ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை எங்கே போகிறது...

4 posters

Go down

வாழ்க்கை எங்கே போகிறது... Empty வாழ்க்கை எங்கே போகிறது...

Post by சிவா Sun Dec 11, 2011 10:29 am




`வாழ்க்கை என்பது வியாபாரம்' என்று கவியரசு கண்ணதாசன் பாடியது போல் வாழ்க்கையே வியாபாரமாகி வருகிறது. எல்லோருமே தன்னுடைய வாழ்க்கை, தன்னுடைய எதிர்காலம் என்று சுயநலமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். அதனால்தான் மக்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து வெகு தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இயல்பான வாழ்க்கை என்பதுதான் யதார்த்தமானது, நிஜமானது. இன்றைய வாழ்க்கை சூழல், நிஜங்களை தொலைத்துவிட்டு, போலி மயமாகிக் கொண்டிருக்கிறது.

ஒரு குழந்தை, தாயின் அரவணைப்பில் வளர்வதுதான் அதற்கு பாதுகாப்பு, மகிழ்ச்சி. இன்றைய முரண்பாடான வாழ்க்கை, குழந்தைக்கு அந்த அரவணைப்பை தருவதில்லை. மாறாக வருங்கால வசதி, வைப்பு நிதி, சமூக அந்தஸ்து, ஆடம்பரம் இவைகளை எல்லாம் தரப்போவதாக வாக்குறுதி அளிக்கிறது. அதனால் ஒரு மழலையை கூட வஞ்சித்து விடுகிறது இன்றைய வியாபார வாழ்க்கை. அதில் லாப- நஷ்ட கணக்குப்போட்டு பெற்ற பிள்ளைகளை சமாதானம் செய்து கொண்டு, தங்களையும் ஏமாற்றி தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார் கள்.

வயதான பெற்றோரை காப்பாற்றுவது பிள்ளைகளின் கடமை. ஆனால் இன்றைய வாழ்க்கை, அந்த கடமையை பின்னுக்கு தள்ளிவிட்டது. அதையும் மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

இன்றைய வியாபார வாழ்க்கைக்கு அன்பு, பாசம் தேவையில்லை. தன்னுடைய தேவை, ஆசை, மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு போன்ற எல்லாவற்றையும் நோக்கி, உற்றார்- உறவினர்களைக்கூட பின்னுக்கு தள்ளிவிட்டு தலைதெறிக்க ஓடுவதே மிகப்பெரிய சாதனை என்று நினைக்கிறார்கள்.

`அது தவறல்லவா?' என்று அவர்களிடம் கேட்டால், `தான் ஒரு பிராக்டிகல் மனிதன்' என்கிறார்கள். இப்படி சொல்வதை ஒரு அறிவாளித்தனம் என்று கருதிக்கொண்டு, வாழ்வதற்கு என்றே படைக்கப்பட்ட நல்ல விஷயங்களை பற்றிய சிந்தனையே இல்லாமல், எல்லாவற்றையும் பிராக்டிகல் என்ற மண்ணைப்போட்டு மூடிவிட்டு, மேலே முள் செடியையும் நட்டு வளர்த்து, வாழ்க்கையையே ஒரு முட்காடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு அழகான ரோஜா மலரைப் பார்த்து ரசிக்க கூட இந்த பிராக்டிகல் மனசுகாரர்களால் முடியாது. விளைவு வாழ்க்கையும் முள்ளாகிப் போகிறது.

விட்டுக் கொடுத்தல், பணிந்து போதல், மற்றவர்கள் கருத்துக்களை காது கொடுத்து கேட்டல் இவை எதுவுமே பிராக்டிகல் எனப்படும் வியாபார வாழ்க்கையில் இருக்காது. அந்த வாழ்க்கை தனக்கு ஒரு அந்தஸ்தை தரும். சமூகத்தில் ஒரு அங்கீகாரத்தை தரும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும். ஆனால் ஏமாற்றத்தில் முடிந்துவிடும்.

"பிராக்டிகல்'' என்ற ஒன்று நம்மோடு ஒட்டிக் கொண்டிருந்தால் தான் நம்மால் நிம்மதியாக வாழ முடியும் என்ற எண்ணம் பலபேர் மனதில் வேரூன்றி விட்டது. இதனால் தங்களுடைய "தனித்துவத்தை'' தொலைத்து விட்டு கடனே என்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே கற்பனைகள் அற்புதமாக இருக்கும். ஆனால் அந்த கற்பனையில் மனிதனால் வாழ முடியாது. பிராக்டிகல் என்ற ஒன்று வாழ்க்கையை திசை மாற்றிவிடக் கூடாது. தவறுகளை நியாயப்படுத்தவும் அது பயன்படக்கூடாது. உண்மைகளை அது மறைக்க கூடாது. உறவுகளையும் சிதைத்துவிடக் கூடாது.

வாழ்க்கை வியாபாரம் ஆகிக்கொண்டிருக்கிறது. அதோடு சேர்ந்து நாமும் வியாபாரி ஆகிவிடாமல் நிஜ வாழ்க்கை, நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து உறவுகளுக்கு கைகொடுத்து மனிதனின் மாண்பை பாதுகாக்கவேண்டும்.

தினதந்தி


வாழ்க்கை எங்கே போகிறது... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்க்கை எங்கே போகிறது... Empty Re: வாழ்க்கை எங்கே போகிறது...

Post by ந.கார்த்தி Sun Dec 11, 2011 10:33 am

சிவா wrote:



இன்றைய வியாபார வாழ்க்கைக்கு அன்பு, பாசம் தேவையில்லை. தன்னுடைய தேவை, ஆசை, மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு போன்ற எல்லாவற்றையும் நோக்கி, உற்றார்- உறவினர்களைக்கூட பின்னுக்கு தள்ளிவிட்டு தலைதெறிக்க ஓடுவதே மிகப்பெரிய சாதனை என்று நினைக்கிறார்கள்.


ஆமோதித்தல் ஆமோதித்தல் அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வாழ்க்கை எங்கே போகிறது... Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வாழ்க்கை எங்கே போகிறது... Empty Re: வாழ்க்கை எங்கே போகிறது...

Post by உதயசுதா Sun Dec 11, 2011 12:04 pm

உண்மைதான் சிவா. இன்னிக்கு வாழ்க்கை வியாபார மயமாகவும் இயந்திரமயமாகவும் ஆகிட்டு இருக்கு.இதில் பெரும்பாலும் பாதிக்க படுகிறவர்கள் வருங்கால தலைமுறையினர்தான்.


வாழ்க்கை எங்கே போகிறது... Uவாழ்க்கை எங்கே போகிறது... Dவாழ்க்கை எங்கே போகிறது... Aவாழ்க்கை எங்கே போகிறது... Yவாழ்க்கை எங்கே போகிறது... Aவாழ்க்கை எங்கே போகிறது... Sவாழ்க்கை எங்கே போகிறது... Uவாழ்க்கை எங்கே போகிறது... Dவாழ்க்கை எங்கே போகிறது... Hவாழ்க்கை எங்கே போகிறது... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வாழ்க்கை எங்கே போகிறது... Empty Re: வாழ்க்கை எங்கே போகிறது...

Post by Dr.S.Soundarapandian Tue Mar 05, 2024 12:25 pm

“மனிதனின் மாண்பை பாதுகாக்கவேண்டும்.” - அருமை சிவா ! வாழ்க்கை எங்கே போகிறது... 3838410834 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வாழ்க்கை எங்கே போகிறது... Empty Re: வாழ்க்கை எங்கே போகிறது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum