ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் ரொக்க பரிசு : மாணவர் திறனை மேம்படுத்த திட்டம்

2 posters

Go down

விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் ரொக்க பரிசு : மாணவர் திறனை மேம்படுத்த திட்டம் Empty விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் ரொக்க பரிசு : மாணவர் திறனை மேம்படுத்த திட்டம்

Post by இளமாறன் Mon Dec 19, 2011 2:08 am

பள்ளியில் மாணவ மாணவியர், விடுப்பு எடுக்காமல் 100 சதவீதம், வகுப்புக்கு வந்தால், 1,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

தமிழக அரசு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மாணவர்கள் புத்தகப்பைகளை பொதி மூட்டை போல் சுமந்து செல்வதை தடுக்கும் வகையில், தேர்வு முறையிலும் அடுத்த ஆண்டு முதல் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இதன்படி, பருவமுறைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதை பெற்றோர், ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.

இதுபோன்று, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில், பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. தற்போது, கூடுதலாக சிறப்புத் திட்டம் ஒன்றை கொண்டு வருகிறது.

தனியார் பள்ளிகளில் விடுப்பு இன்றி வரும் மாணவர்களுக்கு ஆண்டு விழாவில் பரிசளிப்பது வாடிக்கையாக உள்ளது. சில பள்ளிகளில், மாணவர்களின் பெயரை ஆண்டு மலர், டைரியிலும் படத்துடன் பிரசுரித்து ஊக்கப்படுத்தப்படுகின்றனர். இதனால் மாணவர்கள், விடுப்பு எடுக்காமல், அடம்பிடித்து பள்ளிக்கு செல்லும் ஆர்வம் ஏற்படுகிறது.

தனியார் பள்ளிகளில் கடைபிடிப்பது போன்று சிறப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி நடத்தும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும், 284 சென்னை பள்ளிகளில், 100 சதவீதம் வருகை தரும் மாணவர்களுக்கு, 1,000 ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல், இது நடைமுறைக்கு வருகிறது. ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் போது, இந்த பரிசு வழங்கப்பட உள்ளது.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சி பள்ளிகளின் தரம், தனியார் பள்ளிகளை விட மேம்பட்டுள்ளது. அரசு பொதுத் தேர்வுகளிலும், மாணவர்கள் சாதித்து வருகின்றனர். அரசு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம், 86, 87 சதவீதத்தையும் தாண்டியுள்ளது. மாநிலத்தின் ரேங் பட்டியலில், மாநகராட்சி பள்ளி மாணவர்களும் இடம்பிடிக்கும் அளவுக்கு தரம் மேம்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருப்பது போன்ற நிலையை சில மாநகராட்சி பள்ளிகளும் உருவாக்கியுள்ளன. இது கல்வித்தரத்தில் உள்ள முன்னேற்றத்தை காட்டுகிறது. மாணவ, மாணவியரின் 100 சதவீத வருகைக்கு பரிசு வழங்குவது, கல்வித் திறனை மேலும் மேம்படுத்தும் என்று நம்புகிறோம். இவ்வாறு மாநகராட்சி அதிகாரி கூறினார்.

சென்னை மாநகராட்சி, பல்வேறு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளை ஒன்றிணைத்து, கிரேட்டர் சென்னையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கப் பகுதிகளில் உள்ள பள்ளிகளையும், மாநகராட்சியுடன் இணைந்து, ஒருங்கிணைக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த ரொக்கப் பரிசு திட்டம், விரிவாக்கப் பகுதி பள்ளிகளிலும் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுவரை மாநகராட்சி செய்தது?

* அனைத்து மாணவர்களுக்கு இலவச வண்ண சீருடைகள்

* 6 முதல் 8ம் வகுப்பு வரை "ஆங்கிலம்-தமிழ்' விளக்க அகராதி

* 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு "ஷூ'

* 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளில், "பிஸ்கட்'

* தேர்வாகும் 25 மாணவர்களுக்கு தேசிய கல்விச் சுற்றுலா

* பிளஸ் 2 தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெறுபவருக்கு லேப்-டாப்

* மாணவியருக்கு "சானிடரி நாப்கின்'

* ஆங்கில பேச்சு பயிற்சி

- நமது சிறப்பு நிருபர் -

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் ரொக்க பரிசு : மாணவர் திறனை மேம்படுத்த திட்டம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் ரொக்க பரிசு : மாணவர் திறனை மேம்படுத்த திட்டம் Empty Re: விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் ரொக்க பரிசு : மாணவர் திறனை மேம்படுத்த திட்டம்

Post by சார்லஸ் mc Mon Dec 19, 2011 4:40 am

வாழ்த்துக்கள். அன்பு மலர்

மேலும் வளர மீண்டும் வாழ்த்துக்கள் அன்பு மலர்

மகிழ்ச்சி


விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் ரொக்க பரிசு : மாணவர் திறனை மேம்படுத்த திட்டம் 154550விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் ரொக்க பரிசு : மாணவர் திறனை மேம்படுத்த திட்டம் 154550விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் ரொக்க பரிசு : மாணவர் திறனை மேம்படுத்த திட்டம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் ரொக்க பரிசு : மாணவர் திறனை மேம்படுத்த திட்டம் 154550விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் ரொக்க பரிசு : மாணவர் திறனை மேம்படுத்த திட்டம் 154550விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் ரொக்க பரிசு : மாணவர் திறனை மேம்படுத்த திட்டம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» Improve Your Spoken English Skill - உங்களின் ஆங்கிலப் பேச்சித் திறனை மேம்படுத்த (பாடம்:03):
» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
» கோவில்பட்டி அருகே ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்கள்
» பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:
» சுற்றுலாவை மேம்படுத்த 10 ஆயிரம் வெளிநாட்டினருக்கு இலவச விமான பயணம்: ஜப்பான் அதிரடி திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum