ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று புத்தகத்தில் காணாமல் போனவர்கள் இவர்கள்

Go down

வரலாற்று புத்தகத்தில் காணாமல் போனவர்கள் இவர்கள் Empty வரலாற்று புத்தகத்தில் காணாமல் போனவர்கள் இவர்கள்

Post by Gowthambsc Thu Nov 24, 2011 9:10 pm

வறுமை, பிற மதத்தின் தூண்டுகோளால் மதமாற்றம், அரசாங்க சலுகையின்மை போன்ற காரணங்களால் வரலாற்று புத்தகத்தில் காணாமல் போனவர்கள் இவர்கள். தமிழ்நாட்டில் இச்சமூகத்தினர் பல ஊர்களில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக நாடோடிகளைப் போல் அவ்வப்போது இடம் பெயர்ந்து கொண்டிருப்பர். இவர்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில்

ஊசி, பாசி, போன்ற சிறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர். குறவர்கள் சித்தமருத்துவம், இயற்கை மருத்துவம் அறிந்தவர்கள். நாடி பார்த்து நோய்க்குறி சொல்லுவார்கள். இன்றய நவீன மருத்துவம் வந்ததும் இவர்களை ஏமாற்றுக்காரர்களாக சமூகம் சொல்லுகின்றது.குறத்தி குறி சோசியம் இலக்கிய காலத்திலிருந்து பெருமை வாய்ந்தது.

பூர்வீகம்

குறவர்கள் மராட்டிய வழி வந்தவர்கள் என்றும், மாராட்டிய சிவாஜியின் படைவீரர்கள் என்றும் சொல்லுவதுமுண்டு. மேலும் இவர்கள் லம்பாடி இனத்தை சார்ந்தவர்கள் என்றும் சொல்வதுமுண்டு. குறவர் இனத்தில் பெண்கள் அழகுள்ளவர்கள், ஆணுக்கு நிகரானவர்கள். குறவர்களிடம் பெண்ணடிமை என்பது இல்லை. ஆனால் மாலை 6மணிக்குள் வெளியில் சென்ற பெண் கணவனை அடைய வேண்டும் என்பது இவர்களின் கட்டுப்பாடு. விதவை மறுமணம், வெளிப்படையான பாலுறவு இவர்களின் சமூகத்தில் உண்டு. பாலுறவுக்கு பஞ்சமில்லை என்பதால் இவர்களிடம் விபச்சாரம் என்பதில்லை

சமூகம்

படிப்பறிவு பெரும்பாலும் இல்லாதவர். எனினும், சுகாதாரத்தில் கவனம் உடையவர். காண்பதற்கு சுத்தமில்லாமல் இருந்தாலும், இவர்கள் வாழையடிவாழையாக உட்கொள்ளும் நாட்டுமருந்துகள், இவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் வராமலிருக்க, வருடத்திற்கு ஒரு முறை தங்களது பாரம்பரிய மருந்தினைத் தருவர். இதுபற்றி ஆராய்ந்தவர், இடாய்ச்சு நாட்டு அறிஞர். பெண்கள் கலைவேலைப்பாடுகளில் கைத்தேர்ந்தவர். ஆண்கள் துப்பாக்கிச் சுடுவதிலும், கவண்வில்லிலும்(உண்டிவில்) திறமை மிக்கவர். பேச்சு மொழி உண்டு. எழுத்து மொழி இல்லை. தமிழ்நாட்டு அரசால் இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(B.C) என்று அறிவிக்கப்பட்டவர்கள். எனினும், மலைவாழ் மக்களின் இயல்பைக்(S.T) கொண்டிருப்பவர். பெரும்பாலும் நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள் ஆவர். குருவிக்காரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

குறவர் செயல்கள் இன்றைய நாகரீகம்

குறவர்கள் வாழ்க்கை நாடோடி வகையை சார்ந்ததால், இவர்களின் வாழ்வில் நடைமுறை விஞ்ஞானமும் கலந்தே இருக்கும்.

* பாட்டுப்பாடி பச்சை குத்துவதும் குறத்திகளின் தொழில்,

இன்று பலர் நவீனமாக நாகரிகப் பச்சை குத்திக் கொள்கிறனர்.

* குறவர்கள் கூடாரங்களில் வசிப்பவர்கள் தற்போது அரசாங்கம் இலவச வீடு மற்றும் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி வருகின்றது. குறவர்கள் பிழைப்புக்காக ஊர் ஊராகச் சுற்றுவார்கள். எங்கு சென்றாலும் அவர்கள் பொருள்களையும் எடுத்தே செல்வார்கள். பொழுது போக்குகாக ரேடியோவை தோலில் கயிறு கட்டி வைத்துக் கொண்டு பாட்டுக் கேட்ட வண்ணம் இவர்கள் வேலையைப் பார்ப்பார்கள்.

தற்போது நாகரீகமாக கையடக்க ரேடியோ (walkman) கேட்டு மகிழ்கின்றோம்.

* இப்படி செல்லும் போது கைக்குழந்தையும் தன் தோலில் துணியை அடக்கமாக கட்டி அதன்மேல் குழந்தையை அமர்த்தி எடுத்துக் கொண்டு தன் வேலைகளில் ஈடுபடுவார்கள்.

தற்போது தன் குழந்தையை எடுத்துச் செல்ல தோலில் எடுத்து செல்லும் பை (baby sling) பயன் படுத்துகின்றோம்.

* குறவர்கள் மணிக்கோர்க்கும் போது பாசிமணி ஊசி மற்றும் இதரப பொருள்களை இடுப்பில் (பெண்கள் கழுத்தில்) பை அல்லது டப்பா கட்டி வைத்துக் கொண்டு சுலபமாக வேலை செய்வார்கள்.

தற்போது இடுப்புப்பை (pouch) பயன்படுத்துகின்றோம்.

-இது போல் குறவர்கள் வாழ்வில் கலந்துவிட்ட விஞ்ஞானம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். குறவர்கள் வாழ்க்கை இயற்கையோடு சேர்ந்தே இருப்பதால் இவர்களின் வாழ்க்கையின் அனுபவ விஞ்ஞானம் அதிகம் காண முடியும்.

குறவர்கள் வாழ்வில் கலந்துவிட்ட விஞ்ஞானம்

இலக்கியங்கள், கதைகள், பாடல்கள், சினிமாக்கள் என்று அனைத்திலும் குறவன் குறத்தியைப்பற்றி சொல்லாத ஊடகங்கள் இல்லை!! ஆனால் இவர்கள் இந்திய சமுதாயத்தை சேர்ந்தவர்கள்தான் எனபது பலருக்கும் புரியாத புதிர். இதற்கு இவர்களின் சமுக அமைப்பும் சமுக கட்டுபாடும் மற்ற சமுகத்திடமிருந்து விளக்கியுள்ளது. தேர்தல் சமயத்தில் மட்டுமே இவர்களை இந்தியர்களாக மதிப்பதும் பிறகு மறந்துவிடுவதும் வாடிக்கையாகும்.

குறவர்கள் நாடோடி இனத்தை சார்ந்தவர்கள், இவர்களின் தொழில் மற்றும் சமுக அமைப்பு முறைகளில் 20வது வகை குறவர்கள் இருப்பதாக கூறுகின்றனர். குறவன் என்றவுடன் நமக்கு நினைவிக்கு வருவது தெருவோரங்களில் படுத்து உறங்கும் நரிக்குறவர்களைதான். ஆனால் குறவன் என்ற சமுகத்திற்கும் நரிக் குறவனுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அவர்களது மொழி, கலாசாரம், பழக்கவழக்கங்கள் சாதாரண் குறவர் இன மக்களின் பழக்கவழக்கங்களில் இருந்து மாறுப்பட்டதாகும்.

தமிழ் நாட்டில் எத்தனை வகை குறவர் பிரிவுகள் உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.

1. குறவர்

2. உப்புக்குறவர்

3. தப்பைக்குறவன்

4. கந்தர்வக் கோட்டை குறவர்

5. ஆத்தூர் கீழநாடு குறவர்(சேலம்)

6. தாடிக் குறவர் (தஞ்சை திருச்சி)

7. மலைக்குறவர்

8. இஞ்சிக்குறவர் (தஞ்சை திருச்சி)

9. கொரவர்(செங்கல்ப்பட்டு)

10. தனிக்குறவர்

11. தோகமலைக் குறவர்

12. வரக நேரிக்குறவர்

13. களிஞ்சிதப்பை கொரவர் (த்ஞ்சை புதுகோட்டை)

14. மோண்டா குறவர்

15. பொன்னைக்குறவர் (வடாஅற்காடு)

16. தனிக்குறவர்

17. சேலம் மேலநாடு கொரவர்(மதுரை ,கோவை ,ஈரோடு, புதுகை,திருச்சி,சேலம்)

18. சக்கரத் தாமடை குறவர்

19. சேலம் உப்பு குரவர்

20. சாருங்கப்பள்ளி குறவர்

இப்படி பலவகை குறவர்கள் இருந்தாலும் எல்லோரும் பிந்தங்கிய நிலையில்தான் உள்ளனர்.

"நரிக்குறவர் இனவரைவியல்" என்ற நூல் கரசூர் பத்மபாரதி என்பவரால் 2005 -ம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது.. அந்த நூலில் குறிப்பிட பட்டுள்ள சில விவரங்களையும் இணைத்துள்ளேன்..

தமிழில் இனவரைவியல் (ethnography) நூல்கள் அதிகம் வெளிவருவதில்லை (பொதுவில் சமூகவியல் நூல்கள் தமிழில் பதிப்பிக்கப்படுதல் மிகக் குறைவு), இந்த நிலையில் செல்வி பத்மபாரதியின் புதுச்சேரி பல்கலைக்கழக பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையை முழு இனவரைவியல் நூலாகப் பதிப்பித்திருப்பது முதலாகப் பாரட்டப்பட வேண்டிய காரியம். தொல்குடியினரான நரிக்குறவர்கள் வேளாண் கலாச்சாரத்திற்கு முந்துபட்ட வேட்டைக் கலாச்சாரத்தை அடியொற்றி வாழ்பவர்கள். வடக்கிலிருந்து (குஜராத்) தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்தவர்கள். புலம்பெயர்ந்த சூழலில் வந்துசேர்ந்த கலாச்சாரத்துடன் தங்களை முழுமையாக இணைத்துக்கொள்ளாது சில நூறு ஆண்டுகள் ஆனபின்னரும் தனித்த அடையாளம் கொண்டு நிற்கிறார்கள். வாக்ரிபோலி என்ற வரிவடிவமில்லா பேச்சு மொழியைக் கொண்டவர்கள். இவர்களது உடையுடுத்தல் இவர்களைத் தனித்துக் காட்டுகிறது. உள்ளினத் திருமணங்கள், தனிப் பஞ்சாயத்துகள், வழிபாட்டு முறைகள் என்று கலாச்சார தனிமை கொண்டிருந்தாலும் தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதியிலும் விரவி வசிப்பவர்கள் இவர்கள். இவர்களைப் பற்றிய ஒரு முழுமையான தகவல் நூலாக அமைந்திருக்கிறது இந்தப் புத்தகம்.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் மானிடவியல் பேராசிரியர் பக்தவத்சல பாரதி அணிந்துரை வழங்கியிருக்கிறார். தமிழில் இனவரைவியல் ஆய்வுகளுக்கான ஒரு சிறிய, தெளிவான அறிமுகமாக அமைந்திருக்கிறது அவருடைய அணிந்துரை. இந்தியாவில் முதன்முதலில் இன்வரைவியலை மேற்கொண்டவர்கள் ஆங்கிலேயர்கள்தாம். காரணம் வந்த இடத்தின் குடிகளைத் தமது ஆளுகைக்கு உட்படுத்த அவர்களுக்கு இந்தத் தரவுகள் முக்கியமானவையாக இருந்திருக்கின்றன. இதே காரணத்திற்காகத்தான் அவர்கள் குடிக்கணக்கையும் துவக்கினார்கள். விடுதலைக்குப் பிறகு பத்தாண்டுக்கொருமுறை குடிக்கணக்கு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஆனால் இனவரைவியல் ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவில்லை.

இனவரலாறு, சமூக அமைப்பு, புழங்கு பொருட்கள், பொருளாதாரம், திருமணம், சடங்குகள், சமயம், பஞ்சாயத்து (நீதி முறை), மருத்துவம், சமூக மாற்றம், வழக்காறுகள் என்று பதினோறு தலைப்புகளில் ஆழமான தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. இனவரைவியல் ஆய்வை மேற்கொள்பவர்கள் கையாள வேண்டிய முறைகளாகப் பின்வருவனவற்றைச் சொல்வர்கள்; உடனிருந்து பழகல், படம், ஒலி/ஒளிப்பதிவுகள் மூலம் ஆவணப்படுத்தல், நேர்முகம் காணல், பிற ஆவணங்களை அலசல் இவற்றுடன் கூட ஊடுறுவலின்றி உற்று நோக்கலும் மிக முக்கியமானது. பத்மபாரதி இந்தப் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகள் அனைத்தையும் திறமையாகக் கையாண்டிருப்பது இந்த நூலின் வழியே புலப்படுகிறது. வேற்று இனத்தவர் தொல்குடிகளுடன் நெருங்கிப் பழகி தகவல்களைப் பெறுதல் என்பது மிகவும் சிக்கலான காரியம். இதைச் செய்வதற்குத் திறமையும் பொறுமையையும் நிறைய தேவை.

நான் சிறிய சாவித்துளையின் வழியே மாத்திரமே கண்டிருந்த உலகிற்குக் கதவைத் திறந்து அழைத்துச் சென்றது இந்த நூல் என்று சொன்னால் அது மிகையில்லை. குஜராத்திலிருந்து பெயர்ந்து பல இடங்களுக்குக் குடிபெயர்ந்த இந்த இனக்குழுவிற்கு வங்காளத்தில் ‘சிங்களன்’ என்று பெயரிருப்பது விநோதம். வழிபாட்டு முறையில் சிவனை முழு முதற் கடவுளாகக் கொண்டாலும் (தாதாஜி) சடங்குகளில் காளி, ஈஸ்வரி, மாரியம்மன், துர்க்கை என்று பெண் கடவுளர்களுக்கே முக்கிய இடமிருக்கிறது. சடங்குகளின் அர்ப்பணிப்பு தேவியரையே சேருகிறது. அதேபோல தேவியரே குறிசொல்லும் பூசாரியில் தோன்றி சனங்களுக்குத் தீர்வு வழங்குகிறாள். நரிக்குறவர்களிடம் இருக்கும் இன்னொரு முக்கியமான வழிபாட்டு முறை – எருமைப் பலியிடல். ஒரு காலத்தில் நம் சமூகமெங்கும் பரவலாக இருந்த கொற்றவை வழிபாடும் அதனையொட்டி வரும் எருமைப் பலியிடலும் இப்பொழுது பெரும்பாலும் வழக்கொழிந்து போயிருக்கின்றன. (நானறிந்த வகையில் காரைக்கால் பகுதியின் அம்பகரத்தூரில்தான் இந்தப் பலியிடும் வழக்கம் தொடர்ந்து வந்தது. நவீன கலாச்சார போலீசார் இதை இன்னும் விட்டுவைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை). ‘த்ராங்டு’ (சாமி சொத்து) என்று சொல்லப்படும் வழிபாட்டு விக்ரகங்கள், சடங்குக் கருவிகள் அடங்கிய துணிப்பொதி தலைமுறைகளாகப் பெறப்பட்டு பெரு மரியாதையுடன் பாதுகாக்கப்படுகிறது. நரிக்குறவர்களைப் பொறுத்தவரை த்ராங்டு எல்லாவற்றுக்கும் மேலான மதிப்பும் மரியாதையும் உடையது. பிறப்பு, பெயரிடுதல், காதணி, பூப்பு, திருமணம், இறப்பு போன்ற சடங்குகள் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சில முற்றாக வேறுபட்டிருந்தாலும் பெரும்பாலானவை தமிழரின் பெருவழக்குகளோடு ஒத்துப் போகின்றன.

நரிக்குறவர்களின் பொருளாதார முறை, பஞ்சாயத்து மூலம் நீதி வழங்கல், குடும்ப உறவுகள், திருமண முறைகள், திருமண விலக்கு பெறுதல் (விலக்கு பெற்ற பெண் மறுமணம் செய்ய எந்தத் தடையும் இல்லை) என்று நூலில் பல அற்புதத் தகவல்கள் இருக்கின்றன. மிகவும் நுணுக்கமாக பல விபரங்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் பெரும்பாலும் புதுச்சேரி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களிடையே மாத்திரமே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன, தமிழகத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர்களின் வாழ்முறைகளுடன் ஒப்பீடு எதுவுமில்லாதது இதன் பெரிய குறைபாடாகத் தோன்றுகிறது. அதேபோல நானறிந்த வகையில் நரிக்குறவர்கள் பெரும்பாலான உயிரியல் மருத்துவ ஆய்வுக்கூடங்களுக்கு ஆராய்ச்சிகளுக்காக வெள்ளெலிகளையும் பிற மிருகங்களையும் பிடித்து விற்கிறார்கள் (சொல்லப்போனால் ஆய்வுக்கூடங்கள் விலங்குகள் தேவைக்கு முற்றுமுழுதாக நரிக்குறவர்களையே சார்ந்து நிற்கின்றன). இந்தத் தகவல் பதிவு செய்யப்படவில்லை.

நூலின் அணிந்துரையில் பேரா. பக்தவத்சல பாரதி இந்திய சனத்தொகையில் பழங்குடிகளின் பங்கு 7.76% (1981 குடிக்கணக்கின்படி) என்று காட்டுகிறார். ஆனால் தமிழகத்தில் இவர்களின் பங்கு 1.07% தான். நரிக்குறவர்கள் கல்வியாலும், பொருளாதாரத்தாலும் மிகப் பின் தங்கியவர்கள். சில துறைகளில் வளர்ச்சியின்மை காரணமாக இவர்களிடையே குழந்தைகள் மணம், சுகாதாரக் குறைவான பழக்கங்கள் போன்றவை காணப்படுகின்றன. இந்த நிலையில் இவர்களுக்கு கல்வியிலும் வேலையிலும் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை ஓரள்வுக்கேனும் விஷயமறிந்த யாரும் ஒத்துக் கொள்வார்கள். ஆனால் இவர்களுக்குத் தமிழகத்தில் “அட்டவணை பூர்வ குடியினர்” தகுதி வழங்கப்படவில்லை. (கர்நாடகம், குஜராத், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் இவர்கள் பூர்வ குடியினராக அடையாளம் காணப்படுகிறார்கள்) எனவே . தமிழகத்தில் இவர்களுக்கு ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி’ என்ற வரையறைதான் இருக்கிறது (இந்தப் பிரிவில் வரும் பிற சாதியினரின் கல்வி, பொருளாதார, சமூக, அரசியல் அந்தஸ்து, அவர்களின் நிரந்த சொத்துக்கள் போன்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்). இந்த நிலையில் இவர்களுக்கு கடுமையான சமூக அநீதி இழைக்கப்படுவதைக் குறித்து எந்தத் தமிழ்க் குழுக்களும் பெரிதாகக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இனவரைவியலை ஒரு முற்றுமுழுதான ஆராய்ச்சி வடிவாகப் பார்க்க வேண்டும் என்பார்கள். சரித்திரம், சமூகம், பொருளாதாரம், தொடங்கி குழுக்கதையாடல்கள் வரை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்பொழுதுதான் ஒரு இனத்தைப் பற்றிய சரியான புரிதல் ஏற்படும். உதாரணமாக, இன்றைக்கு இந்தியாவில் வழக்கொழிந்து போயிருக்கும் எருமைப் பலியிடலையும், பச்சை இரத்தம் குடிப்பதையும் மாத்திரமே தனித்துப் பார்ப்பவர்களுக்கு நரிக்குறவர்கள் காலத்தால் உறைந்துபோன காட்டுமிராண்டிகள் என்ற அபத்தக் கருத்து உருவாகலாம். ஆனால் மறுபுறத்தில் தெளிவாக உருவான குடும்ப அமைப்பு முறை, சகோதர-சகோதரி பாசம், புரிந்துணர்வு, பொருளாதரத்தைத் தாண்டி நிம்மதியான நிறைவை நாடும் மனப்பாங்கு ஆகியவை நரிக்குறவர் இனத்தை முன்மாதிரியாகக் கொள்ளத் தூண்டுகின்றன. அந்த வகையில் பத்மபாரதியின் இந்த இனவரைவியல் நூல் முழுமை பெற்றிருக்கிறது.

மானுடவியலின் நான்கு கூறுகளில் கலாச்சார மானுடவியல் (Cultural Anthropology) மிகவும் முக்கியமானது. பத்மபாரதியின் இந்த இனவரைவியல் மூலம் நரிக்குறவர்களைப் பற்றிய இந்த கலாச்சாரப் புரிதல் துவங்கியிருக்கிறது. இதனை அடியொற்றி பிற மாணவர்கள் இயல்சார் (Physical) மானுடவியல், மொழிசார் (Linguistic) மானுடவியல், தொல்பொருளியல் (Archeology) போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள முன்வருவார்கள் என்று நம்புவோம்.


உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.வரலாற்று புத்தகத்தில் காணாமல் போனவர்கள் இவர்கள் Gowthambsc
Gowthambsc
Gowthambsc
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» பதிவுலகில் காணாமல் போனவர்கள்
» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
» 10 ராணுவ வீரர்களை விடுவித்த சீனா... காணாமல் போனவர்கள் நாடு திரும்பினர்!
» 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum