ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக

3 posters

Go down

நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக Empty நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக

Post by இளமாறன் Fri 9 Dec 2011 - 2:43

லண்டன்: தங்களது நாட்டு மக்களையே உளவு பார்க்க அரசாங்கங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளைத் தந்து வரும் சர்வதேச தொலைத் தொடர்பு சாப்ட்வேர் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் அதிபர் ஜூலியன் அசாஞ்ச்.

அல்காடெல்-லுசென்ட், சீமென்ஸ், நார்த்ராப் க்ரும்மென் உள்ளிட்ட உலகின் 160 முன்னணி தொலைத் தொடர்பு சாப்ட்வேர் நிறுவனங்கள் பல நாடுகளுக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைத் தந்துள்ளன. இதன்மூலம் மக்களின் செல்போன்- தொலைபேசி உரையாடல்கள், இன்டர்நெட் வாய்ஸ் மெயில்கள், இ-மெயில்கள், எஸ்எம்எஸ்கள், சர்ச் என்ஜின் தேடல்களை அந்த நாட்டு அரசுகள் ஒட்டுக் கேட்டும், படித்துப் பார்த்தும் வருகின்றன.

இந்த ஒட்டு கேட்பு சாப்ட்வேர் தொழில்நுட்பங்கள் மூலம் ஏராளமான பில்லியன் டாலர்களை இந்த நிறுவனங்கள் குவித்து வருகின்றன. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் மூலம் தங்கள் நாட்டு மக்களையே உளவு பார்த்து, அவர்களை அரசுகள் முடக்கி வருகின்றன.

குறிப்பாக, அடக்குமுறையான ஆட்சியை நடத்தும் அரசுகள் தங்களது எதிர்ப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒடுக்கவும், ஜனநாயகத்துக்கு ஆதரவானவர்களை சிறையில் தள்ளவும் இந்தத் தொழில்நுட்பங்கள் பெருமளவில் உதவி வருகின்றன.

குறிப்பாக பிரான்ஸைச் சேர்ந்த உளவு பார்க்கும் சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான அமிசிஸ், இந்தத் தொழில்நுட்பத்தை முன்னாள் லிபிய அதிபர் கடாபிக்கு பல பில்லியன் டாலருக்கு விற்றது. இதைக் கொண்டு லிபியாவிலும், இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளிலும் தனக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்களை கடாபி அடையாளம் கண்டு ஒடுக்கினார், பலரை கொலையும் செய்தார்.

(இத்தனைக்கும் லிபியா மீது பொருளாதாரத் தடை அமலில் இருந்தபோதே இதை அமிசிஸ் விற்றுள்ளது)

10 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா, இங்கிலாந்து உளவுப் பிரிவினருக்கு உதவும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கிய இந்த உளவு பார்க்கும் தொழில்நுட்ப சாப்ட்வேர்கள் இப்போது உலகெங்கும் பல்வேறு நாடுகள், அரசுகள், உளவு அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகளால் பயன்படுத்தப்படுகின்றன.

இதைக் கொண்டு சொந்த மக்களையே நாடுகளும் அரசுகளும் உளவு பார்த்து வருகின்றன. குறிப்பாக லிபியா, எகிப்து, துனீசியா, சிரியா உள்ளிட்ட ஆப்பிரிக்கா, அரேபிய நாடுகளில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் தலைவர்கள் இந்த உளவு பார்க்கும் தொழில்நுட்பத்தை ஜனநாயக விரோத செயல்களுக்கும், சுதந்திரம் கோரும் குரல்களை ஒடுக்கவும் பயன்படுத்தினர்.

இந்த உளவு சாப்ட்வேர்களை உருவாக்கும் மேற்கத்திய நாடுகளில் அதன் விற்பனையைக் கட்டுப்படுத்த எந்த விதிமுறையும் இல்லை. இதனால் பணம் தந்தால், யாருக்கு வேண்டுமானாலும் இதை தொலைத் தொடர்பு-சாப்ட்வேர் நிறுவனங்கள் விற்று வருகின்றன.

சமீபத்தில் எகிப்திலும் லிபியாவிலும் மக்கள் நடத்திய புரட்சியின்போது ராணுவ, உளவுப் பிரிவு அலுவலகங்களும் சூறையாடப்பட்டன. அப்போது வெளியே வீசப்பட்ட பல பொருட்களில் இந்த உளவு சாப்ட்வேர்கள் அடங்கிய சிடிக்கள், சிடி ரேம்களும் அடக்கம். இவை விக்கிலீக்ஸ் வசம் சிக்கின. இதை வைத்து மேலும் உலகளவில் விசாரணை நடத்தி இந்தத் தகவல்களைத் திரட்டினோம் என்றார் அசாஞ்ச்.

பின்னர் நிருபர்களைப் பார்த்து, உங்களில் யார் யார் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துகிறீர்கள் என்று அசாஞ்ச் கேட்டார். பெரும்பாலானோர் கையை உயர்த்த.. "Well, you're all screwed'' என்றார் சிரித்தபடியே.

இது தொடர்பான முழு விவரங்களையும் இதற்காகவே விக்கிலீக்ஸ் ஆரம்பித்துள்ள http://owni.eu/ என்ற புதிய இணையத்தளத்தில் காணலாம்.

இதில் ஒவ்வொரு நாட்டிலும் இந்த உளவு சாப்ட்வேர்களை உருவாக்கும் நிறுவனங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார் அசாஞ்ச்.

இந்தியாவில் சிம்லாவை தலைமையிடமாகக் கொண்ட ஷோகி கம்யூனிகேசன்ஸ், இந்தூரைச் சேர்ந்த க்ளியர் ட்ரையல் ஆகிய நிறுவனங்களும், இங்கிலாந்தின் ஷீல்ட் செக்யூரிட்டி ஆகிய நிறுவனங்களும் இந்த ஒட்டு கேட்பு உளவு சாப்ட்வேர்களை தயாரித்து வழங்கி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக Empty Re: நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri 9 Dec 2011 - 8:56

அதிர்ச்சி :அடபாவி:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக Empty Re: நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக

Post by கேசவன் Fri 9 Dec 2011 - 10:17

அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக 1357389நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக 59010615நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக Images3ijfநீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக Empty Re: நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக

Post by இளமாறன் Fri 9 Dec 2011 - 13:45

சுந்தரராஜ் தயாளன் wrote: அதிர்ச்சி :அடபாவி:
கேசவன் wrote: அதிர்ச்சி அதிர்ச்சி

நன்றி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக Empty Re: நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum