ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஒரு டயட் பதிவு !!!!

+11
கேசவன்
பிளேடு பக்கிரி
பிரசன்னா
உதயசுதா
ஜாஹீதாபானு
இளமாறன்
மிதுனா
ayyamperumal
ரேவதி
பிஜிராமன்
balakarthik
15 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 Empty இது ஒரு டயட் பதிவு !!!!

Post by balakarthik Sat Dec 10, 2011 12:20 pm

First topic message reminder :

இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 Dsc0016az
பின் குறிப்பு :- பதிவை விட்டு ஃபோட்டோவை கலாய்ப்பவர்களுக்கு காதல் தண்டபாணி,தூள் சொர்நாக்கா ரேஞ்சுக்கு மட்டுமே ஃபிகர்கள் கண்ணில் படுவார்கள்.

முன்னாடி எல்லாம் யாராச்சும் என்ன பார்த்தா “இளைச்சிட்டியேடா கண்ணு”ன்னு தான் கேட்பாங்க. 4 கிலோ ஏறியிருந்தாலும் அதே டயலாக்தான். ஆனா இப்ப எல்லாம் கஷ்டப்பட்டு ஜிம், டயட்ன்னு 750 கிராம் குறைச்சிட்டு போனா ஊதிட்டே போறியே மச்சின்னு உளர்றானுங்க. அட இது கூட பரவாயில்லை.. போன ஆஃபீஸ்ல ஒரு பொண்ணு “Karthik.. You will look awesome if you loose few kgs.”ன்னு சொல்லுச்சு. நானும் செம கடுப்பாகி “அப்படி குறைச்சா நீ என்ன லவ் பண்ணுவியான்னு” கேட்டேன். திருதிருன்னு முழிச்சது. “நீ குறைக்கலனாலும் லவ் பண்ணுவேண்டா செல்லம்”ன்னு அவ மனசு சொன்னது என் காதுல நல்லா கேட்டுது. ஆனா கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு மாட்டேன்னு சொன்னா. அப்புறம் எதுக்கு நான் சாப்பிடாம காயணும்ன்னு சொல்லிட்டு சமோசா சாப்பிட போய்ட்டேன்.

சமோசான்னு சொன்ன உடனே எனக்கு டீக்கடைத்தான் ஞாபகத்துக்கு வருது. நல்ல கலரா, புஸுபுஸுன்னு பங்களா நாய்க்குட்டி மாதிரி இருந்தாலும் உருளைக்கிழங்கு சமோசா எனக்கு அவ்வளவா புடிக்கிறதில்லை. டீக்கடையில் கிடைக்கும் நம்ம ஊரு வெங்காய சமோசாதான் என் சாய்ஸ். அதுவும் ஹைஜீனா இருக்கணும்ன்னு ஒரு பட்டர் பேப்பர் பாக்கெட்டுல குட்டிக்குட்டியா 4, 5 சமோசா போட்டு தருவாங்களே.. அத பிரிக்கிறப்ப பாருங்க.. நாமளே செஞ்ச ராக்கேட்டு சக்ஸஸா போன சந்தோஷம் இருக்கும். காஞ்சு போன பிரெட்டை சாப்பிடற ஆளுங்களுக்கு இதெல்லாம் எங்க தெரியும்?

அது என்னவோ தெரில. நல்லா சாப்பிடறவனுங்கள கண்டாலே இப்பலாம் யாருக்கும் ஆக மாட்டேங்குது. உண்மையா மனசில எந்த தப்பும் இல்லைன்னா யாரா இருந்தாலும் கண்ண பார்த்துதானே பேசுவாங்க? ஆனா என்கிட்ட பேசுற எல்லோரும் என் தொப்பையை பார்த்தே பேசுறாங்க. இவ்ளோ வருஷம் வாழ்ந்தும் கண்ண மட்டும் பார்த்து பேசுற ஒரு உண்மையான நண்பனை கூட நான் சம்பாதிக்கலன்னு நினைக்கும்போது… விடுங்க. இத நினைச்சு கஷ்டப்படுறதுக்கு பதிலா நான் போய் பானி பூரி சாப்பிடுவேன்.

தினம் மதிய சாப்பாடா 3 சப்பாத்தி சாப்பிட சொல்றாரு டாக்டர். ஏற்கனவே போதி தர்மர மறந்துட்டோம்ன்னு செம கோவத்துல இருக்காங்க முருகதாசும், உதயநிதி ஸ்டாலினும்.. இதுல நாம பஞ்சாப் நாட்டு கோதுமைல செஞ்ச சப்பாத்திய சாப்பிட்டா நம்ம ஊர் இட்லிய யார் சாப்பிடுவா? அப்படியே காலப்போக்குல இட்லியை மறந்தே போயிட மாட்டாங்களா? அப்புறம், அரிசி விளைச்சல் குறைஞ்சிடும். தஞ்சை பகுதி மக்கள் எல்லாம் என்ன வேலை செய்வாங்க? நம்ம நாட்டோட பொருளாதாரமே பாதாளத்துல விழுந்திடும். இதெல்லாம் நடக்காம இருக்கணும்ன்னா நான் உடனே இப்போ 4 இட்லி சாப்பிட்டாகணும்.

இட்லின்னு சொல்லும்போதே நாக்குல சாம்பார் ஊறுது. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்ன்னு சொல்லுவா. அது போல ஆவியில வெந்தாலும் வெண்மையை தந்தருளும் பகவான் ஆச்சே இட்லி. அப்பரம்பொருளை சாம்பார் என்னும் பக்தி வெள்ளத்தில முக்கி, திருநீறு போல நெய்யை விட்டு பின் நாவில் போட்டுக்கொண்டால்…அடடடடடா.. அதுவல்லவா தெய்வீகம். நம்ம கேபிள் சங்கர் இதைத்தான் ஒவ்வொரு சாப்பாடுக்கடை பதிவிலும் “divine” என்று சொல்கிறார் என்பதை எத்தனை பேரு அறிவார்கள்?? நாம் இட்லிக்கு வருவோம். சூடாக சாப்பிடுவதுதான் இட்லியா? இல்லையில்லை. மறுநாள் காலை மீந்து போன இட்லியை உதிர்த்து உப்புமா செய்வதில் தொடங்கி குஷ்பூ இட்லி, இட்லி ஃப்ரை வரை காலத்திற்கேற்ப வளர்கிறதே.. அதுதான் இட்லி. இட்லியின் பெருமைக்கு பெருமை சேர்க்கும்வண்ணம், சிங்கம் திரைப்படத்தில் ஒரு பஞ்சாப் சிங் பாடியிருப்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். “சட்டினியை விட்டுப்புட்டு இட்டாலியை தொட்டுக்கிட்டேன்” என்கிறார் இந்த பஞ்சாப் நாட்டு பாடகர். இட்லி என்பதை நீட்டி இட்டாலி என்ற நாடு வரை கொண்டு சேர்ந்த அந்த தாடிக்காரருக்கு நாம் காலமெல்லாம் வெங்காய சாம்பர் செய்து போட்டால்தான் நன்றிக்கடன் தீரும்.

இட்லி சாப்பிடலாம்டா. ஆனா பூரியெல்லாம் ஆகவே ஆகாது என்போரும் உண்டு. நல்லா யோசிச்சு பாருங்க. தக்குணூண்டு பூரி வச்சிக்கிட்டு, அதுல ஓட்டையை வேற போட்டு சாப்பிடுறதுக்கே junk foodனு பேரு வச்சிக்கிறாங்க. நாம பல நூறு ஆண்டுகளா பெரிய பெரிய பூரி செஞ்சு அதுக்கு மசாலா வேற வச்சு சாப்பிடறோமே.. அந்த பரம்பரைல வந்துட்டு நாம காஞ்சு போன சேண்ட்விச்சும், ஃப்ரூட் சாலடும் சாப்பிடறதா? கடைசியா ஒரு பஞ்ச் சொல்லி முடிச்சிடறேன்.

பேசாம கொயட்டா இருக்கிறவனும், ஒழுங்கா சாப்பிடாம டயட்ல இருக்கிறவனும் தமிழனே இல்லை. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by balakarthik on Sat Dec 10, 2011 12:39 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 Empty Re: இது ஒரு டயட் பதிவு !!!!

Post by இளமாறன் Sat Dec 10, 2011 1:11 pm

விடுங்க கார்த்தி நடப்பது தான் நடக்கும் ... குண்டாகி என்ன பண்ண போறோம் இல்லை ஒல்லியாகி தான் என்ன பண்ண போகிறோம் ...

இ லவ் தட் ஸ்மால் சைஸ் சமோசா இ மிஸ் தட் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 Empty Re: இது ஒரு டயட் பதிவு !!!!

Post by மிதுனா Sat Dec 10, 2011 1:11 pm

balakarthik wrote:கோழி எப்படி இருந்தா நமக்கென்ன கொழம்புத்தானே முக்கியம் நமக்கு

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 2011 ஆம் ஆண்டின் சிறந்த தத்துவம் இதுவே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

( கோழிக்கு , பறவை காய்ச்சல் இல்லாமல் இருந்தா சரிதான் புன்னகை )
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 Empty Re: இது ஒரு டயட் பதிவு !!!!

Post by மிதுனா Sat Dec 10, 2011 1:13 pm

இளமாறன் wrote:
இ லவ் தட் ஸ்மால் சைஸ் சமோசா இ மிஸ் தட் சோகம்

எல்லோரும் ஒரு முடிவோடதான் இருக்கீங்கன்னு இதில் இருந்து நல்லா தெரியுது சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 Empty Re: இது ஒரு டயட் பதிவு !!!!

Post by இளமாறன் Sat Dec 10, 2011 1:15 pm

மிதுனா wrote:
இளமாறன் wrote:
இ லவ் தட் ஸ்மால் சைஸ் சமோசா இ மிஸ் தட் சோகம்

எல்லோரும் ஒரு முடிவோடதான் இருக்கீங்கன்னு இதில் இருந்து நல்லா தெரியுது சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

தேன் மிட்டாய் விடாம தின்றதுக்கு இது எவ்வ்லவோ மேல் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 Empty Re: இது ஒரு டயட் பதிவு !!!!

Post by மிதுனா Sat Dec 10, 2011 1:22 pm

இளமாறன் wrote:
தேன் மிட்டாய் விடாம தின்றதுக்கு இது எவ்வ்லவோ மேல் சிரி

நாங்க தம்மாத்தூண்டு மிட்டாய்யைத்தான் ஃபுல் கட்டு கட்டுறோம் ரிலாக்ஸ்

ஆனா நீங்க ?????????????????????? :அடபாவி:
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 Empty Re: இது ஒரு டயட் பதிவு !!!!

Post by balakarthik Sat Dec 10, 2011 1:24 pm

மிதுனா wrote:
இளமாறன் wrote:
தேன் மிட்டாய் விடாம தின்றதுக்கு இது எவ்வ்லவோ மேல் சிரி

நாங்க தம்மாத்தூண்டு மிட்டாய்யைத்தான் ஃபுல் கட்டு கட்டுறோம் ரிலாக்ஸ்

ஆனா நீங்க ?????????????????????? :அடபாவி:

நாங்க எப்பவுமே ஹாஃப்த்தான் இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 676261


ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 Empty Re: இது ஒரு டயட் பதிவு !!!!

Post by மிதுனா Sat Dec 10, 2011 1:27 pm

balakarthik wrote:
மிதுனா wrote:
இளமாறன் wrote:
தேன் மிட்டாய் விடாம தின்றதுக்கு இது எவ்வ்லவோ மேல் சிரி

நாங்க தம்மாத்தூண்டு மிட்டாய்யைத்தான் ஃபுல் கட்டு கட்டுறோம் ரிலாக்ஸ்

ஆனா நீங்க ?????????????????????? :அடபாவி:

நாங்க எப்பவுமே ஹாஃப்த்தான் இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 676261

அடடா !!!! எப்பவுமே உங்களுக்கு அந்த
ஃபுல் , ஹாஃப் தான்
நியாபகதிற்கு வருமா ????????????????????????????

நான் சொன்னது சாதாரண ஃபுல் ஐ சிரி
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 Empty Re: இது ஒரு டயட் பதிவு !!!!

Post by balakarthik Sat Dec 10, 2011 1:29 pm

மிதுனா wrote:நான் சொன்னது சாதாரண ஃபுல் ஐ சிரி

நானும் சாதாரண ஹாஃபைத்தான் சொன்னேன் காட்சினதெல்லாம் நமக்கு கட்டுபடியாகாது குறிப்பா வெளிநாடு தயாரிப்பு


ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 Empty Re: இது ஒரு டயட் பதிவு !!!!

Post by மிதுனா Sat Dec 10, 2011 1:35 pm

balakarthik wrote:காட்சினதெல்லாம் நமக்கு கட்டுபடியாகாது குறிப்பா வெளிநாடு தயாரிப்பு

இந்த சங்கதி உங்க வீட்டுக்கு தெரியுமா ? சிரி
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 Empty Re: இது ஒரு டயட் பதிவு !!!!

Post by balakarthik Sat Dec 10, 2011 1:40 pm

மிதுனா wrote:இந்த சங்கதி உங்க வீட்டுக்கு தெரியுமா ? சிரி

என் வீட்டுக்கு தெரியும் என் வீடு திண்ணைக்கு தெரியும் மொட்டை மாடிக்கு தெரியும் ஆனா வீட்டுல இருக்குறவங்களுக்கு மட்டும் தெரியாது


ஈகரை தமிழ் களஞ்சியம் இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது ஒரு டயட் பதிவு !!!! - Page 2 Empty Re: இது ஒரு டயட் பதிவு !!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum