ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம்

5 posters

Go down

2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம் Empty 2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம்

Post by ரேவதி Mon Nov 28, 2011 4:45 pm

2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம் Kanimozhi%2813%29புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி உள்பட 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

இதே வழக்கில், கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார், சினியுக்
ஃபிலிமிஸ்சின் கரீம் மொரானி, குர்காவ் ஃப்ரூட் அண்ட் வெஜிடபிள் ப்ரைவைட்
லிமிடட் இயக்குனர்கள் ஆசிஃப் பாவ்லா மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகியோரையும்
ஜாமீனில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேவேளையில், முன்னாள் தொலைத்தொடர்பு செயலர் சித்தார்த் பெகுராவுக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டது.

கனிமொழி, சரத்குமார் உள்பட ஜாமீன் வழங்கப்பட்ட 5 பேரும் தலா ரூ.5 லட்சம்
மதிப்புள்ள இரண்டு பிணைத்தொகையை செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் நாட்டை
விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத் குமார்,
முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலர் சித்தார்த் பெஹுரா, திரைப்பட
தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகான் பழங்கள் மற்றும் காய்கறிகள் பிரைவேட்
நிறுவன இயக்குநர் ஆசிப் பால்வா மற்றும் சஞ்சீவ் அகர்வால் ஆகிய 6 பேரின்
ஜாமீன் மனு டிசம்பர் 1-ம் தேதி விசாரிக்கப்படும் என முன்பு டெல்லி உயர்
நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கார்ப்பரேட் நிறுவன நிர்வாகிகள் 5 பேருக்கு உச்ச
நீதிமன்றம் ஜாமீன் அளித்ததைத் தொடர்ந்து, தங்கள் ஜாமீன் மனுக்களை விரைந்து
விசாரிக்குமாறு 6 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கனிமொழி உள்பட 6 பேரின் ஜாமீன் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

கனிமொழியின் ஜாமீனுக்காக வழக்கறிஞர் அல்தாஃப் அகமது வாதிட்டபோது, "உச்ச
நீதிமன்றம் 5 பேருக்கு ஜாமீன் வழங்கியதால், மற்றவர்களையும் விடுவிக்க
வேண்டும் என முறையிடுகிறீர்களா? உயர் நீதிமன்றம் மற்ற விஷயங்களை கருத்தில்
கொள்ள வேண்டாமா?" என்று உயர் நீதிமன்ற நீதிபதி வி.கே.ஷாலி கேள்வி
எழுப்பினார்.

பின்னர், ஏனைய 5 பேரின் சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தை
முன்வைத்ததும், கனிமொழி உள்பட 6 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும்
திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பதாக வெள்ளிக்கிழ்மை நீதிபதி அறிவித்தார்.

இந்த நிலையில், இந்த மனுக்களை இன்று மீண்டும் விசாரித்த டெல்லி உயர்
நீதிமன்றம், கனிமொழி, சரத்குமார் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி
உத்தரவிட்டது.


விகடன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம் Empty Re: 2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம்

Post by பிளேடு பக்கிரி Mon Nov 28, 2011 4:50 pm

எனக்கு இப்ப தான் மனசு சந்தோஷமா இருக்கு..
எங்கள் தலைவி கனிமொழி வாழ்க...
2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம் 2308,6-10-20114-45-03PM

இப்படிக்கு
கனிமொழி ரசிகர் மன்ற தலைவர் ஜாலி



2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம் Empty Re: 2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம்

Post by பாலாஜி Mon Nov 28, 2011 4:57 pm

சிறை சென்ற தியாகி "கனிமொழி " வாழ்க சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம் Empty Re: 2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம்

Post by கேசவன் Mon Nov 28, 2011 6:36 pm

வருங்காலத்தில் நாட்டிற்காக சிறை சென்ற இந்த தியாகியின் வரலாறு பாடபுத்தககளில் வராமல் இருந்தால் சரி 2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம் 56667 2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம் 56667


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம் 13573892ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம் 590106152ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம் Images3ijf2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம் Empty Re: 2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம்

Post by சிவா Mon Nov 28, 2011 8:53 pm

6 மாத சிறைவாசம் முடிந்தது: எதிர்பார்த்து - ஏமாந்த கனிமொழிக்கு நிம்மதி

புதுடில்லி : பல முறை கிடைக்குமா, ஜாமின் கனியுமா என்ற பலத்த எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் நிலவி வந்த தருணத்தில் 4 முறைகள் கனிமொழியின் ஜாமின் மனு தள்ளுபடியாகி வந்த போது இன்று அவருக்கு டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. இருப்பினும் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. தொலைதொடர்பு துறையில் ராஜா அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் லைசென்ஸ் வழங்கி மத்திய தணிக்கை துறையில் ஒரு அதிகாரி தரப்பில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்றும், இல்லை 2 ஆயிரத்து 645 கோடிதான் என்று மற்றொரு அதிகாரியும் சொல்லி வந்தாலும் இன்னும் நஷ்டம் எவ்வளவு என்று அறுதியிட்டு சொல்ல முடியாத நிலை. இருப்பினும் சி.பி.ஐ., ஆயிரம் கோடி ஆதாயம் பெற்றதாகவும், இதனால் மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதுடன் தனியார் கம்பெனிகள் கொள்ளை லாபம் அடித்தது. இது தொடர்பான சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று பின்னர் இதன் கண்காணிப்பில் விசாரணை நடந்தது.

ராஜா மற்றும் இவரது உதவியாளர் , தொலை தொடர்பு அதிகாரிகள், கார்ப்பேரட் நிறுவன அதிபர்கள் , கனிமொழி எம்.பி., உள்பட 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கடந்த மாதம் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் , செக்சன் 409 ( நம்பிக்கை மோசடி ) , 120 பி ( கிரிமினல் சதி ) ,420 ( ஏமாற்றுதல் ) , 468, 471 ( பொய்யான ஆவணங்கள் தயாரித்தல் ) , 12, 13(2) 13 ( 1 பி) ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.,சைனி ஏற்றுக்கொண்டதுன், இதில் போதிய ஆதாரங்கள் இருப்பதாக தாம் உணர்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

யாருக்கும் ஜாமின் கிடைக்காமல் 7 மாதம் கடந்தது:

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாருக்கும் கடந்த 7 மாதம் ஜாமின் கிடைக்காமல் இருந்து வந்தது. குறிப்பாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜாமின் கோரலாம் என்ற சுப்ரீம்கோர்ட் கருத்துப்படி கூட கனிமொழிக்கு ஜாமின் கிடைக்கவில்லை.பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூட ஜாமின் மறுப்பது சட்ட விரோதம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் உத்தரவில் கூட ஐகோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது அடிப்படை சட்ட நெறிமுறைகளை மீறுவதாக உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சஞ்சய் சந்திரா ( யுனிடெக் வயர்லெஸ் நிறுவன முன்னாள் இயக்குநர் ) வினோத் கோயங்கா ( ஸ்வான் டெலிகாம் இயக்குநர் ) , ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழும அதிகாரிகள் கவுதம் தோஷி , ஹரி நாயர், மற்றும் சுரேந்திர பிபாரா ஆகிய 5 பேருக்கும் சுப்ரீம் கோர்ட் நிபந்தனையுடன் கூடிய ஜாமினை கடந்த ( புதன்கிழமை 23 ம் தேதி ) வழங்கியது. இந்த உத்தரவு மூலம் புதிய வழி பிறந்திருக்கிறது என்று ராஜாவின் வக்கீல் கூறியிருந்தார்.

192 நாட்கள் சிறையில் இருந்த கனிமொழி :

சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து கனிமொழி உள்பட 6 பேர் ஜாமின் மனுவை விரைவில் விசாரிக்க வக்கீல்கள் டில்லி ஐகோர்ட்டில் வலியுறுத்தினர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை விசாரணையில் இருதரப்பு வாதங்களும் எடுத்துரைக்கப்பட்டது. ஜாமினுக்கு சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதீபதிகள் வழக்கை இன்று ஒத்தி வைத்தனர். இன்றைய விசாரணை முடிவில் மனுவை விசாரித்த நீதிபதிகள் கனிமொழிக்கு உள்பட கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் சரத்குமார், சினியுக் பிலிம்ஸ் கரீம் மொரானி, குசேகான் புரூட்ஸ் மற்றும் வெஜிடபுள் நிறுவனத்தை சேர்ந்த ஆசீப்பால்வா, ராஜீவ் அகர்வால், ஆகிய 5 பேருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். முன்னாள் தொலை தொடர்பு செயலர் சித்தார்த்பெகுராவுக்கு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் கனிமொழியின் 6 மாத சிறைவாசம் முடிவுக்கு வந்தது. கனிமொழி கடந்த மே மாதம் 20 ம் தேதி கைது செய்யப்பட்டார். கீழ் கோர்ட்டில் 2 முறையும், ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தலா ஒரு முறையும் 4 முறை ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியிருக்கிறது. ஜாமின் கிடைக்குமா என பலமுறை எதிர்பார்த்து ஏமாந்த கனிக்கு இப்போது தான் ( 6 மாதத்திற்கும் மேல் சிறை - 192 நாட்கள் ) ஜாமின் கிடைத்திருக்கிறது.

நிபந்தனைகள் என்ன ?:

1. ரூ, 5 லட்சம் பிணைத்தொகையாயுடன் கூடிய 2 பேர் ஜாமின்தாரர்.
2. விசாரணைக்கு கோர்ட்டில் தவறாமல் ஆஜராக வேண்டும்.
3. பாஸ்போர்ட்டை ஒப்படைத்து வெளிநாட்டுக்கு பயணம் செய்ய கூடாது.
4. சாட்சிகளை கலைக்க தவறும் பட்சத்தில் ஜாமின் நிராகரிக்கப்படும்.

நீதிபதி ஓ.பி.,சைனி ஜாமின் மறுத்தது ஏன் ? :

சிறப்பு கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கலாகி கடந்த 2 முறை விசாரணைக்கு வந்தபோது : கனிமொழி, ஒரு பட்டதாரி அவர் ஒரு எம்.பி., , அவர் கலைஞர் தொலைக்காட்சியில் குறைந்த பங்குதாரர் ( 20 சதம்) மட்டுமே , கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் நிறுவனம் மூலம் வந்த 214 கோடி கடனாக பெறப்பட்டு , வட்டியுடன் திருப்பி செலுத்தப்பட்டுள்ள ஆவணங்கள் இருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் கனிக்கு நேரடி தொடர்புக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை அவரது குழந்தை பராமரிப்பு என பல காரணங்கள் கூறப்பட்டு வக்கீல்களின் வாதம் இருந்தது. ஆனால் நீதிபதி ஓ.பி.,, சைனி, எந்தவொரு வாதத்தையும் ஏற்க மறுத்து விட்டார். கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு பெண் என்பதற்காக இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருக்கும் இவர் புரிந்துள்ள குற்றம் மற்ற குற்றவாளிகளின் குற்றத்திற்கு சமமானது தான். மேலும் நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு காரணமாக இருந்திருக்கிறார் . பெரும் குற்றம் புரிந்த இவர்களுக்கு ஜாமின் வழங்க முடியாது என்றார் நீதிபதி.

அப்பாட., வந்தியே என்பேன் என்கிறார் கருணாநிதி:

கனிமொழிக்கு ஜாமின் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஜாமின் குறித்து நிருபர்கள் அவரது வீட்டிற்கு சென்று பல கேள்விகளை கேட்டனர். இப்போது அவர் கூறுகையில்: ஜாமின் கிடைத்ததும் கனிமொழியுடன் போனில் பேசினேன். எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் கனிமொழியை ஜாமின் கிடைத்த பி்ன்னர் முதன்முதலாக பார்த்த போது என்ன சொல்வீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது அப்பாட., வந்தியே., என்று சொல்வேன் ( புன்னகையுடன் ) என்றார். கனிமொழிக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படுமா என கேட்ட போது அது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். ராஜாவுக்கு ஜாமின் பெறுவது தொடர்பாக கட்சி எதுவும் முடிவு எடுக்குமா என்று கேட்டபோது அது அவரும், அவரது வக்கீலும் முடிவு எடுப்பர். கனிமொழிக்கு பலத்த வரவேற்பு இருக்குமா என்று கேட்ட போது வரவேற்பு இருக்கும். ஜாமின் கிடைத்திருப்பது வழக்கின் சாதகத்திற்கு முன்னுதாரணமாக இருக்குமா என்று கேட்டபோது, வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது நீதிமன்றத்தையோ , வழக்கின் போக்கு குறித்தோ நான் விமர்சிப்பவன் அல்ல என்றார்.

தினமலர்


2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம் Empty Re: 2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கனிமொழி ஜாமீன் மனு-சிபிஐக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
» கனிமொழி ஜாமீன் மனு: தில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு
» போக்குவரத்து கழக நிதி முறைகேடு வழக்கில் எச்.ராஜா சகோதரர் உட்பட 21 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்: திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கியது
» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
» ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum