Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு
+2
rudran
பிரசன்னா
6 posters
Page 1 of 3 • 1, 2, 3
வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு
விகடன் பதிப்பு - வீழ்வே னென்று நினைத் தாயோ?
http://www.4shared.com/document/4Dywn0m1/VilvenEndruNinaidhaiyo.html

- வீழ்வேனென்று நினைத் தாயோ? தொடர்-1
- வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர்-2
- வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர்-3
- வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர் -4
- வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர் -5
- வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர்-6
- வீழ்வேனென்று நினைத்தாயோ ? தொடர்-7
- வீழ்வேனென்று நினைத்தாயோ ? தொடர்-8
- வீழ்வேனென்று நினைத்தாயோ ? தொடர்-9
- வீழ்வேனென்று நினைத்தாயோ ? தொடர்-10
- வீழ்வேனென்று நினைத்தாயோ ? தொடர்-11
- வீழ்வேனென்று நினைத்தாயோ ? தொடர்-12
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு
நன்றி பிரசன்னா
rudran- பண்பாளர்
- பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009
Re: வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு
இது என்னவென்று சொல்லக் கூடாதா தளபதியாரே?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு
முள்ளி வாய்க்கால் சம்பவங்களை , ஈழத்தமிழரின் வாழ்வை .சி.மகேந்திரன் அவர்கள் நாவல் வடிவில் பதிவு செய்துள்ளவை . இது தொடராக ஆனந்த விகடனில் வந்ததுசார்லஸ் mc wrote:இது என்னவென்று சொல்லக் கூடாதா தளபதியாரே?
Re: வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு
நன்றி பாலா அவா்களே
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு
உயிரை விலையாகக் கொடுப்பது எளிதானதா என்ன?
இதற்கு இணை என எதுவுமே இல்லை. தன் சொந்த மண்ணைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று, வைராக்கியமாக அந்த மண்ணுக்குள்ளே கடைசிக் கணம் வரை போரிட்டு நின்று மூச்சை அடக்கி, உயிரை நிறுத்திக்கொள்கிறது மாவீரம்.
மண் மீதான உரிமைக்காக, உயிரையும் விலையாகக் கொடுப்பேன் என்பவர்களுக்கு மட்டுமே, இந்த மாவீரம் சாத்தியம்!
இதற்கு உலகில் எத்தனையோ முன் உதாரணங்கள் உண்டு என்றாலும், இந்த 21-ம் நூற்றாண்டில் மண்ணுக்காக உயிர்ஆயுதம் ஏந்திய வீரர் நிலம் முள்ளி வாய்க் கால் என்பதில் உடல் சிலிர்க்கிறது.
இலங்கையின் கடற்கரைக் கிராமங்களில் ஒன்றாக இருந்த முள்ளி வாய்க்கால், 2008- மே 17-க்குப் பின், ஒரு தனித்த வரலாறாக நிமிர்ந்து நிற்கிறது. அதன் புவியியல் இருப்பை அறிந்துகொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றும் ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள அந்த நிலம், மிகவும் எழில் நிறைந்தது.
கிளிநொச்சியில் இருந்து ஒருவர் முள்ளி வாய்க்கால் செல்ல வேண்டும் எனில், இதற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பரந்தன் சந்திக்கு முதலில் செல்ல வேண்டும். முல்லைத் தீவுக்கும் இந்த பரந்தன் சந்திக்கும் இடையில்நெடுஞ் சாலை ஒன்று உள்ளது. இந்த நெடுஞ்சாலைக்கு ஏ 35 என்று பெயர். பரந்தன் சந்தியில் தொடங்கி, முரசு மோட்டை, தரும புரம், விஸ்வமடு, மூங்கிலாறு, உடையார் கட்டு, புதுக் குடியிருப்பு என்று நீண்டு செல்லும் இந்தச் சாலையின் இரு மருங்கும் தொன்மையான பல ஊர்கள் உள்ளன. இதில் புதுக் குடியிருப்பு, முக்கியமான நகரம்.
புதுக் குடியிருப்பைத் தாண்டியவுடன், புது உலகம் ஒன்று தோற்றம் தரும். அழகிய நெய்தல் நிலம் அது. கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையும் இங்கே இருந்தே ஆரம்பமாகிறது. இன்று உலகமே அறிந்துவைத்துள்ள, மழைக் கால ஆறுகளின் நன்னீர்த் தொகுப்பான நந்திக் கடல் இங்கே தான் இருக்கிறது. நந்திக் கடல் ஒரு கடல் அல்ல. உப்பற்ற நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளும் காயல் அது. நத்தைகள் மிகுந்த கடல் என்பதால்தான், நந்திக் கடல் என்ப தாகவும் சிலர் விளக்கம் தருகிறார்கள். கடல் உப்பு நீரிலும், காயல் நன்னீரிலும் வாழ்ந்து பழகிய நத்தைகள், அளவில் பெரிதாகவும் எண்ணிக்கையில் அதிகமாக வும் காணப்படுகின்றன. ஆற்று நீரால் கொண்டுவரப்பட்ட வண்டல் மண் படிவு களைச் சுமந்து நிற்பவை காயல்கள். மாங்குரோஸ் என்னும் அலையாத்திக் காடுகள் வளர்வதற்குக் காயல்கள்தான் அடிப்படை.
நந்திக் கடலை இயற்கை வரைந்துவைத்த ஓவியம் என்பார்கள் ஈழத்துக் கவிஞர்கள். வானத்து நீலமும் கடல் நீலமும் சங்கமித்துக்கொள்ளும் புள்ளியில், பூமித் தாய் வளர்த்துவைத்துள்ள அரிய தாவர இனங்கள், உலகின் அபூர்வங்களில் ஒன்று. 8 கிலோ மீட்டர் நீளம், சில இடங்களில் 1 கிலோ மீட்டர் அகலம்கொண்டது நந்திக் கடல். சிறு குழந்தை ஒன்று, பேரலையைத் தன் சிறு கையால் தொட்டுப் பார்க்க முயற்சிப் பதுபோல நந்திக் கடல், பெருங்கடலைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுகிறது. இடையில் ஒரு நிலப் பகுதி இதைத் தடுத்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலப் பகுதியில்தான் முள்ளி வாய்க்கால் அமைந்து உள்ளது.
இந்தியப் பெருங்கடலுக்கும் நந்திக் கடலுக்கும் இடைப்பட்ட பரப்பு, பனை மரக் கூட்டத்தால் பந்தல் போடப்பட்டது. இந்த நிலப் பரப்பு 2 கிலோ மீட்டர் அகலம் இருக்கும். பனை ஓலையால் வேயப்பட்ட சிறு குடில்களே இங்கு அதிகம். பனைத் தொழிலையும் மீன்பிடித் தொழிலையும் தவிர, வேறு எதையும் அறிந்திராத மக்கள் இவர்கள். அயலார் யாருமே எதற்காகவும், வந்து போகாத பூமி என்பது இதன் சிறப்பு. வலையர் மடம், கரையான் முள்ளி வாய்க் கால், வெள்ளை முள்ளி வாய்க்கால் ஆகிய கடற்கரைக் கிராமங்கள் முள்ளி வாய்க்காலை ஒட்டி அமைந்தவை.
ஈழ மண்ணில் வன்னி, முல்லைத் தீவுப் பிரதேசங்கள் தனித்துவம் மிக்கவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால் வகை நிலங்களைக்கொண்டு, இவை மக்களின் வாழ்க்கைக்கான முழுத் தன்னிறைவையும் வழங்கியவை. ஆதி காலம் தொட்டே அந்தக் கிராமங்கள் உணவுக்காக அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலையில் இருந்தது இல்லை. பசியால் பிச்சை எடுப்பதைப் பார்ப்பதுகூட அங்கு அரிது. அந்த அளவுக்குப் பசி அறியாத மண் அது. இன்று எல்லாம் பழங்கதை. எதுவும் மிச்சம் இல்லை. அத்தனையும் அழிந்துகிடக்கின்றன. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, ஆலயங்கள் என்று எதையும் விட்டுவைக்கவில்லை இன வெறி சிங்கள ராணுவம்.
போர் உச்சகட்டம் அடைந்தபோது, மக்கள் கிளிநொச்சியில் இருந்து ராணுவத்தால் விரட்டப்பட்டார்கள். ஆண்டு முழுவதும் ஓடிக்கொண்டே இருந்தார்கள். கடைசியில் களைத்துப்போய், முள்ளி வாய்க்கால் வந்து விழுந்தார்கள். இடப் பெயர்வுக் காலங்களில் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு எல்லை உண்டா?
வீடுகள் முழுவதும் நெல் மூட்டைகள் அடுக்கிக்கிடக்க, அவன் குடும்பமே பதுங்கிப் பதுங்கி ஒருவேளை உணவுக்காகக் கையேந்தி நின்றது. அவன் வீட்டைச் சுற்றி தோட்டத்தில் பழுத்துக் கனிந்த, மா, பலா, கொய்யா, வாழை போன்றவற்றை, அணில் கூட்டமும் பறவைக் கூட்டமும் கொத்தியதில் சிந்தியவை சிதறிக்கிடக்க, அவன் வீட்டுப் பிள்ளைகள் தின்பதற்கு எதுவுமற்று ஏங்கிக்கிடந்தார்கள். கடந்த ஓர் ஆண்டில் அவர்கள் வாழ்ந்தது மனித வாழ்க்கை அல்ல.
பல மாதங்கள் பசியால் துடித்தவர்கள், கடைசியில் உயிரையும் துடிதுடித்து இழந்ததுதான் மிச்சம். எந்தக் கறையும் படியாத முள்ளி வாய்க்கால் மண்ணில், மானுடத்தின் ரத்தக் கறை படிந்துவிட்டது. அன்னை மடியில் சுமக்கவைத்தே, அவள் பெற்ற பிள்ளைகள் கொல்லப்பட்டனர். இலங்கையின் இன வெறி அரசு, குண்டுகள் போட்டுத் துடிக்கத் துடிக்கக் கொன்று முடித்தது. இவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல. தேவையான ஆயுதங்களைக் கொடுத்து இந்தியா செய்ததும் பெரும் குற்றம். 'முள்ளி வாய்க்கால் வந்து சேருங்கள், அனைவரையும் காப்பாற்றுகிறோம்’ என்று வாக்குறுதி தந்தன வல்லரசுகள். கடைசி நேரத்தில், பிறருக்குத் தெரியாமல் ஈரத் துணியைப் போட்டு, கழுத்தை அறுத்து முடித்துவிட்டது இலங்கை அரசு. அதற்கு திரை கட்டிப் பாதுகாப்பைத் தந்தவைதான் இந்த வல்லரசுகள். வஞ்சகம், துரோகம், காட்டிக்கொடுத்தல் என்று எந்தப் பாதகம்தான், அந்த மண்ணில் நடக்கவில்லை? இன்று எல்லாம் முடிந்த நிலை.
உலக வரலாற்றில் மானுடத்தின் ரத்தம் பெருக்கெடுத்து வழிந்தோடிய நிலப் பகுதி கள் எத்தனையோ உண்டு. ஆனாலும், முள்ளி வாய்க்காலில் நடைபெற்றதைப்போல உலகில் வேறு எங்கும் கொடுமைகள் நடந்து இருக்குமா? பூமி பிளந்து பூகம்பம் வராதா? கடல் கோபம்கொண்டு, இந்தக் கயவர்களுக்குத் தண்டனை தராதா என்ற அளவுக்கு அங்கு கொடுமைகள் நடந்தன.
வரலாற்றுக் காலம் தொட்டு நெஞ்சில் வளர்த்துவைத்திருந்த பகைத் தீயைப் பயன்படுத்தி, அனைத்தையும் எரித்து முடித்துவிட்டது இனப் பகை. எரித்து முடித்ததோடு எல்லாமும் முடிந்துவிட்டது என்று, முன்னரே கணக்கும் போட்டுவைத்து இருந்தனர்.
கொலை செய்து முடிப்பதற்குத் தேவையான எச்சரிக்கை வளையங்கள் முதலில் அமைக்கப்பட்டன. பின்னர், மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன. இலங்கை அரசுக்கு ஆதரவான ஊடகங்கள்கூட நுழைவதற்கு அங்கு அனுமதி இல்லை. அனைத்தும் ரகசியமாகவே நடந்தன. செய்யும் கொடுமைகள் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்று மிகுந்த எச்சரிக்கையோடு சாட்சிகள் எதுவுமே இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.
கடல் அன்னையைவிட, பூமித் தாயைவிட சாட்சி வேறு உண்டா? யாருக்குமே தெரியாமல் நந்திக் கடல் கொந்தளித்து அலை எழுப்பியது. முள்ளி வாய்க்கால் மண்ணில் புதை குழிகள் அதிர்ந்து வெடித்தன.
ரத்தச் சிவப்பேறிய ஆயிரமாயிரம் கண்களுடன் உலகத்தை இன்று அண்ணாந்து பார்க்கிறது முள்ளி வாய்க்கால். அதன் கோபக் கனல் அகிலத்தையே திடுக்கிடவைத்துவிட்டது. மாபெரும் மரணத்துக்குப் பின் இது பெற்றெடுத்த ஜனனம், உண்மைகளாய் உயிர் பெற்று விண்ணில் எழுந்துவிட்டன. இருள் கவிந்த வான் பரப்பெங்கும் இந்த உண்மைகள், நட்சத்திரங்கள்போல சுடர்விட்டு நிற்கின்றன. வஞ்சிக்கப்பட்ட தனக்கான நீதியைக் கேட்க, சிறகுகளை விரித்துத் தேசங்கள் தோறும் பறந்து செல்கின்றன. இணையதளங்கள் அனைத்திலும் தலை காட்டி, நியாயம் கேட்டு நிற்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட நீதி பேசும் அனைவரும் இன்று தலை குனிந்து நிற்கிறார்கள்.
மக்கள் தொகையின் ஒரு பெரும் பகுதி இணையதளங்களில் மட்டுமே வசித்துவரும் காலம் இது. கணினிப் பெட்டிகளில் தலைகாட்டி நிற்கும் இந்த வஞ்சிக்கப்பட்ட மானுடம் எது என்று பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. முள்ளி வாய்க்காலில் மக்கள் கூட்டம் திரண்டு, அங்கு நுழைந்துவிட்டது. தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிகள், அச்சு ஊடகங்கள் என்று எதையும் முள்ளி வாய்க்கால் மனிதர் கள் விட்டுவைக்கவில்லை. தன் வீடே தன் உலகம் என்று தனித் தனி அறைகளில் வாழும் நிம்மதி மனிதர்களால், இனிமேல் நிம்மதியோடு தூங்க முடியாது. எது வரை தெரியுமா? முள்ளி வாய்க்கால் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை!
ஆனால், இலங்கையின் இன வெறி அரசு, ஒன்றுமே நடக்கவில்லை என்று மாய வேடம் அணிந்து நிற்கிறது. அனைத்தையும் மறப்போம். மன்னிப்போம் என்று வசனம் வேறு பேசுகிறது.
எதை மறைப்பது?
யாரை மன்னிப்பது?

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு
வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர்-2
அது ஒரு முள்வேலி முகாம். கவச வாகனங்களும் ஹெலிகாப்டர்களும் முகாமைச் சுற்றி, வானத்திலும் பூமியிலும் வளையமிட்டு உறுமிக்கொண்டு இருக்கின்றன. காட்டு மரம், செடி, கொடிகளின் நிறங்கள், இந்த இயந்திர உறுமல்களின் உடலில் வரையப்பட்டுள்ளன. அச்சமும் அதிர்ச்சியும் தரக் கூடிய, இன்றையஉலகில் பெரும் எண்ணிக்கையிலான மக்களை அடைத்துவைக்கும் கொட்டிலான மெனிக்ஃபார்ம் இவ்வாறாகத்தான் தோற்றம் தருகிறது. என்னதான் இலங்கைஅரசு மூடி மறைத்துவைக்க முயற்சி செய்தாலும், இது இன அழிப்பை மறைவிடத் தந்திரமாகக்கொண்ட சித்ரவதை முகாம் என்பதை இன்று உலகம் அறியும்.
அடர்ந்த காடு ஒன்றின்மையப் பகுதியைத்தான் தேர்வு செய்து இருக்கிறார்கள். மரங்கள் வெட்டப் பட்டு, அவசர கதியில் அமைக்கப் பட்டமுகாம். இலங்கைத் தீவின் வடக்குப் பகுதியில், தலைநகர் கொழும்பில் இருந்து 250 கி.மீ. தூரம்… வவுனியாவில் இருந்து 35 கி.மீ. தொலைவு. மொத்தம் 13 பகுதிகளில் முகாம்கள் அமைத்து, முள்ளி வாய்க்கால் பேரழிவில் சிக்கிச் சிதைந்த மக்களுக்கு, இடைக் காலத்தில் தங்கும் வசதியை உருவாக்கித் தர வேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின்அகதி கள் மற்றும் மறுவாழ்வுத் துறை வழிகாட்டி இருந்தது. ஆனால், இலங்கை அரசு, தந்திரமாக 5 முகாம்களை மட்டுமே அமைத்தது. இதுவும் இன அழிப்புக்கான மிக மோசமான தந்திரம்!
முகாமின் பரப்பளவு 0.8 சதுர கி.மீ. யாழ்ப்பாணத்தில், ஒரு சதுர கி.மீ-க்கு 2,000 மக்கள் வசிக் கிறார்கள். மக்கள் நெருக்கம் மிகுந்த தலைநகர் கொழும்பில், சராசரி யாக ஒவ்வொரு கி.மீ-க்கும் 14,000 மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், ஒரு கி.மீ-க்கும் குறைவான பரப்பளவைக்கொண்ட மெனிக் ஃபார்ம் முகாமில் 2,84,000 மக்கள் அடைத்துவைக்கப்பட்டு உள்ள னர். இது சர்வதேச விதிமுறைகள் அனைத்தையும் நிராகரிக்கும் பாசிச நடைமுறை.
முகாமின் ஐந்து பகுதிகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்று இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித் தனியான முள்வேலி அடுக்குகள். ராணுவ வீரர்களின் 24 மணி நேரக் கண்காணிப்பு. நவீனத் தொழில்நுட்பங்கள் அனைத்தும்கொண்டு, உருவாக்கப்பட்டு இருக்கிறது. யாரும் தப்பித்துவிடக் கூடாது என்பதைவிட, நடப்பது எதுவுமே வெளி உலகுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் அமைக்கப்பட்ட முகாம் கள். தங்கும் கூடாரங்களைப் பொறுத்தவரை, மாட்டுக் கொட்டில்களைப்போன்ற, மனிதக் கொட்டடிகள் என்றே கூற வேண்டும். குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, குளியல் அறை வசதி, தொற்றுநோய்கள் பரவாமல் இருக்கும் சுற்றுப்புறச் சுகாதார வசதி என்று சகல மனித உரிமைகளும் மறுக்கப்பட்ட முகாம்கள்.
போர் நடந்த பெருந் துயரை மார்பில் சுமந்த பெண்ணின் மனத் துயர் ஆழத்தை, இதுவரை யாருமே கண்டு அறிந்தது இல்லை. இதிகாசங்களி லும் காப்பியங்களிலும் தேங்கி நின்று, இவை இன்று வரை நம்மை அதிர வைத்துக்கொண்டு இருக்கி றது. கணவனை இழந்த மகளிரின் விரக்தி, பெரும் மூச்சால் வெந்து வெந்து தணியும் வெப்ப மண்டல மாகிக்கொண்டு இருக்கி றது மெனிக்ஃபார்ம் சித்ர வதை முகாம். இன்று போர் நடந்துமுடிந்து உள்ள இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும், 1,20,000 இளம் தமிழ் விதவைகள் இருப்பதாகக் கூறப்படுகி றது. இதில் உடல் ஊனமுற்றவர்கள் 30,000 பேர்.
பெண் ஒருத்தியின் கதை ஒன்று நம்மை வந்து அடைகிறது. வானில் இருந்து விழுந் தும் பூமியில் இருந்து வெடித்தும் சிதறிய குண்டுகள் எழுப்பிய புகைப் போர்வையில் அவள் கணவன் காணாமல் போய்விட்டான். கையில் மிச்சமாகக் குழந்தை மட்டும்தான் இருக்கிறது. ஓர் ஆண் குழந்தை. உயிர் பிழைக்க, பெருங்கூட்டம் ஒன்று ஓடிக்கொண்டு இருக்கிறது. கூட்டத்தோடு கூட்டமாக நகர்கிறாள். சிதறிய உடல்கள், உயிர் பிரிந் தும் பிரியாமலும் அரற்றிக்கிடக்கும் அவலங்கள் என்று அவள் காலடி எடுத்து வைத்த இடங்களில் கண்ட கொடுங்காட்சி களால், அவளுக்கு எந்தவிதமான பதற்றமும் ஏற்படவில்லை. அவளது உணர்வுகள் அனைத்தும் மரத்துப்போய்விட்டன. தோளில் குழந்தையைச் சுமந்துகொண்டு, கைப்பை ஒன்றுடன், ஓர் இயந்திரத்தைப் போல அவள் நடக்கத்தொடங்கிவிடுகிறாள்.
முள்ளி வாய்க்காலில் இருந்து 8 கி.மீ. நடந்திருக்க வேண்டும். அங்குதான் ராணுவத் தின் சோதனைக் கூடம். அருவருப்பு மிகுந்த பரிசோதனை. பெண் பிள்ளைகள் அவமானத் தால், கூசிக் குறுகிப் போய்விடுகிறார்கள். அவள் பஸ் ஒன்றில் ராணுவத்தால் ஏற்றி அனுப்பிவைக்கப்படுகிறாள். மெனிக் ஃபார்ம் முகாம், அங்கு இருந்து 120 கி.மீ. தூரத்தில் உள்ளது. முகாம் வந்து சேருகி றாள். குழந்தையை அணைத்த படி முகாமைச் சுற்றி அவளது கண்கள் வட்டமிட்டுப் பார்க் கின்றன. வட்ட வட்டமாகச் சுற்றப்பட்ட முள் கம்பிகள், மாலை நேர வெயில் பளிச் சிட்டு மின்னுகின்றன. குத்திக் கிழிப்பதைப்போன்ற அதன் முள் கம்பிகள், அவளது உடலை நடுங்கவைத்துவிடுகிறது. இயந்திரத் துப்பாக்கிகளைக் கையில்வைத்து உள்ள ராணுவக்காரர்கள்,அவளது கண்களுக்கு முள் கம்பிகளைவிட குரூர மாகத் தெரிகிறார்கள். ராணுவக்காரன் ஒருவனின் வெறி மிகுந்த பார்வையில் அவளது உடல் நடுக்கம் மேலும் கூடுதல் ஆகிறது.
கூடாரங்கள் ஒவ்வொன்றிலும் 10 அல்லது 12 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். முதல் மூன்று நாட்கள் குடிப்ப தற்குத் தண்ணீர் மட்டுமே முகாமில்கிடைத் தது. குழந்தை மட்டும்தான் அவளுக்கான ஒரே ஊக்க சக்தி. அதன் உயிரை அவள் எப்படியும் காப்பாற்றி ஆக வேண்டும். உயிரைப் பாதுகாத்து வருவதைப்போலவே கைப் பையையும் பாதுகாத்து வருகிறாள். அதில்தான், குழந்தைக்கான பால் பவுடர் மாவு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பால் பவுடர் மாவை, கொஞ்சமாக எடுத்துக் கரைத்து குழந்தையின் பசிக்கு ஊட்டுகிறாள். கவனமாக மீண்டும் அதைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கிறாள். தன்னுடைய உணவைப்பற்றி அவள் அக்கறைகொள்வது இல்லை. மூன்று நாட்களுக்குப் பின், உணவுப் பொட்டலங்கள் முகாமில் கொடுக்கப்படுகின்றன. நெடுநாள் பட்டினியால் வாடிய மக்கள், முதல் உணவுப் பொட்டலத்தைப் பார்த்த உடன், முட்டி மோதிக் கூட்டமாக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

லாரியில் இருந்து உணவுப் பொட்டலங்களை சிங்கள சிப்பாய் ஒருவன் வீசிஎறிந்து கொண்டு இருக்கிறான். முகாம்வாசிகள் முயற்சிசெய்து கைகளால் பிடித்துக்கொள் கிறார்கள். சிலர் முகத்தில் மோதி, பொட்டலம் கிழிந்து, சோற்றுப் பருக்கைகள் சிதறி மண்ணில் விழுகின்றன. முகத்தில் ஒட்டிய சோற்றுப் பருக்கைகளைத் துடைத்துக்கொள்ளும்போது, அவமானத்தால் சம்பந்தப்பட்டவரின் முகம் சிவந்துவிடுகிறது.
பொட்டலத்தை வீசிய சிப்பாய் ஓரக் கண்ணால் பார்த்து, ஏளனத்துடன்ரசித்துக் கொள்கிறான். ஒரு பிணம் தின்னிக் கழுகைப் போல, இந்த அவமானம் கொத்திக் கிளற, இதைத் தூரத்தில் இருந்து கவனித்த முகாம் வாசிகளில் ஒருவர், ‘இந்தக் கொடுமைகளை நேரில் பார்ப்பதைவிட, முள்ளி வாய்க்கால் அக்னியில் சாம்பலாகி இருக்கக் கூடாதா?’ என்று வேதனைப்பட்டுக்கொள்கிறார்.
அந்தப் பெண் அனைத்தையும் எதிர்கொண்டாள். இயல்பாகவே அவளிடம் அமைந்த மன உறுதி அவளை அத்தனை இக்கட்டுகளிலும் பாதுகாத்து வந்தது. இந்த முகாம் வாழ்க்கைக்கு அவள் தன்னைப் பழக்கிக்கொண்டு இருந்த நேரத்தில்தான், அந்தப் பெரும் வேதனை அவளுக்கு நேர்ந்தது.
அந்தப் பெண்ணின் கைக்குழந்தைக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு. குழந்தை வாடித் துவண்டுபோனான். கடந்த ஒன்பது மாதங்களாக, சத்தான உணவு எதுவும் குழந்தைக்கு அவளால் கொடுக்க முடிய வில்லை. குழந்தை, எலும்பும் தோலுமாகத் தான் இருந்தான். நைந்த உடலால் வயிற்றுப்போக்கை எதிர்கொள்ள முடியவில்லை. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லலாம் என்று முயற்சி செய்து பார்த்தாள். மருத்துவ மனையில் எந்தப் பயனும் கிடைக்காது என்று முகாம் வாசிகள் கூறியது அவளுக் குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துவிட்டது. உண்மையில் சொல்லப்போனால், அங்கு உள்ள மருத்துவமனைகள் மருத்துவமனை களாகவே இல்லை.
கருணையையும் ஆறுதலையும் வழங்க வேண்டிய அவை, மனிதவதைக் கூடங்களாகவே செயல்பட்டன. ராணுவத்தின் கொடுமைகளைவிட, இங்கு நடைபெறும் கொடுமைகள் மக்கள் உணர்வுகளை வெகு வாகப் பாதித்து, மனதில் ரத்தக் கசிவை ஏற்படுத்தின.
முகாமின் பெருங்கூட்டத்தை மருத்துவமனை ஊழியர்களால் சமாளிக்க முடியவில்லை என்றாலும், முகாம்வாசிகளின் வேதனை எல்லாம், தாங்கள் இத்தனை கேவலமாக நடத்தப்படுகிறோமே என்பதில் இருந்தது. குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என்று தரம் பிரித்துப் பார்த்து, ஆறுதல் அளிக்கும் மனிதநேயக்கண்ணோட் டம் மருத்துவமனைகளில் இல்லை.
தமிழ் மக்கள் அனைவருமே பயங்கர வாதிகள். பயங்கரவாதிகளுக்கு மரணம்தான் தண்டனை என்றும் அதை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்களாக அவர்கள் காணப்பட்டார்கள். ராணுவத்தினர் தங்கள் தோள்களில் இயந்திரத் துப்பாக்கிகளைச் சுமந்து திரிந்தைப்போலவே மருத் துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என்று அனைவரின் மனங்களும், தனித்தனியாக ஓர் இயந்திரத் துப்பாக்கியைச் சுமந்து திரிந்துகொண்டு இருந்தன. அவர்களிடம் அமைந்த இன வெறுப்பின் ஆழம் எத்தகையது என்பதை மகப்பேறு பகுதிகளுக்குச் சென்றால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
மரண பயமும் அச்சமும் நிறைந்த மெனிக் ஃபார்ம் முகாமில் குறிப்பிடத்தக்க மற்றொன்றும் நிகழ்ந்துகொண்டு இருந்தது. இதற்காக அந்த மக்கள், மகிழ்ச்சி அடைந்தார்களா? அல்லது வேதனைப்பட்டார்களா? என்பது நமக்குத் தெரியவில்லை.
இங்கு மாதம் ஒன்றுக்கு 400 குழந்தைகள் பிறந்தன. பிரசவம் மறுபிறப்புக்கு ஒப்பாகக் கூறப்படுகிறது. குழந்தை ஒன்றைப் பெற்று எடுக்கும்போது, எந்த ஒரு பெண்ணுக்கும் தாயின் அரவணைப்பு தேவைப்படுகிறது. செவிலியரின் ஆறுதல் மொழி, சில நேரங் களில் இந்தத் தாய்ப் பாசத்துக்கு ஈடாக அமைந்துவிடுகிறது. ஆனால், முகாம் மருத் துவமனைகள் முற்றிலும் மாறுபட்டவை.
பிரசவம் ஒருபுறம், மறுபுறத்தில் இறுகிய முகத்துடன் வெறுப்பை உமிழ்ந்து கொண்டே புரியாத மொழியில் வேண்டா வெறுப்புடன் மகப்பேறு செய்தலை, பிரசவ வலியால் துடிக்கும் எந்தத் தாயாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. தன்னை அநாதையாக்கிவிட்ட, ஆறுதல் அற்ற உலகில் வக்கான மருந்துகளும் மருத்துவ உதவிகளும் இல்லாமல், அந்தத் தமிழ்ப் பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் போராட்டத்தை நடத்திப் பார்க்கிறார்கள். அனைத்து வேதனைகளை யும் ஓர் அழுகுரலுக்காகப் பொறுத்துக்கொள்கிறார்கள். இதைத் தவிர, அவர் களுக்கு எதிர்கால ஆறுதல் வேறு என்ன இருக்க முடியும்?
குழந்தையின் வயிற்றுப்போக்கு நிற்கவில்லை. அந்த இளம் பெண்ணால் என்ன செய்ய முடியும்? எத்தனையோ வேதனைகளைச் சந்தித்துவிட்ட அவளால், இந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்படியும் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிவிட முடிவு எடுக்கிறாள். ராணுவத்திடம் கெஞ்சிக் கதறி அவர்களின் உதவியைப் பெற்றுவிட முயற்சி செய்கிறாள். ராணுவ அதிகாரி ஒருவர் ஆலோசனையும் வழங்கினார்.
குழந்தையை ராணுவத்திடம் ஒப்படைத் தால், மருத்துவச் சிகிச்சை அளித்து மீண்டும் குழந்தையை அவளிடமே ஒப்படைத்துவிடுகிறோம் என்பதுதான் அந்த ஆலோசனை. இதனை ஏற்றுக்கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது கிடைத்த மற்றொரு தகவல், அவளைப் பெரிதும் திடுக்கிட வைத்துவிட்டது. அச்ச உணர்வு அவள் உடல் முழுவதும் பரவிக்கொண்டது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வீழ்வேனென்று நினைத்தாயோ? - விகடன் பதிப்பு
வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர்-3
கடத்தப்பட்ட தலைமுறை (Stolen Generation) என்னும் சொல், மனதுக்குப் பேரதிர்ச்சியைத் தருகிறது. ஆஸ்திரேலியச் சமூகத்தின் மன ஆழத்தில் மறைந்து நின்று, இன்று வரை குற்ற உணர்வில் துடிக்கவைக்கும் சொல் இது. தாயிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட குழந்தைகளின் அலறல் சத்தமும், களவாடிச் செல்லப்பட்ட குழந்தையின் பிரிவுத் துயர் சுமந்த தாய்மையின் சுட்டெரிக்கும் வெப்பமும், இந்தச் சொற்கள் வழியாக காலப் பெரு வெளியில் வந்து சேர்ந்து, இன்னமும் அனல் குறையாமல் இருக்கின்றன.
அபார்ஜினிஸ், ஆஸ்திரேலியத் தொல்குடிகளின் மூத்த இனம். 25,000 ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுஉள்ளது இது. ஆஸ்திரேலியக் கண்டத்துடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத பிரிட்டிஷார், 300 ஆண்டுகளுக்கு முன் கொடும் குற்றம் புரிந்த ஆங்கிலேயக் கைதிகளைக் கொண்டுவந்து சேர்க்கும் திறந்த வெளிச் சிறைச்சாலையாகவே ஆஸ்திரேலியாவை மாற்றிக்கொண்டனர். குற்றப் பின்னணியையும் கொலை வெறியையும்கொண்ட ஆங்கிலேயர், தலைமுறை தலைமுறையாக அபார்ஜினிஸ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளை வரலாறு நெடுகிலும் சொற்களால் அழுதாலும் தீராது.
அபார்ஜினிஸ் மக்களின் கூட்டு வாழ்க்கை, பல்வேறு மேன்மைகளைக் கொண்டது. உண்ணுவது முதல் நீர் நிலைகளுக்குச் சென்று நீர் அருந்துவது வரை அனைவரும் ஆடிப் பாடி, கூட்டமாகக் கொண்டாடுவதுதான் வழக்கம். இதைக் கவனித்து வைத்திருந்த ஆங்கிலேயர்களின் கொடிய மனம், இந்தக் கூட்டு வாழ்க்கையைவைத்தே அவர்கள் அனைவரையும் கூட்டமாகக் கொலை செய்யும் திட்டத்தை வகுத்துக்கொண்டது. இதற்காக இவர்கள் உருவாக்கிய வஞ்சகச் செயல், எந்தக் காலத்திலும் மன்னிக்கக்கூடியது அல்ல. நீர் நிலைகளில் கொடிய விஷத்தைக் கலந்துவைத்தார்கள். கபடம் எதுவுமே தெரியாத இந்த மக்கள் கூட்டம், நீர் அருந்திய இடத்திலேயே கூட்டம் கூட்டமாகச் செத்துக்கிடந்தார்கள். இந்தப் பூர்வகுடிகளை மதுப் பழக்கத்துக்கு அடிமையாக்கும் தந்திரம் பின்னர் உருவாக்கப்பட்டது.
ஆங்கிலேயரின் பழக்கவழக்கங்கள் எதனையும் பார்த்து அறியாத இந்த மக்களுக்கு, இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ரம் போன்ற மது வகைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இலவசங்களுக்கு அடிமை யான இந்த மக்கள், இன்னும் சில நாட் களில் மதுவில் விஷம் கலந்து தாங்கள் கொல்லப்படப் போகிறோம் என்பதை அறியவில்லை. கொடிய விஷம்வைத்துத்தான் தங்கள் கொல்லப்பட்டோம் என்ற உண்மைகூடத் தெரியாமலேயே, அந்த மக்கள் செத்துப்போனார்கள். 1870-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆங்கிலேயர் எடுத்த கணக்கின்படி அபார்ஜினிஸ் மக்களின் எண்ணிக்கை 3 லட்சம். 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசாங்கம் வெளி யிட்ட மக்கள் தொகைக் கணக்கில், அபார் ஜினிஸ் மக்கள் 2 லட்சமாக இருக்கிறார் கள். அந்தப் பூர்வகுடி இனப் பெருக்கம் அடையாமல் இருக்க, எந்தக் கொடிய செயலையும் செய்யத் தயாராக இருந்தது ஆஸ்திரேலியாவின் நாகரிக சமூகம்.
ஓர் இனத்தை அழித்து, அந்த மண்ணில், தன் அதிகாரத்தை நிறுவிக்கொள்ள விரும்பும் யாரும் குழந்தைகளைக் கொலை செய்வதில் இருந்தே, தங்கள் அழிவுப் பணிகளைத் தொடங்கிவிடுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் அபார்ஜினிஸ் இனத்தை அழிக்க நினைத்த ஆங்கிலேயருக்குக் குழந்தைகளைக் கொல்வது பாவச் செயல் என்ற உணர்வு ஏற்பட்டு இருக்க வேண்டும். இதற்காக வேறு ஒரு தந்திரச் செயலை உருவாக்கிக்கொண்டார்கள். மழலைக் கொலையைவிட, இது அபாயம் நிறைந்த மனக் கொலையாகத் தெரிகிறது. இந்தக் கொடிய செயல்தான், தலைமுறைக் கடத்தல் என்று அழைக்கப்படுகிறது. இயற்கையோடு மற்றும் ஓர் இயற்கையாக வாழ்ந்து வந்த, அபார்ஜினிஸ் தாய்மார்களிடம் இருந்து அவர்களது குழந்தைகளைப் பிரித்து, கடத்திச் செல்லும் மாபாதகச் செயலை இதன் மூலம் தொடங்கிவைத்தார்கள். இதற்கு ஆங்கிலேயர் கூறிய சமாதானம் மிகவும் வேடிக்கையானது. அடுத்த தலைமுறையை நாகரிகப்படுத்தும் செயல் இது என்று கூறிக்கொண்டார்கள். பெற்ற தாயிடம் இருந்து உயிரைப் பறிப்பதைப்போல, குழந்தைகளைப் பறித்து எடுப்பதுதான் நாகரிகமா?
இந்தக் கொடிய செயலுக்கு ஆங்கிலேயரின் ஆஸ்திரேலிய அரசாங்கம் 1869-ம் ஆண்டு, தனிச் சட்டம் இயற்றிக்கொண்டது. இதில் இன்னொரு வேதனை என்னவென்றால், இந்தச் சட்டம், 1969 வரை ஆஸ்திரேலிய மண்ணில் அமலில் இருந்தது. உலக அளவில் பெரிய போராட்டங்கள் மனித உரிமை அமைப்புகளால் நடத்தப்பட்டன. ஆஸ்திரேலியாவில் உள்ள சில அரசியல் கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன் வைத்த பின்னர்தான், அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. 2008-ம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒன்றில், ஆஸ்திரேலியாவின் பிரதமர் கெவின் ரூட் இந்தத் தலைமுறைக் கடத்தலுக்கான தலைமுறை மன்னிப்பைக் கேட்டுக்கொண்டார்.
குழந்தைகளை அழிப்பதன் மூலம் உலகில், பல இனங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. தலைமுறைக் கடத்தல் மூலம் அபார்ஜினிஸ் இன அழிப்புக்கு, சதி வகுக்கப்பட்டதைப்போலவே, யூத இனத்தை முற்றாக அழிக்க நினைத்த ஹிட்லர், யூதக் குழந்தைகளைக் கொலை செய்யும் திட்டத்தை உருவாக்கினான். ஹிட்லர் கொன்று முடித்த யூதக் குழந்தைகளின் எண்ணிக்கை 10 லட்சம். மெனிக் ஃபார்ம் முகாமிலும் இதனைப்போன்ற, குழந்தைகளை அழிக்கும் சதித் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது என்ற செய்தி, முகாமில் காட்டுத் தீயைப்போலப் பரவத் தொடங்கியது. ஈழ மக்கள் படிப்பாளிகள், எதிர்காலத்தை எளிதில் ஊகித்துக்கொள்ளும் திறன் கொண்டவர்கள். இவர்களுக்கு முகாமில் கூறப்பட்ட சில விதிமுறைகள், சந்தேகத்தைத் தோற்றுவித்தது. நோயுற்ற குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால், தாயிடம் இருந்து தனியே பிரித்து எடுத்துச் சென்றுதான், சிகிச்சை அளிக்க முடியும் என்று முகாம் அதிகாரிகள் கூறினார்கள். இதற்கு சொல்லப்பட்ட காரணம், நம்பக் கூடியதாக இல்லை. ”தொற்றுநோய் தாய்க்கும் பரவிவிடும் அபாயத்தால்தான் இந்த உத்தரவு” என்று தாய்மார்களைச் சமாதானப் படுத்தினார்கள். ஈழத் தாய்மார்களைப்பற்றி இந்த அக்கறை திடீர் என்று இலங்கை ஆட்சியாளர்களுக்கு எங்கு இருந்து வந்தது? இது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. குழந்தைகளை அழிப் பதன் மூலம் தமிழ் இனத்தை அழிக்கும் நடவடிக்கைதானோ என்னும் மனச் சந்தேகம் அவர்களிடம் உறுதி பெற்றுவிட்டது. எச்சரிக்கை அடையத் தொடங்கிவிட்டார்கள். செவி வழியாகப் பல தகவல்கள், இளம் அன்னையரிடம் வந்து சேர்கின்றன. அனைத்தும் குழந்தைகளைக் கொன்று முடிக்கும் திட்டங்களாகவே தெரிகின்றன. முகாம் பெரிதும் பதற்றம் அடைகிறது. ஒவ்வொருவரும் தங்கள் குழந்தையைக் காப்பாற்றும் முயற்சி குறித்து, யோசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். வயிற்றுப்போக்கால் மகனின் உடல்நிலை மோசம் அடைந்து வரும் சூழலால், அந்தப் பெண்ணுக்குப் பரபரப்பும் பதற்றமும் ஏற்படுகிறது. இருந்த நம்பிக்கையையும் அவள் இழந்துவிடுகிறாள். ஆனால், மின்னல் கீற்றுப்போல ஒரு நம்பிக்கை மனதில் தோன்றுகிறது. வாடி, வதங்கிய குழந்தையைத் தோளில் தூக்கிப்போட்டுக்கொள்கிறாள். குழந்தையைக் காப்பாற்ற ஏதாவது வழி கிடைக்கிறதா என்று ஆராய்கிறாள்.
அனல் வீசும் பகல் பொழுதில் குழந்தை களைத் தோளில் சுமந்த இளம் பெண்கள், அமைதியற்று அலைந்துகொண்டு இருக் கிறார்கள். கால் இழந்து காயம் ஆறாத குழந்தைகள் ரணமான முகத்திலும், உடலிலும் எரிச்சல் கண்டு கத்திக் கத்திச் சோர்ந்துபோன குழந்தைகள், ஜுரத்தால் தலைக் கொதிப்பு எடுக்க, முனகலை மட்டும் வெளிப்படுத்தும் குழந்தைகள் என்று எத்தனை துயரம் தோய்ந்த உலகம் அது. இதே நேரத்தில் முள் கம்பிகளுக்கு வெளியே ஒரு கூட்டம் பதற்றம்கொண்டு நிற்கிறது. இவர்கள் போர் நடக்காத பகுதியில் வாழ்ந்த, இன்றைய முள்வேலி முகாம்வாசிகளின் உறவினர்கள். தங்கள் தாய், தந்தை, அண்ணன், தம்பி என்று யார் இறந்துவிட்டார்கள்? யார் உயிருடன் இருக்கிறார்கள்? யார் காயப்பட்டுக் கிடக் கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இயலாது, பல மாதங்கள் நிம்மதி அற்று வாழ்ந்தவர்கள். முள்வேலிக்குள் இருப் பவர்களின் பெயர் சொல்லி, உறவு சொல்லி, முகவரி கொடுத்து, தங்கள் அடையாள அட்டை முதல் அனைத்தையும் காட்டித் தான் யாரையும் அங்கு பார்க்க முடியும். கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்புக் கோபுரங்களில் இருந்து ஒளிந்து பார்க்கும் கண்கள், இயந்திரத் துப்பாக்கிகளைக் கையில் பிடித்தபடி நிற்கும் உலகம் அறியா, ராணுவ விடலைகள், அடித் தொண்டையால் சிங்களம் பேசி, தமிழ் மக்களை அவமானப் படுத்திவிட்டதாக நிம்மதிப்பட்டுக் கொள்ளும் அதிகார ஆணவங்கள், அனைத்தையும் அவர்கள் கடந்து செல்ல வேண்டும்.
கையில் செல்பேசி, கேமரா எதையும் தங்கள் உறவுகளைச் சந்திக்கும்போது எடுத்துச் செல்லக் கூடாது. விலை மதிப்புள்ள இந்தப் பொருட்களை யாரிடம் பாதுகாப் பாக ஒப்படைத்துச் செல்வது என்பதைப்பற்றியும் கவலைகொள்ள வேண்டியது இல்லை. முகாம் அமைக்கும் பணிகள் ஆரம்பமானபோதே, சிங்கள மக்கள் தங்கள் வியாபாரக் கடைகளையும் அங்கு தொடங்கிவிட்டார்கள். ஒரு மணி நேரம் செல்போனைப் பாதுகாக்க 50, கேமராவுக்கு 100 என்று கட்டணப் பட்டியல் தயாரித்து, அங்கு வியாபாரம் மும்முரமாக நடக்கத் தொடங்கிவிட்டது. இந்த வியாபாரிகள் யார்? இவர்களுக்கு இந்தச் சலுகை எப்படிக் கிடைத்தது? இவர்கள் உள்ளே துப்பாக்கி ஏந்தி இலங்கை தேசத்துக்குப் பாதுகாப்பை வழங்கிக்கொண்டு இருப்பதாகத் தோற்றம் காட்டும், ராணுவத்தின் பினாமியாகக்கூட இருக்கலாம்.
ஏழு மலைகள், ஏழு கடல்களைத் தாண்டி வந்தவர்கள் என்று புராதனக் கதைகளில் கூறப்படுவதைப்போல, வெகு தூரத்தில் இருந்து இந்தக் காட்டுப் பகுதியைத் தேடிக் கண்டுபிடித்து வந்து சேர்ந்தவர்கள் இவர்கள். இன்னமும் சில நிமிடங்களில் உயிர் பிழைத்த உறவுகளைப் பார்க்கப் போகிறார்கள். கட்டிப்பிடித்துக் கதறி அழுது, தேங்கி இருக்கும் துயரம் அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும். உணர்வுகளின் கொந்தளிப்புடன் வரிசையோடு வரிசையாகக் காலடிகளை எடுத்துவைக்கிறார்கள். உறவுகளைச் சந்திக்கும் அபூர்வ தருணங்களும் கிடைக்கத்தான் செய்கின்றன. இரும்புக் கம்பிகளின் தடுப்புக்கு அந்தப் பக்கத்தில் உறவுகளும் தடுப்புக்கு எதிர்ப் பக்கத்தில் இவர்களும் சந்திக்கும் 15 நிமிடங்கள் இவை. ராணுவத்தினர் சுற்றி நிற்பார்கள். அனுமதிக்கப்பட்ட சில பொருட்களை இயந்திர மனிதர்களைப்போல கை நீட்டிக் கொடுக்கலாம். பேச வாய் துடிக்கும், வார்த்தைகள் வெளிவராமல் மனதுக்கு உள்ளேயே, அவை உதிர்ந்து விழுந்துவிடும். கண்ணீர் கொப்பளித்து வெளியே வரத் துடிக்கும். துப்பாக்கி முனை முதுகை அழுத்த, வார்த்தைகளைப்போலவே இவையும் மனதுக்குள் வடிந்து இறங்கிவிடும். சீ… என்ன இது கேவலப்பட்ட வாழ்க்கை? என்று மனதுக்குள் சொல்லிக்கொள்வதைத் தவிர, அங்கு வேறு எதுவும் செய்துவிட முடியாது!

வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர் -4
சிறைபட்ட எவரும் விடுதலை பெறுவ தில் தீவிரமாக இருப்பார்கள். இதில் தப்பித்துச் செல்லுதலும் ஒன்று. தப்பித்துச் செல்லுதல் பற்றிய திட்டங்கள், மெனிக் ஃபார்ம் முகாமிலும் பிறந்துகொண்டே இருந்தன. இதில் வேடிக்கை என்னவெனில், பெண்கள்தான் கூடுதலாகத் தப்பிக்க முயற்சி செய்துகொண்டு இருந்தார்கள். பெண்களின் இந்த மன நிலைக்குக் காரணம், எப்படியாவது தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.
நாளடைவில் குழந்தைகளின் பாதுகாப்புபற்றிய அச்சம், முகாம்வாசிகளிடம் இன்னும் கூடுதலானது. குழந்தைகளைக் கொல்லும் சதி நடப்பதாக முன்னர் எழுந்த சந்தேகங்கள் முகாம் முழுவதும் பரவின. குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்ற, தப்பிச் செல்லும் முடிவுக்குப் பலர் வந்தனர். இது குறித்த திட்டங்கள் சிலவும் இவர்களிடம் இருந்தன. திட்டங்கள் அனைத்தும், மரணத்தோடு விளையாடுதலைப்போன்று இருந்தது. குழந்தைகளைச் சுமந்துகொண்டு தப்பித்தல் அத்தனை எளிதானது இல்லை. சுருள் கம்பிகள், அடுக்கு அடுக்காக நீண்டு செல்லும் முள் கம்பிகள் கூட்டத்தை முதலில் கடக்க வேண்டும். இதன் பின்னர், ராணுவத்தினரின் கழுகுக் கண்களில் இருந்து தப்பிக்க வேண்டும். இதைத் தவிர, பல்வேறு கோபுரக் கண்காணிப்புகளும் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் கடந்து எப்படித் தப்பிப்பது? பல மாதங்கள் புயலில் அலைக்கழிந்து போன, சிறு படகைப்போல, ராணுவத்தின் விரட்டுதலில் ஓடி ஓடிக் களைத்து, பின்னர் முள்ளி வாய்க்கால் நெருப்பில் இருந்து, உயிர் பிழைத்தவர்கள் இவர்கள். மனதள வில் தப்பிவிடலாம் என்ற உறுதி இருந்தா லும், பலத்தை உடல் முற்றாக இழந்து இருந்தது.
ஆரம்பத்தில் இருந்த நிலையில் இருந்து, மெனிக் ஃபார்ம் முகாமிலும் சிறிது மாற்றம் ஏற்படத் தொடங்கி இருந்த காலம் அது. முகாம்வாசிகளைப் பார்க்க வரும் உறவுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. பெருகி வந்த மக்கள் கூட்டத்தை, ஒரு கட்டத்தில் ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆத்திரம், கோபம், விசும்பல், அழுகுரல் என்ற வேதனைத் துயரம், முள் வேலியைச் சுற்றி, நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ‘முள்ளி வாய்க்காலில் இறந்தவர்களைப்போலத்தானே நமது உயிரும், அதுவும் இங்கேயே போனால் போகட்டுமே’ என்ற முடிவுக்கு வந்தவர்களைப்போலத் தெரிகிறார்கள்.
வெகு தொலைவில் இருந்து வந்த இவர்கள், நாள் கணக்கில் காத்து இருந்தார் கள். வேறு வழி இல்லாமல் முள்வேலிகளைச் சுற்றி வட்டமிடத் தொடங்கிவிட் டார்கள். இந்தச் சூழலில் முகாம் வாசிகளும், தங்கள் உறவினர்கள் அல்லது, தெரிந்தவர்கள் யாராவது வந்திருக்கிறார்களா என்ற ஏக்கத்தோடு முள்வேலியின் ஓரங்களில் காத்துக்கிடப்பதை வழக்கமாகக் கொண்டுவிட்டனர்.
நாட்கள் செல்லச் செல்ல… முள்ளி வாய்க்கால் பேரழிவு, உலக மனசாட்சிக்குள் புகுந்துவிட்டது. மனித உரிமை அமைப்புகள், ஐக்கிய நாடுகளின் சபையில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி, கண்டனங்களைத் தெரிவித்தன. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் மீதும், கண்டனங்கள் எழுந்தன. இதைப்போலவே இந்தப் பேரழிவு, புலப்பெயர்வில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. ஈழத் தமிழர்கள், பல ஆண்டுகளுக்கு முன்னரே, இன்றைய புவிப் பந்தின் எல்லா நாடுகளிலும், குடி உரிமை பெற்றுவிட்டனர். தங்கள் பண்பாட்டு அடையா ளங்கள், எதனையும் சிதைத்துக்கொள்ளா மல், அங்கு உள்ள அரசியல் கட்சிகளில் முக்கியத் தலைவர்களாகவும் வளர்ச்சி பெற்று வருகின்றனர். மருத்துவம், சட்டம், கல்வி, தொழில், வியாபாரம், தொழில்நுட்பம் என்று அனைத்து நிலைகளிலும் தங்கள் அடையாளங்களை நிலைநிறுத்திக்கொண்டு விட்டனர்.
பல்லாயிரக்கணக்கான கி.மீட்டர்களுக்கு அப்பால் இருந்து புலம்பெயர்ந்த இந்த ஈழத்தின் உறவுகள், தங்கள் உறவுக்காக வாய்விட்டுக் கதறிய கதறல் சத்தம், அந்த நாடுகளின் மலைகளில் மோதி எதிரொலித்து, சமவெளி எங்கும் வேதனை உணர்வு களைப் பெருக்கெடுக்கச் செய்தன. இது உலக சமுதாயத்தின் கவன ஈர்ப்பாகவே அமைந்தது. இந்தத் தாக்கம் மெனிக் ஃபார்ம் முகாமிலும் மெள்ள எதிரொலித்து, பின்னர் வேகம் எடுக்கத் தொடங்கியது. சர்வ தேச ஊடகங்கள் சிலவற்றை அனுமதிக்க வேண்டிய அவசியம் இதன் மூலம், இலங்கை அரசுக்கு ஏற்பட்டது.
கபடதாரியான ராஜபக்ஷேவுக்கு, மெனிக் ஃபார்ம் முகாமில், ஒரு சிறு பகுதியைக் காட்சி ஊடகங்களுக்கான தனி அரங்கமாக மாற்றிக்கொள்வதில் எந்தவிதமான சிரமமும் இல்லை. அவலமும் வேதனையும் நிறைந்து விம்மி விம்மி அழும் முகங்கள் மூடிமறைக் கப்பட்டு, மகிழ்வும் ஆறுதல் அடைந்து விட்டதாகவும் காட்டிக்கொள்ளும் நடிப்பு முகங்கள், ஊடகங்களுக்காக முகாமில் தயாரிக்கப்பட்டன. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. மனித உரிமைக் குற்றங்களில் இருந்து, இலங்கை அரசு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பது முதல் காரணம். மெனிக் ஃபார்ம் முகாம் அந்நிய நாடுகளின் உதவியைப் பெற்றுத் தரும் அட்சய பாத்திரம். பெற்ற உதவிகளால், முகாமின் அவலங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு, எல்லோரும் நலமுடன் வாழ்வதான ஊடகக் காட்சிகளை, காட்ட வேண்டிய அவசியம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுவிட்டது என்பது இரண்டாவது காரணம். இதன் மூலம் ராஜபக்ஷேவின் ஆட்சியால், புதிய வருவாயைத் திரட்டிக்கொள்ள முடியும். தமிழ் மக்களின் அவலங்களையும் மரணங்களையும்கூட விற்பனை செய்து, வருவாய் ஆக்கிக்கொள்ளவும் முடியும்.
இந்தப் புதிய சூழலில், முகாம் வாசிகளை அடிப்பது, சுடுவது என்பது ராணுவத்துக்கு இயலாமல் போய்விட்டது. முகாமில் ஊடகங்களுக்குத் தயாரித்துக் கொடுக்கும் பாவனைக் காட்சிகளைப்போலவே, ராணுவமும் அடிப்பதைப்போலவும் சுடுவ தைப்போலவும் பாவனைகளைச் செய்யத் தொடங்கின. ராணுவத்தின் பாவனைகளும் அதற்கான காரணங்களும் மக்களுக்கு எளிதில் புரிந்துவிட்டது. ராணுவம் நடத் தும் பாவனைகளைப்போலவே மக்களும் ஓடுவதுபோலவும், பயப்படுவதுபோலவும் பாவனைகளை செய்யத் தொடங்கினர். அப்போதுதான் நெஞ்சத்தை நடுங்க வைக்கும் அந்தச் செயல்கள் நிகழத் தொடங்கின. தாங்கள் தப்பிக்க முடியாது என்பதை அனுபவத்தில் அறிந்துகொண்ட பெண் மக்கள் சிலர், தங்கள் குழந்தை களுக்காக, அந்தச் செயல்களை செய்யத் துணிந்துவிட்டனர்.
கூடுதலாகி வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, புதிய வாய்ப்புகளை முகாம்வாசிகளுக்கு உருவாக்கித் தந்தது. முகாம்வாசிகளைக் கண்காணிப்புக்கு இடையே நின்று பார்க்கும் விசேஷப் பகுதிகள் என்றில்லாமல், முள்வேலிக்கு அப்பால் எல்லா இடங்களில் இருந்தும் பார்க்கும் வாய்ப்புகள் இதனால் கிடைத்தன. இந்த வாய்ப்புகள் மூலம் உறவுகளை வேலிக்கு அருகில் சென்று பார்க்கலாம். வெளியில் நிற்பவர்கள், தான் கொண்டுவந்த பொருட்களையும் பிரத்யேக ஏற்பாட்டில் கொடுத்து அனுப்பலாம். தேவைப்படுமாயின், இவர் களைத் தப்பிக்கவைத்துச் செல்லவும் உதவலாம். முகாம்வாசிகளுக்கு இது அரசாங்கம் வழங்கிய சலுகை இல்லை. லஞ்சம் அமைத்துக்கொடுத்த தனிப் பாதை. இதற்கெல்லாம் இயந்திரத் துப்பாக்கி களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். ஆட்களைப் பார்க்க, பொருட்களைக் கொடுக்க, முகாம்வாசிகளை எந்தப் பிரச்னையும் இல்லாமல் உடன் அழைத் துச் செல்ல… என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இந்தச் சூழலில்தான், அந்த நிகழ்வும் நடந்தது. ஆரம்பத்தில், இந்தச் செயலை அந்தப் பெண் ஏன் செய்தாள் என்பது யாருக்கும் புரியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் முள்வேலிக்கு வெளியே, பெண் ஒருத்தி தன் குழந்தைகளைத் தூக்கி வீசி எறிந்துவிட்டாள். எதிர்பாராத இந்த திடீர் செயலைப் பார்த்தவர்கள் துடித்துப்போனார்கள். குழந்தை முள்வேலியில் விழுந்துவிடுமோ என்று பதற, வெளியே நின்றுகொண்டு இருந்த அவளின் உறவினர் கள் அந்தக் குழந்தையை, அப்படியே எச்சரிக்கையுடன் கைகளில் பிடித்துக் கொண்டார்கள். குழந்தையின் அழுகை கூட யாருக்கும் கேட்கவில்லை. குழந்தை, உயிர் பிழைத்துக்கொண்டது.
இந்தச் செய்தி மறைந்தும் ஒளிந்தும் முகாம் முழுவதும் பரவத் தொடங்கியது. மற்ற அன்னையரும் இதைப்போன்றே முயற்சிக்கத் தொடங்கினார்கள். இதில் இரண்டு அபாயங்கள் இருந்தன. கண்காணிப்பில் ஈடுபட்ட ராணுவத்தினர் பார்வையில் விழுந்துவிட்டால், அதைவிட ஆபத்து வேறு எதுவுமே இருக்க முடியாது. உயிருடன் குழந்தையைக் கொல்வதற்கு ஒப்படைத்ததைப்போல் ஆகிவிடும் இது. தூக்கி எறியப்படும் குழந்தைகள் தவறிப்போய், முள்வேலிக்குள் விழுந்துவிட்டால்? மனப் போராட்டங்களுக்கு இடையேதான், தாய்மார்களால் இதற்கான முடிவை எடுக்க முடிகிறது.
உறவினர்கள் வெளியே இருந்தால், குழந்தைகளை அவர்கள் கையில் போய்ச் சேருமாறு தூக்கி எறியலாம். உறவினர்கள் யாரும் இல்லை என்றால், அந்தத் தாயின் நிலைமை என்ன? கடைசியில் இதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தார்கள். குழந்தையின் இடுப்பில் அதைச் சேர்ப்பிக்க வேண்டிய முகவரியைக் கட்டி, குழந்தையை யாரிடமாவது எறிந்துவிட்டால், இரக்கப்பட்டு அவர்கள் தங்கள் உறவினர்களிடம் சேர்த்துவிட மாட்டார்களா?

Similar topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» மலாலா வீழ்வேனென்று நினைத்தாயோ?
» ஜுனியர் விகடன் & நாணயம் விகடன்
» 28-7-2015 - அவள் விகடன் + 22-7-2015- ஆனந்த விகடன் + 25-7-2015- டைம் பாஸ் விகடன்
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF

Permissions in this forum:
You cannot reply to topics in this forum