புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
56 Posts - 73%
heezulia
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
221 Posts - 75%
heezulia
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
8 Posts - 3%
prajai
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் கண்டுபிடிக்கும் குணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 1:23 pm

எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான
சந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக்
கொண்டிருந்தால் நாளடைவில் அது போதை வஸ்து மாதிரி ஆகி, நமது அறிவுப்
பார்வையை குறுகலாக்கிவிடும். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பைனான்ஸ் மானேஜர் ஒருவர் நடந்து
போய்க் கொண்டிருந்தபோது திறந்திருந்த டிரெயினேஜ் பள்ளத்துக்குள்
விழுந்துவிட்டார். குடலைப் புரட்டி எடுக்கும் சாக்கடை நீரில் கழுத்துவரை மூழ்கிய நிலையில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வந்தார்.

பைனான்ஸ் மானேஜர்னா கணக்கைத் தவிர வேற எந்த விஷயமும் தெரியாதுனு சொல்வாங்க. அதுக்காகக் கண்ணுகூடவா தெரியாது? என்று மானேஜர் மீதிருந்த தனது காழ்ப்பு உணர்ச்சியைக் கொட்டிவிட்டு, நடையைக் கட்டினார் அவர்.

அடுத்ததாக மானேஜரின் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். என்ன சார்… இந்தப்
பள்ளத்துக்கு முன்னால கொட்டையா சிவப்பு எழுத்தில் ‘ஜாக்கிரதை’னு பலகை
வெச்சிருக்கே! அதைப் பார்க்கலையா? ஹும்… நீங்கள்லாம் மானேஜர் உத்தியோகம்
பார்த்து என்னத்தைப் பெரிசா கிழிக்கப் போறீங்களோ? என்று சலித்துக்கொண்டே
ஒரு கையால் தன் மூக்கை மூடிக்கொண்டு, இன்னொரு கையை சாக்கடைப்
பள்ளத்தில் கிடக்கும் மானேஜரை நோக்கி நீட்டினார்.

ஆனால், மானேஜரைத் தொட முடியாத அளவுக்கு அந்தப் பள்ளம் மிகவும் ஆழமாக இருந்தது. வேறு வழியின்றி அவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

அடுத்ததாக, அந்தப் பக்கம் மானேஜரின் நெடுநாளைய நண்பர் வந்தார். கழிவுநீர்ப்
பள்ளத்தில் மானேஜர் விழுந்து கிடப்பதைப் பார்த்து பதைபதைத்த அவர், தனது
சட்டையைக்கூடக் கழற்றாமல் அந்தச் சாக்கடைக்குள் குதித்தார். இந்தா, என்
தோள்மீது ஏறி, முதலில் நீ வெளியே போ! என்று மானேஜரை அந்தச்
சாக்கடையிலிருந்து வெளியேற்றினார்.

இந்தக் கதையில் வரும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் மாதிரியோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர் மாதிரியோ, அடுத்தவர்களிடம் குறை காணும் நபர்களாகத்தான் நம்மில் பலர் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.

கணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் குறை கண்டுபிடிக்காமல் வாழவேண்டும். தன் மனைவி குறையே இல்லாத முழுமையான மனைவியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதவர் யாரோ, அவர்தான் உண்மையில் குறையே இல்லாத முழுமையான கணவன்.

என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என் வீட்டுக்கு வந்து பாருங்கள். கட்டில், நாற்காலி,
சோபா, தையல் மெஷின் என்று எல்லா இடத்திலும் அழுக்குத் துணியாக இறைத்து வைத்திருக்கிறாள். ஒரு வாரத்துக்கு முன்னால் வைத்த வத்தல் குழம்பு, இரண்டு வாரத்துக்குமுன் வைத்த ரசம் என்று பிரிஜ்ஜே நாறிக் கொண்டிருக்கிறது. இந்தக் குற்றங்களை எல்லாம் அவளுக்கு நான் எடுத்துச் சொல்லக்கூடாதா? என்று சிலர் கேட்கக்கூடும்.

தாராளமாகச் சொல்லுங்கள். ஆனால், அதற்குமுன் மிகச் சிறந்த புத்திமதி எது
என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆயிரம் வார்த்தைகளில் புத்திமதி
சொல்வதைவிட, முன்உதாரணமாக நாமே வாழ்ந்து காட்டுவதுதான் மிகச் சிறந்த
புத்திமதி!

நான் சொல்வதை நம்புவதற்குச் சிரமமாகஇருந்தால், இந்த விளையாட்டை உங்கள் குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு… என்று வரிசையாகச்
சொல்வேன். நான் ஏழு என்று சொல்லும்போது நீ கைதட்ட வேண்டும். சரியா?
என்று கேட்டுவிட்டு, ஒன்று இரண்டு, மூன்று… என எண்ணத் தொடங்குங்கள். ஆறு
என்று சொல்லும்போதே, நீங்கள் திடீரெனக் கைதட்டிப் பாருங்களேன். குழந்தையும்
சட்டென்று கை தட்டிவிடும்.

இதிலிருந்து தெரிவது என்ன?

குழந்தைகள் நாம் சொல்வதைப் பின்பற்றுவதில்லை. நாம் செய்வதைத் தான்
பின்பற்றுகின்றன. குழந்தைகள் மட்டுமில்லை, பெரியவர்களும் இப்படித்தான்.

அடுத்தவர்களுக்காக இல்லாவிட்டாலும் சுயநலமான காரணத்துக்காவது
அடுத்தவர்மீது குற்றம் காண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சரி சுவாமி, நம் குழந்தையே ஒரு தப்பு செய்கிறது. அல்லது அலுவலகத்தில்
நமக்குக் கீழே வேலை செய்பவர் ஒரு தப்பு செய்கிறார். அடுத்த வீட்டுக்காரன்
குப்பையை எடுத்து வந்து நம் வாசலில் கொட்டுகிறான். யாரிடமும் குற்றம்
கண்டுபிடிக்கக்கூடாது என்று அப்போதும் வாய்மூடி மௌனியாக இருந்துவிட
வேண்டியதுதானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஒருவர் செய்யும் தவறுகளை, அவருக்கு உணர்த்தக்கூடாது என்று நான் சொல்ல
வரவில்லை. ஆனால், அதை அவரே ரசிக்கும்படி சுட்டிக் காட்டலாம்.

ஒரு முறை யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் சர்ச்சை உண்டாகி
விட்டது. தீர்வு சொல்லும் படி இருவரும் நாரதரை அணுகினார்கள். நாரதரோ
நிஜமாகவே சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார்!

ஸ்ரீதேவியாகிய லட்சுமி தான் அழகு என்றால், மூதேவிக்குக் கோபம் வந்து தன்
வீட்டிலேயே தங்கிவிடுவாள். மூதேவிதான் அழகு என்றால், ஸ்ரீதேவி
கோபித்துகொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறி விடுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த நாரதர், யோசிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் விதமாக,
எங்கே… சற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள் என்றார்.

ஸ்ரீதேவியும் மூதேவியும் நாரதர் முன் கேட்வாக் நடை நடந்தார்கள். சட்டென நாரதர், “ஸ்ரீதேவி வரும்போது அழகு. மூதேவி போகும் போது அழகு!” என்று சொல்ல… இரு தேவிகளுக்குமே பூரிப்பு!

அங்கே ஜெயித்தது ஸ்ரீதேவியுமல்ல, மூதேவியுமல்ல… நாரதர்தான்!

சுவாமி சுகபோதானந்தா தொகுப்பிலிருந்து.
நிலா



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Nov 24, 2011 1:27 pm

உங்களின் இந்தப் பதிவில் குறையே இல்லை ரேவதி.. அதிர்ச்சி அதிர்ச்சி



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Aகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Sகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Hகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Rகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Aகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Fகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 1:29 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:உங்களின் இந்தப் பதிவில் குறையே இல்லை ரேவதி.. அதிர்ச்சி அதிர்ச்சி
அதற்கு ஏன் ரியாஸ் அதிர்ச்சி அதிர்ச்சி



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Nov 24, 2011 1:35 pm

ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:உங்களின் இந்தப் பதிவில் குறையே இல்லை ரேவதி.. அதிர்ச்சி அதிர்ச்சி
அதற்கு ஏன் ரியாஸ் அதிர்ச்சி அதிர்ச்சி
ரொம்ப பெரிய்ய்ய்ய்ய பதிவா போட்டுருக்கீங்களே அதுக்குதான்..



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Aகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Sகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Hகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Rகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Aகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Fகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 1:48 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:உங்களின் இந்தப் பதிவில் குறையே இல்லை ரேவதி.. அதிர்ச்சி அதிர்ச்சி
அதற்கு ஏன் ரியாஸ் அதிர்ச்சி அதிர்ச்சி
ரொம்ப பெரிய்ய்ய்ய்ய பதிவா போட்டுருக்கீங்களே அதுக்குதான்..
சிரி



sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Nov 24, 2011 1:56 pm

பகிர்வுக்கு நன்றி நானும் இனிமேல் யாரிடமும் குறைக்கானமாட்டேன்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 1:59 pm

sshanthi wrote:பகிர்வுக்கு நன்றி நானும் இனிமேல் யாரிடமும் குறைக்கானமாட்டேன்
நன்றிகள் சூப்பருங்க சூப்பருங்க



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Nov 24, 2011 2:04 pm

sshanthi wrote:பகிர்வுக்கு நன்றி நானும் இனிமேல் யாரிடமும் குறைக்கானமாட்டேன் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் 224747944

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 24, 2011 2:07 pm

அருமையான பதிவு நன்றி ரேவதி.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Nov 24, 2011 2:26 pm

இது முழுக்க முழுக்க என்னை பற்றிய பதிவுதான்... எதிலும் குறை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அலுவலகத்தில் என் வேலையே. எந்த அளவிற்கு குறை கண்டுபிடிக்கிறேனோ அந்த அளவிற்கு மெச்சுவார்கள்...இது கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய பர்சனல் வாழ்க்கையிலும் தொடருகிறது....நல்ல விளக்கத்துடன் கூடிய பதிவு...நன்றி ரேவதி... என்னை திருத்திக் கொள்ள முயலுகிறேன்... சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Boxrun3
with regards ரான்ஹாசன்



குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Hகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Aகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Sகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Aகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் N
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக