிலும் கடையடைப்பு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடந்து
வருகிறது. நேற்று தேனி& மதுரை சாலையில், தமிழக மக்கள் முன்னேற்ற
கழகத்தின் சார்பில் ஜான்பாண்டியன் உண்ணாவிரத போராட்டம் நடந்து
கொண்டிருந்தது. அப்போது, தேனி நகர் பங்களாமேடு பகுதியை சேர்ந்த
சண்முகசுந்தரம் மகன் ஜெயப்பிரகாஷ் நாராயணன்(31), நேரு சிலை பகுதிக்கு
பெட்ரோல் கேனுடன் வந்தார். இவர் தேனியில் உள்ள தனியார் டிராவல்ஸ்
நிறுவனத்தில் கார் டிரைவராக பணிபுரிகிறார்.

‘முல்லைப் பெரியாறு
அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசே அமல்படுத்து, தீர்ப்பை
அமல்படுத்தாத கேரள அரசை மத்திய அரசே நடவடிக்கை எடு‘ என சத்தம் போட்டபடி
நேரு சிலை பீடத்தில் ஏறினார். பெட்ரோலை தனது உடலில் ஊற்றினார். எனது உயிர்
தியாகத்தால் முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு ஏற்படட்டும் என
கத்தியபடியே உடலில் தீ வைத்துக்கொண்டு நேரு சிலையை கட்டிப்பிடித்தார்.

அவரது
உடல் முழுவதும் தீ பரவியது. அப்பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த
போலீசார் அருகில் உள்ள டீக்கடைகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து
ஜெயப்பிரகாஷ் நாராயணனின் உடலில் ஊற்றி தீயை அணைத்தனர். இதில் அவரது உடல் 95
சதவீதம் கருகியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசினர்
மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அவர் கொண்டு
செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மதுரை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் பரவியதும்
தேனி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
தேனியில் இருந்து செல்லக்கூடிய பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் தேனியில்
பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழர்கள் வருகை நின்றது: கேரளாவில்
பிரச்னை அதிகமுள்ள இடுக்கி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், கேரள
சிறப்பு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதிகள் வழியாக
தமிழகத்துக்கு தப்பிவரும் மக்களை, கேரள போலீசார் தடுத்து பேச்சுவார்த்தை
நடத்துகின்றனர். Ôஉங்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்Õ என்று கூறி
மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்புகின்றனர். இதையேற்று பலரும்
திரும்பிச் செல்கின்றனர். அதிரடிப்படை தடுத்ததால், தேனி மாவட்டம் தேவாரம்
அருகே உள்ள சாக்கலூத்து மெட்டு வழியாக நேற்று ஒருவர்கூட வரவில்லை.

15வது
நாளாக போராட்டம்: தேனி மாவட்டத்தில் 15வது நாளாக நேற்று பல்வேறு இடங்களில்
கேரள அரசை கண்டித்து போராட்டங்கள் நடந்தன. தேனி பகவதியம்மன் கோயில் திடல்
அருகே விஸ்வகர்ம தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆதித்தமிழர் பேரவை மாநில தலைவர் அதியமான் தலைமையில் போராட்டம் நடத்துவது
குறித்து தேனியில் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆண்டிபட்டி ராஜ்ஸ்ரீ
சர்க்கரை ஆலையில் அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பில், கேரள அரசை கண்டித்து
ஆர்ப்பாட்டம் நடந்தது. போடி மெட்டு மலைச்சாலையில் போக்குவரத்து நேற்று
துண்டிக்கப்பட்டது. போடி அருகே கரட்டுப்பட்டியில் கேரள பிரமுகரின் வீட்டை
மர்ம கும்பல் சேதப்படுத்தியது. அங்கிருந்த பிரிட்ஜ், கட்டில், பைக்
உள்ளிட்ட பொருட்கள் சூறையாடப்பட்டன. சுவர்களும் இடித்து தள்ளப்பட்டன.
தர்மத்துப்பட்டி, மார்க்கையன்கோட்டை, கீழச்சிந்தலைச்சேரி,
அனுமந்தன்பட்டியில் கேரள அரசை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

திண்டுக்கல்:
பழநியில் நகர மின்பொருள் விற்பனையாளர் சங்கம் சார்பில் கேரள அரசை
கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கொடைக்கானலில் வக்கீல்கள் போராட்டத்தில்
கேரள முதல்வர் உம்மன்சாண்டி உருவ பொம்மை எரிக்கப்பட்டது. வேடசந்தூரில்
அனைத்து கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி
உருவபொம்மையை எரித்தனர்.

மதுரை: மதுரையில் அபே ஆட்டோ ஓட்டுனர்
கூட்டமைப்பு சார்பில் காளவாசலில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில்
மாட்டுத்தாவணி, புதூர், தெப்பக்குளம் பகுதி ஆட்டோ டிரைவர்கள் கலந்து
கொண்டனர். இதேபோல் முனிச்சாலை மெயின்ரோடு ஒருங்கிணைந்த ஆட்டோ டிரைவர்கள்
ஓபுளா படித்துறையில் உண்ணாவிரதம் இருந்தனர். சமயநல்லூரில் தோடனேரி கிராம
மக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக
கிராமத்தில் இருந்து சமயநல்லூருக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணி
தலைமையில் பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். அப்போது கேரள முதல்வர் உம்மன்
சாண்டியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த
போலீசார் உருவ பொம்மையை பறித்தனர். தொடர்ந்து கேரள அரசை கண்டித்து
கோஷமிட்டு கலைந்து சென்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி வாடிப்பட்டி
அருகேயுள்ள செம்மினிபட்டி கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரத
போராட் டம் நடந்தது.



dinakaran


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு Empty Re: தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு

Post by கே. பாலா Tue Dec 20, 2011 12:08 pm

"அய்யம்" வந்ததால் அவசரமாக வந்து பார்த்தேன் !.... சோகம் இவர் வேறு


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum