புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தரந்தாதி Poll_c10கந்தரந்தாதி Poll_m10கந்தரந்தாதி Poll_c10 
37 Posts - 77%
heezulia
கந்தரந்தாதி Poll_c10கந்தரந்தாதி Poll_m10கந்தரந்தாதி Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
கந்தரந்தாதி Poll_c10கந்தரந்தாதி Poll_m10கந்தரந்தாதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தரந்தாதி Poll_c10கந்தரந்தாதி Poll_m10கந்தரந்தாதி Poll_c10 
373 Posts - 79%
heezulia
கந்தரந்தாதி Poll_c10கந்தரந்தாதி Poll_m10கந்தரந்தாதி Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கந்தரந்தாதி Poll_c10கந்தரந்தாதி Poll_m10கந்தரந்தாதி Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கந்தரந்தாதி Poll_c10கந்தரந்தாதி Poll_m10கந்தரந்தாதி Poll_c10 
8 Posts - 2%
prajai
கந்தரந்தாதி Poll_c10கந்தரந்தாதி Poll_m10கந்தரந்தாதி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கந்தரந்தாதி Poll_c10கந்தரந்தாதி Poll_m10கந்தரந்தாதி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கந்தரந்தாதி Poll_c10கந்தரந்தாதி Poll_m10கந்தரந்தாதி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கந்தரந்தாதி Poll_c10கந்தரந்தாதி Poll_m10கந்தரந்தாதி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கந்தரந்தாதி Poll_c10கந்தரந்தாதி Poll_m10கந்தரந்தாதி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கந்தரந்தாதி Poll_c10கந்தரந்தாதி Poll_m10கந்தரந்தாதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தரந்தாதி


   
   

Page 1 of 2 1, 2  Next

பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Sun Dec 18, 2011 6:34 pm



காப்பு

வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்து
வாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவச
வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை
வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே.

உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்
உண்ணா முலையுமை மைந்தா சரணஞ் சரணுனக்கே.

1. திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச
திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்
திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற
திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே.

2. செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு
செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே
செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச்
செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே.

3. சென்னிய மோகந் தவிராமு தோகண் டிகிரிவெண் ணெய்ச்
சென்னிய மோகம் படவூ தெனத்தொனி செய்தபஞ்ச
சென்னிய மோகந் தரம்புனத் தேன்புணர் தேவைத்தெய்வச்
சென்னிய மோகம் பணிபணி யேரகத் தேமொழிக்கே.

4. தேமொழி யத்தம் பெறவோந் தனக்கன்று சேணுலகத்
தேமொழி யத்தம் சினங்காட் டவுணரைச் சேமகரத்
தேமொழி யத்தம் புயமவர் சூடிகை சிந்தவென்ற
தேமொழி யத்தம் பதினா லுலகுமந் தித்ததொன்றே.

5. தித்தவித் தார மனித்தரைத் தேவர் வணங்கமுன்போ
தித்தவித் தாரகை மைந்தர்செந் தூர்க்கந்தர் சிந்துரவா
தித்தவித் தார முடையா ரருள்வெள்ளந்தேக்கியன்பு
தித்தவித் தாரந் தனிவீ டுறத்துக்கச் செவ்வனலே.

6. செவ்வந்தி நீலப் புயமுரு காபத்தர் சித்தமெய்யிற்
செவ்வந்தி நீலத்தை யுற்றருள் வாய்திங்கட் சேய்புனைந்த
செவ்வந்தி நீலத் தொருபாகர் போன்ற தினிச்சிந்தியார்
செவ்வந்தி நீலத்தி னீடுமுற் றால திமிரமுமே.

7. திமிரத் திமிரக் கதரங்க கோபசெவ் வேலகைவேல்
திமிரத் திமிரக் ககுலாந் தகவரைத் தேன்பெருகுந்
திமிரத் திமிரத் தனையாவி யாளுமென் சேவகனே
திமிரத் திமிரக் கனலாய சந்தன சீதளமே.

8. சீதனங் கோடு புயங்கைகொண் டார்தந் திருமருக
சீதனங் கோடு முடியாளர் சேய்தனக் கேதுளதோ
சீதனங் கோடு னிதருமென் பார்தொழுந் தேவிபெறுஞ்
சீதனங் கோடு கொடிவேன் மயூரஞ் சிலையரசே.

9. சிலைமத னம்படு மாறெழுஞ் சேய்மயி லு<ச்சிட்டவெச்
சிலைமத னம்படு சிந்துவை யிந்துவைச் செய்வதென்யான்
சிலைமத னம்படு காட்டுவர் கேளிருஞ் செங்கழுநீர்ச்
சிலைமத னம்படு தாமரை வாவி திரள் சங்கமே.

10. திரளக் கரக்கரை வென்கண்ட வேலன் றிசைமுகன்மால்
திரளக் கரக்கரை யான்பாட நாடுதல் செய்யசங்க
திரளக் கரக்கரை காண்பான்கைந் நீத்திசை வார்பனிக்க
திரளக் கரக்கரை வானீட்டு மைந்தர்புந் திக்கொக்குமே.

11. திக்கத்திக் கோடு படிபுடைச் சூதத் தெறிபடபத்
திக்கத்திக் கோடு கடடக் கடறடி சேப்படைச்சத்
திக்கத்திக் கோடு துறைத்திறத் தற்ற குறக்குறச்சத்
திக்கத்திக் கோடு பறித்துக்கொ டாதி சிறைபிறப்பே.

12. சிறைவர வாமையி லேறிச் சிகரி தகரவந்து
சிறைவர வாமையில் கூப்பிடத் தானவர் சேனைகொண்ட
சிறைவர வாமையில் வாங்கிதன் றேங்கழல் யாங்கழலாச்
சிறைவர வாமையி னெஞ்சுட னேநின்று தேங்குவதே.

13. தேங்கா வனமும் மதகரி வேந்துடன் சேர்ந்தவிண்ணோர்
தேங்கா வனமுனை யவ்வேற் பணியெனுஞ் சேயிடமேல்
தேங்கா வனமுந் தளர்நடை யாயஞ்சல் செண்பகப்பூந்
தேங்கா வனமுங் கழுநீ ரிலஞ்சியுஞ் செந்திலுமே.

14. செந்தி லகத்தலர் வாணுதல் வேடிச் சிமுகபங்க
செந்தி லகத்தலர் துண்டமென் னாநின்ற சேயசங்க
செந்தி லகத்தலர் ராசிதந் தானைச்சிறையிட்டவேற்
செந்தி லகத்தலர் தூற்றிடுங் கேடு திவாகருளே.

15. திவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர்
திவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந்
திவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந்
திவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே.

16. சேவற் கொடியும் பனிசாந் தகனுந் திருக்கரத்துச்
சேவற் கொடியுங் கொடியகண் டாய்தினை சூழ்புனத்துச்
சேவற் கொடியுந் திவளத் தவளுந்தந் திக்களபச்
சேவற் கொடியு முடையாய் பிரியினுஞ் சேரினுமே.

17. சேரிக் குவடு மொழிவிழி யாடனச் செவ்விகுறச்
சேரிக் குவடு விளைந்ததன் றேநன்றுதெண்டிரைநீர்
சேரிக் குவடு கடைநாளி லுஞ்சிதை வற்ற செவ்வேள்
சேரிக் குவடு புடை சூழ் புனத்திற் றினைவிளைவே.

18. தினைவேத் தியன்புசெய் வேந்தன் பதாம்புயத் திற்பத்திபுந்
தினைவேத் தியமுகந் தேற்றினர் மாற்றினர் பாற்றினந்தீத்
தினைவேத் தியர்நெறி செல்லாத விந்தியத் தித்தியினத்
தினைவேத் தியங்குயிர் கூற்றாரி லூசிடுஞ் சீயுடம்பே.

19. சீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவிதரத்தோல்
சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்
சீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார்
சீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே.

20. செயதுங்க பத்திரி போற்றும் பகீர திகரசெவ்வேற்
செயதுங்க பத்திரி சூடுங் குறத்தி திறத்ததண்டஞ்
செயதுங்க பத்திரி புத்திரி பாதத்தர் செல்வதென்பாற்
செயதுங்க பத்திரி யத்திரி யாதிரென் சிந்தையிலே.

21. சிந்தா குலவ ரிசைப்பேரு மூருகஞ் சீருமென்றோர்
சிந்தா குலவ ரிடத்தணு காதரு டீமதலை
சிந்தா குலவரி மாயூர வீர செகமளப்பச்
சிந்தா குலவரி மருக சூரனைச் செற்றவனே.

22. செற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற்
செற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச்
செற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்த
செற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே.

23. தினகர ரக்கர தங்கெடுத் தார்குரு தேசிகர்செந்
தினகர ரக்கர மாறுடை யார்தெய்வ வாரணத்தந்
தினகர ரக்கர சத்தியின் றாகிலத் தேவர்நண்ப
தினகர ரக்கர தந்தீர்வ ரீர்வர் செகமெங்குமே.

24. செகம்புர வார்கிளை யெல்லா மருண்டு திரண்டுகொண்டு
செகம்புர வாதிங்ஙன் செய்வதென் னோமயல் செய்யவன்பு
செகம்புர வாச மெனத்துயில் வார்செப்ப பங்கபங்க
செகம்புர வாமுரல் செந்தூர வென்னத் தெளிதருமே.

25. தெளிதரு முத்தமிழ் வேதத்திற் றெய்வப் பலகையின்கீழ்
தெளிதரு முத்தமி ழாநித்தர் சேவித்து நின்றதென்னாள்
தெளிதரு முத்தமிழ் தேய்நகை வாசகச் செல்விதினைத்
தெளிதரு முத்தமிழ் செவ்வே ளிருப்பச் செவிகுனித்தே.

26. செவிக்குன்ற வாரண நல்கிசை பூட்டவன் சிந்தையம்பு
செவிக்குன்ற வாரண மஞ்சலென் றாண்டது நீண்டகன்மச்
செவிக்குன்ற வாரண வேலா யுதஞ்செற்ற துற்றனகட்
செவிக்குன்ற வாரண வள்ளி பொற்றாண்மற்றென் றேடுவதே.

27. தேடிக் கொடும்படை கைக்கூற் றடாதுளஞ் சேவின்மைமீன்
தேடிக் கொடும்படை கோமான் சிறைபட வேறுளபுத்
தேடிக் கொடும்படை யாவெகு நாட்டன் சிறைகளையுந்
தேடிக் கொடும்படை மின்கேள்வ னற்றுணை சிக்கெனவே.

28. சிக்குறத் தத்தை வழங்கா திழந்து தியங்குவர்தே
சிக்குறத் தத்தை வடிவே லெனார்சில ரன்பர்செந்தாள்
சிக்குறத் தத்தை கடிந்தேனல் காக்குஞ் சிறுமிகுறிஞ்
சிக்குறத் தத்தை யனகிலெப் போதுந் திகழ்புயனே.

29. திகழு மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோ
திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ
திகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபா
திகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே.

30. தெய்வ மணம்புணர் தீகால் வெளிசெய்த தேவரைந்த
தெய்வ மணம்புண ராரிக்கு மருக செச்சையந்தார்
தெய்வ மணம்புண ருங்குழ லாளைத் தினைப்புனத்தே
தெய்வ மணம்புணர் கந்தனென் னீருங்க டீதறவே.

31. தீதா வசவ னுபவிக்க மண்ணிலும் விண்ணிலுஞ்செந்
தீதா வசவ னியாயஞ்செய் வேதிய ரேதியங்காத்
தீதா வசவ னிமலர்செல் வாசாக் கிரவசத்த
தீதா வசவன் புறப்பா ரெனுமுத்தி சித்திக்கவே.

32. சித்திக்கத் தத்துவ ருத்திர பாலக செச்சைகுறிஞ்
சித்திக்கத் தத்துவ ரத்தியின் மாவென்ற சேவகவிச்
சித்திக்கத் தத்துவர் வாய்மொழி மாதர்க் கெனுந்திணைவா
சித்திக்கத் தத்துவ ருத்தப் படாதுநற் சேதனமே.

33. சேதனந் தந்துறை யென்றுமை செப்புங் குருந்துறைகாற்
சேதனந் தந்துறை யல்லிமன் வாவிச்செந் தூர்கருத
சேதனந் தந்துறை யென்றறி யார்திற நீங்கிநெஞ்சே
சேதனந் தந்துறை மற்றுமுற் றாடித் திரிகைவிட்டே.

34. திரிகையி லாயிர வெல்லாழி மண்விண் டருசிரபாத்
திரிகையி லாயிர வாநந்த நாடகி சேரிமகோத்
திரிகையி லாயிர மிக்குமைந் தாசெந்தி லாயொருகால்
திரிகையி லாயிரக் கோடிசுற் றோடுந் திருத்துளமே.

35. திருத்துள வாரிகங் போதுடன் சேண்மழை தூங்குஞ்சங்க
திருத்துள வாரிதி கண்டுயி லாசெயன் மாண்டசிந்தை
திருத்துள வாரன்னை செந்தூரையன்னள் செம்மேனியென்பு
திருத்துள வார்சடை யீசர்மைந் தாவினிச் செச்சைநல்கே.

36. செச்சைய வாவி கலயில்வல் வாயிடைச் சேடனிற்கச்
செச்சைய வாவி பருகுஞ் சிகாவல செங்கைவெந்தீ
செச்சைய வாவி விடுகெனுஞ் செல்வநின் றாளணுகச்
செச்சைய வாவி னுயிர்வாழ் வினியலஞ் சீர்ப்பினுமே.

37. சீர்க்கை வனப்பு மலர்வேங்கை யானவன் செஞ்சிலையோர்
சீர்க்கை வனப்பு னிதத்தவ வேடன் றினைவளைக்குஞ்
சீர்க்கை வனப்பு னமதுருக் காட்டிய சேய்தமிழ்நூற்
சீர்க்கை வனப்பு னிமிர்சடை யோன்மகன் சிற்றடிக்கே.

38. சிற்றம் பலத்தை யரன்புநெய் நூற் றிரி சிந்தையிடுஞ்
சிற்றம் பலத்தை வரஞான தீபமிட்ட டார்க்குப்பரி
சிற்றம் பலத்தை யருளுஞ்செந் தூரர் பகைக்குலமாஞ்
சிற்றம் பலத்தைப் பதவரந் தோளிலிந் தீவரமே.

39. தீவர கந்தரி தாம்பகி ராருற வானசெம்பொன்
தீவர கந்தரி யாநொந்த போதினிற் செச்சையவிந்
தீவர கந்தரி சிந்துரை பாக சிவகரண
தீவர கந்த ரிபுதீ ருனதடி சேமநட்பே.

40. சேமர விக்கம் படையாக வீசுப தேசமுன்னூற்
சேமர விக்கம் பலந்தரு வாய்செரு வாயவெஞ்சூர்ச்
சேமர விக்கந் திரித்தாய் வருத்திய வன்றிறென்றல்
சேமர விக்கம் புயவாளி விண்டிரை தெண்டிரையே.

41. தெண்டன் புரந்தர வக்குன்றில் வாழ்கந்த சிந்துவிலுத்
தெண்டன் புரந்தர லோகஞ் செறாதுசெற் றோய்களைவாய்
தெண்டன் புரந்தர நற்கேள் சிறுவ ரழச்செய்தெம்மைத்
தெண்டன் புரந்தர வின்படி நூக்கிய தீநரகே.

42. தீனந் தினத்து தரச்செல்வர் பாற்சென் றெனக்கென்பதோர்
தீனந் தினத்து முதரா னலஞ்சுடச் சேர்ந்துசுடுந்
தீனந் தினத்து னிகளைசெங் கோட்டினன் செந்திலந்நீர்
தீனந் தினத்து தவத்துப் பிரசதஞ் செய்யவற்றே.

43. செய்யசெந் தாமரை யில்லாத மாதுடன் செந்தினைசூழ்
செய்யசெந் தாமரை மானார் சிலம்பிற் கலந்துறையுஞ்
செய்யசெந் தாமரை யென்னுங் குமார சிறுசதங்கைச்
செய்யசெந் தாமரை சேர்வதென் றோவினை சேய்தொலைத்தே.

44. சேதாம் பலதுறை வேறும் பணிகங்கை செல்வநந்தன்
சேதாம் பலதுறை யாதசிற் றாயன் றிருமருக
சேதாம் பலதுறை செவ்வாய்க் குறத்தி திறத்தமுத்திச்
சேதாம் பலதுறை யீதென் றெனக்குப தேசநல்கே.

45. தேசம் புகல வயிலேயெ னச்சிறை புக்கொருகந்
தேசம் புகல வணவாரி செற்றவ னீசற்குப
தேசம் புகல திகவாச கன்சிறி தோர்கிலன்மாந்
தேசம் புகல கமுதவி மானைச் செருச்செய்வதே.

46. செருக்கும் பராக வயிராவ தத்தெய்வ யானைமணஞ்
செருக்கும் பராக தனந்தோய் கடம்ப செகமத நூல்
செருக்கும் பராக மநிரு பனந்தந் தெளிவியம்பு
செருக்கும் பராகம் விடுங்கடை நாளுந் திடம்பெறவே.

47. திடம்படு கத்துங் கெடீர்கன்ம லோகச் சிலுகுமச்சோ
திடம்படு கத்துந் திரித்தம்பு வாலியு ரத்தும்பத்துத்
திடம்படு கத்துந் தெறித்தான் மருக திருகுமும்ம
திடம்படு கத்துங் கநகங் குனித்தவன் சேயெனுமே.

48. சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்த செந்திற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே.

49. சேதக மொன்று மனாதியுந் தாதையுந் தேடரியார்
சேதக மொன்றுஞ் சதங்கையங் கிண்கிணி செச்சையந்தாள்
சேதக மொன்றும் வகைபணி யாயினித் தீயவினைச்
சேதக மொன்று மறியா துழலுயிர்ச் சித்திரமே.

50. சித்திர மிக்க னவில்வாழ் வெனத்தெளி யுந்தவவா
சித்திர மிக்க னெறிக்கழிந் தேற்கினிச் செச்சைநல்வி
சித்திர மிக்க தனக்குறத் தோகை திறத்தமுக்தி
சித்திர மிக்க வருளாய் பிறவிச் சிகையறவே.

51. சிகைத்தோகை மாமயில் வீரா சிலம்புஞ்சிலம்பம்புரா
சிகைத்தோகை மாமயில் வாங்கிப் பொருது திசைமுகன்வா
சிகைத்தோகை மாமயில் வானில்வைத் தோய்வெஞ் செருமகள்வா
சிகைத்தோகை மாமயில் செவ்விநற் கீரர்சொற் றித்தித்ததே.

52. தித்திக்குந் தொந்திக்கு நித்தம் புரியுஞ் சிவன்செவிபத்
தித்திக்குந் தொந்திக் கறமொழி பாலக தேனலைத்துத்
தித்திக்குந் தொந்திக் கிளையாய் விளையுயிர்க்குஞ் சிதைதோல்
தித்திக்குந் தொந்திப் பனவேது செய்வினைத் தீ விலங்கே!

53. தீவிலங் கங்கை தரித்தார் குமார திமிரமுந்நீர்
தீவிலங் கங்கை வருமான் மருக தெரிவற் றவான்
தீவிலங் கங்கை வரவா விரைக்குத் திரிந்துழலுந்
தீவிலங் கங்கை யமன்றொட ராமற் றிதம்பெறவே.

54. திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்தத் திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீ தொத்ததே.

55. தீதோ மரணந் தவிரும் பிறப்பறுந் தீயகற்புந்
தீதோ மரணம் பரமீது தானவர் சேனை முற்றுந்
தீதோ மரணந் தனபூசு ரர்திரண் டேத்தியமுத்
தீதோ மரண மலையாளி யென்றுரை தென்னுறவே.

56. தென்ன வனங்கனஞ் சூழ்காத் திரிநக சூலகரத்
தென்ன வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன்பின்
தென்ன வனங்கனன் னீற்றாற் றிருத்திய தென்னவின்னந்
தென்ன வனங்கனங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே.

57. தீத்தன் பரவை வெளிநீங்கிச் சேய்தொழச் செல்பதவுத்
தீத்தன் பரவை முறையிட மாங்குறை தீங்குறவே
தீத்தன் பரவை தழைக்கவிண் காவெனச் சென்னியின்மேல்
தீத்தன் பரவையில் வேலத்த னேகுரு சீலத்தனே.

58. சீலங் கனமுற்ற பங்கா கரசல தீரக்கநி
சீலங் கனமுற்ற முத்தூர்செந் தூர சிகண்டியஞ்சு
சீலங் கனமுற்ற வேதனை மேவித தியங்கினஞ்சீ
சீலங் கனமுற்ற விப்பிறப் பூடினிச் சேர்ப்பதன்றே.

59. சேர்ப்பது மாலய நீலோற் பலகிரித் தெய்வவள்ளி
சேர்ப்பது மாலய முற்றா ரெனப்பலர் செப்பவெப்புச்
சேர்ப்பது மாலய வத்தைமன் யாக்கை சிதைவதன்முன்
சேர்ப்பது மாலய வாசவன் செப்பிய செப்பதத்தே.

60. செப்பத் தமதிலை மாற்றார் கொளுமுன்னஞ் செல்வர்க்கிடச்
செப்பத் தமதிலை யெங்ஙனுய் வார்தெய்வ வேழமுகன்
செப்பத் தமதிலை வாணுத னோக்கினர் சேணில்வெள்ளிச்
செப்பத் தமதிலை வென்றார் குமாரவத் திக்கரசே.

61. திக்கர சத்தி தவன்சென்று முன்றி திகுமரர்வந்
திக்கர சத்தி யிடத்தோயென் செய்வ தெனத்தருநீ
திக்கர சத்தி விதிர்த்திலை யேலெவன் செய்குவரத்
திக்கர சத்தி யலைவாய் வளர்நித் திலக்கொழுந்தே.

62. திலமுந் தயில முநிகர வெங்குந் திகழ்தருசெந்
திலமுந் தயில முருகா வெனாதத் திநகையினித்
திலமுந் தயிலமு தத்தா லுருகிய சித்தவென்னே
திலமுந் தயில கலவினை மேவித் தியங்குவதே.

63. தியங்காப் பொறியுண் டெனுந்தனுத் தீதலு மேதியையூர்
தியங்காப் பொறியுண் டவமிலி யேயென்று செப்பலுஞ்சத்
தியங்காப் பொறியுண் டயன்கைப் படாது திரவெற்புநி
தியங்காப் பொறியுண்டைபண்டுயப்போர் செய்த சேவகனே.

64. சேவக மன்ன மலர்க்கோமுன் நீசொலத் தெய்வவள்ளி
சேவக மன்ன வதனாம் புயகிரி செற்றமுழுச்
சேவக மன்ன திருவாவி னன்குடிச் செல்வகல்விச்
சேவக மன்ன முநிக்கெங்ங னாணித் திகைப்புற்றதே.

65. திகைப்படங் கப்புயந் தந்தரு ளானென் படிங்கணிய
திகைப்படங் கத்தமை யார்செந்தி லாரென்ப டென்னனுய
திகைப்படங் கப்புகல் சேயென்பள் கன்னிகண் ணீர்தரவி
திகைப்படங் கத்தமை யாதெமை யாட்கொளுஞ் சீகரமே.

66. சீகர சிந்துர வுத்தவெஞ் சூர செயபுயவ
சீகர சிந்துர வல்லிசிங் கார சிவசுதசு
சீகர சிந்துர கந்தர வாகன் சிறைவிடுஞ்சு
சீகர சிந்துரமால் வினைக்குன்றைச் சிகண்டி கொண்டே.

67. சிகண்டிதத் தத்த மரவாரி விட்டத் திரிபுத்ரரா
சிகண்டிதத் தத்த நகபூ தரதெய்வ வள்ளிக்கொடிச்
சிகண்டிதத் தத்த மலர்மேற் குவித்திடை செப்புருவஞ்
சிகண்டிதத் தத்த கறபோ பலமென்னுஞ் சேகரனே.

68. சேகர வாரண வேல்வீர வேடச் சிறுமிபத
சேகர வாரண மேவும் புயாசல தீவினையின்
சேகர வாரண வெற்பாள நாளுந் த்ரியம்பகனார்
சேகர வாரண நின்கையில் வாரணஞ் சீவனொன்றே.

69. சீவன சத்துரு கன்பாற் பிறப்பறத் தேவருய்யச்
சீவன சத்துரு மிக்குமெய் யோன்கையிற் சேர்த்தசெவ்
சீவன சத்துருச் செய்யாண் மருகவெ னாதிடையே
சீவன சத்துரு வெய்தியெய் தாப்பழி சிந்திப்பதே.

70. சிந்துர வித்தக வாரும் புகர்முகத் தெய்வவெள்ளைச்
சிந்துர வித்தக வல்லிசிங் காரசெந் தூரகுன்றஞ்
சிந்துர வித்தக முத்திக்கு மாய்நின்ற செல்வதுஞ்சா
சிந்துர வித்தக னம்போலு மிங்கிளந் திங்களுமே.

71. திங்களு மாசுண மும்புனை வார்செல்வ னென்னையிரு
திங்களு மாசுண மாக்கும்ப தாம்புயன் செந்திலன்னாள்
திங்களு மாசுண மன்போல் விழியுஞ் செழுங்கரும்புந்
திங்களு மாசுண நன்றான மாற்றமுந் தீட்டினன்றே.

72. தீட்டப் படாவினி யுன்னாலென் சென்னி கறைப்பிறப்பில்
தீட்டப் படாவி யவரல்லன் யான்றிக்கு நான்மருப்புத்
தீட்டப் படாவி தமுகா சலன்சிறை விட்டவன்றாள்
தீட்டப் படாவி வனையே நினைவன் றிசாமுகனே.

73. திசாமுக வேதனை யன்பாற் கரன்றிங் கடங்களவ
திசாமுக வேதனை யீறிலு மீறிலர் சீறுமம்போ
திசாமுக வேதனை வென்கண்ட வேலன் றினைப்புனத்தந்
திசாமுக வேதனை நண்ணுதண் கார்வரை சேர்பவரே.

74. சேரப் பொருப்பட வித்தே னிறைவன் றிரைசிறையைச்
சேரப் பொருப்பட வல்லவன் சூரைச் சிகரியுடன்
சேரப் பொருப்பட வென்றண்ட ரேத்திய சேவகன்வான்
சேரப் பொருப்பட வேணியிற் சேர்த்தவன் செய்தவமே.

75. செய்தவத் தாலஞ்சு சீரெழுத் தோதிலந் தீதலருஞ்
செய்தவத் தாலஞ்சு கம்பெறச்சேயுரைக்கேற் றுருப்போய்ச்
செய்தவத் தாலஞ்சு வைக்கனி யீன்றதென் னேம்வினையே
செய்தவத் தாலஞ்சு கின்றன மும்மலச் செம்மல்கொண்டே.

76. செம்மலை வண்டு கடரங்க மாவென்ற திண்படைவேற்
செம்மலை வண்டு வசவார ணத்தனைச் செப்பவுன்னிச்
செம்மலை வண்டு தவந்தமிழ்ப் பாணதெண் டீங்கையில்வாய்
செம்மலை வண்டு விருப்புறு மோவிது தேர்ந்துரையே.

77. தேரை விடப்பணி யேறேறி முப்புரஞ் செற்றபிரான்
தேரை விடப்பணி சூராரி யென்க தெரிவையர்பால்
தேரை விடப்பணி வாய்ப்படு மாறு செறிந்தலகைத்
தேரை விடப்பணித் தென்றோடி யென்றுந் திரிபவரே.

78. திரிபுரத் தப்புப் புவிதரத் தோன்றி சிலைபிடிப்பத்
திரிபுரத் தப்புத் தலைப்பட நாண்டொடுஞ் சேவகன்கோத்
திரிபுரத் தப்புத் திரமான் மருக திருக்கையம்போ
திரிபுரத் தப்புத் துறையா யுதவெனச் செப்புநெஞ்சே.

79. செப்பா ரமுதலை மன்னோ திகனங்கு ரும்பைமுலை
செப்பா ரமுதலை கண்கா னகைமுருந் தீரிருகண்
செப்பா ரமுதலை வாவியிற் சென்ற பிரான் மருகன்
செப்பா ரமுதலை வேர்களை வான்வரைச் சீரினுக்கே.

80. சீராம ராம சிவசங்க ராநுந் திருமுடிக்குச்
சீராம ராம துகரத் துழாயென்பர் தெண்டிரைமேற்
சீராம ராம நிறந்திறக் கத்தொட்ட சேய்கழற்குச்
சீராம ராம னிமையோர் மகுடச் சிகாவிம்பமே.

81. சிகாவல வன்பரி தப்பாடு செய்யுஞ்செவ் வேலவிலஞ்
சிகாவல வன்பரி வூரார் மதனித் திலஞ்சலரா
சிகாவல வன்பரி யங்கங் குழல்பெற்ற தேமொழிவஞ்
சிகாவல வன்பரி யானல மன்றிலுந் தென்றலுமே.

82. தென்றலை யம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த்
தென்றலை யம்புய மின்கோ மருக செழுமறைதேர்
தென்றலை யம்பு சகபூ தரவெளி சிந்திமன்றல்
தென்றலை யம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே.

83. தீரா கமல சலிகித போக மெனத்தெளிந்துந்
தீரா கமல மெனக்கரு தாததென் சேயவநூல்
தீரா கமல குகரம் பொறுப்ப னெனத்திருக்கண்
தீரா கமல மரவே கருகச் சிவந்தவனே.

84. சிவசிவ சங்கர வேலா யுததினை வஞ்சிகுறிஞ்
சிவசிவ சங்கர வாமயில் வீர செகந்திருக்கண்
சிவசிவ சங்கர மாவை யெனுந்திற லோய்பொறைவா
சிவசிவ சங்கர மான்பட்ட வாவொளி சேர்ந்தபின்னே.

85. சேந்த மராத்துடர் தானவர் சேனையைத் தெண்டிரைக்கண்
சேந்த மராத்துடன் கொன்றசெவ் வேல திருமுடிமேற்
சேந்த மராத்துட ரச்சூடி மைந்த திளைத்திளைத்தேன்
சேந்த மராத்துட ரின்னாரி யென்னுமிச் சேறுபுக்கே.

86. சேறலைத் தாறலைக் கப்பா லெழுந்து செழுங்கமுகிற்
சேறலைத் தாறலைக் குஞ்செந்தி லாய்சிந்தை தீநெறியிற்
சேறலைத் தாறலைத் தீர்க்குங் குமார திரியவினைச்
சேறலைத் தாறலைக் கத்தகு மோமெய்த் திறங்கண்டுமே.

87. திறம்பா டுவர்தண் புனத்தெய்வ மேயென்பர் சேதத்துமாந்
திறம்பா டுவர்முது நீரெனக் காய்பவர் செந்தினைமேல்
திறம்பா டுவர்தழ் கண்டுரு காநிற்பர் செப்புறச்செந்
திறம்பா டுவரி லிவர்வல் லவர்நஞ் செயல்கொள்ளவே.

88. செயலங்கை வாளை யிறைகோயி லைச்சிவ னாரமுதைச்
செயலங்கை வாளை முனிகொண்டல் வாளியைத் தேவர் பிரான்
செயலங்கை வாளை முனைவேலை யன்னவிச் சேயுறையுஞ்
செயலங்கை வாளை யுகள்செந்தில் வாழ்பவள் சேல்விழியே.

89. சேலையி லாருந் தவன்சூல மேறச் சினத்தவன்கண்
சேலையி லாருந் திவனோற் பவையர சிந்திரியச்
சேலையி லாரும் பராபரி புக்குறச் சிக்கெனுமிச்
சேலையி லாருந் திறையிட் டனர்தங்கள் சித்தங்களே.

90. சித்தத் தரங்கத்தர் சித்தியெய் தத்திரி கின்றதென்னர்ச்
சித்தத் தரங்கத்தர் சந்ததி யேசெந்தி லாய்சலரா
சித்தத் தரங்கத்த ரக்கரைச் செற்றகந் தாதிங்களிஞ்
சித்தத் தரங்கத்தர் சேயா ரணத்தந் திகிரியையே.

91. திகிரி வலம்புரி மாற்கரி யார்க்குப தேசஞ்சொன்ன
திகிரி வலம்புரி செய்யா ரிலஞ்சிசெந் தூர்கனதந்
திகிரி வலம்புரி வேறும் படைத்தருள் சேய்தணியில்
திகிரி வலம்புரி சூடிய வாநன்று சேடியின்றே.

92. சேடி வணங்கு வளைத்தோ ளெனப்புணர் சேயவட
சேடி வணங்கு திருத்தணி காவல நின்செருக்காற்
சேடி வணங்கு கொடியிடை யாரையென் செப்புமுலைச்
சேடி வணங்கு தலைக்களி றீந்தது செல்லநில்லே.

93. செல்லலை யம்பொழில் சூழ்செந்தி லானறி யானிறைகைச்
செல்லலை யம்பொழி லெங்கணு மேற்ப வெனத்தெறித்த
செல்லலை யம்பொழி லங்கைக் கருடிரு மாநிறம்போற்
செல்லலை யம்பொழி லாகவ மாதுயிர் சேதிப்பதே.

94. சேதிக் கனைத்து களதாக்கு நோக்கினன் செல்வசெந்திற்
சேதிக் கனைத்து நிலைபெறச் சூரங்கஞ் சீரங்கமால்
சேதிக் கனைத்து வரிதோ யயில்கொடெற் சேர்க்கவந்தாற்
சேதிக் கனைத்து வருமா மறலி திறலினையே.

95. திறவா வனக புரிவாச னீக்கச் சிகரிநெஞ்சந்
திறவா வனச முநியைவென் றோய்தென் றிசைத்திருச்செந்
திறவா வனமயி லோயந்த காலமென் சிந்தைவைக்கத்
திறவா வனநின் றிருவான தண்டைத் திருவடியே.

96. திருக்கையம் போதிக ளோகஞ்ச மோநஞ்ச மோதிருமால்
திருக்கையம் போசெய்ய வேலோ விலோசனந் தென்னனங்கத்
திருக்கையம் போருகக்கைந் நீற்றின்மாற்றித் தென்னூல்சிவபத்
திருக்கையம் போக வுரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே.

97. சிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச்
சிறுமிக் குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேற்
சிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச்
சிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே.

98. சீரங்க ராக மறமோது திகிரி செங்கைகொண்ட
சீரங்க ராக மருகந்த தேசிக செந்தினைமேற்
சீரங்க ராக தனகிரி தோய்கந்த செந்தமிழ்நூற்
சீரங்க ராக விநோதவென் பார்க்கில்லை தீவினையே.

99. தீவினை யற்ற சினந்தீ ரகத்துண்மெய்த் தீபநந்தந்
தீவினை யற்ற வநந்தா தெடுத்தனஞ் செந்தினைமேல்
தீவினை யற்ற புனமான் கொழுநன் செழுங்கனகத்
தீவினை யற்ற வடியார்க் கருள்பெருஞ் செல்வனுக்கே.

100. செல்வந் திகழு மலநெஞ்ச மேயவன் றெய்வமின்னூர்
செல்வந் திகழு நமதின்மை தீர்க்கும்வெங் கூற்றுவற்குச்
செல்வந் திகழுந் திருக்கையில் வேறினை காத்தசெல்வி
செல்வந் திகழு மணவாள னல்குந் திருவடியே.

பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Sun Dec 18, 2011 6:36 pm

மயில் விருத்தம்

1. சந்தன பாளித குங்கும புளகித
சண்பக கடகபுயச்
சமர சிகாவல குமர சடானன
சரவண குரவணியுங்

கொந்தள பாரகி ராதபு ராதநி
கொண்க வெனப்பரவுங்
கூதள சீதள பாத மெனக்கருள்
குஞ்சரி மஞ்சரிதோய்

கந்தக்ரு பாகர கோமள கும்பக
ராதிப மோகரத
கரமுக சாமர கர்ண விசால
கபோல விதானமதத்

தெந்த மகோதர மூக்ஷிக வாகன
சிந்துர பத்மமுகச்
சிவசுத கணபதி விக்ந விநாயக
தெய்வ சகோதரனே.

சந்தான புஷ்பபரி மளகிண் கிணீமுகச்
சரணயுக ளமிர்தப்ரபா
சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
சத்யப்ரி யாலிங்கனச்

சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
யம்பக விநாயகன்முதற்
சிவனைவலம் வருமளவி லுலகடைய நொடியில்வரு
சித்ரக் கலாப மயிலாம்

மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
வனசரோ தயகிர்த்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயுதத்

திந்த்ராணி மங்கல்ய தந்துரட் சாபரண
இகல்வேல் விநோத னருள்கூ
ரிமையகிரி குமரிமக னேறுநீ லக்ரீவ
ரத்நக் கலாப மயிலே.

2. சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
பட்டு க்ரவுஞ்ச சயிலந்
தகரப் பெருங்கனக சிகரச் சிலம்புமெழு
தனிவெற்பு மம்புவியுமெண்

டிக்குத் தடங்குவடு மொக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம் பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்

பக்கத்தி லொன்றுபடு பச்சைப் பசுங்கவுரி
பத்மப் பதங் கமழ்தரும்
பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய
பரம வுபதேச மறிவிக்

கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தவொரு
கந்தச் சுவாமி தணிகைக்
கல்லார கிரியுருக வருகிரண மரகத
கலாபத்தி லிலகு மயிலே.

3. ஆதார பாதளம் பெயரவடி பெயரமூ
தண்டமுக டதுபெயரவே
யாடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரவெறி
கவுட்கிரி சரம் பெயரவே

வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார்
மிக்குப் ரியப்படவிடா
விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும்
விஸ்தார நிர்த்த மயிலாம்

மாதாநு பங்கியெனு மாலது சகோதரி
மகீதரி கிராத குலிமா
மறைமுநி குமாரிசா ரங்கனந் தனிவந்த
வள்ளிமணி நூபுர மலர்ப்

பாதார விந்தசே கரனேய மலருமுற்
பலகிரி யமர்ந்த பெருமாள்
படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே.

4. உககோடி முடிவின்மண் டியசண்ட மாருத
முதித்ததென் றயனஞ்சவே
ஒருகோடி யண்டரண் டங்களும் பாதாள
லோகமும் பொற்குவடுறும்

வெகுகோடி மலைகளு மடியினிற் றகர்ந்திரு
விசும்பிற் பறக்க விரிநீர்
வேலைசுவ றச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை
வீசிப் பறக்கு மயிலாம்

நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்துதர
கேசரி முராரி திருமால்
நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
நந்தனன் முகுந்தன் மருகன்

முகநோடி நதிகரன் குருகோடி யநவரத
முகிலுலவு நீல கிரிவாழ்
முருகனுமை குமரனறு முகனடவு விகடதட
மூரிக் கலாப மயிலே.

5. சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தவபி
நயதுல்ய சோம வதன
துங்கத்ரி சூலத்ரி கங்காளி சிவகாம
சுந்தரி பயந்த நிரைசே

ராதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்க
ளியாவுங் கொடுஞ்சிறகினா
லணையுந்த னதுபேடை யண்டங்களென்னவே
யணைக்குங் கலாப மயிலாம்

நீதிமறை யோதண்ட முப்பத்து முக்கோடி
நித்தரும் பரவு கிரியாம்
நீலகிரி வேலவ னிராலம்ப நிர்ப்பய
னிர்வியா குலன் சங்குவாள்

மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன்
மாதவன் முராரி திருமால்
மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன்
வரமுதவு வாகை மயிலே.

6. சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்
சகல லோகமு நடுங்கச்
சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி யமரருஞ்
சஞ்சலப் படவுமையுடன்

கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த
காரம் பிறந்திடநெடுங்
ககனகூ டமுமேலை முகடுமூ டியபசுங்
கற்றைக் கலாப மயிலாஞ்

சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள
சித்ரப் பயோதரகிரித்
தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன்
திருத்தணி மகீதரனிருங்

கெங்கா தரன்கீத மாகிய சுராலய
க்ருபாகரன் கார்த்தி கேயன்
கீர்த்திமா வசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி
கிழிபட நடாவு மயிலே.

7. தீரப் பயோததி திக்குமா காயமும்
செகதலமு நின்று சுழலத்
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத்
தீக்கொப் புளிக்க வெருளும்

பாரப் பணாமுடி யநந்தன்முத லரவெலாம்
பதைபதைத் தேநடுங்கப்
படர்சக்ர வாளகிரி துகள்படவை யாளிவரு
பச்சைப்ர வாள மயிலாம்

ஆரப்ர தாபபுள கிதமதன பாடீர
அமிர்தகலசக் கொங்கையாள்
ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபர
மாநந்த வல்லி சிறுவன்

கோரத்ரி சூலத்ரி யம்பக ஜடாதார
குருதரு திருத்தணிகைவேள்
கொடியநிசி சரருதர மெரிபுகுத விபுதர்பதி
குடிபுகுத நடவு மயிலே.

8. செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை
சிந்தப் புராரி யமிர்தந்
திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
தீவிஷங் கொப்புளிப்பச்

சக்ரகிரி சூழவரு மண்டலங் கள்சகல
சங்கார கோர நயனத்
தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு
சண்டப்ர சண்டமயிலாம்

விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய
விருத்தன் திருத்தணிகைவாழ்
வேலாயு தன்பழ வினைத்துய ரறுத்தெனை
வெளிப்பட வுணர்த்தி யருளித்

துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச்
சுவாமிவா கனமானதோர்
துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல
துஷ்டர் நிஷ்டூர மயிலே.

9. சிகரமத னியமேரு கிரிரசத கிரிநீல
கிரியெனவு மாயிரமுகத்
தெய்வநதி காளிந்தி யெனநீழ லிட்டுவெண்
திங்கள்சங் கெனவும்ப்ரபா

நிகரெனவு மெழுதரிய நேமியென வுலகடைய
நின்றமா முகிலென்னவே
நெடியமுது ககனமுக டுறவீசி நிமிருமொரு
நீலக்கலாப மயிலாம்

அகருமரு மணம்வீசு தணிகையபி ராமவே
ளடியவர்கள் மிடியகலவே
யடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களி
லலங்கற் குழாமசையவே

மகரகன கோமளக் குண்டலம் பலவசைய
வல்லவுணர் மனமசையமால்
வரையசைய உரகபில மசையவெண் டிசையசைய
வையாளி யேறு மயிலே.

10. நிராசத விராசத வரோதய பராபர
னிராகுல னிராமய பிரா
னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி
நிலாவிய வுலாசவி தயன்

குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்
குராநிழல் பராவு தணிகைக்
குலாசல சராசர மெலாமினி துலாவிய
குலாவிய கலாப மயிலாம்

புராரிகும ராகுரு பராவெனும் வரோதய
புராதன முராரி மருகன்
புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக
லாகுமயி லாயுதனெடுந்

தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல
சாதனன் விநோத சமரன்
தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்
சடாநந னடாவு மயிலே.

11. எந்நாளு மொருசுனையி லிந்த்ரநீ லப்போ
திலங்கிய திருத்தணிகைவாழ்
எம்பிரா னிமையவர்கள் தம்பிரா னேறுமொரு
நம்பிரா னான மயிலைப்

பன்னாளு மடிபரவு மருணகிரி நாதன்
பகர்ந்தவதி மதுர சித்ரப்
பாடல்தரு மாசறு விருத்தமொரு பத்தும்
படிப்பவர்க ளாதி மறைநூல்

மன்னான் முகம்பெறுவ ரன்னமே றப்பெறுவர்
வாணிதழு வப்பெறுவரால்
மகரால யம்பெறுவ ருவணமே றப்பெறுவர்
வாரிச மங்கையுடன் வாழ்

அந்நாய கம்பெறுவ ரயிராவ தம்பெறுவ
ரமுதா சனம்பெறுவர்மே
லாயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்
அழியா வரம்பெறுவரே.

சேவல் விருத்தம்

காப்பு

கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல்
கொண்டேழ் இசை மருளக்,
குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி
குமரன் இதம்பெறு பொற்

செந்தா மரைகடம் நந்தா வனமுள
செந்தூர் எங்கு முளான்
திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு
சேவல் தனைப் பாட

வந்தே சமர்பொரு மிண்டா கியகய
மாமுக னைக்கோறி
வன்கோ டொன்றை ஒடித்துப் பாரதம்
மாமே ருவிலெழுதிப்

பைந்தார் கொடுபல ராவணன் அன்பொடு
பணிசிவ லிங்கமதைப்
பார்மிசை வைத்த விநாயகன் முக்கட்
பரமன் துணையாமே.

பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Sun Dec 18, 2011 6:36 pm

நூல்

1. உலகிலநு தினமும்வரும் அடியவர்கள் இடரகல
உரியபர கதிதெரியவே
உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள்மிடி கெட அருளியே

கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினமுற வரில் அவைகளைக்
கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிற
கைக்கொட்டி நின்றாடுமாம்

மலைகள்நெறு நெறுநெறென அலைகள்சுவ றிடஅசுரர்
மடியஅயில் கடவு முருகன்
மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதைகுற
வரிசையின மகளவளுடன்

சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்
சிறுவன் அயன் வெருவ விரகிற்
சிரமிசையில் வெகுசினமொ டடியுதவும் அறுமுகவன்
சேவற் றிருத்துவசமே.

2. எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரம
ராட்ச தர்கள் மிண்டுகள் செயும்
ஏவற் பசாசுநனி பேயிற் பசாசு கொலை
ஈனப் பசாசுகளையும்

கரிமுருடு பெரியமலை பனையெனவும் முனையின்உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்
கடிகளையும் மடமடென மறுகியல றிட<உகிர்க்
கரத்தடர்த் துக்கொத்துமாம்

தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர்கிடு கிடென நடனம்
தண்டைகள் சிலம்புகள் கலின்கலினெ னச்சிறிய
சரணஅழ கொடுபுரியும் வேள்

திரிபுரம தெரியநகை புரியும்இறை யவன்மறைகள்
தெரியும்அரன் உதவுகுமரன்
திமிரதின கரமுருக சரவண பவன்குகன்
சேவற் றிருத்து வசமே.

3. கரிமுரட் டடிவலைக் கயிறெடுத் தெயிறுபற்
களையிறுக் கியு முறைத்துக்
கலகமிட் டியமன்முற் கரமுறத் துடருமக்
காலத்தில் வேலு மயிலும்

குருபரக் குகனுமப் பொழுதில்நட் புடன்வரக்
குரலொலித் தடியரிடரைக்
குலைத்தலறு மூக்கிற் சினப்பேய்க ளைக்கொத்தி
வட்டத்தில் முட்ட வருமாம்

அரியகொற் கையனுடற் கருகும்வெப் பகையையுற்
பனமுரைத் ததமிகவுமே
வமணரைக் கழுவில்வைத் தவருமெய்ப் பொடிதரித்
தவனிமெய்த் திட அருளதார்

சிரபுரத் தவதரித் தவமுதத் தினமணிச்
சிவிகைபெற் றினிய தமிழைச்
சிவனயப் புறவிரித் துரைசெய்விற் பனனிகற்
சேவற் றிருத் துவசமே.

4. அச்சப்ப டக்குரல் முழக்கிப் பகட்டியல
றிக்கொட்ட மிட்டமரிடும்
அற்பக் குறப்பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி
அறுகுழை களைக் கொத்தியே

பிச்சுச் சினத்துதறி எட்டுத்திசைப் பலிகள்
இட்டுக் கொதித்து விறலே
பெற்றுச் சுடர்ச்சிறகு தட்டிக் குதித்தியல்
பெறக்கொக் கரித்து வருமாம்

பொய்ச்சித் திரப்பலவும் உட்கத் திரைச்சலதி
பொற்றைக் கறுத் தயில்விடும்
புத்திப்ரி யத்தன்வெகு வித்தைக் குணக்கடல்
புகழ்ச்செட்டி சுப்ரமணியன்

செச்சைப் புயத்தன்நவ ரத்னக்ரி டத்தன்மொழி
தித்திக்கு முத்தமிழினைத்
தெரியவரு பொதிகைமலை முநிவர்க் குரைத்தவன்
சேவற் றிருத் துவசமே.

5. தானா யிடும்புசெயு மோகினி இடாகினி
தரித்தவே தாளபூதம்
சருவசூ னியமுமங் கிரியினா லுதறித்
தடிந்துசந் தோடமுறவே

கோனாகி மகவானும் வானாள வானாடர்
குலவுசிறை மீள அட்ட
குலகிரிகள் அசுரர்கிளை பொடியாக வெஞ்சிறைகள்
கொட்டியெட் டிக்கூவுமாம்

மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
மாதேவ னற்குருபரன்
வானீரம் அவனியழல் காலாய் நவக்கிரகம்
வாழ்நாள் அனைத்தும் அவனாம்

சேனா பதித்தலைவன் வேதா வினைச்சிறைசெய்
தேவாதி கட்கரசுகட்
டேனான மைக்கடலின்மீனான வற்கினியன்
சேவற் றிருத் துவசமே.

6. பங்கமா கியவிட புயங்கமா படமது
பறித்துச் சிவத்தருந்திப்
பகிரண்ட முழுதும் பறந்துநிர்த் தங்கள்புரி
பச்சைக் கலாப மயிலைத்

துங்கமா யன்புற்று, வன்புற் றடர்ந்துவரு
துடரும் பிரேத பூதத்
தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
துண்டப் படக் கொத்துமாம்

மங்கையா மளைகுமரி கங்கைமா லினிகவுரி
வஞ்சிநான் முகிவராகி
மலையரையன் உதவமலை திருமுலையில்ஒழுகுபால்
மகிழ அமுதுண்ட பாலன்

செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னுநர
சிங்கமாய் இரணியனுடல்
சிந்தஉகி ரிற்கொடு பிளந்தமால் மருமகன்
சேவற் றிருத் துவசமே.

7. வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
வெங்கட் குறும்புகள் தரும்
விடுபேய்க ளேகழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
வெம்பேற் களைத் துரத்திப்

பேறான சரவண பவா என்னு மந்திரம்
பேசியுச் சாடனத்தாற்
பிடர்பிடித் துக்கொத்தி நகநுதியி னாலுறப்
பிய்ச்சுக் களித்தாடுமாம்

மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
மகோதரம் பெருவியாதி
வாதபித் தஞ்சிலேற் பனங்குட்ட முதலான
வல்லபிணி களைமாற்றியே

சீறாத ஓராறு திருமுக மலர்ந்தடியர்
சித்தத் திருக்கு முருகன்
சிலைகள்உரு விடஅயிலை விடுகுமர குருபரன்
சேவற் றிருத் துவசமே.

8. வந்தார்ப் பரிக்குமம் மிண்டுவகை தண்டதரன்
வலியதூ துவர்பில்லி பேய்
வஞ்சினாற்பேதுற மகாபூதம் அஞ்சிட
வாயினும் காலினாலு<ம்

பந்தாடி யேமிதித் துக்கொட்டி வடவைசெம்
பவளமா கதிகாசமாப்
பசுஞ் சிறைத் தலமிசைத் தனியயிற் குமரனைப்
பார்த்தன் புறக்கூவுமாம்

முந்தா கமப்பலகை சங்காக மத்தர்தொழ
முன்பேறு முத்தி முருகன்
முதுகா னகத்தெயினர் பண்டோ டயிற்கணை
முனிந்தே தொடுத்த சிறுவன்

சிந்தா குலத்தையடர் கந்தா எனப்பரவு
சித்தர்க் கிரங்கறு முகன்
செயவெற்றி வேள்புநிதன் நளினத்தன் முடிகுற்றி
சேவற் றிருத் துவசமே.

9. உருவாய் எவர்க்குநினை வரிதாய் அனைத்துலகும்
உளதாய் உயிர்க் குயிரதாய்
உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
ஒளியாய் அருட் பொருளதாய்

வருமீச னைக்களப முகனா தரித்திசையை
வலமாய் மதிக்க வருமுன்
வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான்முன்
வைகுமயி லைப்பு கழுமாம்

குருமா மணித்திரள் கொழிக்கும் புனற்கடக்
குன்றுதோ றாடல்பழனம்
குலவுபழ முதிர்சோலை ஆவினன் குடிபரங்
குன்றிடம் திருவேரகம்

திரையாழி முத்தைத் தரங்கக்கை சிந்தித்
தெறித்திடுஞ் செந்தி னகர்வாழ்
திடமுடைய அடியர்தொழு பழையவன் குலவுற்ற
சேவற் றிருத் துவசமே.

10. மகரசல நிதிசுவற உரகபதி முடிபதற
மலைகள்கிடு கிடுகிடெனவே
மகுடகுட வடசிகரி முகடுபட படபடென
மதகரிகள் உயிர்சிதறவே

ககனமுதல் அண்டங்கள் கண்டதுண் டப்படக்
கர்ச்சித் திரைத்தலறியே
காரையா ழிந்நகரர் மாரைப் பிளந்துசிற
கைக்கொட்டி நின்றாடுமாம்

சுகவிமலை அமலைபரை இமயவரை தருகுமரி
துடியிடைய னகையசலையாள்
சுதன் முருகன் மதுரமொழி உழைவநிதை
இபவநிதை துணைவனென திதயநிலையோன்

திருடதிகு டதிதிகுட தகுடதித குடதிகுட
செக்கண செக்கண எனத்
திருநடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
சேவற் றிருத் துவசமே.

11. பூவிலயன் வாசவன் முராரிமுநி வோரமரர்
பூசனைசெய் வோர்மகிழவே
பூதரமும் எழுகடலு<ம் ஆட அமுதூற அநு
போகபதி னாலுலகமும்

தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாளவரு
தானதவ நூல் தழையவே
தாள்வலிய தானபல பேய்கள் அஞ்சச் சிறகு
கொட்டிக் குரற்பயிலுமாம்

காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழைகமு
காடவிகள் பரவுநடனக்
காரணமெய்ஞ் ஞானபரி சீரணவ ராசனக்
கனகமயில் வாகனனடற்

சேவகன் இராசத இலக்கண <உமைக்கொரு
சிகாமணி சரோருகமுகச்
சீதள குமாரகிரு பாகர மனோகரன்
சேவற் றிருத் துவசமே.

பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Sun Dec 18, 2011 6:37 pm

வள்ளிமலை சுவாமிகள் அருளிய வேல் மாறல் சிறப்பு

அருணகிரிநாத சுவாமிகள் அருளிய வேல் வகுப்புப் பாடலை வள்ளிமலை சுவாமிகள் வேல் மாறலாக அமைத்துள்ளார். வேல் வகுப்பு (வேல் மாறல்) வேல் வகுப்பின் அடிகளை மாறி மாறிப் பாடுதல் என்பது நோய் தீர்க்கும் மணி மந்திர ஒளடதங்களில் மந்திரம் போன்றது என வள்ளிமலை சுவாமிகள் கூறியுள்ளார். வேல் தெய்வத்தைப் பாடிப் பரவித் தியானித்துப் பெரியோர் பலர் சித்திகளைப் பெற்றுள்ளனர். சிவமஞ்செழுத்து பஞ்சாக்கரத்தின் ஆற்றலுக்குச் சமமானது. பஞ்சகிருத்திய ஆற்றலும் உடையது. வள்ளியம்மையின் விழிக்கு நிகரானது என அருணகிரிநாதர் போற்றிப் பாடுகிறார். இவ்வேல் மாறல் மனக்கோளாறு, உடற்கோளாறு மற்றும் துன்பங்கள் எல்லாவற்றையும் நீக்கவல்ல அற்புத மந்திரம். சனிக்கிழமை, அமாவாசை, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி முதலிய தினங்களில் இதனைப் பாராயணம் செய்தல் மிகவும் விசேஷமாகும். தனியே இதனைப் பாராயணம் செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட கந்தரலங்காரப் பாடல்களை முதலில் ஓதியபின்னரே, வேல் மாறலைப் பாராயணம் செய்ய ஆரம்பிக்க வேண்டுமென்பது நியமம்.

தரிசனப் பாடல்

ஓலையும் தூதரும் கண்டுதிண் டாடல் ஒழித்தெனக்குக்
காலையும் மாலையும் முன்னிற்கு மேகந்த வேள் மருங்கிற்
சேலையும் கட்டிய சீராவும் கையிற் சிவந்தசெச்சை
மாலையும் சேவற் பதாகையும் தோகையும் வாகையுமே.
- கந்தரலங்காரம்

முருகன் பெருமை - உலகுக்கு உபதேசம்

விழிக்குத் துணை திரு மென்மலர்ப்
பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காஎனும்
நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு
தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலும்செங்
கோடன் மயூரமுமே.
- கந்தரலங்காரம்

வேலின் ஆற்றல்

தேரணி யிட்டு புரம்எரித்
தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிச்
கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த
கடகம் நெளிந்ததுசூர்ப்
பேரணி கெட்டது வேவேந்த்ர
லோகம் பிழைத்ததுவே.
-கந்தரலங்காரம்

பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Sun Dec 18, 2011 6:37 pm

வேல் விருத்தம்

1. மகரமள றிடைபுரள உரககண பணமவுலி
மதியுமிர வியுமலையவே
வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
மகிழ்வுபெறு மறுசிறையவாஞ்

சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு
செநெல்களொடு தரளமிடவே
செகசிரப கிரதிமுத னதிகள்கதி பெறவுததி
திடரடைய நுகரும் வடிவேல்

தகரமிரு கமதமென மணமருவு கடகலு<ழி
தருகவுளு முறுவளெயிறுந்
தழைசெவியு நுதல்விழியு முடையவொரு கடவுள்மகிழ்
தருதுணைவ னமரர் குயிலுங்

குகரமலை யெயினர் குல மடமயிலு மெனவிருவர்
குயமொடமர் புரியுமுருகன்
குமரனறு முகனெதிரும் விருதுநிசி சரரணிகள்
குலையவிடு கொடிய வேலே.

2. வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்
வெற்றிபெறு சுடராழியும்
விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங்கல்லி
வெல்லா வெனக்கருதியே

சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்
சதுர்முகனு நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுட லொருநொடியி லுருவியே
தனியாண்மை கொண்ட நெடுவேல்

கங்காளி சாமுண்டி வாராகி யிந்த்ராணி
கௌமாரி கமலாசனக்
கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவியமலை
கௌரிகா மாட்சிசைவ

சிங்காரி யாமளை பவானிகார்த் திகைகொற்றி
த்ரியம்பகி யளித்தசெல்வச்
சிறுவன று முகன்முருக னிருதர்கள்கு லாந்தகன்
செம்பொற் றிருக்கைவேலே.

3. வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும்
வெகுளுறு பசாசகணமும்
வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில்
வெம்பசி யொழிக்கவந்தே

ஆதார கமடமுங் கணபண வியாளமும்
அடக்கிய தடக்கிரியெலாம்
அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை
யருந்திப் புரந்த வைவேல்

தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை
தனிப்பரங் குன்றேரகந்
தணிகைசெந் தூரிடைக் கழியாவி னன்குடி
தடங்கட லிலங்கையதனிற்

போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப்
புகழுமவ ரவர்நாவினிற்
புந்தியி லமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன்
புங்கவன் செங்கைவேலே.

4. அண்டருல குஞ்சுழல வெண்டிசைக ளுஞ்சுழல
அங்கியு முடன்சுழலவே
அலைகடல்க ளுஞ்சுழல அவுணருவி ருஞ்சுழல
அகிலதல முஞ்சுழலவே

தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய
சந்தமுட னும்பிறைகள்போற்
றந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு
தன்புறம் வருஞ்சமனையான்

கண்டுகுலை யும்பொழுதி லஞ்சலென மென்சரண
கஞ்சமுத வுங்கருணைவேள்
கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவனடல் கொண்ட வேலே.

5. ஆலமா யவுணருக் கமரருக் கமுதமா
யாதவனின் வெம்மையொளிமீ
தரியதவ முநிவருக் கிந்துவிற் றண்ணென்
றமைந்தன் பருக்கு முற்றா

மூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினை
முடித்திந்தி ரர்க்குமெட்டா
முடிவிலா நந்தனல் கும்பத மளித்தெந்த
மூதண்ட மும்புகழும் வேல்

ஏலமாம் யானையின் கோடதிற் சொரிமுத்து
மின்பணைக ளுமிழுமுத்து
மினிவாடை மான்மத மகிலோடு சந்தன
மிலவங்க நறவ மாருந்

தாலமா மரமுதற் பொருள்படைத் திடுமெயினர்
தருவநிதை மகிழந னையன்
தனிநடம் புரிசமர முருகனறு முகன்குகன்
சரவணக் குமரன் வேலே.

6. பந்தாட லிற்கழங் காடலிற் சுடரூசல்
பாடலினொ டாடலி னெலாம்
பழந்தெவ்வர் கட்கந் துணித்திந்தி ரற்கரசு
பாலித்த திறல் புகழ்ந்தே

சந்தாரு நாண்மலர்க் குழலரம் பையர்களுஞ்
சசிமங்கை யனையர் தாமுந்
தன்னையன் பொடுபாடி யாடும்ப்ர தாபமுந்
தலைமையும் பெற்ற வைவேல்

மந்தா கிநித்தரங் கச்சடில ருக்கரிய
மந்த்ரவுப தேச நல்கும்
வரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்கார
வாரணக் கொடியு யர்த்தோன்

கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங்
குவளையுஞ் செங்காந்தளுங்
கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன்
கோலத் திருக்கை வேலே.

7. அண்டங்க ளொருகோடி யாயினுங் குலகிரி
அநந்தமா யினுமேவினா
லடையவுரு விப்புறம் போவதல் லதுதங்க
லறியாது சூரனுடலைக்

கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங்
கடியகொலை புரியு மதுசெங்
கனகா சலத்தைக் கடந்துமுனை யிட்டுக்
கடக்கின்ற துங்கநெடுவேல்

தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட
தானவாந் தகன் மாயவன்
தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத்
தமனியச் சுடிகையின் மேல்

வண்டொன்று கமலத்து மங்கையுங் கடலாடை
மங்கையும் பதம்வருடவே
மதுமலர்க் கண்டுயில் முகுந்தன்மரு கன்குகன்
வாகைத் திருக்கை வேலே.

8. மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய்
வலியதா னவர்மார் பிடம்
வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு
மகவான் றனைச் சிறைவிடுத்

தோமஇரு டித்தலைவ ராசிபெற் றுயர்வானி
லும்பர்சொற் றுதிபெற்றுநா
வுடையகீ ரன்றனது பாடல்பெற் றுலகுதனி
லொப்பில்புகழ் பெற்றவைவேல்

சோமகல சப்ரபா லங்கார தரஜடா
சூடிகா லாந்தகாலர்
துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல
துரககே சரமாம்பரச்

சேமவட வாம்புயப் பரணசங் காபரண
திகம்பர த்ரியம்பகமகா
தேவநந் தனகஜா நநசகோ தரகுகன்
செம்பொற் றிருக்கை வேலே.

9. தேடுதற் கரிதான நவமணி யழுத்தியிடு
செங்கரனை யமுதம் வாய்கொள்
செயமளித் தருளெனக் கெனவுவப் பொடுவந்து
சேவடி பிடித்த தெனவும்

நீடுமைக் கடல்சுட்ட தற்கடைந் தெழுகடலு
நீயெமைக் காக்க வெனவும்
நிபுட முடி நெடியகிரி யெந்தமைக் காவெனவு
நிகழ்கின்ற துங்க நெடுவேல்

ஆடுமைக் கணபணக் கதிர்முடிப் புடையெயிற்
றடலெரிக் கொடியவுக்ர
அழல்விழிப் படுகொலைக் கடையகட் செவியினுக்
கரசினைத் தனியெடுத்தே

சாடுமைப் புயலெனப் பசுநிறச் சிகரியிற்
றாய்மிதித் துடனடிக்குஞ்
சமரமயில் வாகன னமரர்தொழு நாயகன்
சண்முகன் றன்கை வேலே.

10. வலாரியல லாகுலமி லாதகல வேகரிய
மாலறியு நாலு மறைநூல்
வலானலை விலானசி விலான்மலை விலானிவர்
மநோலய வுலாச முறவே

யுலாவரு கலோலமக ராலய சலங்களு
முலோகநிலை நீர்நிலையிலா
வொலாவொலி நிசாசர ருலோகம தெலாமழ
<லுலாவிய நிலாவு கொலைவேல்

சிலாவட கலாவிநொத வாசிலிமு காவிலொச
னாசின சிலாத ணிவிலா
சிலாமல ரெலாமதிய மோதிமதி சேலொழிய
சேவக சராப முகிலாம்

விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலை
மேவிய விலாச வகலன்
விலாழியி னிலாழியகல் வானிலன லாரவிடு
வேழமிளை ஞன்கை வேலே.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Dec 18, 2011 6:38 pm

சூப்பருங்க சூப்பருங்க அக்கா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கந்தரந்தாதி Scaled.php?server=706&filename=purple11
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 18, 2011 6:39 pm

சுந்தரந்தாதி பற்றி கொஞ்சம் விளக்கவுரை கொடுத்க்டு விட்டு பதிவிட்டால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன் அன்பு மலர் அன்பு மலர்


திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்தத் திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீ தொத்ததே.
எப்படி எல்லாம் தமிழ் விளையாடுகிறது அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கந்தரந்தாதி Ila
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Sun Dec 18, 2011 6:45 pm

ந.கார்த்தி wrote: சூப்பருங்க சூப்பருங்க அக்கா

நன்றி தம்பி நன்றி

இளைய தலைமுறையினரான நீங்கள் கந்தர் அந்தாதி படித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி தம்பி அன்பு மலர்

பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Sun Dec 18, 2011 6:47 pm

இளமாறன் wrote:சுந்தரந்தாதி பற்றி கொஞ்சம் விளக்கவுரை கொடுத்க்டு விட்டு பதிவிட்டால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன் அன்பு மலர் அன்பு மலர்


திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்தத் திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீ தொத்ததே.
எப்படி எல்லாம் தமிழ் விளையாடுகிறது அன்பு மலர்

அண்ணா , இனிமேல்தான் விளக்கவுரை தயாரிக்கவேண்டும் புன்னகை

தமிழின் இனிமை சொல்லில் அடங்காதது அதனால்தானே இவ்வாறு பாடி வைத்தார்கள்

" தமிழுக்கும் அமுதென்று பேர் " என்று

நன்றி அண்ணா அன்பு மலர்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 18, 2011 6:50 pm

நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கந்தரந்தாதி Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக