புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_m10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10 
65 Posts - 63%
heezulia
சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_m10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_m10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_m10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_m10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10 
1 Post - 1%
viyasan
சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_m10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_m10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_m10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_m10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_m10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_m10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10 
17 Posts - 3%
prajai
சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_m10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_m10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_m10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_m10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_m10சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்!


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Sun Jan 31, 2016 2:49 pm

சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! DtOZ1QLS6aRb985L1SeV+tirumoolar

சித்தர்கள் சொன்ன சிவயோகமும்
தவயோகமும்
---------------------------------------------
-------------------------------

சீர்மிகு செந்தமிழர் இறைவனை அடைய
வகுத்து வைத்துள்ள நன்மை நெறிகள் நான்கு.

அவை சீலம், நோன்பு, செறிவு, அறிவு
(சரியை, கிரியை, யோகம், ஞானம்)
என்பனவாம். இவற்றில் இறைவனை அகத்தில்
இருத்தி அகவழிபாடு செய்வது செறிவு
அல்லது யோகம் எனப்படுகின்றது. சிவனைத்
தவிர வேறு பொருட்களையும்
ஆற்றல்களையும் மாந்தர்களையும்
ஆசான்களையும்(குருமார்களையும்) எண்ணிச்
செய்கின்ற யோகத்தினைத் தவயோகம் என்றும்
அவை சிவயோகம் ஆகா என்றும் சீர்மிகு
செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த
சைவம் குறிப்பிடுகின்றவாறு திருமூலரும்
குறிப்பிடுகின்றார்.

அரிய இருக்கை (ஆசனம்) முறைகளைக் கற்றுக்
கொண்டு அவற்றின் துணையோடு, மூச்சைக்
கட்டுப்படுத்தி, மனதை ஒரு நிலைப்படுத்தும்
யோகம் அடயோகம் எனப்படும் என்று
திருமூலர் குறிப்பிடுகின்றார். இதில் சுவத்தி,
வாள், கோழி, கோமுகம், தாமரை, சிங்கம், வீரம்,
சுகம் போன்ற முதன்மையான இருக்கை
வகைகளும் மீன், ஆமை, வில், மையில்,
தவளை, குரங்கு, கலப்பை, ஓடம்,
ஒற்றைக்கால், தலை, முழு உடம்பு, பிணம்
போன்ற இருக்கை வகைகளும்
வலியுறுத்தப்படுகின்றன.

அடையோகத்தைத் தவிர பதஞ்சலி யோகம்
என்று பலராலும் பரவலாகப் பயிலப்படுகின்ற
யோகமும் உண்டு. இதனை அட்டாங்க யோகம்
என்றும் குறிப்பிடுவர். எட்டு உறுப்புக்களை
உடைய இந்த யோகத்தில் தீது அகற்றல்
(இயமம்), நன்று ஆற்றல் (நியமம்), இருக்கை
(ஆதனம்), வளி நிலை (பிராணாயாமம்),
தொகை நிலை (பிரத்தியாகாரம்), பொறைநிலை
(தாரணை), நினைதல் (தியானம்), நொசிப்பு
(சமாதி) என்பவை வலியுறுத்தப்படுகின்றன.

தீய செயல்களை விட்டு, ஆற்ற வேண்டிய
கடமைகளைத் தவறாமல் செய்து, நல்ல
இருக்கைகளைப் பயின்று, இவற்றின்
துணையாலே மூச்சுக் காற்றைக்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, வெளித்
தொடர்புகளை எல்லாம் துண்டித்து,
மனதினை ஒரு நிலைப் படுத்தி, ஒன்றையே
தொடர்ந்து நினைந்திருந்து, நினைந்திருந்ததி
லே அழுந்தி இருத்தலை அட்டாங்க யோகம்
வலியுறுத்திடினும் சிவத்தை எண்ணும்
பொருளாக வைத்திடாவிடில் அது சிவ யோகம்
ஆகாது என்பார் திருமூலர். தவிர சிவ
யோகத்தில் சமாதி நிலையைக் கூடியிருக்கும்
உயிருக்கு ஞானத்தை அளிப்பவன் சிவனே
என்று அட்டாங்க யோகத்திற்கும்
அடயோகத்திற்கும் ஒருபடி மேல் செல்வது
சிவ யோகம் என்கின்றார் திருமூலர்.

சிவயோகத்தில் சமாதி நிலையை அடைவது
முடிந்த முடிவல்ல எனவும் உயிர்களின்
முயற்சியினால் மட்டுமே சிவயோக முடிவின்
முடிவான நிலையான சிவபோக நிலையை
அடைய முடியாது என்றும் குறிப்பிடுகின்றார்.

“சிவயோகம் ஆவது சித்துஅசித்து என்று,
தவயோகத்துள் புக்குத் தன்னொளி தானாய்,
அவயோகம் சாராதவன் பதி போக, நவ யோகம்
நந்தி நமக்களித்தானே” என்பது திருமந்திரம்.

சிவயோகத்திற்கும் இதர யோகங்களுக்கும்
உள்ள வேறுபாட்டினைத் திருமூலர்
உணர்த்துகின்றார். சிவயோகம் அல்லாத இதர
யோகங்கள் சமாதியையே யோகத்தின் முடிந்த
நிலையாகக் கூறுகின்றன. திருமூலர்
சொல்கின்ற சிவயோகமானது சமாதி அல்லது
நொசிப்பு நிலையில் ஒன்றி ஒருமித்து
அழுந்தியிருக்கும் உயிரானது தன்
முயற்சியால் இறைவனைக் காண இயலாது
என்று குறிப்பிடுகின்றார்.

ஒருநிலைப்பட்டு இருக்கின்ற உயிர் சிவனது
அருளாலே அவன் அருள் ஒளியைப் பெறல்
வேண்டும். அவ்வருள் ஒளியின் துணையாலே
தன்னையும் இறைவன் அறிவிக்க
இறைவனையும் காண வேண்டும். அப்படிக்
காணும் திறத்தால் உலகப் பொருட்களோடும்
புலன்களோடும் உயிர் சேராது. பயனில்லாத
செயல்களின் மீது மனம் செல்லாது
அச்சிவத்தையே பற்றியிருக்கும் நிலை
உயிருக்கு ஏற்படும். இதனால் சிவனோடு
கூடியிருக்கின்ற இன்பம் ஏற்படும். இதுவே
சிவபோகமாய் அமையும். இந்தச்
சிவபோகத்தினைக் கொடுக்கின்ற, வேறு
யோகங்களை எல்லாம் காட்டிலும் வேறுபட்டு
நிற்கின்ற, புதியதோர் யோகத்தினை நந்தி
எனும் சிவபெருமான் எமக்களித்தான்
என்கின்றார் திருமூலர்.

சிவயோகத்தின் வழி சமாதி நிலையைக் கடந்து
சிவபெருமானால் அகத்தினுள்ளே
சிவகுருவாகத் தோன்றி சிவனால்
அருளப்பெற்றுச் சிவஅறிவைப் பெற்றவர்கள்
பிறவிக்கு மூலமாக உள்ள பழவினை அல்லது
கிடைவினையைப் போக்கிக் கொண்டவர்களாய்
இருப்பர். சிவயோகம் கைவரப் பெற்றவர்கள்
காண்பனவற்றை எல்லாம் சிவமாகவே காண்பர்.

உலகப் பொருட்களயும் உலக உயிர்களையும்
சிவமாகவே காண்பதனால் அவற்றின்மீது
விருப்போ வெறுப்போ அவர்களுக்கு
ஏற்படுவதில்லை. இன்பமானது துன்பமானது
என்ற வேறுபாடும் அவர்களுக்கு இல்லை.

எவரிடமும் எப்பொருளின் மீதும் ஆசையும்
சினமும் மயக்கமும் அவர்களுக்கு
ஏற்படுவதில்லை. ஐம்புலன்களினால் ஏற்படும்
உணர்வுகளுக்கு ஆட்படாமல் சிவனது
திருவருளையே உணர்ந்து அதில்
அழுந்தியிருந்து இவ்வுலகத்தில் வாழும்
உடம்பு இருக்கின்ற போதே செத்தார்போல
உலகத்தை நோக்காது இறைவனையே
உள்நோக்கி இருப்பார்கள் என்பதனை, “வித்தைக்
கெடுத்து வியாக்கிரதத்தே மிகச்,
சுத்தத்துரியம் பிறந்து துடக்கு அற,
ஒத்துப்புலன் உயிர் ஒன்றாய் உடம்பொடு,
செத்திட்டிருப்பர் சிவயோகியர்களே” என்று
திருமூலர் குறிப்பிடுகின்றார்.

சிவயோகங்கள் பல இருப்பினும் அவற்றில்
மிகச் சிறந்த யோகங்களாக இரண்டினைச்
சுட்டுவார் திருமூலர். அவை கேசரியோகமும்
பரியங்கயோகமுமாம். கேசரியோகம் துறவறம்
மேற்கொள்ளும் சிவயோகியர்களுக்கும்
பரியங்கயோகம் இல்லறம் மேற்கொள்ளும்
சிவயோகியர்களுக்குமாம். கேசரியோகத்தை
ஆதாரயோகம் என்றும் நிராதாரயோகம் என்றும்
பகுப்பார் திருமூலர். இது தன்னைத்
தனிமைப்படுத்திக்கொண்டு கடும் தவம்
இயற்றும் துறவிகளுக்கு உரியதாகும்.

மனைவியோடு இல்லறத்தில் வாழ்ந்தாலும்
மனம் சிவத்தையே சிந்திக்க, உலகியலால்
தாக்குண்ணாது சிற்றின்பத்திலும் பேரின்பத்தை
மறவாது எண்னி வாழ்வது
பரியங்கயோகமாகும்.

சிவயோகங்கள் அல்லாத யோகங்களைத்
தவயோகங்கள் என்று திருமூலர்
குறிப்பிடுகின்றார். சிவயோகம், யோகத்தினால்
கிட்டும் சித்திகளை விரும்பாது
மெய்ஞானத்தையே விரும்பி செய்தல் ஆகும்.
தவயோகங்கள் சித்திகளை மட்டும்
பெற்றுத்தருவன. தவயோகங்கள் பிற உடம்பில்
புகல் (பரகாய பிரவேசம்) போன்ற பலனைத்
தரும். இதனைச் சித்தி காமயோகம் என்பர்.
இறைவனின் அறிவு வெளியில் நுழைவது
சிதாகாயப் பிரவேசம் எனப்படுகின்றது.

இதனை முத்தி காமயோகம் என்பர். இதுவே
சிவயோகம். தவயோகங்கள் அணுவிலும்
அணுவாய்ப் புகுதல் (அணிமா),
அண்டத்தையும் கடந்து நிற்றல் (மகிமா),
காற்றை விட நொய்மையாய் வானத்தில்
உலாவுதல் (இலகிமா), மலைபோல
திண்மையாய்க் கனமாய் இருத்தல் (கரிமா),
நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில்
செல்லல் (பிராத்தி), நினைத்ததை அடைதல்
(பிராகாமியம்), எல்லோராலும் ஏற்றுப்
போற்றப்படுதல் (ஈசத்துவம்), யாவரையும்
தன் வழிப்படுத்தி நிற்றல் (வசித்துவம்)
போன்ற எட்டு சித்திகளை அளிக்கக்கூடியவை.

இவற்றை அட்டமா சித்தி என்பர்.
சிவயோகியர்களுக்கு அட்டமாசித்திகள் கைவர
கிடைக்கப் பெற்றாலும் அவற்றை அவர்கள்
பெரிதாக எண்ணுவதில்லை!

இவற்றிற்கெல்லாம் மேலான சித்தியாகிய சிவ
அறிவினைப் பெற்று சிவனோடு
ஒன்றியிருக்கும் சிவபோகமான இன்பத்தினைப்
பெறுவதிலேயே கருத்தைச் செலுத்துவர்.
சிவயோகிகள் தங்களுக்குக் கிட்டும்
ஆற்றல்களை வைத்துப் பொன்னையோ
பொருளையோ தேடிப் பெருக்குவதில்லை.

பெயருக்கும் புகழுக்கும் அவற்றைக் கூவி
ஏலம் விடுவதில்லை. உலக நன்மைக்காகத்
தேவைப்படுகின்ற போது அதன் நன்மையை
உலகிற்கு அளித்து மகிழ்ந்தார்கள். தங்களிடம்
இருக்கும் ஆற்றல்களைப் பயன் படுத்தி ஏழை
எளியவர்களின் பசியையும் நோயையும்
வாட்டத்தையும் போக்கினார்கள்.
இறைவன் தங்களுக்கு இலவயமாக அளித்த
அப்பேரின்பப் பேற்றை பிறரும் அடைய
வேண்டும் என்று எண்ணினார்கள்.

வந்தோர்க்கெல்லாம் இலவயமாக வாறி
வழங்கினார்கள். இன்றைய உலகியலில்
உழன்று திரிபவர் பலர் தொழில், திருமணம்,
பகை, வாணிகம், கல்வி, வீரம், பிறரைக்
கவர்தல், பணம் எனும் சித்திகளைப் பெறவே
யோகம் பயில்கின்றனர். இன்னும் சிலர் மன
அமைதி, மன அழுத்தத் தணிவு, ஓய்வு நேர
நடவடிக்கை என்றும் உடற்பயிற்சி என்றும்
யோகம் பயில்கின்றனர். அவை ஒருபோதும்
திருமூலர் குறிப்பிடும் சிவயோகம் ஆகா!
உண்மையான சிவயோகத்தை அறியாத பலர்
தங்களைச் சிவயோகியர்கள் என்றுக்
கூறிக்கொள்வதும் அவர்களை ஆசான்கள்
என்று பலர் கொள்வதும் குருடர் குருடரைப்
பின்பற்றிய கதைதான்!

யோகத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக எட்டு
படிமுறைகள் உள்ளன. இந்த படிமுறைகள்
யாவற்றையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த
பூரணமான யோக நெறியை அட்டாங்க யோகம்
என்று கூறுவர். அட்ட என்றால் எட்டு என்று
பொருள். அங்கம் என்றால் பகுதி. எட்டு
பகுதிகளை உடையதால் இதற்கு அட்டாங்க
யோகம் என்று பெயர். இதைப்பற்றி தமிழில்
திருமந்திரமும், சமஸ்கிருதத்தில்
ஆகமங்களும், பதஞ்சலி யோக சூத்திரமும்
விரிவாகச் சொல்லுகின்றன. பல விதமான
யோக முறைகள் விலை போகும் இந்தக் கால
கட்டத்தில் விற்பனையாளர்களினால்
ஏமாற்றப்படாமல் இருக்க யோகா பற்றிய
அடிப்படை விளக்கம் நம் எல்லோருக்கும்
தேவை. விலைக்கு வாங்கும் இந்த
யோகப்பயிற்சிகளினால் கொஞ்சம் உடல்
தசைகள் இளகி, சிறிது மன இளக்கமும்
உண்டாகலாம். ஆனால் இவைகளுக்கும்
மேலான ஆன்மீக நலன்களைப் பெற
வேண்டுமாயின் வியாபார நோக்கமில்லாத,
அனுபூதி பெற்ற குரு ஒருவர் மூலமாக
யோகக்கலையைப் பயில வேண்டும். இதையே
மேலான சிவ யோகம் என்றும், விளம்பரம்
போட்டு, தியானம் என்றும், குண்டலினி
தீட்சை என்றும், ஜீவன் முக்த தீட்சை என்றும்
விலை கூறி விற்கப்படும் யோகங்கள் எல்லாம்
அவயோகம் என்று திருமூலர்
சொல்லுகின்றார். அவ என்றால் கீழிறங்குதல்.
அவயோகம் என்றால் மேலிருந்து கீழ்
நிலைக்கு விழுத்தும் யோகம் என்று பொருள்.
சிவயோகம் ஆவது சித்து, அசித்து என்று
தவயோகத்து உள்புக்குத் தன்னொளி தன்னால்
அவயோகம் சாராது அவன் பதி போக
நவயோக நந்தி நமக்களித் தானே
-திருமந்திரம் 122-
இந்த பூரணமான, முழுமையான
யோகக்கலையான அட்டாங்க யோகத்தின் எட்டு
படிமுறைகளையும் இப்போது பார்ப்போம்.

1. இயமம்; யோகம் பயில்வதற்கு முதற்படி
இயமம். அகிம்சை, சத்தியம், பொருள்
கவராமை, காமத்தை வழிப்படுத்தல், அவா
குறைத்தல் இந்த ஐந்தும் யோகத்தின்
முதலாவது படியான இயமத்தின்
வழிமுறைகள்
கொல்லான், பொய் கூறான், களவிலான்,
எண்குணன்
நல்லான், அடக்க முடையான், நடுச்செய்ய
வல்லான், பகுந்துணபான், மாசிலான், கள்,
காமம்
இல்லான், இயமத் திடையில்நின் றானே.
என்று திருமந்திரம் இவற்றை மேலும்
விரித்துக் கூறும்.

2. நியமம்; தூய்மை, திருப்தி, தன்னடக்கம்,
தன்னாய்வு, கடவுளிடம் சரண் இந்த ஐந்தும்
யோகத்தின் இரண்டாவது படியான நியமத்தின்
வழிமுறைகள்
தூய்மை, அருள், ஊண் சுருக்கம், பொறை,
செவ்வை
வாய்மை, நிலைமை வளர்த்தலே, மற்றுஇவை
காமங் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே
தவம், செபம், சந்தோடம், ஆத்திகம், தானம்
சிவன்றன் விரதமே, சித்தாந்தக் கேள்வி,
மகஞ்சிவ பூசை,யொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே
என்று திருமந்திரம் இவற்றை மேலும்
விரித்துக் கூறும்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது இயம
நியமங்களைக் கடைப்பிடிப்பது கடினமாகத்
தோன்றலாம். இது நீந்தத் தெரிந்தவன்தான்
தண்ணீரில் இறங்கலாம் என்பது மாதிரியாக.
ஆனாலும் இவை ஒவ்வொன்றும்
ஒன்றுக்கொன்று ஊக்கியாக இருப்பதால்
ஒன்றைத் தொடங்கும்போதே மற்றது
இலகுவாகத் தானாகவே கைவரத்தொடங்குகி
ன்றது. பொய்மை, கோபம், அவா போன்றனவும்
நித்திரையிலே எமது கையிலுள்ள பொருள்
நாமறியாமலே வழுவுமாப் போல் தானாக
வழுவி விலகத்தொடங்குகின்றன. ஆகவே
இயம நியமங்களைப் பார்த்து யாரும் அஞ்சி
ஒதுங்கத் தேவையில்லை. யோகம் என்பது
வாழ்க்கையைச் செவ்வனே வாழுவதற்கும்,
அனுபவிப்பதற்கும் அத்தியாவசியமான,
எல்லோருக்கும் பொதுவான, எல்லோருக்கும்
உரியதான ஒன்று.

3. ஆசனம்; நாம் பயிலும் யோகாசன
அப்பியாசங்கள் எல்லாம் இயம நியமத்துக்கு
அடுத்த படியாகத்தான் வருகின்றது. நாளும்
பல்வேறு வழிகளிலும் சிதறிப்போய் வீணாகும்
எமது உடல், உள, ஆத்மீக சக்திகளை ஒரு
வழியில் ஒழுங்கு படுத்த உதவுபவை
(channeling the energies) இந்த இயம நியம
வழி முறைகள். இயம நியமங்களைப் புரிந்து
கொண்டு அவற்றை தத்தமக்கு குரு விதித்த
படி கடைப்பிடிக்க முயலாமல் இந்த
ஆசனங்களின் முழுப்பயன்களையும் அடைய
முடியாது. அதற்காக இயம நியமங்கள் நமக்கு
இன்னும் நடைமுறைக்கு வரவில்லையே
என்று காத்திருக்க வேண்டியதில்லை.
இவற்றை அறிந்து கொண்டு
யோகப்பயிற்சியில் இறங்கினால் நாளாக நாளாக
இவை தம் பாட்டில் வந்து கை கூடும்.

4. பிராணாயாமம்; மூச்சுப்பயிற்சி என்னும்
பிராணாயாமம் என்பது நாம் இன்று
மேலைத்தேச மருத்துவத்திலும் மன
உளைச்சல், மனப்பதட்டம், மனச்சோர்வு, மன
எரிச்சல், கோபமிகுதி, ஆத்திரத்தில்
அடித்துடைத்தல் போன்ற மனக்குழப்பங்களு
க்கும், நீண்ட நாள் தலையிடி, கழுத்து நோ,
முதுகு வலி, உடல் வலி, போன்ற உடல்
நோய்களுக்கும் சிகிச்சையாகப்
பரிந்துரைக்கிறோம். ஆயினும் முன் சொன்ன
இயம, நியம, ஆசனங்களைப் பின்பற்ற
முயலாமல் பிராணாயாமத்தின்முழு
நலன்களையும் பெற முடியாதுள்ளது. ஒரு
சில உள நலச் சிகிச்சையாளர்கள்
யோகாப்பியாசத்தையும், அரிதாகச் சிலர் சைவ
உணவையும் பரிந்துரைத்தாலும் இதற்கும்
மேல் தூய்மை, திருப்தி, அவாக் குறைத்தல்,
அகிம்சை போன்றவற்றைப் பற்றிக் கூறுவது
அரிது. முறையாகப் பயிலும்போது
பிராணாயாமமானது மூச்சு ஓட்டம் மூலமாக
எமது உயிர்ச்சக்தியை எழுப்பி விரிவடையச்
செய்கின்றது. பிராணன் என்றால்
உயிர்ச்சக்திஆயம என்றால் விரிவடைதல்
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம், தானே களிதரும்,
துள்ளி நடப்பிக்கும், சோம்பு தவிர்ப்பிக்கும்,
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே
-திருமந்திரம்-
என்று திருமந்திரம் இதை மேலும் விரித்துக்
கூறும். புள் என்பது பறவை; புரவி என்பது
குதிரை. " பறவையை விட விரைவான
மூச்சோட்டம் என்னும் குதிரையைப்
படியப்பண்ணினால் அது தானாகவே
உள்ளத்தில் ஆனந்தத்தைத் தரும். களிப்பு
அல்லது மகிழ்ச்சிக்காக நீங்கள் கள் போன்ற
மது பானங்களை அல்லது போதையேற்றும்
பொருட்களைப் பாவிக்க வேண்டியதில்லை.
உங்களுடைய உடலிலும் புத்துணர்ச்சியை
யும், ஊக்கத்தையும் தூண்டி உங்கள்
சோம்பலை விரட்டி உங்களை துள்ளல்
நடையுடன் கூடிய புதிய மனிதராக ஆக்கும்"
என்பது இதன் விளக்கம் ஆகும்.

5. பிரத்தியாகாரம்: அட்டாங்க யோகத்தின்
ஐந்தாவது படி பிரத்தியாகாரம். மெதுவாக,
படிப்படியாக எமது புலன்களை உள்முகமாக
நோக்கச் செய்தல் பிரத்தியாகாரம்.
“கண்டுகண்டு உள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண்டு உள்ளே குணம்பல
காணலாம்” – திருமந்திரம்-.
முன் சொன்னபடி குருவின் வழிகாட்டலுடன்
இயம, நியம, ஆசன, பிராணாயாமங்களைப் பழகி
வர மனம் தானாகவே புலன்களை உள்ளே
இழுக்கத் தொடங்கும். இதற்காக கஷ்டப்பட்டு
மனத்தை அடக்கிப் பயிற்சி செய்ய வேண்டும்
என்பதில்லை. அதீத முயற்சியும்
கட்டுப்பாடும் நன்மையை விட தீமையையே
விளைவிக்கலாம். சில வேளைகளில்
மனக்குழப்பங்களையும், மன நோய்களையும்
கூட உண்டாக்கலாம்.
“ஓராதே, ஒன்றையும் உற்று உன்னாதே, நீ
அதனைப்
பாராதே, பாரத்ததனைப் பார்”- திருவருட்பயன்-.
ஒன்றையும் அதீதமாக முயற்சி பண்ணி
வருந்தவோ தம்மை வருத்தவோ கூடாது.
அந்தப்படிமுறையில் பயின்றுவர அது
தானாகவே கை வரும். அப்பொழுது நாம்
அதனை அறிந்து கொள்ளலாம்.

6. தாரணை; அட்டாங்க யோகத்தின் ஆறாவது
படி தாரணை. இதன்போது மன ஒருமிப்பு
பழக்கப்படுகின்றது. எதையும் பார்த்தவுடனே
கிரகிக்கும் தன்மை, விளங்கிக்கொள்ளும்
தன்மை வெளிப்படுகின்றது.

7. தியானம்; அட்டாங்க யோகத்தின் ஏழாவது
படிதான் தியானம். ஆனாலும் பலர் இயம,
நியம, ஆசன, பிராணாயாமம் போன்ற
அடிப்படைப் படிநிலைகளை அறியாமலும்,
பயிலாமலும், பழகாமலும் தியானம் என்று
தொடங்கி முயன்று அல்லலுறுகின்றனர்.
அனேகர் கண்ணை மூடிக்கொண்டு அரை
நித்திரை கொள்ளுதல்தான் தியானம் என்றும்
நினைத்து விடுகிறார்கள். தியானம் என்பது
யோகத்தின் முதல் ஆறு படிநிலைகளினூடாக
க் குருவின் வழிகாட்டலுடன் செல்லுகையில்
தானாகப் பிறக்கின்ற, வருகின்ற ஒன்று. அது
வரைக்கும் தியானம் என்று கண்ணை
மூடிக்கொண்டு கஷ்டப்படாது ஓம் நமசிவாய
என்ற ஐந்தெழுத்து மந்திரத்தையோ தமது
இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தையோ அல்லது
தமது குரு மூலமாகக் கிடைத்த
மந்திரத்தையோ வாய் விட்டோ அல்லது
தனக்கு மட்டும் கேட்கும் படியாகவோ
மீண்டும் மீண்டும் சொல்லி செபிக்கும் மந்திர
செபமே ஒரு தியானம் தான். அல்லது தமக்குத்
தெரிந்த அல்லது பிடித்தமான கடவுள்
தோத்திரங்களையோ, கதைகளையோ,
புராணங்களையோ படித்து பாராயணம்
செய்தலும் ஒரு வகைத் தியானமே.
வருமாதி ஈரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னுங்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.
-திருமந்திரம்-

8. சமாதி; அட்டாங்க யோகத்தின் இறுதி நிலை
சமாதி. இது முன் சொன்ன ஏழு வழி
முறைகளும் சித்தியாகிக் கூடி வரும்போது
பிறக்கின்ற முழுமையான ஒருங்கிணைந்த
ஆழ்ந்த தியான நிலையாகும். யோகத்தின்
இறுதி நிலையே சமாதி.
சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படும் தானே.
-திருமந்திரம்-
கர்மயோகம், பக்தியோகம், தியானயோகம்,
இராஜயோகம், ஹடயோகம் என்று பல
விதமாகப் பகவத் கீதையிலும், ஹடயோகப்
பிரதீபிகா போன்ற வேறு பல நூல்களிலும்
பரிந்துரைக்கப்படுகின்ற யோக நெறிகள்
எல்லாம், இந்த அட்டாங்க யோக மார்க்கத்துள்
அடங்குகின்றன. திபேத்திய பௌத்தர்களினால்
பின்பற்றப்படுகின்ற சென் தியான முறை ( Zen
meditation) தியான யோகமே. பகவத் கீதை
மற்றும் பதஞ்சலி யோக சூத்திரங்கள்
ஆகியவற்றில் குறிப்பிடப்படாத குண்டலினி
யோகமும், ஆறு ஆதாரச் சக்கர யோக
நெறிகளும் திருமந்திரத்திலும், ஆகம
நூல்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
யார் யாருக்கு எந்தெந்த படி முறைகள்
எந்தெந்த காலங்களில் சொல்லிக் கொடுக்க
வேண்டும் என்பதே குருவினுடைய பணி.
யோக நெறியின் முழுமையான
நிலைகளையும், பலன்களையும் எட்டுவதற்கு
இவற்றில் அனுபவமும், அனுபூதியும்
வாய்ந்த குரு ஒருவரின் நேரடியான
வழிகாட்டல் தேவை. அனுபவமும்
அனுபூதியும் இல்லாமல் மற்றவர்களுக்கு
ஞான உபதேசம் செய்யக்கூடாது என்பது ஆகம
நெறி.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

சிவாயநம

சர்வம் சிவனார்ப்பணம்

நன்றி முகநூல்

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Jan 31, 2016 7:37 pm

வாழ்க வளமுடன்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
SURYAPRAKASH
SURYAPRAKASH
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 14/02/2016

PostSURYAPRAKASH Sun Feb 14, 2016 8:21 pm

MIKKA NANDRI AYYA. NALLA பதிவு... AYYA THANGALUKKU THERINDHU AT PRESENT APPADIPATTA ANUBHAVAMUM ANUBHUDHIYUM ULLA GURU YARAVADHU IRUKIRAARGALA...?

APPADI IRUNDHAAL YAAR YENDRU KOORI UDHAVA IYALUMA AYYA? சித்தர்கள் சொன்ன சிவயோகமும்! தவயோகமும்! 3838410834

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Feb 15, 2016 5:14 am

போலி குருமார்கள் மலிந்து கிடக்கிறார்கள். நிஜ குருமார்கள்  இல்லவே இல்லை.
1500   ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் எச்சரித்து உள்ளார்

”குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்,

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழிவிழுமாறே---திருமந்திரம்





இருப்பினும் திருமூலர் திருமந்திரம் வாசித்துப் பொருள் உணரலாம்.

.தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே---திருமந்திரம் 137


குரு---ஆன்மா





வாழ்க வளமுடன்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 6:41 am

அருமை அய்யா ! நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Feb 19, 2016 6:31 am

Namasivayam Mu wrote:போலி குருமார்கள் மலிந்து கிடக்கிறார்கள். நிஜ குருமார்கள்  இல்லவே இல்லை.
1500   ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் எச்சரித்து உள்ளார்

”குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்,

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழிவிழுமாறே---திருமந்திரம்





இருப்பினும் திருமூலர் திருமந்திரம் வாசித்துப் பொருள் உணரலாம்.

.தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே---திருமந்திரம் 137


குரு---ஆன்மா





வாழ்க வளமுடன்
மேற்கோள் செய்த பதிவு: 1193553

மேற்குறிப்பிட்ட திருமந்திரப் பாடலில் முதல் மூன்று வரிகள் எதிமறை வாக்கியங்களாக திரு மூலர் சொல்லி இருக்கிறார். அதாவது அம்மூன்று வாக்கியங்களுடன் அல்ல என்ற வார்த்தையை இணைத்து படித்து பொருள் கொள்ளவேண்டும்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 19, 2016 6:43 am

தெளிவாக சொல்லி உள்ளீர் அய்யா ! நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Feb 19, 2016 6:46 am

T.N.Balasubramanian wrote:தெளிவாக சொல்லி உள்ளீர் அய்யா ! நன்றி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194499

வாழ்க வளமுடன்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக