புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 40 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 40 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 40 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 40 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_rcap 
289 Posts - 45%
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 40 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 40 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 40 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 40 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_rcap 
20 Posts - 3%
prajai
வரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 40 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 40 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
வரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 40 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 40 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 40 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 40 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று !


   
   

Page 40 of 48 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 44 ... 48  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 19, 2011 9:56 am

First topic message reminder :

19.11.2011


1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்






முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Aug 27, 2012 10:27 am

ஆகஸ்டு 13







கிமு 3114 – மாயா நாட்காட்டி தொடங்கப்பட்டது.
1415 – நூறு ஆண்டுப் போர்: இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் 8000 பேருடன் பிரான்சை அடைந்தான்.
1516 – புனித ரோமப் பேரரசன் ஐந்தாம் சார்ல்ஸ் நேப்பில்சையும் பிரான்சின் முதலாம் பிரான்சிஸ் மிலானையும் உரிமை கொண்டாட இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1536 – ஜப்பானில் கியோட்டோவில் உள்ள என்றியாக்கு கோயிலின் பௌத்த மதகுருக்கள் கியோட்டோவில் இருந்த 21 நிச்சிரன் கோயில்களைத் தீக்கிரையாக்கினர்.
1849 – யாழ்ப்பாணம் பதில் மறை மாவட்டம் நிறுவப்பட்டது.
1913 – ஹரி பிறியர்லி துருப்பிடிக்காத எஃகுவைக் கண்டுபிடித்தார்.
1920 – போலந்து – சோவியத் ஒன்றியம் போர் ஆரம்பமாயிற்று. ஆகஸ்ட் 25 இல் முடிவடைந்த இப்போரில் செம்படையினர் தோற்றனர்.
1937 – ஷங்காய் சமர் ஆரம்பமானது.
1954 – பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது.
1960 – மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1961 – ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு பேர்லினின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளை மூடி கிழக்கு ஜேர்மனியினர் தப்பிச் செல்லாவண்ணம் பேர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது.
2004 – கறுப்பு வெள்ளி: மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.
2004 – புருண்டியில் கடும்பா அகதிகள் முகாமில் இருந்த 156 டூட்சி இன அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
2004 – 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.
2006 – யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணைவீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.






ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Aug 27, 2012 10:27 am

ஆகஸ்டு 14







1248 – உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது.
1900 -ஐரோப்பிய, ஜப்பானிய, அமெரிக்கக் கூட்டுப் படைகள் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.
1908 – முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் இடம்பெற்றன.
1912 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு அரசை அமைக்க அமெரிக்கக் கடற்படையினர் நிக்கராகுவாவை முற்றுகையிட்டனர்.
1921 – தன்னு துவா என்ற புதிய நாடு (தற்போதைய திவா) உருவாக்கப்பட்டது.
1937 – ஆறு ஜப்பானிய விமானங்கள் சீனாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
1945 – பசிபிக் போர் முடிவுற்றது.
1945 – இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் விதிகளுக்கமைய ஜப்பான் சரணடைந்தது.
1947 – பிரித்தானிய இந்தியாவில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகத்தின் கீழ் பாகிஸ்தான் விடுதலை அடைந்து பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்தது.
1969 – வட அயர்லாந்துக்கு ஐக்கிய இராச்சிய இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
1972 – கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பேர்லின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில் 156 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லெக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.
2006 – இஸ்ரேல் – லெபனான் போர் முடிவுக்கு வந்தது.
2006 – முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர்.
2007 – ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் இடம்பெற்ற நான்கு தொடர் குண்டுவெடிப்புகளில் 796 பேர் கொல்லப்பட்டனர்.





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Aug 27, 2012 10:28 am

ஆகஸ்டு 15


1040 - ஸ்கொட்லாந்தின் மன்னன் முதலாம் டங்கன் மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டான்.

1057 - ஸ்கொட்லாந்தின் மன்னன் மக்பெத் மூன்றாம் மால்க்கமுடனான போரில் கொல்லப்பட்டான்.

1915 - பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.

1920 - வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து இராணுவத்தினர் சோவியத் படைகளை வென்றனர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் சரணடைந்தது.

1945 - இரண்டாம் உலகப் போர்: கொரியா விடுதலை பெற்றது.

1947 - முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதலாவது ஆளுநராகப் பதவியேற்றார்.

1947 - இந்தியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று பொதுநலவாய அமைப்பின் கீழ் தனி நாடாகியது. ஜவகர்லால் நேரு முதலாவது தலைமை அமைச்சர் ஆனார்.

1948 - தென் கொரியா உருவாக்கப்பட்டது.

1950 - அஸ்ஸாமில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக 574 பேர் பலி, 5,000,000 பேர் வீடிழந்தனர்.

1960 - கொங்கோ குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1973 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா கம்போடியா மீதான குண்டுவீச்சை நிறுத்தியது.

1975 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் (ஷேக் ஹசீனா தவிர) அனைவரும் கொல்லப்பட்டனர்.

1977 - இலங்கையில் தமிழருக்கெதிரான இனப்படுகொலை நடவடிக்கையான ஆவணிப் படுகொலை ஆரம்பித்தது. 400ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு 10,000 பேர் வரை காயமடைந்தனர்.

1984 - துருக்கியில் குர்து மக்கள், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, இராணுவத்திற்கெதிராக கெரில்லா போரை ஆரம்பித்தன்னர்.

2005 - இந்தோனேசிய அரசாங்கத்துக்கும் ஆச்சே விடுதலை இயக்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஹெல்சிங்கியில் கைச்சாத்தானது.

2007 - பெருவில் இடம்பெற்ற 8.0 அளவு நிலநடுக்கத்தில் 514 பேர் கொல்லப்பட்டனர்.




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Aug 27, 2012 10:28 am

ஆகஸ்டு 16







1513 – கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் பிரெஞ்சுப் படைகளை வென்றான்.
1780 – தென் கரோலினாவில் காம்டன் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் அமெரிக்கப் படைகாளை வென்றனர்.
1819 – இங்கிலாந்து, மான்செஸ்டரில் அரசுக்கெதிராகக் கிளர்ந்த கிளர்ச்சியாளர்கள் அடக்கப்பட்டதில் 11 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
1865 – 4 ஆண்டுகள் ஸ்பானியரின் பிடியில் இருந்த டொமினிக்கன் குடியரசு மீண்டும் விடுதலை பெற்றது.
1868 – பெருவில் அரிக்கா (இன்றைய சிலியில்) இடம்பெற்ற 8.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 25,000 பேர் கொல்லப்பட்டனர்.
1945 – ஜப்பானியப் பிரதமர் கண்டாரோ சுசுக்கி மீது கொலை முயாற்சி மேற்கொள்ளப்பட்டது.
1945 – சீனாவின் கடைசி மன்னன் பூயி சோவியத் படைகளினால் கைப்பற்றப்பட்டான்.
1964 – தென் வியட்நாமில் அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் டோங் வான் மின் பதவியகற்றப்பட்டார்.
1987 – அமெரிக்காவின் மிச்சிகனில் MD-82 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர். செசிலியா சீசான் என்ற 4-வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.
2005 – வெனிசுவேலாவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 160 பேர் உயிரிழந்தனர்.
2006 – இந்தியாவில் இம்பால் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Aug 27, 2012 10:29 am

ஓகஸ்ட் 17




1969: அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் சூறாவளியினால் 248 பேர் பலி.

1979: சோவியத் யூனியனின் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதால் 156 பேர் பலி.

1988: பாகிஸ்தான் விமானமொன்று விபத்துக்குள்ளானதால், அதில் பயணம் செய்த பாகிஸ்தான் ஜனாதிபதி முஹமட் ஸியா உல் ஹக், அமெரிக்கத் தூதுவர் ஆர்னோல்ட் ரபேல் ஆகியோர் பலியாகினர்.

1988: வெள்ளை மாளிகை பணிப்பெண்ணான மோனிகா லெவின்ஸ்கியுடன் தகாத தொடர்பு வைத்திருந்ததை அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் அந்நாட்டு மக்களிடம் ஒப்புக்கொண்டார்.

1999: துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 17,000 பேர் பலியாகினர்.

2005: பங்களாதேஷில் 300 இடங்களில் சுமார் 500 குண்டுகள் வெடித்தன.



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Aug 27, 2012 10:29 am

ஓகஸ்ட் 18





1917: கிறீஸ் நாட்டின் தெஸலோனிகி நகரில் ஏற்பட்ட தீயின் காரணமாக சுமார் 70,000 வீடுகள் அழந்தன.

1920:அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கான, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் அங்கீகரிக்கப்பட்டது.

1971: வியட்நாமிலிருந்து அவுஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் தமது படைகளை வாபஸ் பெற்றன.

2005: இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட மின்சார தடங்கல் காரணமாக சுமார் 10 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

2008: பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரவ், எதிர்கட்சிகளின் பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ராஜினாமா செய்தார்.



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Aug 27, 2012 10:29 am

வரலாற்றில் இன்று: 19/08/

1862 மினசோட்டாவில் லகோட்டா பழங்குடியினர் நியூ ஊல்ம் குடியேற்றத்திட்டத்தைத் தாக்கி பல வெள்ள்ளையர்களைக் கொன்றனர்.

1895 கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.

1915 முதலாம் உலகப் போர்: ஒட்டோமான் பேரரசுப் படைகளுக்கெதிராகஆர்மீனியர்கள் தாக்குதலைத் தொடுத்தனர்.

1919 ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது.

1934 ஜெர்மனியில் பியூரர் பதவியை ஏற்படுத்த நாட்டின் 89.9% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

1944 இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நட்பு நாடுகளின் உதவியுடன் பாரிஸ் தாக்குதலைத் தொடுத்தது.

1945 ஹோ ஷி மின் தலைமையில் வியெட் மின் படைகள் வியெட்நாமின் ஹனோய் நகரைக் கைப்பற்றினர்.

1946 கல்கத்தாவில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலகத்தில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.

1953 பனிப்போர்: அமெரிக்காவின் சிஐஏயின் உதவியுடன் ஈரானின் முகமது மொசாடெக்கின் அரசு கவிழ்க்கப்பட்டு ஷா முகமது ரேசா பாலாவி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.

1960 சோவியத்தின் ஸ்புட்னிக் 5 விண்கலம் பெல்கா, ஸ்ட்ரெல்கா என்ற இரு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் கொண்டு சென்றது.

1980 சவுதி அரேபியாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்குகையில் தீப்பிடித்ததில் 301 பேர் கொல்லப்பட்டனர்.

1981 லிபியாவின் இரு போர் விமானங்களை சிட்ரா குடாவுக்கு மேலாக அமெரிக்க விமானங்கள் இடைமறித்து சுட்டுவீழ்த்தின.

1989 போலந்தின் பிரதமராக சொலிடாறிற்றி தொழிற்சங்கவாதி டாடியூஸ் மசவியேஸ்கி அதிபர் ஜாருசெல்ஸ்கியினால் தெரிவுசெய்யப்பட்டார். 42 ஆண்டுகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் முதல் கம்யூனிஸ்ட் அல்லாத பிரதமர் இவரே ஆவார்.

1991 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் சோவியத் அதிபர் மிகைல் கர்பசோவ் கிறிமியா என்ற சுற்றுலா மையத்தில் ஓய்வெடுக்கும் போது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

1981 லிபியாவின் இரு போர் விமானங்களை சிட்ரா குடாவுக்கு மேலாக அமெரிக்க விமானங்கள் இடைமறித்து சுட்டுவீழ்த்தின.

2002 செச்னிய படையினரின் ஏவுகணைத் தாக்குதலில் ரஷ்ய ஹெலிகொப்டர் சிக்கியதால் 118 படையினர் பலி.

2003 ஈராக்கில் ஐ.நா. தலைமையகம் மீது நடந்த கார் குண்டுத் தாக்குதலில் ஈராக்கிற்கான ஐ.நா. தூதுவர் சேர்ஜியோ வியேரா டி மெலோ உட்பட 22 பேர் பலியாகினர்.

2009 ஈராக்கில் நடந்த தொடர்குண்டுவெடிப்புகளில் 101 பேர் பலி 565 பேர் காயம்.




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Aug 27, 2012 10:30 am

20/08/

636 அரபுப் படைகள் பைசண்டைன் பேரரசிடம் இருந்து சிரியா, பாலஸ்தீனம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

1000 ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன் என்பவனால் உருவாக்கப்பட்டது.

1858 சார்ள்ஸ் டார்வின் இயற்கைத் தேர்வுமூலமான கூர்ப்புக்கொள்கையை வெளியிட்டார்.

1866 அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜோன்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

1944 முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை ஜேர்மனியப் படைகள் கைப்பற்றின.

1917 இலங்கையில் ஒரு ரூபாய்த் தாள் வழங்கப்பட்டது.

1940 மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் ரஷ்யப் புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி படுகாயமுற்று அடுத்த நாள் மரணமானார்.

1944 இரண்டாம் உலகப் போர்: ருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.

1948 "இலங்கை குடியுரிமை சட்டம்" இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 10 இலட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.

1953 ஐதரசன் குண்டைத் தாம் சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.

1960 செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.

1968 பனிப்போர்: 200,000 வார்சா ஒப்பந்த நாடுகளின் படைகள் செக்கோஸ்லவாக்கியாவினுள் புகுந்தன.

1975 நாசா வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.

1977 நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.

1988 ஈரான் – ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.

1991 எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.

1997 அல்ஜீரியாவில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2002 ஸ்பெய்னில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 146 பேர் பலி.

2006 அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006: கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.

2006 நமது ஈழநாடு பணிப்பாளர், முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமகராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Aug 27, 2012 10:30 am

21/08/

1770 கப்டன் ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவில் தரையிறங்கி அதனை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்.

1821 ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

1831 கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார்.

1842 டாஸ்மானியாவின் தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.

1863 அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கன்சாஸ் மாநிலத்தில் லோரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.

1911 லியனார்டோ டா வின்சியின் ஓவியமான மோனா லிசா பாரிசின் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.

1920 சேர் ஏ. கனகசபை இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவானார்.

1942 இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் ஆரம்பமானது.

1945 இரண்டாம் உலகப் போர்: சாலமன் தீவுகள் தொடர் சமர் முடிவடைந்தது.

1959 ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் 50வது மாநிலமாக இணைக்கப்பட்டது.

1963 தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்த தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.

1968 சோவியத் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகளின் படையினர் செக்கோஸ்லவாக்கியாவைக் கைப்பற்றின.

1969 ஆஸ்திரேலியனான மைக்கல் டெனிஸ் ரொஹான் என்பவன் ஜெருசலேமின் அல் அக்சா மசூதிக்குத் தீ வைத்தான்.

1983 பிலிப்பீன்ஸ் எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.

1986 கமரூனில் நியோஸ் ஆற்றில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 1,800 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1991 லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1991 சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.

1879 அயர்லாந்தில் கன்னி மரியாள் காட்சி கொடுத்ததாக அறிவிக்கப்பட்டது.

1982 லெபனானிற்கு சரவ்தேச கண்காணிப்பு படை அனுப்பட்டது.

2001 யூகோஸ்லாவியாவுக்கு சமாதான படையை அனுப்ப நேட்டோ தீர்மானித்தது.

2001 தஜிகிஸ்தானில் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது.

2007 சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Aug 27, 2012 10:30 am

22/08/

1639 பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னை) அமைத்தார்கள்.

1642 இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் ஆங்கில நாடாளுமன்றத்தை "துரோகிகள்" என வர்ணித்தான். ஆங்கில உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1717 ஸ்பானியப் படைகள் சார்டீனியாவில் தரையிறங்கினர்.

1770 ஜேம்ஸ் குக் தனது ஆட்களுடன் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையை அடைந்தான்.

1780 கப்டன் ஜேம்ஸ் குக்கின் கப்பல் (HMS Resolution) இங்கிலாந்து திரும்பியது. (ஹவாயில் குக் கொல்லப்பட்டான்).

1798 ஐரியக் கிளர்ச்சிக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகள் அயர்லாந்தில் தரையிறங்கினர்.

1831 வேர்ஜீனியாவில் நாட் டர்னர் தனது தாக்குதலை ஆரம்பித்தான். 50 வெள்ளையினத்தினரும், பல நூற்றுக்கணக்கான கறுப்பின அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர்.

1848 நியூ மெக்சிகோ ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

1860 பிரித்தானியக் கடற்படையின் உதவியுடன் கரிபால்டியின் படைகள் சிசிலியில் இருந்து இத்தாலியின் பெரும்பரப்பினுள் நுழைந்தனர்.

1864 12 நாடுகள் இணைந்து ஹென்றி டியூனாண்ட் தலைமையில் ஜெனீவாவில் செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தார்கள்.

1875 சக்காலின் மற்றும் கூரில் தீவுகள் தொடர்பாக ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உடன்பாடு எட்டப்பட்டது.

1910 கொரியா-ஜப்பான் இணைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரையில் கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் இருந்தது.

1911 பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனா லிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

1914 முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில், பிரித்தானியாவும் ஜேர்மனியும் முதன் முதலில் நேரடியாகப் போரில் ஈடுபட்டனர்.

1926 தென்னாபிரிக்கா, ஜோகானஸ்பேர்க்கில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1932 தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது.

1941 இரண்டாம் உலகப் போர்: ஜெர்மன் படைகள் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கை அடைந்தனர். லெனின்கிராட் மீதான முற்றுகை ஆரம்பமானது.

1942 இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி மீது பிரேசில் போரை அறிவித்தது.

1944 இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் ருமேனியாவைக் கைப்பற்றியது.

1949 கனடாவில் 8.1 அளவு நிலநடுக்கம் பதிவாகியது.

1962 பிரெஞ்சு அதிபர் சார்ல்ஸ் டி கோல் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.

1972 ரொடீசியா ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது.

1978 சண்டினீஸ்டா படைகள் நிக்கராகுவாவின் தேசிய அரண்மனையைக் கைப்பற்றினர்.

1989 நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட்டது.

1991 சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராவ்தா பத்திரிகை மூடப்பட்டது.




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
Sponsored content

PostSponsored content



Page 40 of 48 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 44 ... 48  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக