புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_m10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10 
1 Post - 50%
heezulia
குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_m10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_m10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10 
284 Posts - 45%
heezulia
குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_m10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_m10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_m10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_m10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10 
20 Posts - 3%
prajai
குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_m10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_m10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_m10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_m10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10 
7 Posts - 1%
mruthun
குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_m10குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 28, 2011 8:29 pm

குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன் :) Tamil-DailyNews_Paper_29959833622
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
கிருஷ்ணன் வருகிறான் என்ற தகவல் எட்டியதுமே துரியோதனனின் அரசவை பலவித உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டது. பாண்டவர்களின்

தூதுவனாக, சமாதானம் பேச அவன் வருகிறான். ‘அவன் தந்திரமிக்கவன். சமாதானம் பேசிவிட்டு சாதாரணமாகப் போகக்கூடியவன் அல்ல. அவன்

வருகையில் நிச்சயம் ஏதோ விஷமம் இருக்கும். பாண்டவர்களுக்கு இவன் பெரிய பலம். இவனை இந்த சந்தர்ப்பத்தில் வீழ்த்திவிட்டால்,

பாண்டவர்களை நிரந்தர அடிமைகளாகவே வைத்திருக்கலாம்...’ & துரியோதனனின் சிந்தனையில் துர்நாற்றம் வீசியது. வரப்போகிற கிருஷ்ணனுக்கு

எந்தவகையிலும் மரியாதை தரக்கூடாது என்று தன் சபையோருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தான். அவன் சபைக்குள் எடுத்து வைக்கும் முதல்

காலடியிலிருந்தே அவனை அவமானப்படுத்த வேண்டும் என்று குரூரமாகச் சொல்லி வைத்திருந்தான்.

துரியோதனன் சபையில் ரிஷிகளும் ஆன்றோர்களும் நிறைந்திருந்தார்கள். காஸ்யபர், ஜாபாலி, வாமதேவர், ஏன் நாரதரும் இருந்திருக்கிறார்.

இவர்களெல்லாம் தூதுவனாக வரும் பகவானை தரிசிக்கும் ஆவலில் வந்தவர்கள். பீஷ்மர், துரோணாச்சார்யார், விதுரர் போன்றவர்களோடு சகுனி,

கர்ணன், விகர்ணன் ஆகியோரும் தத்தமது மன ஓட்டப்படி அங்கே காத்திருந்தார்கள். தம் அகக்கண்களால் பகவானை தரிசித்த திருதராஷ்டிரனும்

காந்தாரியும் அவன் குரல் கேட்கும் ஆவல் தவிப்புடன் காத்திருந்தார்கள். மன்னனின் ஆணையையும் மீறிய ஆவல், அவர்களுடைய உள்ளத் துடிப்பை

அதிகரித்திருந்தது. எந்த மரியாதையையும் பகவானுக்குக் காட்டக்கூடாது என்கிறானே... என்ன செய்வது? என்ற தவிப்பும் கூடியது.
கிருஷ்ணன் வந்தான். நூறுகோடி சூர்ய ப்ரகாசமாக வந்தான். நிதானமான ஆனால் கம்பீரமான நடை அனைவரையும் பிரமிக்க வைத்தது.
சபைக்குள் அவன் நுழைந்தபோது எல்லோரும் எழுந்து நின்றார்கள். அதைப் பார்த்துக் கடுகடுத்தான் துரியோதனன். ‘என் உத்தரவை இவர்கள்தான்

எத்தனை துச்சமாக மதிக்கிறார்கள்!’ என்று அவர்கள் மீது மனசுக்குள் கோபம் கொப்பளித்தது. ஆனால் கிருஷ்ணனுக்கு எழுந்து நின்று மரியாதை

தெரிவித்தவர்கள், தன்னையும் சற்றே கேலியுடன் பார்ப்பதை அறிந்து திடுக்கிட்டான். தன்னையே பார்த்துக் கொண்டான். ஆமாம், அவனறியாமல்

அவனும் எழுந்து நின்றிருந்தான்! அடிமனதில் கிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று தோன்ற வைத்த கிருஷ்ணனின் லீலைதான் அது!
தன் மேலேயே அவனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அது கிருஷ்ணன் மீதான வெறுப்பு என்ற நெருப்பிற்கு நெய் வார்த்தது. ஆனாலும்

மனதை சமாதானப்படுத்திக் கொண்டான். அதுதான் ஏற்கெனவே யாருக்கும் தெரியாமல் திட்டமிட்டாகிவிட்டதே. இன்றோடு கிருஷ்ணன்

தொலைந்தான்...!

மெல்ல நடந்து வந்த கிருஷ்ணன், சபையோர் அனைவரையும் பார்த்து மெல்ல முறுவலித்தான். அப்போதே அனைவரும் பரம திருப்தியடைந்தனர்.

பகவானைக் காணும் பாக்கியம் அடுத்து எப்போது கிட்டுமோ! தனக்கென அமைக்கப்பட்டிருந்த இருக்கைக்குப் படியேறிச் சென்றான் கிருஷ்ணன்.

இருக்கையில் அமரும் முன்னர் மீண்டும் ஒருமுறை அனைவரையும் பார்த்தான். துரியோதனனைப் பார்த்து விஷமமாகச் சிரிக்கவும் செய்தான். இடது

காலை தரையில் ஊன்றி, வலது காலை மடித்து வைத்தபடி அந்த ஆசனத்தில் அமர்ந்தான். அனைவரும் ‘பகவானே, பகவானே’ என்று மனசுக்குள்

அரற்றிக் கொண்டிருந்தபோதே, எல்லோருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் அந்த ஆசனம் உள் வாங்கியது. ஒரு சிற்ப தோரணையாய் அமர்ந்திருந்த

கிருஷ்ணன் அப்படியே கீழே சரிந்தான்.

நிலவறையில் அவனுக்காகவே காத்திருந்தார்கள் சில மல்லர்கள். துரியோதனனின் இந்த ஏற்பாட்டை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்தது போல,

அவர்களை கிருஷ்ணன் எதிர்த்தான். வெகு எளிதாக அவர்களைப் பந்தாடி, வீழ்த்தி விஸ்வரூபம் எடுத்தான். துரியோதனாதியர்கள் பிரமித்து நிற்க,

ஏனையோர் கிருஷ்ணனைக் கைதொழுது, கண்களில் நீர் மல்க வணங்கினார்கள்.
அவ்வாறு ஆசனத்தில் அமர்ந்த கிருஷ்ணனின் அந்த கோலத்தை இப்போதும் நாம், காஞ்சி
புரத்தில், திருப்பாடகம் தலத்தில் தரிசிக்கலாம்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, மகாபாரதப் போர் நிகழ்ந்ததும் அதில் பாண்டவர்கள், கிருஷ்ணனின் உதவிகளால் வெற்றி பெற்றதும் பின்னால், பலரும்

படித்து அல்லது கேட்டு இன்புறும் இதிகாசமயிற்று. இப்படி இந்த இதிகாசத்தை வைசம்பாயனர் என்னும் மகரிஷியிடம் கேட்டு வந்த ஜனமேஜயன்

என்ற மன்னன், கிருஷ்ணன் துரியோதனன் சபைக்கு தூதுவனாகப் போன சம்பவத்தில் அப்படியே லயித்துப் போனான். அந்த விஸ்வரூப தரிசனத்தைத்

தானும் காண பெரிதும் ஆவலுற்றான். ‘அது இப்போது சாத்தியமா?’ என்று அவன் ஏக்கத்துடன் கேட்க, அது முடியும் என்றும் காஞ்சிக்கு அவன் சென்று

அஸ்வமேத யாகம் செய்தால் அந்த பாக்கியம் அவனுக்குக் கிட்டும் என்றும் முனிவர்கள் யோசனை சொன்னார்கள்.
அதன்படியே மனப்பூர்வமாக யாகம் மேற்கொண்ட மன்னன், கண்ணனின்
விஸ்வரூப தரிசனம் கண்டு பரவசமுற்றான்.
அதே பரவசத்தை, திருப்பாடகம் தலத்தில், அவனது கருவறையில் நாம் அடைய முடிகிறது. சுமார் 25 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் பிரமாண்ட

திருக்கோலம்!

விஸ்வரூப தரிசனத்தை பகவான் மூன்று இடங்களில்தான் காட்டியிருக்கிறான்: சகாதேவனிடம் நிமித்தம் கேட்கப் போனபோது ஒருமுறை,

துரியோதனன் அரசவைக்கு தூதுவனாகப் போனபோது ஒருமுறை; குருக்ஷேத்திர யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்தபோது ஒருமுறை.
ஆக, திருப்பாடகத் திருத்தலம், இந்த வகையில் தனிச் சிறப்பும் பெருமையும் வாய்ந்தது. 108 திவ்ய தேசங்கள் மட்டுமல்லாமல், அனைத்து வைணவத்

தலங்களில்கூட காண இயலாத அற்புத தோற்றம் இது.
கருவறையின் அமைப்பும் மிகவும்

வித்தியாசமாகத்தான் இருக்கிறது. கிருஷ்ணன் சரிந்து விழுந்த நிலவறை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று எண்ண வைக்கும் வகையில்

அமைந்திருக்கிறது. கூடவே அங்கே மல்லர்களை வீழ்த்தி விஸ்வரூபம் எடுக்கும் காட்சியும் மனக்கண்ணில் ஒளிவிடுகிறது.
இங்கே பெருமாள் பாண்டவ தூதர் என்றே அழைக்கப்படுகிறார். தன்னை மிகவும் எளியவனாகக் காட்டிக்கொள்ளும் இறைவனுக்கு, அவர் எந்தப்

பதவியில் எந்தப் பணியை மேற்கொண்டிருந்தாரோ அதே பதவிப் பெயரே இங்கே நிலைத்திருக்கிறது. இவரது திருமேனிக்கு திருமஞ்சனம்

செய்விப்பதில்லை. வருடத்திற்கு ஒருமுறை சாம்பிராணி தைல அபிஷேகம் மட்டுமே.

இந்த அர்ச்சாவதாரத்தை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். அவரது இருதயத்தில் வாசம் செய்யும் மகாலட்சுமி, தூதுவனாகச் சென்றதால்

அதற்கேற்ற உடையலங்காரம், ஏன் விரல் நகங்கள் கூட தத்ரூபமாக அந்த விஸ்வரூபனை நமக்குக் காட்டுகிறது.
திருப்பாடகம், ஒரு கிருஷ்ணத் தலம் என்பதால் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கான ப்ரீதி தலமாகவும் விளங்குகிறது.
யக்ஞ மூர்த்தி என்ற அத்வைத கொள்கையுடைய சான்றோர் ஒருவர், ராமானுஜருடன் வாதப்போரில் ஈடுபட்டார். பதினெட்டு நாட்கள் வாதம்

தொடர்ந்தது. இறுதியில் தன் தோல்வியை ஒப்புக் கொண்ட யக்ஞ மூர்த்தி, ராமானுஜரின் கீர்த்திக்கும் வாத வன்மைக்கும் தன்னை அடிமையாக்கிக்

கொண்டார். தனக்கு எதிராக வாதம் புரிந்தவர் ஆனாலும் அவருடைய பாண்டியத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவரை, ‘அருளாளப் பெருமாள்

எம்பெருமானார்’ என்று அழைத்துச் சிறப்பித்தார், ராமானுஜர். ராமானுஜரின் சீடராகி, அவரது கொள்கைகளையும் தத்துவங்களையும் பரப்பும் நோக்கத்தில்

இதே தலத்தில் பல்லாண்டு வாழ்ந்திருந்த அவரை கௌரவிக்கும் வகையில், இந்த பாண்டவ தூதர் கோயிலிலேயே அவருக்குத் தனி சந்நதி உள்ளது.

அவரை தரிசனம் செய்யும்போது, அவருடன் ராமானுஜரும் உடனிருந்து ஆசியளிப்பது போன்று பிரமை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
தாயார் ருக்மிணி அழகு தரிசனம் அருள்கிறாள். வெள்ளிக்கிழமை தோறும் திருமஞ்சனம் காணும் இந்த அன்னை, குசேலனாய் தன்னிடம் வந்து பக்தி

செலுத்துவோரை, பகவான் கிருஷ்ணருக்கு சிபாரிசு செய்து குபேரனாக வாழ வரம் அருள்கிறாள்.

சக்கரத்தாழ்வார் மத்ஸ்ய தீர்த்தத்துக்கு எதிரே தனி சந்நதியில் அருள்பாலிக்கிறார். இங்கும் ஒரு நயத்தை நம்மால் ரசிக்க முடிகிறது. திருமாலின்

தசாவதாரங்களில், பத்தாவதாக இனி வரப்போகும் கல்கி அவதாரம் நீங்கலாக உள்ள நவ அவதாரங்களில் முதலாவது மத்ஸ்யம் (மச்சம், மீன்);

ஒன்பதாவது கிருஷ்ணன். தன் அவதாரங்களின் முழு வட்டத்தை இந்தத் தலத்தில் பூர்த்தி செய்திருக்கிறார் மஹாவிஷ்ணு என்றால்

பொருத்தமாகத்தான் இருக்கும். அதனால்தான் முதலவதாரமான மத்ஸ்யம், தீர்த்த உருவிலும், ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணன்

கருவறையிலுமாகக் காட்சி தருகின்றன! சில வருடங்களுக்கு முன்பாகத்தான் இந்த சக்கரத்தாழ்வார் ஸ்தாபிதம் நடந்திருக்கிறது. பக்தை ஒருவருக்கு

திருமால் கனவில் வந்து சக்கரத்தாழ்வாருக்கு ஓர் கோயில் உருவாக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார். அந்த பக்தை காஞ்சி முனிவர்

சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும், பாண்டவ தூதர் கோயில் வளாகத்திலேயே அந்த சந்நதியை அமைக்குமாறு

யோசனை தெரிவித்திருக்கிறார். அப்படி அமைந்தவர்தான் இந்த சக்கரத்தாழ்வார்.

பகவான் கிருஷ்ணரே இங்கு மூலவராக வீற்றிருப்பதால், தீபாவளி திருநாள் இங்கே விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5

மணிக்கெல்லாம் கருட சேவை குறிப்பிடத்தக்க ஒன்று. தவம் புரிந்த சேதனரைச் சந்திரன் ஆதித்தன்சிவன் பிரம்மனிந்திரனா செய்கை &

உவந்துதிருப்பாடக மருவுங் செங்கண் மால் தன் மார்பிருப்பாடக உரையாலே&என்கிறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். தன்னுடைய நூற்றியெட்டு

திருப்பதியந்தாதியில் இவ்வாறு அவர் விளக்குகிறார்: யார் எந்தப் பலனைக் கருதி தவம் செய்தாலும், பகவான் அந்த பலனாகவே அவர்களுக்குக்

கிடைக்கிறான். சந்திரன், சூரியன், சிவன், பிரம்மன், இந்திரன் ஆகியோரின் தவத்திற்கு மகிழ்ந்து, அவரவர் எண்ணப்படியே அருள் செய்தவன் அவன்.

அவன்தான் இங்கே திருப்பாடகத்தில் உறைகிறான்.
நன்றி : தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக