ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு

+3
நவீன்
தாமு
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு Empty ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு

Post by சிவா Sun Sep 27, 2009 7:52 am

புகையிலை ஒரு கொடிய நஞ்சுப் பொருள். புகையிலையில் உள்ள நிக்கோடின் மிகக்கொடிய நஞ்சாகும். நிக்கோடின் தடவப்பட்ட கம்பியால் யானையைக் குத்தினால், அது உடனே மயங்கி சரிந்து விடும். அந்த அளவு மோசமானது, நிக்கோடின்.

ஒரு சிகரெட்டில் ஒரு மில்லிகிராம் நிக்கோடின் உள்ளது. இந்த நிக்கோடினை தனியே பிரித்தெடுத்து ஊசியால் உடலுக்குள் செலுத்தினால், ஆள் உடனே இறந்துவிடுவார்.

இத்தகைய கொடிய நஞ்சுதான் புகைபிடிக்கும்போது, கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் சென்று, கொஞ்சம் கொஞ்சமாக ஆளைக் கொலை செய்கிறது.

நிக்கோடினுடன் சேர்ந்து சிகரெட்டில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட நச்சு இரசாயனங்கள் உள்ளன. ஒருவர் ஒரு சிகரெட்டு புகைத்தால், அவரது வாழ்நாளில் ஏழு நிமிடம் குறைகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை


உச்சி முதல் உள்ளங்கால் வரை சிகரெட்டு பாதிக்கிறது. சிகரெட்டில் உள்ள நிக்கோடின் நஞ்சு, போதைப் பொருளாகச் செயல்பட்டு மூளையை அடிமைப்படுத்துகிறது. சிகரெட்டு புகையை உள்ளிழுத்தவுடன் நுரையீரலில் நிரம்பும் புகையானது, ஏழு விநாடிக்குள் மூளையைத் தாக்குகிறது. இதயத் துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் புகைப்போர் மாரடைப்பால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் உள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், சிகரெட்டு அறிவுத்திறனை பாதிப்பதையும், நினைவை மழுங்கடிப்பதையும் கண்டறிந்துள்ளனர்.

தொண்டைப் புற்று

புகையிலையில் உள்ள புற்றுநோய் உண்டாக்கும் நச்சு இரசாயனங்கள் வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளைப் பாதிக்கின்றன. சுமார் 80 விழுக்காடு தொண்டைப் புற்றுநோய்க்கு புகைபிடித்தலே காரணமாகிறது.

புகைப்பிடிப்பதால் தோல் பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் தோல் கடினமாவதுடன் சுருக்கம் விழுவதும் அதிகமாகிறது.

புகையிலையில் உள்ள தார் என்ற பொருள் விரல்களையும் நகங்களையும் மஞ்சள் நிறமாக்குகிறது. சொரியாசிஸ் எனப்படும் கொடிய தோல் நோயால் தாக்கப்படும் வாய்ப்பு புகைப்பிடிப்போருக்கு இரண்டு மடங்கு அதிகம் உண்டு.

ஆண்கள்

புகைபிடிப்பதாலோ அல்லது புகைபிடிப்போருக்கு அருகில் இருக்கவோ நேரும் பெண்கள், மாதவிலக்கின் போது அதிகம் துன்பப்படுகின்றனர். இத்தகையோருக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவதுடன், கருக்கலைவதற்கும் அதிக வாய்ப்பு உண்டு.

புகைபிடிக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள், சராசரியாக அரைக்கிலோ எடைக்குறைவாக பிறக்கின்றன. இதனால், குழந்தை இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. ஊனத்துடன் குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு இனப்பெருக்க உயிரணுக்கள் எண்ணிக்கை குறைகிறது. புகைப்பிடிப்பதால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால், ஆண்மைக் குறைவுக்கும் சிகரெட்டு காரணமாகிறது.

பார்வைக் குறைவு

அதிகமாக புகைபிடிப்போருக்கு கண்களில் விழித்திரை நோய் தாக்கும் வாய்ப்பு இருமடங்கு உண்டு. முதுமையடையும்போது பார்வைக் குறைவு ஏற்படும் வாய்ப்பும் 5 மடங்கு அதிகம் உண்டு.

வாய் மற்றும் நாக்கில் புற்றுநோய் தாக்குவதற்கு புகைபிடிப்பதும், புகையிலைப் பொருட்களை சுவைப்பதுமே முதன்மை காரணம். வாய்ப் புற்றுநோய் வரும் வாய்ப்பு புகைப்பிடிப்போருக்கு 30 மடங்கு அதிகமாகும்.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மட்டும் வாய்ப் புற்றால் ஆண்டுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் இறந்துபோகிறார்கள்.

புகைப்பிடிப்பதால் வாய் துர்நாற்றம், பற்களும் ஈறுகளும் சேதமடைதல், பற்கள் மஞ்சள் நிறமாதல் என பல பாதிப்புகள் நேர்கின்றன.

மாரடைப்பு

புகைபிடிப்பதால் இரத்து அணுக்களில் கரிக்காற்று திணிக்கப்பட்டு, உயிர்காற்று பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், இதயம் உயிர்வளிக்காக ஏங்குகிறது. சாதாரணமானவர்களைவிட, புகைபிடிப்போர் 15 மடங்கு வரை அதிகமாக இதய நோய்களுக்கு ஆளாகின்றனர்.

சிகரெட்டு அதிகமாக தயாரிக்கப்படுவதும், அதிகமானோர் புகைபிடிப்பதும் கடந்த நூறாண்டுகளாகத்தான். அதற்கு முன்பெல்லாம் உலகில் நுரையீரல் புற்றுநோய் என்பது கேள்விப்படாத ஒன்றாக, எங்கோ ஒன்றுதான் கண்டறியப்பட்டது.

மூச்சுத்திணறல், இருமல், இரத்த வாந்தி என இன்னும் பல பாதிப்புகளுக்கு புகைபிடித்தல் காரணமாகிறது.

புகைபிடித்தால் இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால், உடலின் பாகங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. உடல் பாகங்களின் செயல்திறன் குறைகிறது. இதனால், நடப்பதுகூட வலி மிகுந்த செயலாகிவிடுகிறது. கால் செயலிழக்கும் நோயால் தாக்கப்படுவோரில் 90 விழுக்காட்டினர் புகைபிடிப்போர்தான்.


ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு Empty Re: ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு

Post by தாமு Sun Sep 27, 2009 8:25 am

ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு 677196 ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு 677196 ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு Empty Re: ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு

Post by நவீன் Sun Sep 27, 2009 9:27 am

ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு 502589 ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு 502589 ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு 502589 ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு 67637 ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு 67637
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு Empty Re: ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு

Post by சிவா Sun Sep 27, 2009 9:35 am

ursnaveen wrote:ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு 502589 ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு 502589 ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு 502589 ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு 67637 ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு 67637

இவ்வாறு ஆதங்கப்ப்டுவதை விடுத்து புகைப்பதை நிறுத்துங்கள் நவீன்!


ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு Empty Re: ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு

Post by மீனு Sun Sep 27, 2009 10:38 am

புகை பிடிப்பவர்களுக்கு ..புகை பிடிக்க விருப்பம்....அந்த புகையிலைக்கோ ..புகை பிடிப்பவரகளையே ..பிடிக்கும்.. புகை பிடிப்பாவர்கள் நினைக்கிறார்கள்..தாங்கள் புகை பிடிபபதாய்..அதுதான் இல்லை..புகை இலைதான் இவர்களை பிடிக்கிறது..எஸ் அது இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் ஒரு எமன்...


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு Empty Re: ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு

Post by சதீஷ்குமார் Sun Sep 27, 2009 10:48 am

ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு 677196 அனைத்து புகைஞரும் படிக்கவேண்டிய பகுதி

புகை நமக்கு பகை

புகை பிடிக்காமல் இருப்பது மட்டுமல்ல
புகை பிடிப்பவர்களை கண்டாலும் ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு 230655
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு Empty Re: ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு

Post by மீனு Sun Sep 27, 2009 10:58 am

திமிங்கிலம் ..இப்படி போடுவதால் ஒருத்தர் திருந்தினாலே..அந்த வெற்றி திமிங்கிலத்துக்கே சேரும்....ராஜா அண்ணா..என்ன நான் சொல்லுறது ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு Empty Re: ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு

Post by சிவா Sun Sep 27, 2009 11:04 am

பட்டவனுக்குத்தான் அடுத்தவனுக்கு அறிவுரை சொல்லும் தகுதி உண்டு! இப்பொழுது குறைத்து விட்டேன் தல! இன்னும் சில வாரங்களில் நிறுத்தி விடுவேன்!

சாத்தான் என்றவுடன் மீனுவைத்தானோ என்று ஒருகணம் மகிழ்வடந்தேன், பிறகுதான் புரிந்தது!


ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு Empty Re: ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு

Post by ராஜா Sun Sep 27, 2009 11:04 am

மீனு wrote:திமிங்கிலம் ..இப்படி போடுவதால் ஒருத்தர் திருந்தினாலே..அந்த வெற்றி திமிங்கிலத்துக்கே சேரும்....ராஜா அண்ணா..என்ன நான் சொல்லுறது ..

இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு புகைபிடிப்பதை விடுவதாக சொன்னாரு , என்ன ஆச்சுன்னே தெரியல , கேட்டு சொல்லுங்க மீனு ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு Empty Re: ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு

Post by மீனு Sun Sep 27, 2009 11:06 am

ஷிவா அண்ணா நீங்க இப்போ புகை பிடிப்பது இல்லைதானே..
ராஜா அண்ணாவுக்கு ஸ்மார்ட் ஆகா பதில் சொல்லுங்க திமிங்க்ஸ்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு Empty Re: ஆண்மையைக் கெடுக்கும் சிகரெட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum