ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்?

4 posters

Go down

மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? Empty மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்?

Post by பிரசன்னா Tue Dec 06, 2011 4:46 pm

மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்?

மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? Evening-tamil-news-paper_345481514941

மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கு முக்கியக் காரணமாகத் தண்ணீர்தான் இருக்கும் என்கிற கணிப்பில், தப்பு எதுவும் வராது என்றே தோன்றுகிறது.
மாநிலங்களுக்கு இடையே எழுகிற தகராறுகளுக்கு எல்லாம், மையப்புள்ளியாக இங்கு தண்ணீர்தான் இருக்கிறது.
காவிரிப் பிரச்னைக்கான பஞ்சாயத்தைக் காலம் காலமாகப் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்…… ஆனாலும், கணக்குக்கு விடையைக் கண்டுபிடித்தபாடில்லை. கர்நாடகாவுக்கும் நமக்கும் காதல் முறிந்து போனதுதான் மிச்சம்.
முல்லைப் பெரியாறு, முல்லைப் பெரியாறு என்று முப்பது வருடங்களாகச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்….. ஆனாலும், முன்னேற்றம் எதுவும் வந்தபாடில்லை. இன்னும் கேரளாவுக்கு இருமுடி தூக்கிகொண்டுதான் இருக்கிறோம்.

பேச்சுவார்த்தைகளுக்குள் பிரச்னை இருக்கும்போது…..
தமிழகத்திலிருந்து சென்ற லாரி டிரைவர்களைக் கேரள எல்லையில் தடுத்து நிறுத்திச் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள்…..
வண்டிப்பெரியாறு அருகே தமிழக அய்யப்ப பக்தர்களுக்குச் செருப்பு மாலை போட்டு அவமரியாதை செய்திருக்கிறார்கள்…..
அணையையே உடைக்கப்போகிறோம் என்று சொல்லி ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அணைக்குள்ளேயே நுழைந்திருக்கிறது…….
மரத்துப்போன அரசாங்கங்கள்….. மரித்துப்போன மனித ஜென்மங்கள்…..
சில நேரங்களில் சிவசேனாவின் பால்தாக்கரே செய்வதுகூட சரியென்றுதான் தோன்றுகிறது.

மணல் முதற்கொண்டு மாட்டு இறைச்சிவரை…. பால், காய்கறிகள் என மலையாள மண்ணுக்கு அத்தனையும் இங்கிருந்துதான் செல்கிறது. இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, சகோதரத்துவத்தை எப்படிச் சாகடிக்கத் துணிந்தார்கள் என்று தெரியவில்லை.
அணை பலவீனமாக இருப்பதாகவும், அணை உடைந்து பேரழிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும்…..முப்பத்தைந்து லட்சம் மக்கள் தண்ணீரில் மிதக்கப் போகின்றனர் என்றும்….. புதிதாக ஒரு புரளியைக் கிளப்பிவிட்டுக்கொண்டு அலைகிறார்கள்.
2012 ல் உலகமே அழியும் என்று சொல்லி ஒரு படம் வந்து சக்கை போடு போட்டது. அதைப் பார்த்து யாரும் பயப்படவில்லை, குழம்பவில்லை. ஆனால்…. டேம்999 எல்லா இடங்களிலும் டேமேஜ் ஏற்படுத்திவிட்டது. (அதென்ன 999? அணை அமைந்துள்ள இடம் 999 ஆண்டுகளுக்கு நமக்குக் குத்தகைக்கு விடப்பட்ட இடம்!).
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் உதாசீனப் படுத்தப்படுகின்றன. மத்திய அரசோ இன்னும் மயக்க நிலையிலேயே இருக்கிறது…..
பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்த அடங்காத சமஸ்தானங்களையும், அடக்க முடியாமல் இருந்த வலிமையற்ற டில்லி அரசாங்கத்தையும் போன்றதொரு சூழல், உரிமை பெற்ற அறுபது ஆண்டுகள் கழித்து இங்கு உருவாகி இருக்கிறது.

கேரள அரசியல்வாதிகள், பொது நல விரும்பிகள் என அனைவரும் இந்திய அளவில் இந்தப் பிரச்சினையை கொண்டு செல்கிறார்கள். ஆங்கிலச் சேனலில் தங்களது வாதத்தை எடுத்து வைக்கிறார்கள்…..
ஆனால் இங்கு?…..
தமிழகத்தைப் பொறுத்தவரை அனைவரும் வியாபாரத்திற்க்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவர்கள்…… கடிதம் எழுதியே காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பார்கள்.
ஒருவேளை- வைகோ அளவுக்கு ஜெயலலிதா ஸ்பீடானால்….. வழிபிறக்க வாய்ப்பிருக்கலாம்!
நல்ல முடிவு நமக்குச் சாதகமாகவே வரும் என்று நம்பிக்கையுடன் இருப்போம்…..
அதே வேளையில், அடுத்தவரிடமே எப்போதும் கையேந்துவதற்குப் பதிலாக…. தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரத்தை மேம்படுத்த முயற்சிக்கலாம்.. தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைவு படுத்தலாம். தேவைபட்டால் இன்னும் சில அணைகளை தமிழகத்தில் கட்டலாம்.
நீர் மேலாண்மையில் நாம் சுயசார்பு அடைவதற்கான இலக்கை நோக்கி நம் பயணத்தை விரைவுபடுத்த வேண்டும்….. மற்ற மாநிலங்களில் இருந்து கிடைக்கும் நீரை உபரியாக வைத்து கொள்ளும் அளவிற்கு நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும்.
இதன் மூலமாக மட்டுமே- வறண்ட காலங்களில் தண்ணீர் தர மறுப்பதையும், மழை காலங்களில் தமிழகத்தை வடிகால் மாநிலமாக பயன்படுத்துவதையும்….தடுக்க முடியும்!

மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? 0612ban2f1
இது மனித நேயம் உள்ளவர்கள் மட்டும் படிப்பதற்காக…….
அரசாங்கப் பதவி காரணமாக மட்டுமே தமிழகத்திற்கு வந்த “பென்னி குக்” என்ற ஆங்கிலேயர்- தனது பொறியியல் அறிவோடு, மனித நேயத்தையும் கலந்து எழுப்பியதுதான் இந்த முல்லைப் பெரியாறு அணை.
அதைக் கட்டுவதற்காக அவ்ர் ஏற்றுக்கொண்ட இன்னல்களும், சோதனைகளும் சொல்லில் அடங்காது.
மேற்கு நோக்கி ஓடி வீணாக அரபிக்கடலில் கலக்கும் மழைநீரைத் தேக்கி, கிழக்கு நோக்கித் திருப்பி ஓடவிட்டால்…. மதுரை, இராமநாதபுரம் போன்ற பல மாவட்டங்கள் பயனடையும் என்கிற அவருடைய திட்டத்தை, அப்போதைய ஆங்கிலேய அரசு கருத்தியல் ரீதியாக மறுத்தபோதும்…. பெருத்த மோதலுக்குப்பின் அந்தத் திட்டத்துக்கு அனுமதி பெற்று, அணையை வெற்றிகரமாகக் கட்டிமுடித்தார்.
ஆனாலும், சில ஆண்டுகளில் முதல் அணை இடிந்துவிட்டது. அதனால் இரண்டாவது முறையாக மீண்டும் அணைகட்ட அவர் கொடுத்த திட்டத்தை அரசு ஏற்க மறுத்ததோடு, அவரைப் பணிநீக்கமும் செய்துவிட்டது.
ஆனாலும் மனம் தளராத பென்னி குக், இங்கிலாந்து சென்று தனது சொத்துக்கள் மற்றும் குடும்ப நகைகளை விற்றுக் கொண்டுவந்த பணத்தில், மீண்டும் அந்த அணையைக் கட்டினார்.
அந்த அணைதான் இன்று கம்பீரமாக எழும்பி நின்று, தென்தமிழ் மக்களுக்கு நீர் வார்த்துக்கொண்டு இருக்கிறது…..
பொதுநல நோக்கோடும், பிரதிபலன் எதிர்பார்க்காமலும்…. ஒரு ஆங்கிலேயப் புண்ணியவான் கட்டிவைத்துவிட்டுப் போன அணையை வைத்துக்கொண்டு…..
கேவலமான அரசியலைக் கேரளக்காரர்கள் செய்கிறார்களே என்பதுதான் வேதனையான விசயம்.

பகிர்வு - http://pusuriyan.wordpress.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? Empty Re: மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்?

Post by உதயசுதா Tue Dec 06, 2011 4:57 pm

இன்னிக்கு நான் இங்க கேட்ட மலையாள ஏப்.எம்மில் சொல்கிறார்கள்,ஒவ்வொரு மலையாளியும் தனக்கு தெரிந்த தமிழர்களிடமும், ஃபேஸ் புகிளில் இருக்கும் அனைத்து தமிழகத்தை தெரிந்தவர்களுக்கும் இந்த முல்லை பெரியார் அணை இடிந்து போகும் நிலையில் இருப்பதாகவும்,அதை இடித்துவிட்டு புதிய அணை கட்ட ஆதரவு தரவேண்டும் என்று செய்தி அனுப்பவேண்டும் என்று. இந்த ஒற்றுமை நம்மிடையே இருக்கா?


மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? Uமூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? Dமூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? Aமூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? Yமூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? Aமூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? Sமூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? Uமூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? Dமூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? Hமூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? Empty Re: மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்?

Post by கேசவன் Tue Dec 06, 2011 4:58 pm

தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைவு படுத்தலாம். தேவைபட்டால் இன்னும் சில அணைகளை தமிழகத்தில் கட்டலாம்.
ஆம் நல்ல திட்டம் தான் ஆனால் இந்த அரசு அணையை கட்டினால் அதற்கு பின் வரும் அரசு அந்த அணையை சாக்கடை நீர் தேங்கி நிற்கும் இடமாக மாற்றிவிடும் அல்லது அந்த அணையை இடித்து அதில் இருக்கும் கற்களை எடுத்து புதிதாக மருத்துவமனை கட்டும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? 1357389மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? 59010615மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? Images3ijfமூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? Empty Re: மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 8:15 pm

நல்ல கட்டுரை...நம்ம அரசியல் வாதிகள் சாக்கடை அரசியல் அல்லவா நடத்துகிறார்கள் ...தண்ணீரை பற்றி எதற்கு கவலைப்படப் போகிறார்கள். சோகம் அதிர்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்? Empty Re: மூன்றாம் உலகப்போருக்கு முக்கியக் காரணம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum