ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே!

4 posters

Go down

அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Empty அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே!

Post by அனந்தம் ஜீவ்னி Sat Nov 19, 2011 3:57 pm

முதல் மலர் ::
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!



நாங்கள் நண்பர்கள் சிலர் ஒரு டியூஷன் சென்டரை நடத்தி வந்தோம்.அந்த காலகட்டத்தில் தான் கும்பகோணம் தீ விபத்து ஏற்பட்டது. 94 மழலைகள் தீயில் கருகிய கொடுமையை, கிரகிக்க முடியாத அந்த அதிர்ச்சியை வரிகளாக்கி ,எங்கள் பயிற்சி மையத்தின் சார்பில் அஞ்சலி கவிதையை அச்சடித்து,மாணவர்கள் சுற்று வட்டார பகுதிகளுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தார்கள்.இரண்டு மூன்று நாட்கள் அந்த கவிதையை பலபேர் கூடி வாசித்துகொண்டிருந்ததை டீக்கடைகளிலும்,சலூன் கடைகளிலும் காண முடிந்தது.
மிக எளிமையான அந்த வரிகள்:


தீயுண்டக் கனவுகளே

இயற்கையின் பிரமாண்ட புதிருக்கு முன்பு
மனிதனின் இயலாமை
எப்போதும் தலைகுனிகிறது

ஆராதனைக்குரிய மொக்குகளே!
உங்கள் பாதங்களால்
நடக்க முடியாத இந்த மண் எதற்காக?

இருந்திருக்க வேண்டிய
எங்கள் செல்வங்களே!
உங்கள் கண்களால் பார்க்க முடியாத இந்த உலகம் யாருக்காக?


தீயுண்டக் கனவுகளே!
உங்கள் புன்னகையால் நிராகரிக்கப்பட்ட
எம் காலம்
எவ்வளவு பெரிய சோகத்தை சுமந்து நிற்கிறது?

கண்ணன்களே கருகிபோன பிறகு
இங்கு கோகுலங்கள்
எதற்கு இருக்கின்றன?

நிரந்திரமாக பௌர்ணமிகள்
விடைப் பெற்றப்பின்
இன்னும் இந்த பூமி சுற்றுவது ஏன்?

உங்களை எரித்த தீ
இன்னும் எங்கள் இதயங்களை
எரித்துக் கொண்டுதான் இருக்கிறது

எங்களால் உங்களை மறக்கவும் முடியாது!
அந்த நாளை மன்னிக்கவும் முடியாது!

உங்களின் கடைசி நேரக் கதறலை
ஏந்தியக் காற்று கூட-இந்நேரம்
தன்னைத்தானே மரித்துக் கொண்டிருக்கும்


நிலாவைக் காட்டி காட்டி
சோறூட்டிய உங்கள் அம்மாக்களுக்கு
இனி என்றுமே அமாவாசைதான்


உங்களை 'உப்பு மூட்டை' சுமந்து விளையாடிய
அந்த சகோதரர்களின் தோள்கள்
ஒரு பெரிய சோகத்தை
தாங்க முடியாமல் தள்ளாடுகின்றன

உங்களை இடுப்பில் சுமந்து நடமாடிய
அந்த சகோதரிகள்-இன்னும்
தம் மனங்களின் இடிபாடுகளில் இருந்து
மீளவே இல்லை...

நீங்கள் கண்ணாமூச்சி விளையாடிய
அந்த தெருக்களும்
துயரத்தின் கோரம் தாங்காது கதறுகின்றன...
நீங்கள்
கொஞ்சி கொஞ்சி விளையாடிய
அந்த பொம்மைகள் கூட-உங்களுக்காக
விம்மி அழுகின்றன...

போய்வாருங்கள் எங்கள் செல்வங்களே
எத்தனையோ ஜீவன்களின் செல்லங்களே
போய்வாருங்கள்...

பச்சை ரோஜாக்களைகூட
நெருப்பு எரிக்குமென்று
இப்போதுதான் நாங்கள் தெரிந்துகொண்டோம்

அந்த தீ அணைந்து விடவில்லை

நீங்கள் பிறக்கும் போது நேர்ந்த
பிரசவ வேதனைகூட இன்னும் மறையாத
உங்கள் அம்மாக்களின் அடிவயிற்றில்
-அந்த நெருப்பு-
என்றென்றைக்குமாக எரிந்துக் கொண்டிருக்கும்


கருணை வடிவமான கடவுளே!
நந்தவனங்களின் சாம்பல்
சந்நிதிகளின் புனிதத்தை
கறைப்படுத்துவதை நீ அறியாயோ?
இன்னும் உன்னிடம்
அன்பு எஞ்சியிருப்பின்
சாம்பலின் ஒவ்வொரு மூலக்கூறிலிருந்தும்
அவர்கள் தம்
புன்னகையுடன் உயிர்த்தெழ வேண்டும்!

முதல் மலர் ::
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Empty Re: அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே!

Post by ரேவதி Thu Nov 24, 2011 5:29 pm

முதல் கவிதை போல் இதுவும் எங்களை சோகத்தில் நிறைத்தது..உங்களின் இந்த கவிதையே அக்குழந்தைகளுக்கான சிறப்பு அஞ்சலிகள்தான்..
சிறப்பான வரிகள் அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Empty Re: அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே!

Post by உதயசுதா Thu Nov 24, 2011 5:36 pm

படிக்கும்போதே மனது கலங்கி விட்டது ஜீவினி.
அந்த விபத்தில் என் மாமனாரின் நண்பருடைய பேத்தியும் ஒருவர்.
விஷயத்தை கேள்விப்பட்டு அங்க போய் பார்த்துட்டு வந்து என் மாமனார் இரண்டு நாட்களாக எதுவுமே சாப்பிட தோணாது கலங்கி அவங்களுக்கு பிரஷர் கூடி மருத்துவமனைளா இருந்து திரும்பி வந்தார்.எதுக்குமே கலங்காத என் மாமனார் இந்த விஷயத்தில் கலங்கினார் என்றால் அந்த விபத்தின் கோரம் எத்தகையது என்று நான் உணர்ந்தபோது இருந்த வலிய இந்த கவிதை படிக்கும்போதும் உணர்ந்தேன்


அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Uஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Dஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Aஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Yஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Aஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Sஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Uஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Dஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Hஅஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Empty Re: அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே!

Post by அனந்தம் ஜீவ்னி Thu Nov 24, 2011 5:42 pm

ரேவதி wrote:முதல் கவிதை போல் இதுவும் எங்களை சோகத்தில் நிறைத்தது..உங்களின் இந்த கவிதையே அக்குழந்தைகளுக்கான சிறப்பு அஞ்சலிகள்தான்..
சிறப்பான வரிகள் அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 224747944
உதயசுதா wrote: படிக்கும்போதே மனது கலங்கி விட்டது ஜீவினி.
அந்த விபத்தில் என் மாமனாரின் நண்பருடைய பேத்தியும் ஒருவர்.
விஷயத்தை
கேள்விப்பட்டு அங்க போய் பார்த்துட்டு வந்து என் மாமனார் இரண்டு நாட்களாக
எதுவுமே சாப்பிட தோணாது கலங்கி அவங்களுக்கு பிரஷர் கூடி மருத்துவமனைளா
இருந்து திரும்பி வந்தார்.எதுக்குமே கலங்காத என் மாமனார் இந்த விஷயத்தில்
கலங்கினார் என்றால் அந்த விபத்தின் கோரம் எத்தகையது என்று நான் உணர்ந்தபோது
இருந்த வலிய இந்த கவிதை படிக்கும்போதும் உணர்ந்தேன்

அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Empty Re: அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Nov 24, 2011 9:54 pm

ஆனந்தம் அவர்களே அந்தத் தீயுண்ட மலர்களுக்கு எனது இந்தக் வெண்பாக்களைக் காணிக்கையாக அஞ்சலி செலுத்துகிறேன்.

பெற்றோர் மழலையரைப் பள்ளிக் கனுப்பினர்
கற்றே சிறப்புடன் கல்வியில் வேரூன்ற
சற்றும் அறியாமல் சட்டென வந்தவத்தீ
முற்றாய் அழித்ததே மூண்டு


அடுக்களையில் தீபிடித்து ஆர்ப்பரித்து வந்தே
இடுக்கடியில் உள்நுழைந்து ஈர்த்ததெலாம் பற்றி
தடுக்கினால் ஆனகூரை தாழ்ந்துபோய் வீழ்ந்து
கிடுக்கிப் பலியானார் காண்


அத்தனையும் பிஞ்சுகள் ஆர்வம் மிகுந்தவர்கள்
எத்தனை ஏழ்மையிலும் என்றும் சுறுசுறுப்பு
இத்தனையும் இங்கிருக்க இப்பள்ளிப் பேராளர்
மெத்தன மானார் முனைந்து?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Empty Re: அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே!

Post by அனந்தம் ஜீவ்னி Thu Nov 24, 2011 10:08 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:ஆனந்தம் அவர்களே அந்தத் தீயுண்ட மலர்களுக்கு எனது இந்தக் வெண்பாக்களைக் காணிக்கையாக அஞ்சலி செலுத்துகிறேன்.

பெற்றோர் மழலையரைப் பள்ளிக் கனுப்பினர்
கற்றே சிறப்புடன் கல்வியில் வேரூன்ற
சற்றும் அறியாமல் சட்டென வந்தவத்தீ
முற்றாய் அழித்ததே மூண்டு


அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 மிக எளிய வார்த்தைகளை கொண்டு ,பெரும்பாலும் தளை தட்டாமல் ,வெண்பாக்களை இயற்றிவிடுகிறீர் !....அருமை...
ஈகரை உங்களுக்கு" வெண்பாமணிப் புலவர்"அல்லது "வெண்பாமணிக் கவி " என்று பட்டம் கொடுத்தால் உகந்ததாய் இருக்கும் .எது உங்களுக்கு பிடித்திருக்கிறது ?எனக்கு பிடித்தது -"வெண்பாமணிக் கவி " ஆகவே அதையே உங்களுக்கு சூட்டி அழைக்கிறேன் ... வீர தீர ,வெண்பாமணிக் கவி,சுந்தரராஜ் தயாளன் ஐயா அவர்கள் நீடூழி வாழ்க !இன்னும் பல வெண்பாக்கள் தருக ! அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 678642 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550 அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! 154550
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே! Empty Re: அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum