ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று !

+43
sshanthi
முரளிராஜா
ரா.ரா3275
பது
அசுரன்
றினா
அருண்
காளைவேந்தன்
சிவா
யினியவன்
sinthiyarasu
solomon
ரட்சகா
இரா.பகவதி
T.PUSHPA
அதி
கார்த்திக்.எம்.ஆர்
முகம்மது ஃபரீத்
பானு ஜெகன்
அல்கெனா ரிஷி
ஹர்ஷித்
ayyamperumal
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
கோவிந்தராஜ்
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
பிஜிராமன்
Aathira
பாலாஜி
ஜாஹீதாபானு
சுரேஷ்விக்கி
பூஜிதா
இளமாறன்
உமா
Gowthambsc
அன்பு தளபதி
dhilipdsp
பேகன்
முஹைதீன்
ஹிஷாலீ
dsudhanandan
ரேவதி
47 posters

Page 20 of 48 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 34 ... 48  Next

Go down

வரலாற்றில் இன்று ! - Page 20 Empty வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Sat Nov 19, 2011 9:56 am

First topic message reminder :

19.11.2011


1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்



Last edited by ரேவதி on Tue Dec 27, 2011 9:56 am; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


வரலாற்றில் இன்று ! - Page 20 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Thu Mar 08, 2012 1:40 pm

மார்ச் 02

1807: அடிமைகளை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கும் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1815: ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னனின் ஆட்சியை ஒழிப்பதற்கான கண்டி ஒப்பந்தம் ஆங்கிலேயர்களுக்கும் கண்டிய தலைவர்களுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்த்தின் மூலம் இலங்கை முழுவதும் பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் வந்தது.
1903: பெண்களுக்கு மாத்திரமான முதலாவது ஹோட்டலான 'மார்தா வாஷிங்டன் ஹோட்டல்' நியூயோர்க்கில் திறக்கப்பட்டது.
1946: ஹோ சி மின், வடக்கு வியட்னாமின் ஜனாதிபதியானார்.
1956: பிரான்ஸிடமிருந்து மொராக்கோ சுதந்திரம் பெற்றது.
1969: பிரித்தானிய, பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பான கொன்கோர்ட் விமானம் தனது முதல் பறப்பை மேற்கொண்டது.
1991: வெளிவிவகார, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும், பிரதி பாதுகாப்பு அமைச்சருமான ரஞ்சன் விஜேரத்தின கொழும்பில் நடைபெற்ற எல்.ரி.ரி.யின் தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1990: ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உப தலைவராக நெல்சன் மண்டேலா நியமிக்கப்பட்டார்.
2004: ஈராக்கில் நடைபெற்ற அல் குவைதாவின் தாக்குதலொன்றில் 170 பேர் கொல்லப்பட்டனர்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 20 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Thu Mar 08, 2012 1:41 pm

மார்ச் 03

1575: முகலாய சக்கரவர்த்தி அக்பர், வங்காள இராணுவத்தை தோற்கடித்தார்.
1857: பிரிட்டனும் பிரான்ஸும் சீனா மீது போர்ப் பிரகடனம் செய்தன.

1918: ஜேர்மனி, ஆஸ்திரியா, ரஷ்யாவுக்கி டையல் பிரெஸ்ட்- லிடோவ்ஸ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதால் முதலாம் உலக யுத்தத்தில் ரஷ்யாவின் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தன.
1938: சவூதி அரேபியாவில் பெற்றோலிய எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
1939: ஆங்கிலயே எதேச்சதிகாரத்திற்கு எதிராக மும்பையில் மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
1943: லண்டனில்வான் வழி தாக்குதலிலிருந்து பாதுகாப்பு தேடி கட்டிடமொன்றுக்குள் புகமுயன்றவர்களில் 173 பேர்
நெரிசலில் சிக்கி பலி.
1975: துருக்கிய விமானமொன்று பாரிஸ் நகருக்கருகில் வீழ்ந்ததால் 345 பேர் பலி.
2005: அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் பொசெட், முதல் தடவையாக தனியாளாக
விமானமொன்றில் எங்கும் நிறுத்தாமல் உலகை சுற்றிப் பறந்துமுடித்தார்.
2009: பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் பாகிஸ்தான் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அறுவரும் பொதுமகன்கள் இருவரும் பலியாகினர்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 20 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Thu Mar 08, 2012 1:41 pm

மார்ச் 04

1665: இரண்டாவது ஆங்கில- டச்சு யுத்தம் ஆரம்பமாகியது.
1797: முதலாவது அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனிடமிருந்து இரண்டாவது ஜனாதிபதி ஜோன் அடம்ஸுக்கு அதிகாரம் கையளிக்கப்பட்டது. நவீன யுகத்தில் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களுக்கிடையில் அமைதியான முறையில் அதிகாரம் பரிமாற்றப்பட்ட முதல் சந்தர்பப்ம் இதுவாகும்.
1861: ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.
பிரிட்டனில் முதலாவது இலத்திரனியல் ட்ராம் வண்டிகள் அறிமுகமாகின.
1975: பிரித்தானிய நகைச்சுவை நடிகர் சார்ளி சாப்ளினுக்கு பிரித்தானிய அரசாங்கத்தினால் சேர் பட்டம் வழங்கப்பட்டது.
1977: கிழக்கு ஐரோப்பாவில் பூகம்பத்தால் 1500 இற்கும் அதிகமானோர் பலி.
1980: ஸிம்பாப்வேயில் ரொபர்ட் முகாபே முதலாவது கறுப்பின ஜனாதிபதியானார்.
1991: ஈராக்கிய ஆக்கிரமிப்பின் பின்னர் நாட்டைவிட்டு வெளியேறிய குவைத் பிரதமர் அல் சலீம் அல் சபாஹ் தாயகம் திரும்பினார்.
2009: சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிறாந்து (ஐ.சி.சி.) பிறப்பித்தது. பதவியிலுள்ள நாடொன்றின் தலைவருக்கு எதிராக ஐ.சி.சி. பிடிவிறாந்து பிறப்பித்தமை இதுவே முதல் தடவை.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 20 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Thu Mar 08, 2012 1:42 pm

மார்ச் 05

1931: அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் இந்தியர்கள் உப்பை சுதந்திரமாகவும் பயன்படுத்தவும் அனுமதியளிக்கும் ஒப்பந்தத்தில் மகாத்மா காந்தியும் இந்தியாவுக்கான பிரித்தானிய ஆளுநர் லின்ட்ஸே வூட்டும் கையெழுத்திட்டனர்.
1946: பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது உரையொன்றில் முதல் தடவையாக இரும்புத்திரை எனும் சொற்றொடரை பயன்படுத்தினார்.
1953: 2 தசாப்தங்களுக்கு மேலாக சோவியத் யூனியனை ஆட்சி செய்த அதிபர் ஜோசப் ஸ்டாலின் காலமானர்.
1966: பிரித்தானிய விமானமொன்று ஜப்பானின் பியூஜி மலையில் வீழ்ந்தால் 124 பேர் பலி.
1970: அணுவாயுத பரவல்தடுப்பு உடன்படிக்கை அமுலுக்கு வந்தது.
1973: ஸ்பெய்னின் இரு விமானங்கள் பிரெஞ்சு வான்பரப்பில் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதால் 68 பேர் பலி.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 20 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Thu Mar 08, 2012 1:42 pm

மார்ச் 06

1946: பிரெஞ்சு யூனியனின் இந்தோசைனா சம்மேளனத்தில் ஒரு சுயாதீனமாக வியட்நாம் இருப்பதை அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தில் பிரான்ஸுடன் ஹோ சி மின் கையெழுத்திட்டார்.
1953: சோவியத் யூனியனில் ஜோசப் ஸ்டாலினுக்குப் பின்னர் ஜோர்ஜி மக்ஸிமிலியானோவிக் பிரதமரானார்.
1964: அமெரிக்காவின் இஸ்லாமிய தேசியம் எனும் அமைப்பு குத்துச்சண்டை சம்பியன் கஸியஸ் கிளேவுக்கு முஹமட் அலி என்ற பெயரை உத்தியோக பூர்வாமக வழங்கியது.
1964: கிறீஸில் இரண்டாம் கொன்ஸ்டைன் மன்னரானார்.
1967: சோவியத் யூனியனின் முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் மகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார்.
1975: ஈரான், ஈராக் நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அல்ஜியர்ஸ் உடன்படிக்கை கெயெழுத்திடப்பட்டது.
1987: பிரித்தானிய கப்பலொன்று குடை சாய்ந்ததால் 193 பேர் பலி.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 20 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Thu Mar 08, 2012 1:42 pm

மார்ச் 07

1799: நெப்போலியன் போனபார்ட் பலஸ்தீனத்தின் ஜஃப்பா பிராந்தியத்தை கைப்பற்றினான். அவனது படைகள் 2000 அல்பேனியர்களை கைது செய்தன.
1876: அலெக்ஸாண்டர் கிரஹம்பெல்லுக்கு தொலைபேசிக்கான காப்புரிமை வழங்கப்பட்டது.
1971: கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மக்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராகுவதற்கான நேரம் வந்துவிட்டதென்ற வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த உரையை ஷேக் முஜிபுர் ரஹ்மான் நிகழ்த்தினார்.
1989: சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி விவகாரம் காரணமாக ஈரானுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டன.
2006: இந்தியாவின் வாரணாசியில் லக்ஷர் ஈ தொய்பா தீவிரவாதிகள் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.
2009: பூமி போன்ற பிற கோள்களை ஆராயும் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி விண்வெளிக்கு ஏவப்பட்டது.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 20 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Thu Mar 08, 2012 1:43 pm

மார்ச் 08

1702: இங்கிலாந்து. ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றுக்கு இரண்டாம் மேரியின் சகோதரி ஆன் ஸ்டுவர்ட் அரசியானார்.
1817:நியூயோர்க் பங்குச் சந்தை திறக்கப்பட்டது.
1921: ஸ்பெய்ன் பிரதமர்; எடுராடோ டேட்டோ இராடியர், நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைத்து கொல்லப்பட்டார்.
1924: அமெரிக்காவின் உட்டா மாநில சுரங்க விபத்தல் 172 பேர் பலி.
1942: இந்தோனேஷியாவில் ஜப்பானிய படைகளிடம் டச்சு படைகள் சரணடைந்தன.
1974: பிரான்ஸில் சார்ள்ஸ் டி கோல் விமான நிலையம் திறக்கப்பட்டது.
2004: ஈராக்கில் புதிய அரசியலமைப்பில் அந்நாட்டு ஆட்சிக் கவுன்ஸில் கையெழுத்திட்டது.

http://tamilmirror.lk/component/content/article/101---image/37223----08.html
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 20 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Sat Mar 10, 2012 9:59 am

மார்ச் 10


1629: இங்கிலாந்து மன்னன் 2 ஆம் சார்ள்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு ஆட்சியை தனது சுய கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆரம்பித்தான். இந்நிலை 11 வருடகாலம் நீடித்தது.

1876: அலெக்ஸாண்டர் கிறஹம் பெல் முதலாவது வெற்றிகரமான தொலை அழைப்பை மேற்கொண்டார்.

1906: பிரான்ஸில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் 1099 பேர் பலியாகினர்.

1922: பிரித்தானிய ஆட்சியாளர்களால் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். 2 வருங்களின் பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார்.

1933: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 115 பேர் பலி.

1945: 2 ஆம் உலகப் போரின் போது அமெரிக்க விமானங்கள் ஜப்பானிய பாரிய குண்டுத்தாக்குதல்களை நடத்தின. இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களாவர்.

1959: திபெத்தில் தலாய் லாமா சீனப்படைகளால் கைது செய்யப்படலாம் எனக் கருதப்பட்டதால் அவரை சூழ 3 லட்சம் திபெத்தியர்கள் அரணாக திரண்டனர்.

1969: அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கை கொன்றவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது,


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 20 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Mon Mar 12, 2012 11:44 am

மார்ச் 11

1702: இங்கிலாந்தின் முதலாவது தேசிய நாளிதழான த டெய்லி கரண்டின் முதல் பதிப்பு வெளியாகியது.
1917: முதலாம் உலகப் போரில் பாக்தாத் பிராந்தியம் ஆங்கிலோ இந்திய படைகளிடம் வீழ்ந்தது.
1985: மிகைல் கொர்பசேவ், சோவியத் யூனியன் தலைவரானார்.
1990: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதாக லிதுவேனியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1990: சிலியில், பட்றிசியொ அய்ல்வின் 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியானார்.
2004: ஸ்பெய்னின் மட்ரிட் நகர ரயில்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 191 பேர் பலியாகினர்.
2006: சிலியின் முதல் பெண் ஜனாதிபதியாக மிச்சேல் பாச்செலட் பதவியேற்றார்.
2009: ஜேர்மனியில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் பலி.
2011: ஜப்பானின் புகுஷிமா பிராந்தியத்திற்கு அருகில் ஏற்பட்ட 9.0 ரிச்டர் அளவிலான பூகம்பத்தை தொடர்ந்து தாக்கிய சுனாமியினால் சுமார் 20,000 பேர் பலியாகினர். இதன்போது அணுக்கதிர்வீச்சு கசிவும் ஏற்பட்டது.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 20 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Mon Mar 12, 2012 11:45 am

மார்ச் 12

1881: ஸ்கொட்லாந்து கால்பந்தாட்ட வீரர் அன்ட்ரூ வட்ஸன் சர்வதேச கால்பந்தாட்ட அணியொன்றுக்கு தலைமை தாங்கிய முதலாவது கறுப்பின வீரரானார்.
1913: கான்பரா நகரம் அவுஸ்திரேலியாவின் எதிர்கால தலைநகராக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. (1927 ஆம் ஆண்டுவரை மெல்போர்ன் தற்காலிக தலைநகராக இருந்தது.)
1918: 215 ஆண்டுகளாக சென் பீற்றர்ஸ்பர்க் ரஷ்யாவின் தலைநகராக இருந்தபின் மொஸ்கோ புதிய தலைநகராக்கப்பட்டது.
1928: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அணைக்கட்டொன்று உடைந்ததால் 600 பேர் பலி.
1930: இந்தியாவில் மகாத்மா காந்தி 200 மைல் தூரம் கொண்ட உப்பு பாதயாத்திரையை ஆரம்பித்தார்.
1938: ஜேர்மனிய படைகள் ஆஸ்திரியாவைக் கைப்பற்றின.
1966: இந்தோனேஷியாவில் சுஹார்டோ ஜனாதிபதியானார்.
1968: மொரிஷியஸ் சுதந்திரம் பெற்றது.
1993: இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற தொடர்குண்டுவெடிப்புகளால் சுமார் 300 பேர் பலி.
2004: தென்கொரிய ஜனாதிபதி ரூ மூ ஹையுனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 20 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 48 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 34 ... 48  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum