ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பதி சமேதரா கிளம்புங்க!

Go down

தம்பதி சமேதரா கிளம்புங்க! Empty தம்பதி சமேதரா கிளம்புங்க!

Post by ரேவதி Mon Nov 21, 2011 2:19 pm

கார்த்திகை மாத திங்கள் கிழமைகள், சிவ வழிபாட்டுக்கு உகந்தவை.
இந்நாட்களில், குடும்ப சகிதமாக கோவிலுக்குச் சென்றால், அந்தக்
குடும்பம் பிரியாமல் இருக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக, கார்த்திகை
திங்களன்று, கணவனும், மனைவியும் இணைந்து கோவிலுக்குச் சென்று வருவது,
காலமெல்லாம் அவர்கள் கருத்து வேறுபாடின்றி இணைந்திருக்க வகை செய்யும்.
நவக்கிரகங்களில்
சந்திரனை, "மனோகாரகன்' என்பர்; இவர், மனதில் எழும் எண்ணங்களுக்கு அதிபதி.
பவுர்ணமியன்று இயற்கையாகவே மனதில் எழுச்சி இருக்கும். கடல் அலைகள் கூட,
அன்று வழக்கத்தை விட <அதிக உயரத்துக்கு எழுவதைக் காணலாம்.
சந்திரனுக்குரிய
கிழமை திங்கள். பிறைநிலவை சிவபெருமான் அழகாக அணிந்துள்ளார். சந்திரனுக்கு,
"சோமன்' என்ற பெயருண்டு. அதனால், சோமனை சூடிய சிவன், "சோமசுந்தரர்'
எனப்படுகிறார். திங்களை முடியில் சூடியவர் என்பதாலும், சிவ வழிபாட்டில்
திங்கட் கிழமைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
சந்திரனுக்கு, தட்சன்
என்பவர், தன் மகள்களை திருமணம் செய்து கொடுத்தார். ஆனால், அவர்களில்
ரோகிணி, கார்த்திகை என்ற மனைவியரிடம் மட்டுமே அதிக அன்பு காட்டினான்
சந்திரன். இதனால், வருத்தமடைந்த மற்ற பெண்கள் தந்தையிடம் புகார் கூறினர்.
தன் மருமகனுக்கு புத்தி சொல்லி பார்த்தான் தட்சன். சந்திரன் அதை
பொருட்படுத்தாததால், "நீ அழகாக இருக்கிறாய் என்ற கர்வத்தால் தானே இப்படி
செய்கிறாய். உன் அழகு அழிந்து போகட்டும்...' என சாபமிட்டான். அதுவரையில்,
சந்திரன், 30 நாட்களும் வானில் மின்னினானாம். சாபம் காரணமாக சந்திரன்
ஒளியிழந்தான். இரவு வேளையில், உலகமும் இருள் மயமானது.
தன் சாபம் நீங்க
சந்திரன், திங்கட் கிழமைகளில் சிவ வழிபாடு செய்தான். இதனால் மகிழ்ந்த
சிவன், சந்திரனுக்கு மீண்டும் ஒளியைக் கொடுத்தார். அதன் பிறகும்,
சந்திரனின் செருக்கு அடங்கவில்லை. ஒரு சமயம், குள்ள வடிவமும், யானை முகமும்
கொண்ட விநாயகரை அவன் கேலி செய்தான். இதனால், விநாயகரின் சாபத்துக்கு
ஆளாகி, ஒளியிழந்தான். மீண்டும் சிவ வழிபாடு செய்த அவன், அவருக்கு, 108
சங்குகளில் தீர்த்தம் எடுத்து அபிஷேகம் செய்தான். அவன் முன் தோன்றிய சிவன்,
"ஒருவர் செய்யும் தவறை ஒருமுறை மன்னிக்கலாம்; மறுபடியும் மன்னிக்க இயலாது.
இருப்பினும், என்னை அபிஷேகித்து வழிபட்டதால், ஒரு பட்சம் வளர்ந்தும், ஒரு
பட்சம் தேய்ந்தும் போவாயாக. இதில், ஒருநாள் முழுமையாக மறைந்தும், ஒருநாள்
முழுமையாக ஒளிரவும் செய்வாய்...' என்றார்.
அவரது தலையில் ஒளிவீசும் பாக்கியத்தை தந்தருள வேண்டும் என அவன் வேண்டிக் கொள்ளவே, அந்த வரத்தையும் நல்கினார்.
மனைவியரிடம்
சரியாக நடந்து கொள்ளாததால், சந்திரனுக்கு சாபம் வந்தது. இப்போதும்
ஒற்றுமையில்லாத பல தம்பதியினர் உள்ளனர். அவர்களும் சிவபெருமானின்
சாபத்திற்கு ஆளாகலாம். இவர்கள் மனம் ஒருமித்து, ஒற்றுமையாக வாழ கார்த்திகை
சோமவார விரதம் அனுஷ்டிக்கலாம். இந்நாளில், பகலில் பழம், பால் மட்டும்
சாப்பிட்டு, சிவாலயத்துக்கு சென்று வர வேண்டும். இரவில் எளிய உணவு
சாப்பிடலாம். இந்நாளில், தம்பதி சமேதரா சிவன் கோவிலுக்குச் சென்று சுவாமி,
அம்பாளை வணங்கி வந்தால், சிவசக்தியின் ஆசியால் காலம் முழுவதும் ஒற்றுமையாக
வாழலாம்.
ஜோதிடத்தில் சந்திரனை, "மாத்ருகாரகன்' என்பர். அதாவது, இவர்
தாய் ஸ்தானத்தைக் குறிப்பவர். தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ,
அவருடன் மனஸ்தாபம் இருந்தாலோ இந்த விரதம் நிவர்த்தியைத் தரும். சந்திரதசை
மற்றும் சந்திரபுத்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால்
நன்மை உண்டாகும்.
கார்த்திகை சோமவாரத்தன்று அருவிகளில் நீராடுவது
உடலுக்கும், மனதுக்கும் நன்மை தரும். புண்ணிய அருவிகளான குற்றாலம்,
பாபநாசம் அகத்தியர் அருவிகளுக்கு தம்பதி சமேதரா நீராடி, குற்றாலநாதர் -
குழல்வாய்மொழி அம்பிகை, பாபநாசநாதர் - உலகாம்பிகையை வணங்கி வந்தால்,
காலமெல்லாம் களித்திருக்கலாம்.
***

தி. செல்லப்பா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum