புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
sram_1977 | ||||
Anthony raj | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றும் ஒரு கதை (21/11/11 பானு) தலைமுறை கனவு ...!
Page 1 of 1 •
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011
ஒவ்வொரு வருடமும் சுதந்திர, குடியரசு தினத்தில் பள்ளிக் குழந்தைகளின்
பிஞ்சுக் கைகளிலிருந்து உதிர்ந்து் கொண்டிருக்கும் விறைப்பான
வீரவணக்கங்களுக்கு மத்தியில், தேசியக் கொடியை கம்பத்தில் ஏற்றி விட்டு
முகத்தில் தவழும் பெருமிதத்துடன் இறங்கி வருவார் செந்தில் மாமா. கள்ளழகர்
திருவிழாவைப் போல் அதைப் பார்ப்பதற்கு அவ்வளவு மிடுக்காக இருக்கும்,
மாணவர்களின் வெள்ளைச் சட்டை, காக்கி நிறக் கால்ச்சட்டைகளால் சூழ்ந்த
பரப்பிற்கு,
மாமா-வின் இராணுவ உடை விபூதியில் வைத்த குங்குமப் பொட்டு! மாமாவுக்கு
புதுத்துணி எடுப்பதென்றால் அது இந்திய இராணுவச் சீருடைதான். மற்றபடி, அவரை
ஜெயவிலாஸ் இலச்சினையுடைய முண்டா பனியனிலும், கட்டம் போட்ட கைலியிலும்
காணலாம். வெளியூர் செல்லும் நாட்களில் வேட்டி-சட்டை.
மாமாவைப்
பற்றிச் சொல்ல் வேண்டுமானால், செந்தில் என்ற பெயரின் தில் என்பதை,
மேற்குறிகளுக்குள் இட்டு, செந்'தில்' வேல் என்று எழுதுமளவிற்கு
இரசனைக்காரர். செம்மண் தேகம். ஆஜானுபாகுவான உடல்வாகு. இடது மார்பில்,
இந்தியத் தேசியக் கொடியைப் பச்சை குத்தியிருப்பார். வாயைத் திறந்தால், வக்காலி என்ற (கெட்ட) வார்த்தை சீரான இடைவெளியில் சரளமாக வந்து
விழும். இந்திய இராணுவத்தில் சிப்பாயாகவேனும் சேர்ந்து, நாட்டுக்காக உயிர்
விட வேண்டுமென்பதுதான் மாமாவின் ஆசை. கனவு, இலட்சியம் எல்லாமே! இராணுவம்
நடத்தும் எல்லா தேர்வுகளிலும் கலந்து கொள்வார். அதற்கான தேர்ந்த
பயிற்சியும் மாமாவிடம் இருக்கும். ஆனால், ஒவ்வொரு முறையும் 'உயரம்
போதவில்லை' என்ற ஒற்றைக் காரணத்தினாலேயே அவருக்கு, இராணுவப் பதவி எட்டாக்
கனியாகவே இருந்தது. தேர்வு அதிகாரிகளை தக்க முறையில் 'கவனித்தால்'
வாய்ப்பு கிட்டும் என்று 'விவரமறிந்தவர்கள்' சொல்லியுமதை மறுத்து விட்டார்.
"காசக் குடுத்து, உள்ள போனா அதச் சம்பாதிக்கிற மொனப்புதான் மாப்ள
இருக்கும்..அப்பறமெங்குட்டு நம்ம மனசொத்து துப்பாக்கி தூக்குறது..?"
என்பார்.
என் வயதுப் பையன்களுக்கு , அவர் மாமா-வென்றால், சொந்த மாமா
இல்லை. சகட்டுமேனிக்கு எல்லாரையும் 'மாப்ள' என்றழைப்பதாலேயே அவர்
எல்லாருக்கும் மாமாவாகிப் போனார். இன்னும் அவர் பாஷையில் சொல்ல
வேண்டுமானால், நாங்களெல்லாம் அவருக்கு குஞ்சு குளுவான்கள். ஆனால், செந்தில்
மாமாவிடம் மூத்த தாய்மாமனைப் போன்ற கண்டிப்பும், இளைய தாய்மாமனைப் போன்ற
சிநேகமும் ஒருசேர இருக்கும். 'அதென்னடா
யுவகேந்திரா..சந்துபொந்துரான்னுக்குட்டு வடக்கத்தி மொழில... நல்லா இனிக்கிற
தமிழ்ல 'பாரதியார் இளைஞர் மன்றம்'ன்னு ஆரம்பிங்கடா வெண்ணைகளா' என்ற
அதட்டல் கலந்த அறிவுரையில் ஆரம்பித்தது செந்தில் மாமாவினுடைய பழக்கம்.
அன்றிலிருந்து,
"வக்காலி..இத்துணூண்டுக் கெணத்துல குதிக்கிறதுக்கு பயந்தேன்னா,, நீயி காபி வட்டைக்குள்ளதாண்டா நீச்சலடிக்கணும்"
"இரத்தத் திலகம் கடைசிக் கட்டத்துல, நம்ம கொடியை ஏத்திப்புட்டு பொட்டுல குண்டு வாங்கிச் சாவாரு பாரி சிவாஜி..வக்காலி.. நல்ல சாவுன்னா அதுதாண்டா"
"என்னா பெர்ர்ரிய மாப்புள்ளக் கல்லு..வக்காலி அழுத்தி எத்துனா ஆடிக்காத்துல பறக்குற மாதிரி பறக்கும்டா"
இப்படி எத்தனையோ அறிவுரைகள், பிரதாபங்கள், வக்காலிகள்!
விடுமுறை
நாட்களில், ஊராட்சி மன்ற, உடற்பயிற்சி 'பாரில்' (கம்பிகள்) செந்தில்
மாமாவுடன் ஆரம்பிக்கும் எங்கள் ஜமா. அசராமல் நூறு ஃபிலப்புகள் கூட
எடுப்பார். நாங்கள் ஐந்துக்கே திக்கித் திணறிக் கொண்டிருப்போம். அதைப்
பார்த்து மெலிதாக சிரித்துக் கொண்டே அருகில் வந்து, 'இரு மாப்ள.. நான்
புடிக்கிறேன்' என்று இலாவகமாக சொல்லிக் கொடுப்பார். அப்படியே சூரியனின்
மஞ்சள் நிறம் மங்கத் தொடங்கும் நேரம், கூட்டம் அப்படியே கோனார் தோட்டக்
கிணற்றுக்கு நகரும். அங்கு நீச்சல் தொடங்கும்.
அங்கும் செந்தில்
மாமாதான் சென்டர் ஆஃப் த அட்ராக்சன். கடப்பாரை நீச்சலிருந்து விலாங்கு
நீச்சல் வரை அவருக்கு அத்துப்படி! எங்கள் அரைஞாண்கயிற்றைப் பிடித்து
நீச்சல் கற்றுத் தந்த துரோணர் அவர். நீச்சல் முடித்து மேலேறி வந்தவுடன் "ஏலேய்..அந்த மோட்டர் தண்ணியப் புடி" என்று
சொல்லி ஒரு லிட்டர் தண்ணியை அப்படியே குடிப்பார். "செரிமானத்துக்கு
நல்லதுடா" என்று சொல்லி எங்களையும் குடிக்கச் சொல்வார். எங்களுக்கெல்லாம்
அப்படியே குடலைப் பிரட்டிக் குமட்டிக் கொண்டு வரும். அம்மாதிரியான
தருணங்களில் ராஜா, குமார், பஞ்சு எல்லாம் வாந்தியெடுத்ததும் உண்டு. அப்படி
ஏதாவது நடப்பின், வாந்தியெடுப்பதையும் பொருட்படுத்தாமல் முதுகில் அடி
விழும். வக்காலி சகிதமாக!
மாதத்தில் என்றைக்காவது, இளமைத் திமிரேற
டவுன் ஒயின்ஸாப்புகளுக்குச் செல்லும் போது, மாமாவும் சேர்ந்து கொள்வார்.
ஆனால், சரக்கைக் கையால் கூட தொட மாட்டார். மேலும், 'ஏண்டா..சரக்கடிச்சு
ஒடம்பைக் கெடுத்துக்குறீங்க' என்று அறிவுரைகள் வேறு தருவார். அம்மாதிரியான
அறிவுரைகளில் அதட்டல் இருக்காது. மாறாக அன்பு இருக்கும். ஆனால், நாங்கள்
அவற்றை புலம்பல்கள் பட்டியலில் சேர்த்திருப்போம். பற்றாக்குறைக்கு, "ஏன
மாமா..மிலிட்டரி..மிலிட்டரின்ற..அப்பறம் எப்டி ஊத்தாம இருக்கப் போறீயாம்"
என ஓட்டுவோம். அதற்கு வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்து ஒதுங்கிக்
கொள்வார்.
சரக்கடித்து விட்டு, மிதமான போதையில் ஹோட்டல்களில் சாப்பிடும் போது, மறுபடியும் ஆரோக்கிய டிப்ஸுகள் தருவார்.
"மாப்ள..தலைக்கறி சொல்லுயா..ஆம்ளேட்ல பெப்பர் கொஞ்சம் தூக்கலாப் போட்டுச் சாப்பிடிய்யா!"
"வக்காலி..ஈரலை வறுத்துத் தின்னா...ஒடம்புல இரும்பு ஒட்டும்டா" என்பது மாதிரியாக ஆரம்பித்து,
"யேய்..ஆளுக்கு ரெண்டு வாழைப்பழத்தைத் தின்னுங்கடா..காலைல கலகலன்னு போயிரும்ல" என்பதில் வந்து முடியும்.என்னதான் எங்களுடன் சேர்ந்து செய்தாலும், சுற்றினாலும்.அவருடைய
பயிற்சிகளும், இராணுவத் தேர்வுகளும் ஒருபுறம் நடந்து கொண்டுதானிருந்தது.
ஆனால், நாங்கள்தான் பள்ளிகளிலிருந்து கல்லூரிக்கு
முன்னேறியிருந்தோம்.செந்தில் மாமா அப்படியேதான் இருந்தார். இடையில்
அவருக்கு திருமணம் நடந்திருந்தது.வசதியான குடும்பம் என்பதால்
சாப்பாட்டிற்கு எதுவும் பிரச்சனையில்லாமல் சென்று கொண்டிருந்தது. யார் யாரோ
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ’இலஞ்சம்’ கொடுத்து இராணுவத்தில் சேர
முற்றிலுமாக மறுத்து விட்டார்.
காலப் போக்கில், நாங்களும் படிப்பை
முடித்து வாழ்தலின் பொருட்டு, கிராமத்தை விட்டு பெரு நகரங்களில்
குடியமர்ந்திருந்தோம். எப்போதாவது பங்குனிப் பொங்கலுக்கோ அல்லது வைகாசித்
திருவிழாக்கோ ஊருக்கு வந்தால்தான் உண்டு. அப்படியாக, சென்ற தீபாவளிக்காக
ஊருக்குச் சென்றிருந்த சமயம், கூறுகறிக் கடையில், "வக்காலி.
நெஞ்சுக்கறியாப் போடுண்ணே!" என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
நினைத்தது போலவே,அங்கே செந்தில் மாமாதான் நின்று கொண்டிருந்தார்.
"என்னா மாமா... நல்லாருக்கீகளா" என்று கேட்டு முடிக்கும் முன்பே முந்திக் கொண்டார்.
"யேய்..மாப்ள நல்லாருக்கியாய்யா..வக்காலி பார்த்துக் கொள்ள நாளாகிப் போச்சேய்யா" என்றவாறே வந்து கட்டிக் கொண்டார்.பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின், என் பார்வையைப் புரிந்து கொண்டு அவரே தொடர்ந்தார்.
"அதையேன்
மாப்ள கேட்குற..எவ்வளவோ மொயற்சி செஞ்சும்..வக்காலி நமக்கு உசரம் கூடி
வரலைடா..வயசாகிருச்சி 'ஏஜூ பார்டு'ன்னு ஏதோ சொல்லிட்டாய்ங்க..இனிமே
செலக்சன் போகவும் முடியாது. ஆனா, எப்பாடு பட்டாவது நம்ம போஸ்ஸூ பயல
மிலிட்டரில சேத்துரணும் மாப்ள..அதுல உறுதியா இருக்கேன்யா”
அவருக்கு பதிலாக, என்ன சொல்வதென்று தெரியாமல் வெற்றுச் சிரிப்பாக சிரித்து வைத்தேன்.
”சரி மாப்ள..தோதிருந்தா, வீட்டுப் பக்கம் வாய்யா..உங்க அக்கா கத்துவா.. நான் வர்றேன்” - கிளம்பினார்.
தூரத்தில் செந்தில் மாமாவினுடைய மகன், ‘சந்திர போஸ்’ தன் சக கால்சட்டைச் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
-♠ராஜூ♠

- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நல்ல கதை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1