புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
435 Posts - 47%
heezulia
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
30 Posts - 3%
prajai
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_m10ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்த்மா நோய் - தகவல்கள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Nov 24, 2011 5:20 pm


ஆஸ்த்மா நோயைப் பற்றிய பதிவு
டாக்டர் K.M.முருகானந்தம்,
கொழும்பு (ஸ்ரீலங்கா) நகரைச் சேர்ந்தவர்.




ஆஸ்த்மா நோய் - தகவல்கள்  249272_10150609648500268_750020267_18325662_7879518_n

ஆஸ்த்மா கலங்க வேண்டிய நோயல்ல

இன்று பரவலாக உலகெங்கும் மனித இனத்தை தொல்லைக்கு உள்ளாக்கும் நோய்களில் முக்கியமானவற்றில் இதுவும் ஒன்று.
இழுப்பு, முட்டு, வீஸிங், ஆஸ்த்மா, தொய்வு, எனப் பலரும் தமது நோயை வெவ்வேறு பெயர்கள் கொடுத்து அழைத்தாலும் அடிப்படை நோய் ஒன்றுதான். ஆஸ்த்மாஎன்பது ஒரு கிரேக்கச் சொல்லாகும். அது மூச்சு வாங்குவதைக் குறிக்கும்.

கைத்தொழில் நாடுகளில் 2 முதல் 6 வீதமான பெரியவர்களையும், 15 முதல் 20 வீதமான குழந்தைகளையும் இது அல்லற்படுத்துகிறதாம். அமெரிக்காவில் மாத்திரம்14 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் இந் நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 5 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் குழந்தைகள் ஆவார். அதிலும் வெள்ளை இன மக்களை விட கறுப்பின மக்களை அதிகமாகத் தாக்குவதாக தரவுகள் கூறுகின்றன. அத்துடன் இந்நோயால் பீடிப்பவர்கள் தொகை வருடாவருடம் அதிகரித்து வருகிறது. அதிலும் முக்கியமாக குழந்தைகளை மேலும் அதிகமாக
பீடிக்கிறது.
உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 180,000 பேர் ஆஸ்த்மா நோயினால்
மரணமுறுகிறார்கள் என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய செய்தியாகும்.
இலங்கையில் 2000ம் ஆண்டில் மட்டும் 1024 பேர் ஆஸ்த்மா நோயினால்
இறந்திருப்பதாக அறிவிக்கபட்டுள்ளது. ஆனால் உண்மையில் இத்தொகை மேலும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஏனெனில் மேலைத்தேய வைத்திய முறையில்
மட்டும் அல்லாது சித்த, ஆயுர்வேத. மற்றும் கைவைத்தியங்களும்
செய்யப்படுவதால் ஆஸ்மாவிலான பல இறப்புகள் பதிவுக்கு ஆளாகாமல் தவறியிருக்கும்.
வாகனங்களின் புகையும் தொழிற்சாலைகளின் அழுக்குக் காற்றும் தூசியும் தங்குதடையின்றி காற்று மண்டலத்தில் கலக்கும் எம்மைப்போன்ற வளர்முக நாடுகளில் இந்நோயின் தாக்கம் மிகமிக அதிகம். இலங்கையில் பாடசாலை செல்லும் குழந்தைகளில் 10 முதல் 15 விகிதமான குழந்தைகள் ஆஸ்த்மா நோயினால்
தொல்லைப்படுகிறார்கள். இங்கு ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் ஆஸ்த்மா நோயினால் துன்புறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆம் வழி மண்டலம் மாசடைதல்
இந்நோய்க்கு ஒரு முக்கிய காரணம்தான். எமது வாழ்கை முறை மாற்றங்களும், நவீனவீடுகளின் அமைப்பும், துரித தொழில் மயமாக்கலும் இந்நோய் அதிகரிப்பதற்கு ஏனைய காரணங்களாகும்.
இந்நோய்க்கு சூழல் மாத்திரம் காரணம் என்று சொல்ல முடியாது. பரம்பரைக் காணங்களும் முக்கியமானவையே. உங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு இந்நோய் இருந்தால் அல்லது அவர்களுக்கு எக்ஸிமா, தும்மல், மூக்கடைப்பு, கண்கடி போன்ற அலர்ஜி சம்பந்தமான நோய்கள் இருந்தால் உங்களுக்கு இந்நோய் வருவதற்கானவாய்ப்பு ஏனையவர்களைவிட பத்து மடங்கு அதிகமாகும். ஆயினும் ஆஸ்த்மா எப்பொழுதும் பரம்பரையில் வரும் என்றும் சொல்ல முடியாது.
நோயால் வரும் துன்பம் ஒருபுறமிருக்க அந்நோய் நோயைப் பற்றிய தவறான கருத்துகளால் கலங்குபவர்கள்தான் இன்னும் அதிகம்தான்.

ஆஸ்த்மா எத்தகைய நோய்

உண்மையில் ஆஸ்த்மா என்றால் என்ன?
அது வருவதற்கான காரணங்கள் என்ன? காரணம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, அது வராமல் தடுக்கும் வழி என்ன? இவை தானே உங்கள் கேள்விகள்?
ஆஸ்த்மா என்பது சுவாசக் குழாய்களை பீடிக்கும், நீண்டகாலம் தொடரும் (Chronic)
ஒரு நோயாகும். இந் நோயுள்ளவர்களின் சுவாசப்பைக்கு காற்றை எடுத்துச் செல்லும் பாதையானது அழற்சியடைகின்றது. சுவாசப் பாதை என்பது மூச்சுக்குழாய்(Trachea), மூச்சுச்சிறுகுழாய் (Bronchi)
போன்றவற்றை உள்ளடக்குவது. இதன்போது அவை சிவந்து, வீக்கமடைகின்றன. அத்துடன் அவற்றைச் சுற்றியிருக்கும் சிறுசதைகள் இறுக்கமடைகின்றன. இதனால் சுவாசப்பாதை சுருங்குகிறது, காற்று சென்று வருவதற்கான பாதை ஒடுங்கிவிடுகிறது.அத்துடன் மேற் கூறிய அழற்சி காரணமாக சுவாசப் பாதையில் உள்ள கலங்கள் வழமையை விட அதிக சளியைச்
சுரக்கின்றன. இச்சளியானது தடிப்பும், விடுபடாது இழுபடும் தன்மையும் கொண்டது. இச் சளித்துளிகள் சுவாசப் பாதையை மேலும் அடைக்கின்றன. இவற்றால் மூச்செடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இது இழுப்பு அல்லது இருமலாக வெளிப்படும்.

ஆஸ்த்மா என்பது மூச்செடுப்பதில் சிரமமாகும். இது இழுப்பாக,
முட்டாக அல்லது தொடர்ந்த இருமலாக வெளிப்படலாம். இதற்குக் காரணம் சுவாசக் குழாயின் காற்று செல்லும் பாதை சுருக்கமடைவதாகும் என அறிந்தோம்.
சளிசுலபமாக வெளியேற முடியாவிட்டால் என்ன நடக்கும்? அதை வெளியேற்ற எமது சுவாசத் தொகுதி முயலும். அந்த முயற்சிதான் தொடர்ச்சியான இருமலாக வெளிப்படுகிறது. பலருக்கு இந்த தொடர்ச்சியான இருமல்தான் ஆஸ்த்மாவிற்கான
முக்கிய அறிகுறியாகும். பல குழந்தைகளிலும் சில பெரியவர்களிலும் இரவு இருமல்பெரும் தொல்லை கொடுப்பதாக இருக்கிறது. தனியான இரவு இருமல் மாத்திரமே இவர்களுக்கு ஆஸ்த்மாவிற்கான முதல் அறிகுறியாக இருப்பதுண்டு. அதிலும் முக்கியமாக அந்த இருமலானது அதிகமாயிருந்து ஒருவரை நித்திரை விட்டு எழும்பச்
செய்கிறது எனில் அது ஆஸ்த்மாவாக இருக்கலாம்.
எனவே உங்கள் குழந்தைக்கு அடிக்கடி, அல்லது குறிப்பட்ட ஒரு நேரத்தில் (உதா - காலை அல்லது இரவு), அல்லது தொடர்ச்சியாக இருமல் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். குழந்தைகளுக்கு மட்டுமின்னிறப் பெரியவர்களுக்கும் இது பொருந்தும்.

ஆஸ்த்மா நோயின் அறிகுறிகள்
ஆஸ்த்மா நோயின் அறிகுறிகள் என்ன? இவை ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆயினும் முக்கிய அறிகுறிகளாக இவற்றைக் கூறலாம்.
1. இருமல்- இது
சுவாசத் தொகுதி நோய்கள் அனைவற்றுக்கும் பொதுவானது. ஆயினும் ஆஸ்த்மாவின் இருமல் தொடர்சியானது. அல்லது குறிப்பட்ட ஒரு நேரத்திலும் வரலாம்.

2. இழுப்புச் சத்தம்- முச்சு விடும்போது விசிலடிப்பது போன்ற சத்தம் உண்டாவது. இது இந்நோய்க்கே பிரத்தியேகமான அறிகுறியாகும்
3. நெஞ்சில் இறுக்கம். உங்கள் மார்பு மேல் பாரம் ஏற்றியது போன்ற அல்லது உங்கள் மாh;பு மேல் யாரோ ஏறி இருப்பது போன்ற உணர்வு
4. இளைப்பு- மூச்சு விடுவதில் சிரமம்

இருமலைத் தவிர நெஞ்சு இறுக்கமும், முச்சு விடுவதில் சிரமும் தொடரலாம். சுவாசிக்கும்போது நெஞ்சில் ஒரு சத்தமும் இசைக்க ஆரம்பிக்கக் கூடும். இதைதான் ஆஸ்த்மாவின்
இராகம்| என ஒரு கவிஞர் பாடினார்.

சில தருணங்களில் இந்த அறிகுறிகள் கடுமையாக இருக்காது. தானாகவே குணமடையக் கூடும். அல்லது சில மருந்துகளுடன் குணமடையக் கூடும். மாறக வேறு தருணங்களில் அறிகுறிகள்
தணியாது வர வர மோசமாகக் கூடும். அவ்வாறு அதிகரித்தால் அதனை கடுமையான நிலை (flareups or exacerbations) என்பார்கள்.


ஆஸ்த்மாவைத் தூண்டுபவை எவை?

ஆஸ்த்மாஎன்பது சுவாசக் குழாயில் ஏற்படும் ஒருவித அழற்சி என்றோம். இந்த அழற்சி எதனால் ஏற்படுகிறது? ஆஸ்த்மா நோயளர்களின் சுவாசத் தொகுதியானது மிகவும் நொய்மையானது. மற்றவர்களுக்கு எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாத சூழலிலுள்ள
சாதரண பொருட்களும், அசாதாரண நிலைகளும் இவர்களது சுவாசத் தொகுதியைத் தூண்டி மூச்சுத் திணற வைத்துவிடக் கூடும்.

நோயைத் தூண்டும் காரணிகளை மருத்துவத்தில் Trigger factors என்பார்கள்.
ஓவ்வாமையை ஏற்படுத்தும் பல பொருட்கள் இவ்வாறு தூண்டிகளாகவும் செயற்படும்.
பெனிசிலின் மருந்து பலருக்கு ஒத்துக் கொள்வதில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதனால்தான் டெஸ்ட் ஊசி போட்டுப் பார்த்த பின்னரே முழுமையான ஊசியைப் போடுவதையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.
இந்த பெனிசிலின் மருந்துதானது ஊசியாக ஏற்றப்பட்டால் மாத்திரம் அன்றி மாத்திரைகளாக உட்கொள்ளப்பட்டாலும் பலரில் ஆஸ்த்மாவை தூண்டிவிடும்.

குழந்தைகளிலும் சில பெரியோர்களிலும் தடிமன் போன்ற வைரஸ் தொற்று நோய்கள் சிலவேளை இழுப்பைத் தூண்டிவிடும்.
வேறுசிலரில் சில்லென விசும் குளிர் காற்று ஆஸ்த்மாவைக் கிளப்பிவிடும்.
குளிரூட்டப்பட்ட அறைக்கு உள்ளும் வெளியேயும் ஓடித் திரியும் சிலருக்கு சூழலின் வெப்பமாற்றங்கள் ஆஸ்த்மா தூண்டப்படுவதற்குக் காரணமாகின்றன.


பக்திமணத்தைத்| தூண்டும் ஊது பத்தியின் வாசனையும், மிளகாய்ப் பொரியலும், உணவு தாளிக்கும் மணமும் கூடச் சிலருக்கு ஆஸ்த்மாவை வெடித்துக் கிளப்பி விடும்.
காதலியின் உடல் வாசனை இயற்கையானதா, செயற்கையானதா என நுனி மூக்கால் முகர்ந்து ஆராயப் புகுந்த சினிமாத்தனமான காதலன் அவளின் சென்ட் வாசனையால் ஆஸ்த்மா வெடித்துக்கிளம்ப ஆளைவிட்டால் போதும் என ஓடித் தப்பியது கட்டுக் கதையல்ல.

ஆம்! கடுமையான எந்த மணமும் ஆஸ்த்மா தொடங்குவதற்குக் காரணமாகலாம்.
கனடாவிலிருந்துவந்த ஒருவர் தனது தம்பி வீட்டிலுள்ள பொமேரியனை மடியில் வைத்துக் கொஞ்சிய கையோடு மூச்செடுக்க முடியாமல் திணறிக்கொண்டு ஓடி வந்து நெபுலைசர் (Nebuliser) பிடித்தது அண்மையில் நடந்த இன்னுமொரு உதாரணமாகும்.
வீட்டு செல்லப் பிராணிகளான நாய் பூனை போன்றவற்றின் தோலிலுள்ள முடிகள் ஆஸ்த்மாவைத் தூண்டும் முக்கிய காரணமாக இனங் காணப்பட்டுள்ளன. மிருகங்களின் இயற்கை முடிகள் மாத்திரமின்றி குழந்தைகள் படுக்கையில் கட்டியணைத்துக்
கொண்டு உறங்கும் கரடி நாய் போன்ற பொம்மைகளில் படிந்திருக்கும் தூசிகள் பல குழந்தைகளின் ஆஸ்த்மாவிற்கான தூண்டிகளாக இருக்கின்றன.

புகைபிடிக்கும் பலரின் இருமலுக்கு காரணமாக இருப்பது புகையிலையின் புகைதான் என்பதை பலரும் சுலபமாக மறந்து விடுகிறார்கள். புகைப்பவருக்கு மாத்திரமின்றி புகைப்பவரின் குழந்தைக்கும் மனைவிக்கும் கூட அவர் பரப்பும் புகை
இருமலையும் ஆஸ்த்மாவை கொண்டு வரலாம். புகைத்தலை நிறுத்த இருமலும் ஆஸ்த்மாவும் பலருக்கு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
பஞ்சு மெத்தையின் சூட்டினால் இருமுகிறது எனப் பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். தலையிணையிலும், மெத்தையிலும், படுக்கை விரிப்பிலும்
உள்ள பஞ்சில் டஸ்ட்மைட்| (Dust mite)என்ற கண்ணுக்குப் புலப்படாத நுண்கிருமி ஒளிந்திருக்கும். இது எமது உடலிலிருந்து தினமும் உதிரும் சிறு தோல் துணிக்கைகளை உண்டு உயிர் வாழும்
கிருமியாகும். இதுவும் ஆஸ்த்மாவைத் தூண்டும் முக்கிய காரணியாக இனங் காணப்பட்டுள்ளது.

கரப்பொத்தான் பூச்சியின் எச்சமும் இன்னுமொரு மிக முக்கிய தூண்டியாகும்.
தூசிக்கும் ஆஸ்த்மாவிற்குமுள்ள தொடர்பு நன்கு அறியப்பட்டதே. தூசி தட்டினால் அல்லது அடைத்துக் கிடந்த புத்தகங்களுக்கும் ஆடைகளுக்கும் கிட்டப் போனாலே சிலருக்கு தும்மலும், மூக்கால் நீர் வடிதலும் இருமலும் தொடங்கி ஆஸ்த்மாவாக மாறித்
தொல்லை கொடுக்கும்.

மோட்டர் சைக்கிளிலும் ஸ்கூட்டரிலும் செல்லும் பலர் முகமூடித் திருடர்கள்போல மூக்கை கைக்குட்டையால் கட்டிக் கொண்டு விரைவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். திருடன் எனப் போலிசுக்குத் தகவல் கொடுக்க ஓடுகிறீர்களா? சற்றுப் பொறுங்கள். பாவம்! முகத்துணியைக் கழற்றினால் வாகனங்கள் கிளப்பும் தூசியால் நடுவழியில் ஆஸ்த்மாவால் அவர்கள் சிரமப்பட
நேரிடும்.

மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற மனக் குழப்பங்களும் சிலருக்கு ஆஸ்த்மாவைத் தூண்டுவதுண்டு.
இவற்றைத் தவிர கடுமையான உடற்பயிற்சிகளும் காரணமாகலாம். ஓடி ஆடி விளையாடினால் சில பிள்ளைகளுக்கு ஆஸ்த்மா தொடங்கிவிடுவதுண்டு. வியர்க்கக் களைக்க விளையாடினால்
உங்கள் குழந்தைக்கு ஆஸ்த்மா வருகிறது என்பதற்காக குழந்தையின் விளையாட்டை நிறுத்திவிடாதீர்கள். விளையாட்டு அவர்களின் உடல் மற்றும் மனோ வளர்ச்சிகளுக்கு மிகவும் அவசியாமனது. ஆஸ்த்மாவைத் தடுப்பதற்கான மருந்தைக் வைத்திய ஆலோசனையுடன் மருந்துகளைக் கொடுத்துவிட்டு அவர்களை இயல்பாக விளையாட விடுங்கள்.


வேறுவேறு நோய்;களுக்காக உபயோகிக்கும் சில மருந்துகளும் சிலருக்கு அஸ்த்மாவைத் தூண்டிவிடுவதுண்டு. உதாரணமாக அஸ்பிரின், புரூபன், (Ibuprofen) இன்டோமெதசின்;(Indomethacine) போன்ற பல வலிநிவாரணி மாத்திரைகள் ஆஸ்த்மாவைத் தூண்டுகின்றன.
இதேபோல உயர் இரத்த அழுத்தத்திற்கு உபயோகிக்கும் கண் அழுத்தத்pற்கும் உபயோகிக்கும் Beta blockers எனும் வகை மருந்துகளும் (உதா- புரபனலோல், டிமலோல்) தூண்டிகளாகும்.
சிலரது ஆஸ்த்மாவை பருவகால ஆஸத்மா (seasonal asthma) எனக்
குறிப்பிடுவோம். மரங் கொள்ளாமல் பூத்துக் குலுங்கும் காலங்களில்
பூக்களில் உள்ள மகரந்தம் காற்றில் பரவிச் சிலருக்கு ஆஸ்த்மாக்குக்
காரணமாகிவிடும். பருவகால வேறுபாடுகள் துல்லியமாக உள்ள மேலை நாடுகளில்தான் இதனைக் காணலாம். வருடம் முழுவதும் பூத்துக் குலுங்கும் எமது நாடு போன்ற வெப்பமய நாடுகளில் ஆஸத்மாவிற்கு எந்த நாளும் ஆட்சிதான்.

சளி,ஆஸ்த்மா ஆகியவற்றைத் தூண்டுபவையாக பூக்களின் மகரந்தம், நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளின் ரோமம், தூசி, தூசிப்பூச்சி, கரப்பொத்தான் எச்சம் எனப் பலவாகும் என்பது உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆயினும் இலங்கையைப் பொறுத்தவரையில் வீட்டுத் தூசிப்பூச்சி, களஞ்சியத் தூசிப்பூச்சி, கரப்பொத்தான் ஆகிய மூன்றுமே ஆஸ்த்மாவைத் தூண்டுவதற்கான முக்கிய காரணமாகும். இதனை பேராசிரியர் அனுரா வீரசிங்க ((Prof.Anura Weerasinghe) தலைமையில்
செய்யப்பட்ட ஒரு ஆய்வு தெளிவாகக் குறிப்பிடுகிறது. எமது சூழலில்
ஆஸ்த்மாவுக்கு பூக்களின் மகரந்தம், வளர்ப்புப் பிராணிகளின் ரோமம் ஆகியவை முக்கியமான காரணிகள் அல்லவாம்.

ஆஸ்த்மாவைத் தடுங்கள்

ஓருவருக்கு ஆஸ்த்மாநோய் என வைத்துக் கொள்வோம். "இந்த வருத்தம் வராமல் தடுக்க முடியாதா?" என்பதுதான் அவர் வைத்தியரை கேட்கும் முதல் கேள்வியாக இருக்கும். முதல் கேட்கும் கேள்வி மட்டுமல்ல, அடிக்கடி கேட்கும் கேள்வியும் கூட.
வைத்தியரால் கட்டுப்படுத்தத்தான் முடியும். உங்களால்தான் தடுக்க முடியும்.

எப்படி என்கிறீர்களா?

ஆஸ்த்மா நோய்க்கு பல காரணங்கள் உள்ளன. தூண்டும் காரணிகள் பற்றி ஏற்கனவே பார்த்தோம். உங்களுக்கு நோயைத் தூண்டும் காரணிகளை உங்களால்தானே இனங்காண முடியும்.

சாம்பிராணிப் புகை உங்களுக்கு வரட்டு இருமலையும் இழுப்பையும்
ஏற்படுத்துமாயின் அத்தகைய சூழலைத் தவிர்ப்பதின் மூலம் ஆஸ்த்மா தூண்டப்படுவதை நீங்கள் தடுக்கலாம் அல்லவா?

நீங்கள் தவிர்க்கக் கூடிய ஏனைய விடயங்கள் என்ன? தவிர்க்க வேண்டிய 'தூண்டும் காரணிகள்' எவை? செய்ய வேண்டியது என்ன?

உங்களது மெத்தை தலையணை போன்றவற்றை டஸ்ட் மைட் தங்கியிருக்க முடியாத பொலித்தீன் அல்லது பிளாஸ்டிக் துணியால் மூடுங்கள். உங்களது படுக்கையறையில் உள்ள மென்மையான துணிகளாலான திரைச்சீலை, தரைவிரிப்பு, கம்பளம் போன்றவற்றை
அகற்றுங்கள். அல்லது அவற்றை அழுக்கு நீக்கி வெயிலில் போட்டு டஸ்ட் மைட்யை அழியுங்கள்.

டஸ்ட் மைட் மறைந்திருக்கக் கூடிய உங்கள் படுக்கை விரிப்பு, தலையணை, மெத்தை, அவற்றின் உறை ஆகியவற்றை அடிக்கடி நல்ல வெயிலில் காயப் போடுங்கள். அக் கிருமிகள் அழிந்து விடும். படுக்கை விரிப்பு, தலையணையுறை, மெத்தையுறை ஆகியவற்றை வாரம் ஒருமுறையாவது 550C சூடுள்ள நீரில் துவைக்க வேண்டும்.

உங்களது படுக்கை விரிப்பின் மேல் ஒரு வெயிலில் காய வைத்த பன்பாயை போடுங்கள்.

பஞ்சு, துணி போன்றவற்றாலான மென்மையான பொம்மைகளை உங்கள் குழந்தையின் படுக்கையறையிலிருந்து அகற்றுங்கள்.

வீடும் படுக்கையறையும், நல்ல காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

நாய், பூனை, முயல் போன்ற திட்டமான ஒரு வெப்பநிலைக்குரிய பாலூட்டிச் செல்லப் பிராணிகளை உங்கள் படுக்கையறையில் நுழையவோ படுக்கவோ அனுமதிக்காதீர்கள்.

உங்களது படுக்கைத் துணிகளிலும் தரைவிரிப்பு போன்ற ஏனைய மென்துணிகளிலும் வசிக்கும் தூசிப்பூச்சிகளை அழிக்க அக்கிரிற்று கொல்லிகளை உபயோகியுங்கள்.

கரப்பொத்தான் பூச்சியின் கழிவுகள் ஆஸ்த்மாவை தூண்டும் ஒரு முக்கிய காரணியாகும். எனவே கரப்பொத்தான் பூச்சியை ஒழிக்க வீட்டை சுத்தமாக வைத்திருப்தடன், அவற்றை அழிக்க பூச்சி கொல்லிகளை உபயோகியுங்கள்.

திட்டமான ஒரு வெப்ப நிலைக்குரிய பாலூட்டிச் செல்லப் பிராணிகளை உங்கள் படுக்கையறையில் நுழையவோ படுக்கவோ அனுமதிக்காதது மாத்திரமின்றி வீட்டில் வளர்ப்பதையும் தவிருங்கள். அது முடியாவிட்டால் அச் செல்லப் பிராணிகளை வாரம் ஒரு முறையாவது நன்கு குளிப்பாட்டினால் ஆஸ்த்மாவை தவிர்க்கலாம்.

புகை ஆஸ்த்மாவைத் தூண்டும் ஒரு வலிமையான காரணியாகும். எனவே ஆஸ்த்மா நோயாளி புகை பிடித்தலை நிறுத்த வேண்டும். அது மாத்திரமின்றி அவ் வீட்டில் உள்ள ஏனையவர்கள் புகைப்பதையும் முற்றாகத் தடுக்க வேண்டும்.

சமையலறைப் புகையும், விறகுப் புகை, ஏனைய மரப்பொருட்கள் எரியும் புகை ஆகியவையும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆஸ்த்மாவைத் தூண்டுகின்ற மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்;. உதாரணமாக அஸ்பிரின், புரபனலலோல், டிமலோல், இன்டமெதசீன் போன்றவை.

உணவு பதனிடலில் பயன்படுத்தப்படும் சல்பைற்று (Sulfite)
ஆகியவை ஆஸ்த்மாவை மோசமாக்கும் எனச் சொல்லப்படுகிறது. உலர்த்திய பழங்கள்,
பதனிடப்பட்ட உருளைக்கிழங்கு உணவுவகைகள், கோர்டியல், பியர், வைன் ஆகியவற்றில் இது கலந்திருப்பதால் அத்தகைய உணவுகளைத் தவிருங்கள்.

கடுமையான பல மணங்களும் விசிறித் தெளிப்புகளும் ( Sprays)
சுவாசக் குழாய்களை உறுத்தி ஆஸ்த்மாவைத் தூண்டுகின்றன. உதாரணமாக அழகுசாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றைக் கூறலாம். வீட்டில் பயன்படுத்தும் தெளிகருவிகளில் உள்ள வாயுக்களும் காரணமாகலாம். நன்கு உலராத பெயின்ட் வகைகளின் மணமும் ஆஸத்மாவை தூண்டக் கூடும்.

அதிகாலையில் வீசும் குளிர் காற்று சிலருக்கு ஆஸ்த்மாவை தூண்டக் கூடும்.
அதே வேளை அதிகாலையின் நடுங்கும் மார்கழிக் குளிரில், குளிர் நீரினால் தலையில் குளித்தும் சுகமாக இருக்கும் நோயாளிகளும் இருக்கவே செய்கிறார்கள்.

இதுவரை சொல்லியவற்றிலிருந்து உங்களுக்கு ஆஸ்த்மாவை தூண்டும் காரணியை இனங்காண முடிந்ததா? அப்படியானால் நோயை இன்றோடு விரட்டிவிடலாம் அல்லவா?
ஆஸ்த்மாவை தூண்டும் காரணியைக் இனங்காண முடியாவிட்டால் கூட கவலைப்பட வேண்டியதில்லை. நேயைத் தடுக்கக் கூடிய, நோயைத் தணிக்கக் கூடிய நல்ல சிகிச்சை முறைகள் இப்பொழுது கிடைக்கின்றன.

ஆஸ்த்மாவிற்கு சிகிச்சை

ஆஸ்த்மாவிற்கான சிகிச்சையின் அவசியமும் பலனும் அந்நோயை அனுபவித்தவர்களுக்குத் தான் புரியும்.

மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டு கைகளை மேசையில் ஊன்றியபடி, பேசவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கையில் திடீரெனச் சுகம் கிடைத்தவருக்;குத்தான் சிகிச்சையின் அருமை புரியும்

ஆஸ்த்மாவிற்கு பல சிகிச்சை முறைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆங்கில வைத்தியம், சித்த ஆயுர்வேத வைத்தியங்கள்,
யூனானி, ஹோமியோபதி என எல்லா வைத்தியங்களிலும் சிகிச்சை முறைகள் இருக்கவே செய்கிறது. ஏன் பாட்டி வைத்தியத்திலும், உங்கள் வீட்டு வைத்தியத்திலும் கூட சிகிச்சை முறைகள் இருக்கிறனதானே?

எந்தச் சிகிச்சை முறை சிறந்தது?

உங்கள் தேவை என்ன?

சிறந்த சிகிச்சையின் அம்சங்களாக எவற்றை நீங்கள் கருதுவீர்கள்?

• விரைவில் சுகம் கிடைக்க வேண்டும்.
• சுகம் உடனடியாக் கிடைப்பது மாத்திமின்றி நோயற்ற நிலை நீடிக்கவும் வேண்டும்
• நோயால் உங்கள் நாளாந்த வேலைகள் பாதிப்படையக்; கூடாது
• மருந்துகள் பக்க விளைவுகளைக் கொடுக்கக் கூடாது. கைநடுக்கம், பதற்றம்,போன்ற உடனடிப் பக்கவிளைவுகளை மாத்திரமின்றி பிரஸர், நீரிழிவு, எலும்புச் சிதைவு போன்ற எதிர்காலப் பின்விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடாது.
• மருத்துவச் செலவு உங்கள் கைக்கு அடக்கமாக இருக்க வேண்டும்.
அவ்வளவுதானே?


சிகிச்சை முறைகள்


ஆஸ்த்மாவிற்கான சிகிச்சையைப் பொறுத்தவரையில் அண்மைக் காலத்தில் நம்பிக்கையூட்டும் நல்ல பலனளிக்கும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இருபது வருடங்களுக்கு முன்னர் ஆஸ்த்மாவிற்கான சிகிச்சையானது சுவாசக்குழாய் இறுகுவதைத் தடுப்பதும், இறுகிய சுவாசக்குழாயை விரிவடையச் செய்வதுமான (Bronchodilators) மருந்துகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இம்மருந்துகள் ஆஸ்த்மா நோயின் ஒரு விளைவான சுவாசக் குழாய் சுருங்குதல் மட்டுமே கவனத்தில் எடுத்திருந்ததை இப்பொழுது வைத்தியர்கள் உணர்கிறார்கள்.

அழற்சியே ஆஸ்த்மாவிற்கு முக்கிய காரணமாக இப்பொழுது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அழற்சியினால் சுவாசக்குழாய்களின் உட்பகுதியில் உள்ள மென்சவ்வுகள் வீக்கமடைந்து தடித்த சளியை சுரக்கச் செய்கின்றன.
அழற்சியடைந்த மென்;சவ்வுகள், மகரந்தம், தூசி, புகை, குளிர்காற்று போன்ற காரணிகளால் தூண்டப்பட்டு சுவாசக்குழாய்களை சுருக்கமடையச் செய்கின்றன. இது ஆஸ்த்மாவாக வெளிப்படுகிறது.

இதிலிருந்து அழற்ச்சியே ஆஸ்த்மாவிற்கு அடிப்படை என்பது தெளிவாகின்றது. எனவே முன்பு குறிப்பிட்ட சுவாசக்குழாயை விரிவடையச் செய்யும் மருந்துகள் போதுமானவையல்ல. அழற்சியைத் தணிக்கும் யுவெiiகெடயஅயவழசல னசரபள மருந்துகள்
முக்கியமாகத் தேவைப்படுகின்றன. அழற்சிக்கு எதிரான மருந்துகள்
சுவாசக்குழாய்களின் அழற்சியைத் தணிப்பது மாத்திரமின்றி தடுக்கவும் செய்கின்றன. இது சுவாசக்குழாய் சுருக்கமடைவதையும் தடுக்கிறது.

மருந்து வகைகள்


எனவே ஆஸ்த்மாவிற்கான மருந்துகள் அடிப்படையில் இரண்டு வகையானவை.

1. சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்பவை.
(bronchodilators)

இவற்றை உடனடி நிவாரணம்
(Quick-Relief Medicines) அளிக்கும் மருந்துகள் எனவும் கூறலாம்.

இவை ஆஸ்த்மாவின் போது சுருக்கமடையும் சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்து சுவாசத்தைச் சுலபமாக்கும். நீங்கள் பெரும்பாலும் உபயோகிக்கும் வென்டோலின் -சல்பியுடமோல், பிரிக்கானில் - ரெபியுடலன், அமைனோபிலின் போன்றவை இந்த
வகையைச் சேர்ந்தவை.


2. அழற்சிக்கு எதிரானவை
(Anti inflammatory agents) .

இவை ஸ்டிரோயிட் என்ற வகையைச் சார்ந்தவை.

இவை உடனடி நிவாரணம் அளிப்பதில்லை. ஆனால் சுவாசக் குழாய்களின் அழற்சியை நீண்ட கால அளவில் இவை தணிப்பதால் நோய் அடிக்கடி வருவதையும், நோய் மோசமடைவதையும் தடுக்கின்றன.

இவற்றை நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகள்
; (Controller Medicines) என்கிறோம்.

இவற்றில் பல வகைகள் உள்ளன.

1) குளுக்கோ கோர்ட்டிக்கோ ஸ்டிரோயிட்ஸ்
(Glucocorticosteroids) என்பது முதல் வகை. இவை அழற்சிக்கு எதிரான மருந்துகளாகும். இவை மாத்திரைகள்,

2) சோடியம் குறோமோ கிளைக்கேட்
;(Sodium Cromoglycate)
நீண்டகாலமாக பாவனையில் உள்ள மருந்து. மிக வீரியமான மருந்து எனக் கூறமுடியாது. இதன் முழுமையான பலனை அறிய 4-6 வாரங்கள் செல்லக் கூடும். இன்ஹேலராகக் கிடைக்கும். தினமும் 3-4 தடவைகள் உபயோகிக்க வேண்டியிருக்கும்.

3) நீண்ட நேரத்திற்குச் செயற்படும் பீட்டா அகொனஸ்ட்
(Long acting- Beta Agonist) இவை உடலில் நீண்ட நேரம் நின்று செயற்படக் கூடிய மாத்திரைகளாகவும் (Sustained Release tablets) இன்ஹேலராகவும் உபயோகிக்கப்படுகின்றன. இவை தினமும் ஒரு அல்லது இரண்டு தடவைகள் மட்டும் உபயோகித்தால் நோயைக் கட்டுப்படுத்தப் போதுமானது.

4) நீண்ட நேரம் நின்று செயற்படக் கூடிய தியோபிலின்
Sustained Release Theophyline tablets).. இதுவும் தினமும் ஒரு அல்லது இரண்டு தடவைகள் மட்டும் உபயோகித்தால் நோயைக் கட்டுப்படுத்தப் போதுமானது.

5) அன்ரிலியுகரையின்
(Antileukotrienes) என்பது சிலகாலத்திற்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்ட புதுவகை மருந்தாகும்.
ஆஸ்த்மாவை கட்டுப்படுத்துவது மாத்திரமின்றி, அந்நோயோடு இருக்கும் ஒவ்வாமையையும் கட்டுப்படுத்தக் கூடியது. ஆயினும் இது இன்ஹேலருடன் இணைந்து பாவிக்கக் கூடியதே ஒழிய, தனியாக உபயோகித்தால் வீரியமானச் செயற்படும் எனச் சொல்ல முடியாது.
ஸ்டிரோயிட் மருந்துகள்
ஹைட்ரோகோட்டிசோன்,பிரட்னிசொலோன், மீதையில் பிரட்னிசொலோன், பீட்டாமெதசோன், டெக்ஸாமெத்தசோன்
போன்ற ஸ்டிரோயிட் மருந்துகள் மாத்திரைகளாகக் கிடைக்கின்றன.
இவை தொடர்ந்து உபயோகிக்கும் போது கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியன. நீண்ட காலம் உபயோகித்தால் எலும்புச்சிதைவு(Osteoporosis), உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கட்டறக்ட், எடை அதிகர்ப்பு, தோல் மென்மையடைதல்,
தசைப் பலவீனம் போன்ற பல நோய்களுக்கு இட்டுச் செல்லும்.
இதனால் இப்பொழுது மிக கடுமையான நோயாளர்களுக்கு மட்டுமே மாத்திரைகளாக உபயோகிக்கப்படுகின்றன. .


ஆனால் இதே இனத்தைச் சேர்ந்த இன்ஹேலர் மூலம் கொடுக்கப்படும் இதே வகையைச் சேர்ந்த புதிய மருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே கொடுக்கப்படுவதால் ஆபத்தற்றது.

இது புதுவகை மருந்து எங்களில்தான் பரீட்சித்துப் பார்க்கிறீகளோ என நீங்கள் பயப்படவேண்டியதில்லை கடந்த மூன்று தசாப்பதங்களுக்கு மேலாக உலகளாவிய ரீதியில் பாவனையில் இருப்பதால் இவற்றின் நல்ல விளைவுகளை மருத்துவ உலகம்
தெளிவாகவே அறிந்துள்ளது.

விலை அதிகம் என்பதால் முன்பு இலங்கையில் பெருமளவு பாவனையில் இருக்கவில்லை.
இப்பொழுது கைக்கு அடக்கமான விலையில் கிடைக்கிறது. எனவே பரவலான பாவனைக்கு வந்துள்ளது.

மருந்துகளின் வடிவங்கள்

[color=red]
ஆங்கில வைத்தியத்தைப் பொறுத்த வகையில் மருந்துகள் கொடுக்கப்படும் முறைகளை மூன்றாக வகுக்கலாம்.

• வாய்வழி உட்கொள்ளும் மாத்திரைகள்,சிரப் மருந்துகள்
• ஊசி ஊடாக நாளத்தில் நேரடியாகச் செலுத்தப்படும் மருந்துகள்.
• மூச்சுக் குழாய் வழியே செலுத்தப்படும் மருந்துகள்

வாய்வழி உட்கொள்ளப்படும் மருந்துகளே எமது நாட்டில் பெரும்பாலானவர்களால் உபயோகிக்கப்படுகிறது. விலை குறைவாக இருப்பதும், வேறு நல்ல சிகிச்சை முறைகள் இருப்பது பற்றிய அறிவின்மையுமே இதனையே தொடர்ந்து பாவிப்பதற்கான காரணமாகும்.
ஊசி ஊடாக நாளத்தில் நேரடியாகச் செலுத்தப்படும் மருந்துகள் சில மிகக் கடுமையான வேளைகளில் மட்டுமே இப்பொழுது உபயோகிக்கப் படுகிறது.

மூச்சுக் குழாய் ஊடாக உள்ளிழுக்கும் கருவிகளையே (Inhalers-இன்ஹேலர்) இப்பொழுது வைத்தியர்கள் பெரும்பாலும் ஆஸ்த்மா நோயாளிகளுக்கு சிபார்சு செய்கிறார்கள்.
இதற்குக் காரணம் அதன் துரித செயற்பாடும் பக்கவிளைவுகள் அற்ற தன்மையுமே ஆகும்.


இருந்தபோதிலும் எம்மைப் போன்ற வறிய நாடுகளில் பெரும்பாலான நோயாளிகள் இன்னமும் மாத்திரைகளையே உபயோகிக்கிறார்கள். மாத்திரைகளோடு ஒப்பிடும்போது
இன்ஹேலர்களின் கூடிய விலைதான் தடைக்கல்லாக இருக்கிறது. போருக்குப் பணத்தை அள்ளிக்கொட்டும் பிச்சைக்கார அரசுகள் நோயாளிகளுக்கான இலவச மருத்துவச் செலவில் தானே கஞ்சத்தனம் காட்டமுடியும்


இன்னுமொரு காரணத்தையும் சொல்லலாம். பெரும்பாலான நோயாளிகளுக்கு இன்ஹேலர் என்றாலே ஒருவித பயம் இன்னும் நிலவுகிறது.

'இது கடுமையான நோயாளர்களுக்கு மாத்திரம் தேவையான வைத்தியம், எனக்கு அவசியமில்லை'

'இன்ஹேலரைப் பழகினால் பிறகு கைவிடமுடியாது'

'இது ஆபத்தான முறை, உயிராபத்தையும் கொண்டு வரும்' என்பது போன்ற பலவிதமான தவறான கருத்துக்கள் நோயாளர் களிடையே நிலவுகிறது. இதனால் இன்ஹேலர் பாவிக்க அவர்கள் தயங்குகிறார்கள்.

ஆனால் இன்ஹேலர்கள் உண்மையில் ஆபத்தற்ற மிகவும் பாதுகாப்பான சிறந்த சிகிச்சை முறையாகும் என்பதே உண்மையாகும்.

[color=black]ஆரம்ப நிலை ஆஸ்த்மா நோயாளிகளுக்குக் கூட மிகவும் உகந்தது.
இன்ஹேலர்கள் ஏன் சிறந்தவை?


மருந்துகளை
மாத்திரைகளை உட்கொள்ளும் போது அவை உணவுக்குழாயினால் உறிஞ்சப்பட்டு,
குருதிச் சுற்றோட்டத்தில் கலந்து, மிக நீண்ட நேரத்தின் பின்னர், அதுவும்
உட்கொள்ளப்பட்டதின் மிகச் சிறிய அளவே சுவாசப்பையை அடைகிறது. எனவே போதிய
நிவாரணம் கிடைக்கவேண்டுமாயின் அதிகளவு மருந்தை எடுக்க வேண்டும். இது
பக்கவிளைவுகளுக்கு வழிவகுக்கும்.


1. ஆனால் இன்ஹேலர்கள் நேரடியாக சுவாசப்பையினுள் மருந்தைச் செலுத்துவதால் மிகக் குறைந்த அளவு மருந்தே போதுமானது.

மாத்திரைகள்
மில்லி கிராம் அளவில் கொடுக்கப் படுகின்றன. ஆனால் இன்ஹேலர் மருந்துகள்
அதில் ஆயிரம் மடங்கு குறைவான, மைக்கிரோ கிராம் அளவிலேயே
கொடுக்கப்படுகின்றன. இதனால் உடலுக்கு ஏ



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Nov 24, 2011 5:35 pm

இன்ஹேலர்கள் ஏன் சிறந்தவை?


மருந்துகளை மாத்திரைகளை உட்கொள்ளும் போது அவை உணவுக்குழாயினால் உறிஞ்சப்பட்டு,
குருதிச் சுற்றோட்டத்தில் கலந்து, மிக நீண்ட நேரத்தின் பின்னர், அதுவும் உட்கொள்ளப்பட்டதின் மிகச் சிறிய அளவே சுவாசப்பையை அடைகிறது. எனவே போதிய நிவாரணம் கிடைக்கவேண்டுமாயின் அதிகளவு மருந்தை எடுக்க வேண்டும். இது பக்கவிளைவுகளுக்கு வழிவகுக்கும்.


1. ஆனால் இன்ஹேலர்கள் நேரடியாக சுவாசப்பையினுள் மருந்தைச் செலுத்துவதால் மிகக் குறைந்த அளவு மருந்தே போதுமானது.

மாத்திரைகள் மில்லி கிராம் அளவில் கொடுக்கப் படுகின்றன. ஆனால் இன்ஹேலர் மருந்துகள் அதில் ஆயிரம் மடங்கு குறைவான, மைக்கிரோ கிராம் அளவிலேயே கொடுக்கப்படுகின்றன. இதனால் உடலுக்கு ஏற்படும் பக்கவிiவுகள், இல்லையெனும் அளவிற்கு குறைந்துவிடுகிறது.

2. இன்ஹேலர் மருந்துகள் சுவாசப்பையினுள் நேரடியாகச் செலுத்தப்படுவதால் மிக விரைவாகவும் குணமாக்குகிறது.

3. அதேபோல குறைந்த அளவு மருந்தே பாவிக்கப்படுவதால் ஆபத்தற்ற பாதுகாப்பான சிகிச்சை முறையுமாகும்.

உங்களுக்கான மருந்து எது ?


உங்களுக்கு உகந்த மருந்து எது?

உங்களுக்கான மருந்து உங்கள் நோயின் நிலையில் தங்கியுள்ளது. ஆஸ்த்மா நோயில் பல நிலைகள் உள்ளன. அதற்கேற்ப சிகிச்சையில் மாற்றங்கள் தேவைப்படலாம். ஆயினும் சுருக்கம் கருதி இங்கு இரண்டாகப் பிரிக்கிறோம்.

இடையிடையே தலைகாட்டும் குறைந்த ஆஸ்த்மா

உங்களுக்கு ஆஸ்த்மாவின் தாக்கம் இடையிடையேதான் வருகிறதெனில் அதாவது வாரத்திற்கு இரண்டு முறைக்கு குறைவாகவே வந்து அதற்கு இடைப்பட்ட காலத்தி;ல்
நோய்கான எந்த அறிகுறியும் இருப்பதில்லை எனில் நீங்கள் நோயின் அறிகுறி தோன்றும் நேரங்களில் மட்டும் சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்யும்
(bronchodilators) எனப்படும்
முதலாவது வகை மருந்துகளில் ஒன்றை மட்டும் பாவித்தால் போதுமானதாகும். அதாவது வென்டோலின், பிரிக்கானில் போன்ற ஒரு மருந்தை இன்ஹேலராக உபயோகித்தால் போதுமானது.

ஏனையவர்களுக்கு


ஏனையவர்களுக்கு இரண்டு வகை மருந்துகளையும் அதாவது நோயின் வாதையை உடனடியாகத் தணிக்கும் மருந்துகளையும் நோய் வராமல் தடுக்கும் மருந்துகளையும் தினமும் பாவிக்க
வேண்டியிருக்கும்


அதாவது வென்டோலின் பிரிக்கானில் ஆகிய இரண்டில் ஒன்றையும், சைக்கிளசோன், பெகடைட், பல்மிகோர்ட், போன்றவற்றில் ஒன்றையும் நாளாந்தம் பாவிக்க வேண்டியிருக்கும்

இப்பெழுது சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்யும்
(bronchodilators), மற்றும் அழற்சியைத் தணிக்கும் ஸ்டிரோயிட் மருந்துகள் இரண்டும் இணைந்த இன்ஹேலர்களும் கிடைக்கின்றன. Serotide, Seroflo, Formoide, Foracort
போன்ற பல பெயர்களில் இலங்கையில் கிடைக்கின்றன. தனித்தனியே இம் மருந்துகளை உபயோகிப்பதை விட இவ்வாறு இணைந்த முறையில் உபயோகிப்பது கூடிய பலனை
நோயாளர்களுக்கு கொடுப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்னறன.


எந்தெந்த மருந்துகளை எந்தெந்த அளவுகளில், எத்தனை தடவைகள் உபயோகிக்க வேண்டும் என்பதை உங்கள் வைத்தியர்தான் தீர்மானிக்க வேண்டும்.

இன்ஹேலர்களை உபயோகிக்கும் முறைகள் பற்றி அடுத்துப் பார்ப்போம்.


இன்ஹேலர்களை உபயோகிப்பது எப்படி?


இன்ஹேலர்கள் மிகவும் சிறந்த சிகிச்சை முறையானாலும் அவற்றைச் சரியான முறையில் இயக்காவிட்டால் முழுமையான பலன் கிடைக்காது. எனவே அவற்றை சரியான முறையில் இயக்குவது எப்படி எனப் பார்க்கலாம்.

பல்வேறு பெயர்களில் கிடைத்தாலும் இன்ஹேலர்கள் அடிப்படையில் இரண்டு வகையானவை.
1. ஓவ்வொரு தடவையும் குறிப்பிட்ட அளவு மருந்தை வாய்வு வடிவில் வெளியேற்றுபவை (Metered Dose Inhaler- MDI)
2. கப்ஸியூலுக்குள் தூளாக வரும் (Dry Powder Inhaler) இன்ஹேலர்கள்

இவைகளில் எதுசிறந்தது எனக் கேட்கிறீர்களா? ஓவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை நன்மை இருக்கிறது. உங்களுக்கு பொருத்தமானது எது என உங்கள் வைத்தியரின் ஆலோசனையுடன் தீர்மானிக்க வேண்டியது நீங்கள்தான்.


வாய்வு வகை இன்ஹேலர்கள் (MDI)


இவற்றின் நன்மைகள் என்ன?

ஒப்பிடும்போது இரண்டிலும் இதுவே விலை குறைவானது. பாரம் குறைந்தது. தூக்கிச் செல்ல வசதியானது. எந்தவித ஆயத்தங்களும் இன்றி உடனடியாகவே உபயோகிக்கக் கூடியது. ஆஸ்த்மாவிற்கு வாயினால் உட்கொள்ளப்படும்
மாத்திரைகளாக உபயோகிப்படும் பெரும்பாலான மருந்துகள் இவ் வடிவிலும் கிடைக்கின்றன. மேற் கூறியவற்றை இம் முறையின் நன்மைகளாகக் கூறலாம்.

ஓஸோன் படலத்தை அழிக்கின்றது என்ற காரணத்தால் விரைவில் உலகளாவிய ரீதியில் தடைசெய்யப்படவுள்ள குளோரோபுளோரோ கார்பன் (CFC)சேர்ந்துள்ளமையைத் தீமை என்று கூறலாம். ஆயினும் இப்பொழுது குளோரோபுளோரோ கார்பன் (CFC) இல்லாத
வாய்வு வகை இன்ஹேலர்கள் பாவனைக்கு வந்துவிட்டன.

ஆனால் இம் முறையின் முக்கிய பிரதிகூலமானது அதைப் பாவிக்கும்போது பின்பற்ற வேண்டிய ஒழுகுமுறையாகும்.
அதாவது மூச்சை உள்ளெடுத்து வெளிவிடுவதற்கும், இவ்விசையை இயக்குவதற்கும் இடையே சரியான இசைவு இருக்கவேண்டும்.
அதாவது சுவாசத் தொழிற்பாட்டின் சரியான தருணத்தில் கருவியை இயக்க வேண்டும்.இல்லையேல் வாயினுள் விசிறப்படும் மருந்து வீணாகிவிடும்.. எனவே சிறு குழந்தைகளும் வயதானவர்களும் இதைப் பாவிப்பதில் சிரமங்கள் இருக்கலாம்.

தூள் வகை இன்ஹேலர்கள் (DPI)

முன்னையதைப் போலவே இதுவும் பாரம் குறைந்தது. தூக்கிச் செல்ல இலகுவானது.
மாத்திரையை கருவியினுள் போட்டு இயக்குவதற்கான ஒருசில நிமிடநேரம் மட்டுமே தேவையானது என்பதால் விரைவாக இயக்கக் கூடியது. அத்துடன் இதில் CFCகிடையாது.

இதிலுள்ள முக்கிய நன்மை என்னவெனில் தூள் மருந்தை நோயாளி வாயினால் உறிஞ்சியே உள்ளெடுப்பதால் மூச்சு எடுப்பதற்கும் கையினால் கருவியை இயக்குவதற்கும் எந்தவித விசேட இசைவும் தேவையில்லை. எனவே சிறு குழந்தைகள் கூட சுலபமாக உபயோகிக்கலாம்.

ஆயினும் மிகவும் வயதானவர்களுக்கும், கடுமையான ஆஸ்த்மா நோயாளருக்கும் மூச்சை வீச்சாக உள்ளெடுப்பதில் சிரமம் இருக்கக் கூடுமாதலால் பூரண பயன் கிடைப்பது குறையலாம்.

வாய்வுவகை இன்ஹேலர்களை எப்படி உபயோகிப்பது ?

இன்ஹேலரின் வாய்க்குள் வைக்கும் பகுதியின் மூடியை அகற்றுங்கள். இன்ஹேலரை நன்கு குலுக்குங்கள்.

இன்ஹேலரை நேராக நிமிர்த்திப் பிடியுங்கள். தலையச் சற்று பின்புறமாகச் சரியுங்கள். சாதாரணமாகச் சுவாசிங்கள். பின்பு மெதுவாக மூச்சை வெளிவிடுங்கள்.

ஆனால் முழுமையாக வெளியேற்ற வேண்டாம். அதன் பின் உடனடியாக இன்ஹேலரின் வாய்ப்பகுதியை பற்களுக்கு இடையேஉங்கள் வாயில் வைத்து உதடுகளால் நன்றாக
மூடுங்கள்.

மூச்சை மெதுவாகவும் அதே நேரம் ஆழமாகவும் உள்ளெடுக்;க ஆரம்பிக்கும்போது இன்ஹேலரின் விசையை நன்றாக அழுத்துங்கள். மருந்தானது வாய்வுபு புகையாக வெளியேறி வாய்குள் வர ஆரம்பிக்க மெதுவாக மூச்சை உள்ளெடுங்கள். உங்கள் நுரையீரல் முழுமையாக நிரம்பும் வரை முச்சைத் தொடர்ந்து உள்ளெடுங்கள்.

முடியுமானால் உள்ளெடுத்த மூச்சைத் தொடர்ந்து பத்து செகண்டுகளுக்கு வெளிவிடாது வைத்திருங்கள். வுhயை உடனடியாகத் திறக்க வேண்டாம்.

இன்ஹேலரை வாயிலிருந்து எடுத்தபின் மூச்சை வழமை போல் வெளிவிடுங்கள்.
நீங்கள் சரியான முறையில் கருவியை இயக்கியிருந்தால் வாயைத் திறக்கும்போது மருந்துப்புகை வெளிவராது.

மீண்டுமொரு முறை மருந்தை எடுக்க வேண்டுமாயின் ஒரு நிமிடம் தாமதித்த பின்னரே ஒன்று முதல் நான்கு வரையான படிகளை மீளச் செய்ய வேண்டும்.

வாயில்வைத்து எச்சி;ற் படுத்திய இன்ஹேலரின் வாய்ப் பகுதியை ஈரத்துணியால் சுத்தப்படுத்திய பின் மூடியினால் மூடுங்கள்.

அவ்வளவுதான். நீங்கள் உபயோகித்தது வென்டொலின் போன்ற மருந்தாயின் ஓருசில நிமிடங்களில் சுகம் தெரியும்.

பெக்கரைட், சைக்களசோன் போன்ற நோய்த் தடுப்பு மருந்தாயின் உடனடியாக எந்த சுகம் தெரியாது. ஆனால் படிப்படியாக நோய் தணியும். எனினும் இவ்வகை மருந்துகள் தொடர்ந்து பாவிக்கப்பட வேண்டியவை.

மூச்சை உள்ளெடுக்கும் அதே நேரத்தில் கருவியையும் இயக்குவதை சமப்படுத்தி செய்வது சிலருக்கு கடினமாக இருக்கலாம். முக்கியமாக குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் சிரமமாக இருக்கலாம். அவ்வாறு இயக்குவதில் சிரமம் இருப்பவர்களுக்காக அதிக பரிமாணமுள்ள ஸ்பேஸர் (ளுpயஉநச) என்ற உபகரணம்
உதவுகிறது.

இவ் உபகரணத்தை இன்ஹேலருடன் இணைத்துப் பாவித்தால் மூச்சை உள்ளெடுக்கும் அதே நேரத்தில் கருவியையும் இயக்கும் இணைந்த செயற்பாடு முக்கியமானதல்ல.
ஏனெனில் இதனை இயக்கும்போது நேரடியாக வாய்க்குள் செல்வதில்லை. இன்ஹேலரிலிருந்து வெளியேறும்போது மருந்து வொலுயுமற்றிக் கருவியினூடாகவே உங்கள் வாயை அடைகிறது. இதனால் மருந்து வீணாக வெளியறாமல் முழுப் பலனைப்
பெறலாம்.

http://rathnavel-natarajan.blogspot.com/2011/11/blog-post_23.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக