புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_c10புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_m10புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_c10புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_m10புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_c10புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_m10புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_c10புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_m10புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_c10புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_m10புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_c10புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_m10புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_c10புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_m10புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_c10புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_m10புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 10:57 am



ஆயிரம் ஆசைகள், எதிர்பார்ப்புகளுடன் தான் தம்பதிகள் ஒவ்வொருவரும் வாழ்வைத் தொடங்குகிறார்கள். ஆனால், நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் புதியதாக, வித்தியாசமானதாக அமைகிறது.

பல நேரங்களில் வாழ்க்கைப் போக்கு கணவன்-மனைவி எதிர்பார்ப்புகளுக்கு எதிராக இருக்கிறது. அதனால் போகப்போக, வாழ்க்கை சலிப்பாகி விடுகிறது. திருமணம் செய்ததே தவறோ என்று எண்ண வைத்துவிடுகிறது.

இதற்கு தீர்வுதான் என்ன?

திருமண உறவில் நிலையாக இருப்பது என்பது `டிரைவிங் லைசென்ஸ்' பெறுவதுபோலத்தான். நீங்கள் காரை ஓட்ட விரும்பினால் நிச்சயம் சாலை விதிகளைக் கற்றுக்கொண்டு அவற்றைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் எப்போதுமே பாதசாரியாகவே பயணிக்க வேண்டும்.

உங்களுக்கு அன்பு, நட்பு, செக்ஸ் மற்றும் அக்கறையுடன் கவனிக்க ஒரு துணை வேண்டுமென்றால் பதிலுக்கு நீங்களும் எதையேனும் கொடுத்தாகத்தானே வேண்டும். ஆதலால் ஆண்கள், பெண்ணின் எதிர்பார்ப்புகளையும், பெண்கள், ஆணின் குணாதிசயங்களையும் புரிந்து கொள்வது அவசியமாகி விடுகிறது.

ஆண்களின் மனநிலையும், பெண்களின் மனநிலையும் எந்த இடத்தில் வேறுபடுகிறது என்பதை புரிந்து கொண்டால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தடுத்து விடலாம்.

ஆண்கள், எதையும் மிக ஆழமாக தெரிந்து வைத்துக்கொள்வது கிடையாது. ஆண்களால் எதைப்பற்றியும் பேசாமல் நீண்ட நேரத்தை கழிக்க முடியும். பேசிக் கொண்டால் ஒரு விஷயத்தைப் பற்றிய விளைவுகள், தீர்வுகள் பற்றி மட்டுமே உரையாடுவார்கள். மனிதர்கள் மற்றும் அவர்களது உணர்வுகளைப் பற்றி கலந்துரையாடுவது குறைவு.

ஆண்கள் அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கே மற்றவர்களை சந்திக்கிறார்கள். அதனால் நண்பர்களுடன் இருந்தால்கூட பேசாமலே (மற்றவர்கள் பேசுவதை கேட்டு) மனதை `ரிலாக்ஸ்' ஆக்கிக் கொண்டு திரும்பி விடுவார்கள்.

ஒரு ஆய்வில் தெரியவந்த உண்மை என்னவென்றால், வேலை முடிந்ததும் 85 சதவீத ஆண்கள் மன அழுத்தம் குறையும் செயல்களை நோக்கிச் செல்கிறார்களாம். அதில் 9.5 சதவீதம் பேர் மது அருந்தச் செல்கிறார்கள்.

"ஆண்கள் விளையாட்டில் காட்டும் தீவிர ஆர்வத்தை, ஏன் காதலில் வெளிப்படுத்த மாட்டேன் என்கிறார்கள்'' என்று பெண்கள் நினைக்கக் கூடும்.

திருமணத்தை அனேக ஆண்கள் துரதிருஷ்டமாக, தங்கள் சுதந்திரம் பறிபோகும் ஒரு நிகழ்வாக கருதுகிறார்கள். `திருமண விலங்கு போட்டுவிட்டதால் இனி தும்முவதற்குகூட அனுமதி பெற வேண்டும்` என்று நண்பர்கள் அவர்களை கேலி செய்வார்கள். எனவே பெண்ணிடம் நெருக்கமாக இருப்பது, பெண்களுக்கு வாக்கு கொடுப்பது போன்றவற்றை விரும்புவதில்லை.

தாங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்ற எண்ணம் ஆண்களிடம் அதிகம். இது ஒரு ஆண் வளர்ந்த விதத்தைக் குறிக்கிறது. அவன் வளரும்போதே தான் முன்னோடியாக நினைக்கும் சூப்பர்மேன்போலவே தன்னை எண்ணிக் கொள்கிறான்.

அதனால் தனது செயலை சுட்டிக்காட்டி ஒரு பெண் கேள்வி கேட்டால் அவனால் தாங்க முடியாது. அவள் தன்னை திருத்த முயல்வதாகவும், தான் தவறாக நடப்பதை சுட்டிக்காட்டுவது போலவும் அவன் நினைத்துக்கொள்வான். பெண் கேள்வி கேட்டால், `நீ என்னை நம்பவில்லையா?' என்று அவன் திருப்பிக் கேட்பான். பொதுவாக ஒரு பெண் தனக்கு அறிவுரை வழங்குவதை அவனால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.



புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 10:57 am



ஆண்களின் மூளை அமைப்பே ஒரு நேரத்தில் ஒரு வேலையை செய்யும் வகையில் தான் அமைந்துள்ளது. வலது மூளை, இடது மூளையை இணைக்கும் கார்ப்பஸ் கலோசம் பெண்களைவிட 30 சதவீதம் குறைவான அளவிலேயே ஆண்களின் இரு மூளையையும் இணைக்கிறது. இதுவே அவர்கள் பலவற்றையும் ஒரே சமயத்தில் செய்ய முடியாததற்கான காரணமாகும்.

எனவே இல்லத்தரசிகளுக்கு கணவரின் மூலம் வெற்றி கிட்ட வேண்டும் என்றால் அவருக்கு ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் கொடுத்துப் பாருங்கள். மாற்றத்தை உணர்வீர்கள். காதல் உணர்வுடன் கணவன் பேசிக் கொண்டிருந்தால், அவனிடம் கேள்வி கேட்பதோ, பிரச்சினைக்குரிய விஷயம் பற்றி விவாதிக்கவோ தொடங்காதீர்கள்.

இனி பெண்களைப் பற்றி ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களுக்கு வருவோம்.

பெண்கள் பொதுவாக அதிகமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். எப்போதுமே ஒரு பிரச்சினையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை விரும்புவார்கள். சில விஷயங்களை மிகைப்படுத்தி மகிழ்ச்சி காண்பார்கள். நேரடியாக விஷயத்திற்கு வராமல் சுற்றி வளைத்துப் பேசுவது பெண்களின் வாடிக்கை. எதையும் ஆழமாக அறிந்து கொள்ளும் ஆவலும் பெண்களுக்கு உண்டு.

பெண்கள் ஆதிமுதலே குடும்பத்துடன் இருக்கவும், சேர்ந்து வாழவும், உறவுகளை வளர்க்கவும் பழக்கப்பட்டவர்கள். ஆதலால் மற்றவர்களுடன் பரஸ்பரமாக பேசி நட்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. அதனால் இப்போதும்கூட எங்கிருந்தாலும் பிறருடன் பேசி தொடர்பு வைத்திருப்பதைத்தான் அவர்கள் விரும்புவார்கள்.

பேச்சு, மொழிக்கான பயன்பாட்டில் பெண்களின் மூளை அதிகமாக செயல்படும். பெண்கள், நீங்கள் சொல்ல வருவதை விரும்பினால் மட்டுமே உங்களிடம் பேசுவார்கள். அவள் உங்களை விரும்பினால் எல்லாவற்றையும் பேசிக் கொண்டே இருப்பாள்.

பெண் பேசுகிறாள் என்பதால் உங்களை பிடித்துப்போனதாக எண்ணிக் கொள்ளக்கூடாது. அது ஒரு பிணைப்புக்காக மட்டுமே. நீங்கள் அவளை ஊக்கப்படுத்தினால் நிச்சயம் உறவு பலப்படும்.

பிரச்சினையைப் பற்றி பெண் பேசத் தொடங்கினால், அவளுக்கு உதவவும், அவர் சொல்வதை கேட்கவும் நீங்கள் தயாராக இருப்பதை புரிய வையுங்கள். அவள் பேசுவதை கேட்க முடியாவிட்டால் கூட கொஞ்சம் அவகாசம் கேட்டுவிட்டு பிறகு பேசுங்கள்.

ஆண்கள் எப்போதுமே புள்ளிவிவரங்களை மிகைப்படுத்திக் கூறும் பழக்கம் உள்ளவர்கள். தனது வேலையின் முக்கியத்துவம், சம்பளம் பற்றி மிகைப்படுத்திக் கூறலாம். ஆனால் பெண்கள் உறவு சார்ந்த விஷயங்களையே உணர்ச்சிவசப்பட்டு அதிகமாகப் பேசுவார்கள்.

ஒருவிஷயத்தை உங்கள் மனைவி மிகைப்படுத்துகிறாள் என்றால் பிறர் முன்னிலையில் அதை சுட்டிக் காட்ட வேண்டாம். பெண்கள், ஆண்கள் விஷயங்களை அப்படியே உண்மை என்று எடுத்துக்கொள்வார்கள். இதனால் ஆண்கள், பெண்களிடம் பேசும்போது உண்மையை மட்டுமே பேசவும், மிகைப்படுத்துதலைக் குறைக்கவும் வேண்டும்.

பெண்கள் நிறைய விஷயங்களை சுற்றி வளைத்துப் பேசுவார்கள். தனது தேவை என்ன என்பதை ஆண் ஊகித்துக்கொள்ள வேண்டுமென்று பெண்கள் எதிர்பார்ப்பார்கள். அது உண்மையும் கூட. மறை முகமான பேச்சு பிணக்கை ஏற்படுத்தாமல் பிணைப்பையும், தேவையையும் நிறைவேற்றும் என்பது பெண்களின் எண்ணம். அது ஆதிக்கம் செலுத்துவதையோ, சண்டையிடுவதையோ தடுக்கிறது.

ஆனால் மறைமுகப் பேச்சை மற்றொரு பெண்ணால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். ஆணிடம் இப்படிப் பேசினால், `நீ என்ன சொல்ல வருகிறாய், உனக்கு என்னதான் வேண்டும், பேச்சை நிறுத்து' என்றெல்லாம் சொல்லி பிரச்சினையை முற்றச் செய்து விடுவதுண்டு.

பெண்கள், ஆண்களுடன் நேரடியாகப் பேச வேண்டும். ஆண்கள், பெண்களின் பேச்சை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அவள் கூறுவதை மட்டும் கேளுங்கள். எதிர்த்து பேசவோ தீர்வு சொல்லவோ கிளம்பாதீர்கள்.

பெண், தன் கணவரிடம் `என்னை எவ்வளவு நேசிக்கிறாய்' என்று கேட்டால், விலை உயர்ந்த பரிசை எதிர்பார்ப்பதாக கருதுகிறார்கள். `ஒன்றுமில்லை' என்று அவர்கள் சொன்னால் ஏதோ விஷயம் இருப்பதாக அர்த்தம். நீங்கள் சொல்வதை, `ஓ' என்று கேட்டால், நீங்கள் பேசுவதில் பொய் இருப்பதை கண்டுகொண்டாள் என்று அர்த்தம்.

பெண், உறவுகளை பாதுகாக்கும் பணியில் இருப்பதால் தன்னை கவனிக்கும் நெருங்கியவர்களின் தொடர்பை பெருக்கிக் கொள்ள விரும்புவாள். குடும்பத்தோடு இணைந்து கொள்வதில்தான் பெண்ணின் வாழ்வு இருக்கிறது.

பெண்கள் அதிகமான விஷயங்களை துளைத்துக் கேட்டுத் தெரிந்து கொள்வது உறவுகளை நிலைநிறுத்த தேவையானது என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள், அதிக விவரங்களை கேட்டுக் கொண்டிருப்பது அனாவசியமானதல்ல, சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணவே என்பதை கணவர் புரிந்து கொள்ளும் விதமாக நடந்து கொள்ளுங்கள்.

இப்படி ஆண்-பெண் புரிதல் எளிதாகி விட்டால் அங்கே பிரச்சினைகளுக்கான பாதை அடைபட்டு விடும்.

தினதந்தி



புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 11, 2011 12:02 pm

புரிதல் இருந்தால் இல்லறம் நல்லறம் என்பதெல்லாம் சரிதான் தான்.

ஆனா புரிதல் தானே பிரச்சினையா இருக்கு. நாங்கள் இத்தனை வருஷம் காதலித்து கல்யாணம் செய்துகொண்டவர்கள் என்று வெளியே பெருமை பேசும் பலருமே தங்கள் துணைய பத்தி புரிஞ்சு வச்சு இருக்காங்களா என்பது சந்தேகமே



புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Uபுரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Dபுரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Aபுரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Yபுரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Aபுரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Sபுரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Uபுரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Dபுரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! Hபுரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக