ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிஜிட்டல் களவாணிகள்!

+4
நேரு
வின்சீலன்
கோவிந்தராஜ்
ரேவதி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டிஜிட்டல் களவாணிகள்! Empty டிஜிட்டல் களவாணிகள்!

Post by ரேவதி Wed Dec 14, 2011 11:08 am


கசிய கள்வர்கள், பிளேடு கத்தியில்லாமல் திருட்டு, தடுமாறும் காவற்துறை அங்கங்கு சிக்கும் ஏ.டி.எம்.திருடர்கள்..

இப்போ தெரிகிறதா இவர்கள் யாரென்று?

பேருந்து, தொடர்வண்டி கூட்ட நெரிசலிலோ அல்ல பொது இடங்களில் அலைமோதும்
கூட்ட நெரிசலிலோ பர்ஸில் பணம் வைத்தால் 'பிக்பாக்கெட்' அடித்துவிடுவார்கள்
என பர்ஸில் நூறோ, ஐநூறோ வைத்துக்கொண்டு பணம் தேவைப்படும் பொழுது
ஏ.டி.எம்.பணப்பரிவர்த்தனை சேவை மையங்களை பயன்படுத்துபவர்களே அதிகம்.
படித்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஏ.டி.எம் சேவையை
பயன்படுத்துகின்றனர் என்றால் அதை மறுக்கவே இயலாது.

காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்கள் மாற அச்சுழற்சியில் நாமும்
பயணப்படுவது தவறல்ல. ஆனால் ஒரு சேவை தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த
நாம், அதை பாதுக்காப்பான முறையில் எப்படி பயன்படுத்துவது என்ற அறிய
முற்படுவதில்லை. இதுவே டிஜிட்டல் களவாணிகளுக்கு சாதகமாக மாறி நமக்கு
பாதகமாக ஆகிவிடுகிறது. இது போன்று 'ஏ.டி.எம்' சேவை மட்டுமல்லாது அனைத்து
பணப்பரிவர்த்தனை தொழில்நுட்ப சேவைகளை எப்படி பாதுக்காப்பாக பயன்படுத்த
வேண்டும் என்று தெரிந்து கொண்டாலே இது போன்ற டிஜிட்டல் களவாணிகளிடம் நாம்
நம் பணத்தை காத்துக் கொள்ள முடியும்.

டிஜிட்டல் களவாணிகள்! Digitalkalavaniஏ.டி.எம்
சேவை இயந்திரத்தை உடைத்து பணம் திருடுவது, ஆளில்லாத ஏ.டி.எம்.களில் தங்கள்
கைவரிசையை காட்டுவது, இரவு நேரம் பணம் எடுப்பவர்களை நோட்டமிட்டு அவர்களை
மிரட்டி பணம் பறிப்பது, இந்த திருட்டு முறை எல்லாம் மலையேறிவிட்டது.
இப்போது 'டிஜிட்டல் களவாணிகள்'பயன்படுத்தும் டிஜிட்டல் திருட்டு முறைகள்
லெபானிஸ் லூப் ( LEBANESE LOOP ),கார்ட் ஸ்கிம்மிங் ( CARD SKIMMING ),
பிசிங் ( PHISHING ) போன்றவை தான்.

'லெபானிஸ் லூப்' என்ற முறையில் நீங்கள் ஏ.டி.எம் இயந்திரத்தில்
'ஏ.டி.எம்'அட்டையை சொருகும் இடத்தில் ஒரு கருவியை வைத்து விடுவார்கள்,
வழக்கம் போல் நீங்கள் பணமெடுக்க 'ரகசிய குறியீட்டு எண்ணை (பாஸ்வோர்ட்)
அடித்து இவ்வளவு பணம் தேவை என்றால் பணமும் வராது,அட்டையும் வராது. உடனே
படபடப்பாகி என்ன செய்யலாம் என்று விழித்து கொண்டுள்ள தருணத்தில் முன்பின்
அடையாளம் தெரியாதவன் உதவி செய்வதை போல் வந்து பேச்சுக்கொடுத்து உங்கள்
'ரகசிய குறியீட்டு எண்ணை'அறிந்துக்கொண்டு நீங்கள் மன குழப்பத்துடன்
'ஏ.டி.எம்'மையத்திலிருந்து கிளம்பியதும்,அந்தக் கருவியை எடுத்துவிட்டு
மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுவான் உங்களுக்கு உதவ வந்த டிஜிட்டல்
களவாணி.

'கார்ட் ஸ்கிம்மிங்'முறையில் ஒரு போலி 'ஏ.டி.எம்'இயந்திரத்தை
நிறுவிவிட்டு அதன் மூலம் உங்கள் கணக்கில் உள்ள பணம் எவ்வளவு,ரகசிய
குறியீட்டு எண்,ஏ.டி.எம்.அட்டையின் எண் என அனைத்தையும் தெரிந்து
வைத்துக்கொண்ட 'இணைய வழி (ஆன்லைன்) பணப்பரிவர்த்தனை ' வழியிலோ அல்லது போலி
ஏ.டி.எம் அட்டையை தயாரித்து அதன் வாயிலாகவோ சுருட்டி விடுவார்கள் அதிநவீன
கள்வர்கள்.

அடுத்து குறிப்பிடும் முறை 'டிஜிட்டல் களவாணிகளின்'புதிய முறை
மட்டுமல்லாது இது இந்த திருடர்களின் 'அப்டேடெட்' திருட்டு முறை. இது
உட்கார்ந்த இடத்திலிருந்தே மின்னஞ்சல் மூலம் உங்கள் வங்கி கணக்கின் ரகசிய
விவரங்களை உங்களிடமிருந்தே உருவும் எளிய முறை.எப்படி என்கிறீர்களா ?
வங்கியிலிருந்து மின்னஞ்சல் அனுப்புவது போல் இந்த திருடர்கள் மின்னஞ்சலில்
உங்கள் வங்கி கணக்கின் விவரங்களை கேட்பார்கள், நீங்கள் அதை நம்பி
விவரங்களைக் கொடுத்தால் அவ்வளவுதான். எளிதாக வெற்றி பெறும் அவர்கள் களவு
வேலை.

அடுத்தது திருட்டு முறையெல்லாம் இல்லை 'ஆன்லைன் பேங்கிங்' என்ற
பணப்பரிவர்த்தனை சேவை வழியாகவே ஆட்டைய போட்டுவிடுவார்கள். அதுவும் உங்கள்
தவறாலே நிகழக்கூடியது. இந்த சேவையை 'பிரௌசிங் சென்டரில்' நீங்கள்
பயன்படுத்தினால் 'கீ லாக்கர்' என்ற மென்பொருள் மூலம் அட்டை எண், ரகசிய
குறியீட்டு எண்களை எடுத்து விடுவார்கள் இல்லையெனில் ரகசிய குறியீட்டு
எண்களை நினைவில் வைத்துக்கொள்ள அந்த இணைய உருளையில் (இன்டர்நெட் பிரௌசர்)
அமைப்புகளை உங்களுக்கு தெரியாதவாறு மாற்றி வைத்திருப்பார்கள்.

இப்போ புரிகிறதா நீங்கள் செய்யும் தவறு என்னவென்று ?

இந்த டிஜிட்டல் களவாணிகளிடம் இருந்து தப்புவது தான் எப்படி? இதோ உங்களுக்காக சில ஆலோசனைகள் :

பெரும்பாலும் இரவு நேரங்களில் ஆளில்லாத அநாந்தர ஏ.டி.எம்-மை
பயன்படுத்துவதை தவிருங்கள்.பெரும்பாலும் உங்கள் ஏ.டி.எம் அட்டையை
மற்றவர்களிடம் கொடுத்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதை தவிர்க்க பாருங்கள்.

விளையாட்டாக நண்பர்களிடமோ அல்லது அலைபேசியிலோ ரகசிய குறியீட்டு எண்களை
பொது இடங்களில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுடன் பயணிப்பவர்கள் / உங்கள்
அருகில் இருப்பவர்கள் கூட டிஜிட்டல் களவாணிகளாக இருக்கக்கூடும்.

ஏ.டி.எம்.இயந்திரத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு அட்டை மாட்டிக்
கொண்டால் விட்டுவிட்டு வேற அட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று
கிளம்பிவிடாதீர்கள். அங்குள்ள ஏ.டி.எம் காவலாளியை அணுகி உடனுக்குடன்
வங்கிக்கு இப்பிரச்னையை தெரிவித்து அந்த அட்டையை முடக்கச் சொல்லுங்கள்.
இரவு நேரங்களில் இப்படி ஏதேனும் பிரச்னை ஏற்படுமாயின் வங்கியின் '24 மணிநேர
சேவை தொலைபேசி எண்ணுக்கு (டோல் ப்ரீ நம்பர்)'தொடர்பு கொள்ளுங்கள். இந்த
டோல் ப்ரீ தொலைபேசி எண் ஏ.டி.எம். இயந்திரத்திலேயே ஒட்டப்பட்டிருக்கும்.

நீங்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொழுது யாராவது உங்களை பின்புறம்
வரிசையில் நிற்பதுபோல் நோட்டமிட்டால் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.
உங்கள் ரகசிய குறியீட்டு எண்ணை ஏ.டி.எம்.யில் பதிவு செய்யும்போது முகம்
தெரியாத நபர்கள் அருகில் இருப்பதை கவனத்துடன் தவிர்த்து விடுங்கள்.

அதிகமாக 'ஏ.டி.எம்'மை பயன்படுத்துபவர்கள் வாரம் ஒருமுறை ரகசிய
குறியீட்டு எண்ணை மாற்றிக் கொண்டே இருங்கள். இதனால் உங்கள் அட்டை திருடு
போனால் கூட பாதுகாக்கும் வழியுண்டு. உங்கள் ஏ.டி.எம். கார்டை
பயன்படுத்தினால் உங்கள் அலைபேசிக்கு(மொபைல்) குறுஞ்செய்தி வரும்படி உள்ள
சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ரகிசய குறியீட்டு எண்ணை அமைக்கையில் வங்கி அறிவுறைத்தது போல்
'நம்பர்ஸ்,சிம்பல்ஸ்,லெட்டர்ஸ்' எல்லாம் கலந்து அமையுமாறு
மாற்றிக்கொள்ளுங்கள். இது 'இணைய வங்கிசேவை( ஆன்லைன் பேங்கிங்)'
உபயோகிப்பவர்களுக்கு மிக மிக அவசியம் என்பதை உணருங்கள்.

மேலும் இது போன்று வங்கி சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்களிலும்
எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். எந்தவொரு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த
தெரிந்தால் மட்டும் போதாது அதையும் அதன் சூட்சமைங்களையும் அறிந்தால்
மட்டுமே இது போன்ற டிஜிட்டல் களவாணிகளிடம் இருந்து தப்ப முடியும். நாம்
எதார்த்தமாக செய்யும் தவறே அவர்களுக்கு வரம் ஆகிவிடுக்கூடும்.

ஜாக்கிரதையாக இருந்தால்.. உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்.. உழைத்த பணம் உங்களிடத்தில்.!


நன்றி - விகடன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

டிஜிட்டல் களவாணிகள்! Empty Re: டிஜிட்டல் களவாணிகள்!

Post by கோவிந்தராஜ் Wed Dec 14, 2011 11:30 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நன்றி
நல்ல ட்ரைனிங் ! ஜாலி


டிஜிட்டல் களவாணிகள்! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! டிஜிட்டல் களவாணிகள்! 599303
டிஜிட்டல் களவாணிகள்! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! டிஜிட்டல் களவாணிகள்! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

டிஜிட்டல் களவாணிகள்! Empty Re: டிஜிட்டல் களவாணிகள்!

Post by வின்சீலன் Wed Dec 14, 2011 2:41 pm

ரேவதி தங்கச்சி இது மெய்யாலுமே ஒரு நல்ல விஷயம், இந்த திருட்டை தவிர்க்க நான் எப்போதுமே செக்யூரிட்டி இருக்கும் ஏ‌டி‌எம் மட்டுமே செல்வேன், எனக்கு தெரிந்து எச்‌டி‌எஃப்‌சி, ஐ‌சி‌ஐ‌சி‌ஐ ஏ‌டி‌எம்களில் 24/7 செக்யூரிட்டி இருக்கிறார்கள்.

ஒரு முறை டி‌எம்‌பி ஏ‌டி‌எம் போயிருந்தேன், அங்கு செக்யூரிட்டி கிடயாது, நான் பணம் எடுக்கும் போதே வேறு ஒருவன் உள்ளேயே வந்து நின்றான், என் இங்கேயே நிற்கிறாய் என்றால் வெளியில் மிகவும் வெயிலாக உள்ளது எனவே இங்கே நிற்கிறேன் என்றான். தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகலயும் கலந்து தீட்டிய பிறகு அவன் வெளியே சென்றான்.
எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் அதிர்ச்சி


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

டிஜிட்டல் களவாணிகள்! Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

டிஜிட்டல் களவாணிகள்! Empty Re: டிஜிட்டல் களவாணிகள்!

Post by நேரு Wed Dec 14, 2011 4:01 pm

பயனுள்ள தகவல் அருமையிருக்கு


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

டிஜிட்டல் களவாணிகள்! Empty Re: டிஜிட்டல் களவாணிகள்!

Post by ரேவதி Wed Dec 14, 2011 4:28 pm

வின்சீலன் wrote:ரேவதி தங்கச்சி இது மெய்யாலுமே ஒரு நல்ல விஷயம், இந்த திருட்டை தவிர்க்க நான் எப்போதுமே செக்யூரிட்டி இருக்கும் ஏ‌டி‌எம் மட்டுமே செல்வேன், எனக்கு தெரிந்து எச்‌டி‌எஃப்‌சி, ஐ‌சி‌ஐ‌சி‌ஐ ஏ‌டி‌எம்களில் 24/7 செக்யூரிட்டி இருக்கிறார்கள்.

ஒரு முறை டி‌எம்‌பி ஏ‌டி‌எம் போயிருந்தேன், அங்கு செக்யூரிட்டி கிடயாது, நான் பணம் எடுக்கும் போதே வேறு ஒருவன் உள்ளேயே வந்து நின்றான், என் இங்கேயே நிற்கிறாய் என்றால் வெளியில் மிகவும் வெயிலாக உள்ளது எனவே இங்கே நிற்கிறேன் என்றான். தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகலயும் கலந்து தீட்டிய பிறகு அவன் வெளியே சென்றான்.
எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் அதிர்ச்சி

கேர்ஃபுள்ள இருக்கணும் அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

டிஜிட்டல் களவாணிகள்! Empty Re: டிஜிட்டல் களவாணிகள்!

Post by ayyamperumal Wed Dec 14, 2011 4:34 pm

இந்த கட்டுரையினை புதிய தலைமுறையில் படித்தேன். விகடனிலுமா
வந்திருக்கிறது.
இணையம் என்பது உலகத்தை திறந்த வீடாக மாற்றியிருக்கிறது. ( புதிய தலைமுறை )
பதிவிற்கு நன்றி !


டிஜிட்டல் களவாணிகள்! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

டிஜிட்டல் களவாணிகள்! Empty Re: டிஜிட்டல் களவாணிகள்!

Post by ஜாஹீதாபானு Wed Dec 14, 2011 5:01 pm

உங்கள் ஏ.டி.எம். கார்டை
பயன்படுத்தினால் உங்கள் அலைபேசிக்கு(மொபைல்) குறுஞ்செய்தி வரும்படி உள்ள
சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எனக்கு வந்துவிடும் ரே நன்றி பகிர்வுக்கு சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டிஜிட்டல் களவாணிகள்! Empty Re: டிஜிட்டல் களவாணிகள்!

Post by ரேவதி Wed Dec 14, 2011 5:04 pm

ஜாஹீதாபானு wrote:
உங்கள் ஏ.டி.எம். கார்டை
பயன்படுத்தினால் உங்கள் அலைபேசிக்கு(மொபைல்) குறுஞ்செய்தி வரும்படி உள்ள
சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எனக்கு வந்துவிடும் ரே நன்றி பகிர்வுக்கு சூப்பருங்க சூப்பருங்க

நீங்க சொல்றதை எப்படி நான் நம்புறது அதை எனக்கும் ஃபார்வார்டு பண்ணுங்க கண்ணடி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

டிஜிட்டல் களவாணிகள்! Empty Re: டிஜிட்டல் களவாணிகள்!

Post by ஜாஹீதாபானு Wed Dec 14, 2011 5:55 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
உங்கள் ஏ.டி.எம். கார்டை
பயன்படுத்தினால் உங்கள் அலைபேசிக்கு(மொபைல்) குறுஞ்செய்தி வரும்படி உள்ள
சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எனக்கு வந்துவிடும் ரே நன்றி பகிர்வுக்கு சூப்பருங்க சூப்பருங்க

நீங்க சொல்றதை எப்படி நான் நம்புறது அதை எனக்கும் ஃபார்வார்டு பண்ணுங்க கண்ணடி
நான் பணம் எடுக்கும் போது வரும் அப்போ பண்ணுறேன் ரிலாக்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டிஜிட்டல் களவாணிகள்! Empty Re: டிஜிட்டல் களவாணிகள்!

Post by ரேவதி Wed Dec 14, 2011 5:56 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
உங்கள் ஏ.டி.எம். கார்டை
பயன்படுத்தினால் உங்கள் அலைபேசிக்கு(மொபைல்) குறுஞ்செய்தி வரும்படி உள்ள
சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எனக்கு வந்துவிடும் ரே நன்றி பகிர்வுக்கு சூப்பருங்க சூப்பருங்க

நீங்க சொல்றதை எப்படி நான் நம்புறது அதை எனக்கும் ஃபார்வார்டு பண்ணுங்க கண்ணடி
நான் பணம் எடுக்கும் போது வரும் அப்போ பண்ணுறேன் ரிலாக்ஸ்

அப்படியே கார்டையும், பாஸ் வோர்டையும் கௌரியர் அனுபிடுங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

டிஜிட்டல் களவாணிகள்! Empty Re: டிஜிட்டல் களவாணிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum