புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10வெறிநாய் கடி விபரீதம்... Poll_m10வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10 
48 Posts - 51%
heezulia
வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10வெறிநாய் கடி விபரீதம்... Poll_m10வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10வெறிநாய் கடி விபரீதம்... Poll_m10வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10வெறிநாய் கடி விபரீதம்... Poll_m10வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10வெறிநாய் கடி விபரீதம்... Poll_m10வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10வெறிநாய் கடி விபரீதம்... Poll_m10வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10 
48 Posts - 51%
heezulia
வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10வெறிநாய் கடி விபரீதம்... Poll_m10வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10வெறிநாய் கடி விபரீதம்... Poll_m10வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10வெறிநாய் கடி விபரீதம்... Poll_m10வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10வெறிநாய் கடி விபரீதம்... Poll_m10வெறிநாய் கடி விபரீதம்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறிநாய் கடி விபரீதம்...


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 12:50 pm

இப்படி நடந்துகொண்டால் மிருகத்துக்கும் உனக்கும் என்ன வேறுபாடு?

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் மனிதர்களைப் பார்த்து பலர் இவ்வாறு கேட்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

மிருகங்களைப்
பார்த்து இந்த அளவு பயப்படும் மனிதர்கள், நாயை மட்டும் செல்லப் பிராணியாக
வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதுதான் இன்றுவரை தொடரும் வியப்பு.
நன்றியுணர்ச்சிக்கு எடுத்துக் காட்டாகவும், அதனைக் கூறி பெருமிதப்
படுகிறார்கள்.

ஆனால், அந்த நாய்களுக்கு வெறிபிடித்து விட்டால் அவையே மனிதர்களைக் கொல்லும் எமனாக மாறுகின்றன.

நாய்களுக்கு வெறி பிடித்தால்..?

வெறிநாய் கடி விபரீதம்... Rabiesவெறிநாய்
ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். நாக்கு அளவுக்கு அதிகமாக
வெளியே தள்ளியிருக்கும். எச்சில் ஒழுகும். இதர நாய்கள் அந்த வெறிநாயைக்
கடிக்காது. அந்த நாய்தான் எதிரில் தென்படும் மனிதன், ஆடு, மாடு, என
எதைவும் விட்டுவைக்காமல் கடிக்கும். இதே நிலைதான் வெறி நாய் கடித்து
நோய் பரவிய மற்ற உயிர்களுக்கும் ஏற்படும். அந்த வெறிநாய் போலவே அலைந்து
திரிந்து மற்றவர்களைக் கடிக்கும்.

வெறிநாய்
கடித்த ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை கூட எந்த அறிகுறியும் தெரியாமல்
இருக்க வாய்ப்புள்ளது. பின்னர் 90 நாட்களுக்குள் எப்போது
வேண்டுமானாலும் அந்த கொடூரமான அறிகுறிகள் தெரியத் தொடங்கும். அப்போது
சிகிச்சை அளிப்பதற்கான காலம் தாண்டி, சித்திரவதைப் பட்டு உயிரிழக்கும் நிலை
ஏற்படுகிறது.

வாயில்
எச்சில் ஒழுக, நாயைப் போலவே இரைத்து, குரைத்து, தண்ணீரைக் கண்டால்
அலறித்துடித்து, இறுதியில் வெறி கொண்ட நாயாகவே மாறி இறக்கும் கொடூரம்
எந்த மனிதனுக்கும் நேரக்கூடாத ஒன்று.

ஆனால் இந்த கொடுமைகள் கிராமப்புறங்கள் மட்டுமின்றி, நகரங்களிலும் கூட இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது தான் வேதனை.

இந்தியாவில்
ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் வெறிநாய் கடியால் இறந்து வருவதாக உலக
சுகாதார அமைப்பின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 60 சதவீதம் பேர் 15
வயதுக் குட்பட்ட சிறுவர், சிறுமியர் என்பதுதான் பரிதாபம்.

சாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி?

கோடைக்கால கடும் வெயிலில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு வெறிபிடிக்கும்.

தற்போது
நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும்
பிராய்லர் கோழிக்கழிவுகளை உட்கொள்ளும் நாய்களுக்கு வெறிபிடிப்பதாக
கண்டறியப் பட்டுள்ளது. இந்த கழிவுகள் எந்தப் பாதுகாப்பும் இன்றி பல
இடங்களில் கொட்டப்படுகின்றன. பராமரிப்பின்றித் திரியும் தெருநாய்கள் இந்த
கழிவுகளைத் தின்பதால், வெறித்தன்மை ஏற்படுகிறது. கோழிகளைச் சுத்தம்
செய்யும்போது, அவற்றில் இருக்கும் நஞ்சுப் பகுதியை முதலில் அகற்றுவதைப்
பார்த்திருக்கிறோம். இதில், ஆளைக் கொல்லும் கொடும் நச்சுத்தன்மை
உள்ளது. கோழிக் கழிவுகளைத் தின்னும் நாய்கள் இவற்றையும் சேர்த்துத்
உட்கொள்ளும் போது, அந்த நாய்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புகள்
அதிகம். அதாவது ரேபீஸ் ((Rabies) என்ற இந்த வைரஸ் அதனுடைய உடலுக்குள்
சென்று பல்கிப் பெருகுகிறது. உமிழ்நீர் அதிகம் சுரக்க ஆரம்பிக்கிறது.

இந்த
ரேபீஸ் நோயால் தாக்கப்பட்ட ஒரு நாய் மனிதனைக் கடிக்கும்போதோ காயம்
உள்ள இடத்தில் அதன் உமிழ்நீர் படும்போதோ ரேபீஸ் என்ற கொடும் வியாதி
மனிதனை தாக்குகிறது. நாய் கடித்த 30 - 60 நாட்களுக்குள் வியாதி மனிதனிடம்
வெளிப்படுகிறது. இந்த வைரஸ் மூளைக்குள் பரவி பல பகுதிகளைத் தாக்கி, நரம்பு
மண்டலத்தையும் தாக்குகிறது. அதனால் உடலிலுள்ள பல தசைகளும் முறுக்கேறி
இறுகுகின்றன. குரல் எழுப்பும் தசைகள் இறுகுவதால் இவர்கள் குரல் நாய்
குரைப்பதைப் போலிருக்கும். விழுங்கு தசைகள் இறுகுவதால் தண்ணீர்
அருந்தமுடியாமல் போகிறது. முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி
ஏற்படுகிறது. அடுத்தபடியாக உளச் சோர்வு (Depression) பயம் (apprehension)
தூக்கமின்மை தோன்றுகிறது. அதற்குப் பின் ஏதாவது பருக முயலும்போது
தொண்டைச் சுருக்கம் (Spasm) ஏற்படுகிறது. உமிழ்நீர் கூட விழுங்க
முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் வாந்தியும் உண்டாகும்.
தண்ணீரைக் கண்டால் பயம் (Hydrophobia) மாய கற்பனைத் தோற்றம்
(Hallucinalions), தண்டுவடச் செயலிழப்பு, மூச்சு செயலிழப்பு போன்றவற்றை
ஏற்படுத்தி முடிவில் மரணத்தை ஏற்படுத்துகிறது.

இந்த
நோய் முற்றினால் குணமாக்குவதற்கான மருந்து இதுவரை
கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகையால் தடுப்பு முறையைக் கட்டாயமாக பயன்படுத்த
வேண்டும்.

வெறிநாய் கடிக்கான தடுப்பூசி மருந்து அவ்வளவு மலிவானதல்ல என்பதுதான் இதில் முக்கியமான பிரச்சனையாக இருந்து வருகிறது.

ஆப்பிரிக்க,
ஆசிய கண்டங்களைச் சேர்ந்த வளரும் நாடுகளில்தான் வெறிநாய்க் கடியால்
இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நாடுகளில் வெறிநாய்
கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தின் விலை 40 முதல் 49 அமெரிக்க டாலர்
வரை செலவாகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2000 ரூபாய் என்று
வைத்துக்கொள்ளுங்களேன்..

ஆனால்,
இங்கு அதிக அளவில் வெறிநாய் கடிக்கு ஆளாவது கிராமப்புற ஏழை எளிய
மக்கள்தான். இவர்களின் ஒருநாள் சராசரி வருமானம் 1 டாலருக்கும் குறைவுதான்
என்கிறது, உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் 60 சதவீதம் பேர் வறுமைக்
கோட்டிற்குக் கீழே வாழ்ந்து வருவதாகவும், நாளொன்றுக்கு அவர்களின் சராசரி
வருமானம் 20 ரூபாய் மட்டுமே என்றும், நமது நாட்டின் மத்திய தணிக்கைக்
குழுவின் ஆய்வு சொல்கிறது.

இந்த
60 சதவீத மக்கள்தான், அதிக அளவில் வெறிநாய்களிடம் கடிபட்டு, முறையான
சிகிச்சை யின்றி, கோரமான நிலைக்கு ஆளாகி தங்களின் உயிரை இழக்கிறார்கள்.

இவ்வளவு
பயங்கரத்தையும், கொடூரத்தையும் விளைவிக்கும் வெறிநாய்களைக் கொல்வதற்கு,
விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் தடையாக இருப்பதாக கூறப்படுவதுதான் இங்கு
விந்தையான வேதனை.

முன்பெல்லாம்,
நகராட்சிகளில் மட்டுமின்றி, ஊராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் கூட தொல்லை
தரும் தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களைப் பிடித்துச் செல்லும் நடைமுறை
இருந்தது. தெருநாய்களைப் பிடித்துச் சென்று அவற்றின் இனவிருத்தியைத்
தடுப்பதற்கான அறுவை சிகிச்சைகளும் கூட செய்யப்படுவதுண்டு. ஆனால் தற்போது
வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி, எந்த விலங்குகளையும்
பிடிக்கவோ கொல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள்
கூறுகின்றனர்.

மனிதர்களைக்
கொன்றுவிட்டு, வெறிபிடித்த விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்று எந்த
சட்டமும் சொல்லாது என்பதே உண்மை. ஏனென்றால், அந்த சட்டத்தை உருவாக்கியது
மனிதர்கள்தானே!

நகர்ப்புறங்களிலும்,
கிராமப்புறங்களிலும் ஏழை மனிதர்களையும், குழந்தைகளையும் குறி வைத்து
குதறும் வெறிநாய்களை ஒழித்துக்கட்ட அரசு ஆவன செய்ய வேண்டும் என்பதே
அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.

வெறிநாய்க் கடி குறித்து சில விழிப்புணர்வுக் குறிப்புகள்

வெறிநாய்
கடிக்கும்போது மேல் தோல் கிழியாவிட்டால் மேல் தோலுக்கு கீழாக
காணப்படும் தசை, டெண்டான் (தசைநார்), லிகாமெண்ட் (தசையை எலும்புகளோடு
இணைக்கும் தசைநார்), எலும்புகள் மற்றும் நரம்புகள் போன்ற உறுப்பகள்
நசுங்குதல் மற்றும் கிழியக்கூடிய நிலைமைகள் ஏற்படலாம். ஒருவேளை
கடிக்கும்போது மேல் தோல் கிழிந்தாலும் மேற்கூறிய நிலைமைகளுடன் வெறி நோய்
தொற்றக்கூடும்.

நோய் தொற்றியதற்கான அடையாளங்கள்

· காயத்தைச் சுற்றிலும் வெதுவெதுப்பாக இருத்தல்.

· காயத்தைச் சுற்றிலும் வீக்கம் ஏற்படுதல்

· வலி தோன்றுதல்

· சீழ் வெளியேறுதல்

· காயத்தைச் சுற்றிலும் சிவப்பு நிறமாக காணப்படுதல்

· நிணநீர் சுரப்பிகள் வீங்குதல் (நெறிகட்டுதல்)

· காய்ச்சல்

· விரல்களை நீட்டவோ அல்லது மடக்கவோ இயலாமை.

· விரல் நுனிகளில் உணர்வுகள் இழத்தல்,

·மேற்கண்ட அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம்.

உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி

மேலான காயங்கள்

மேலான
காயங்களை சோப்பு போட்டு சுடுநீரால் நன்கு கழுவி சுத்தம் செய்ய
வேண்டும். அல்லது ஹைட்ரஜன் பெர்ராக்ஸைடு, ஆல்கஹால், டெட்டால் எனப்படும்
கிருமி நாசினியைக் கொண்டு நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர்
நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட மருந்து அல்லது பூசும் களிம்பினை வைத்து
ஒட்டும் தன்மை இல்லாத கட்டுப் போடும் துணியைக் கொண்டு காயத்தை மூட
வேண்டும். காயம் பட்ட இடத்திலுள்ள நரம்புகள் மற்றும் தசை நார்களில் சிதைவு
ஏற்பட்ட தற்கான அடையாளங்கள் உள்ளனவா என கவனமாக பார்த்தறிய வேண்டும். சில
சமயம் உள்காயம் அல்லது ஊமைக் காயங்கள் ஏற்படும். கடிபட்ட இடம் அல்லது
காயம் 10 நாட்களுக்குள் குணமாக வேண்டும். அப்படி ஆறாத பட்சத்தில் அல்லது
நோய் தொற்று தலுக்கான அறி குறியோ நரம்பு மற்றும் தசை நார் சிதைவோ காணப்
படின் கண்டிப்பாக மருத்துவர் உதவியை நாடவேண்டும்.

இரத்தக்
கசிவு அல்லது ரத்தப்போக்கு இருப்பின் அந்த இடத்தை சுத்தமாக நன்கு உலர்ந்த
துணியினைக் கொண்டு நேரடியான அழுத்தத்தை செலுத்தி அந்த இடம் மற்ற பகுதிகளை
விட உயர எழும்பச் செய்ய வேண்டும். அந்த இடத்தில் இரத்தக் கசிவு
ஏற்படவில்லையெனில், அந்த இடத்தை சுத்தம் செய்ய தேவையில்லை. காயத்தை நோய்
தன்மையை உண்டுபண்ணாத பாதுகாப்பான சுத்தம் செய்யப் பயன்படுத்தும்
பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மற்றும் மருத்துவர் உதவியை
நாட வேண்டும்.

ராபீஸ் எப்படி பரவுகிறது.

ராபீஸ் வைரஸினால் பாதிக்கப்பட்ட விலங்கினம் ஒருவரை நாக்கினால் நக்குவதினால் அல்லது கடிப்பதினால் கடிபட்ட நபருக்குப் பரவுகிறது.

அனைத்து வெப்ப ரத்தப் பிராணிகளும் ராபீஸ் வைரஸினால் பாதிக்கப் படக்கூடும். மேலும் இந்நோயினைப் பரப்பவும் செய்யும்.

கடிபட்ட
பகுதியில் ராபீஸ் வைரஸ் படிந்தவுடன், தசை இழைகளில் பன்மடங்கு
எண்ணிக்கையில் பெருகுகிறது. சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் வைரஸ்
கடிபட்ட இடத்திலிருந்து நரம்பு வழியாக தன் இலக்கு உறுப்பான மூளையை நோக்கி
நகர்கிறது. இவற்றின் பெருக்கக்காலம் என்பது பல காரணிகளைப் பொறுத்து
வேறுபடுகிறது. அப்படிப்பட்ட காரணிகளாவன.

· கடிபட்ட இடம்

· கடிபட்ட இடத்தில் பதியும் வைரஸின் அளவு

· வைரஸின் நோய் உண்டாக்கும் தீவிரத் தன்மை

· கடிபட்ட நபரின் நோய் எதிர்ப்புத் தன்மையின் நிலை

மூளைக்கு
அருகில் அதாவது தலை கழுத்து, முகம் அல்லது அதிகளவு நரம்புகளைக் கொண்ட
உடலின் எந்த ஒரு கடைப்பகுதியில் கடிபட்டாலும் இவ்வைரஸ் குறைந்த காலத்தில்
பெருக்கம் அடையும்.

ஏன் ரேபீஸ் எப்போதும் மரணத்தை தோற்றுவிக்கக் கூடியது?

பொதுவாக
ரேபீஸ் நோயின் அறிகுறியானது நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்தபின்னர்
தான் கண்டறியப்படுகிறது அல்லது காணப்படுகிறது. எனவே நரம்பு திசுக்களில்
உள்ள இந்த ராபிஸ் வைரஸை எந்த ஒரு நோய் எதிர்ப்பு பொருளும்
சென்றடைவதில்லை. நரம்பு திசுவில் இவ்வைரஸ்கள் விரைவாக இனப்பெருக்கம்
அடைந்து மரணத்தைத் தோற்றுவிக்கின்றன.

ரேபீஸ் வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி என்ன?

ராபிஸ் குணப்படுத்த முடியாத ஒன்று. எனவே கீழ்காணும் வழிமுறைகளை கடைப்பிடித்து அவசியம் தடுக்க வேண்டும்.

வீட்டில்
நாயை வளர்ப்பவர்கள் நாய்க்கு ரேபீஸ் தடுப்பு ஊசியை கட்டாயம் போட
வேண்டும். மேலும் வீட்டு நாய் தெரு நாய்களுடன் சேராமல் பார்த்துக்கொள்ள
வேண்டும். வீட்டு நாய் சோர்ந்தும், எல்லோரையும் கடித்துக்கொண்டும்,
சாப்பிடாமலும் இருந்தால் அதனை கட்டிப்போட வேண்டும். கால்நடை மருத்துவரிடம்
காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும். 10 நாட்களுக்குள் அந்த நாய்
இறந்துவிட்டால் ரேபீஸ் நோய்க்கான தடுப்பூசியை வீட்டில் உள்ளவர்கள்
அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்.

தெருநாய் கடித்தாலும் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

நாய்
கடித்தால் அது வெறிநாயா இல்லையா என்பதை கண்டறிவது மிகவும் கடினம்.
அதனால் வெறிநாய் கடியிலிருந்து தப்ப தெருநாய்களை ஒழிப்பதைத் தவிர வேறு வழி
இல்லை. மனித உயிர் வெறிநாய் கடித்து சித்திரவதைப்பட்டு இறப்பதைத் தவிர்க்க
சுற்றித் திரியும் தெருநாய்களை ஒழித்தே ஆகவேண்டும்.

நன்றி நக்கீரன்



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Nov 24, 2011 1:09 pm

மிக முக்கியமான செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள்...நன்றி...உங்களுக்கு விருப்ப பொத்தானை பாவித்தேன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 1:11 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:மிக முக்கியமான செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள்...நன்றி...உங்களுக்கு விருப்ப பொத்தானை பாவித்தேன்
உங்களுக்கும் நன்றி ஐயா ஜாலி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 24, 2011 1:16 pm

நன்றி தகவலுக்கு.நாயை கண்டாலே நான் 10 அடி ஓடிடுவேன் ரேவதி. இவ்ளோ விஷயம் இருக்கா. இனி 50 அடி தான். வெறிநாய் கடி விபரீதம்... 230655 ( அதிர்ச்சி அதிர்ச்சிஇங்கே ஒடுறகுக்கும் நாய் தானா)




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Nov 24, 2011 1:20 pm

உமா wrote: ( அதிர்ச்சி அதிர்ச்சிஇங்கே ஒடுறகுக்கும் நாய் தானா)

எங்கே ஒடுறோம் எப்படி ஒடுரோம்ங்கறது முக்கியமில்ல , (கடி வாங்கனாலும்) யாருக்கும் தெரியாம ஓடுறோமா அப்படிங்கறது தான் முக்கியம்.. வெறிநாய் கடி விபரீதம்... 230655 வெறிநாய் கடி விபரீதம்... 230655



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


வெறிநாய் கடி விபரீதம்... Aவெறிநாய் கடி விபரீதம்... Sவெறிநாய் கடி விபரீதம்... Hவெறிநாய் கடி விபரீதம்... Rவெறிநாய் கடி விபரீதம்... Aவெறிநாய் கடி விபரீதம்... Fவெறிநாய் கடி விபரீதம்... Blank
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக