Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் - ஆய்வில் தகவல்
2 posters
Page 1 of 1
கர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் - ஆய்வில் தகவல்
கர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் - ஆய்வில் தகவல்
இரும்பு சத்து
குறைபாடு காரணமாக, 33 சதவீதம் பேர் அனிமீயா என்னும் இரத்தச் சோகை நோயால்
அவதியுறுவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உடலின் ஆரோக்கியத்திற்கு
இரும்புச் சத்து மிகவும் அவசியம். ஆனால் கர்ப்பிணிகள் அதிக அளவில் இரும்பு
சத்து மாத்திரைகள் உட்கொள்வது ஆபத்தானது என்று ஆய்வு ஒன்றில்
தெரியவந்துள்ளது.
ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை
அதிகரிப்பதில் இருப்பு சத்தின் பங்கு அதிகம். இந்தியா போன்ற வளரும்
நாடுகளில் இரும்புச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுகிறது.உடலில்
இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் இரத்த சோகை உண்டாகும். இதனால் உடல்
சோர்வடைந்து சுறுசுறுப்பு குறைந்து விடும்.
பெண்களுக்கு இரும்பு சத்து
பெரும்பாலும்
பெண்களுக்கே அதிக அளவில் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மாதவிலக்கு
காலங்களில் அதிக இரத்தப் போக்கு இருந்தால் உடலில் இரும்புச்சத்தின் இருப்பு
குறைய ஆரம்பிக்கும். இதனால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை கணிசமாக
குறையும்.
குழந்தைகளுக்கு இரும்பு சத்து குறைபாடினால் மூளை வளர்ச்சி
குறைவது, புரிந்து கொள்ளும் திறன் குறைவது போன்றவை ஏற்படும். உடலில் நோய்
எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். இதன் காரணமாகவே கர்ப்பமாக இருக்கும் போதே
பெண்களுக்கு இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று
மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே சமயம் அதிக அளவில் இரும்பு சத்து
மாத்திரை உட்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள்
அறிவுறுத்தியுள்ளனர்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு சாதாரண பெண்களுக்கு
தேவைப்படும் இரும்புச்சத்தை விட 50% அதிகம் தேவைப்படும். சாதாரணமாக
பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 9 மி.கி அளவு தேவை. ஆனால் கர்ப்பகாலத்தில் இதன்
அளவு 27 மி.கி அளவு தேவைப்படுகிறது. தினசரி உணவில் 30 மி.கி இரும்பு சத்து
கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில்
இரும்புச்சத்து அதிகம் தேவை என்பதால் மருந்து மாத்திரை அதிகம் எடுத்தால்,
அது வாயுவை அலர்ஜியுறச் செய்யும். மலச் சிக்கலை ஏற்படுத்தும். வாந்தி,
வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை
உண்டாக்கும். சில சமயங்களில் கருவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உணவு
மூலமே இரும்புச் சத்தினை பெற முயற்சிக்க வேண்டும் என்பது மருத்துவர்களின்
அறிவுரை.
நச்சாகும் இரும்பு சத்து
சிறு
குழந்தைகளுக்கும் தேவைக்கதிகமாக இரும்புச் சத்து நிறைந்த மருந்து
மாத்திரைகளைக் கொடுத்தால் அது உடலில் நச்சுப் பொருளாக மாறிவிடுகிறது.
இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொடுக்கும் மருந்து மாத்திரைகளை
தவிர்ப்பது நல்லது. உணவின் மூலம் கொடுப்பதே சிறந்தது என்கின்றனர்
மருத்துவர்கள்.
காய்கறிகள் கீரைகள்
சைவ
உணவு உண்பவர்களை விட அசைவ உணவு உண்பவர்களுக்கு மிக அதிக அளவில்
இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் சைவ உணவில் அதிகளவு இரும்புச்சத்து
நிறைந்த கீரை வகைகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது.
முருங்கைக்
கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, ஆரைக்கீரை, புதினா, குப்பைக்
கீரை போன்றவற்றில் அதிகம் உள்ளது. அதுபோல் பழங்களில் பேரீச்சை, அத்திப்பழம்
போன்றவற்றில் அதிகம் உள்ளது. மற்ற பழங்களிலும் ஓரளவு உள்ளது.முட்டை, மீன்,
ஆட்டு ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது
காபி,
தேநீர், மதுபானம் போன்றவற்றை அதிகம் அருந்துபவர்களுக்கு அதில் உள்ள
கார்பாலிக் அமிலம் குடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.
இதனால் மேற்கண்ட பானங்களை தவிர்ப்பது நல்லது என்றும் மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.
thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: கர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் - ஆய்வில் தகவல்
சில சமயங்களில் கருவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உணவு மூலமே இரும்புச் சத்தினை பெற முயற்சிக்க வேண்டும் என்பது மருத்துவர்களின்
அறிவுரை.
இது முற்றிலும் உண்மை.நான் கர்ப்ப காலத்தில் மாத்திரிகளை சாப்பிட மாட்டேன்.
கீரை,பழங்கள்,பால்,பேரீச்சை தான் அதிகம் சாப்பிடுவேன். மேலும் உணவு கூட 3 வேளைகள் தான்..
மருத்துவர் எழுதும் மாத்திரைகளை வாங்கவும் மாட்டேன்,அவர்களாக கொடுக்கும் மாத்திரிகளை சாப்பிடவும் மாட்டேன்.
இந்த மாத்திரிகளால் குழந்தைக்கு பாதிப்புகள் தான் வருமே தவிர, நன்மை அல்ல....
நமக்கு தேவையான அனைத்துமே உணவிலே உள்ளது.அதை நன்றாக சாப்பிட்டாளே போதும்...
தடுப்பூசிகளை மட்டும் கண்டிப்பா போடணும்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Similar topics
» புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும்-ஆய்வில் தகவல்
» சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும்; புதிய ஆய்வில் தகவல்
» சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்!
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம்! அதிர்ச்சி தகவல்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|