புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண் 6 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - சுக்கிரன் (Venus)


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 25, 2011 1:19 am

எண் 6 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - சுக்கிரன் (Venus)
எண் 6 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - சுக்கிரன் (Venus) :

ஒன்பது எண்களிலும் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகளான 6ம் எண்காரர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே (விணீtமீக்ஷீவீணீறீ கீஷீக்ஷீறீபீ) நினைப்பவர்கள் இவர்கள்தான். பூர்வ ஜென்மம், அடுத்த ஜென்மம் போன்றவற்றில் அதிகம் நம்பிக்கையில்லாதவர்கள். அது மட்டுமல்ல அப்படிப் பேசுபவர்களைக் கண்டால் கிண்டலும், குதர்க்கமும் செய்வார்கள்.
இன்பம், பணம், சுகமான அனுபவங்கள் நோக்கிலே இவர்கள் ஓடுவார்கள்! சுயநலம் மிகுந்தவர்கள் இவர்கள்தான். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். நீடித்த இளமை இவர்களது வரப்பிரசாதமாகும். மன்மதர்களின் மைந்தர்கள் இவர்களே புத்திரபாக்யம் நிறைந்தவர்கள் இவர்கள்தான். அதிலும் பெண் குழந்தைகள் இவர்களுக்கு அதிகம் உண்டு. பணவிஷயத்தில் இவர்களே மிகவும் அதிர்ஷ்டமானவர்கள். இவர்களே குபேரனின் மைந்தர்கள்! எவர் மூலமாவது எப்படியாவது இவர்களுக்குச் சமயத்திற்கு ஏற்பப் பணம் வந்து கொண்டே இருக்கும். சாப்பிடுவதிலும், சிற்றின்பத்திலும் பணத்தை நிறைய செலவு செய்வார்கள். ஆனால் மற்ற பொதுவான விஷயங்களிலும், அடுத்தவர்களுக்கு (லாபம் இல்லாமல்) உதவுவதிலும் மிகுந்த கஞ்சத்தனம் பார்ப்பார்கள்.
இந்த 6ல் எண்காரர்கள் சிற்றின்பத்தில் மிதமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். 6 எண் பலம் குறைந்தால் கடவுள், சாத்திரங்கள் மீது மிகுந்த அவநம்பிக்கை கொள்வார்கள். ஸ்திரீலோலராகி விடுவார்கள். அடிக்கடி மற்றவர்களிடம் பணம் வாங்குவார்கள். ஆனால் திருப்பிக் கொடுக்கும்போது மட்டும் இழுத்துப் பிடித்துத்தான் கொடுப்பாக்£ள். இவர்கள் தங்களது நேரத்தை காதல், கவிதை, கதை, வசனம், சினிமா, கருவிகள் என்று வீணாக்குவார்கள். தங்களது சபல புத்தியின் காரணமாகப் பல அன்பர்கள் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி, ஏங்கி, பல முயற்சிகள் செய்து, பல துன்பங்களை அடைகின்றனர். மனத்தில் பலவகைக் குணங்கள், பொறமைகள், மற்றவர்களை புண்படுத்தும் குறும்புப் பேச்சுகள் இவர்களுக்கு உண்டு. ஆனால் எவராவது இவர்களுடைய துயரங்களையும், துன்பங்களையும் பற்றிப் பேசினால் இவர்களுக்கு அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காது! இவர்களுக்கு ஓரளவு கோப குணமும் உண்டு. கோபம் வரும் போது முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள்.
இவர்களுக்க 5&ம் எண்காரர்களைப் போன்று நண்பர்கள் அதிகம் உண்டு. இவர்கள் எளிதில் மாற்ற முடியாத பிடிவாதம்காரர்களே!
எனவே சிறுவயதிலிருந்தே இந்த எண்காரர்கள் ஒழுக்கம், பொறுமை போன்ற நல்ல குணங்களை விடாமுயற்சியுடன் வளர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாகவே ஒரு வீட்டில் 6& எண் குழந்தைகள் பிறப்பது, அந்தக் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்பார்கள். மேலும் 6 எண்காரர்கள், தங்கள் பிறந்த வீட்டின் வசதியைவிடப் பிற்காலத்தில் உயர்ந்த செல்வர்களாகவே விளங்குவார்கள்.
இவர்களின் காம உணர்ச்சிகள், காதல் ஆகியவை நிலையானவை! ஆனால் அவைகள் வேகமும், முரட்டுத்தனமும் உடையவை!
பணவிஷயத்தில் தன ஆகர்ஷண சக்தி, இவர்களுக்கு இயற்கையிலேயே நிறைந்து காணப்படும். எப்போதும் இவர்கள் தங்களது அதிர்ஷ்டத்தையே நம்பி இருப்பார்கள். துன்பப்பட்டு உழைப்பதில் அலட்சியம் காட்டும் குணம் இருக்கும். இதை இவர்கள் மாற்றிக் கொண்டால்தான் 'விஜயலட்சுமி' எப்போதும் இவர்களுடன் இருப்பாள். தங்களின் அனாவசியக் குடும்பச் செலவுகள், அனாவசிய ஆடம்பரச் செலவுகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டால் தான், பணம் எப்போதும் நீங்காமல் இவர்களுடன் இருக்கும். இல்லையெனில் கடன் தொல்லையும், ஏமாற்றமும் ஏன் வறுமையும்கூட ஏற்பட்டு விடும்.

இவர்களது தொழில்கள்
இவர்கள் மனத்திற்கு மிகவும் பிடித்தது கலைத் தொழில்தான். எனவே சினிமா, டிராமா, இசை போன்ற பொழுதுபோக்குத் துறைகளில், எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் இவர்களுக்கு வெற்றி நிச்சயம்! மேலும் துணிக்கடை, நகைக்டை, பிளாஸ்டிக் சாமான்கள் வியாபாரம் போன்றவையும் வெற்றி தரும். மற்ற எண்கள் 1, 5 வந்தால் அரசு அதிகாரியாகவும் பிரகாசிப்பார்கள். சிற்பம், சித்திரம் போன்ற நுணுக்கமான துறைகளிலும், அலங்காரப் பொருட்கள், கவரிங் நகை விற்பனை தயாரிப்பு ஆகியவற்றிலும் இவர்கள் வெற்றி அடையலாம். அதுமட்டுமன்று சட்ட நுணுக்கம் பேசி விவாதம் புரியும் வக்கீல்கள், நீதிபதிகள் போன்ற தொழில்களும் ஓரளவு நல்லதே! ஆனால் பணத்திற்காக வளை கொடுக்கும் இயல்பு இவர்களுக்கு உண்டு. மேலும் பெண்களுக்கு உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருட்கள், அழகு சாதனங்கள் வியாபாரமும் போன்றவையும் நன்மை தரும்.
முத்து பவளம் போன்ற நவரத்தினங்கள் வியாபாரமும் செய்யலாம். எப்போதும் பிறரின் உதவியும், மக்கள் வசியமும், இயற்கையாகவே இவர்களுக்கு உண்டு. மற்றவர்களுக்காக வீடுகள் கட்டி, அதை விற்கும் தொழில்களில் இவர்கள் ஈடுபடலாம். கண்ணாடி, வாசனைப் பொருட்கள், பூக்கள், மாலைகள், வியாபாரமும் சிறந்ததே! சங்கீதம், வாய்ப்பூட்டு, இசை வாத்தியங்கள் ஆகியவை மூலம் நல்ல பொருள்கள் ஈட்டலாம்.

திருமண வாழ்க்கை
திருமணத்தின் மூலம் ஆதாயமும், இலாபமும் கிடைக்கின்றனவா என்றே இவர்கள் கணக்குப் பார்ப்பார்கள். இருப்பினும் திருமணத்திற்குப் பின்பு மனைவியை நன்கு வைத்துக் கொள்வார்கள்! மனைவியிடம் திருப்தி குறைவு என்றால், மற்ற வழிகளில் ஈடபத் தயங்க மாட்டார்கள். எனவே 6ம் எண்காரர்களை மணக்கும் பெண்கள் தங்களைத் தினமும் நன்கு அலங்கரித்துக் கொண்டு, கணவன்மார்களின் குணம் அறிந்து நல்ல சமையல், நல்ல உபசரிப்பு மூலம் நன்கு வசியம் செய்து கொள்ள வேண்டும். பின்பு இவர்களைப் போன்று நல்ல கணவர்கள் அமைவது கடினம் என்று அவர்கள் உணர்வார்கள். இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்களின் வேகத்திற்கு (?) ஈடுகொடுக்க முடியும்! 1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3ம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது.
மேலும் திருமண 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும்.
இவர்களது நண்பர்கள்
6, 9 தேதிகளில் பிறந்தவர்களுடன் நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் இருப்பார்கள். 1, 5 ஆகிய தேதிகளில் பிறந்தோராலும் ஓரளவு நன்மை உண்டு. 3 எண்காரர்களின் தொடர்பும் கூட்டும் கூடாது! ஆனால், 3 எண்காரர்களால் தான்இவர்களுக்கு மிகப் பெரிய விதி வசமான உதவிகள் கிடைக்கும். ஆனால் அவை இயல்பாகவே எதிர்பாராமல் அமையும். இவர்களாகத் தேடிச் செல்லக்கூடாத.(3ம் எண்காரர்களால்) வேதனைதான் மிஞ்சும்.

இவர்களது நோய்கள்
பொதுவாகச் சாப்பாட்டு பிரியர்கள். எனவே உடல் பருமன் பிரச்சினைகள் (ளிதீமீsவீtஹ்) உண்டு. இதய பலவீனம் (பிமீணீக்ஷீt றிக்ஷீஷீதீறீமீனீ) இரத்த ஓட்டக்கோளாறுகள் (ஙிறீஷீஷீபீ சிவீக்ஷீநீuறீணீtவீஷீஸீs) ஏற்படும். இந்திரியம் அதிகம் செல வு செய்பவர்களாதலால் பிறப்புறுப்புக் கோளாறுகள், நோய்கள் ஏற்படும். மலச்சிக்கலும் அடிக்கடி ஏற்படும். புகைபிடித்தல், மது போதைப் பொருட்கள் போன்றவற்றையும் அறவே ஒதுக்கிவிடவேண்டும்.
அடிக்கடி மூச்சுத் தொந்தரவுகளும், சுவாச சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படும். மாதுளை, ஆப்பிள், வால்நட், கீரை வகைகள் இவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். திறந்த வெளிகளில் தினமும் உலாவி வரவேண்டும். இதன் மூலம் பல நோய்களைத் தவிர்த்து விடலாம். இந்த எண்காரர்கள் பக்தி, பொதுத் தொண்டு செய்தல் போன்ற குணங்களை வளர்த்துக் கொண்டால் இவர்களுக்குப் பெரும் புகழும், அமைதியான வாழ்க்கையும் நிச்சயம் ஏற்படும்.

சுக்கிரன் யந்திரம் & சுக்கிரன் & 30
11 6 13
12 10 3
7 14 9

சுக்கிரன் மந்திரம்
ஹிமகுந்த ம்ருணாளாபம்,
தைத்யாநாம் பரமம் குரும்
ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம்யஹம்

எண் 6. சிறப்புப் பலன்கள்
உலக சுகங்களை அனுபவிக்கப் பிறந்தவர்களான 6ஆம் எண்ணைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
இவர்களுக்கு இந்த பூ உலகம் சொர்க்கமாகத் தெரியும். இந்த வாழ்க்கை வாழ்வதற்கே என்று இன்ப உணர்வுடன் வாழ்பவர்கள் இவர்களே! அசுர குருவான சுக்கிரனின் ஆற்றலை கொண்டது இந்த எண். எனவே, இயற்கையிலேயே உடல் சுகம், போகங்கள், வாசனைத் திரவியங்கள், ஆபரணங்கள் (ஆண்கள்கூட) ஆகியவற்றை அனுபவிக்கும் ஆசையும், அதிர்ஷ்டமும் உண்டு!
இவர்கள் கற்பனை வளமும், கலைகளின் பால் மிகுந்த ஈடுபாடும் (திமிழிணி கிஸிஜிஷி) போகப் பொருட்கள் மேல் நாட்டமும் உடையவர்கள். அழகிய பொருட்களையும், அலங்காரப் பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்ள விரும்புவார்திகள். அதிகம் செலவு செய்து, அழகான வீடு, பங்களா கட்டுவார்கள். பகட்டான வாழ்க்கையை நடத்த விரும்புவார்கள். ஓவியம், இசை, பாடல்கள், நாட்டியம் போன்றவற்றில் மிக்க ஈடுபாடு உண்டு. மற்ற கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவளிப்பார்கள். நண்பர்களுக்கு அடிக்கடி விருந்து கொடுத்து மகிழ்வார்கள்.
இவர்கள் மற்றவர்களைத் தங்கள் வசப்படுத்தி, தங்களது காரியங்களை முடித்துக் கொள்வதில் வல்லவர்கள். தங்களின் முன்னேற்றத்தின் மீதே கருத்தாக இருப்பார்கள். தங்களின் வசதியைப் பெருக்குவது எப்படி? பணத்தை இன்னும் பெருக்குவது எப்படி என்று சிந்தித்தே, காய்களை நகர்த்துவார்கள். 6 எண் வலுப்பெற்றால், ஆன்மீகத்திலும் வெற்றி அடைவார்கள்.
லாட்டரி, குதிரைப்பந்தயம் இவைகளில் மிகுந்த ஆர்வமும், அவற்றில் அதிர்ஷ்டமும் உண்டு. தங்களது சுயலாபத்திற்காகவே, அடுத்தவர்களுக்கு உதவி செய்வார்கள். எக்காரியமானாலும் நன்றாகச் சிந்தித்தே ஒரு முடிவுக்கு வருவார்கள். தேவையற்ற ரிஸ்க்குகளை எடுக்கத் தயங்குவார்கள். மந்திரங்கள், மாய தந்திரங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டு, அவற்றைக் காசாக்குவதில் வல்லவர்கள். இவர்கள் செல்வத்தைக் குவித்திடும், லட்சுமியின் புத்திரர்கள் ஆவார்கள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையும் உண்டு. இன்பங்கள் துய்ப்பதில் சலிக்க மாட்டார்கள். அதற்கேற்றவாறு உடல் சக்தியும் மிகுந்திருக்கும். இவர்களது உருவம் அழகாக இருப்பதால் பெண்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள். அவர்களும் இவர்ளைப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்கமாட்டார்கள். இன்ப அனுபவங்களில் தீவிர ஈடுபாடு உண்டு. தலைமுதல் பாதம் வரை ஒரே சீராகவும், அழகாகவும் இருப்பார்கள். அழகான உடை, மற்றும் வாசனைத் திரவியங்கள் மூலம் தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்வார்கள். தாங்கள் வசிக்கும் இடத்தினையும் மிகவும் அழகாக வைத்துக் கொள்வார்கள்.

காதல் விஷயங்களில் அதிர்ஷ்டகாரமானவர்கள். அதிக காம குணம் இருப்பதால், ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். (எண்ணின் பலம் குறைந்தால் ஸ்திரீலோலர்கள் ஆகிவிடுவர்)
இவர்களுக்கு நல்ல அழகும், குணங்களும் உள்ள கணவன்/ மனைவி அமைவர். தம்மிடமுள்ள கவர்ச்சியை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எனவே, திருமணமாகாதர்கள். கூடிய விரைவில் திருமணம் செய்து கொண்டால் இந்தப் பிரச்சினைகளிலிருந்து சமாளித்துக் கொள்ளலாம்.
பொதுவாக இந்த எண்காரர்களுக்கு உணவு, உடை, வீடு ஆகியவற்றில் குறைபாடுகள் வாராது. வசதிகளை எப்படியும் உருவாக்கிக் கொள்வார்கள்! பலருக்குப் பிறவியிலேயே அமைந்திருக்கும்.
சினிமா, டி.வி. ரேடியோ போன்றவற்றில் பெரும் புகழ்பெற்ற கலைஞர்களும் பேச்சாளர்களும் இவர்களே! இவர்கள் மற்றவர்களின் கலைத் திறமையைப் பாராட்டுவார்கள். பொறாமையும் பிடிவாதமும் உண்டு.
கீழ்த்தரமானவர்கள் (எண்பலம் மிகவும் குறைந்தவர்கள்) பிறரை ஏமாற்றியும், வஞ்சித்தும் பிழைப்பார்கள். கெட்ட வழிகளில் துணிந்து செல்வார்கள். தங்களை நம்பியவர்களைக் கூட ஏமாற்றுவார்கள். இவர்களது மனதில் அதிக காமமும், பணத்தாசையும் இருக்கும்.
இவர்களுக்குக் குழந்தை பாக்கியம் நிறைய உண்டு! பெண் குழந்தைகள் அதிகம் உண்டு. பொதுவாக உலக கலைகளை அனுபவிக்கப் பிறந்தவர்கள் இவர்களே! இவர்களால் தான் உலகில் பழைய கலைகளும், இலக்கியங்களும் இன்னும் நிலைபெற்று உள்ளன.

அதிர்ஷ்ட தினங்கள் Lucky Dates
ஒவ்வொரு மாதத்திலும் 6, 15, 24 ஆகிய தேதிகளும் 9, 18, 27 ஆகிய தேதிகளும் மிக்க அதிர்ஷ்டகரமானவையே! கூட்டு எண் 6 மற்றும் 9 எண் வரும் தினங்களும் நல்ல பலன்களையே கொடுக்கும்.
ஒவ்வொரு மாதத்திலும் 3, 12, 21 ஆகிய தினங்களும் கூட்டு எண் 3 வரும் தினங்களும் மிகவும் துரதிர்ஷ்டமானவை. 5, 14, 23 தேதிகளில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது! நடுத்தரமான பலன்களே கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள் Lucky Colours
இவர்களுக்கு மிகவும் உகந்தது பச்சை, நீலம் மற்றும் இரண்டு கலந்த வண்ணங்கள்! இலேசான சிவப்பும் அதிர்ஷ்டத்தைக் கூட்டுவிக்கும். வெள்ளை, ரோஸ், மஞ்சள் ஆகிய வண்ணங்களைத் தவிர்த்து விடவும்.

அதிர்ஷ்ட இரத்தினங்கள் Lucky Gems
இவர்களுக்கு மரகதமே (பச்சை என்பார்கள்) சிறந்தது. ஆங்கிலத்தில் EMERALD என்பார்கள். மேலும் AQUAMAIRNE, JADE, BERYL, PARIDOT, TURQUOISE (பச்சை நிறம்) போன்ற இரத்தினக் கற்களும் அணிந்துவர, யோகங்கள் பெருகும். AMETHYST (செவ்வந்திக்கல்) அணியவே கூடாது!

6& ஆம் தேதி பிறந்தவர்கள் :
எப்போதும் செல்வத்தில் திளைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காகக் கடுமையாக உழைப்பார்கள். எவரையும் சரிக்கட்டி, தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். பெண் தன்மையும் காணப்படும். எதிலும் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபடுவார்கள். அடக்க சுபாவமும், ஆழ்ந்த சிந்தனைகளும் உண்டு. கலைகளில் (64 கலைகளில் ஏதாவது ஒன்று அல்லது சில) மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். இவர்கள் சாந்தமானவர்கள்தாம். கோபம் வந்தால் விசுவரூபமாகிவிடும். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தவர்கள். சுகம் நிறைய அனுபவிப்பார்கள்.

15&ஆம் தேதி பிறந்தவர்கள்:
மற்ற மக்களை வசீகரிக்கும் தன்மை இயற்கையிலேயே உண்டு. பேச்சுத்திறமையும், கவர்ச்சியும் உண்டு. கலைகளில் தேர்ச்சியும், நகைச்சுவைப் பேச்சும் உண்டு. எதிரியை எடை போடுவதில் மிகவும் திறமையானவர்கள். ஆனால் எதிரிகளை எப்போதும் மறக்க மாட்டார்கள். பொறுமையுடன், காலம் பார்த்துப் பகையைத் தீர்த்துக் கொள்வார்கள். மனதிற்குள் கவலைகள் இருந்தாலும் அவற்றை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளிப்பார்கள். நாடகம், சினிமா, டி.வி. போன்றவற்றில் ஈடுபடுவார்கள். நல்ல புகழும், அதிர்ஷ்டமும் தேடி வரும்.

24&ஆம் தேதி பிறந்தவர்கள் :
அரசாங்க ஆதரவு இவர்களுக்குக் கிடைக்கும். அடக்கமும், அமைதியும் ஆனால் அழுத்தமும் நிறைந்தவர்கள். பெரிய இடத்துச் சம்பந்தமும், பெரும் பதவிகளும் தேடி வரும். மிகவும் துணிச்சல்காரர்கள். மற்றவர்கள் தயங்கும் காரியங்களை இவர்கள் ஏற்றுக் கொண்டு, திறமையுடன் செய்து முடிப்பார்கள். எனவே, விரைவிலேயே கிடைத்துவிடும். சிலர் விளையாட்டில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். தமக்கென ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டு அதில் துணிந்து செல்வார்கள். கலையுலகிலும் அதிர்ஷ்டம் உண்டு. சிலருக்குக் கர்வமும் ஏற்படும். தங்கள் கருத்துகளை அடுத்தவர் மீது திணிப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் அதிர்ஷ்டசாலிகள் என்றே கூற வேண்டும்.

எண் 6க்கான (சுக்கிரன்) தொழில்கள்
இவர்கள் கலைத் துறைக்காகவே பிறந்தவர்கள். கலையின் பல துறைகளிலும் ஈடுபடுவார்கள். சிற்பம், சித்திரம், சங்கீதம் போன்ற கவின் கலைகளில் (Fine Arts) வெற்றி பெறுவார்கள். சிலர் சட்ட நுணுக்கம் பேசி பணம் அதிகம் சம்பாதிக்கும் வக்கீல்களாகவும், மருத்துவர்களாகவும் இருப்பார்கள். பெண்களின் அழகு சாதனங்கள் உற்பத்தி மிகவும் விற்பனை துறைகள் நன்கு அமையும்.
பட்டு மற்றும் ஜவுளி வியாபாரம், முத்து, பவளம், வைர வியாபாரம் உகந்தவை! இசைக் கருவிகளில் ஏதாவது ஒன்றில் நாட்டம் இருக்கும்! நளினமாக நடித்துக் காண்பிக்கும் குணமும் உண்டு.

திரைப்படத் தொழில், ஒப்பனைத் தொழில், காட்சி அமைப்புகள் தயார் செய்தல் போன்றவையும் நன்கு அணியும். மதுபான வகைகள், நெல்லி, எலுமிச்சை, தானியங்கள், அரிசி, உப்பு, வாசனைப் பொருட்கள் வியாபாரம், உணவுவிடுதி, தங்கும் விடுதி (Lodge) நடத்துதல், ஜோதிடம் பார்த்தல், பசு, பால், நெய் வியாபாரம், அழகு தையல் நிலையங்கள், ஆண், பெண் அழகு நிலையங்களும் இவர்களுக்கு ஏற்றவை! Fashion Designing, Garment தொழில்களும் உகந்தவை. இயற்கையை இரசிப்பவர்கள், சிலர் மருத்துவத் துறையிலும் பிரகாசிப்பார்கள்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எண் 6 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - சுக்கிரன் (Venus) Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக