Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்வெழுதும் குழந்தைகளுக்குத் தேவையான டிப்ஸ்
Page 1 of 1

வணக்கம் அன்பிற்கினிய உறவுகளே நேற்றைய பதிவிற்க்கு ஆதரவளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி.இன்றைய பதிவில் ஆண்டுதோறும் குழந்தைகள் சந்திக்கும் தேர்வுகளை வெற்றிகரமாக சந்திக்கவும், அதில் வெற்றிபெற தேவையான டிப்ஸ்கள் பற்றிய ஓர் அலசல்.பொதுவாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடங்களுக்கான நேர அட்டவணைஇருப்பதுபோல வீட்டிலும் படிக்கும் பாடங்களுக்கான அட்டவணைஇருப்பது முக்கியம்.ஏனெனில் பள்ளியில் பாடங்களை கூர்ந்து கவனிப்பது எந்தளவிற்குஅவசியமோ, அதேஅளவு அந்தப் பாடங்களை வீட்டில் வந்து படித்து,நம் நினைவில் வைப்பதும் நிச்சயம் தேவையான ஒன்று. பள்ளியிலும், வீட்டிலும் சூழல் நிறையமாறுபடுகிறது. பள்ளியில் சக மாணவர்களோடும், ஆசிரியர்களோடும் இருந்துவிட்டு, வீட்டிற்குள் வந்தவுடன் அமைதியும், தனிமை உணர்வும் ஏற்படுகிறது.அந்த சூழலில்தான் நமது படிப்பிற்கான திட்டமிடுதலை தொடங்க வேண்டியுள்ளது.மேலும் பொதுதேர்வு நடக்கும் நேரத்தில் அதிகமாக விடுமுறைகள் இருக்கும். படிப்பதற்கென்றே விடப்படும் அந்தவிடுமுறை நாட்களை படிப்பில் சரியான முறையில் செலவழிப்பதற்கு நாம் முறையான திட்டமிடுதல்களைசெய்ய வேண்டும்.
பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் அதிக நேரம் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அவ்வாறு படித்தால்தான் சிறப்பாக படிக்க முடியும் என்றும் நம்புகின்றனர். தங்களின் பிள்ளைகள் அதிக நேரம் தொடர்ந்து படிப்பதை பெருமையாகவும் கருதுகின்றனர். ஆனால் இது மிகவும் தவறான ஒரு நம்பிக்கை. இதனால் மாணவர்கள் சோர்ந்துபோய் விடுவார்கள். ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை நாம் பத்து நிமிடங்கள் இடைவெளி எடுத்தாலும்கூட, தொடர்ச்சியாக நான்கு மணிநேரங்களுக்கும் மேலாக ஒருவர் படிப்பது நல்லதல்ல. இதனால் மூளையின் ரசாயன செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, நாம் படிப்பது நினைவில் நிற்காமல் போகலாம்.
ஒவ்வொரு பணியுமே முறையான இடைவெளியை கொண்டதாக இருக்க வேண்டும். நீண்டநேரம்தொடர்ந்து படிப்பதன்மூலம் மாணவர்களின் மூளை ஏற்புத்திறன் குறைந்து, படிப்பதை உள்வாங்கும் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. எனவே ஒரு செயல்பாடானது சரிசமமான இடைவெளியைக் கொண்டதாகஇருக்க வேண்டும். அப்போதுதான் மூளை நன்கு செயல்படும்.படிப்பின்போதான சிறிதுநேர ஓய்விற்குப் பிறகு மீண்டும் உடனேயே படிப்பை தொடங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு பதிலாக படிப்போடு சம்பந்தப்பட்ட வேறு சில நடவடிக்கைகளை செய்யலாம். அந்த நடவடிக்கைகளை படிப்பிற்கு திட்டமிடும்போதே முடிவுசெய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட பாடத்தை தொடர்ச்சியாக உள்வாங்கும் திறன் ஒரு மாணவரின் மூளைக்கு சுமார் நாற்பது முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை மட்டுமே இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் பள்ளிகளில் ஒவ்வொரு முக்கால் மணி நேரத்திற்கும் ஒரு ஆசிரியர் மாறி, பாடங்களும் மாறுகிறது. வீட்டில் அதிகபட்சம் ஒரு பாடத்தை ஒரே நேரத்தில் ஒருவர் ஒரு மணிநேரம் படிக்கலாம். பின்னர் சிறிது இடைவெளி நிச்சயம் தேவை. அந்த நேரத்தில் தண்ணீரோ, தேநீர் அல்லது காபியோ அருந்தலாம்.ஆனால் அந்த இடைவெளியானது விளையாடுவதற்கோ, டி.வி. பார்ப்பதற்கோ செலவிடப்படக்கூடாது.ஏனெனில் அதன்பிறகு மீண்டும் படிப்பிற்கு திரும்புவது சிரமமாகிவிடும். அதேசமயம் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தனியாக நேரம் ஒதுக்கப்பட வேண்டும். படிப்பின்போது இடைவெளி விடுவதற்கானமுக்கிய நோக்கமே கண்களுக்கும், திசுக்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒரேமுறையில் உட்கார்ந்து படிப்பதால் ஒரு மாணவர் விரைவில் சோர்வடைந்து, அதன்மூலம் மன அழுத்தமும்அதிகமாகிறது.
ஒரு நாள் முழுவதும் படிக்கையில், பாடத்தை மாற்றி மாற்றி படித்தால் சோர்வை தவிர்க்கலாம். உதாரணமாக நீங்கள் வரலாற்றுப் பாடத்தை படித்துவிட்டு, பின்னர் இயற்பியலைப் படிக்கலாம். இதைத்தவிர வேறுசில வழிமுறைகளும் உள்ளன. நீங்கள் பாட சம்பந்தமாக எழுதும் வேலையை செய்துகொண்டிருந்தால், அதைமுடித்துவிட்டு படிக்கும் வேலையை தொடங்கலாம். மேலும் அறிவியல் பாடங்களில் உள்ள படங்களையும் வரைந்து பார்க்கலாம். இதன்மூலம் உங்களின் மூளை விரைவில் சோர்வடையாமல் தவிர்த்து, பாடத்தை நன்றாக நினைவில் பதிய வைக்கலாம்.
படிப்பதில், மேலே சொன்னதைப் போன்ற மாற்று நடவடிக்கைகள் சிறந்த பலனளிப்பதாக இருந்தாலும், இந்த செயல்முறை அனைவருக்கும் ஒரேமாதிரியாக ஒத்துவரும் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரும் தங்களின் மனோநிலை மற்றும் விருப்பத்திற்கேற்ப திட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். படிக்கும் செயல்முறையில் நாம் வகுக்கும் திட்டமானது, முறையாக பின்பற்றக்கூடியதாகவும், நமக்கு ஒத்துவரக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம்தான் நாம் அதிகமான பலன்களைப் பெறமுடியும்.
உயர்கல்விக்கு மாணவர்களை தயார்படுத்த, அடித்தளமாக அமைவது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு. தேர்வு பற்றிய பயம் மாணவர்களுக்கு மட்டுமல்லாது பெற்றோர்களுக்கும் இந்த சமயத்தில் இருக்கும். இந்த சமயத்தில் பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு அன்பும் ஆதரவுமாக இருந்து குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற உதவியாய் இருக்க வேண்டும்.மாணவர்கள் தேர்வுக்கு நன்கு தயாராக, பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய தெரிந்த சில டிப்ஸ்கள் இங்கே..
வீட்டின் சூழ்நிலையை மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ப அமைதியாக வைத்துக்கொள்வது பெற்றோர்களின் முதல் கடமை.
மாணவர்கள் அன்றாடம் மேற்கொள்ளும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பெற்றோர்கள் தடுக்க கூடாது. ஆனால் அதில் நேரத்தை வீணாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்களை படி, படி என்று வற்புறுத்தக்கூடாது. அதற்கு பதிலாக அன்பாக அவர்களை படிக்க கேட்டுக் கொள்ள வேண்டும்.
சில எளிய உடற்பயிற்சிகளை கற்றுத்தந்து, அதை அவர்கள் தினமும் முறையாக மேற்கொள்ளும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் இரவில் நன்கு தூங்குகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு தகுந்த ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கி, எல்லா விதத்திலும் பெற்றோர்கள் ஆதரவாக இருக்க வேண்டும்.
மாணவர்களின் திறனையும், விருப்பத்தையும் தெரிந்து கொள்ளாமல், பெற்றோர்கள் தங்களது எதிர்பார்ப்பை மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது.
மாணவர்கள் தனித்திறனை பெற்றோர்கள் ஊக்குவித்த வண்ணம் இருக்க வேண்டும். இதனால் அவர்கள் திறன் மேம்படும்.
மாணவர்களிடம் நம்பிக்கையூட்டும் விதமாக பேசி, இதற்கு முன் தடைகள், தோல்விகள் ஏற்பட்டிருந்தால் அதை மறக்கச் செய்ய வேண்டும்.
ஒருபோதும் தங்கள் குழந்தைகளை அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம்.
தேர்வு சமயத்தில் தேர்வு முடிவைப் பற்றி நினைக்காமல், முடிந்த அளவு நல்ல முயற்சி எடுக்க மாணவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.
http://www.tamilparents.com/2011/12/parenting-tips-at-childrens-exam-time.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Similar topics
» தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..!
» பல்வேறு தடைகளைத் தாண்டி தேர்வெழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள்
» புதினா வாடாமல் தடுக்க... மிருதுவான சப்பாத்தி செய்ய... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» சூப் செய்யும்போது -(டிப்ஸ்…டிப்ஸ்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|