ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெலன் கெல்லர்

+3
சிவா
பாலாஜி
ரேவதி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஹெலன் கெல்லர்  Empty ஹெலன் கெல்லர்

Post by ரேவதி Wed Dec 07, 2011 12:46 pm

ஹெலன் கெல்லர்  468px-Helen_Keller
நம்பிக்கையின் சின்னம் ஹெலன் கெல்லர் (27 ஜூன் 1880 - 1ஜூன் 1968)

எத்தகு துன்பம் வந்துற்ற போதும் ஏற்றமிகு
வாழ்வு வாழ முடியும் என்று துணிந்த நெஞ்சுடனும், மாறா உள்ள உறுதியுடனும்
ஓயாது உழைத்து வரலாற்றில் தனிச்சிறப்புடன் குறிப்பிடப்பெற்றவர்தான் ஹெலன்
கெல்லர்.

பிறப்பு: 1880
ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் நாள் அலபாமா மாநிலத்தில் டஸ்கம்பியாவில்
[TUSCUMBIA] பிறந்தார். இவரது தந்தையார் ஆர்தர் - ஹெச் ஹெலன். அவர் உள்ளூர்
நாளிதழ் ஒன்றின் பதிப்பாளர் - பருத்தி பயிரிட்டு வந்த நிலக்கிழார் மற்றும்
படைத்தளபதியாகப் பணியாற்றிய பன்முகத் திறனாளர். இவரது தாயார் காதரின் ஆடம்
கெல்லர், வர்ஜினியாவின் கவர்னர் மரபில் தோன்றியவர். ஹெலனைச் சிறப்புடன்
வளர்த்து குடும்பத்திற்குப் பெருமையும் உலகினுக்கு நலமும் கூட்டியவர்.
ஹெலன் தனது 19ஆம் மாதத்தில் கடுமையான மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
இதன் விளைவாக இவர் பார்க்கும் திறனையும், கேட்கும் திறனையும் இழந்தார்.

திருப்புமுனை ஏற்படுத்திய ஆசிரியர்:

தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர்
கிரகாம்பெல், பார்வை இழந்தோர் நலவாழ்விற்குத் தொண்டறம் புரிந்துவந்தார்.
இவர் வழிகாட்டலால் ஹெலன் தன் 7ஆம் வயதில் பார்வை இழந்தோர் பயிலும்
பெர்கின்ஸ் [PERKINS] பள்ளியில் 1887ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டார். இவருடைய
ஆசிரியையாக ஆனி சலிவன் (ANNE SULLIVAN) நியமிக்கப்பட்டார். பாஸ்டன் நகரில்
உள்ள அதே பெர்கின்ஸ் பள்ளியில் படித்துப் பட்டம் பெற்றவர்தான் ஆனி சலிவன்.
பார்க்கும் திறனும், கேட்கும் திறனும் இழந்த ஹெலனுக்கு வார்த்தைகளைக்
கற்றுக் கொடுக்க ஆனி எடுத்த முயற்சிகள் வியப்பை ஊட்டுபவை. W - A - T - E - R
என்ற வார்த்தையின் பொருளை உணர்த்த வேகமாகத் தண்ணீர் வெளிவரும் குழாய்க்கு
அடியில் ஹெலனின் கையை வைத்து குளிர்ந்த நீர் கையைத் தொட்டுச் செல்லும்போது W
- A - T - E - R என்று மெதுவாகச் சொல்லியும் பின்னர் அவ்வார்த்தையை கையில்
விரல்களால் எழுதிக் காட்டியும் புரிய வைத்தார் ஆனி. இவ்வார்த்தையை
முதன்முதலில் பொருளுடன் கற்றுக்கொண்ட ஹெலனின் உள்ளத்தெழுந்த உவகையைச் சொல்ல
இயலாது. அன்று இரவு முடிவதற்குள் ஹெலன் 30 வார்த்தைகளைக் கற்றுக்
கொண்டார். இவ்வாறு அவர் படிப்பு துவங்கியது. இரவு முழுவதும்
விழிப்புற்றெழுந்து மேலும் மேலும் வார்த்தைகளைக் கற்பதில் ஆர்வம் கொண்டார்.

பிரெய்லி முறை:

8 வயது துவங்கும்போது ஹெலன் பிரெய்லி
முறையில் வேகமாகக் கற்கவும் எழுதவும் ஆற்றல் பெற்றார். லூயிஸ் பிரெய்லி
விதைத்த விதை ஹெலன் வாயிலாக ஆல்போல் தழைத்து அருகுபோல் வேர் ஊன்றி
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இளம் வயதிலேயே பயனுள்ள எண்ணங்களை
எழுத்தாக்கினார். இத்திறனை உணர்ந்த அனைவராலும் ஹெலன் அதிசயக் குழந்தை [THE
MIRACLE CHILD] என்று அழைக்கப்பட்டார். ஹெலன் தனது 9ஆம் வயதில் ஆசிரியர்
சாரா ஃபுல்லர் [SARAH FULLER] என்பவரின் உதவியோடு முதன்முதலாக பேசவும்
கற்றுக்கொண்டார். தொடர்ந்து பல ஆண்டுகள் பயிற்சி எடுத்து எல்லோருக்கும்
புரியும் வகையில் பேசும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். கோடை விடுமுறையில்
இவர் பிரெய்லி முறையில் ஜெர்மன், பிரெஞ்சு, இலத்தீன் போன்ற மொழிகளை எல்லாம்
கற்றார். இவர் தம் இருபதாம் வயதில் (1900இல்) ராட் கிளிஃப் [RAD CLIFFE]
கல்லூரியில் சேர்ந்தார். இக்கல்லூரியில் இவர் படித்த நான்கு ஆண்டுகளும்
இவர் ஆசிரியர் ஆனி சலிவன் இவருடைய மொழிபெயர்ப்பாளராய் இருந்து கற்றலை
எளிமையாக்கினார். 1904ஆம் ஆண்டு ஹெலன் இளம்கலை (B.A.)பட்டதாரியாக
வெளிவந்தார். மாற்றுத் திறனாளிகளில் முதன்முதலில் பட்டம் பெற்றவர் இவரே.

படைப்பாளி ஹெலன்:

கற்றலுடன் நின்றுவிட்டால் அது வாழ்வில்
முழுமையான வெற்றியை அளிக்காது. கற்றவற்றைப் பிறர் மகிழ்ந்து ஏற்கும்வகையில்
நூல்களாக எழுதத் துணிந்தார். இவரது எழுத்துகள் பொதுமக்களால் குறைத்து
மதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும், வறுமையில் வாடுவோருக்கும்
துணிவையும், தன்னம்பிக்கையையும் ஊட்டின. ஹெலன் கல்லூரியில் பயிலும்போதே
‘THE LADIES HOME JOURNAL’ என்ற செய்தித்தாளில் என் வாழ்க்கை வரலாறு [The
Story of my Life] என்னும் நூலை வெளியிட்டார். இந்நூல் இன்று 50 மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது. 1908ஆம் ஆண்டில், தான்
உணர்ந்த உலகு ‘THE WORLD I LIVE IN’ என்ற நூலை எழுதினார். 1913ஆம் ஆண்டு
இருட்டில் இருந்து வெளியேறு ‘OUT OF DARK’ என்ற தலைப்பில் பொதுவுடைமைக்
கருத்துகளைத் தொடர் கட்டுரைகளாக வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இவர் 12
நூல்களை எழுதினார். பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து காரல் மார்க்ஸ் [KARL
MARX] மற்றும் ஏஞ்கெல்ஸ்[ENGELS] ஆகியோர் நூல்களை விரும்பிக் கற்றார்.
1917இல் நடைபெற்ற இரஷ்யப் புரட்சியை அங்கீகரித்தார். காணும் திறனும்
கேட்கும் திறனும் வெளியுலக அனுபவங்களால் மட்டும் விரிவடைவதில்லை என்பதும்,
அவை உள்ளத்தெழும் உயரிய சிந்தனை வளத்தால் விரிவடையும் என்பதும் ஹெலன்
கெல்லரின் அசையாத நம்பிக்கை.

பாராட்டும் - பட்டமும்:

அற்புதமான உழைப்பாளி [The Miracle Worker]
என்று இவரது வாழ்க்கை நிகழ்வுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. இதன்
பின்னர் இவரது வாழ்க்கையை ஆர்தர்பென் (ARTHOR PEN) திரைப்படமாக எடுத்து 2
ஆஸ்கர் (OSCAR) விருதுகளை வென்று இவரது தகுதிக்கு மணிமகுடம் சூட்டினார்.
இவர் வாழ்நாள் முழுவதும் வீழ்ச்சியுற்ற மக்களெல்லாம் நல்வாழ்வு வாழவும்,
மாற்றுத் திறனாளிகளும், மகளிரும் சம வாய்ப்பும் - சம உரிமையும் பெறவும்
உறுதியுடன் உழைத்தார். இவரது அறிவுத்திறனையும் - தொண்டறத்தையும் பாராட்டி
ஹார்வர்டு பல்கலைக்கழகம், கிளாஸ்கோ பல்கலைக்கழகம், டெம்பிள் பல்கலைக்கழகம்,
ஸ்காட்லாந்து - பெர்லின், ஜெர்மனி மற்றும் நம் நாட்டின் டெல்லிப்
பல்கலைக்கழகம் ஆகிய அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கவுரவ டாக்டர் பட்டம்
தந்து இவர்தம் புகழைப் பன்மடங்கு உயர்த்தின. கற்றவர்க்கு எல்லா நாடும்
சொந்த நாடு _ எல்லா ஊரும் சொந்த ஊர் என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு ஏற்ப இவர்
வாழ்ந்து காட்டினார்.

உலகப் புகழ்:

இவர்தம் பயன்மிகு செயலாற்றலின் விளைவாக
ஜப்பான் நாட்டின் புனிதப் புதையல் ‘JAPAN’S SACRED TREASURE’ என்ற
பட்டத்தையும், பிலிப்பைன்ஸ் மக்கள், பிலிப்பைன்ஸ் நாட்டின் தங்க இதயம் THE
PHILIPPINES GOLDEN HEART’ என்ற சிறப்பையும், லெபனான் நாட்டினர்
நல்லெண்ணத்திற்காக லெபனானின் தங்கப் பதக்கத்தையும் ‘LEBANON’S GOLD MEDAL
OF MERIT’ மேலும் தான் பிறந்த நாட்டில் மக்கள் உரிமைக்கான ஜனாதிபதியின்
பதக்கத்தையும் ‘PRESIDENTIAL MEDAL FOR FREEDOM’ பெற்றார்.

1952ஆம் ஆண்டு இவரது முன்னேற்றத்தின்
முன்னோடியான லூயிஸ் பிரெய்லியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபொழுது
பிரான்சு நாட்டின் பிரசித்தி பெற்ற செவாலியர் விருது பெற்றார்.

பட்டம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவுற்ற
பொழுது இவர் பயின்ற ராட் கிளிஃப் [RAD CLIFFE] கல்லூரி, சாதனை புரிந்த
முன்னாள் மாணவி (ALUMNAE ACHIEVEMENT AWARD) என்ற விருதினை வழங்கிப்
பெருமை சேர்த்தது. அத்துடன் அவர் படித்த பள்ளியில் ஹெலன் கெல்லர் பெயரில்
தோட்டம் அமைத்து - அவரது உயிருக்குயிரான ஆசிரியர் ஆனி சலிவன் பெயரில் நீர்
ஊற்றினையும் அமைத்து ஆசிரியர் - மாணவர் அர்பணிப்புத் தன்மையை
நிலைநிறுத்தினர்.

தொண்டறம்:

1921ஆம் ஆண்டு அமெரிக்காவில்
பார்வையற்றோருக்கான அறக்கட்டளை (AMERICAN FOUNDATION FOR THE BLIND)
துவங்கப்பட்டு, வீழ்ச்சியுற்ற மக்கள் எழுச்சிபெறவும், அவர்தம் வாழ்க்கைத்
தரம் உயரவும், அவர்களுக்காகத் தொடர்ந்து செல்வம் திரட்டவும், அறக்கட்டளையை
வலுவூட்டவும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார் - ஆயிரக்கணக்கான கடிதங்களை
எழுதினார் - கருத்தாழம் கொண்ட கட்டுரைகளை வெளியிட்டார். இவர்
பிறர்நலனுக்கென அய்ந்து கண்டங்கள் - 35 நாடுகள் - சுமார் 40,000 மைல் தொடர்
சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உலக மக்களை ஒரே குடும்பமாக இணைக்க
பெரும்முயற்சி எடுத்தார்.

விட்டுச் சென்ற செய்திகள் (LEGACY):

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற
வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை என்ற அவருடைய
கருத்துக்கேற்ப உலகில் வாழும் வாய்ப்பிழந்த மக்கள் அனைவர் நெஞ்சங்களிலும்
நம்பிக்கை மலர்களை மலரச் செய்த மாண்பாளர்.


நன்றி - சாரதாமணி ஆசான்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹெலன் கெல்லர்  Empty Re: ஹெலன் கெல்லர்

Post by பாலாஜி Wed Dec 07, 2011 12:51 pm

உங்கள் 10,000 பதிவுக்கு வாழ்த்துக்கள் .. சூப்பருங்க
சிறந்த பதிவு ... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஹெலன் கெல்லர்  Empty Re: ஹெலன் கெல்லர்

Post by ரேவதி Wed Dec 07, 2011 12:56 pm

வை.பாலாஜி wrote:உங்கள் 10,000 பதிவுக்கு வாழ்த்துக்கள் .. ஹெலன் கெல்லர்  224747944
சிறந்த பதிவு ... ஹெலன் கெல்லர்  224747944
நன்றி ஹெலன் கெல்லர்  678642 ஹெலன் கெல்லர்  154550


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹெலன் கெல்லர்  Empty Re: ஹெலன் கெல்லர்

Post by சிவா Wed Dec 07, 2011 1:00 pm

27 ஜூன், நான் பிறந்த தேதியும் இதுதான்! ஹெலன் கெல்லர்  224747944


ஹெலன் கெல்லர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹெலன் கெல்லர்  Empty Re: ஹெலன் கெல்லர்

Post by ரேவதி Wed Dec 07, 2011 1:02 pm

சிவா wrote:27 ஜூன், நான் பிறந்த தேதியும் இதுதான்! ஹெலன் கெல்லர்  224747944
அந்த தேதியில் பிறந்தவர்களெல்லாம் ரொம்ப அறிவாளியாம் ஹெலன் கெல்லர்  677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹெலன் கெல்லர்  Empty Re: ஹெலன் கெல்லர்

Post by Guest Wed Dec 07, 2011 1:09 pm

நல்ல பதிவு , நன்றிகள் பல சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

ஹெலன் கெல்லர்  Empty Re: ஹெலன் கெல்லர்

Post by ரேவதி Wed Dec 07, 2011 1:51 pm

புரட்சி wrote:நல்ல பதிவு , நன்றிகள் பல ஹெலன் கெல்லர்  224747944
நன்றி ஹெலன் கெல்லர்  678642 ஹெலன் கெல்லர்  154550


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹெலன் கெல்லர்  Empty Re: ஹெலன் கெல்லர்

Post by பிஜிராமன் Wed Dec 07, 2011 2:29 pm

அருமையான பதிவு ரேவதி, மிக்க நன்றிகள்........ மகிழ்ச்சி நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஹெலன் கெல்லர்  Empty Re: ஹெலன் கெல்லர்

Post by சார்லஸ் mc Wed Dec 07, 2011 2:31 pm

அற்புதமான சிறந்த பதிவு. சூப்பருங்க

வாழ்த்துக்கள்


ஹெலன் கெல்லர்  154550ஹெலன் கெல்லர்  154550ஹெலன் கெல்லர்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஹெலன் கெல்லர்  154550ஹெலன் கெல்லர்  154550ஹெலன் கெல்லர்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஹெலன் கெல்லர்  Empty Re: ஹெலன் கெல்லர்

Post by உமா Wed Dec 07, 2011 2:44 pm

சிறந்த பதிவு.
எப்படி வாழ்ந்து இருக்காங்க. ஹெலன் கெல்லர்  2825183110 ஹெலன் கெல்லர்  2825183110 இவரை பற்றி தற்போது தான் தெரிந்து கொண்டேன்.

மாற்றுத் திறனாளிகளில் முதன்முதலில் பட்டம் பெற்றவர் இவரே.
ஹெலன் கெல்லர்  677196 ஹெலன் கெல்லர்  677196இறந்தும் வாழ்கிறார் ..



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஹெலன் கெல்லர்  Empty Re: ஹெலன் கெல்லர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum