ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

+15
kitcha
aswin2304
jesudoss
இளமாறன்
உதயசுதா
மகா பிரபு
பிஜிராமன்
ரேவதி
siddiqbasha
நேரு
ayyamperumal
மாணிக்கம் நடேசன்
சிவா
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
19 posters

Page 8 of 17 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 17  Next

Go down

open முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by Guest Tue Dec 06, 2011 2:50 pm

First topic message reminder :

தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை

நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.

ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.

Last edited by புரட்சி on Thu Dec 22, 2011 3:00 pm; edited 31 times in total
avatar
Guest
Guest

Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by இளமாறன் Sun Dec 11, 2011 1:42 pm

போலீசால் மக்களை ஒன்றும் செய்ய முடியாது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 8 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by Guest Sun Dec 11, 2011 6:22 pm

கேரள சொத்துக்கு தீ வைப்பு :ஓ.பி.எஸ்.மீது கல்வீச்சு - வரும் 15 ம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டுகிறார் ஜெ.,

குமுளி : முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தீப்பற்றி எரிய துவங்கியிருக்கிறது. குமுளி நோக்கி இன்று பேரணியாக புறப்பட்ட எதிர்ப்பாளர்கள் கூடலூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த டிராக்டர் ஒன்றை தீ வைத்து எரித்தனர். மேலும் கேரள அரசுக்கு சொந்தமான வனத்துறை கட்டடத்தை இடித்தனர். இதனால் இன்று இன்னும் பதட்டம் அதிகரித்துள்ளது. பேரணியாக புறப்பட்டு வந்த மக்கள் குமுளி செக்போஸ்ட் அருகே கூடி நின்றனர். போலீசார் மீது கம்பு, கட்டை வீசப்பட்டது. கேரள எல்லைக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்தபோது போராட்டக்காரர்களுக்கும் தமிழக போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சில இடங்களில் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். தமிழக அரசு பஸ் டிப்போவுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் கேரள பகுதியை நோக்கி கல்வீசித்தாக்கினர். தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது அவர் மீது கல்லும், செருப்பும் வீசப்பட்டது. இதனையடுத்து அவர் திரும்பி சென்றார். தொடர்ந்து தடியடியும் நடத்தப்பட்டது,. கலவரம் வெடித்தது. இதனால் அங்கு நிலைமை கட்டு மீறி போய் உள்ளது. நிலைமை முற்றி வருவதையொட்டி வரும் 15ம் தேதி தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்துள்ளார் முதல்வர் ஜெ.,

கேரள அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று ( சனிக்கிழமை ) ஐந்து இடங்களில், போலீஸ் ஏற்படுத்திய தடைகளை மீறி குமுளிக்குள் அணிவகுத்தனர். "கேரளா செல்லும் 13 பாதைகளையும் அடைக்க வேண்டும்; தமிழக சட்டசபையை உடனடியாக கூட்டி இதற்காக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கேரள சட்டசபை விசேஷ கூட்டத்தை கூட்டி, "பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும்; தற்போதைய நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றியது. இது தமிழக மக்களை மேலும் கொந்தளிக்க வைத்து விட்டது.

50 ஆயிரம் பேர் திரண்டனர் : கம்பம், கூடலூர், ராயப்பன்பட்டி, சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உட்பட 26 கி.மீ., சுற்றளவில் இருந்து, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று காலை கூடலூரில் திரண்டனர். இவர்களில் பாதி பேர் பெண்கள். இவர்கள் அனைவரும், கேரள எல்லையான குமுளியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.பாதுகாப்பு பணியில் இருந்த 1,500 போலீசார் தடுக்க முயற்சி செய்தும், 50 ஆயிரம் மக்கள் திரண்டதால், தடுக்க முடியாமல் தவித்தனர். கூடலூர், பகவதியம்மன் கோவில், லோயர்கேம்ப் பகுதியில் இரண்டு இடங்கள் என ஐந்து இடங்களில் போலீசார் தடைகளை ஏற்படுத்தினர். போலீசாரின் தடைகளை தகர்த்த மக்கள், குமுளியின் தமிழக பகுதிக்குள் நுழைந்தனர். தமிழக அரசின் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஒன்று திரண்டனர்.அங்கு தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ் தாஸ்,தேனி கலெக்டர் பழனிசாமி ஆகியோர் பேச்சு நடத்தினர். இன்றும் ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, தேவன்பட்டி, நாராயணசேவல்பட்டி, சுருளிபட்டி, தேனிபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கம்பத்திலிருந்து குமுளி நோக்கி பேரணியாக புறப்பட்டு செல்கின்றனர்.

100 டிராக்டரில் வந்த கூட்டம்: இன்றைய பேரணியில் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட டிராக்டர்களிலும், ஆயிரம் பைக்குகளிலும் மற்றும் லாரிகளிலும் வந்த வண்ணம் இருந்தனர். ஊர்வலமாக வந்தவர்கள் கேரள அரசு மற்றும் கேரளாவை சேர்ந்த தனியார் உடைமைகளை பார்த்தால் சேதம் ஏற்படுத்தினர். லோயர் கேம்ப்ப குதியில் உள்ள கேரள அரசின் விடியல் என்ற வனத்துறை வேலைவாய்ப்பு அலுவலகத்தை இடித்தனர். இங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு தீ வைத்தனர். மேலும் அருகில் இருந்த ஒரு கயிறு தொழிற்சாலைக்கு தீ வைத்தனர் .இதில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள கயிறு பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

இரு தரப்பினர் கல்வீச்சு : இதற்கிடையில் மதியம் 3 மணியளவில் கேரள எல்லை பகுதியான குமுளியில் போராட்டக்காரர்கள் மீது கேரளாவை சேர்ந்தவர்கள் கல் வீசியதாக பரபரப்பானது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் அருகில் இருந்த தமிழக அரசு பஸ் டிப்போவுக்குள் புகுந்தனர். இதன் பின்புறம் கேரள பகுதி இருப்பதால் இங்கிருந்தபடி பலரும் கல்லை எடுத்து வீசினர். இதனால் பதட்டமும், பரபரப்பும் அதிகரித்தது.

தமிழக சிறப்பு சட்டசபை கூடுகிறது: இதற்கிடையில் தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் வரும் 15ம் தேதி கூட்ட முடிவு செய்திருப்பதாக முதல்வர் ஜெ., அறிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியிருப்பதாவது: எமது நாட்டு மக்கள் அணை விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் கோர்ட் சொல்லும் வழியிலேதான் செயல்பட முடியும் . இதனால் தமிழக மக்கள் உணர்ச்சிகளை தவிர்த்து நியாயமாக செயல்பட வேண்டும். உணர்ச்சிவசப்படக்கூடாது. இந்த விவகாரத்தில் தமிழக உரிமையை அரசு விட்டு கொடுக்காது,. நமது நாட்டிற்கும், எனது மக்களுக்கும் எல்லா வளமும், அமைதியும் கிடைக்க வேண்டும். போராட்டக்காரர்களின் உணர்ச்சிகளை மதிக்கிறேன். நானும் உங்களில் ஒருவராக இருக்கிறேன். குமுளியில் கேரள சொத்துக்கு சேதம் விளைவிக்க கூடாது அனைவரும் கலைந்து செல்லவும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் தே.மு.தி.,க சார்பில் வரும் 14ம் தேதி தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமை வகிக்கிறார்.

தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest

Back to top Go down

open கேரள எல்லையில் ஒரு லட்சம் பேர்: நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது கல்லும், செருப்பும் வீசப்பட்டது.

Post by சிவா Sun Dec 11, 2011 7:09 pm

தினமலர்

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by Guest Sun Dec 11, 2011 7:14 pm

இந்த செய்தி ஏற்கனவே பதிந்து உள்ளேன் அய்யா
avatar
Guest
Guest

Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by இளமாறன் Sun Dec 11, 2011 7:14 pm

மன்னர்கள் போருக்கு போவது போன்றே காட்சி அளிக்கிறது சிரி

இந்தியன் இந்தியா ஒருமைப்பாடு எங்கே போனது ... இரு மாநிலங்களில் இடையில் வேலியா போட முடியும் என்ன கொடுமை சார் இது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 8 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by சிவா Sun Dec 11, 2011 7:17 pm

புரட்சி wrote:இந்த செய்தி ஏற்கனவே பதிந்து உள்ளேன் அய்யா

நன்றி, இணைத்துவிட்டேன்!

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by Guest Sun Dec 11, 2011 7:19 pm

தமிழன் தலையில் மிளகாய் அரைக்க அனைத்து மாநிலத்தவன் துடிது கொண்டு இருக்கிறான்... நாம் தான் ************, ஒருமைப்பாடு என்று பூசி மெழுகிக்கிறோம்
avatar
Guest
Guest

Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by Guest Sun Dec 11, 2011 7:23 pm

இப்போதுதான் தமிழர்களுக்கு நிலை புரிந்து இருக்கிறது , எழுந்து போராட தொடங்கி விட்டார்கள்... சினிமா மற்றும் பிரியாணிக்காக கூட்டம் கூட்டமாக சென்ற தமிழன் , தலை நிமிர்ந்து எந்த கட்சி கொடியும் ஏந்தாமல் ... வீரநடை போட்டு பேரணி, போராட்டம் என்று ஆரம்பித்து இருக்கிறான் ... நட்டங்கள் இருந்தாலும் ,,, அந்த தீ வலுவாக எரிகிறது ...தமிழன் என்றும் உணர்ச்சி பிழம்பு என்று வையகம் கூர்ந்து கவனிக்கிறது
avatar
Guest
Guest

Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by Guest Mon Dec 12, 2011 8:11 am

தமிழக கொந்தளிப்பால் இடுக்கி உள்ளிட்ட கேரள மாவட்டங்களில் காய்கறி விலை பல மடங்கு உயர்வு

தேனி: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவின் போக்கைக் கண்டித்து தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் நடந்து வரும் மக்கள் போராட்டம், அதிகாரப்பூர்வமற்ற பொருளாதாரத் தடை காரணமாக, இடுக்கி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் காய்கறி விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதாம். காய்கறி வரத்து அடியோடு குறைந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரள மக்கள் பயன்படுத்தும் காய்கறிகள், பால், பூ உள்ளிட்டவை பெரும்பாலும் அண்டை மாநிலமான தமிழகத்திலிருந்துதான் பெருமளவில் போகிறது. குறிப்பாக தேனி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர்,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்துதான் போகின்றன. மேலும் தென் மாவட்டங்களை நம்பித்தான் கேரள மக்களில் முக்கால்வாசிப் பேர் உள்ளனர்.

தற்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கிட்டத்தட்ட தமிழகம் முழுவதுமே கடும் கொந்தளிப்பு நிலவுகிறது. பல தரப்பிலும் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வரும் பொருட்களை ஆங்காங்கு மக்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக தேனி மாவட்டத்திலிருந்து எந்த ஒரு பொருளுமே கேரளாவுக்குப் போகவில்லை. காய்கறிகள், பால், பூ என எதுவும போகவில்லை. கடந்த ஒரு வாரமாக குமுளி வழியாக கேரளாவுக்கான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் உள்ளிட்ட தமிழக எல்லையையொட்டியுள்ள கேரள மாவட்டங்களில் பெரும் காய்கறித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கேரள மாநிலத்தின் பிற பகுதிகள் வழியாக தமிழகத்திலிருந்து இவர்களுக்கு காய்கறிகள் வருகின்றன. ஆனால் அவை பல நூறு கிலோமீட்டர் சுற்றிக் கொண்டு வருவதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாம்.

இடுக்கி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களுக்கு வழக்கமாக தேனி மாவட்ட எல்லை வழியாக தினசரி 20 முதல் 25 லாரி லோடுகளில் காய்கறிகள் வருமாம். ஆனால் தற்போது ஒரு லாரி கூட போகவில்லை. ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையிலிருந்து மட்டும் தினசரி 1000 டன் காய்கறி, பழம் போன்றவை கேரளாவுக்குள் போகும். அவையும் தற்போது முடக்கப்பட்டு விட்டது.

இதையடுத்து நிலைமையை சமாளிக்க கர்நாடகா, ஆந்திராவிலிருந்து பல்வேறு பொருட்களை வாங்கும் முயற்சியில் கேரள வியாபாரிகள் இறங்கியுள்ளனர். ஆனால் கேரளாவின் இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி அந்த மாநில வியாபாரிகள் விலையை ஏற்றி விட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் நெல்லை, கன்னியாகுமரி, கோவை மாவட்ட எல்லைகள் வழியாக கேரளாவுக்குள் பொருட்கள் போவதில் சிக்கல் இல்லை என்பதால் கேரளாவில் நிலைமை இன்னும் மோசமடையவில்லை.

சங்கரன்கோவிலிலிருந்து தினசரி 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூக்கள் செல்வது வழக்கம். தற்போது இங்கிருந்து தொடர்ந்து பூக்கள் சென்றாலும் கூட வாகனங்களின் அளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிற பகுதிகளிலும் இதே நிலைதான் காணப்படுவதாக தெரிகிறது.

சபரிமலை ஐயப்ப சீசன் முடிவடைந்ததும், இந்த வழிகளிலும் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கலாம் என்ற பேச்சு அப்பகுதிகளில் நிலவுகிறது. இதனால் கேரள அரசும், அரசியல் கட்சிகளும் தமிழகத்திற்கு எதிரான நிலையைக் கைவிடாவிட்டால் வரும் நாட்களில் போராட்டம் பெருமளவில் வெடிக்கும் என்றும், கேரளாவை பொருளாதார ரீதியாக முடக்கும் வகையில் பல்வேறு தரப்பும் வியூகம் வகுக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest

Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by Guest Mon Dec 12, 2011 8:15 am

முல்லைப் பெரியாறு போராட்டத்தால் கேரள அரசுப் பேருந்துகளுக்கு கடும் பாதிப்பு

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளாவில் நடந்த தாக்குல்களுக்குப் பதிலடியாக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களால் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தின் வழியாக இயக்கப்படும் 100 பஸ்களை போக்குவரத்துக் கழகம் நிறுத்தி விட்டதாம்.

கேரள அரசின் போக்குவரத்துக் கழகமான கேஎஸ்ஆர்டிசி மூலம் 427 பஸ்கள் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் பல தமிழகத்தின் வழியாகத்தான் இயக்கப்படுகின்றன. கேரளாவில் தமிழர்களின் வாகனங்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலும் கேரள வாகனங்களுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.

பல்வேறு இடங்களில் கேரள அரசுப் போக்குரவத்துக் கழக பேருந்துகள் கல்வீச்சுத் தாக்குதலுக்குள்ளாகின. இதையடுத்து கடந்த 3 நாட்களில் 100 க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை நிறுத்தி விட்டனர்.

கோவை-சேலம், கம்பம்-தேனி, தென்காசி,-திருநெல்வேலி மார்க்கத்தில் கேரள அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன. நாகர்கோவில் ரூட்டில்தான் கேரள அரசுப் பேருந்துகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையாம். அதேபோல பழனி-பொள்ளாச்சி பாதையிலும் பெரிய அளவில் பிரச்சினை இல்லையாம்.

தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ளதைத் தொடர்ந்து பெங்களூர் மற்றும் கர்நாடக நகரங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளை, கோழிக்கோடு, வயனாடு, மைசூர் வழியாக சுற்றி விடுகின்றனர்.

இதன் காரணமாக கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
avatar
Guest
Guest

Back to top Go down

open Re: முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 8 of 17 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 17  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum