புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண் 4 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - இராகு (Dragon's Tail)


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 25, 2011 12:49 am

எண் 4 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - இராகு (Dragon's Tail)
எண் 4 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - இராகு (Dragon's Tail) :

இப்போது சர்வவல்லமையுள்ள இராகு பகவானின் ஆதிக்கத்திற்குரிய எண்ணான 4&ஐப் பற்றிப் பார்ப்போம். (சாதகத்தின்படி) நவக்கிரகங்களின் (நைசிக பலம்) பலத்தில், இராகு பகவான் தான் பலவான் என்றாலும், எண்களை சாத்திரத்தில் நான்கு எண் அவ்வளவு வலிமை மிகுந்த எண்ணாகச் சொல்லப்படவில்லை! சூரியனின் எண்ணான 1 ஆம் எண்ணைச் சார்ந்தே இதன் பலன்களும், நடைமுறைகளும், அதிர்ஷ்டங்களும் உள்ளன! மேலும் 1&ம் எண்ணிற்கு மிகவும் நட்புடையதாகவும் விளங்குகிறது.
வெளிநாட்டு எண்கணித மேதைகள் இதை (4 எண்) யுரேனஸ் என்னும் கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவர்கள் வாய்ப் பேச்சில் இன்பம் காண்பவர்கள். நாவன்மை அதிகமுள்ள இவர்கள் வீட்டிலும், ரோட்டிலும், காபி, டீக்கடைகளிலும், கோவில்களிலும் ஆற்றங்கரையிலும், கடற்கரையிலும், கையை ஆட்டி, குரலை ஏற்றி, இறக்கி, உணர்ச்சியுடன் பேசி மக்கள் மனதைக் கவருவார்கள். பல மணி நேரம் பேசும் இயல்பினர். ஒரு ஜனக்கூட்டம் எப்போதும் இவர்களைச் சுற்றியே நிற்கும்.

இவர்கள் இரகசியங்களைக் காப்பாற்ற மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையும், வேலையையும்,அடுத்தவரிடம் சொல்லிப் புலம்பாது இருக்கமாட்டார்கள். இவர்களிடமிருந்தே திட்டத்தை அறிந்து கொண்ட இவர்களது நண்பர்கள் அந்தத் திட்டத்தை அவர்களே விரைந்து சென்று செயலாற்றி, வெற்றி பெற்று விடுவார்கள். எனவே இவர்கள் அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ வேண்டுமானால் முதலில் நாகாக்க வேண்டும். மேலும் 4, 3, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், தங்களது நண்பர்களாலும், சுற்றத்தார்களாலும், மற்றும் நம்பியவராலும் செய்வினைகள் மற்றும் ஏவல் கோளாறுகளை இவர்களது வாழக்கையில் அனுபவிக்க நேரிடுகிறது! இதே யோகம் 2, 8 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்களுக்கும் உண்டு.

13&ம் எண் & சில உண்மைகள்
வெளிநாட்டு மக்கள் (ஏன் நம்மவர்கள் கூட) 13&ம் எண்ணைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள். உலகின் சரித்திரத்தில் பல இயற்கைச் சீற்றங்கள் 3&ம் தேதியில்தான் நடந்துள்ளன. நெப்போலியன் வீழ்ந்தது ஒரு 13ந் தேதியில்தான். கி.பி.2026 நவம்பர் 13 வெள்ளிக்கிழமையில், உலகின் மக்கள் தொகை 5000 கோடி என்ற அளவில் உயர்ந்து, திடீரென உலகம் வெடிக்க வாய்ப்புள்ளது எனறு அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சியின் முடிவாகக் கூறியுள்ளனர். மேலும் ஜாலியன் வாலாபாக் படுகொலையும் அமிர்தசரஸில் 13.4.1919 அன்றுதான் நடந்தது!

மேலும் 13 எண் பெயரில் வரும் அன்பர்கள் தங்களது வாழ்க்கையில் பல ஜீவ மரணப் போராட்டங்களை அவசியம் சந்தித்துத்தான் ஆக வேண்டும். பெரும்பாலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்களும், நான்காம் எண்ணில் பெயர் அமைந்த அரசு அதிகாரிகளும், ஊழியர்களும், அயராது உழைத்திட்ட போதிலும், ஏனோ மேலதிகாரிகளால் வெறுக்கப்படுகிறார்கள். அடிக்கடி இவர்கள் வீண் பழிகளைச் சந்திக்கின்றார்கள். பல அன்பர்கள் அரசாங்க வே¬யை இடையிலேயே இழந்துவிடும் அவயோகமும் உண்டு.
அடிக்கடி ஓடிக் கொண்டிருக்கும் வண்டி வாகனங்களுக்குத் தவிர, மனிதனின் வாழ்க்கைக்கு இந்த 13&ம் எண் ஏற்றதல்ல! அதுமல்மல்ல 22&ஆம் எண்ணும், 13&ஐப் போன்றே பயப்பட வேண்டியதுதான் 22&ந் தேதியில் பிறந்தவர்கள் அல்லது பெயர் எண் உள்ளவர்களில் பலர் திடீரெனத் தாழ்ந்து விடுவார்கள். பிறரால் வஞ்சிக்கப்படுவார்கள். பல அன்பர்கள் அடுத்துக் கெடுக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் இவர்களிடம் அன்பு பாராட்டியவர்களே செய்து விடுவார்கள் என்பது வேதனையான விஷயம் இந்த எண்ணின் தொடர்புடையவர்களின் வாழக்கையானது எவ்வளவு வேகமாக உயர்கிறதோ, அதே வேகத்தில் திடீரெனத் தாழ்ந்து விடும் என்பதையும் மறக்கக் கூடாது!
மேலும் இந்தக் கிரகத்தின் ஆதிக்கத்திலுள்ள அன்பர்களுக்கு அடிக்க இடமாற்றம் (ஜிக்ஷீணீஸீsயீமீக்ஷீ) 13, 22 எண்ணில் பிறந்தவர்கள் சுதந்திரப் பிரியர்கள். எவருக்கும் கட்டுப்பட்டு வாழ விரும்பாதவர்கள். இவர்கள் தங்களது மேலதிகாரிகள், முதலளிகள் ஆலோசனைக்குக் கட்டுப்பட விரும்ப மாட்டார்கள். ரோஷமும், தன்மான உணர்வும் மிகுந்த இவர்களில், அடுத்தவர்களுக்கு அடிமையாக இருந்து முன்னேறுவதைவிட அந்த வேலையை விட்டு விலகி ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று எதிர்த்து நிற்பார்கள். எனவேதான் இவர்களுக்குப் பல பிரச்சினைகளும், முன்னேற்றத் தடைகளும், தொழிலில் உண்டாகின்றன. தங்களது மேலதிகாரிகள், முதலாளிகள் போன்றோர்களை அனுசரித்துச் சென்றால் இவர்களும் மிகுந்த முன்னேற்றம் பெறலாம்.

இவர்களது தொழில்கள்
ஒப்பந்த தொழில்கள், கார், லாரி, இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள், பேச்சாளர்கள், சோதிட நிபுணர்கள் ஆகியவை இவர்களுக்கு ஒத்து வரும். இவர்களில் பலருக்கு நல்ல ஆராய்ச்சி மனப்பான்மையும் உண்டு! துப்புத் துலக்கும் பணிகளிலும் விரும்பி ஈடுபடுவார்கள்.
நிருபர்கள் (யிஷீuக்ஷீஸீணீறீவீsனீ), டைப்பிஸ்ட்டுகள், இரயில்வே, வங்கி ஊழியர்கள் போன்ற தொழில்களும் அமையும். அடுத்தவர்களைத் தூண்டி வேலை வாங்கும் மலாளர், மேற்பார்வையாளர் போன்றவையும், இவர்களுக்கு நன்மை தரும் தொழில்களாகும். கராத்தே, சர்க்கஸ், சிலம்பம் போன்ற உடற்பயிற்சித் தொழில்கள் (விணீக்ஷீtவீணீறீ கிக்ஷீts) ஏற்றவை. மேலும் இவர்களுக்கு மருத்துவம், சோதிடம் ஆகிய கலைகளிலும் ஈடுபாடு தீவிரமாக அமையும்.
விமர்சனங்கள் எழுதுவதில் இவர்களுக்குத் தனித்தன்மையும், புகழும் உண்டு. புத்தகங்கள் விற்பனை, வெளியிடுதல் போன்ற தொழில்களும் நன்மையே செய்யும். மாடு, குதிரை போன்ற கால்நடைத் தரகும், லாபம் தரும். திuக்ஷீஸீவீtuக்ஷீமீ (கட்டில், பீரோ) போன்றவை, சினிமாப் படங்கள் தயாரித்தல், விற்றல் ஆகியவையும் ஒத்துவரும்! மக்கள் தொடர்பு தொழில்கள் (றி.ஸி.ளி) இவர்களுக்கு மிகவும் ஒத்துவரும் தொழிலாகும். டெய்லர்கள், கார், பைக், ஸ்கூட்டர் மெக்கானிக்குகள், எலக்ட்ரிசியன்கள், அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள் வேலை போன்றவை இவர்களுக்கு அமையும்.

திருமண வாழ்க்கை
பெரும்பாலும் இளமையிலேயே இவர்களின் திருமணம் அமைந்துவிடும். மனைவியுடன் எப்போதும் விதண்டாவதம் செய்பவர்களானாலும் குடும்ப பாசத்திலும் அன்பிலும் சிறந்தவர்கள். தூய்மையே மிகவும் புனிதமாகப் போற்றுவார்கள். தாங்கள் காதலித்தவர்களை சமூகத்தின் கட்டுப்பாட்டையும், எதிர்ப்பையும் மீறி மணந்து கொள்ளும் வேகமும், தைரியமும் உண்டு!
இவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் (பிறவி எண் மற்றும் கூட்டு எண்) நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும் இவர்களுக்கு நன்மையே செய்வார்கள். இருப்பினும் 4&ம் தேதிகளில் பிறந்த ஆண்கள், 6&ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும்.
இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் (தேதி எண் அல்லது கூட்டு எண்) வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம்.

நண்பர்கள்/கூட்டாளிகள்
பொதுவாக 1, 2, 4, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் வைத்துக் கொள்ளலாம். 8ந் தேதி பிறந்தவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளலாமே தவிரப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. 1&ம் எண்காரர்கள் இவர்களைத் தங்கள் ஆளமைக்குள் கொண்டு வந்து, இவர்களையும் முன்னேறச் செய்வார்கள்.

இவர்களது நோய்கள்
பொதுவாக இவர்கள் பித்த ஆதிக்கம் உடையவர்கள். மனநோய்களான டென்ஷன், படபடப்பு அதிகம் உடையவர்கள். இரத்தக் குறைவு நோயும் உண்டாகும். மனச்சோர்வுகள் அடிக்கடி ஏற்படும். இருப்பினும் இவர்களுக்கு வரும் நோய்கள் உடனுக்குடன் விலகிவிடும் யோகமும் உண்டு. வாய்வுப் பிடிப்பு, சீரண சக்தி, இடுப்பு வலி, பின் தலை வலி, சோகைகள் போன்றவைகள் ஏற்படும். தலை, கண், மூக்கு, தொண்டை (ணிழிஜி) சம்பந்தப்பட்ட கோளாறுகள் அடிக்கடி வந்து மறையும்.
மாமிச உணவுகள், மசாலப் பொருட்கள் போன்றவற்றை நீக்குவது நன்மை புரியும். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தால், இவர்களை நோய்கள் அணுகாது!" அனுபவம் உள்ளவர்கள் அதிகம் பேசமாட்டார்கள்" என்பதை அவசியம் வாழ்வில் இவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
"நிறைகுடம் தளும்பாது" போன்ற பழமொழிகளைத் தங்களது வாழ்க்கையில் இவர்கள் கடைப்பிடித்தால் இவர்களும் நல்ல அதிர்ஷ்டத்தையும், இலாபங்களையும் அடையலாம். எதிர்ப்புக்களையும், எதிரிகளையும் தவிர்த்து விடலாம்.

இராகுவின் யந்திரம் & இராகு சக்கரம் & 36
13 8 15
14 12 10
9 16 11

இராகுவின் மந்திரம்
அர்த்காயம் மஹாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்தநம்!
ஸிம்ஹிகா கர்ப்பஸம்பூதம்
தம் ராஹூரும் ப்ரணாம்யஹம்
எண் 4. சிறப்புப் பலன்கள்
இப்போது மக்கள் பிரதிநிதியான 4ஆம் எண்காரர்களின் சிறப்புப் பற்றிப் பார்ப்போம். உலகத்தில் உள்ள பலவகையான செய்திகளையும், அனுபவங்களையும் தெரிந்து கொள்வதில் இவர்கள் ஈடுபாடு கொண்டவர்கள்! எப்போதும் தன் இச்சைப்படி செயலாற்ற விரும்புவார்கள்.
எப்போதும் நான்கு பேருடன் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தனிமையை வெறுப்பார்கள். பணம் சம்பாதிக்கும்போது இருக்கும் பொறுமையை, பணம் செலவழிப்பதில் காட்டமாட்டார்கள். கையில் பணம் இருக்கும்வரை கண்ணில் பார்ப்பதை வாங்கும் இயல்பினர். நான்கு பேரை அதட்டி, தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். எதிலும் எதிர்ப்பு உள்ள விவகாரங்களையே எடுத்து வாதாடுவார்கள். நண்பர்களுக்காகச் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். ஆனால் இவர்கள் மற்றவர்களின் உண்மையான அன்பிற்காக ஏங்குவார்கள். சமுதாயத்தின் முன்னேற்றம், நாட்டு நடப்புக்கள் ஆகியவற்றைப் பற்றிப் பொது இடங்களில் காரசாரமாகப் பேசுவார்கள்.

உணவு விஷயத்தில் தாராளமானவர்கள்! சுவையான உணவு, இனிமையான காட்சி ஆகியவற்றிற்காகப் பண விரயம் செய்வார்கள். தங்களின் உடல்நலம், ஆரோக்கியம் பற்றி மிகவும் கவலைப்பட்டு, அதற்காக லேகியங்களையும், மாத்திரைகளையும் சேர்த்துக் கொள்வார்கள்.
தங்களுடைய அபிப்பிராயங்களைத்தான் மற்றவர்ளும் ஏற்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். பிறர் அபிப்பிராயத்தை அலட்சியம் செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். தங்கள் காரியம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, எநத வழியையும் பின்பற்றத் தயங்க மாட்டார்கள். இருப்பினும், வாழ்க்கையில் வெற்றி பெறுவோமா என்ற வீண் பயம் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் அவசரமும், ஆத்திரமும் உண்டு. தங்களைக் கண்டு பயப்படுபவர்களை, விரட்டிக் கொண்டே இருப்பார்கள். தங்களைக் கண்டு பயப்படாமல் இருப்பவரிடம் நயமாகப் பழகுவார்கள்.
சந்தேக குணமும், அதிகாரம் செய்யும் விருப்பமும் இருப்பதால், நண்பர்கள் குறைவாகவே இருப்பார்கள். தங்கள் முயற்சிகளில் அடுத்தவர் குறுக்கீட்டை விரும்பமாட்டார்கள். அவரிடம் வெறுப்பைக் காட்டுவார்கள். குடும்பத்திலும் இவர்களது குறுக்கீடுகள் அதிகம் இருக்கும். எனவே, குடும்பத்திலும் இன்பம் குறைவுதான்.
இளமைப் பருவத்தில் விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றில் மிகவும் ஈடுபாடு கொள்வார்கள். சோம்பல் குணம்தான் இவர்களது சத்துரு! அதை விட்டுவிட வேண்டியது அவசியம். முன்கோபம் ஓரளவு இருக்கும். சமயங்களில் அடுத்தவரைத் திட்டிவிட்டுப் பின்பு வருந்துவார்கள்.
சாதாரணமாக மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே, தங்கள் குரலை உயர்த்திப் பேசித் தங்களின் வாதங்களை வற்புறுத்துவார்கள். ஒரே விஷயத்தைப் பற்றியே, பட்டிமன்றமாகப் பேசுவார்கள்.
தங்களது சொந்தப் புகழுக்கும், பொருளுக்கும் ஆசைப்படமாட்டார்கள். ஆனால் அனைத்தும் தெரிந்த மனிதர் இவர்தான் என்று உலகத்தார் பேச வேண்டும் என நினைப்பார்கள். பொது நல சேவை செய்வார்கள். அரசியல்வாதிகளில் வெறிபிடித்த இலட்சியவாதிகள் என்று இவர்களில் சிலர் மாறி விடுவார்கள். இவர்களது வருமானம் உயர உயரச் செலவும் அதிகமாகிக் கொண்டே வரும். எனவே, செலவு செய்வதில் நிதானம் தேவை. இவர்கள் மக்களை நிர்வகிக்கும் வித்தையை அறிந்தவர்கள். இதனால் போலீஸ், மேலாளர் போன்ற தொழில்களில் சிறந்து விளங்குவார்கள்.

உடல் ஆரோக்கியம்
இந்த நான்கு எண்காரர்கள் நடுத்தரமான உயரம் உடையவர்கள். வட்ட வடிவமான முகத்தோற்றமும், சற்றுப் பருமனான உடல் அமைப்பும் உண்டு. ஆழ்ந்த கண்கள் இருக்கும். தலைமுடி கருமையாகவும், அதே சமயம் அழுத்தமாகப் படியாமல், சற்றுச் சுருண்டும் காணப்படும். அதிகமான நோய்கள் இவர்களை அணுகாது. உணவு விஷயத்தில் மட்டும் கட்டுப்பாட்டுன் நடந்து கொண்டால், ஆரோக்கியம் உறுதி!

அதிர்ஷ்ட தினங்கள்
ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19 ஆகிய தினங்களும், கூட்டு எண் 1 வரும் தினங்களும் மிகவும் அதிர்ஷ்டமானவே. 28ந்தேதி நடுத்தரமான பலன்களையே கொடுக்கும். அதேபோன்று 9, 18, 27 ஆகிய தேதிக்கும். கூட்டு எண் 9 வரும் தினங்களும் நல்ல பலன்களையே கொடுக்கும்.
அதே போன்று 4, 13, 22, 31 ஆகிய தேதிகள் தாமாகவே நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆனால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் தோல்வியே மிஞ்சும். அதே போன்று 8, 17, 26 ஆகிய தேதிகளும் கூட்டு எண் 8 வரும் தினங்களும் துரதிருஷ்டமானவை. 7, 16, 25 ஆகிய தேதிகளும் துரதிருஷ்டமானவைதான்.

அதிர்ஷ்ட இரத்தினம்
கோமேதகம் அணிவது மிகவும் சிறப்பைத் தரும். சிபிமிழிழிகிவிளிழி ஷிஜிளிழிணிஷி மற்றும் பிணிஷிஷிளிழிகிஜிணி கற்களும் நல்ல பலன்களைத் தரும். இரத்தினக் கற்களில் மர நிறமுடைய கற்களை அணிய வேண்டும்.(கினிஹிகிவிகிஸிமிழிணி) (நீலநிறம்) கற்களும் அணியலாம்.

அதிர்ஷட நிறங்கள்
நீலநிறம் மிகவும் சிறந்தது. நீலக்கோடுகள் குறைந்தபட்சம் இருக்கவேண்டும். மஞ்சள் நிறமும் அதிர்ஷ்டமானது. இலேசான பச்சை, நீலம் உடைகளும் நல்லதுதான்.
கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்கவேண்டும்.

முக்கியக் குறிப்பு
சர்வ வல்லமை படைத்த இராகுவானவர். எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் சரி, தன்னுடைய இஷ்டப்படியேதான் நடத்துவார். எனவே 4ந் தேதி பிறந்த அன்பர்கள் தங்களுடைய வாழ்க்கையில், எதிர்பாராத மாற்றங்களை (ஜிகீமிஷிஜிஷி) சந்திக்க வேண்டியது வரும். அந்த மாற்றங்களை எல்லாம் நன்மைக்கே என்று மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு செயல்பட்டால், அதிர்ஷ்டங்கள் பின்பு தாமே வந்து சேரும்.

4&ஆம் தேதி பிறந்தவர்கள் : இவர்கள் கரகரப்பாகப் பேசுவார்கள். கண்டிப்பும், அதிகாரமும் நிறைந்து பேசுவார்கள். இவர்களுக்குத் துணிச்சலும், பலமும் அதிகம். போலீஸ், போர் வீரர்கள் போன்று உடல்வாகு அமையும். அடிக்கடி இவர்களுக்குச் சோதனைகள் ஏற்படும். அதைக் கண் கலங்காமல், செயல்பட்டு வெற்றி அடைவார்கள். இளமையிலேயே திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது! குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். கணவன் மனைவி அன்யோன்யம் உண்டு! தெய்வ பக்தியும் இருக்கும்.
13&ஆம் தேதி பிறந்தவர்கள் : இவர்கள் துன்பங்களையே அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்பார்கள். உண்மை அதுவன்று! சோதனை இல்லையேல் சாதனை இல்லை. இவர்களது இளமைக் காலப்போராட்டங்கள் எல்லாம் பிற்காலத்து வசதியான வாழ்விற்கு அடித்தளமாக அமைந்துவிடும். காரணமில்லாமல் பலருடைய எதிர்ப்பையும், விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியது வரும். இவர்கள் யாருக்கு உதவுகிறார்களோ, அவரே இவர்களுக்குத் துரோகம் செய்வார்கள். கடலில் அலை ஓய்வதில்லை. அதைப்போன்றுதான் இவர்களது பிரச்சினைகளும். இருப்பினும் தங்களின் கடும் உழைப்பால் பேரும் புகழும், பெருஞ்செல்வமும், மிகச் சிறப்பாகத் தேடிக் கொள்வார்கள். எதிர்பாராமல் வரும் துன்பங்களெல்லாம் எதிர்பாராமலேயே விலகி ஓடும். ஆணவம் கொண்டு செயலாற்றினால் துன்பம் நிச்சயம். நேர்மையும், கடுமையான உழைப்புமே இவர்களை உயர்த்தி விடும்.

22&ஆம் தேதி பிறந்தவர்கள்: அதிக நண்பர்களும், நல்ல பேச்சு சாமர்த்தியமும் உண்டு. நிர்வாகத் திறமையும், பிடிவாதமும் உண்டு. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று குறுக்கு வழியில் துணிந்து இறங்கி விடுவார்கள். பின்பு அதனால் பிரச்சினைக்குள்ளாவார்கள். இவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் இவரைச் சேர்ந்தவர்களே கவிழ்த்து விடுவார்கள். வீம்புக்காகச் சில செயல்களில் ஈடுபட்டால். தோல்விகளே மிஞ்சும். அரசியல், சினிமா, போட்டி, பந்தயங்களில் அதிர்ஷ்டங்கள் உண்டு. தீய நண்பர்களைத் தெரிந்து அவர்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
31&ஆம் தேதி பிறந்தவர்கள் : சுய திருப்தியே இவர்களுக்கு முக்கியமாக இருக்கும். பணம் இவர்களைத் தேடி வர வேண்டுமே தவிர, இவர்கள் பணத்தைத் தேடினால் கிடைக்காது. தீவிரத் தன்மையும் அதிகாரம் செய்வதும் இவர்கள் குணம். உலக சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். மனோசக்தி மிகுந்தவர்கள். ஆன்மிகம், சோதிடம், வேதாந்த ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உண்டு. எதிரிகளைத் துணிவுடன் சந்திப்பார்கள். உலகத்தில் உள்ள பல விஷயங்களையும், இவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். மற்ற மனிதர்களை உடனே எடை போடும் சாமர்த்தியம் உண்டு. அரசியலில் ஈடுபட்டால் நல்ல பதவிகள் கிடைக்கும்.

எண்(4) இராகுவிற்கான தொழில்கள்
இவர்களும் மனோ வேகம் நிறைந்தவர்களே! உடப்பயிற்சி, சர்க்கஸ் போன்ற உடல் சம்பந்தமான தொழிலும் ஒத்து வரும். றிஸிளி தொழில்கள் , ஊர் சுற்றிச் செய்யப்படும் தொழில்கள், யந்திரங்கள் மூலம் பொருள்கள் உற்பத்தி செய்தல், மெக்கானிக், மரத் தொடர்பான கைத்தொழில்கள், கால்நடைகள், நாய் போன்ற நாற்கால் பிராணிகளில் வியாபாரம் நன்கு அமையும்.
பேச்சில் சமர்த்தர்கள். பெரிய பேச்சாளர்களாகவும், அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ... கட்டிடம் கட்டுதல், ஆட்களை விரட்டி வேலை வாங்குதல் தொழில்களும் இவர்களுக்கு ஒத்து வரும். .. மற்றும் அனைத்து வாகனங்கள் ஓட்டுதல் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
மக்களுக்கு தினமும் தேவைப்படும் தொழில்கள், இன்சினியரிங் தொழிலாளர்கள், பத்திரிக்கைத் தொழில், .. ஆகியவையும் ஒத்து வரும். ஷிலீஷீக்ஷீt பிணீஸீபீ, ஜிஹ்ஜீமீஷ்க்ஷீவீtவீஸீரீ, ஞிஜிறி போன்ற துறைகளும் நன்மை கிடைக்கும். ரெயில்வே, பஸ், விமான நிலையங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் அமையும்.

வீடு, வாகனம் புரோக்கர்கள், வக்கீல்கள், ஹாஸ்டல், ஹோட்டல் நிர்வாகிகளாகவும், மதுபானங்கள் விற்பனை, தாதா போன்ற வழியில் ஈடுபடுதல் (சிலர்) ஆகியவையும் அமையும்.
மீன், இறைச்சி வியாபாரம் மின்சாரம், இலக்கியம் தொடர்பான வேலைகள், மாந்தரீகத் தொழில்கள், ஆடு,மாடு, கோழி போன்றவற்றை அறுக்கும் தொழில், விஷ வைத்தியம் செய்தல், வித்தைகள் செய்து சம்பாதித்தல் போன்றவையும் அமையும். சிலர் சட்டத்திற்குப் புறம்பான தொழில்களிலும் ஈடுபடுவார்கள். எண்ணின் பலம் குறையும் போது மற்றவர்களை விரட்டிப் பிழைக்கவும், ஏமாற்றவும் தயங்கமாட்டார்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எண் 4 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - இராகு (Dragon's Tail) Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 1:00 am

எண் 9 க்கான பலன்களுக்கு இன்னும் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டுமோ? எண் 4 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - இராகு (Dragon's Tail) 440806



எண் 4 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - இராகு (Dragon's Tail) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 25, 2011 1:03 am

உங்களுக்காக எல்லா எண்களும் இன்றே பதிந்து விடுகிறேன் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எண் 4 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் - இராகு (Dragon's Tail) Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக