ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !

2 posters

Go down

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !  Empty உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !

Post by முஹைதீன் Sun Nov 20, 2011 8:46 pm

உடலில் என்ன பிரச்னை என்று
தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !



கண்கள் கண்கள் உப்பியிருந்தால்

என்ன வியாதி சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப்
பொருட்களை அகற்றும் வேலையைச்
செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை
என்றால், உடலில் சேரும் அசுத்த நீர்
வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச்
சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச்
சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் உணவில்
சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய
உதவும்.

கண் இமைகளில் வலி

என்ன வியாதி:
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்:
போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில்தெரியும்
அதிகப்படியான வெளிச்சம்

என்ன வியாதி : அதிகமாக வேலை
செய்து கொ
ண்டே இருப்பது. இந்த
ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை
குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும்,
புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ்: எப்பொழுதும்
நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக
காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க
வேண்டும்.


கண்கள் உலர்ந்து போவது
என்ன வியாதி:
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில்
அதிக நேரத்தைச் செலவிடும் போதும்,
கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த
பாதிப்புக்குள்ளாகிறது.
டிப்ஸ்: குறைந்தது
எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய
உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

சருமம்

தோலில் தடிப்புகள் ஏற்படுதல்


என்ன வியாதி: இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது
காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு
உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல்
தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்:
அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை
நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது
என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல்
போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம்
வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு
எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர்
பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு
அருந்துவீர்கள்.

தோல் இளம்
மஞ்சளாக
மாறுவது
என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும்
பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
டிப்ஸ்:
அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.


பாதம்


கைகால்களில்
சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்


என்னவியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால்
உடலின் ரத்த ஓட்டம் சீராக
இருக்காது. இந்த அறிகுறி உங்கள்
ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ்:
வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
பாதம் மட்டும் மரத்துப்போதல்

என்ன வியாதி:
நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு,
நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள்
உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ
வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ்: பிளாக்
டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து
நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக்
கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்
என்ன வியாதி: தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு
செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி
சரியாக வேலை செய்யாதபோது, நம்
பாதங்களின் தோல் உலர்ந்துபோகும்.
பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால்
அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு
பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த
அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
கைகள்

சிவந்தஉள்ளங்கை
என்ன வியாதி:
கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட
கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக
சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை
செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக்
கொடுக்கும். காரணம் உடலின் மற்ற
பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்:
கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு
முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும்
சாப்பிடுங்கள்.

வெளுத்தநகங்கள்
என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள
சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல்
பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால்,
இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்:
இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்
செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக்
கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின்
ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு
இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

விரல் முட்டிகளில் வலி
என்னவியாதி:
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல்
முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு
மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை.
எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்:
உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக்
கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான
உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல்
தடுக்கும்.

நகங்களில் குழி விழுதல்
என்னவியாதி:
சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு
மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும்
நகங்களும் மிகவும் மென்மையாகி விடும்.
இந்த வியாதி வந்தால் மென்மையான
நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும
வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும்.
ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

வாய்

[b]ஈறுகளில்
இரத்தம்
வடிதல்
.
என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும்
எலும்புகளிலும் தொற்று நோய்க்
கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல்
அறிகுறி.

டிப்ஸ்:
தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும்
அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட
மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலிஏற்படுதல்
என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்:
‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்துபோவது.
என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால்
இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து
போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய
திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே
பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.நன்றி .குமுதம்
சினேகிதி













ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !  Empty Re: உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !

Post by கேசவன் Sun Nov 20, 2011 9:08 pm

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !  224747944 உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !  224747944 உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !  224747944


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !  1357389உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !  59010615உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !  Images3ijfஉடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !
» உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !
» பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிபட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்
» தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன?
» இறப்பு எத்தனை பிறப்பு எத்தனை வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum