புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..! Poll_c10உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..! Poll_m10உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..! Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..! Poll_c10உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..! Poll_m10உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..! Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel
உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..! Poll_c10உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..! Poll_m10உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..!

senthilmask80
senthilmask80
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Postsenthilmask80 Mon Nov 21, 2011 5:21 pm

உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..!

தத்வமசி னு ஒரு சமஸ்க்ருத சொல் உண்டு. YOU ARE THAT னு அர்த்தம். நீ எதை நினைக்கிறயோ, அப்படியே ஆகிடுவே. நம் எண்ணம் , ரொம்ப முக்கியம். நல்ல விதமாக இருக்க வேண்டும். கெட்டவனா ஆகிறதுக்கு, ஒரு மணி நேரம் போதும். நல்ல பேரை காப்பாத்த , லைப் முழுவதும் போராடனும்.

கெட்ட எண்ணங்கள் வராம இருக்க, நல்ல எண்ணங்கள் வளர்க்கணும். அதுக்கு முன்னே , நமக்கு நம்மை பத்தி நல்லா தெரியனும். அதன் விளைவுதான் இந்த கட்டுரை. இது தெளிவான கட்டுரை படிக்கிற மாதிரி இருக்காது. முழுக்க முழுக்க உங்களுக்குள் , கொஞ்சம் குட்டையை குழப்ப மட்டுமே. குழம்பிய பிறகு, மனது தெளிவடைய ஆரம்பித்த பிறகு, உங்களை நீங்கள் கவனியுங்கள். உங்களைவிட நல்லவர் யாருமே இல்லை... மேலே தொடரலாம்..!

ஒரே ஒரு துளி யில் இருந்து உருவாவது இந்த உயிர். இத்தனைக்கும் , ஒரு துளி விந்துவில் இருப்பது , பல கோடி ஜீவ அணுக்கள். உங்களுக்கு முன்னே இருந்த ஒரே ஒரு அணு , முண்டிப் போயிருந்தா , இன்னைக்கு நீங்க இல்லை. உங்களுக்கு பதிலா , உங்க அண்ணாச்சி தான் , பிறந்து இருப்பாரு. அத்தனையும் தாண்டி , நீங்க , பிறக்கும்போதே , கோடி பேரை ஜெயிச்சு , இந்த பூமியைப் பார்க்க ஆசைப் பட்டு , வெற்றி வீரனா வந்து இருக்கீங்க...

பிறக்கும் முன்னாலே இருந்தே போராட்டம் தான் , ஆனா அதுலே நீங்க வெற்றி பெற்று சாம்பியனா வந்து இருக்கீங்க. போராட்டம் ஒன்னும் நமக்கு புதுசு இல்லை. வெற்றியும் நமக்கு புதுசு இல்லை.
எப்பவுமே எடுத்த முயற்சி எல்லாம் தோத்துப் போகுதே, வாழ்க்கையிலே முன்னேறாம இப்படியே இருந்திடுவோமோனு, பயப்படாதீங்க... உங்களால கண்டிப்பா முடியும். உங்களோட வாழ்க்கையை நீங்க வாழ்ந்து காட்டுவீங்க.. அதுக்குத் தான், நீங்க வந்து இருக்கீங்க...

உங்களோட சக்தியை , நீங்க உணர்ந்து - நம்பிக்கையுடன், வாழ்க்கையில் தொடர்ந்து பயணியுங்கள்... வெற்றி நிச்சயம்... !

நமக்கு உலகத்திலே தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவு இருக்குது தெரியுமா? முதல்ல நமக்கு நம்ம யாருன்னு தெரியுமா? நம்ம உடலைப் பற்றி ஏதாவது கொஞ்சமாவது தெரியுமா?
ஒரு சட்டை வாங்குறோம், பைக் வாங்குறோம்..... இதை எல்லாம் , ஒரு விலை கொடுத்து வாங்குறோம். சரிதானே ! அதன் பிறகு, அது நம்ம பொருள்.

ஐயா, சரி ஐயா , உங்க உடம்புனு சொல்றீங்களே, அதுக்கு ஏதாவது விலை கொடுத்து வாங்கினீங்களா? இல்லை, நீங்க வாங்கலையே . அப்புறம் எப்படிம், என் உடம்பு னு உரிமை கொண்டாடுறீங்க?

சரி, இந்த உடம்பு எப்படி வந்துச்சு - உயிர் கொடுத்தவங்க , உங்க அப்பா , அம்மா ரெண்டு பேரும்தானே. உரிமை கொண்டாட வேண்டியவங்க அவங்க தானே. நியாயமா , இந்த உடம்பு உழைச்சு ஓடாப் போக வேண்டியது அவங்களுக்குத் தானே. ஆனா , எத்தனை பேரு , அப்படி நினைக்கிறோம்? எத்தனை தடவ பெற்றவங்களுக்கு கண்ணீர் வர வைச்சு இருக்கிறோம்? பெத்தவங்களை எவ்வளவு வேதனைப் பட வைக்கிறோம்? எத்தனை முதியோர் இல்லங்கள், அதில் எத்தனை பேரு ஆதரவு இல்லாம , கண்ணீரும் , கம்பலையுமா? உங்க உயிர் தங்கிக்கிட வாடகைக்கு வீடு கொடுத்த , வீட்டு உரிமையாளர்களுக்கு , உங்க கூட , ஒரே வீட்டில தங்கிக்கிட கொடுப்பினை இல்லை.

வயசான அப்பா , அம்மா இருந்தா , உங்க கூட வைச்சுக்கிட முயற்சி பண்ணுங்க. அவங்க பண்ற எதுவும் உங்களுக்கு பிடிக்கலை, சரி, பரவா இல்லை - வாழ்க்கையிலே , எத்தனையோ விஷயங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு, சகிச்சுக்கிட்டு போறோம். பெத்தவங்களை பார்த்துக்க முடியாதா?

வேற ஒருத்தரோட உடமை , உங்க கிட்ட இருந்தா அதை எவ்வளவு பத்திரமா பாதுகாக்கணும்? திரும்ப கேட்டா , எந்த சேதாரம் இல்லாம கொடுக்கணும் இல்லை. நம்ம உடம்பு , நம்ம உடமை இல்லையே? அதை குறைந்த பட்சம் , பத்திரமா பார்த்துக்க வேண்டாமா? ஆனா, பண்ணுறோமா?
குடி, புகை , கறி , மீனு , மாமிசம்.. எவ்வளவு உள்ளே போகுது? பெண் சுகத்துக்கு ஏங்குகிற உடம்பு... இப்போதைக்கு உடம்பு தான் ஜெயிக்கிறது. மனசு , பாவம் ... என்ன பண்றதுனே தெரியாம மிரண்டு போய் இருக்குது. முதல் தப்பு பண்றபோது , மனசு கொஞ்சமாவது பக் பக்குன்னு அடிச்சிக்கும். ஒரு வார்னிங் தரும். ஆனா, அடுத்தடுத்து..? கம்முனு போயிடுது. நாமதான் இதை மனப் பக்குவம் (?) னு நெனைச்சு , நம்மளையே ஏமாத்திகிடுறோம்.

இப்படியே போனா, என்ன ஆகும்? சீக்கிரம் , உடம்பு தளர்ந்து , இளமையை நினைச்சு ஏங்கிக்கிட்டு.. அட ச்சே.ன்னு ஆகிடாது? உடம்பை பத்திரமா வைச்சுக்குவோம் சார்.. ! அந்த காலத்திலேயே , சர்வ சாதாரணமா , எண்பது வருஷம் , தொண்ணூறு வருஷம்னு இருந்து இருக்கிறாங்க? இப்போ பாருங்க.. !

உடம்புக்குள்ள , உயிர்னு ஒண்ணு , என்னென்னே தெரியாம , நமக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுது . உங்க உரிமை இல்லாத உடம்புக்குள்ள அது இருக்குது. ரெண்டும் சேர்ந்தது தான் நீங்க. நீ யார்னு முதல்லே தெரிஞ்சுக்கோனு சித்தர்கள் சொல்லுவது இதைத்தான். பஞ்ச பூதங்களின் சேர்க்கை தான் உடல். ஒரு குறிப்பிட்ட அளவு உஷ்ணம் இருந்துக்கிட்டே தான் இருக்கணும். அது கூடினாலும், குறைஞ்சாலும், உயிர் அந்த உடம்புலே தங்குறது இல்லை.

இப்போதைக்கு உலகத்திலே இருக்கிற ஜீவ ராசிகளிலே , கேட்க , சிந்திக்க, பேச , தெரிஞ்ச ஒரே இனம் நாம தான். ஆனா , நமக்கு நம்மை பற்றி தெரிஞ்சுக்க அவகாசம் இருந்தும், என்னென்னே தெரிஞ்சுக்கிடாம, நாமளும், மிருகத்தோட மிருகமா , வாழ்ந்து , ஒரு நாள் மடிஞ்சும் போறோம்.. நம்மளை பத்தி , நமக்கு இப்போ , புரியாம, அதுக்காக இன்னொரு ஜென்மம் எடுத்த பிறகுதான் புரியணுமா? இப்போ இருந்தே , அதற்க்கான முயற்சியில் இறங்கலாமே?

நாம விடுற மூச்சுக் காற்றை , கவனிக்க ஆரம்பிச்சாலே போதும், நமக்கு கூடிய சீக்கிரம் , அதற்க்கான விடை கிடைக்க ஆரம்பிக்கும். மூச்சுப் பயிற்சி,
தியானம் - உங்களுக்கு இந்த பிறவியின் நோக்கம் என்ன என்பதை தெரிய வைக்க , நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடி.
சப்தங்களை கேட்க தெரிஞ்ச மனிதன், தானும் சப்தம் எழுப்பி - பேசி - ஒரு விஷயத்தை அறிய முற்படுகிறான். இந்த பூமியே, ஒரு மெல்லிய சப்த அதிர்வில் தான் சுழன்று கொண்டு இருக்கிறது. ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் அதிர்வை ஒத்து அது இருக்கிறதாக , நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் தான், நாமும் மந்திர ஜெபங்களின் மூலம் , இறைவனை அடைய முயற்ச்சிக்கிறோம்.
மனித உடல் சக்தி வடிவமானது. இந்த உடலை சூட்சும சரீரத்தில் உள்ள சக்கரங்களே இயக்குவதாக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள அனைத்து இயந்திரங்களும் சக்கரத்தின் வழியாக நகர்வதைப் போல மனிதனின் வளர்ச்சிக்கு அவனுள் உள்ள ஏழு சக்கரங்களே உதவி புரிகின்றன.
மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் என்ற ஏழு சக்கரங்களும் மனிதனை ஒரு பரிணாமத்தில் இருந்த மற்றொரு பரிணாமத்திற்கு இட்டுச் செல்கின்றன.

எந்த ஒரு காரியமும், காரணமின்றி இருக்காது. அது போலத்தான் முன்னோர்களின் சொற்களிலும், செயல்களிலும் ஒரு அர்த்தம் இருக்கும். ஜபம் செய்யும் போதும், தியானம் செய்யும் போதும், உணவு அருந்தும் போதும், வெறும் தரையில் உட்கார்ந்து கொள்ளக்கூடாது.
பொதுவாக வெறும் தரையில் படுத்து உறங்கக்கூடாது. மேலும், இடது கையை நிலத்தில் ஊன்றிக் கொண்டும்,நின்று கொண்டு, படுத்துக் கொண்டும், சாப்பிடக்கூடாது என தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. எதற்கு அப்படி சொல்லுறாங்க?

வீட்டில் மின்சாரக்கம்பி முதலியவற்றை தொடும் போது ஷாக் அடிக்கிறது ஷாக் அடிக்காமல் இருக்க எல்லா வீடுகளிலும் கைக்கு உறை போடுவதில்லை. உடனே வீட்டில் உள்ள மனைப்பலகையை கீழே போட்டு மின்சார ஒயரைத் தொட்டு பழுது பார்க்கிறோம். இரும்பு நாற்காலியை பயன்படுத்தாமல் மரப்பலகையை ஏன் போட்டுக் கொள்கிறோம். என்றால் அது மின் கடத்தாப் பொருள்
மின்சாரத்தை தொடுவதால் அதிர்ச்சி ஏற்படக் காரணம், மின்சாரம் உடல் வழியாக மண்ணுக்குள் ஊடுருவி நம்மை அதிர்வடையச் செய்கிறது. இதனை மின்கடத்தாப் பொருளாக இருக்கக்கூடிய காய்ந்த மரப் பலகையை கொண்டு தடுத்துக்கொள்கிறோம். அதுபோலவே நம் உடலில் உள்ள சக்தி வெளியேறாமல் இருக்கவே முன்னோர்கள் வெறும் தரையில் படுத்துறங்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.

உடம்பு உணவால் ஆன பிண்டம். உணவு உயிருக்கு சக்தி தரும். ஜபம் செய்யும் போது உடலுக்கு சக்தி தரும். ஆகாரம் உண்ணும் போதும் சக்தி பெறப்படுகிறது. அச்சக்தி நிலத்தில் இறங்காமல் இறங்காமல் இருக்க சக்தியை கடத்தாத மனைப்பலகை, மான் தோல், புலித்தோல், தர்பாசனம், ஆகியவற்றில் அமர்தல், தொன்மையான பழக்கமாக இருந்து வந்துள்ளது.
வெறும் தரையில் படுத்தால் நாளைடைவில் உயிர்சக்தியானது குறைந்து உடல் பலம் இழக்கிறது. எனவே உறங்கும் போது உடலில் உயிர்ப்புறும் சக்தி நிலத்தில் இறங்காமல் இருக்க ஒரு துணியையாவது விரித்தே படுக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். நம் உடல் நலம் கருதி அமைந்த இந்த சாஸ்திர வழக்கங்கள் அறிவியல் ரீதியானவையே எனவே குளிர்ச்சியாக இருக்கிறது என்று வெறும் தரையில் படுத்து உறங்குவது ஆபத்தானது என்று கூறியுள்ளனர் முன்னோர்கள்.

இந்த மாதிரி, சில சின்ன சின்ன விஷயங்களை தெரிஞ்சுக்கிட ஆரம்பிப்போம்.
நம் உடம்பில் சக்தியை எப்படி பெருக்குவது என்று பார்ப்போம்.
மனசுன்னு ஒன்னு இருக்கிறதை உணர முடியுதா உங்களால? அறிவியலுக்கு அது தெரியாது. கண்ணுக்கு தெரியாத ஒன்றை எப்படி ஒத்துக்க முடியும்? நல்லா உடம்பை பார்த்துக்கிடுறோம், நல்லா ஆரோக்கியமா சாப்பிடுறோம்.. உடம்பு சக்தியோட இருக்கு. திடீர்னு ஒரு கெட்ட நியூஸ். ஹா... அதிர்ச்சி வரும் அளவுக்கு. என்ன ஆகும்..? உடம்பு என்னதான் சக்தியோட இருந்தாலும், அதனால ஒரு பிரயோஜனமும் இல்லை.

என்ன வேலை செய்திட முடியும்? அதுக்கு அப்புறம், ஒழுங்கா சாப்பிடாம, இன்னும் உடம்பு வீக் ஆகும். இல்லையா? இந்த உடம்பு , மனசு / ஆத்மா ரெண்டும் சேர்ந்தாதான் , அது நாம்.
ரெண்டுல ஒன்னு இல்லைனாலும், பயன் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டுமே முக்கியம்...! நாம ஒன்னும் , பெரிய பெரிய அரசியல்வாதிகள் வீட்டில் பிறந்துவிட வில்லை. நாம உழைச்சாத்தான் , நமக்கு சாப்பாடு. நிறைய சம்பாதிங்க.! ஒரு பத்து குடும்பத்துக்காவது , நல்லா சம்பாதிக்கிற வாய்ப்பு, வழிமுறை சொல்லிக் கொடுங்க.. !
நம்ம காலம் முடிஞ்சாலும், நம்மளை வாழ்த்தி அனுப்ப - ஒரு பத்து பேராவது இருக்கட்டும். நமக்கு பிடிச்ச விஷயங்கள்லே , நம்ம மூளையை எப்படி பயன்படுத்துறோமோ, அதைவிட ரெண்டு மடங்கு - பணம் சம்பாதிக்கிறதுலே காட்டுங்க.

வெறுமனே பெண் சுகம், குடி, போதை வஸ்து என்று அனுபவிப்பதிலேயோ , அல்லது அதையே நினைத்துக்கொண்டு இருந்தோ - நமக்கு கிடைத்துள்ள , இந்த மனித வாழ்க்கை என்னும் , அருமையான சந்தர்ப்பத்தை - இழந்து விட வேண்டாம். இதுவரை எப்படி இருந்தாலும் பரவா இல்லை, இனிமேலாவது சுதாரித்து எழுங்கள்..!

உடலுக்கு தேகப் பயிற்சி , மனதுக்கு இறை பக்தி, வழிபாடு - இரண்டுக்கும் அடிப்படை - மூச்சுப் பயிற்சி. உங்களை முதலில் , அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள். அதன் பிறகு - வானம் நிச்சயம் உங்கள் வசப்படும்!

நம் வாழ்க்கையின் வெற்றி , தோல்வி - நம் கையில் தான் இருக்கிறது.
வாழ்க வளமுடன்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக