Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது
+4
kitcha
உமா
ஹர்ஷித்
இளமாறன்
8 posters
Page 1 of 1
பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது
சனிக்கிழமை, 17, டிசம்பர் 2011 (11:46 IST)
பேஸ்புக் பழக்கம் விபரீதமானது:
தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது
திருச்சி தொழில் அதிபருக்கு பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண் ஒருவர், அவரை பணம் கேட்டு மிரட்டினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண்ணை கைது செய்தனர்.
கம்ப்யூட்டர் வந்த பிறகு உலகம் சுருங்கி விட்டது. அதுவும் இன்டர் நெட் இணைப்பு இருந்தால் உலகத்தை உள்ளங்கைக்கே கொண்டு வந்து விடலாம். இளைய தலைமுறையினர் எந்த தகவலை பெற வேண்டும் என்றாலும், புதிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இன்டர் நெட்டை தான் பயன்படுத்துகிறார்கள்.
பல சமூக வலைதளங்களை இப்போது எல்லோரும் பயன்படுத்தத்தொடங்கி உள்ளனர். இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் தவறான பாதையிலும் சிலர் செல்ல வழிவகை ஏற்பட்டு விடுகிறது. சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ஒரு பெண் தொடர்புகளை ஏற்படுத்தி பலரை ஏமாற்றி பணம் பறித்த தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்துவருகிறார். இணையதள பிரியரான முருகன், பேஸ்புக்கில் தன்னுடைய முழு விபரங்களையும், தொழில் பற்றியும் பதிவு செய்துள்ளார். மேலும் பேஸ்புக்கில் இவருக்கு ஏராளமான டாக்டர்கள் மற்றும் தொழில்அதிபர்கள் நண்பர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அபிநயா என்கிற அனுஷ்கா (வயது 23) பேஸ்புக்கில் முருகனை பற்றிய தகவல்களை அறிந்து இ.மெயில் மற்றும் செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும், பேஸ்புக்கில் நண்பராக ஆட் செய்து அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அப்போது அபிநயா தன்னை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை கல்லூரியில் படித்துவருவதாகவும், விடுதியிலே தங்கி கல்லூரிக்கு சென்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது தந்தை கரூர் பகுதியை சேர்ந்த பிரபல அரசியல்வாதி எனவும் தனக்கு ரூ.350 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் கூறியுள்ளார்.
முதலில் அபிநயா, தன்னை ஒரு நபர் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள இருப்பதாகவும் கூறி உள்ளார். இதனால் முருகன், அபிநயாவிற்கு அறிவுரைகள் கூறி அவரை சமாதானப்படுத்தினார். அதனைதொடர்ந்து முருகனும், அபிநயாவும் பேஸ்புக்கில் சாட் செய்தும், அவ்வப்போது செல்போனிலும் சகஜமாக பேசினர். இவர்களது பழக்கம் நாளுக்கு நாள் வளர்ந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் நமது பழக்கத்தை வெளி உலகிற்கு எடுத்துக்கூறி அசிங்கப்படுத்தி விடுவதாகவும், இல்லையென்றால் சொத்தில் பாதியை கொடுத்துவிட வேண்டும் என முருகனை, அபிநயா மிரட்டத்தொடங்கினார்.
பேஸ்புக்கில் சாதாரணமாக பழகியது இப்படி வில்லத்தனமாகி விட்டதே என பதறி போன முருகன் அவரிடம் பின்பு தொடர்பை துண்டித்தார். இதற்கிடையில் அபிநயா, முருகனின் தொழில்நிறுவனங்களுக்கு நேரில் சென்று முருகனை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், தனக்கு மரியாதை தர வேண்டும் என அங்கு பணியில் இருப்பவர்களை மிரட்டி சென்று உள்ளார். மேலும் முருகனையும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தொடர்ந்து போனில் வற்புறுத்தினார்.
இதனால் பயந்துபோன முருகன் இது குறித்து கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பேஸ்புக்கில் முருகனிடம் பழக்கத்தை ஏற்படுத்திய அபிநயா, அவரை மட்டுமல்லாமல் டாக்டர்கள், தொழில் அதிபர்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்ததுள்ளது. அபிநயா தனது பேஸ்புக் அக்கவுண்டில் தான் பெரிய கோடீசுவரி என்றும் தனக்கு ரூ.350 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பலர் இவரிடம் ஆசையுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கடைசியில் பணத்தை இழந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அபிநயாவின் முகவரி போலியானதும், அவர் மருத்துவகல்லூரி மாணவி இல்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அபிநயாவை பிடிக்க போலீசார் வியூகம் அமைத்தனர். அவர் எந்த ஊரில் தங்கி இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் முருகன் மற்றும் அவரது நண்பர்களை வைத்து அபிநயாவை செல்போனில் தொடர்பு கொண்டு நைசாக பேசி திருச்சிக்கு வரவழைத்தனர்.
அப்போது அபிநயா திருச்சி வந்தார். அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். உடனடியாக அவரை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1ல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு இளங்கோவன் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் அபிநயா குறித்த விபரங்களை சேகரித்தும், பேஸ்புக் மூலம் வேறுயாரிடமும் இதுபோன்று பணம் கேட்டு மிரட்டி உள்ளாரா? எனவும் விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அபிநயாவை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1ல் ஆஜர்படுத்துவதற்காக திருச்சி கோர்ட்டிற்கு நேற்று மதியம் அழைத்து வந்தனர். அப்போது கோர்ட் வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே அபிநயா கோர்ட்டுக்குள் வர மறுத்து அழுது புரண்டு அடம்பிடித்தார்.
அப்போது அபிநயா நிருபர்களிடம் கூறியதாவது: எனது தந்தை கரூரில் பிரபல அரசியல்வாதி. எனது அம்மா தமிழ்செல்வி இறந்துவிட்டார். தற்போது நான் பிரச்சினையில் சிக்கி உள்ளதால் எனது தந்தை என்னை அவரது மகள் இல்லை என கூறுகிறார். இணையதளம் மூலம் முருகன் எனக்கு பழக்கமானதில் 2 பேரும் நெருங்கி பழகி காதலித்தோம். நானும், அவரும் காதலித்து பழகியதற்கு செல்போன் பேச்சும், என்னுடைய இ மெயில் உள்ள கடிதங்களும் ஆதாராங்களாக உள்ளன. அவரையும் போலீசார் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கோர்ட்டு வளாகத்தில் கைதான அபிநயா அழுது புரண்டு அடம்பிடித்தால் வக்கீல்கள் ஏராளமானவர்கள் கூடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் அவரை அழைத்து சென்று மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். நக்கீரன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது
எத்தனை விழிப்புணர்வு வந்தாலும் சிலர் அதிலிருந்து வெளி வருவதே இல்லை.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது
விபரீத ஆசைகள் வேண்டாத விளைவுகளையே ஏற்படுத்தும்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது
திருந்தமாட்டாங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது
இதுல தப்பு யார் மேல அந்த ஆண் மேலே தானே.பார்த்தே இராத ஒரு பெண்ணுக்கு கடிதம் எழுதியதும்,சாட் செய்ததும் மெயில் அனுப்பியதும் யாரோட தவறு.ஆண்கள் இந்த மாதிரி ஜொள்ளு விடும் வரை இது போல பெண்களும் ஏமாற்றதான் செய்வார்கள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» தன் மகனையே கடத்தி பணம் கேட்டு மிரட்டிய தந்தை கைது
» மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது
» குளச்சல் அருகே முகமூடி அணிந்து கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி: வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய 2 வாலிபர்கள் கைது
» ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் கைது
» புளியந்தோப்பு கடைகளில் கத்தி முனையில் மாமூல் கேட்டு மிரட்டிய 4 ரவுடிகள் கைது
» மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது
» குளச்சல் அருகே முகமூடி அணிந்து கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி: வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய 2 வாலிபர்கள் கைது
» ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் கைது
» புளியந்தோப்பு கடைகளில் கத்தி முனையில் மாமூல் கேட்டு மிரட்டிய 4 ரவுடிகள் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|