Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு...
2 posters
Page 1 of 1
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு...
ஒரு நாள் பூமியில் உள்ளவர்கள் கடவுளிடம் சென்று, உலகிலேயே இனிமையான, கவர்ச்சியான பெண் யாரென்று கேட்டார்கள். பதில் கிடைத்ததும் புதிய கேள்வியோடு திரும்பினார்கள். "யார் அந்த அர்ச்சனா?'
அர்ச்சனா யாரென்று எனக்கு தெரியும். ஏனென்றால், அர்ச்சனாவின் அப்பா நான்தான்.
நேற்று என்னுடன் பணிபுரியும் அனீஸ் ஃபாத்திமா தன் மகனுக்கு வேலை கிடைத்த செய்தியோ, இளம் பெண் ஒருத்தி தனக்கு வந்த ஆபாச எஸ்.எம்.எஸ்.களால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாள் என்ற பத்திரிகைச் செய்தியையும் மதிய உணவின்போது பகிர்ந்து கொண்டாள். எனவே நான் தகப்பனுக்கே உரிய கற்பனைக் கவலையோடு அர்ச்சனாவின் செல்லை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். அவள் கோயிலுக்குப் போயிருக்கிறாள்.
இன்பாக்ஸ், சென்ட் ஐயிட்டம் பகுதிகளைப் பரிசோதித்தபோது இரண்டு முடிவுகள் கிடைத்தன. ஒன்று, புத்திசாலிப் பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுக்கு பெண்களின் பெயரைச் சூட்டி விடக்கூடும். இரண்டு, ஆண்களிடமிருந்து வரும் தகவல்கள் படிக்கப்பட்டவுடன் அழிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.
டீன் ஏஜ் மகளின் பிடிவாதத்திற்காக செல் வாங்கிக் கொடுத்து, செல் அவள் கையில் இருப்பதைப் பார்த்தால் சந்தோஷமாய் இருக்கிறது. ஆனால், அதை அவள் உபயோகிப்பதைப் பார்த்தால் பயமாய் இருக்கிறது.
இந்த நேரத்தில் தான், பூமியில் உள்ளவர்கள் புதிய கேள்வியோடு திரும்பும் குருஞ்செய்தி வந்தது. மணி காலை 7.14 காலை வணக்கத்தோடு அனுப்பியது கிரண். இதிலிருந்து ஒருவனின் குமாதிசயங்களை முடிவு செய்ய முடிந்தால் கிரண் என்பவன் எப்படிப்பட்டவனாய் இருப்பான்? அழகு என்கிறான்; கவர்ச்சி என்கிறான்... ஆபத்தானவனாய் இருக்க வேண்டும். ஒல்லியாய் ஒருவன் வருவானே, அவனாக இருக்குமோ...? இவனை நண்பனாகக் கொண்ட என் பெண் எப்படி பத்தாவது பாஸ் செய்யப் போகிறாள்?
பீப்... பீப்... அடுத்த தகவல்.
7.17 வெற்றி இரயிலைப் போன்றது. உழைப்பு, திறமை, முயற்சி போன்ற பெட்டிகளைக் கொண்டது. அனைத்தையும் இழுப்பது தன்னம்பிக்கை இஞ்சின் கா.வ.
இது கி÷ஷாரின் சொந்தச் சரக்குதானா? இந்தக் காலத்தில் எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்காகவே நட்டு கொள்ளும் அளவிற்கு நட்பு மலிவாகிவிட்டது. செல் இருந்தால்தான் நட்பு வட்டாரத்திலேயே சேர்ப்பார்கள் போல. இவர்களின் உலகிலிருந்து செல்லும், எஸ்.எம்.எஸ். வசதிகளும் பிடுங்கப்பட்டால் திணறி விடுவார்கள். இந்தப் பையன்களை நான் பார்த்ததுகூட கிடையாது. ஆனால் அவர்களோ அரூபவடிவில் சர்வசாதாரணமாக என் வீட்டில் புழங்கி, தன் இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். எனது இளம் வயதில், என் கிராமத்து கூரைப் பள்ளிக்கூடத்தில் கேர்ள்ஸ் பாய்ஸ்களிடமும், பாய்ஸ், கேர்ள்ஸ்களிடமும் பேசக்கூடாது என்பது...
விட்டுக் கொடுக்கறதுல இல்ல ஃப்ரெண்ட்ஷிப். கடைசிவரைக்கும் விடாம இருக்கறதுதான் ஃப்ரெண்ட்ஷிப். ஸ்கூலில் சந்திப்போம். கா.வ.-ரியாஸ்.
அறிவிக்கப்படாத சட்டமாகவே இருந்தது. ஆனால் எங்களுக்கோ எங்கள் வகுப்புப் பெண்களிடம் பேச ஆசையாக இருக்கும். கூச்சமும், பயமும் தடுக்கும். பையன்கள்தான் என்றில்லை. வகுப்பில் தலைவன், தலைவி, ஊடல், காதல், பசலை போன்ற வார்த்தைகளைச் சொல்லும்போது குரல் தடுமாறி, கூச்சத்தால் தின்னப்பட ஆசிரியர்களும் உண்டு. அப்போதோ, அந்த வகுப்பு முடிகிறபோதோ கேர்ள்ஸ் பக்கம் திரும்பவே வெட்கமாக இருக்கும். அதுகளும் தலை குனிந்து சிரித்துவிட்டு, டாலர் செயினை மென்றவாறு ஓடிவிடும். இந்தச் சூழ்நிலையில் நான் எப்படி கயல்விழியிடம் பேச முடியும்? கயல்விழியும், நானும்...
7.21 இந்த சிங்கம் இருக்கே, அது சும்மாவே இருக்காது. இப்பக்கூடப் பாரு, ஒரு சுண்டெலிக்கு காலை வணக்கம் சொல்லுது!
இது ராதாவிடமிருந்து. அப்பாடா, இவளுக்கு ஒரு பெண் தோழியாவது இருக்கிறாளே! ஆமாம், அது உண்மையிலேயே பெண் பெயர்தானா?
கயல்விழியும், நானும் சின்ன வயதில் பாண்டி, பம்பரம், கோலி, எறிபந்து, கபடி, கில்லி எல்லாம் விளையாடினோம். நான் பூசாரியாய், அவள் பக்தையாய்; மாணவனாய், ஆசிரியையாய்; மாணவனாய், ஆசிரியையாய்; நோயாளியாய், டாக்டராய்... கிராமத்துத் தெருக்களில் புழுதி பறக்க ஓடி மாங்காய் தின்று, கடலை தின்று, சண்டை போட்டு, பழம் போட்டு... இப்படி நண்பர்களாகத் திரிந்த நாங்கள் திடீரென்று ஒரு நாள் கேர்ள்ஸ் பாய்ஸ் பிரிவுகளில் சேர்ந்து விட்டோம்.
பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வுக்கு பத்து நாள் இருந்தபோது கயல்விழியின் வீட்டு வேலையாள் என்னை அணுகி கயல் இங்கிலீஷ் நோட்டு வாங்கிட்டு வரச் சொல்லிச்சு... என்றான். எனது கையெழுத்து அழகாக இருக்கும். நோட்டை சந்தோஷமாகக் கொடுத்தேன்.
7.24 எனக்கும் சேர்த்து லஞ்ச் கொண்டு வா-ஷிவானி
வழக்கம் போல, பரீட்சைக்கு இரண்டு நாள் முன்புதான் எனக்கு நோட்ஸின் நினைவு வந்தது. தவிப்புடன் கயிலுக்காகக் காத்திருந்தால் அவள் வரவில்லை. மதிய உணவு இடைவேளையின்போது மகளிர் குழுவை மடக்க உத்தேசித்து, பூகோள சாத்தியங்களைக் கணக்கிட்டு 9ஆ வைக் கடப்பதற்குள் பேசிவிட காளீ திடீரென்று ஒரு குரல் கேர்ள்ஸ்கிட்ட என்னடா பேச்சு...? என்றது.
நான் வெலவெலத்து நின்றேன். இனி கேர்ள்ஸ் பக்கம் உன்னைப் பார்த்தேன்...
அன்று மாலை கயல்விழியை தற்செயலாக கோயிலில் பார்த்தேன். கயல்...
என்னடா? என்றாள் மகிழ்ச்சியுடன். ஒருகணம் டாக்டர், என் குழந்தைக்குக் காய்ச்சல்.. காலத்துக்கே பேய்விட்ட மாதிரி இருந்தது. சுதாரித்து கொண்டு நான் என் நோ என்று துவங்குமுன் அவளது அண்ணிகள் என்னை முறைத்து வாடி என்று கடத்திச் சென்று விட்டார்கள். இனி, அவளது வீட்டிற்குப் போக வேண்டியதுதான்...
7.26 ஃபிளவருக்கும், ஃபிகருக்கும் என்ன வித்தியாசம்? ஃப்ளவர் வாடி விடும். ஃபிகர் நம்மை வாட விடும்... ஹா...ஹா...
அடுத்த முறை ஆகாஷ் வீட்டிற்கு வரும்போது இதற்கு விளக்கம் கேட்டால், தத்துவங்களின் வீர்யம் குறைய வாய்ப்பிருக்கிறது.
சைக்கிளை வெளியே நிறுத்தி, தயங்கி கயலின் வீட்டினுள் நுழைந்தேன். கயல் நாய் ஒன்று அந்நியனின் வருகையை உரத்துச் சொல்லியதும், அவளது அண்ணன் எட்டிப் பார்த்து என்ன வேணும், யாருப்பா நீ? என்றான்.
நான் கயலோட ஃப்ரெண்ட்.
ஃப்ரெண்டா என்றான் அதிர்ச்சியுடன். மேலும் ஒருவன் வெளிப்பட்டு நேத்து கயல்ட்ட கோயில்ல பேசினது நீதானடா..? என்றான். பம்பரமும், பாண்டியும் விளையாடும்போது இல்லாத அண்ணன்கள் திடீரென்று எப்படி வந்தார்கள்..?
பொம்பளப்புள்ளக்கிட்ட என்னடா பேச்சு என்றான் குரங்கிலிருந்து இன்னும் முழுமையாகப் பிரியாதவன். இதற்குள் இலை, தழைகளை அயர்ன் பண்ணி உடுத்தியிருந்த மூத்தவன் என் கன்னத்தில் அறைந்து இனி அவகிட்ட பேசறதைப் பார்த்தேன் என்றான். யார் மகன்டா நீ?
கண்ணீருடன் சொன்னேன். அவரு மகனா? ம் அவருக்கு இப்படி ஒரு புள்ள. அவர் பேரைக் கெடுத்துராக... அவர் முகத்துக்காகத்தான் பார்க்கறேன்... ஓடிப்போயிரு...
அப்படி என்ன குற்றம் செய்துவிட்டேன் எனப் பரிதவித்தபோது, கயல் வெளிப்பட்டு, அண்ணா, அவன் நோட்டு எங்கிட்ட இருக்கு. அதுக்காகத்தான் வந்திருப்பான். நான் மறந்தே போய்ட்டேன். என்று அவமானத்தால் கூசி நின்ற எனக்கு கிருஷ்ணனாய் மாறி பார்வையாலும், வார்த்தைகளாலும் ஆடைகள் தர முயன்றாள்.
7.32 ஹேப்பி பிரதோஷம் டே! ம், ஒரு மேசேஜ் அனுப்ப எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு! - பிரபு.
கயல்விழி பத்துக்கு மேல் படிக்கவில்லை. அவளைக் கடைசியாகப் பார்த்தது பத்து, பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு.
பீரோவைத் திறந்து கயல்விழியுடனான ஸ்கூல் ஃபோட்டோ ஆல்பத்தை இன்றாவது புரட்ட வேண்டும். அதில் அவள் முதல் வரிசையில் ஐந்தாவது இடத்தில் நிற்கிறாள். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, சமீபகாலமாக பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்; அந்தச் செயலைத் தள்ளிப் போடுகிறேன். சோம்பல் காரணமில்லை.
கையிலிருந்து செல் கனத்தது. அர்ச்சனாவின் நண்பர்களை என்னால் சுமக்க முடியவில்லை. ஒர வேளை, தோழியின் நட்பு என்னிடமிருந்து பிடுங்கப்பட்டதால்தான் அர்ச்சனாவின் நண்பர்களை வெறுக்கிறேனோ..? எனக்கு மறுக்கப்பட்ட சந்தோஷத்தை அடுத்தவர் அனுபவிப்பதைப் பார்த்து பொறாமைப்படுகிறேனோ..? இந்தக் கேள்விக்களுக்குப் பதில் சொல்வதைவிட, ஒரு தகப்பனுக்குரிய கவலையோடு என் தாவணிப் பெண்ணைப் பாதுகாக்க முயல்கிறேன் என்ற பதிலுக்குள் நான் ஒளிந்து கொள்ள விரும்பினேன்.
7.34 சர்தார்: எனக்கு இடுப்பு பிடிச்சிருக்கு!
லேடி டாக்டர்: ஓகே. மாத்திரை தரேன்...
சர்தார்: இல்ல டாக்டர். எனக்கு உங்க இடுப்பு பிடிச்சிருக்குன்னு சொன்னேன்!
கா. வணக்கம். ஆகாஷ்
இதற்கும் காலை வணக்கத்திற்கும் சம்பந்தம்? இந்தப் பையன்கள் எந்த நொடியிலும் வரம்பு மீறலாம் என்பது போல்தான் நடந்து கொள்கிறார்கள்.
7.35 இன்றைய சிந்தனை: இரண்டாவது வாய்ப்பிற்காகக் காத்திருக்க வேண்டாம். ஏனென்றால், அது முதல் வாய்ப்பைவிட, கடினமானதாகக் கூட இருக்கலாம்... காலை வணக்கம்.
அப்துல்கலாம் சந்தோஷிடம் எப்போது, இதைச் சொன்னார்?
அர்ச்சனா வருவதை உணர்ந்து போனை பழைய இடத்திலேயே வைத்தேன். எரிச்சலுடன் உன் ஃப்ரெண்ட்ஸ்க்கு எஸ்.எம்.எஸ். அனுப்பறதைத் தவிர, வேற வேலையே கிடையாதா? அதுவும், காலங்காத்தால.. என்றேன்.
....
தத்துவம் சொல்லி உன்னை எழுப்பறதும், தூங்க வைக்கறதும்... எங்க காலத்துல...
உங்க காலத்துல இதெல்லாம் இல்ல. இருந்திருந்தா யூஸ் பண்ணியிருப்பீங்க... அப்பா, நீங்க கவலையே பட வேண்டாம். ஏன்னா, எங்க எல்லை எங்களுக்குத் தெரியும்ப்பா... என்றாள் அர்ச்சனா.
இந்தக் காலத்தினர் எதையுமே சீக்கிரம் கற்றுக் கொண்டு விடுகின்றனர். எதிர்த்துப் பேச, கோபப்பட, சமாளிக்க.. எல்லாவற்றையுமே!
7.38 பீப்... பீப்.. போச்சுடா, இன்னொரு தகவல்... கடுப்படைந்தேன். என் முக மாறுதலைப் பார்த்த அர்ச்சனா, நானே படிக்கிறேன் என்றாள் படித்தாள்.
கடவுள் எவ்வளவு நல்லவர்! நண்பர்களுக்கு அவர் விலைப்பட்டியலைத் தொங்கவிட்டிருந்தால், உன்னைப் போன்ற நல்ல நண்பனை என்னால் விலை கொடுத்து வாங்கவே முடியாதே...!
பற்றிக்கொண்டு வந்தது. இவனுகளும், இவனுக மெசேஜ்களும்.. வாங்கிட்டுப்போய் என்ன செய்யறதாம்...? என்றேன்.
அனீஸ் ஃபாத்திமா ஆன்ட்டியத்தான் கேக்கணும்! ஆமாம்ப்பா... இந்த மெசேஜ் வந்தது உங்க ஃபோனுக்கு! என்றாள் அர்ச்சனா புன்னகையுடன்.
புரிந்துவிட்டது. நான் இன்றும் என் பழைய ஆல்பத்தைப் புரட்டப் போவதில்லை...!
ஷங்கர் பாபு

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு...
இந்த மாதிரி சிறு சிறு கதையெல்லாம் படிக்க எங்க சார் நேரம் இருக்கு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Similar topics
» ஒன் மெசேஜ் ரிசீவ்டு
» ஒரு பக்கக் கதைகள்
» மொபைல் மெசேஜ்
» நல்ல மெசேஜ் For -->U
» குறும்படத்திற்கு மெசேஜ் தேவை
» ஒரு பக்கக் கதைகள்
» மொபைல் மெசேஜ்
» நல்ல மெசேஜ் For -->U
» குறும்படத்திற்கு மெசேஜ் தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum