ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்!

3 posters

Go down

சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Empty சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்!

Post by கேசவன் Sat Dec 03, 2011 8:55 am

சபரிமலையில் மகர ஸங்க்ரமண நேரத்தில், ஐயப்பனுக்குச் சார்த்துவதற்காக பந்தளம் அரண்மனையிலிருந்து திருவாபரணம் புறப்படும். வருடத்தில் 56 நாட்களுக்குத்தான் வெளியே கொண்டு வரப்படும் திருவாபரணம் வருடத்தின் மற்ற நாட்கள் முழுவதும் பந்தள அரண்மனையின் பொறுப்பில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும். பந்தளம் அரண்மனையில், பூஜைகளை முடித்து சபரிமலை புறப்படுவதற்காக அரசர் உட்பட அனைவரும் காத்திருப்பார்கள். வானில் கருடன் வந்து திருவாபரணத்தை வட்டமிட்ட பிறகுதான், திருவாபரண யாத்திரை புறப்படும். இந்த ஆபரணப் பெட்டியைச் சுமப்பதற்காகவே, பாரம்பரியமாகவே சில குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களே இந்தப் பெட்டிகளைச் சுமப்பதற்காக விரதம் இருந்து வருகிறார்கள்.

பந்தளம் அரண்மனையிலிருந்து தலைச்சுமையாகப் புறப்படும் திருவாபரண ஊர்வலத்தைக் காண, வழியெங்கும் விளக்கேற்றி சாதிமத பேதமின்றி பக்தர்கள் காத்திருந்து வரவேற்பார்கள். சுமார் மூன்று நாட்கள் காட்டுவழியில் வந்து சேர்ந்த ஆபரணம் பெரியானை வட்டத்தை அடையும்போது பரவசம் ஏற்படும். சரங்குத்தி கடந்து பதினெட்டாம் படியேறி ஆபரணம் சன்னிதானம் அடைவதைக் காண கண்கோடி வேண்டும். ஐயப்பனுக்குத் திருவாபரணம் சார்த்திக் காணக் கிடைக்கும் தரிசனம் கண நேரம் மட்டுமே கிடைக்கும் அரிதான ஒரு தரிசனம்!

அந்த ஆபரணங்களைக் குறித்து அறிய, பல பக்தர்களுக்கும் ஆர்வம் இருக்கும் அல்லவா? சுத்தமான பசுந்தங்கத்தால் ஆன இந்த ஆபரணங்கள் சபரிமலையில் கோயில் கொண்ட தர்ம சாஸ்தாவுக்காக பந்தளராஜனால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள் ஆகும்.

திருவாபரணப் பெட்டி ஊர்வலமாக வரும்போது மொத்தம் மூன்று பெட்டிகளாக வரும். அவை 1. திருவாபரணப் பெட்டி, 2. வெள்ளிப் பெட்டி, 3. கொடிப்பெட்டி. இதில் திருவாபரணப் பெட்டி மட்டுமே ஐயப்பன் சன்னதியை அடையும். மற்ற இரண்டு பெட்டிகள் மாளிகைப்புறத்தம்மன் சன்னதிக்குச் சென்று விடும்.

1. திருவாபரணப் பெட்டி

ஐயப்பன் சன்னதியில் கொடுக்கப்படும் முக்கியமான திருவாபரணப் பெட்டியில், தர்மசாஸ்தாவை அலங்கரிக்க கீழ்க்காணும் ஆபரணங்கள் உள்ளது.

திருமுகம்(சாஸ்தாவின் முகக் கவசம்)
ப்ரபா மண்டலம் (ப்ரபாவளி)
வலிய சுரிகை (பெரிய கத்தி)
செறிய சுரிகை (சிறிய கத்தி)
யானை, விக்ரஹம்-2
கடுவாய் புலி விக்ரஹம் 1
வெள்ளி கட்டிய வலம்புரிச் சங்கு
பூர்ணா புஷ்கலா தேவியர் உருவம்
பூத்தட்டம் (பூக்களை வைக்கும் தங்கத் தட்டு)
நவரத்தின மோதிரம்
சரப்பளி மாலை
வில்வ மாலை (தங்க இதழ்களால் ஆனது)
மணி மாலை (நவரத்னங்களால் ஆனது)
எருக்கம் பூ மாலை (தங்க எருக்கம்பூக்களால் ஆனது)

2. வெள்ளிப் பெட்டி

மாளிகைபுறம் சன்னதிக்குச் செல்லும் இந்த வெள்ளிப்பெட்டியில், தங்கக்குடம் ஒன்று மற்ற பூஜா பாத்திரங்கள் இந்தத் தங்கக்குடத்தால் சுவாமிக்கு பின்னர் நெய்அபிஷேகம் செய்யப்படும்.

3. கொடிப்பெட்டி

மாளிகைப்புறம் சன்னதிக்குச் செல்லும் இந்தக் கொடிப்பெட்டியில், யானைக்கான நெற்றிப்பட்டம் தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைக்கான கொடிகள்
குடை மற்றும் யானை ஊர்வலத்துக்கான பொருட்கள் உள்ளன. கொடிப்பெட்டியில் உள்ளவற்றால் மறுநாள் யானை அலங்கரிக்கப்பட்டு, மாளிகைப்புறத்து தேவி சரம்குத்தி வரையில் யானையில் பவனி வருவாள்.

இந்த திருவாபரணங்கள் சபரிமலையில் கோயில் கொண்டுள்ள பகவானுக்கு அணிவிக்கவேயன்றி, ஐயப்பன் தானே அணிந்து கொண்டிருந்தவையல்ல! திருவாபரணத்தில் வரும் சாஸ்தாவின் திருமுகத்தில், அழகான முறுக்கு மீசை தெரிவதைக் காணலாம். அத்துடன் பூர்ணா புஷ்கலா தேவியரின் உருவமும் உடன் இருப்பதைக் காணமுடியும். மகர நட்சத்திரம் உதித்து வானில் கருடன் வட்டமிட, அந்த ஆபரணங்களை ஐயப்பனுக்குச் சார்த்தி தீபாராதனை நடக்கும்
நன்றி : தினமலர்
http://temple.dinamalar.com/news_detail.php?id=7217


Last edited by கேசவன் on Sat Dec 03, 2011 10:44 am; edited 1 time in total


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! 1357389சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! 59010615சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Images3ijfசபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Empty Re: சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்!

Post by ரேவதி Sat Dec 03, 2011 10:32 am

இதுவரை அறியாத தகவல், அறிய தந்தமைக்கு நன்றி..


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Empty Re: சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்!

Post by dhilipdsp Sat Dec 03, 2011 10:54 am

சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! 224747944
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்! Empty Re: சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum