ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?

+9
விநாயகாசெந்தில்
ரா.ரமேஷ்குமார்
dhilipdsp
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
ஸ்ரீதரன்
சிவா
கேசவன்
tamilanmanian
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

request தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?

Post by tamilanmanian Fri Dec 02, 2011 4:21 pm

உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் , தென்னிந்தியா முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன்,1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன்,உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை ,இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைபுறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்
தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? 378655_244519198944741_100001599881709_669731_1572860208_n
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009

http://www.tamilanmanian.wordpress.com

Back to top Go down

request Re: தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?

Post by கேசவன் Fri Dec 02, 2011 5:17 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? 1357389தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? 59010615தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? Images3ijfதமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

request Re: தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?

Post by சிவா Fri Dec 02, 2011 5:18 pm

ராஜராஜ சோழனின் சமாதியா?

தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? Large_91515

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சமாதி உடையாளூரில் உள்ளதாக வரலாற்று அறிஞர்களால் கூறப்படும் தகவல் உண்மையா என்பதை தமிழக அரசு ஆராய்ந்து பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். கி.பி., 11ம் நூற்றாண்டில் பழையாறை சோழர்களின் தலைநகரமாக செயல்பட்ட போது, ராஜராஜ சோழன் தங்கியிருந்த இடம் தான் இன்று சோழன் மாளிகை எனவும், சோழப் பேரரசின் படைகள் இருந்த இடம் ஆரியப்படையூர், பம்பப்படையூர், புதுப்படையூர், மனப்படையூர் எனவும், ராஜராஜ சோழன் தனது வாழ்நாளின் இறுதியை உடையாளூர் பகுதியில் கழித்த போது அவர் இறந்துள்ளார். அவர் இறந்த பின் அவருடைய உடலை உடையாளூரிலேயே அடக்கம் செய்துள்ளனர்.

ராஜராஜ சோழன் திருக்கோவிலூரில் கி.பி., 985ம் ஆண்டு பிறந்து பின்னர் சோழப் பேரரசாக முடிசூட்டி கொண்டு தென்னிந்தியா முழுவதும் தனது பேரரசை பரப்பினார். தென்னிந்தியாவில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல சிற்றரசர்களை வெற்றி பெற்று வந்தார். ராஜராஜ சோழன் தன்னுடைய தெய்வபக்தியையும், கலையையும் நேசிக்கும் விதமாக தஞ்சை பெரிய கோவிலை கி.பி., 1010ம் ஆண்டில் கட்டி முடித்தார். பின்னர் கி.பி., 1012ம் ஆண்டில் ராஜராஜ சோழன் தனது பட்டத்தை துறந்து தன் மகன் ராஜேந்திரசோழனுக்கு முடி சூட்டினார். தொடர்ந்து தன்னுடைய வாழ்நாளை பழையாறையில் கழித்ததாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கி.பி., 1014ல் ராஜராஜ சோழன் காலமானார். பின்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தன் மூதாதையர்கள் மீது போர் தொடுத்ததை பழி வாங்கும் நோக்கத்தில் சோழப் பேரரசு மீது போர் தொடுத்து பழையாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அழித்தார்.

அதில் எஞ்சிய இடங்களில் ஒன்றான உடையாளூர் பால்குளத்தம்மன் கோவிலில் இன்றும் ராஜராஜ சோழன் நிறுவிய கல்வெட்டு ஒன்று ஆதாரமாக உள்ளது. பின்னர் சோழப் பேரரசினர் காலப்போக்கில் தங்களுடைய ஆட்சியை பழையாறையிலிருந்து திருச்சியை அடுத்த உறையூருக்கு தலைநகரை மாற்றினர். பழையாறை, உடையாளூர், பட்டீஸ்வரம், சோழன் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் சோழர்கள் வாழ்ந்து வந்த இடமாக வரலாற்று குறிப்புகள் உணர்த்துவதாலும், சோழ வம்சத்தினர் இப்பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும், உடையாளூர் கிராமத்தில் ராஜராஜ சோழனின் சமாதி இருப்பதாகவும் கல்வெட்டு ஆய்வாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக தெரிவித்து வருகின்றனர். ராஜராஜ சோழனின் சமாதி இருப்பதாக கூறப்படும் இடத்தில் புதையுண்டு இரண்டடி வெளியே தெரியும் சிவலிங்கம் ஒன்று உள்ளது. இந்த சமாதியை கலெக்டர் சண்முகம் கடந்த ஆண்டு ஆய்வு செய்தார். இதற்கிடையில் கடந்த மாதம் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை செயலர் இறையன்பும் ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலை சிற்ப துறை முனைவர் பட்ட ஆய்வரும், சோழர்கள் பாரம்பரிய சிற்பியுமான சுவாமிமலை மோகன் ஸ்தபதி கூறியதாவது: தென்னிந்தியா மட்டுமின்றி இலங்கை, லட்சதீவு, மாலத்தீவு உள்ளிட்ட ஏராளமான வெளிநாடுகளையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து, உலகத்தை முதன்முதலாக ஆட்சி செய்த தமிழன் என்ற பெருமையை பெற்றவன் ராஜராஜ சோழன். தன்னுடைய வாழ்நாளை பழையாறையில் கழித்த போது அவர் இறந்து போய் உடையாளூரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வெட்டு தகவல் காணப்படுகிறது.

ராஜராஜ சோழனின் சமாதி உண்மையிலேயே இங்குள்ளதா என்பதை தமிழக அரசு தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்து உலகுக்கு உணர்த்த வேண்டும். பல வரலாற்று அறிஞர்களின் கூற்றை அரசு செவிமடுத்து கேட்டு, ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட உள்ள இந்த நேரத்தில் அரசு அறிவிக்க வேண்டும் என்பதே வரலாற்று அறிஞர்களின் விருப்பமாகும். இவ்வாறு மோகன் ஸ்தபதி கூறினார். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், "மாமன்னன் ராஜராஜ சோழனின் சமாதி குறித்த தகவல்களை திரட்டி வருகிறோம். இதுகுறித்து ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்' என்றார்.

தினமலர் - செப்டம்பர் 24,2010


தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?

Post by சிவா Fri Dec 02, 2011 5:21 pm

வெளிச்சத்துக்கு வருகிறது... ராஜராஜ சோழன் சமாதி!


சோழ மாமன்னர்களில் மங்காத கீர்த்தி கொண்டவன் ராஜராஜ சோழன். சிறந்த சிவபக்தனான இவன், சோழ நாடு முழுவதையும் அளந்து கணக்கிட்டு, தற்போதைய நில அளவை முறைக்கு முன்னோடியாக இருந்தவன். தமிழ் வேதமாகிய தேவாரத்தை, தில்லைவாழ் அந்தணரி டமிருந்து மீட்டு உலகுக்கு அளித்தவன். இத்தனைக்கும் மேலாய் இன்றளவும் முற்கால தமிழக கட்டடக் கலைக்கு சான்றாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலை கட்டியவன்.

இத்தனை பேரும் புகழும் கொண்ட மன்னனின் எல்லா செயல்களுக்கும் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் சான்றாக இருக்கின்றன. ஆனால், அவர் இறந்த 1014&ம் ஆண்டு அவரது உடல் புதைக்கப்பட்டதா, எரிக்கப் பட்டதா, அது எங்கே நடந்தது என்பது போன்ற கேள்விகள் காலத்தின் இருண்ட பக்கங்களில் காணக் கிடைக்காமலே இருந்தன. இப்போது இந்த விஷயத்தில் சிறு வெளிச்சம் விழுந்திருக்கிறது.

‘கும்பகோணம் பட்டீஸ்வரம் பக்கம் இருக்கிற உடையாளூர் என்ற ஊரில்தான் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம் இருக்கிறது’ என்றொரு தகவலைத் தன் ஆராய்ச்சியின் மூலம் வெளியுலகுக்கு அறிவித்திருக்கிறார், கும்பகோணத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் சேதுராமன். இவரது இந்த அறிவிப்பு, மற்றவர்களாலும் நிபந்தனையுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, தமிழக அரசு அறநிலையத்துறையின் திருக்கோயில்கள் சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் உயர்மட்ட உறுப்பினரான போரூர் சாந்தலிங்க அடிகளார், ‘‘ராஜராஜ சோழனின் சமாதி இருக்கும் இடத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கும், சோழனின் பெருமைகளைப் பறைசாற்றும் வண்ணம் இங்கு அமைந்திருக்கும் வரலாற்று நினைவிடங்களை ஒருங்கிணைத்து சுற்றுலாத் தலமாக அறிவிக்கவும் அரசிடம் பரிந்துரை செய்வோம்’’ என்று அறிவித்திருக்கிறார்.

கும்பகோணத்தில் இருந்து ஆறாவது கிலோமீட்டரில் இருக்கும் உடையாளூர் கிராமத்துக்குச் சென்றோம். பச்சைப் பசேலென்று கண்களுக்குள் குளிர்ச்சியை அள்ளித் தெளிக்கிறது அந்தக் கிராமம். சின்ன சந்தில் உள்ள குடிசை வீட்டுக்கு போய் ‘ராஜராஜன் சமாதி’ என்று கேட்டால் குடிசையில் இருக்கும் பெரியவர் பக்கிரிசாமி அந்த வீட்டுக்குப் பின்னால் இருக்கும் வாழைத் தோப்புக்குள் அழைத்துச் செல்கிறார். அங்கே ஓரிடத்தில் ஒரு பெரிய சிவலிங்கம் தெரிகிறது. அதற்கு எதிரே விளக்கேற்ற ஒரு மாடம் தெரிகிறது. அதைக் காட்டி இதுதான் என்கிறார் பெரியவர்.

கிராமத்தில் இருக்கும் வயோதிக சிவாச்சாரியாரான வைத்தியநாதர் என்பவர், ‘‘கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சேதுராமன் மைசூரில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு படிகளைப் பார்த்தபோது, இங்குள்ள பெருமாள் கோயிலில் முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு ஒன்று இருப்பதையும் அதில் ராஜராஜ சோழன் எழுந்தருளி இருக்கும் நினைவு மண்டபம் சிதிலமடைந்து இருந்ததாகவும் அதை சரிசெய்ததாகவும் பொறிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்திருக்கிறார். உடனே இங்கு வந்து பெருமாள் கோயிலை ஆய்வு செய்தார். அப்போதுதான் ராஜராஜன் நினைவுமண்டபத் தூண் இருக்கும் விஷயமே வெளியில் தெரிந்தது. அதற்குப் பிறகு குடவாசல் பாலசுப்ரணியமும் அவரும் அந்தத் தூணை தேடும்போதுதான், கிடைக்காமல் என்னிடம் வந்து கேட்டார்கள். பால்குளத்து அம்மன் கோயிலைப் புதுப்பிக்கும்போது, ஒரு தூண் தேவைப்பட்டதால் பெருமாள் கோயிலில் இருந்த அந்தத் தூணை அங்கே எடுத்துப்போய் வைத்து விட்டோம் என்றேன். உடனே அங்கு சென்று பார்த்தபோது அது ராஜராஜன் நினைவு மண்டபத் தூண் என்பதற்கான எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. இதைத் தொல்பொருள் துறையினரும் படியெடுத்து ஆவணமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் எல்லோரும் ராஜராஜன் நினைவிடம் இங்குதான் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டார்கள்’’ என்றார்.

ராஜராஜன் நினைவிடத்தில் குடிசைகட்டி வாழ்ந்து வரும் பக்கிரிசாமி ‘‘கோயில் இடமான இதில் எங்க அப்பா காலத்திலிருந்து குடியிருக்கிறோம். இரண்டு வருஷத்துக்கு முந்தி ஒருநாள் மழை பெஞ்சப்போ, இந்த இடத்துல திடீர்னு மண் உள் வாங்கிடுச்சு. அப்போ கொஞ்ச ஆழத்துக்கு மண்ணைத் தோண்டிப் பார்த்தேன். உள்ளே எண்கோண வடிவில் கட்டடம் போன்ற அமைப்பு இருந்தது. என்ன, ஏதுனு புரியாததால அதை அப்படியே மூடிட்டேன். இப்பதான் இது ராஜா சமாதின்னு தெரிஞ்சுகிட்டேன். அதற்கப்புறம் தினமும் கொஞ்சம் எண்ணெய் ஊத்தி விளக்குக் கொளுத்தி வைக்கிறேன்’’ என்றார்.

இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்டி வரும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியனிடமும் இதுகுறித்துப் பேசினோம். ‘‘அந்த இடத்தில்தான் ராஜராஜ சோழன் சமாதி இருக்கும் என்பதை 100 சதவிகிதம் உறுதியாக சொல்லத்தகுந்த ஆதாரங்கள் இல்லைதான். ஆனால், அதுவாகத்தான் இருக்கும் என்பதற்கு 90 சதவிகித சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதைப்பற்றி பேசுவதற்குள் அதை சமாதி என்று சொல்வது தவறு. அவனது அஸ்தி வைக்கப்பட்டு, அதன்மீது எழுப்பப்பட்ட பள்ளிப்படை கோயிலாகவோ நினைவு மண்டப மாகவோகூட அது இருக்கலாம். அதனால் அதை நினைவிடம் என்று அழைக்கலாம். சோழ மன்னர்களின் குடும்பத்தினர் தஞ்சையில் அரசாண்டாலும் அவர்கள் வசிக்கும் மாளிகைகள் பழையாறையில்தான் இருந்தது. அதோடு ராஜராஜ சோழனின் மனைவியர்களில் ஒருவரான பஞ்சவன் மாதேவியினுடைய பள்ளிப்படை கோயில், பட்டீஸ்வரத்தில்தான் இருக்கிறது. அதனாலும் அந்த நினைவு மண்டபத் தூணாலும் அந்த இடம் ராஜராஜ சோழனின் நினைவிடம்தான் என்று உறுதியாக சொல்லலாம். கங்கைகொண்ட சோழபுரத்தையும், தஞ்சாவூரையும் அகழ்வாராய்ச்சி செய்ததைப் போல, இங்கும் மத்திய தொல்பொருள் துறை முழுவீச்சில் அகழாய்வு செய்தால், இன்னும் பல சரித்திர சான்றுகள் கிடைக்கும்’’ என்றார்.

சென்னையில் இருக்கும் தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை அலுவலகத்தில் இதுகுறித்து விசாரித்தோம். ‘‘உடையாளூர் கோயில் கல்வெட்டில் ‘மகேஸ்வரதானம்’ என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது இறந்தவர்களுக்காகக் கொடுக்கப்படுவது. அதோடு ராஜராஜேஸ்வரம் என்ற கோயில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது ராஜராஜனுடைய அஸ்தி மேல் எழுப்பப்பட்ட கோயிலாக இருக்கலாம். அதோடு பால்குளத்து அம்மன் கோயிலில் இருக்கும் கல்வெட்டுத் தூணையும் பார்க்கிறபோது, அந்த இடம் ராஜராஜன் நினைவிடமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆனால், அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்வது சம்பந்தமாக தங்களிடம் திட்டம் ஏதும் இல்லை’’ என்றனர்.

நவம்பர் 11, 2008:http://heilderfuhrer.blogspot.com/2008/11/blog-post.html


தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?

Post by சிவா Fri Dec 02, 2011 5:24 pm

தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? P16a

தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? P17a


தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?

Post by ஸ்ரீதரன் Fri Dec 02, 2011 6:52 pm

தேடி தேடி தொலைத்து கொண்டிருக்கிறோம் வாழ்க்கையை ,
தேடாமல் தொலைத்து கொண்டிருக்கிறோம் வாழ்ந்தவர்களை

avatar
ஸ்ரீதரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

request Re: தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?

Post by சார்லஸ் mc Fri Dec 02, 2011 7:05 pm

ஸ்ரீதரன் wrote:தேடி தேடி தொலைத்து கொண்டிருக்கிறோம் வாழ்க்கையை ,
தேடாமல் தொலைத்து கொண்டிருக்கிறோம் வாழ்ந்தவர்களை

நன்றாயிருக்கிறது சூப்பருங்க
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

request Re: தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?

Post by ஸ்ரீதரன் Fri Dec 02, 2011 7:08 pm

சார்லஸ் mc wrote:
ஸ்ரீதரன் wrote:தேடி தேடி தொலைத்து கொண்டிருக்கிறோம் வாழ்க்கையை ,
தேடாமல் தொலைத்து கொண்டிருக்கிறோம் வாழ்ந்தவர்களை

நன்றாயிருக்கிறது சூப்பருங்க

நன்றி சகா !
avatar
ஸ்ரீதரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

request Re: தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 02, 2011 7:11 pm

இது குறித்து வரலாறு.காம் என்ற இணையத்தில் செய்தியாக முன்பு வெளியானது. ஈகரையில் வெளியிட்டதற்காக நன்றி. உங்களுக்கு என் விருப்ப பொத்தானைப் பாவித்தேன். கூடுதல் செய்தி கொடுத்த சிவா அவர்களுக்கும் நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

request Re: தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?

Post by dhilipdsp Fri Dec 02, 2011 7:16 pm

தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? 224747944
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

request Re: தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory
» முகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை..
» சாதிய அடையாளங்களைத் தாண்டிய தமிழ் அடையாளம் ஒன்றை நாம் ஏற்பதற்கான பொதுப் பண்பாட்டுவெளி ஏதும் இருப்பதாக கருதுகிறீர்களா?
»  தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum